சமீபத்திய பதிவுகள்

british india election:இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சியின்போது நடந்த தேர்தல் முடிவுகள்...

>> Friday, September 11, 2009

இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு, பிரிட்டிஷ் ஆட்சியின்போது நடந்த தேர்தல் முடிவுகள்...


--

 

 
source:anantha vikatan
www.thamilislam.co.cc
 

StumbleUpon.com Read more...

islam:இஸ்லாம் மதத்தை விமர்சித்த ஆப்கான் ஊடகவியலாளர் விடுதலை

 

 

இஸ்லாமிய மதம் பெண்கள் விடயத்தில் காட்டும் போக்கு பற்றி கடுமையாக விமர்சித்த ஆப்கானிஸ்தான் ஊடகவியலாளர் பர்வீஸ் கம்பக்ஷுக்கு 2007 இல் தூக்குத் தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டு, 20 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ளார்.

இந்தத் தகவலை ஆப்கானிஸ்தான் நீதி அமைச்சரும் உறுதி செய்துள்ளார். ஊடக உரிமைகள் குழு இந்த பொது மன்னிப்பை வரவேற்றிருக்கும் இவ்வேளை, விடுவிக்கப்பட்ட பர்வேஸுக்கு ஐரோப்பிய நாடு ஒன்று தஞ்சம் வழங்கியுள்ளதால் அவர் ஆப்கானிஸ்தானை விட்டுச் சென்று விட்டதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் பர்வேஸை தூக்கிலிடுவோம் என சிலர் மிரட்டியதாலேயே அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாக சில குழுக்கள் கூறியுள்ளன.

இதேவேளை தமது குற்றச்சாட்டுகளை ஏற்றுக் கொள்ளும்படி தம்மைத் துன்புறுத்தியதாக சர்வேஸ் கூறியுள்ளார். இவருக்கெதிரான வழக்கு விசாரணைகளின்போது இவருக்காக வாதாடவென ஒரு வக்கீலும் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-- 


source:athirvu
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அதிர்ச்சித் தகவல்கள்:அரசு ஹெலிகாப்டர்.. 

'வானில் பறக்கத் தகுதியற்றது', 'லைசென்ஸ் புதுப்பிக்கவில்லை...' என ஆந்திர முதல்வர் பலியான அந்த ஹெலிகாப்டரை சுற்றி சர்ச்சைக் காற்று வீசிக்கொண்டிருக்க... நம்ம ஊரு விமானம் மற்றும் ஹெலிகாப்டரின் லட்சணம் எப்படி இருக்கிறது? விசாரணையில் இறங்கினோம்.

மிழக அரசுக்கு சொந்தமாக ஒரு விமானமும் ஒரு ஹெலிகாப்டரும் இருக்கிறது. அமெரிக்க நாட்டுத் தயாரிப்பான அந்த விமானத்தின் பெயர் 'செஸ்னா சைடேஷன்.' V 560 அல்ட்ரா (VT-EUX) மாடலான இந்த விமானத்தில் ஒன்பது

பயணிகளும் மூன்று பைலட்டுகளும் பயணம் செய்யலாம். 'பெல் 412 EP' (VT-TNG) என்ற ஹெலிகாப்டரும் அமெரிக்கத் தயாரிப்புதான். இதில் மூன்று விமானிகள் உட்பட 12 பேர் பயணிக்கலாம். இந்த இரண்டிலும் தமிழக அரசின் கோபுர சின்னம் பொறிக்கப்பட்டிருக்கிறது. செஸ்னா விமானம் 1995-ம் ஆண்டு வாங்கப்பட்டபோது அதன் விலை 13 கோடியே 8 லட்சத்து 78 ஆயிரம்ரூபாய். ஏற்கெனவே இருந்த பழைய ஹெலிகாப்டரை கொடுத்துவிட்டு 2006-ம் ஆண்டு 21 கோடியே 5 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய்க்கு தற்போதைய புதிய ஹெலிகாப்டர் வாங்கப்பட்டிருக்கிறது.

அரசு விமானம் மற்றும் ஹெலிகாப்டரை தமிழக அரசின் பொதுத் துறை பராமரித்து வருவதால், அந்த துறை அதிகாரிகள் வட்டாரத்தில் பேசினோம். ''யானையைக் கட்டித் தீனி போடுவதுதான் இந்த மேட்டர். ரொம்ப புள்ளி விவரங்கள் இருக்கு. ஆகவே மயக்கம் போட்டு விடாதீர்கள்..!'' என்றே பேசத் தொடங்கினார்கள்.

''கவர்னர், முதல்வர் போன்ற வி.வி.ஐ.பி-க்களின் வசதிக்காகவும் அவசரத் தேவைக்காகவும்தான் ஹெலிகாப்டரும் விமானமும் வாங்கப்பட்டன. இரண்டுமே ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வாங்கப்பட்டன. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் விமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் பார்க்கிங் வாடகை உண்டு. இரண்டுக்கும் மாத வாடகையாக அரசு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து வருகிறது. இதுவரை மொத்தம் விமான நிலைய வாடகைக்காக சுமார் ஒரு கோடியே அறுபது லட்ச ரூபாய் செலவிடப் பட்டுள்ளது.

இந்திய விமானப் படையில் டெபுடேஷன் முறையில் விமானத்துக்கு ஒரு பைலட்டும் ஹெலி காப்டருக்கு இரண்டு பைலட்டுகளும் பணியில் இருக்கிறார்கள். விமான பைலட்டான சுதீருக்கு படிகள் அலவன்ஸ் எல்லாம் சேர்த்து சம்பளம் ஒரு லட்சத்து 39 ஆயிரம். ஹெலிகாப்டர் பைலட்டு களான பண்டா, கேதர் ஆகிய இருவருக்கும் தலா ஒரு லட்சத்து 40 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது...'' என்று அவர்கள் சொல்லச் சொல்ல நமது குறிப்பேடு நிரம்பத் தொடங்கியது. அடுத்து எரிபொருள் குறிப்புகளைக் கொடுத்தார்கள்.

''விமானத்துக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு லட்சத்து 7 ஆயிரம் ரூபாயும் ஹெலிகாப்டருக்கு 2 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் என... மொத்தமாக மாதத்துக்கு மொத்தம் மூன்று லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் எரிபொருளுக்கு பணம் கொட்டப்படுகிறது. இரண்டும் இதுவரை 25 லட்சம் ரூபாய்க்கு மேல் பெட்ரோலை குடித்திருக்கின்றன. அடுத்து மெயின்டெய்ன்... விமானம் மற்றும் ஹெலிகாப்டர் பராமரிப்புக்காக மட்டும் வருடத்துக்கு 64 லட்சத்து 8 ஆயிரத்து 316 ரூபாய் செலவு பிடிக் கிறது. இதுவரை பராமரிப்பு செலவு கணக்கைப் போட்டால் எட்டு கோடி ரூபாய்க்கு மேல் போகிறது.

தேய்மானம் மற்றும் பராமரிப்புக்காகவும் அடிக்கடி உதிரி பாகங்கள் மாற்றப்படுவது தனி செலவு. சிங்கப்பூர், அமெரிக்கா, வளைகுடா நாடுகளில் இருந்துதான் பெரும்பாலும் உதிரிபாகங்கள் வாங்கப்படுகின்றன. இவற்றின் விலை கோடிகளில்! உதாரணமாக, 2005-ம் ஆண்டு ACAS - IIஎன்கிற சாதனத்தை அரசு விமானத் துக்கு வாங்கி பொருத்துவதற்காக 1.27 கோடி ரூபாய் செலவானது. இப்படி அடிக்கடி உதிரி பாகங்கள் வாங்கிய வகையில் 2003-ம் ஆண்டு முதல் இப்போது வரையில் 8 கோடியே 22 லட்சத்து

ஐந்தாயிரம் ரூபாய் செலவு...

அரசு ஹெலிகாப்டர் ஆங்காங்கே இறங்குவதற்காக தமிழகத்தில் மொத்தம் 30 இடங்களில் ஹெலிபேட்கள் உள்ளன. இதற்கு கட்டணமாக 19 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த விமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் ஒவ்வொரு ஆண்டும் செலவாகும் செலவுகளைப் பட்டியல் போட்டால் பலரும் அதிர்ச்சி அடைவார்கள். 2003-ம் நிதியாண்டில் இருந்து இப்போது வரை ஆன மொத்த செலவுகள் மட்டும் 17 கோடியே 46 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய். 1995-ம் ஆண்டில் இருந்து கணக்குப்போட்டுப் பார்த்தால் 35 கோடி ரூபாய்க்கு மேல் மொத்தமாக செலவாகியிருக்கும். ஆனால், விமான மும் ஹெலிகாப்டரும் வாங்குவதற்கு கொடுத்த பணம் 34 கோடி ரூபாய்!'' என்று சொல்லி முடித் தார்கள்.

சரி, கரன்ஸிகளை அசுரப் பசியில் விழுங்கிக் கொண்டிருக்கும் ஹெலிகாப்டரும் விமானமும் எந்த அளவுக்கு பயன்படுத்தப்படுகிறது? சென்னை மீனம்பாக்கம் ஏர்போர்ட்டின் உயர் அதிகாரிகள் வாயைக் கிளறினோம். ''அரசு ஹெலி காப்டர் 2003-ம் ஆண்டுல் இருந்து மொத்தம் 2,052 மணி நேரம்தான் பறந்திருக்கிறது. செஸ்னா விமானம் மட்டும் கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து இப்போது வரையில் வெறும் 158 மணி நேரம் பயணம் செய்திருக்கிறது. மற்ற விமானங்களையும் ஹெலிகாப்டர்களையும் கணக்கிட்டால், இந்த அளவு ரொம்ப ரொம்ப சொற்பமே. சரியாகச் சொன்னால் விமானத்துக்கும் ஹெலிகாப்டருக்கும் அதிக வேலை கொடுத்தது ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதுதான். முதல்வர் கருணாநிதி விமானத்தையோ, ஹெலிகாப்டரையோ பயன்படுத்தவே இல்லை. கவர்னர் எப்போதாவது ஒரு முறைதான் பயன்படுத்துவார். ஆனால், வெளிமாநில முதல்வர் கள், மத்திய கேபினெட் அமைச் சர்கள்தான் இவற்றில் அதிக நேரம் பறந்திருக்கிறார்கள். இன்னொரு சுவாரஸ்யம் என்ன தெரியுமா? ஜெயேந்திரர் கைதானபோது, அவரை ஆந்திரா விலிருந்து அழைத்துவரவும், அந்தக் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அப்புவை ஆந்திராவிலிருந்து அழைத்து வரவும் விமானம் பயன்படுத்தப்பட்டது. தவிர இந்த வழக்கை விசாரித்த அப்போதைய எஸ்.பி. பிரேம்குமார் அடிக்கடி விமானத்தைப் பயன் படுத்தினார்...'' என்றார்கள்.

நேர்மையாக வரி கட்டும் பொதுமக்களின் நெற்றி அகலமாகத்தான் இருக்கிறது. அவர்கள் ரொம்பப் பாவம்தான்!

 

- எம்.பரக்கத் அலி
படம்: கே.ராஜசேகரன்
  
 
source:vikatan
--
www.thamilislam.co.cc


StumbleUpon.com Read more...

கே.பி. மூலமாக கிளம்பும் கிடுகிடுப்பு:ராஜீவ் கொலையில் கை நீட்டப்படும் தமிழகத் தலைவர்கள்?

 


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'எந்திரன்' படத்துக்கு புலிகள் பணம் கொடுத்தனர்', 'தமிழ் திரையுலகத்தினர் பலரும் புலிகளிடம் பணம் பெற்றவர்கள்தான்' என்றெல்லாம் சிங்கள அரசு கிளப்பிய புகார், தமிழகத்தில் பரபரப்பைக் கிளப்பி இருக்கிறது. இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை குறித்த சில விவரங்களை சிங்கள அரசு வெளியிடப் போவதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவரான கே.பி-யின் வாக்குமூலமாக வெளி யாகப் போகும் அந்த விவரங்கள், தமிழகத்தில் பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டாக்கப் போவதாகவும் அடுத்த கிடுகிடு முன்னோட்டம் கொடுக்கிறார்கள், கொழும்பில் இருக்கும் சில பத்திரிகையாளர்கள்.

இந்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளை சுட்டிக் காட்டிப் பேசும் அந்தப் பத்திரிகையாளர்கள், ''ராஜீவ் கொலை குறித்து விசாரித்த பல்நோக்குக் கண்காணிப்பு ஏஜென்ஸியின் பதவிக் காலம் கடந்த ஜூன் மாதத்தோடு முடிவடைந்து விட்டது. ஆனால், ஈழ விவகாரத்தை ஊன்றி கவனித்துக் கொண்டிருக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்நோக்குக் கண்காணிப்பு ஏஜென்ஸியின் பதவிக் காலத்தை சமீபத்தில் நீட்டித்திருக்கிறார்கள். சிங்கள அரசால் புலிகளின் புதிய தலைவரான கே.பி. வளைக்கப்பட்ட பிறகு, அவரிடம் ராஜீவ் கொலை குறித்த பல கேள்விகளைக் கேட்கும்படி சிங்கள அரசிடம் கேட்டுக்கொண்டது இந்தியாவின் சி.பி.ஐ. அமைப்பு!

கே.பி., இப்போது சிங்கள அரசின் பாதுகாப்புப் படையின் விசாரணையில் எப்படி இருக்கிறார் என்கிற விவரம் முழுமையாக மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. கடுமையான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வரும் கே.பி-யிடம் எக்கச்சக்கமான கையெழுத்துகள் வாங்கப்பட்டு வருகிறது. அதோடு அவருடைய வாக்குமூலமாகச் சொல்லும்படி சில விவரங்களைப் பதிவு செய்கிற வேலையையும் சிங்கள அதிகாரிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ராஜீவ் கொலை வழக்கில் கே.பி-க்கு மிக முக்கியப் பங்களிப்பு இருப்பதாகவும், கொலை சம்பவம் நடந்தபோது கே.பி. பெங்களூரில் இருந்ததாகவும் சி.பி.ஐ. சந்தேகிக்கிறது.

2002-ம் ஆண்டு கே.பி-யை வளைப்பதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் நியூஸிலாந்து போனார்கள். ஆனாலும் அவர்களால் கே.பி-யை இந்தியாவுக்குக் கொண்டுவர முடியவில்லை. இப்போது சிங்கள அரசிடம் சிக்கி இருக்கும் கே.பி-யை ராஜீவ் கொலை குறித்த விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பக் கோரி மத்திய அரசு தாராளமாகக் கேட்கலாம். ஆனால், அதைச் செய்யாமல் ராஜீவ் கொலைச் சதி குறித்த கேள்விகளை சிங்கள அரசுக்கு முறைப்படி அனுப்பி வைத்து, ஆதார பூர்வமாக பதில் வாங்க சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவெடுத்திருக்கிறார்கள். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி சிங்கள அரசு ராஜீவ் கொலை விவகாரத்தில் தங்களுக்கு எதிராகச் செயல்பட்டும், பேசியும் வந்த தமிழகத் தலைவர்கள் பலரையும் இழுத்துவிடக் கூடிய அபாயம் இருக்கிறது!'' எனச் சொன்ன அந்தப் பத்திரிகையாளர்கள்... சி.பி.ஐ. அதிகாரிகள் தயாரித்திருக்கும் கேள்விகள் குறித்த தகவல்களையும் நம்மிடம் சொன்னார்கள்.

''ராஜீவ் கொலைச் சதியில் சம்பந்தப்பட்ட இந்தியர்கள் யார் யார்? கொலைத் திட்டத்தை நிறைவேற்ற பண உதவி செய்தது யார்? ராஜீவ் கொலை செய்யப்படப் போகிற தகவல் யார் யாருக்கெல்லாம் தெரியும்? இதுபோன்ற கேள்வி களுக்கு பதில் வாங்க முயல்கிறது சி.பி.ஐ.! அதன்படி, ராஜீவ் கொலையாகப் போகும் தகவல் தமிழகத் தலைவர்கள் சிலருக்கு முன்கூட்டியே தெரியும் எனச் சொல்லியும், அத்தகையவர்களின் பட்டியலை வெளியிட்டும் தமிழகத்தில் பீதியைக் கிளப்புகிற திட்டத்தை சிங்கள அரசு கையில் எடுத்துவிட்டது. புலிகளுக்கு ஆதரவாகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்த தலைவர்கள் யார் என்பதையட்டியே இது அமையக்கூடும்!'' எனச் சொன்னார்கள்.

இப்படியரு பேச்சு நிலவுவது குறித்து பழ.நெடுமாறனிடம் நாம் பேசினோம். ''நம்ம ஊர் போலீஸாரிடம் ஒருவர் மாட்டினாலே, என்னவெல்லாம் ஆகும், எப்படியெல்லாம் வாக்குமூலங்கள் தயாரிக்கப்படும் என்பதற்கு மிகச் சமீபம் வரை உதாரணங்கள் உண்டே! கே.பி-யோ துளிகூட நியாய, தர்மங்கள் பார்க்காத சிங்கள அரசிடம் மாட்டியிருக்கிறார். அவருடைய வாக்குமூலமாக பல கட்டுக்கதைகளை சிங்கள அரசு பரப்பத் துவங்கியுள்ளது. முன்பு நியூஸிலாந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் கே.பி-யைப் பிடித்தபோதே, ராஜீவ் கொலை குறித்து அவரிடம் விசாரித்திருக்க வேண்டியதுதானே... ராஜீவ் கொலை குறித்து சந்திராசாமி மற்றும் சுப்பிர மணியன் சுவாமியிடம் விசாரிக்கும்படி ஜெயின் கமிஷன் சொன்னதே... அவர்களிடம் விசாரணை நடந்ததா? ஈழ எழுச்சியைத் தடுக்கிற விதமாக ராஜீவ் கொலை விவகாரம் குறித்து கே.பி. சொன்னதாக சிங்கள அரசு எதை வேண்டுமானாலும் பரப்பிக் கொள்ளட்டும்! மடியில் கனமிருப்பவர்கள்தானே பயப்பட வேண்டும்?'' என நிதானமாகச் சொன்னார் நெடுமாறன்.

ம.தி.மு.க. பொதுச் செயலாளரான வைகோ, ''சிங்கள அரசின் வெறித்தாண்டவ இன அழிப்புக் கோரங்கள் இப்போது வீடியோக்களாகவும், புகைப்படங்களாகவும் வெளியாகி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய இன அழிப்புத் துயருக்கு இந்திய அரசு தொடர்ந்து துணையாக நின்றது. உலக சமூகமே இந்திய, இலங்கை அரசுகளின் மேல் கடுமையான கோபத்தில் இருக்கிறது. அந்தக் கோபத்தைத் திசை திருப்பும் விதமாகத்தான் கே.பி-யிடம் ராஜீவ் கொலை குறித்து விசாரிக்கப் போவதாக இப்போது மத்திய அரசு பரபரப்பு காட்டுகிறது. கே.பி-யின் வாக்குமூலமாக பழிச் செய்திகள் பரப்பப்பட்டாலும், அதனைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம். ஈழத்துக்காக எழுகிற குரல்களை எல்லாம் மிரட்டி அடக்க நினைக்கும் சதித்திட்டம் ஒருபோதும் ஈடேறாது!'' எனக் கொந்தளித்தார் வைகோ.

வாக்கு வங்கி, கோஷ்டி அரசியல், பரஸ்பர பழிதீர்ப்பு என்பதெல்லாம் தாண்டி இன்னும் எதற்கெல்லாம் ராஜீவ்காந்தியின் ஆன்மாவை இழுத்துக்கொண்டே இருப்பார்களோ..?!

- இரா.சரவணன்   
 
source:vikatan
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP