சமீபத்திய பதிவுகள்

அதிபுத்திசாலி `எலி'

>> Saturday, November 21, 2009

 

மருத்துவ விஞ்ஞானத்தில் தற்போது இரு துறைகள் முன்னிலை வகிக்கின்றன. அவற்றில் ஒன்று, எல்லாவித வியாதிகளுக்கும் தீர்வு காணும் திறன் கொண்ட ஸ்டெம் செல் சிகிச்சை முறை. மற்றொன்று வியாதியின் அடிப்படையை கண்டுபிடித்து அந்த நோய் மனித பரம்பரையிலேயே இல்லாமல் செய்யும் ஜெனிடிக் முறை.

மரபணு மாற்று முறையில் ஜீன்களில் செயற்கை தன்மையை புகுத்தி பல வியாதிகளுக்கு தீர்வுகாணும் முயற்சிகள் நடந்து வருகின்றன. தற்போது சீன விஞ்ஞானிகள் எலிக்கு ஜீன் மாற்றம் செய்து சில சிறப்பு பண்புகளை உருவாக்கி உள்ளனர்.

என்.ஆர்.2பி. எனப்படும் ஒரு வகை ஜீன்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இந்த எலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் மூளை செல்களான நிïரான்களுக்கு இடையேயான தொடர்பு அதிவேகமாக உயர்ந்துள்ளது.

இந்த ஜீன்களின் வேகத்தை அல்ஜீமர் வியாதி பாதிப்பது தெரியவந்தது. அதற்கான மருந்தை செலுத்துவதன் மூலம் இந்த ஜீன்களின் வேகத்தை அதிகப்படுத்த முடியும். இதனால் அதன் நினைவுத்திறன் மற்றும் செயல்படும் வேகம் அதிகரிக்கிறது. மருந்தின் அளவு அதிகப்படுவதற்கு ஏற்ப எலியின் செயல்படு வேகமும் பிரமிப்பைத் தருகிறது. விஷயங்களை புரிந்து கொள்ளும் திறனும் அதிகரிக்கிறது. மற்ற பெண் எலிகளுடன் ஒப்பிடும்போது இதன் செயல்வேகம் 3 மடங்கு அதிகமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த அபூர்வ திறனுடைய எலி உருவாக்கத்தில் ஜார்ஜியா மருத்துவக்கல்லூரியும் பங்கு கொண்டுள்ளது. ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே ஜீன்களைக் கொண்டு அறிவுத்திறனை அதிகரிக்கும் சோதனை இதேகுழுவால் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

source:dailythathi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

`பேச்சு' மூச்சை விடுகிறது

அமெரிக்காவின் ஏ.பி.சி. தொலைக்காட்சி நிலையங்கள் மூலம் ஒளிபரப்பாகும் மிகப் பிரபல டி.வி. தொடர் ஓப்ரா வின்ஸ்பிரேயின் `டாக் ஷோ'. இன்று நமது சேனல்கள் பலவற்றில் வாரா வாரம் ஒளிபரப்பாகும் `பேச்சு மன்றங்கள்', டாக்ஷோவுக்கு கிடைத்த உலகளாவிய வரவேற்பால் உருவானவைதான். 140 நாடுகளில் ஒளிபரப்பாகும் டாக்ஷோவை அமெரிக்காவில் மட்டும் சராசரியாக 71 லட்சம் பேர் பார்க்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 25 ஆண்டுகளாக இந்த டாக்ஷோவை நடத்தி வரும் வின்ஸ்பிரே(55) பொழுதுபோக்கு நிகழ்ச்சி மூலம் உலகில் அதிக பணம் சம்பாதிக்கும் பெண்மணிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். அது மட்டுமின்றி உலக பணக்காரர்கள் வரிசையில் 45-வது இடத்தையும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தற்போது இந்த நிகழ்ச்சியின் மூச்சை நிறுத்துவதற்கு அவர் முடிவு செய்திருக்கிறார். ஆம், 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டாக்ஷோவை அவர் முடித்துக் கொள்ளப் போவதாக அறிவித்து இருக்கிறார். இதற்கு முக்கிய காரணம், அவரே சொந்தமாக ஒரு டெலிவிஷன் சேனல் தொடங்க இருப்பதுதான். அதற்கு ஓன்(சொந்தம்) என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதில் அவரது டாக்ஷோவை வேறு பெயரில் காணலாம்.


source:dailythanthi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உறவுகளே! கேளுங்கள் எமது குரலை


StumbleUpon.com Read more...

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது!

காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது! - வைகோ கண்டனம்!
 
தமிழர்களின் வரலாற்றில், நாம் வாழும் காலத்தில் ஏற்பட்டதைப் போன்ற அழிவும், இழிவும் எந்தக் காலத்திலும் ஏற்பட்டது இல்லை. இயற்கைச் சீற்றத்தால், கடல் பொங்கி அழித்தது, ஆனால், இன்னொரு நாட்டுக்காரன் அல்லது இன்னொரு இனத்துக்காரன் தமிழர்கள்மீது படையெடுத்து வென்றதாகவோ, அழித்ததாகவோ நேற்று வரையிலும் வரலாறு இல்லை. இமயம் வரை சென்றான் சோழ மன்னன். அங்கே புலிக்கொடியை உயர்த்தினான். கரிகாலன் சிங்களவர்களைக் கைது செய்து கொண்டு வந்து, கல்லணையைக் கட்டினான்.

அந்த சிங்களவன் படைபலத்தைப் பெருக்க, ஆயுதங்கள், ரேடார்களைக் கொடுத்து, விமானங்களில் இருந்து குண்டுகளை வீசுவதற்காக பலாலி விமானதளத்தைப் புதுப்பித்துக் கொடுத்தது இந்திய அரசு. இராணுவத் திட்டங்களை வகுப்பதற்கு இந்தியத் தளபதிகளை அனுப்பி உதவியது இந்திய அரசு. இந்திய இலங்கைக் கடற்படைத்தகவல் பரிமாற்ற ஒப்பந்தங்களைச் செய்து, துப்புக் கொடுத்து, விடுதலைப்புலிகளுக்காக வந்த 14 கப்பல்களைக் கடலில் மூழ்கடித்தது இந்தியா. உலகம் தடை செய்த ஆயுதங்களை சிங்களவனுக்கு வழங்கியதும் இந்திய அரசு. சீனா, பாகிஇதான், இஇரேல்,ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகளிடம் சிங்களவன் ஆயுதங்களை வாங்குதவற்கு, ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடன் உதவி அளித்தனர். இவ்வளவும், 2004 ஆம் ஆண்டுக்குப் பின்னர், கடந்த ஐந்து ஆண்டுகளாகவே நடைபெற்று வந்தது. இத்தனை உதவிகளோடும், ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்தான் ராஜபக்சே. இன்றைக்கு மூன்று இலட்சம் தமிழர்கள், முள்வேலி முகாம்களில் அடைபட்டதற்குக் காரணம் இந்திய அரசு.

ஐந்து ஆண்டுகளாக இந்த நடவடிக்கைகளுக்கெல்லாம் உடந்தையாக இருந்தவர் கலைஞர் கருணாநிதி. அவர், கோடானுகோடித் தமிழ் நெஞ்சங்கள் இதயத்தில் வைத்து வணங்குகின்ற, போற்றுகின்ற பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி, கொடும் பழி துலீற்றி, ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார். பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குத் துன்பம் நேர்ந்தது என்று எழுதுகிற கலைஞர் கருணாநிதிக்கு, மனச்சாட்சியே கிடையாது. இவருடைய அகராதியில், துரோகிக்குப் பெயர்தான் மாவீரன். இனம், இனத்தோடுதான் சேரும். ஆம்; துரோகம் செய்த மாத்தையாதான், இவருக்கு மாவீரனாகக் காட்சி அளிக்கிறார். 

பிரபாகரனைக் கொல்ல வேண்டும் என்று இந்தியாவின் உளவு நிறுவனம், ரா (சுஹறு) திட்டம் வகுத்துக் கொடுத்து, துரோகி கிருபனை, சிறையில் இருந்து நீதிமன்றத்துக்குப் போகின்ற வழியில் தப்பித்துச் செல்ல ஏற்பாடு செய்தது. அவன் தப்பித்தான் என்று ஒரு பொய்யான கதையை ஜோடித்துவிட்டு, பிரபாகரனைக் கொல்ல அனுப்பி வைத்தார்கள். இவர்கள் எப்படித் தப்பித்து வந்தார்கள் என்பதில் ஐயம் ஏற்பட்டதால், பொட்டு அம்மான் துருவித்துருவி விசாரித்ததால்தான், மாத்தையா, கிருபன் ஆகியோர் வகுத்த சதித்திட்டம் அம்பலமானது. 

ஒன்று, அதிரடிப்படையின் ஆயுதங்களோடு தாக்கிக் கொல்வது முதல் திட்டம். அல்லது, அவர் படுத்து உறங்குகின்ற அறையில் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வைத்து, ரிமோட் மூலம் இயக்கிக் கொல்வது இரண்டாவது திட்டம். அல்லது, அவருக்கு அருகில் இருந்து பேசும்போது, துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுவது என மூன்று வழிகளில் திட்டம் வகுத்து இருந்தார்கள். 

இதைக் கண்டுபிடித்த பொட்டு அம்மான் பிரபாகரனைப் பார்க்க ஓடினார். அப்போது அவர் அருகில் கிருபன் இருந்தான். அவனிடம் துப்பாக்கி இருந்தது. பாய்ந்து சென்ற பொட்டு அம்மான், கிருபனைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார். சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. புலிப்படையினர் நடத்திய விசாரணையின்போது, பிரபாகரனைக் கொலைசெய்ய சதித்திட்டம் வகுத்ததை மாத்தையா ஒப்புக்கொண்டார். மாத்தையா அளித்த ஒப்புதல் வாக்குமூலம், ஒளிப்படமாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 

எனவே, உலகின் எந்தப் புரட்சி இயக்கங்களிலும் துரோகத்துக்கு வழங்கப்படுகின்ற தண்டனைதான் மாத்தையாவுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மாவீரன் மாத்தையாவுக்கு மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கலைஞர் கருணாநிதி வருந்துகிறார். 

அது மட்டும் அல்ல, 'பிரபாகரன் படை அணிகளும், கருணாவின் படை அணிகளும் மோதின' என்று குறிப்பிட்டு உள்ளார். இதில் இருந்தே, துரோகி கருணாவை இவர் மனதுக்குள் எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டு விட்டது. மாத்தையா, கருணா போன்ற துரோகிகளுக்கெல்லாம் பாராட்டுப் பத்திரம் வாசித்து, 'பிரபாகரன் செய்த தவறுகளால்தான் தமிழர்களுக்குக் கேடு நேர்ந்தது' என்கிறார். 

இந்திய அரசு இத்தனைத் துரோகங்களைச் செய்ததே, எந்தவொரு கட்டத்திலாவது, இலங்கைக்கு ஆயுதம் கொடுக்காதீர்கள் என்று கலைஞர் கருணாநிதி ஒப்புக்கு ஒரு கடிதம் எழுதியது உண்டா? ரேடார் கொடுக்காதீர்கள் என்று கருணாநிதி எதிர்ப்பைப் பதிவு செய்ததாகக் காட்ட முடியுமா? அப்படிக் காட்டினால், நான் கருணாநிதியைக் குற்றம் சாட்டுவதை விட்டுவிடுகிறேன். 

தமிழர்கள் உள்ளத்தில் எழுந்து உள்ள உணர்வுகளை நீர்த்துப் போகச் செய்வதற்காக, இன்று இவர் இந்தக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். பிரச்சினையைத் திசைதிருப்புவதற்காக, திடீரென்று இலங்கை அகதிகள் மீது கரிசனம் காட்டுகிறார். பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை அனுப்புகிறார். தமிழ் மண்ணில் முத்துக்குமார் எழுப்பிய உணர்ச்சியை அழிக்க வேண்டும் என்பதுதான் இவரது நோக்கம். 16 பேர் தீக்குளித்தார்களே, அவர்களுக்காக ஒரு வரி இரங்கல் எழுதியது உண்டா? ஆனால், இன்றைக்கு ஒன்றரைப் பக்கத்துக்குக் குற்றச்சாட்டுகளை வாசிக்கிறார். கலைஞர் கருணாநிதியின் குடும்பத்தாரிடம்தான் தொலைக்காட்சிகள் இருக்கின்றன. செய்தித்தாள்கள் அவர் சொல்வதையெல்லாம் எட்டுக் காலம் போட வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், தான் நினைத்ததையெல்லாம் எழுதி அறிக்கைகளாக வெளியிட்டுக் கொண்டு இருக்கிறார். 

ரனில் விக்கிரமசிங்கேவுக்கு ஆதரவு கொடுக்காததால்தான், இந்த அழிவு நேர்ந்தது என்கிறார். ரனில் என்ன தமிழர்களுக்கு விடியல் ஏற்படுத்தப் பாடுபடுகிறவரா? ஜப்பானில் நடந்த பேச்சுவார்த்தைக்கு விடுதலைப் புலிகள் வரவில்லை; பேச்சுவார்த்தைக்கு வராமல் புலிகள் காலத்தை இழுத்தடித்தார்கள்; தாங்களாகவே விலகிக் கொண்டார்கள் என்று ரனில் சொன்னதை இவர் எழுதுகிறார். ரனில் விக்கிரமசிங்கேவினுடைய உள்நோக்கம் விடுதலைப் புலிகளை பலகீனப்படுத்துவது என்பதைத் தான் புரிந்து கொண்டதாக டோக்கியோ பேச்சுவார்த்தை குறித்து 2005 மாவீரர் நாள் உரையில் பிரபாகரன் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார். 

"எமது மக்கள் எதிர்கொண்ட அவலமான வாழ்க்கைப் பிரச்சனைகளையும் அவசர மனிதாபிமான பிரச்சனைகளையும்கூட, ரனிலின் ஆட்சிப் பீடத்தால் தீர்த்து வைக்கமுடியவில்லை. ரனிலின் அரசாங்கமானது பேச்சுகளை இழுத்தடித்து காலத்தைக் கடத்தியதோடு உலக வல்லரசு நாடுகளுடன் ரகசிய கூட்டு சேர்ந்து எமது விடுதலை இயக்கத்திடம் இருந்து ஆயுதங்களைக் களைந்துவிடும் சூழ்ச்சிகர சதிவலையை பின்னுவதில் முழுக்கவனத்தையும் செலுத்தியது. இந்த சதித்திட்டத்தின் முக்கிய ஏற்படாகவே 2003 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் டோக்கியோ மாநாடு அரங்கேற இருந்தது. இதனை அறிந்து கொண்ட நான் டோக்கியோ மாநாட்டை பகிஷ்கரித்தோம். பேச்சுகளில் இருந்தும் நாம் விலகிக் கொண்டோம்.' 

'தேர்தலில் ரனில் விக்கிரமசிங்கேவுக்கு, பிரபாகரன் ஆதரவு கொடுக்கவில்லை' அதனால்தான் இன்றைய அழிவும் ஏற்பட்டது என்கிறார் கருணாநிதி. கருணாவைத் துரோகியாக ஆக்கியதே, ரனில் விக்கிரமசிங்கேதான். அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்தான் எல்லாத் திரைமறைவு வேலைகளையும் செய்து, சகல பாதுகாப்பும் கொடுத்து, கருணாவைத் துரோகியாக ஆக்கினார். அப்போது, கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற தேர்தலில், இதோ பார், விடுதலைப் புலிகள் இயக்கத்தை நாங்கள் உடைத்துவிட்டோம்; கருணாவைப் பிரித்து விட்டோம்' என்று ரனில் விக்கிரமசிங்கே கட்சிக்காரர்கள் பிரசாரம் செய்தார்கள். பிரபாகரன் தேர்தலைப் பகிஷ்கரிக்கச் சொல்லவும் இல்லை; ஓட்டுப் போடுங்கள் என்று கூறவும் இல்லை. 

கருணாநிதி ராஜீவ் காந்தியைப் பற்றி நீட்டி முழக்கி இருக்கிறார். இந்திய இராணுவத் தளபதி ஹர்கிரத் சிங்கிடம், பிரபாகரன் உங்களைச் சந்திக்க வரும்போது சுட்டுப் பொசுக்கி விடுங்கள் என்று இந்தியத் துலீதர் தீட்சித் சொன்னபோது, இந்தத் துரோகத்தை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என்று மறுத்தபோது, இது என் உத்தரவு அல்ல; டெல்லியின் உத்தரவு என்று தீட்சித் சொன்னதாக ஹர்கிரத் சிங் தன் நுலீலில் எழுதி இருக்கிறாரே? டெல்லியின் உத்தரவு என்றால் யார் உத்தரவு? அது ராஜீவ் காந்தியின் உத்தரவுதான். கருணாநிதியின் குடும்பத்தாருக்குப் பதவிகளைப் பெற, சோனியா குடும்பத்தாரின் ஆதரவு தேவை. ஆகையால், தமிழ் இனத்துக்கு என்ன கேடு நேர்ந்தாலும் கருணாநிதி கவலைப்படப்போவது இல்லை. 

காலம் நியாயங்களை நிரந்தரமாக மறைத்துவிடாது. தமிழ் இனத்துக்குத் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு, பத்துப் பதினைந்து நிலைய வித்துவான்களை வைத்துக்கொண்டு, நாள்தோறும், பாராட்டு மழையில் திளைத்துக் கொண்டு இருக்கிறார்; விழாக்கள், அடைமொழிகள் மூலமாகவே ஈழத்தமிழர் பிரச்சனையில் தமிழ் இனத்துக்கு தான் செய்த கேடுகளை மறைத்து தமிழர்களை திசைதிருப்ப படாதபாடுபடுகிறார். 

தமிழர்களின் வரலாற்றில் வள்ளுவர் பெற்ற புகழை, இளங்கோ, கம்பன், கரிகாலன், இராஜராஜ

 

ன் பெற்ற புகழை, எங்கள் மாவீரன் பிரபாகரன் பெற்று இருக்கிறார். உலகமெலாம் வாழுகின்ற தமிழர்களின் இதயக்கோயிலிலே அவர் வீற்று இருக்கிறார். அவரை கருணாநிதி கொச்சைப் படுத்தி விட முடியாது. ஆனால், உண்மைகளைத் தமிழர்கள் அறிவார்கள். ஒரு அரசை நிறுவி, முப்படைகளை உருவாக்கி, அரசுத்துறைகளை அமைத்து இயக்கி, தமிழ் ஈழ அரசை உலகம் ஏற்கின்ற நிலைமைக்குக் கொண்டு வந்து நிறுத்திய பிரபாகரன், போர்க்களத்திலும், ராஜதந்திரத்திலும் தன்னிகர் அற்ற தலைவராக விளங்குகிறார். ஒழுக்கத்தின் சிகரமாக, நேர்மைக்கும் சத்தியத்துக்கும் இலக்கணமாகத் திகழ்பவர். புரட்சிகளை நடத்திய தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் சில தவறுகள் உள்ளதை நான் படித்து இருக்கிறேன். ஆனால், அப்படிப்பட்ட எந்தத் தவறுகளும் இல்லாத தலைவனான - மாவீரர் திலகமான பிரபாகரனைக் கொச்சைப்படுத்த முயல்கிறார் கலைஞர் கருணாநிதி. 

2009 ஈழப்போரில் இந்தியாவின் துரோகத்தால், பன்னாட்டு ஆயுத உதவியால், தமிழ் ஈழ விடுதலைப் புலிகளுக்கு பின்னடைவும், தோல்வியும் ஏற்பட்டதில் உள்மனதில் மௌனமாக குதூகலித்தவர்தான் கருணாநிதி. இந்த மௌனத்தின் குதூகலம் யார் அறிவார்? 

மாத்தையாவின் துரோகத்தைவிட, கருணாவின் துரோகத்தைவிட, ராஜபக்சேயின் கொலைபாதகத்தைவிட, அவர்களுக்காக வக்காலத்து வாங்குகின்ற கலைஞர் கருணாநிதி செய்கின்ற துரோகம் கொடுமையானது. தமிழ் இனம், ஒருபோதும், இவரை மன்னிக்காது. காலக் கல்வெட்டில் கருணாநிதியின் துரோகம் எந்நாளும் அழியாது. 

'தாயகம்' வைகோ 
பொதுச்செயலாளர் 
மறுமலர்ச்சி தி.மு.க.source:tamilwin

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மாஸ்கோவில் பாதிரியார் சுட்டுக் கொலை

மாஸ்கோ, நவ.21-


ரஷியத் தலைநகர் மாஸ்கோவின் தெற்கு பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் தேவாலயத்திற்குள் நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்த ஒரு மர்ம மனிதன் நுழைந்தான். அங்கிருந்த பாதிரியாரிடம் பெயரைக் கூறும்படி கேட்டான். அவர், டேனியல் சிசோயேவ் என்று தனது பெயரைச் சொன்னதும், அந்த முகமூடி மனிதன், கைத்துப்பாக்கியால் பாதிரியாரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டான். ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். கொலை செய்யப்பட்ட பாதிரியார் சிசோயேவ் தனது சமூக சேவை பணிகளால் ரஷிய இளைஞர்களிடையே புகழ்பெற்றவர், ஆவார்.


source:dailythanthi
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP