சமீபத்திய பதிவுகள்

பெண் பத்திரிகையாளருக்கு கசையடி தண்டனை ரத்து

>> Tuesday, October 27, 2009


 துபாய் : சவுதி அரேபியாவில், "டிவி' சேனலில் செக்ஸ் நிகழ்ச்சி தயாரித்த பெண் பத்திரிகையாளருக்கு விதிக்கப்பட்ட கசையடி தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.


லெபனான் நாட்டு "டிவி' சேனல், கடந்த ஜூலை மாதம் ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பியது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அப்துல் ஜவாத் என்பவர் திருமணத்துக்கு முந்தைய தனது செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசினார். இந்த நிகழ்ச்சி சவுதி அரேபிய தலைநகர் ஜெட்டாவில் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பானது. இதற்காக ஜவாத்துக்கு ஐந்தாண்டு சிறையும், ஆயிரம் கசையடியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியை தயாரித்த பெண் பத்திரிகையாளர் ரோசனா அல் யாமி என்பவருக்கு 60 கசையடி அறிவிக்கப்பட்டது. செக்ஸ் பற்றி பகிரங்கமாக "டிவி' மற்றும் ரேடியோவில் பேசுவது சவுதியில் சட்ட விரோதமாக கருதப்படுகிறது."போல்டு ரெட் லைன்' என்ற பெயரில் லெபனான் "டிவி' யில் இந்த நிகழ்ச்சி தொடர்ந்து ஒளிபரப்பப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், சவுதியை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு தங்கள் செக்ஸ் வாழ்க்கை பற்றி பெருமையாக பேசியது குற்றமாக கருதப்பட்டு இந்த தண்டனை வழங்கப்பட்டது. பத்திரிகையாளர் என்ற முறையில், தனது தொழிலை ரோசனா செய்துள்ளார். ஒரு பெண் பத்திரிகையாளருக்கு இது போன்ற கொடுமையான தண்டனை அளிக்கக்கூடாது, என பல்வேறு பத்திரிகைகள் சார்பில் சவுதி அரேபிய அரசிடம் வற்புறுத்தப்பட்டது.இதையடுத்து, இது குறித்து விசாரிக்கும் படி சவுதி மன்னர் அப்துல்லா, தகவல் தொடர்பு அமைச்சகத்துக்கு உத்தரவிட்டார். மன்னரின் உத்தரவை ஏற்று, சவுதி தகவல் தொடர்பு அமைச்சகம் ரோசனா மீதான தண்டனையை source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உங்கள் தோழனாக கண்ட்ரோல் பேனல்..


 

நம் கம்ப்யூட்டர் வீட்டில் பொருட்களை அமைத்து அவற்றைப் பயன்படுத்தி அதிக பட்ச பயன்கள் பெறும் வகையில் விண்டோஸ் நமக்குத் தரும் ஓர் இடம் கண்ட்ரோல் பேனல் ஆகும். இதன் பகுதிகள் மற்றும் அவை தரும் செயல்பாடுகளை உணர்ந்து கொண்டு இயக்கினால் தான் நாம் நம் கம்ப்யூட்டரில் அதிக பட்ச பயன்களைப் பெற முடியும்.

முதலில் கண்ட்ரோல் பேனல் பகுதியில் என்ன என்ன அமைக்கப் பட்டிருக்கிறது என்று பார்க்கலாம்.ஸ்டார்ட் (Start) பட்டனைக் கிளிக் செய்து வரும் மெனுவில் கண்ட்ரோல் பேனலைத்(Control Panel) தேர்ந்தெடுத்து என்டர் செய்திட கண்ட்ரோல் பேனல் கிடைக்கும். விண்டோஸ் எக்ஸ்பி வைத்திருப் பவர்களுக்கு கேடகிரி வியூ மற்றும் கிளாசிக் வியூ (Classic View / Category View)   என இரு வகைகளில் கிடைக்கலாம். இதில் கிளாசிக் வியூவினைத் தேர்ந்தெடுத்து வியூவை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு மாற்றிக் கொள்வதற்கான வசதி கண்ட்ரோல் பேனல் கட்டத்தில் இடது பக்கப் பிரிவில் மேலாகத் தரப்பட்டுள்ளதைக் காணலாம். அதில் கிளிக் செய்து கிளாசிக் வியூவைப் பெறவும். விண்டோஸ் 95 அல்லது 98 பயன் படுத்தியவர்களுக்கு இந்த ஒரு வியூ மட்டுமே கிடைப்பதால், அதனை வைத்திருப் பவர்களுக்குப் பிரச்னை இருக்காது. 

சிஸ்டம்: கண்ட்ரோல் பேனல் தொகுப்பில் மிக மிக முக்கியமான ஒரு பிரிவு உள்ளதென்றால் அது சிஸ்டம் (System)  எனப் பெயரிடப் பட்டதுதான். உங்களுடைய கம்ப்யூட்டர் செயல்பாட்டின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் அனைத்தும் இந்த பிரிவில் தான் உள்ளன. இதன் மீது இரண்டு முறை கிளிக் செய்தால் ஏழு டேப்கள் அடங்கிய ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் முதலாவது General  என்ற டேப் ஆகும். இதில் நீங்கள் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எது எனக் காட்டும். உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துள்ள சர்வீஸ் பேக் எதுவென்றும் இங்கு தெரிந்து கொள்ளலாம். இவற்றுடன் கம்ப்யூட் டரில் உள்ள பிராசசர், அதன் வேகம், கம்ப்யூட்டரின் மெமரியின் அளவு ஆகிய வையும் தெரிய வரும். உங்கள் கம்ப்யூட்டரில் ஏதேனும் பிரச்னை என்றால் அது குறித்து ஆய்வு செய்கை யில் இவை உங்களுக்குப் பயன்படும். கம்ப்யூட்டரில் ஏதேனும் பழுது ஏற்பட்டு அது குறித்து உங்கள் மெக்கானிக் டெலிபோனி லேயே சில தகவல்கள் கேட்டால் அப்போது இதனைப் பார்த்துத் தான் தகவல்களைத் தர வேண்டியதிருக்கும்.கம்ப்யூட்டர் நேம் (Computer Name) : அடுத்ததாக உள்ள கம்ப்யூட்டர் நேம் என்னும் டேப் உங்கள் கம்ப்யூட்டர் ஹோம் நெட்வொர்க்கில் இணைந்திருந்தால் உதவிடும். ஹார்ட்வேர் (Hardware): அடுத்ததாக உள்ள ஹார்ட்வேர் என்னும் டேப்பைக் கிளிக் செய்து கம்ப்யூட்டரின் உள்ளே மற்றும் வெளியே இணைக் கப்பட்டுள்ள சாதனங்களைச் சோதனை செய்திடவும் மாற்றி அமைத்திடவும் முடியும். இதனைக் கிளிக் செய்தால் வரும் திரையில் டிவைஸ் மேனேஜர் (Device Manager) என்று ஒரு பிரிவு கிடைக்கும். இதனை இயக்கினால் கம்ப்யூட்டரில் உள்ள சாதனங்களின் பட்டியல் கிடைக்கும். இவற்றில் முக்கியமானவை – டிஸ்க் டிரைவ்கள், மானிட்டர், நெட்வொர்க் கார்டு, மோடம், ஸ்கேனர், யு.எஸ்.பி. கண்ட்ரோலர்ஸ் ஆகியவை ஆகும். இந்த ஒவ்வொன்றிலும் அதன் உட் பிரிவுகளாக என்ன உள்ளது என்று அறிய விரும்பினால் அதன் இடது ஓரம் உள்ள + (பிளஸ்) அடையாளத்தின் மீது கிளிக் செய்தால் அதன் பிரிவுகள் கிடைக்கும். எந்த ஒரு சாதனத்தின் பெயர் அருகே ஒரு மஞ்சள் வண்ண ஆச்சரியக் குறி இருக்கிறதோ அந்த சாதனம் சரியாகச் செயல்பட வில்லை என்று பொருள். நீங்கள் சர்வீஸ் இஞ்சினியர் யாரிடமாவது உங்கள் கம்ப்யூட்டர் சாதனம் செயல்படா தன்மை குறித்து பேசப் போகிறீர்கள் என்றால் இவற்றை எல்லாம் குறித்து வைத்துக் கொண்டு பேச வேண்டும். டிவைஸ் மேனேஜர் செட்டிங்ஸ் எதனையும் அவற்றின் நிலை தெரியாமல் மாற்றுவது தவறு. இதனால் ஒழுங்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டரும் செயல்படாமல் போகலாம். அடுத்த பிரிவில் உள்ள டிரைவர் சைனிங் பட்டன் உங்கள் கம்ப்யூட் டருக்கு மைக்ரோசாப்ட் அங்கீகாரம் செய்யாத டிரைவர் களை அதன் சாதனங்களுக்குப் பயன்படுத்தும் வழியைத் தருகிறது. இதனை அப்படியே கிடைத்தது போல்(Default)  வைத்திருப்பது நல்லது. அடுத்ததாக உள்ள விண்டோஸ் அப்டேட் பட்டனைக் கிளிக் செய்து வைத்தால் உங்கள் கம்ப்யூட்டர் இன்டர்நெட்டில் இணைந்திருக்கையில் கம்ப்யூட்டர் தானாக மைக்ரோ சாப்ட் நிறுவனம் தந்திருக்கும் டிரைவர்கள் மற்றும் பேட்ச் பைல்களை டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் பதிந்து விடும். இதனை கிளிக் செய்து வைத்திருப்பது நல்லது. அடுத்து உள்ள அட்வான்ஸ்டு டேப் (Advanced Tab)நீங்கள் எதிர் பார்ப்பது போல சிக்கலானது ஒன்றுதான். நீங்கள் கம்ப்யூட் டரை செட் செய்வதில் எக்ஸ்பர்ட் ஆக இல்லை என்றால் இதனை எதுவும் செய்திடாமல் வைப்பது நல்லது. பெர்பார்மன்ஸ்(Performance) பிரிவில் கிளிக் செய்தால் ஒரு டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் உள்ள செட்டிங்ஸ்(Settings)  பட்டன் ஓரளவிற்குச் சில அமைப்பு களை மாற்றம் செய்திட உதவிடும். விண்டோஸ் செயல்பாட்டில் உள்ள விசுவல் எபக்டுகளை, (எடுத்துக்காட்டாக ட்ரான்ஸ்பரன்சி, ஷேடோஸ் போன்றவை) மாற்றலாம். ஆனாலும் "Let Windows choose what's best for my Computer" என்று இருப்பதைத் தேர்ந்தெடுத்து டிக் அடையாளம் ஏற்படுத்தி விட்டு சிவனே என்று இருப்பதுதான் நல்லது. இதில் உள்ள Remote  டேபை இயக்கினால் கம்ப்யூட்டர் இஞ்சினியர் எங்கோ ஓர் இடத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் கம்ப்யுட்டருள் புகுந்து அதன் செட்டிங்ஸை மாற்றும் வழியைத் தரலாம். ஆனால் எதற்கு இந்த வீண் வேலை என்றிருப்பதே நல்லது.ஹார்ட்வேர் இணைத்தல்: விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டமானது உங்கள் கம்ப்யூட்டரில் எந்த ஒரு ஹார்ட்வேர் சாதனத்தை இணைத்தாலும் உடனே புரிந்துகொண்டு அந்த ஹார்ட்வேர் சாதனத்திற்கான டிரைவரை தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலிருந்து எடுத்துக் கொள்ளும். அப்படி இல்லாத நிலையில் அந்த சாதனத்துடன் வந்துள்ள டிரைவர் டிஸ்க்கை சிடி டிரைவில் போடுமாறு கேட்டுக் கொண்டு அவ்வாறு போட்டவுடன் அந்த சிடியில் இருந்து தேடி எடுத்துக் கொண்டு டிரைவரைப் பதிந்து கொள்ளும். ஆனால் ஏதேனும் ஒரு ஹார்ட் வேர் சாதனத்தைக் கம்ப்யூட்டருடன் இணைத்து அதனை உங்கள் கம்ப்யூட்டரால் புரிந்து கொள்ள முடியாமல் போனால் வேறு சில நடவடிக்கைகளை நீங்கள் எடுக்க வேண்டியதிருக்கும். அப்போது கண்ட்ரோல் பேனலில் உள்ள Add Hardware என்ற பிரிவைக் கிளிக் செய்து அதனுள் செல்ல வேண்டியதிருக்கும். இது தொடர்ந்து வரும் டயலாக் பாக்ஸைத் தரும். இதில் உள்ள கேள்விகளுக்குப் பதில் கொடுத்துக் கொண்டே போனால் உங்கள் ஹார்ட்வேர் சாதனத்தைப் பதிந்து கொள்ளலாம். புரோகிராம்களை பதியவும் நீக்கவும் (Add or Remove Programs): 
ஏதேனும் ஒரு சாப்ட்வேர் தொகுப்பைப் பதிகையில் அதற்கான சிடியை ஸ்லாட்டில் செருகி அதன் இன்ஸ்டாலேஷன் சிடி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டால் புரோகிராம் பதியப் பட்டுவிடும். அப்படி இல்லாமல் புரோகிராம் பதிவதில் பிரச்னை இருந்தால் கண்ட்ரோல் பேனலில் உள்ள ஐகானைக் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் இடது பக்கம் உள்ள Add New Programs என்ற பிரிவைக் கிளிக் செய்திட வேண்டும். பின்னர் சிடி அல்லது பிளாப்பி என்று கேட்கும் கட்டத்தைக் கிளிக் செய்து அதன்பின் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து புரோகிராமைப் பதியலாம்.கண்ட்ரோல் பேனலில் Add or Remove Programs  பிரிவு புரோகிராம்களை நீக்குவதற்கு மிகவும் பயன்படும். இந்த பிரிவைப் பெற்று பதியப்பட்டுள்ள புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து அதில் 

Remove என்ற இடத்தில் கிளிக் செய்தால் எச்சரிக்கைச் செய்திக்குப் பின்னர் புரோகிராம் நீக்கப்படும். வழக்கமாக புரோகிராம் போல் டர்களில் அன் இன்ஸ்டால் (Un instalஎன்று ஒரு ஐகான் தரப் பட்டிருக்கும். அதனைக் கிளிக் செய்து புரோகிராமினை நீக்க லாம். அது போலத் தரப்படாத புரோகிராம்களில் மேலே குறிப் பிட்டவாறு செயல்படலாம். இதில் விண்டோஸ் எக்ஸ்பி கம்ப்யூட்டரில் பதியப்பட்டுள்ள புரோகிராம்கள் எவ்வளவு இடத்தை ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொண்டுள்ளன என்ற தகவலையும் தரும். அத்துடன் எத்தனை முறை ஒரு புரோகிராம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் இறுதியாக எப்போது பயன் படுத்தப்பட்டது எனவும் காட்டும். இந்த புரோகிராம் பட்டியலில் விண்டோஸ் தொகுப்பினைச் செம்மைப் படுத்தும் சில அடிப்படை புரோகிராம்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கான அப்டேட்டிங் புரோகிராம்ஸ் பதியப் பட்டிருக்கும். இவற்றை ஹாட் பிக்ஸ் (Hotfix) என்றும் சொல்வார் கள். இப்படிப்பட்ட புரோகிராம்களை நீக்கினால் விண்டோஸ் சிஸ்டம் செயல்படுவதில் பிரச்னைகள் ஏற்படலாம். கண்ட்ரோல் பேனலைப் பயன்படுத்தி விண்டோஸ் புரோகிராமை நீக்க முடியாது. ஆனால் அதற்கான துணைப் புரோகிராம்களை நீக்கவும் சேர்க்கவும் மேம்படுத்தவும் செய்திடலாம்.கண்ட்ரோல் பேனல் என்பது கம்ப்யூட்டரின் மிக முக்கிய பகுதியாகும். இதில் ஏற்படுத்தப் படும் மாற்றங்கள் நமக்கு விரைவான மற்றும் எளிதான பயன்பாட்டினைக் கொடுக்கும். ஆனால் அதே நேரத்தில் தவறான செட்டிங்ஸ் ஏற்படுத்தினால், பல பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். எனவே எந்த ஒரு மாற்றத்தினையும் ஏற்படுத்தும் முன், அதற்கு முன் இருந்த செட்டிங்ஸ் குறித்து குறிப்புகளைத் தயார் செய்து கொள்ளவும்.ஏற்படுத்தும் மாற்றங்களையும் குறித்து வைக்கவும். இங்கு தரப்படாத சில பயன்பாடுகளையும் கண்ட்ரோல் பேனலில் மேற்கொள்ளலாம். முக்கிய பயன்பாடுகள் மட்டுமே இங்கு விளக்கப்பட்டுள்ளன என்பதையும் நினைவில் கொள்ளவும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இறுதி போர் :அத்துமீறலை விசாரிக்க ராஜபக்சே முடிவு

இலங்கையில் இறுதி போர் ராணுவ அத்துமீறலை விசாரிக்க குழு அதிபர் ராஜபக்சே முடிவு

 

கொழும்பு, அக். 27-

இலங்கையில் தனி ஈழம் கேட்டு கடந்த 27 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் போராடி வந்தனர். இதை தொடர்ந்து ஆயுதம் ஏந்தி இலங்கை ராணுவத்துடன் போரிட்டு வந்தனர். இதன் இறுதிக்கட்ட போர் கடந்த மே மாதம் நடந்தது.
 
அப்போது, தமிழர்கள் மீதும், விடுதலைப்புலிகள் மீதும் பல அத்துமீறல் நடந்ததாகவும், போர்க்குற்றங்கள் நடைபெற்றதாகவும் இலங்கை ராணுவம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
இந்த குற்றச்சாட்டை இலங்கை அரசு மறுத்து வந்தது. ஆனால் மே 2-ந்தேதியும், 18-ந்தேதியும் 170 சம்ப வங்களில் போர் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதாக அமெரிக்க பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் உலக நாடுகளும், ஐ.நா.சபையின் மனித உரிமை அமைப்பும் குற்றம் சுமத்தி உள்ளன.
 
தற்போது அமெரிக்காவும் இக்குற்றச்சாட்டை வலியுறுத்துவது இலங்கைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ராணுவ அத்துமீறல் குறித்து விசாரிக்க குழு அமைக்க அதிபர் மகிந்த ராஜபக்சே முடிவு செய்துள்ளார்.

இந்த தகவலை இலங்கை மனித உரிமை துறை மந்திரியும், அதிபர் மகிந்த ராஜபக்சேவின் தம்பியுமான மகிந்த சமரசிங்கே தெரிவித்துள்ளார். விசாரணை குழுவின் அறிக்கையின் மீது அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.


source:maalaimalar 


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கம்ப்யூட்டரில் வேலையா கவனம் தேவை

 
 


இன்றைய அன்றாட வாழ்க்கையில் கம்ப்யூட்டர்கள் நம் பணியினைப் பங்கு கொண்டு, நம் நடவடிக்கைகளை எளிதாக்கி வருகின்றன. இதனால் அவற்றுடனே நம் முழுப்பொழுதும் செலவழிகிறது. அலுவலகம் ஒன்றின் சொகுசுப் பொருளாகக் கம்ப்யூட்டர் கருதப்பட்ட எண்ணம் மறைந்து, அடிப்படைச் சாதனமாக இது மாறிவிட்டது. எப்படி திருமணமான ஒருவர் தன் மனைவி அல்லது கணவனுடன் பல வழிகளில் அட்ஜஸ்ட் செய்து வாழப் பழகிக் கொள்கிறாரோ, அதே போல கம்ப்யூட்டர்கள், அவை அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலை ஆகியவற்றுடனும் நாம் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டியதிருக்கிறது. இல்லை என்றால் வாழ்க்கையில் பிரச்சினைகள் வருவது போல, நம் அன்றாட அலுவல் வாழ்க்கை மட்டுமின்றி, சொந்த நலனிலும் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி தவிர்க்கலாம் என்பது குறித்து இங்கு காணலாம்.ஒரு நாளில் பெரும்பாலான நேரம் கம்ப்யூட்டர் முன் அமர்ந்து பணியாற்றுகிறோம். பணி முடிந்து வீட்டுக்குத் திரும்புகையில், சற்று சோர்வுடனே இருக்கிறோம். "உங்களுக்கென்ன ஏ.சி. அறையில் தானே வேலை பார்க்கிறீர்கள்' என்று மற்றவர்கள் சொன்னாலும், நம் உடம்பில் ஏற்படும் சோர்வும் வலியும் அதனால் தான் என்று என்றாவது உணர்ந்திருக்கிறீர்களா! உங்கள் மணிக்கட்டு வலியும், கண்களில் எரிச்சலும், முதுகில் எங்கோ சிறிய வலியும், இடுப்பிற்குக் கீழாக, உட்காரும்போதும் எழும்போதும் ஏற்பட்டு மறையும் தீவிரமான வலியும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதால்தான் என்று உங்களுக்குத் தெரியுமா!
நாம் அமைத்துக் கொள்ளும் கம்ப்யூட்டர் அலுவலகச் சூழ்நிலைகளே இதற்குக் காரணங்கள். இவற்றைக் கொஞ்சம் இங்கு கவனிக்கலாம். முதலில் நாம் பார்க்க வேண்டியது, எப்போதும் நாம் உற்றுப் பார்த்துப் பணி புரியும் கம்ப்யூட்டர் மானிட்டர் தான். அது அமைக்கப்படும் விதம் தான். ஒரு மானிட்டர், அது சி.ஆர்.டியாக இருந்தாலும், எல்சிடி ஆக இருந்தாலும், உங்கள் முகத்திற்கு இணையாக அல்லது சற்றே தாழ்வாக இருக்க வேண்டும். மானிட்டரை பார்ப்பதற்காக உங்கள் தலையை சிறிது தூக்க வேண்டியதிருக்கையில் கழுத்தில் டென்ஷன் ஏற்படும்; உங்கள் முதுகுப் பகுதியின் மேல் புறத்தில் வலி உண்டாகும். இந்நிலை தொடரும் பட்சத்தில் நிச்சயமாய் இந்த வலிகள் நிலையாக இருக்கத் தொடங்கும். எனவே இதனை தவிர்ப்பதுடன் கீழ்க்காணும் நிலைகளையும் உருவாக்குங்கள். உங்கள் கண்களுக்கும் திரைக்கும் இடையேயான தூரம் 18 அங்குலமாக இருக்கட்டும். இது உங்கள் மானிட்டர் திரையின் அகலத்தைப் பொறுத்து சற்று ஏறத்தாழ இருக்கலாம்.ஸ்கிரீனை சற்று சாய்த்துவைப்பதாக இருந்தால் அது உங்கள் கண்களின் பார்வைக் கோட்டில் இருக்க வேண்டும். திரையின் ரெசல்யூசன் உங்கள் பார்வைக்கு உகந்ததாக இருக்க வேண்டும். எனவே அதனை அவ்வப்போது மாற்றி எது கண்களுக்கு உகந்தது என்று தீர்மானித்து அதனையே வைத்துக் கொள்ளவும். மேலும் மானிட்டர் திரையில் எதற்காக அத்தனை ஐகான்கள். சற்று குறைக்கலாமே. அவ்வப்போது தேவைப்படாததை, பயன்படுத்தாததை நீக்கலாம்; அல்லது ஒரு போல்டரில் போட்டு வைக்கலாம். ஸ்கிரீன் மீது வைத்துப் பயன்படுத்தப்படும் ஸ்கிரீன் பில்டர் உங்கள் கண்களில் எரிச்சல் உண்டாக்குவதைத் தடுக்கும். உங்கள் சிஸ்டத்தில் நீங்கள் பயன்படுத்தும் கலர் ஸ்கீம் மிக முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. பலவகையான வண்ணக் கலவைகளை அமைத்துப் பார்த்து எது உகந்ததாக உள்ளதோ அதனை அமைக்கவும். வண்ணம் மட்டுமின்றி எழுத்துவகையினையும் உறுத்தாதவகையில் அமைக்கவும். மானிட்டரைப் பார்த்துவிட்டோம். இனி உங்கள் கைகளுக்குள் கம்ப்யூட்டருக்கான மந்திரக் கோலாகத் தவழும் மவுஸைப் பார்க்கலாம். எளிதில் அதனை அடைந்து கைகளுக்கு வலி எடுக்காவண்ணம் பயன்படுத்தும் வகையில் இருக்க வேண்டும். உடம்பைச் சாய்க்காமல் அதனை சுழற்றிப் பயன்படுத்தும் வகையில் அருகே அதிக இடத்துடன் இருக்க வேண்டும். கீ போர்டு வைக்கப்பட்டிருக்கும் சிறிய இழுவை டிராவில் வைப்பதனை அறவே தவிர்க்கவும். 
மவுஸ் கையாளும் அதே அளவில், அல்லது அதற்கும் மேலாக நாம் கீ போர்டினைப் பயன்படுத்துகிறோம். உங்கள் கீ போர்டினைச் சரியாக அமைப்பது உங்கள் மணிக்கட்டு மற்றும் முழங்கை வலியை வரவிடாமல் தடுக்கும். கீ போர்டில் டைப் செய்கையில் உங்களுடைய மணிக்கட்டு நேராக இருக்க வேண்டும். முழங்கைகள் 90 டிகிரி கோணத்தில் வளைந்திருக்க வேண்டும். இது உங்கள் நாற்காலியின் நிலையைச் சார்ந்து அமைக்கப்பட வேண்டும்.இவை எல்லாம் கம்ப்யூட்டருடன் இணைந்தவை. இவற்றை நீங்கள் எங்கிருந்து இயக்குகிறீர்கள். நிச்சயமாய் உங்கள் நாற்காலிகள் தான். பல ஆயிரம் அல்லது லட்சம் செலவழித்து கம்ப்யூட்டர்களை வாங்கி, அவற்றை ஏசி அறையில் வைத்திடும் அலுவலகங்கள், அதனை இயக்குபவர்கள் பழைய வகை நாற்காலியிலேயே அமரட்டும் என விட்டுவிடுவார்கள். அங்குதான் பிரச்சினையே தொடங்குகிறது. நீங்கள் அமரும் நாற்காலி எப்படி இருக்க வேண்டும்? உங்களுடைய பாதம் தரையில் நன்கு பதிந்திருக்கும் வகையில் நாற்காலி அமைக்கப்பட வேண்டும். இதனால் உங்கள் தொடைகளின் பின்புறத்தில் வலி ஏற்படாமல் இருக்கும். நாற்காலியின் குஷன் மிருதுவாக மட்டுமின்றி உறுதியாகவும் இருக்க வேண்டும். அமரும் சீட் தரைக்கு இணையாக இருக்க வேண்டும். சரியாக அமருவதற்காக முன்பக்கம் அல்லது பின்பக்கம் சாயக்கூடாது. நாற்காலி நன்றாக தரையில் அமர்ந்திட நான்கு அல்லது ஐந்து கால்களில் இருக்க வேண்டும்.அடுத்ததாகச் சுற்றுப்புறச் சூழ்நிலை. ஒரேயடியாக வெளிச்சம் அல்லது குறைவான வெளிச்சம் என இருவகைகளில் ஒளியூட்டப்பட்ட கம்ப்யூட்டர் அறைகளே இப்போது உள்ளன. எங்கு பாய்ண்ட் இருக்கிறதோ அங்கு மின்விளக்குகளை அமைத்துவிடுகின்றனர். இது தவறு. இருக்கின்ற விளக்கு ஒளி போதும் என்ற எண்ணம் எப்போதும் ஏற்படக்கூடாது. முடிந்தால் குழல் விளக்கு ஒளி இருக்க வேண்டும். விளக்கொளி உங்கள் தோள் மற்றும் தலைக்கு மேலாக இருக்க வேண்டும்; ஆனால் சரியாக உங்கள் பின்னாலிருந்து ஒளி வரக்கூடாது. உங்கள் மானிட்டர் திரைக்குப் பின்னாலிருந்து ஒளி வரும் வகையில் அமைக்கக்கூடாது. பொதுவாக நிலையாக அமைக்கப்பட்டிருக்கும் விளக்குகளை மாற்றுவது கடினம். எனவே மானிட்டரின் நிலையை மாற்றலாம். மானிட்டரை சிறிது இறக்கி ஏற்றலாம். அல்லது விளக்கு ஒளியை வடி கட்டி கிடைக்குமாறு ஷேட்களை அமைக்கலாம். ஒளியைப் படிப்படியாகக் குறைக்கும் டிம்மர் ஸ்விட்ச் கொண்டு ஒளியைத் தேவைப்படும் அளவிற்குக் குறைத்து அமைக்கலாம். நேரடியாக ஒளி கிடைக்காமல் மறைமுகமாகக் கிடைப்பது இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக நம்மைப் பார்க்க வருபவர்கள் இல்லாமல், பக்கத்து சீட் நண்பர்களிடம் பேசாமல் பணியாற்ற கம்ப்யூட்டர் உதவுகிறது. இருப்பினும் பல கம்ப்யூட்டர் அறைகளில் தேவையற்ற சத்தம் இருந்து கொண்டே இருக்கிறது. கம்ப்யூட்டருடன், அதன் புரோகிராமுடன் நாம் ஒரு சவாலுடன்தான் பணியாற்று வோம். அந்நிலையில் கூடுதலாகச் சத்தம் இருந்தால் நம் பணி ஒழுங்கு முறை கெட்டுவிடும். சரியான ஒலி நமக்கு பணியில் உற்சாகத்தைக் கொடுக்கும். சிறிய அளவில், மனதிற்கு அமைதி அளிக்கும் இசையை, அறையில் கசிய விடலாம். அல்லது அவை எதுவும் இல்லாமல், அமைதியைப் பேணலாம். இது அங்கு பணியாற்றுபவர்களின் விருப்பத்தைப் பொருத்து அமைக்கப்பட வேண்டிய விஷயமாகும். 
செலவு மிச்சம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல அலுவலகங்களில் ஏர் கண்டிஷனிங் இல்லாமல் மின்விசிறி மட்டும் கொண்டு சில கம்ப்யூட்டர் அலுவலகங்கள் இயங்குகின்றன. இந்தியாவின் நம்பர் ஒன் என்று பெயரெடுத்த சாப்ட்வேர் நிறுவனத்தில், செலவைக் குறைப்பதற்காக இன்றும் இரவில் ஏர் கண்டிஷனர் இயங்குவதை நிறுத்திவிடுவதாக என் நண்பர் ஒருவர் கூறினார். இது மோசமான ஒரு நிலையை அங்கு பணியாற்றுபவர்களுக்கு மட்டுமின்றி, மேற் கொள்ளப்படும் வேலைக்கும், அங்கு பயன் படுத்தப்படும் கம்ப்யூட்டர்களுக்கும், அதில் கையாளப்படும் டேட்டாவிற்கும் உருவாக்கும். எனவே வெப்பம் மிகுதியான நம் ஊரில் கூடுமானவரை கம்ப்யூட்டர்கள் பயன்படும் இடத்தில் குறைந்த வெப்பம், அல்லது சற்று மிதமான குளிர் சீதோஷ்ண நிலை இருப்பது உகந்தது.அதே நேரத்தில், அறைக்குள் வெளியிடப்படும் குளிர் காற்று நேரடியாகக் கம்ப்யூட்டர்கள் மீதோ, அல்லது அவற்றை இயக்குபவர் மீதோ படுவதனையும் தவிர்க்க வேண்டும்.  இறுதியாகவும் மிகவும் முக்கியமானதாகவும் நாம் கவனிக்க வேண்டிய ஒரு விஷயம், நீங்கள்தான். நேராக நிமிர்ந்து உட்காருங்கள். முதுகை வளைத்து மானிட்டரை உற்று நோக்கி உட்காராதீர்கள். சரியாக அமர்வது பின் முதுகு வலியைத் தவிர்ப்பது மட்டுமின்றி உங்கள் மூளைக்கு ஆக்ஸிஜனைச் சீராக அனுப்பும். வசதியான ஆடைகளை அணியுங்கள். உடம்பைப் பிடிக்கும் ஆடைகள் உங்கள் வேலைப் பண்பினை மாற்றி தொய்வை ஏற்படுத்தும். அதே போல உங்கள் செருப்பு மற்றும் ஷூக்கள் கால்களைக் கடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். 
இறுதியாக நீங்கள் வேலை வேலை என்று அலைந்து கம்ப்யூட்டரே கதி என்று கிடப்பவரா? அப்படியானால் சற்று சோம்பேறியாக இருப்பதில் தவறில்லை. இடை இடையே நாற்காலியிலிருந்து எழுந்து வெளியே வந்து சற்று உடம்பை வளைத்து நிமிர்த்தி அதனை உற்சாகப்படுத்துங்கள். இதனால் உங்கள் மூளைச் சோர்வு நீங்கி உற்சாகம் ஏற்படும். உணர்ச்சிப் பாதிப்பு ஏற்படாது.மாறிவரும் வாழ்க்கைச் சூழ்நிலைகளில் சிலவற்றை நம்மால் மாற்ற முடியாது. மின்சார ட்ரெயினில் கூட்டத்தில் பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. சிறிது நேரமாவது பஸ் நிறுத்தத்தில் நிற்பதை மாற்ற முடியாது. பயணம் செய்கையில் அடுத்தவர் மூச்சு நம் தோள்களிலும் கழுத்திலும் படுவதை விரட்ட முடியாது. கண் தெரியாத பிச்சைக்காரர் டப்பா மைக் வைத்துக் கொண்டு கர்ண கடூரமாக பாடுவதைத் தடுக்க முடியாது. இரு சக்கர வாகனத்தில் செல்கையில் முன் செல்லும் வாகனப் புகையை சுவாசிப்பதைத் தடுக்க முடியாது. சுட்டெரிக்கும் வெயிலில் பச்சை விளக்குக்காய் சிக்னலில் காத்திருக்கும் சிக்கலை தவிர்த்திடவே முடியாது. ஆனால் கம்ப்யூட்டரில் பணியாற்றுகையில் மேலே சொன்ன அனைத்து வழிகளையும் கடைப் பிடித்து நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள முடியும். செய்வோமா!
source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP