சமீபத்திய பதிவுகள்

கொலைகளை உறுதிப்படுத்தும் பிரச்சாரங்களின் பின்னால் மறைக்கப்படும் மனிதப் பேரழிவை எவரும் கண்டுகொள்ளவில்லை

>> Tuesday, May 19, 2009

புலிகளின் தளபதிகளின் கொலைகளை உறுதிப்படுத்தும் பிரச்சாரங்களின் பின்னால் மறைக்கப்படும் மனிதப் பேரழிவை எவரும் கண்டுகொள்ளவில்லை – அவலக்குரலொன்று:ஆங்கில மொழியாக்கம் இணைப்பு:

இந்த நிலையைச் சாதகமாகப் பயன்படுத்த தீர்மானித்துள்ள இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலமையிலான அணியினர் அதன் பின்னால் நடைபெற்ற நடை பெற்றுக் கொண்டிருக்கிற பாரிய மனிதப் படு கொலையை இனப் படுகொலையை மூடி மறைக்க  முற்படுவதாக  கரைமுள்ளி வாய்க்கால் பகுதியில் இருந்து வெளியேறிய ஒருவர் அவலக் குரல் எழுப்பியுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் தெரிவிக்கிறார்.
விடுதலைப் புலிகளின் தலைவர் உள்ளிட்ட மூத்த தளபதிகளின் கொலைபற்றிய தகவல்களுக்குள் சர்வதேசம் முடங்கிக் கிடப்பதாகவும் இந்த மக்களின் அவலங்களில் இருந்து அவர்களை மீட்பதற்கு அனைத்து தரப்பினரும் முயல வேண்டும் என்ற கோரிக்கையை ஊடகங்களுக்கு தெரியப்படுத்துமாறும் அவர் குளோபல் தமிழ்ச் செய்தியாளரிடம்  தளதளத்த குரலில் வேண்டியுள்ளார்.
சற்று முன்னர் எமக்கு கிடைத்த இந்த தகவலில் பிரபாகரனின் சடலத்தை அடையாளம் காணச் சென்ற கருணா என்ற அமைச்சர் முரளீதரன் அல்லது அவருடன் கூடச் சென்றவர்கள், மற்றும் கொழும்பில் நிலை கொண்டுள்ள ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலமைகள் கடந்த 72 மணி நேரத்துள் மிகப்பெரிய அவலத்தைச் சந்தித்துள்ள தற்போதும் அவலத்தில் சிக்கியுள்ள இந்த மக்கள் குறித்து இதுவரை அரசாங்கத்திற்கான அழுத்தங்களை கொடுக்காமை வருந்தத்தக்கது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

StumbleUpon.com Read more...

பிரபாகரன் கொல்லப்பட்டாரா? கேள்விகளால் ஒரு வேள்வி இறுதிப்பாகம்:காட்டி கொடுத்ததாக கருணா தகவல்

பிரபாகரன் கொல்லப்பட்டாரா? கேள்விகளால் ஒரு வேள்வி இறுதிப்பாகம்: சடலத்தை அடையாளம் காட்டியதாக BBC யிடம் கூறுகிறார் கருணா: இது பிரபாகரன் அல்ல ‐ லெப்டினன்ட் ஜெனரல் ஹர்கிரத் சிங் ‐ எவ்வாறு இறந்தார் என்பதை விபரிக்கப் போவதில்லை பாதுகாப்பு இணையத்தளம் ‐ புலிகளின் பதில் என்ன?

 
 
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதான தகவல் வெளிவந்த நாள் முதல் அவர் கொல்லப்பட்டு விட்டார் என்றும் இல்லை அவர் உயிருடன் பாதுகாப்பாக இருக்கிறார் என்றும் மாறி மாறி தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஒரு வகையில் இது ஒரு ஊடகப் போராகக் கூட மாறியிருந்தது.  பிரபாகரன் பொட்டம்மான் சூசை ஆகியோர் அம்புலன்ஸ் ஒன்றில் தப்பிச் செல்ல முயற்சிக்கும் போது படையினர் அந்த வானை நோக்கி நடாத்திய தாக்குதலில் அவர்கள் மூவரும் கொல்லப்பட்டதாக முதலில் ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
 
இன்னொரு புறத்தில் பிரபாகரனும் அவரது மெய்ப்பாதுகாவலர்கள் உட்பட 300க்கு மேற்பட்ட போராளிகள் சூழ இருந்ததாகவும், படையினர் அவர்களைச் சுற்றி வளைத்ததால் அங்கிருந்த அவ்வளவு பேரும் வெடிபொருட்களை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் இன்னொரு தகவல் வெளியாகியிருந்தது.
 
இப்போது இறுதியாக இன்று பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் அவரும் அவருடைய சில மெய்ப்பாதகாவலர்களும் தப்பிச் செல்ல முற்பட்ட வேளையில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கெனவே பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று அரசு அறிவித்த பின்னர் புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் எஸ்.பத்மநாதன் அது பொய்யானது என்றும் தான் சில மணித்தியாலங்களுக்கு முன்னர் அவருடன் பேசியதாகவும் அவர் உயிருடன் இருப்பதாகவும் சனல் 4 தொலைக்காட்சிக்குத் தெரிவித்திருந்தார். 
தொடர்ச்சியாக அரச தரப்பு பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக தெரிவித்து வந்ததைத் தொடர்ந்து மீளவும் அவர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் பாதுகாப்பான இடமொன்றில் பிரபாகரன் உயிருடன் நலமாக இருப்பதாகக் கருத்துத் தெரிவித்திருந்தார்.
 
இன்று பாதகாப்பு அமைச்சின் இணையத்தளம் கொல்லப்பட்ட பிரபாகரனுடையது என்று சொல்லப்படும் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.    
 
பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்ட இந்தப் படங்களைப் பார்த்ததும் இது பிரபாகரன் அல்ல. பிரபாகரனை எனக்கு நன்றாகத் தெரியும் என 1987இல் இந்திய அமைதிப்படையின் முதலாவது தளபதியாப் பணியாற்றிய லெப்டினன்ட் ஜெனரல் ஹர்கிரத் சிங் தெரிவித்துள்ளதாக சி.என்.என்.ஐபி.என். இணையத்தளத்தின் செய்தியாளர் திவ்யா ஐயர் தெரிவித்துள்ளார். 
 
லெப்டினன்ட் ஜெனரல் ஹர்கிரத் சிங் அக்காலப்பகுதியில் தனது எதிரியை மிக நெருக்கமாகவே இருந்து அவதானித்தவர் என்று குறிப்பிட்டுள்ள திவ்யா ஐயர் பிரபாகரன் சயனைட் விழுங்காததை நம்பக் கடினமாகவே இருக்கிறது என்றும், விடுதலைப் புலி உறுப்பினர் எவரையாவது நாம் கைது செய்யும் போது அவர் உடனடியாகவே சயனைட் விழுங்கி விடுவார் என்றும், அவர்களைக் கைது செய்யும் போது எங்களுடைய முதல் வேலை அவர்கள் சயனைட் விழுங்காதவாறு அவர்களுடைய கைகளைப் பிடித்துக் கொள்வது தான் என்றும்  ஹர்கிரத் சிங் தெரிவித்ததாக திவ்யா ஐயர் குறிப்பிட்டுள்ளார்.
 
இதேவேளை  பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இன்று படங்களையும் செய்தியையும்  வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் அவர் எவ்வாறு இறந்தார் என்பதை விபரிக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது. 
 
உண்மையில் பிரபாகரன் கொல்லப்பட்டாரா அல்லது இன்னமும் உயிருடன் இருக்கிறாரா என்கிற உண்மை அரசிற்கும் விடுதலைப் பலிகளுக்கும் மட்டும் தான் தெரியும்.
 
அவர் கொல்லப்பட்டு விட்டார் என்கிற செய்திகளை அவை எவ்வளவு முரண்பாடானவை என்ற போதும் படங்களுடன் ‐ அவை குறித்தும் புகைப்பட மற்றும் வடிவமைப்பாளர்கள் சந்தேகங்களை எழுப்பும் போதும் ‐ அரசு வெளியிட்டுள்ளது.
 
பிரபாகரன் கொல்லப்படவில்லை ஆயின் அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார் என்பதை உறுதிப்படுத்த வேண்டியது இப்போது புலிகளின் பொறுப்பாகிறது.
 
 
 
 
 

 
 
 
updated - 2009-05-19
மூலம் - GTN

StumbleUpon.com Read more...

தேசிய தலைவர் கொல்லப்பட்டதான செய்தி ஆதாரம் அற்றது - நோர்வே

     

altநோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்கைம் தனக்கு தெரிந்த பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டு விட்டார்கள் என நோர்வே ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு தயாராக இருந்த போதும், அவர்கள் மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில்....

 

"இது மிகவும் கோரமானது" என எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்.வீரச்சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள, விடுதலைப் புலிகளின் சமாதானச் செயலகத்தைச் சேர்ந்த சீவரத்தினம் புலித்தேவன் நோர்வேக்கு பல தடவைகள் வருகை தந்ததாகவும், தனது வீட்டிற்கும் அவர் வருகை தந்தவர் எனவும் எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்.

 

புலித்தேவனுடன் தான் கடந்த ஞாயிற்ற்க் கிழமை தொலைபேசியில் உரையாடியதாகவும் அப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மூன்றாம் தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கு தயாராக உள்ளர்கள் என தெரிவித்தார்.

 

அவருடன் நடு இரவில் உரையாடியதாகவும், உரையாடும் போது வெடிச் சத்தங்கள் கேட்டதாகவும் தெரிவித்தார்.அதன் பின்னர் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினருக்கு விடுதலைப் புலிகள் தெரிவித்ததை அறிவித்ததாகவும்,இன்று காலையில் அவர்கள் கொல்லப்பட்டு விட்டார்கள் என அறிந்ததாகவும் எரிக் சொல்கைம் தெரிவித்தார்.

 

புலித்தேவன் மற்றும் பா.நடேசன் வீரச்சாவடைந்துள்ளார்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்தாலும்,அந்தச் செய்தி ஆதாரம் அற்றது என எரிக் சொல்கைம் தெரிவித்துள்ளார்.

 

சொல்கைம் மேலும் தெரிவிக்கையில் இலங்கை அரசு, தமிழ் மக்கள் தங்களை ஆளும் வகையிலான தீர்வினை முன்வைக்க வேண்டும்.

 

அனைத்து தமிழ் மக்களும் ஒற்றுமையாக இருக்கக் கூடிய தீர்வு வேண்டும். தமிழ் மக்கள் ஆளும் வகையிலான என்று நான் தெரிவிப்பது பலவறைக் குறிக்கும்.

 

போர்ப் பகுதிக்கு சர்வதேச தொண்டர் அமைப்புக்களையும், ஐ.நா அமைப்புக்களையும் இலங்கை அரசு உடனே அனுமதிக்க வேண்டும் என எரிக் சொல்கைம் தெரிவித்தார்.

 

இலங்கை  தொடர்பாக நோர்வே ஐரோப்பிய ஒன்றியம்,ஜப்பான்,அமெரிக்கா போன்ற நாடுகளுடன் சேர்ந்து உதவிகளை செய்யும் என எரிக் சொல்கைம் மேலும் தெரிவித்தார்

StumbleUpon.com Read more...

மக்கள் தொலைக்காட்சியில் முன்வைக்கப்பட்ட தலைவர் பிரபாகரன் குறித்த ஆய்வு

StumbleUpon.com Read more...

தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார்-Photo

1988/89 இல் இறந்த தலைவர் 90 இறுதி வரை இறந்தவராக இருந்தபடியால் தான் எம்மால் அவரை பின்னர் காண முடிந்தது. அதேபோல்.. இப்போது இறந்ததாகச் சொல்லப்படும் தலைவர் இறந்ததாகவே இருக்கட்டும்.


ஆனால் எமது போராட்டத்தை ஓய்வின்றி எல்லா வகையிலும் நாம் முன்னெடுத்துச் செல்லவும்.. சிறிலங்கா அரசின், சர்வதேச அரசுகளின் மனித உரிமை மீறல்களை, அப்பாவி மக்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்ததை.. மக்களை வதை முகாம்களில் அடைத்து வைத்துள்ளதை.. வெளிக்கொணர்ந்து எமது விடுதலைக் கோரிக்கையின் நியாயத்தை உலகம் ஏற்கச் செய்யவும் வேண்டும். அதுவே எமது இன்றைய தலையாய கடமை. அதன் மூலமே எமது தேசத்தின் விடுதலையை... எமக்கான அரசியல் உரிமையை நாம் எமது சொந்த பூமியில் நிலை நிறுத்த முடியும்.

தலைவர் பற்றிய காணொளிகள்.. சில எதிரிகளால் திட்டமிட்டு மக்களைக் குழப்ப வெளியிடப்படுகின்றன. அவருடைய முகம் போன்ற ஒன்றை போலியாக பிளாஸ்ரி சேர்ஜரிக் முறையில் செய்து ஒட்டிவிட்டுக் காண்பிக்கிறார்கள். பிளாஸ்ரிக் சேர்ஜரியை மறைக்க.. யூனிபோமும்.. தலையில் துணியும்.. பாதி உடலும் என்று காணொளிக் காட்சிகள் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. தலைவரின் இருப்பிடம் தெரியாமல் தவிக்கும் தமிழ் மக்களின் உலக எதிரிகள் அதைக் கண்டறிய பல மாயாஜாலங்களைப் புரிகின்றனர். இன்னும் புரிவர்.

அதுமட்டுமன்றி நேற்று நேற்று முன் தினம் எல்லாம் இறந்ததாகச் சொல்லப்பட்ட தலைவர்.. டி என் ஏ பரிசோதனைக்கு உட்படுத்திய தலைவரின் உடலம்.. இன்றுதான் மீட்கப்பட்டதாம் என்பதும்.. நாணயக்கார நேற்று நாம் அப்படி ஒரு அறிக்கை விடவில்லை என்றதும்.. கவனத்தில் கொள்ளத்தக்கது. எதிரிகள் திட்டமிட்டு இதை செய்கின்றனர் என்பதற்கு இது நல்ல சான்று.

தலைவரின் உடல் என்று ஒரு பிளாஸ்ரிக் சேர்ஜரி செய்த உடலை சிங்கள மக்களுக்கு நேரடியாகக் காட்சிப்படுத்தினாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை.

எமக்கு இன்றைய தேவை போராளிகளினதும் மக்களினதும் இலட்சியத்தை சுமந்து கொண்டு எமது இனத்தின் தேச விடுதலையை பெறுவதற்கான சாத்தியமான வழிமுறைகளில் எல்லாம் உலகெங்கும் ஓய்வின்றி போராடிக் கொண்டிருப்பது மட்டுமே...! நிச்சயம் தேவையான நேரத்தில் தலைவர் பிரபாகரன் மக்கள் முன் வருவார். ஆனால் அதற்கான பொழுதை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனிடமும் இருக்கிறது.

1. தலையில சுட்டதெண்டுகினம் தலையின்ர மேல் பகுதிய காணேல..... அத மறைச்சு வைச்சிருக்கினம்.........

2. தலைவரின்ர நாடியின்ர நடுவில ஒரு வெட்டு இருக்கும்.... ஆனா இவை காட்டுற வீடியோல அப்பிடி இல்ல......

3. இவர்கள்சுடுறதுக்கு முதல் தலைவர் "பொறுங்க சவரம் செய்தா பிறகு சுடுங்கோ" எண்டு சொல்லி சவரம் செய்திட்டு

தான் செத்தவரோ?

4. இவர்கள் காட்டுற படத்தில மூக்கு கூர்மையா இருக்கு.... தலைவரின்ர அப்பிடியில்ல......

5. இவர்கள் காட்டும் உருவத்தில ஒரு இடத்தில காதையே காணேல..... முதல்ல காட்டின காதும் தலைவரின்ர காதும் ஒண்டில்ல............

6. தலைவரின்ர கை கொஞ்சம் மொத்தம் கூட.... உவைன்ர உருவத்தில அப்பிடியில்ல.....

7. சிறிலங்கால காட்டுற வீடியோக்களில அது மாஸ்க் எண்டு அப்பிடியே தெரியுதெண்டு சிங்கள ஊடகவியலாளர்கள் சிலபேர் சொன்னவை....

9. உதுகள விட தலைவருக்கெண்டு சில அடையாளங்கள், புலியளுக்கெண்டு சில அடையாளங்கள் இருக்கு.... அவையொண்டும் உந்த உருவத்தில இல்ல.... அது என்னெண்டும் வெளில சொல்லேலாது..... பிறகு உவங்கள் அடுத்தமுறை ஏமாத்தேக்க.... எல்லாத்தையும் சரியா செய்துபோடுவாங்கள்...........

10.தப்பிச்செல்லும்போதும் கூடவா அடையாள அட்டையை எடுத்து செல்வார் ????

http://www.tamilwin.com/view.php?2aSWnBe0dZj0A0ecGG7N3b4j9E84d3g2h3cc2DpY2d436QV3b02ZLu2e

StumbleUpon.com Read more...

பிரபா இது உண்மையாக இருக்கக் கூடாதா?

இது உண்மையாக இருக்கக் கூடாதா என்பதே என்னுடைய ஆசை.
 
 
 
பிரபாவின் இறந்த உடல்: பல சந்தேகங்கள்
 
பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அவரைப்போன்று ஒரு உருவ அமைப்புடைய இறந்த உடலை இலங்கை தொலைகாட்சிகளில் ஒளிபரப்பிக் கொண்டிருக்கின்றது.
இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அதற்கு மேல் முதலாவதாக உள்ள படம் 2004 கார்த்திகை 26 எடுக்கப் பட்டது.
4 வருடங்களுக்கு மேலாகிய பின்பு அவர் 2009 இளமையாகத் தோற்றம் அளிப்பது எப்படி? அந்த படத்தில் 35 தொடக்கம் 40 வயதான தோற்றத்தையே அளிக்கிறது.

முகத்தில் இருந்த சுருக்கங்கள் தற்போது காணப்படவில்லை. 2004ம் ஆண்டு புகைப்படத்தில் அவருக்கு முகத்தில் சுருக்கங்கள் இருந்திருக்கின்றன.

கண்களில் வித்தியாசங்கள் தென்படுகின்றன. மற்றும் அந்த சூழநிலையில் இருந்து கனகச்சிதமாக முகச்சவரம் செய்தி இருப்பாரா என்று பல சந்தேகங்கள் எழுந்துள்ளன.
அம்புலன்ஸ் வண்டியில் தப்பி செல்லும் போது சூட்டுக்கு பலியாகியாத அறிவித்த இராணுவம் இன்று மதியம் 12 மணியளவில் முல்லைத்தீவு நந்திக்கடலுக்குள் இருந்து உடலை கண்டு பிடித்துள்ளதாக அறிவித்துள்ளது.


2004-கார்த்திகை 26 எடுக்கப்பட்டது



 

 
இலங்கைத் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட படம்

StumbleUpon.com Read more...

எம் வீரத்தமிழனுக்கு வீரவணக்கங்கள்:கனத்த இதயத்துடன் விடைபெறுகிறேன்

இதுவரை தமிழீழக்கணவுடன் வாழ்ந்த எம் மக்களின் கனவை சிதறடிக்கப்பட்ட காட்சிகள் இன்றைய பத்திரிக்கைகளும்,தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறது.
 
இதை நம்ப ஒரு இதயமும்,நம்பாமல் இருக்க இன்னொரு இதயமும் இறைவன் எனக்கு தரவில்லை.
 
கணத்த இதயமுடன் அந்த மாவீரனை வழியனுப்புகிறேன்
 


Linked to thamilislam.blogspot.comLinked to thamilislam.blogspot.com

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP