சமீபத்திய பதிவுகள்

மொபைல் போன் வைரஸ்

>> Monday, February 1, 2010


 
lankasri.com
கம்ப்யூட்டரில் உள்ள வைரஸ் அளவிற்கு மொபைல் போன் வைரஸ் தாக்கமும் பரவலும் இல்லை என்றாலும் அவை குறித்து அறிந்து கொள்வது நல்லது. முன் கூட்டியே நம் மொபைல் போன்களைப் பாதுகாத்து வைத்துக் கொள்ளலாம். செல் போன் வைரஸ்கள் தன்மை மற்றும் அவை எந்த வகையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று இங்கு பார்க்கலாம்.

மொபைல் வைரஸ் – சில அடிப்படைக் கூறுகளும் பரவும் விதமும்

மொபைல் போனில் பரவும் வைரஸ் புரோகிராமும் கம்ப்யூட்டர் வைரஸ் புரோகிராம் போலவே தேவையற்ற ஒரு எக்ஸிகியூட்டபிள் பைல் ஆக வடிவமைக்கப்பட்டு கிடைக்கிறது. ஒரு சாதனத்தைக் கைப்பற்றிப் பின் மற்ற சாதனங்களுக்கு அதன் காப்பியை அனுப்பும் வழியையே இந்த வைரஸும் பின்பற்றுகிறது. கம்ப்யூட்டர் வைரஸ் இமெயில் அட்டாச்மெண்ட் மற்றும் இன்டர்நெட் டவுண்லோட் புரோகிராம் வழியாகப் பரவுகின்றன. மொபைல் போன் வைரஸும் இன்டர்நெட் டவுண்லோட் பைலுடன் வருகிறது; எம்.எம்.எஸ். மெசேஜ் இணைந்து பரவுகிறது; புளுடூத் வழி பைல்களை மாற்றுகையில் உடன் செல்கிறது. பெரும்பாலும் கம்ப்யூட்டருடன் பைல்களை பரிமாறிக் கொள்கையில் மொபைல் போன்களுக்கு வைரஸ்கள் பரவி வந்தன. இப்போது மொபைல் போன் களுக்கிடையேயும் பைல் பரிமாற்றத்தின் போது பரவி வருகின்றன.

இந்த வகை பரவல் பெரும்பாலும் சிம்பியன் ஆப்ப ரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மொபைல் போன்களுக்கிடையே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. எனவே குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களுக்கென தயாரித்து பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ள போன்களில் வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு.

வைரஸ் பாதிக்கப்பட்ட மொபைல் போன்களில், வைரஸ்கள் கேம்ஸ், செக்யூரிட்டி பேட்ச், கூடுதல் வசதி தரும் ஆட் ஆன் புரோகிராம், பாலியியல் படங்கள் போலக் காட்சி அளிக்கின்றன. சில வைரஸ்கள் போனுக்கு வந்திருக்கும் மெசேஜ் டெக்ஸ்ட்டின் தலைப்பு வரிகளைத் திருடி, அவற்றையே தங்கள் தலைப்பாகவும் வைத்துக் கொள்கின்றன. இதனால் நாம் அவற்றைத் திறக்க ஆர்வம் காட்டுவோம். ஆனால் மெசேஜைத் திறப்பதனால் உடனே வைரஸ் நம் போனை முடங்கச் செய்துவிடும் வாய்ப்புகளும் நூறு சதவிகிதம் இல்லை. அந்த மெசேஜ் உடன் வந்திருக்கும் வேறு இணைப்பு பைலைத் திறந்தால் தான் வைரஸ் தன் வேலையைக் காட்டும். இது போன்ற பரவும் வழிகளில், போன் பயன்படுத்துபவர் தானாக ஒன்று அல்லது இரண்டு முறை மெசேஜ் இயக்க அழுத்த வேண்டியதிருக்கும். பொதுவாக போன் அழைப்புகளை ஏற்படுத்தவும் பெறவும் மட்டுமே பயன்படும் மொபைல்களில் அவ்வளவாக வைரஸ்கள் பரவுவதில்லை.

2004 ஆம் ஆண்டில் Cabir A என்ற வைரஸ் முதல் முதலாகத் தலை காட்டியது. புளுடூத் வழி பரவிய இந்த வைரஸ் பெரும்பாலும் எந்தவித பாதிப்பையும் தான் பரவிய மொபைல் போன்களில் காட்டவில்லை. மால்வேர் புரோகிராம்களைத் தயாரிக்கும் ஒரு சிலர் இது போல் மொபைல் போன்களுக்கும் வைரஸ்களை அனுப்ப முடியும் என்று காட்டுவதற்காகவே இதனைத் தயாரித்தனர்.

ஜனவரி 2005ல், Commwarrior வைரஸ் மிகப் பெரிய அளவில் பரவியது. புளுடூத் மூலமாக ஸ்கேண்டிநேவியாவில் உள்ள ஒரு நிறுவனத்தின் அனைத்து மொபைல் போன்களுக்கும் பரவியது. ஏதேனும் ஒரு மொபைல் போனில் இந்த வைரஸ் அமர்ந்தவுடன் அருகில் உள்ள புளுடூத் இயக்கப்பட்ட அனைத்து போன்களையும் இது தேடி ஒட்டிக் கொள்கிறது. மேலும் உங்கள் அட்ரஸ் லிஸ்ட்டில் உள்ள அனைத்து எண்களுக்கும் மெசேஜ் அனுப்பி அதன் மூலமும் பரவுகிறது.இதுவரை வந்த மொபைல் வைரஸ்களில் இதுதான் இரு வழிகளில் பரவி அதிக சேதம் விளைவிக்கும் வைரஸாக உருவெடுத்துள்ளது.

பாதுகாத்துக் கொள்வது எப்படி?

எப்படி கம்ப்யூட்டர்களை அவற்றின் வைரஸ்களில் இருந்து பாதுகாத்துக் கொள்கிறோமோ, அதே போல மொபைல் போன்களையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.

எப்போதும் ஒரு செய்தியைத் தாங்கி வரும் பைலையோ, புளுடூத் மூலம் வரும் பைலையோ, அதனை அனுப்பியவர், அல்லது புறப்பட்ட எண் நமக்குத் தெரியாத எண்ணாக, பழக்கம் இல்லா எண்ணாக இருந்தால், அந்த பைலைத் திறக்கக் கூடாது. நம் அவசரத்தில் இதனை எப்போதும் கவனமாகக் கொள்ள வேண்டும். அதிக முன்னெச்சரிக்கை யாக உள்ளவர்கள் கூட இந்த விஷயத்தில் கோட்டைவிட்டு விட்டு, வைரஸ் பைல்களைத் திறந்துவிடும் நிகழ்ச்சிகள் நிறைய நடக்கின்றன.

புளுடூத் செயல்பாட்டினை மறைத்தே வைக்கவும். இயக்க வேண்டாம். அதனை "hidden" என்ற வகையிலேயே வைக்கவும். இதனால் மற்ற மொபைல் போன்களின் புளுடூத் வலையில் இது சிக்காது. இந்த செட்டிங்ஸை புளுடூத் ஆப்ஷன் திரையில் நீங்கள் காணலாம்.
செக்யூரிட்டி அப்டேட் பைல்களை, உங்கள் சிஸ்டம் பைல்களுக்கேற்ப, நிறுவனங்கள் அனுப்புகின்றன. இந்த பேட்ச் பைல்கள், வைரஸ் கொண்ட பைல்கள் எப்படிப்பட்ட பைல் பெயர்களில் வருகின்றன என்று பட்டியல் தருகின்றன. இவற்றைத் தெரிந்து வைத்து, அத்தகைய பைல்களைத் தவிர்க்கவும். FSecure, McAfee, Symantec ஆகியவற்றின் இணைய தளங்களுக்குச் சென்றால் இந்த பைல்களின் பெயர்களைத் தெரிந்து கொள்ளலாம். இவற்றில் சில தளங்களில் உங்கள் மின்னஞ்சல் முகவரிகளைப் பதிந்து வைத்தால், இவை மொபைல் வைரஸ் மற்றும் பிற தகவல்களைத் தொடர்ந்து அனுப்புகின்றன.

பல நிறுவனங்கள் மொபைல் போன் பாதுகாப்பிற்கென செக்யூரிட்டி சாப்ட் வேர்களைத் தயாரித்து வழங்குகின்றன. பெரும்பாலானவை இலவசங்களே. சில கூடுதல் வசதிகளுக்குக் கட்டணம் செலுத்தச் சொல்கின்றன. இவை வைரஸ்களை நீக்குகின்றன. வைரஸ் நுழைந்துவிடாமல் மொபைல் போன் களைப் பாதுகாக்கின்றன. சிம்பியன் சிஸ்டம் தயாரித்து வழங்கும் நிறுவனம், தன் சிஸ்டத்தில் புளுடூத் மூலம் வரும் வைரஸ் பைல்களைத் தடுக்கும் புரோகிராம் ஒன்றைத் தயாரித்து வழங்குகிறது.

மேலே தரப்பட்ட தகவல்களிலிருந்து எப்படி முதலில் வந்த வைரஸ் புரோகிராமிற்குப் பின் வந்த வைரஸ்கள், தங்கள் வடிவமைப் பிலும், மேற் கொள்ளும் சேத வழிகள் மற்றும் சேதங்களிலும் முன்னேறியுள்ளன என்று பார்க்க முடிகிறது. இப்போதைக்கு பெரும் அளவில் மொபைல் போன்களை இந்த வைரஸ் புரோகிராம்கள் போன்களைக் கெடுக்க வில்லை என்றாலும் வரும் நாட்களில் இவற்றின் தீவிரம் அதிகமாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

மொபைல் போன் மூலம் வங்கி பணப் பரிமாற்றம் எல்லாம் மேற்கொள்ளப் போகும் சூழ்நிலையில் நாம் கவனமாக இருக்க வேண்டும்

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கொசுவை விரட்ட மூலிகை மருந்து : கல்லூரி மாணவி சாதனை

 
 

Human Intrest detail news கூடலூர் : கொசுவை விரட்ட வேப்பங்கொட்டையில் இருந்து மூலிகை மருந்து தயாரித்த கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரி மாணவிக்கு, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் முதல்பரிசு வழங்கப்பட்டுள்ளது. கம்பம் ஆதிசுஞ்சனகிரி கல்லூரியில் எம்.பில்., பயோகெமிஸ்ட்ரி படிக்கும் மாணவி கிருஷ்ணவேணி. கொசுவை விரட்ட இயற்கை மூலிகை மூலம் மருந்து தயாரிக்கும் பணியில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டார். கல்லூரி ஆய்வுக்கூடத்தில் வேப்பங்கொட்டைகள் மூலம் கொசுவை விரட்ட மூலிகை மருந்தை இம்மாணவி கண்டுபிடித்தார். அண்மையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் ஈரோட்டில் நடந்த முதலாவது இளைஞர் அறிவியல் விழாவில், கிருஷ்ணவேணி கண்டுபிடித்த கொசுவை விரட்டும் மூலிகை மருந்து ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டது. அதற்கு முதல் பரிசு கிடைத்தது. சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது. கிருஷ்ணவேணிக்கு கல்லூரியில் பாராட்டு விழா நடந்தது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

30 வயதில் கருமுட்டையை இழக்கும் பெண்கள் ஆய்வில் அதிர்ச்சி தகவல்

 

 

பெண்கள் தங்களது 30வது வயதில் பெருமளவு கருமுட்டைகளை இழந்து விடுகின்றனர்; 40வது வயதில் வெறும் 3 சதவீத கருமுட்டைகளே அவர்களிடம் தங்குகின்றன," என்று புதிய ஆராய்ச்சி ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

பிரிட்டனிலுள்ள ஆண்ட் ரூஸ் மற்றும் எடின்பர்க் பல்கலைக்கழகங்கள், பெண்களிடம் உள்ள கருமுட்டைகள் பற்றி ஓர் ஆய்வு நடத்தின. இந்த ஆய்வுக்காக, பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 325 பெண்கள் பரிசோதிக்கப்பட்டனர். இவர்களில், 30 வயதிலிருந்து 95 சதவீதப் பெண்கள் அனைவரும் 12 சதவீதமும், 40 வயதுப் பெண் கள் 3 சதவீதமும் கருமுட்டைகளைக் கொண்டிருந்திருக்கின்றனர்.ஒரு பெண் பிறக்கும் போது சராசரியாக மூன்று லட்சம் கருமுட்டைகளோடு பிறக் கிறாள். பெண்கள் பலர், வயதான பின்னும் கருமுட்டைகள் உற்பத்தியாவதால், குழந்தைப் பேற்றுக்குத் தகுதியாக இருப்பதாக தவறாகக் கருதுகின்றனர்.

ஆனால் உண்மையில், வயதாக ஆக கருமுட்டைகள் குறைந்து கொண்டே வருவதால், குழந்தைப் பேறு என்பது கடினமாகி விடுகிறது என்பது தெரியவந்துள்ளது.மேலும், ஒவ்வொரு பெண்ணிடமும் இருக்கும் கருமுட்டைகளின் எண்ணிக்கையில் பெருத்த வித்தியாசம் காணப்படுவதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி, ஒரு பெண்ணிடம் 20 லட்சம் முட்டைகள் இருந்ததாகவும், இன் னொரு பெண்ணிடம் 35 ஆயிரம் முட்டைகள் மட்டுமே இருந்ததாகவும் ஆய்வுக் குறிப்புகள் கூறுகின்றன.காலத்தைத் தள்ளிப் போடாமல் கருத்தரிப் பதை விரைவுபடுத்தும் படி அந்த ஆய்வு, பெண்களுக்கு அறிவுரை கூறுகிறது. மேலும், யாருக்கு சீக்கிரம் "மாதவிலக்கு' நின்றுவிடும் என்பதையும், சினைப்பை புற்றுநோய் வரும் என்பதையும் இந்த ஆய்வு கண்டுபிடிக்க உதவியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


source:alaikal


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிவு

அமெரிக்காவில் அதிபர் ஒபாமாவின் செல்வாக்கு சரிவு; அவரது பேச்சை 4 3/4 கோடி மக்களே கேட்டனர்
 நியூயார்க், ஜன. 29-
 
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நேற்று முன்தினம் அந்நாட்டு பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். அவரது பேச்சை அமெரிக்காவில் உள்ள டெலிவிஷன்கள் போட்டி போட்டு ஒளிபரப்பின. அப்போது, அவரது பேச்சை அமெரிக்கர்கள் ஆர்வத்துடன் கேட்டனர். எத்தனை சதவீதம் பேர் அவரது பேச்சை கேட்டனர். என்று நீல்சன் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதில், அவரது செல்வாக்கு சரிந்து இருப்பது தெரிய வந்தது.
 
ஏனெனில் அவரது சமீபத்திய பேச்சை 48 மில்லியன் (4 கோடியே 80 லட்சம்) பேர் மட்டுமே கேட்டுள்ளனர். புஷ் அதிபராக இருந்தபோது அவரது முதல் பேச்சை 40 மில்லியன் (4 கோடி) மக்களே கேட்டனர். அதே சமயம் ஈராக்குக்கு அமெரிக்க படைகளை அனுப்புவது குறித்து கடந்த 2003-ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் ஆற்றிய உரையை 62 மில்லியன் (6 கோடியே 20 லட்சம்) பேர் கேட்டனர்.
 
அதிபராக பதவி ஏற்றவுடன் 1993-ம் ஆண்டு முதன் முதலாக பில் கிளிண்டன் ஆற்றிய உரையை 66.9 மில்லியன் (6 கோடியே 69 லட்சம்) பேர் கேட்டனர். அதிபர் ஒபாமா பதவி ஏற்றவுடன் அவரது முதல் பேச்சை 52.3 மில்லியன் (5 கோடியே 23 லட்சம்) பேர் கேட்டுள்ளனர்.
 
இதற்கு காரணம் அமெரிக்க மக்களிடையே அதிபர் ஒபாமாவுக்கு உள்ள கோபமே காரணம் என தெரிகிறது. ஏனெனில் அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலை, வேலையில்லா திண்டாட்டம், அவற்றை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்காதது போன்றவையே காரணம் என கூறப்படுகிறது

source:maalaimalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

9 வயதில் குழந்தை பெற்ற சிறுமி


 
பெய்ஜிங், ஜன. 31-
 
வட மேற்கு சீனாவில் தவறான உறவு காரணமாக 9 வயது சிறுமி ஒருத்தி கர்ப்பமானாள். பிரசவவலியால் துடித்த அவளை சங்சன்நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவளுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. குழந்தை 2.75 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக உள்ளது.
 
இதன் மூலம், சீனாவில் மிக குறைந்த வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற பெருமையை இவள் பெற்று இருக்கிறாள். அவளது பெயர் விவரம் வெளியிடப்படவில்லை.
 
சீனாவில் 14 வயதுக்கு குறைவான பெண்களுடன் செக்ஸ் உறவு வைத்து கொள்வது கற்பழிப்பு குற்றமாக கருதப்படும். எனவே, இந்த சிறுமியை கற்பழித்து ஒரு குழந்தைக்கு தாயாக்கிய அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது

source:maalaimalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழறிஞர் கால்டுவெல் வீடு அரசு நினைவு இல்லமாகிறது

Robert Caldwellசென்னை: இங்கிலாந்தில் பிறந்து, கிறிஸ்துவ சமயத் தொண்டாற்ற தமிழகம் வந்து, தமிழ் மொழியை சிறப்புற கற்று, அதன் வளர்ச்சிக்காக பாடுபட்டு, தமிழை செம்மொழி என உலகுக்கு உரைத்த அறிஞர் கால்டுவெல் வாழ்ந்த நெல்லை இல்லம், அரசு நினைவு இல்லமாக மாற்றப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

இங்கிலாந்து நாட்டில் பிறந்து கிறிஸ்தவ சமயத் தொண்டு புரிவதற்காக 1838-ம் ஆண்டில் சென்னைக்கு வந்த ராபர்ட் கால்டுவெல், நெல்லை மாவட்டம் இடையன்குடி என்னுமிடத்தில் தங்கி சமயப் பணிகளாற்றி மறைந்தார். 

கால்டுவெல் தமிழகத்திற்கு வந்தபின் தமிழ்மொழி கற்று, அதன் இலக்கண இலக்கியங்களில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். தமிழ் மொழி மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பிற திராவிட மொழிகளையும் கற்று, இம்மொழிகளுக்கிடையில் உள்ள ஒற்றுமைகளை ஆய்வு செய்தவர்.

அதன் பயனாக, "திராவிட மொழிகள்" என்னும் சொல்லாக்கத்தை முதன் முதல் உருவாக்கி உலகுக்கு அறிமுகம் செய்தவர் அவர். 

அத்துடன் "திராவிட மொழிகள் அனைத்திலும், உயர் தனிச் செம்மொழியாய் நிலைபெற்று விளங்கும் தமிழ், தன்னிடையே இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத சொற்களை அறவே ஒழித்து விட்டு உயிர் வாழ்வதோடு அவற்றின் துணையை ஒருசிறிதும் வேண்டாமல் வளம்பெற்று வளர்வதும் இயலும் என்னும் வரலாறு போற்றும் மகத்தான உண்மையை நிலைநாட்டி உலகறியச் செய்தவர் கால்டுவெல். 

அவர் படைத்த "திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்" என்னும் நூல் தமிழ்மொழியின் தனித்தன்மையையும், சிறப்பையும் உலகுக்கு வெளிப்படுத்தியதுடன், தமிழ்மொழி பற்றிய தொன்மைச் சிறப்பினையும் பறைசாற்றுகிறது.

இவ்வாறு தமிழ் மொழிக்கு மாபெரும் பெருமைகளை சேர்த்த ராபர்ட் கால்டு வெல்லை போற்றும் வகையில், அண்ணா முதல்- அமைச்சரான பின், 1968-ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகத்தமிழ் மாநாட்டின்போது, சென்னை கடற்கரையில் காமராஜர் சாலையில் சிலை அமைத்து சிறப்பிக்கப்பட்டது. 

செம்மொழியாம் தமிழ் மொழிக்கு சிறந்த மணிமகுடம் சூட்டிய மாமேதை கால்டு வெல்லுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில், நெல்லை மாவட்டம், இடையன் குடியில் அவர் வாழ்ந்து மறைந்த இல்லத்தை, அவரது நினைவைப்போற்றும் வகையில், அரசு நினைவு இல்லமாக மேம்படுத்திப் பராமரித்திட முதல்- அமைச்சர் கருணாநிதி இன்று ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:thatstamil

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP