|
சமீபத்திய பதிவுகள்
அவசர அழைப்பு:ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் உண்ணாநிலை போராட்டம்
உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்துவதற்கு தயாராகுமாறு தமிழகம் சென்னையில் இருந்து தமிழக மாணவர் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த இரண்டு மாத காலமாக 2400 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் இனவாத சிங்கள இராணுவத்தால் கொல்லப்பட்டுவிட்டார்கள். தினமும் 100க்கு மேற்பட்ட பிஞ்சு குழந்தைகள், கர்ப்பிணி தாய்மார்கள், முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்படுவதை தட்டிக் கேட்க வேண்டிய இந்திய அரசும், சர்வதேசமும் கண் இருந்தும் குருடர்கள் போலவும் வாய் இருந்தும் ஊமைகளாக இருக்கின்றனர்.
பச்சிளம்குழந்தைகள் கொடூரமாக கொல்லப்பட்டு ரத்த குவியலாகி கிடக்கிறார்கள். இளம் சிறுமிகள் கூட கற்பழித்து கொல்லப்படுகிறார்கள். அடுத்து வரும் 72 மணித்தியாலங்கள் நான்காம் ஈழப் போரில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. ஆகவேதான், இந்த அவசர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசை கண்டித்தும் சர்வதேச சமுதாயத்தின் கண்களைத் திறப்பதற்கும் தமிழக மாணவர் கூட்டமைப்பின் சார்பில் வரும் 13.03.09 (வெள்ளிக்கிழமை) அன்று உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் அனைவரும் பங்குகொள்ளும் மாபெரும் உண்ணாநிலைப் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி 13.03.09 (வெள்ளிக்கிழமை) அன்று இந்தியா, இலங்கையில் உள்ள தாயகத் தமிழர்களும், 130 நாடுகளில் வாழும் புலம் பெயர் தமிழர்களும் 12 மணி நேர உண்ணாநிலையை (இரு வேளைகள்) கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
உலகின் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும், யார் கவனித்தாலும், கவனிக்காவிட்டாலும் வீடுகளில் இருப்போரும், பணியிடங்களில் இருப்போரும் தத்தமது இடங்களில் உண்ணா நிலையை தவறாது கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இந்த போராட்டத்தினால் பலன் இருக்காது என்று எண்ணாமல் முழு நம்பிக்கையுடன் அனைவரும் இந்த மாபெரும் போராட்டதிற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.பணியிடங்களிலோ, மற்ற இடங்களில் இருந்து கொண்டோ நீங்கள் நடத்தும் இந்த உண்ணாநிலைப் போராட்டம் மற்றவர்களிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர்கள், வணிகர் சங்கங்கள், தொழிலாளர் நலச் சங்கங்கள், கட்டுமான தொழிலாளர்கள், சிறைகளில் இருக்கும் கைதிகள் மற்றும் திரளானோர் கலந்து கொள்ள இசைந்துள்ளார்கள்.
ஆகவே, புலம் பெயர் நாடுகளில் வாழும் தமிழ் அமைப்பினர் இந்த உண்ணாநிலைப் போரட்டத்தை தத்தமது நாடுகளில் உத்வேகத்துடன் முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பார்வையற்றோர் 6 பேர் இலங்கைத் தமிழர்களுக்காக சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். அவர்களால் முடியும் போது நாம் ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பது பெரிய காரியமில்லை.
கொத்துக் கொத்தாக மடியும் உறவுகளைக் காக்க
அனைவரும் ஒன்றுபடுவோம்! போராடுவோம்!
இவண்
தமிழக மாணவர் கூட்டமைப்பு
சென்னை.
Read more...
புலிகளின் குரல் இணையதளத்தில் எந்த பிரச்சனையும் இல்லை
தமிழீழ மக்களுக்கு மட்டும் என்று இல்லாமல் உலகத் தமிழர்களின் இதயக்குரலாம் புலிகளின் குரன் இணையதளம் நேற்று இரவு வேளையில் திடிரென்று உள்நுழைய முடியாதவாறு தடை காணப்பட்டத்தை உங்கள் அனைவரின் பார்வைக்கும் நாம் வைத்தோம்.இன்று காலை முதல் "புலிகளின் குரல்" வளமைபோல் செயல் படுகிறது என்பதை மட்டற்ற மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்ளுகிறோம்
Read more...புலிகளின் குரல் இணைய தளம் முடக்கப்பட்டுள்ளது
தமிழீழ மக்களின் உயிர் மூச்சாக விளங்கிய புலிகளின் குரல் இணையதளம் இன்று இரவு முதல் உள்ளே நுழைய முடியவில்லை.தடை செய்யப்பட்டுள்ளதாக செய்தி வருகிறது.கீழே உள்ள படத்தை பார்ப்பவர்களுக்கு புரியும்.வேறு விவரங்கள் இருந்தால் உடனடியாக தெரிவியுங்கள்.
பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்
லேபிள்கள்:
அரசியல்,
புலிகளின் குரல்,
விடுதலை புலிகள்
பீகார் சர்ச்சில் குண்டுவீச்சு - பாதிரியார் உட்பட 5 பேர் படுகாயம்
ரோதாஸ், மார்ச் 9- பீகார் மாநிலத்தில் தேவாலயம் மீது குண்டுவீசப்பட்டது. தப்பியோட முயன்ற பாதிரியார் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் பாதிரியார் உள்பட 5 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பீகார் மாநிலம் ரோதாஸ் மாவட்டம் நசாரிகன்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படாதியா கிராமத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. இது 1990ம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு நேற்று மாலை வினோத்குமார் ஜேம்ஸ் என்ற பாதிரியார் 70க்கும் மேற்பட்ட கிராமமக்களுடன் ஜெபம் செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு இளைஞர் ஜன்னல் வழியாக நாட்டு வெடிகுண்டு ஒன்றை வீசினார். அது பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. குண்டுவெடிப்பில் தப்பிய பாதிரியாரும் மற்றவர்களும் வாசல் வழியே தப்ப முயன்றனர். அப்போது வாயிலில் கையில் துப்பாக்கியுடன் தயாராக இருந்த வாலிபர் சரமாரியாக அவர்களை நோக்கி சுட்டார். இதில் பாதிரியாரின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. அவர் ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். துப்பாக்கியில் குண்டு தீர்ந்தவுடன் அந்த இடத்திலிருந்து வாலிபர் தப்ப முயன்றார். அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். காயமடைந்த பாதிரியார் மற்றும் 4 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். பாதிரியாரின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. இதற்கிடையில் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாலிபர் பட்டதாரி என்பதும், லேசாக மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. கட்டாய மதமாற்றத்துக்கு எதிராக இந்த நடவடிக்கையில் இறங்கியதாகவும், துப்பாக்கியில் குண்டு தீர்ந்திருக்காவிட்டால் தற்கொலை செய்து கொண்டிருப்பேன் என போலீசாரிடம் வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த சம்பவத்துக்கு அரசியல் பின்னணி எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர். |
Subscribe to:
Posts (Atom)