சமீபத்திய பதிவுகள்

வன்னிக் காடுகளில் இப்போது கொரில்லா சண்டை: இலங்கை மோதலின் தன்மை மாறுகிறது

>> Monday, January 26, 2009

 

   
 

altமுல்லைத் தீவு முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக இலங்கை ராணுவம் கூறிக் கொள்கிறது; அதே சமயம் முல்லைத் தீவுக்கு அருகில் உள்ள காடுகளில் விடுதலைப் புலிகளுடன் கடுமையாகச் சண்டையிட்டு வருவதாகவும் தெரிவிக்கிறது.

 

இதிலிருந்து நகர்ப்புறங்களிலிருந்து விலகி வனப்பகுதிக்குச் சென்ற விடுதலைப் புலிகள் அங்கிருந்தபடியே ராணுவத்துக்குத் தங்களால் ஏற்படுத்த முடிந்த அதிகபட்ச சேதங்களை ஏற்படுத்தி வருகிறார்கள் என்று தெரிகிறது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சண்டை தீவிரமாகி வருகிறது.

 

நாலாபுறமும் இலங்கை ராணுவத்தால் சூழப்பட்டுள்ள விடுதலைப் புலிகளுக்கு வெளியிலிருந்து இனி எந்த உதவியும் கிடைக்க வாய்ப்பில்லை. அவர்களும் அவர்களுடன் காடுகளில் இருக்கும் மக்களும் இப்போது ராணுவத்தின் தாக்குதலை முழு வீச்சில் எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

 

முள்ளியவெளி என்ற இடத்தில் முன்னேற முயன்ற ராணுவத்துக்கு பெருத்த அதிர்ச்சி காத்திருந்தது. அங்கு மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணி வெடிகளில் சிக்கி ஏராளமான ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். எனவே மேற்கொண்டு அப்பகுதியில் முன்னேற முடியாமல் ராணுவம் பின்தங்கிவிட்டது.

 

இதனால், கொழும்புக்குத் தகவல் தந்து விமானப் படை போர் விமானங்களையும் நவீன தாக்குதல் ஹெலிகாப்டர்களையும் வரவழைத்து, காடு என்றும் நிலம் என்றும் பாராமல் குண்டுமாரிப் பொழிய நடவடிக்கை எடுத்துள்ளனர் முல்லைத்தீவில் உள்ள ராணுவ அதிகாரிகள்.

.


சந்தேகம்:


இலங்கை ராணுவத்தினர் தெரிவிப்பதைப் போல விடுதலைப் புலிகள் நகர்ப்பகுதிகளை விட்டு வனப்பகுதிகளுக்குள் ஓடி ஒளிகின்றனரா அல்லது ராணுவ வீரர்களை வனப்பகுதிக்குள் நெடுந்தொலைவு இழுத்துச் சென்றுவிட்டு பிறகு பெருந்தாக்குதலைத் தொடுக்கப் போகிறார்களா என்ற சந்தேகம் ராணுவ மோதல்களைக் கவனித்துவரும் சர்வதேசப் பார்வையாளர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

 

நவீனப் போர் முறையின் அனைத்து அம்சங்களிலும் நிபுணர்களாக விளங்கும் விடுதலைப் புலிகளுக்கு திடீரென ஆள் பற்றாக்குறையோ, ஆயுதப் பற்றாக்குறையோ ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. புலிகள் பதுங்குவது பெரிய பாய்ச்சலுக்காகவும் இருக்கலாம் என்று பார்வையாளர்கள் நினைக்கின்றனர்.

 

பரந்தன், ஆனையிறவு, முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக ராணுவம் கூறினாலும் மிகப் பெரிய எண்ணிக்கையில் புலிகளுக்கு உயிர்ச்சேதம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. எனவே புலிகளின் மூலபல சேனை இன்னமும் எங்கோ தயாராக இருக்கிறது என்றே அவர்கள் கருதுகின்றனர்.

 

ராணுவம் கைப்பற்றிய இடங்களில் இருந்த கட்டடங்கள், பொது இடங்கள் எல்லாம், ""அடுத்த குடித்தனக்காரர் உடனே குடியேறுவதற்கு காலிசெய்து வைத்த வீடுகளைப் போலவே'' விடப்பட்டிருக்கின்றன. எனவேதான் அவர்களுக்கு இந்தச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

 

விசுவமடுகுளம் என்ற இடத்தில் தரைப்படைக்கு உதவ விமானப் படை எம்.ஐ.-24 ரக ஹெலிகாப்டர்கள் உதவியுடன் குண்டுமாரிப் பொழிந்தது. ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் அங்கு விமானப்படையின் இடைவிடாத தாக்குதல் நடைபெறுகிறது.

 

http://www.nerudal.com/content/view/5832/1/

StumbleUpon.com Read more...

புலிகளின் தலைவர் பிரபாகரனைப் பிடிக்க சிங்கள படையுடன் இணைந்து தேடும் இந்திய உளவு படை

 
முல்லைத் தீவில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. பிரபாகரன் அங்கு சென்று மலைக்குகைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க சிங்கள படைகளுடன் இணைந்து கண்டுபிடிக்க இந்திய உளவுப்படை களம் இறக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
விடுதலைப்புலிகளின் ஆதிக்கம் நிறைந்த முல்லைத்தீவு வீழ்ந்து விட்டது என சிங்கள ராணுவம் கூறிவருகிறது. ஆனால் இதுகுறித்து புலிகள் தரப்பில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் பிரபாகரன் எங்கிருக்கிறார் என்ற கேள்வி எல்லோரது மனதிலும் ஏற்பட்டுள்ளது. முல்லைத் தீவில் அடர்ந்த காட்டுப்பகுதி உள்ளது. பிரபாகரன் அங்கு சென்று மலைக்குகைக்குள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தமிழ் ஈழம் மலர்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் விடுதலைப்புலிகளுக்கு துரோகம் செய்த கருணா என்ற முரளீதரன் இந்த தகவலை சிங்கள இராணுவத்திடம் கூறியுள்ளார் என்றும், அந்த காட்டுப் பகுதிகளையும் அடையாளம் காட்டி கருணா இனத் துரோகம் செய்துள்ளார் என்றும் புலிகளின் ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர்.

இதன் அடிப்படையில் சிங்கள இராணுவத்தின் அதிரடிப்படை வீரர்கள் முல்லைத்தீவு காட்டை முற்றுகையிட்டுள்ளனர். விடுதலைப்புலிகளிடம் உள்ள குட்டி விமானங்களை கண்டு பிடித்து கைப்பற்ற முன்னுரிமை கொடுத்து, அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பிரபாகரனை உயிருடன் பிடிக்க இந்தியாவும் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளதாகவும், பிரபாகரன் இருக்கும் இரகசிய இடத்தை கண்டுபிடிக்க இந்திய உளவுப்படை களம் இறக்கி விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் பிரபாகரன் பற்றிய தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.

இது தவிர இலங்கையை சுற்றி இந்திய கடற்படை கப்பல் வளையம் போல நின்று பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. இலங்கை இராணுவ கப்பல்களுடன், இந்திய கடற்படை கப்பல்களும் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்போது இலங்கையின் எந்த பகுதியிலும் விடுதலைப்புலிகள் வலுவாக இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது என்று சிங்கள ராணுவம் கூறிவருகிறது.

 

http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1232984364&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...

ஈழத்தில் உயிர்பலி புலம்பெயர்தேசத்தில் தினவெடுக்கும் துரோகிள்

 
நீங்களும் நாங்களும் நினைப்பது போல் யுத்தம் முடிந்தால் சரி எல்லாம் வழமைக்குத் திரும்பி விடும். யாழ்தேவியில் யாழ்ப்பாணம் போய் கசூரினாவில் குளித்து கூவிலில் கள்ளடித்து பருத்தித்துறையில் புட்டும் கணவாயக்கறியும் உண்ணலாம் என்பது சிந்தனைக்கு மட்டும் தான். புலிகள் தோற்றால் போதும் எல்லாம் கிடைத்துவிடும் என்று காத்துக்கிடக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் புலிகள் வெல்லும் வரை பொறுத்திருப்போம் என புலம்பெயர் தேசத்தில் தினவெடுக்கும் தோள்களுக்கும் இந்த மனித அவலங்கள் புரியாதவை.

முல்லைத்தீவு - பரந்து விரிந்த உலகின் கவனம் நிலைகுத்தி நிற்கும் பிரதேசம்:

வடக்கே காங்கேசன்துறை முதல் கிழக்கே பொத்துவில் வரை விரிந்து பரந்த தமிழீழ தனியரசுக்கான போரை முடிவுறுத்துவதற்கான இறுதிக்கட்டத்தை அடைந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் புளகாங்கித அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது.

கள நிலமைகள் குறித்து பக்கச்சார்பற்ற அறிக்கைகள் கிடைக்காதமை ஊகங்களுக்கும் அனுமானங்களுக்கும் வழிசமைத்து விடுகின்றன.

தோற்கடிக்க முடியாத போராட்ட சக்தியாக தமிழ்த் தேசிய ஆதரவாளர்களால் கொண்டாடப்பட்ட புலிகள் எல்லாவற்றையும் இழந்து விட்டு போர்க்களத்தில் நின்ற இராவணனை ஒத்த நிலையில் இருப்பதாக, இராமாயணத்தில் இராமனுடன் சேர்ந்ததால் முதலில் உயிரிரையும் பின்னர் இலங்கையின் ஆட்சி அதிகாரத்தையும் தக்க வைக்க முடிந்த விபீசண வழித் தோன்றல்கள் கொக்கரித்து மகிழ்கின்றார்கள்.

ஆனாலும் தோற்றுப் போவதற்கான போர் அல்ல இது. தமிழினம் விடுதலை பெறுவதற்கான எழுச்சி என்று எஞ்சிய நம்பிக்கைகளுடன் வாதிடும் குரல்களையும் காணமுடிகின்றது.

என்ன நடக்கின்றது...இரு தமிழர்கள் சந்தித்துக் கொள்ளும் போது பரவலாக கேட்க முடிகின்ற வார்தைகள்.

பதில் தெரியாமல் அவரவர் எண்ண அலைகளுக்கேற்ப நிலைமைகளைப் புரிந்து கொள்ள முயற்ச்சிக்கும் போக்கே எங்களில் பலரிடம் இருக்கின்றது.

உலக இயங்கியல் பற்றிய அறிவினை பெறுவதற்கும் அல்லது அது குறித்து ஆய்வதற்கும் எமக்கு நேரமிருப்பதில்லை.

அதனால் கிடைக்கின்ற அவசர விடுமுறைகளில் ஆங்காங்கே முளைத்து முகிழ்ந்து கிடக்கும் இணையங்களில் மேய்ந்து நிலவரங்களை தேடுகின்றோம்

புலி ஆதரவு அல்லது புலி எதிர்ப்பு என்ற இரு பிரிவுகளில் தமிழ் ஊடகங்களில் பெரும்பாலானவற்றை வகைப்படுத்த முடிவது தமிழனின் சாபம்.

கொழும்பு - அரசியல் பேதங்ளை மறந்து ஒன்றாய் எழுந்து வன்னிப் போருக்கான ஆதரவை பலமாய் பதிவு செய்து வருகின்றது

அரசாங்கம், ஐக்கிய தேசியக் கட்சி, ஜே.வி.பி, ஹெல உருமய, என சிங்களத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் ஒரணியில் திரண்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்தால் படுகொலை செய்யப்படும் அல்லது அச்சுறுத்தப்படும் சிங்கள ஊடகவியலாளரில் பலரும் கூட தமிழன் கொல்லப்படுவது சரியானது தான் என்ற நிலைப்பாட்டை கொண்டிருப்பது மஹிந்த அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றி.

வெறுமனே அரசியல் கோட்பாட்டு வசனங்கள் மூலமும் அரசியல் சாணக்கியத்தனங்கள் மூலமாகவும் யுத்தத்திற்கு எதிரானவர்கள் என்ற ஆடை அணிந்திருந்த ஐக்கிய தேசிய கட்சி இன்று ஆடை களைந்து தமது நிர்வாணத்தில் நிஜம் காட்டி நிற்கின்றது.

வன்னியில் தினமும் 20 ற்கும் குறையாத உயிர்ப்; பலிகளும் 100ற்கும் அதிகமான காயமடைதல்களும் நடந்தேறி வருகின்றன.

அரசாங்கம் அறிவித்த பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்த மக்களில் 160 பேர் வரை இதுவரை பலியாகியிருக்கின்றார்கள.; மேலும் 700 பேர் காயமடைந்திருப்பதாக பிந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 20ம் திகதி பாதுகாப்பு வலயம் அறிவிக்கப்பட்டது முதல் நேற்று 25ம் திகதி வரையான உயிர்பலி நிலவரங்கள்தான் இவை.

ஒரு குடும்பம் வாழக் கூடிய பிரதேசத்தில் ஆறு குடும்பங்கள் வாழும் மனித நெருக்கடி நிலை வன்னியில் தோன்றியுள்ளது.

புதுக்குடியிருப்பு மருத்துவமனையில் மட்டும் 400 பேர் காயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலிகள் தோற்றால் போதும் எல்லாம் கிடைத்துவிடும் என்று காத்துக்கிடக்கும் புலி எதிர்ப்பாளர்களுக்கும் புலிகள் வெல்லும் வரை பொறுத்திருப்போம் என புலம்பெயர் தேசத்தில் தினவெடுக்கும் தோள்களுக்கும் இந்த மனித அவலங்கள் புரியாதவை.

இந்தப் போர் வெறுமனே புலிகளையும் அதன் தலைமையினையும் அழிப்பதற்கான தொன்றல்ல என்பது இன்னும் எங்களில் பலருக்கு புரியாதிருப்பது தான் வேதனை.

புலிகளின் கதை முடிந்து விட்டதாக அறிவிப்பு வரும் பொழுதில் டக்ளசும், சங்கரியும், கருணாவும் பிள்ளையானும் சந்தோசத்தை கொண்டாட உயிரோடிருக்க மாட்டார்கள் என்பது தான் நிதர்சனம்.

தமிழ் இனத்திற்கான அனைத்து பிரதிநிதித்துவத்தையும் முதலில் அழிப்பது பின்னர் எழுச்சி பெற எவருமே இல்லாத வகையில் தமிழினத்தை முற்றாக அழிப்பது இது தான் தென்னிலங்கையின் அறிவிக்கப்படாத தீர்மானம்.

நீங்களும் நாங்களும் நினைப்பது போல் யுத்தம் முடிந்தால் சரி எல்லாம் வழமைக்குத் திரும்பி விடும். யாழ்தேவியில் யாழ்ப்பாணம் போய் கசூரினாவில் குளித்து கூவிலில் கள்ளடித்து பருத்தித்துறையில் புட்டும் கணவாயக்கறியும் உண்ணலாம் என்பது சிந்தனைக்கு மட்டும் தான்.

புலத்தில் இருந்து புலிகளின் தோல்விக்கான நாட்களை எண்ணி மஹிந்த அரசின் செய்திகளில் சிந்து பாடித்திரியும் தோழர்களே உங்கள் சிந்தனைகள் மனிதம் பற்றியவை என்றால் மாற்றுக் கருத்துக்கள் பற்றியதென்றால் இவை பற்றியும் ஆய்ந்து எழுதுங்கள்.

புலிகளின் தோல்விக்கான காரணிகளை சரியோ தவறோ நீங்கள் சொல்ல நாங்கள் கேட்கின்றோம், புலிகளின் தோல்வி என்று ஒன்று ஏற்பட்டால் அதற்கு பின்னரான நிலை குறித்து உங்கள் மனச்சாட்சிக்கு முரணாகாமல் கருத்து பகிர முடியுமா ?

இது புலிகளையும் யுத்தத்தையும் நியாயப்படுத்தும் நோக்கம் கொண்ட வாதம் அல்ல ஆனால் புலிகளுக்கும் யுத்தத்திற்கும் அப்பால் தமிழினத்தின் இருப்பு குறித்த விழி;ப்புணர்வு போதவில்லையே என்ற ஆதங்கத்தில் எழுந்த தேடல்.

அமெரிக்க யுத்த ஆலோசனைகள், ஜப்பானிய நிதி உதவிகள் இந்தியாவின் புலனாய்வுத் தகவல்கள், பாகிஸ்தானின் பல் குழல் எறிகணைகள், சீனாவின் யுத்த தாங்கிகள் சிங்கள ஏழைத் தாய்மாரின் ஆயிரம் ஆயிரம் பிள்ளளைகள், இன்னும் இன்னோரென்ன பல காரணிகளின் பலத்தோடு பொருதும் இலங்கைப் படையை எதிர்கொள்வது இயலாது என்பதுதான் யதாhத்தம்.

இந்த நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டால் ஒழிய தமிழினத்தின் அழிவை தள்ளிப்போட்டு விட முடியாது.

காசாவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் உலக பரப்பில் விரிந்து வாழும் பலஸ்தீனியர்கள் ஒட்டுமொத்தமாய் குரல் கொடுக்கின்றார்கள். தாங்கள் வாழும் நாடுகளின் அரசாங்கங்களை அசைக்கும் வகையில் போராட்டம் நடத்துகின்றார்கள்.

ஆனால் நாங்கள்.. ஆங்காங்கே நடக்கும் போராட்டங்களையும் புலி ஆதரவு முத்திரை குத்தி நசுக்கி விடுகின்றோம்.

புலி எதிர்ப்பு மற்றும் மாற்றுக் குரல் பற்றி உரத்து பேசும் நண்பர்களே இவையிரண்டிற்கும் அப்பால் ஒரு இனத்தின் இருப்பு என மிகப்பெரிய விசயம் இருப்பதை நீங்கள் மிக இலகுவாக மறந்து விடுகின்றீர்கள்.

இன்று சிங்கள தேசம் எப்படி அரசில் கட்சி வேறுபாடுகளை மறந்து ஒருமித்து நிற்கின்றதோ அதேபோன்ற நிலை தமிழர்கள் மத்தியில் ஆகக்குறைந்தது இலங்கையில் பிறந்து ஈழத்தமிழர்கள் என்று அழைக்கப்படும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் ஏற்பட வேண்டும்.

80களில் இடம்பெற்ற ஜே.வி.பியின் புரட்சியும் அதனை சிங்கள அரசு கையாண்ட விதமும் எவரும் அறியாததல்ல.

எனது தலைவனை ஆயிரக்கணக்கான எனது தோழர்களை கொன்றது இந்த அரசு தான் என்று வெறுத்து ஒதுக்காமல் எவ்வாறு ஜே.வி.பி தனக்கான அரசியலை மாற்றி அமைத்துக் கொண்டதோ அதேபோன்று கடந்த கால கசப்புகளை மறந்து தமிழினம் ஒன்று படுவது மட்டுமே இனி தமிழினம் வாழ்வதா ? வீழ்வதா என்பதை தீர்மானிக்குமே தவிர வன்னியில் செத்துமடியும் சிங்கள சிப்பாய்களின் எண்ணிக்கைகளில் அல்ல.

தீபம் அணையாமல் இருக்க காற்று வீசமால் இருப்பது மட்டுமே போதுமானதல்ல தீபம் தொடர்ந்து எரிவதற்கு ஆகுதியாக எண்ணெயும் வேண்டும்.
http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1232985133&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...

300 தமிழர் பலி; பலநூறு பேர் படுகாயம்

      
 

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் - சிறிலங்கா அரசாங்கம் அறிவித்த "மக்கள் பாதுகாப்பு வலய"மான - புதுக்குடியிருப்பு - சுதந்திரபுரம் சந்தி மற்றும் விசுவமடு - உடையார்கட்டு, வல்லிபுனம், ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் இன்று திங்கட்கிழமை நடத்திய கண்மூடித்தனமான - அகோர பீரங்கி தாக்குதலில் ஆகக்குறைந்தது 300 பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளதுடன் பல நூறு பேர் படுகாயமடைந்துள்ளனர்.

வன்னியின் நான்கு பெரும் மாவட்டங்களில் இருந்து துரத்தப்பட்டு - நான்கு சிறிய கிராமங்களுக்குள் தற்போது மிக நெரிசலாக முடக்கப்பட்டுள்ள நான்கு லட்சம் வரையான தமிழர்களை கொன்றொழிக்கும் நோக்கத்துடன் இந்த மிகச் செறிவான பீரங்கி தாக்குதல் அவர்கள் மீது நடத்தப்படுகின்றன.

சுதந்திரபுரம் சந்தி, உடையார்கட்டு ஆகிய பகுதிகளை நோக்கி இன்று திங்கட்கிழமை காலை 9:45 நிமிடம் முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சுதந்திரபுரம் சந்தியில் பிற்பகல் 2:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் எறிகணைகள் ஐ.நா. தொண்டர் நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் மேற்பார்வையில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் வீழ்ந்து வெடித்துள்ளன.

மூங்கிலாறு பகுதியில், பரந்தன் - முல்லைத்தீவு வீதியின், 3 கிலோ மீற்றர் நீளத்திற்கு பெருந் திரளாக இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்த மக்களை இலக்கு பீரங்கி தாக்குதல் நடாத்தப்பட்டதில் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டதுடன், அவர்கள் சென்றுகொண்டிருந்த பல வாகனங்களும், வீதியோரம் இருந்த பல வீடுகளும் தீயில் எரிந்து நாசமாகின.

இதேவேளை - உடையார்கட்டு பகுதியில் இயங்கி வந்த மருத்துவமனையும் பீரங்கி தாக்குதலுக்கு உள்ளாகி ஏற்கனவே காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த ஏராளமான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் மருத்துவமனையின் 4 நோயாளர் காவு வாகனங்களும் அழிக்கப்பட்டுள்ளன. இதனால் காயமடைந்தோரை எடுத்து வருவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டும் படுகாயமடைந்தும் வீழ்ந்து கிடந்தோரில் பெருமளவிலனோர் கைக்குழந்தைகளும் சிறுவர்களும் ஆவர்


 

 

மேலதிக செய்திகள்...

   
 

வன்னி மீது கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் சிங்கள படைகள் ஏறிய கொரூர எறிகணைத் தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கவனிப்பார் யாரும் இன்றி வீதிகளில் மரணப்படுக்கையில் கிடப்பதாக வன்னித்தகவல்கள் தெரிவித்துள்ளன.

பாதுகாப்பு தரப்பினர் 'பாதுகாப்பு வலயம்'என்ற அறிவிக்கப்பட்ட பகுதி மீதே இந்த கொரூர தாக்குதல்களை சிங்கள வெறிபிடித்த படையினர் மேற்கொண்டுவருவதாக அங்கு மரணப்பிடியில் தப்பியோடும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு வலயம் பகுதி நோக்கி படையினர் மாரி மழைபோன்று ஆட்லறி தாக்குதல்களை நடத்திவருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பரந்தன் வீதியில் இருந்து 3 கிகோ மீற்றர் தூரத்தில் உள்ள விளைப்புனம் காளிகோவிலுக்கும் மூங்கிலாறு பிரதேசத்துக்கும் இடைப்பட்ட பகுதி எறிகணைத்தாக்குதலில் பற்றி எரிந்துகொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இடம்பெயர்ந்து சென்றுகொண்டிருந்த மக்களின் வாகனங்கள்,பொருட்கள் வீதிகளில் பற்றி எரிகின்றது.

இப்பகுதியில் கொல்லப்பட்ட பொதுமக்களின் சடலங்கள் வீதிகள் எங்கும் சிதறிக்கிடப்பதுடன் காயப்பட்ட மக்கள் இரத்த வெள்ளத்தில் உதவிக்கு யாரும் இன்றி ஓலமிட்டவண்ணம் உள்ளதாக சம்பவத்தை நேரில் கண்ட அந்த வைத்தியர் தெரிவித்துள்ளார்.

 
 
மூங்கிலாறு காளி கோயில் அருகில் பல உடலங்கள் சிதறிகிடக்கின்றன. இறந்த குழந்தை ஒன்றின் உடலத்தை மிதிவண்டியில் யன்னலில் வைத்து கொண்டு செல்கின்றனர்.
முல்லை பரந்தன் உடையார்கட்டு
சாலையை மையமாக வைத்து தொடர்ச்சியாக எறிகணை
தாக்குதலை படைகள் தொடராக நடத்தி கொண்டு இருக்கிறது.

இந்த எறிகணைகள் உழவு இயந்திரங்கள் மீதும்
விழுந்து வெடித்து அதிலிருந்து மக்களும் பலியாகியுள்ளனர்.

4 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தென்னந்தோப்புக்குள்ளும்
காடுகளிற்குள்ளும் மக்கள் செறவாக இருக்கின்றனர்.

அந்த மக்களை இலக்கு வைத்தே படையினர் தாக்குதலை
நடத்தி கொண்டு இருக்கின்றனர்

மக்களை தமது கட்டுப்பாட்டுக்கள் வர வைப்பதற்காகவும்
இன அழிப்பை நடத்துவதற்காகவும் திட்டமிட்டு
எறிகணைகள் நடத்தியுள்ளது.

மூங்கிலாறு கைவேலி சுதந்திரபுரம் பகுதிகளில்
எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கிறது

உடையார்கட்டு வள்ளிபுன முல்லைத்தீவு மருத்துவமனைகள்
முற்ராக செயழிழந்து போயின்.

மருத்துவ வசதிகள் இன்றி காயப்பட்டவர்கள் தொடர்ச்சியாக
இறப்பு. குருதிப்பெருக்கால் பலர் இறந்துள்ளனர்.

அரை மைல்களை தாண்டி செல்வதற்கு 4 மணித்தியாலம் பிடிப்பதாக
வன்னியிலிருந்து கண்ணீரோடு மக்கள் தெரிவித்துள்ளனர்.

வாயோதிபர்களை விட்டுவிட்டு உறவுகள் சென்றபடி உள்ளனர்.

 

StumbleUpon.com Read more...

"மக்கள் எங்கள் மனிதக் கேடயங்களா?... வன்னிக்கு வந்து நிலைமையைப் பாருங்கள்": அனைத்துலக அமைப்புக்களுக்கு நடேசன் பகிரங்க அழைப்பு

"மக்கள் எங்கள் மனிதக் கேடயங்களா?... வன்னிக்கு வந்து நிலைமையைப் பாருங்கள்": அனைத்துலக அமைப்புக்களுக்கு நடேசன் பகிரங்க அழைப்பு
 
"வன்னி வாழ் மக்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் எனக் குற்றம் சாட்டும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், வன்னிக்கு வந்து நிலைமையை நேரடியாகப் பார்க்க வேண்டும் என நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்று  தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர்  பா.நடேசன் பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.
"எமது மக்களுக்காகவே நாம் போராடுகின்றோம். அவர்களை மனிதக் கேடயங்களாக நாம் வைத்திருக்கின்றோம் என்று சொல்வது ஒரு முற்று முழுதான பொய்ப் பிரச்சாரம். எமது மக்களை கொல்வதற்கான ஒரு பொய்ப் பிரச்சாரமாக சிறிலங்கா அரசாங்கம் இதனைச் சொல்கின்றது" என பா.நடேசன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் புலிகள் மீது முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கேட்கப்பட்ட போது,  "எம் மீது அவர்கள் வைப்பது ஒர் அபாண்டமான குற்றச்சாட்டாகும். எமது பாதுகாப்பில் வாழ்வதை விரும்பியே கடந்த இரண்டு வருடங்களாக இடம்பெயர்ந்து மக்கள் எம்முடன் வருகின்றனர். இங்குள்ள மக்களின் உண்மையான மனநிலை என்ன என்பதை இங்கு வந்து பார்த்தால் தான் தெரியும்" என தெரிவித்த அவர்,
"இவ்வாறாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களுக்கு நான் பகிரங்க அழைப்பு விடுக்கின்றேன். இங்கு கண்மூடித்தனமாக நிகழும் எறிகணைத் தாக்குதல்களை நிறுத்திவிட்டு அவர்கள் வன்னிக்கு வந்து மக்களின் மனநிலை என்ன என்பதை நேரடியாகப் பார்க்க வேண்டும் என அவர்களுக்கு நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்" என்றும் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் அவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விட்டாரா என்பது பற்றிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், "எமது தலைவர் எங்கும் சென்று விடவில்லை. அவரும், எமது போராட்ட இயக்கமும் எமது மக்களுடனேயே இருந்து போராடுகின்றோம்" என அவர் தெரிவித்தார்.
பெரும் இராணுவப் பின்னடைவைக் கண்டுள்ள நிலையில் புலிகள் இயக்கம் ஏன் ஒரு அரசியல் தீர்வைப் பெறக்கூடாது என்பது தொடர்பான ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கையில், "சுதந்திரமான, கெளரவமான ஒரு அரசியல் தீர்வுக்காகவே நாம் போராடுகின்றோம். அது எல்லோருக்குமே நன்கு தெரிந்த ஒரு விடயமாகும். எமது மக்களின் அந்தச் சுதந்திரமும் கௌரவமும் உறுதிப்படுத்தப்படும் வரை நாம் போராடியே தீருவோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinam.com/full.php?2b44OO44b3aC6DR34d21VoK2a03K4AKe4d2YSmAce0de0MtHce0df1eo2cc0ycYU3e

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP