”யோகா” பெயரில் செக்ஸ் வேதம்
>> Tuesday, September 27, 2011
"யோகா" பெயரில் ஆபாச கூத்தடித்த 6 வெளிநாட்டவர்கள் மாயம்!
சென்னை தேனாம்பேட்டை காவல் நிலயத்தில் 6 வெளிநாட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, குடியுரிமை அதிகாரிகளுக்கு அவர்களைப் பற்றிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன.
சில வெளிநாட்டவர்கள் தேனாம்பேட்டை பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, யோகா பயிற்சி நிலையம் என்ற பெயரில் ஆபாச செயல்களில் ஈடுபட்டு வருவதாக இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த வீட்டை சோதனையிட்டனர்.அபோது அங்கு ஆபாச புத்தகம் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த யோகா பயிற்சி நிலையத்திற்கு யார்யாரெல்லாம் வந்து சென்றார்கள் என்ற விபரத்தினையும் சேகரித்துள்ளனர்.அதில் சில நடிகைகளும் வந்து சென்றிருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
ஆறு வெளிநாட்டவர்களும் தலைமறைவாகிவிட்ட நிலையில் அந்த யோகா பயிற்சி நிலையம் மூடப்பட்டு காவல்துறையினரால் "சீல்" வைக்கப்பட்டுள்ளது. பயிற்சிக்கு வந்தவர்களையும் அவர்கள் ஆபாச செயல்களில் ஈடுபடுத்தியுள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இரு ரோமானியர்கள் உட்பட ஆறு வெளிநாட்டவர்களும் இந்தியாவை விட்டு வெளியேற முயன்றால் அவர்களை தடுத்து நிறுத்தும்படி குடியுரிமை அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீதுள்ள குற்றங்களுக்கு கண்ணால் கண்ட சாட்சியோ, பாதிக்கப்பட்டவர்களோ யாரும் இதுவரை புகார் அளிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
soruce:inneram
http://thamilislam.tk