சமீபத்திய பதிவுகள்

சவூதிக்கு வேலைக்கு சென்ற இந்திய பெண்கள் சிறைபிடிப்பு: கட்டாயப்படுத்தி விபச்சாரம்

>> Tuesday, January 31, 2012


டெல்லி: வேலை வாங்கித் தருகிறேன் என்ற பெயரில் சவூதிக்கு அழைத்துச் செல்லப்பட்ட 56க்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டு விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவது தெரிய வந்துள்ளது.


கடந்த 2 மாதத்தில் டார்ஜிலிங், கலிம்பாங் மற்றும் நேபாலைச் சேர்ந்த 56க்கும் மேற்பட்ட பெண்கள் பல்வேறு ஏஜென்சிகள் மூலம் சவூதி அரேபியாவுக்கு வேலைக்கு சென்றனர். சவூதிக்கு சென்ற அவர்கள் அங்கு சிறைபிடிக்கப்பட்டனர். மேலும் அவர்கள் கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி சம்பாதிப்பவர்கள் அந்த அப்பாவி பெண்களின் பாஸ்போர்டுகளைப் பறித்து வைத்துள்ளனர்.

இதனால் அந்த பெண்கள் வேறு வழியின்றி தினம், தினம் நொந்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் டார்ஜிலிங்கைச் சேர்ந்த நிஷ் ராய் என்ற பெண் மட்டும் எப்படியோ தனது பாஸ்போர்டை எடுத்துக் கொண்டு இந்தியாவுக்கு தப்பியோடி வந்துவிட்டார்.

இங்கு வந்தவுடன் தனக்கு நேர்ந்த கொடூரத்தை டார்ஜிலிங் போலீசில் தெரிவித்தார். மேலும் சவூதியில் இது போன்று 56க்கும் மேற்பட்ட இந்திய பெண்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து டார்ஜிலிங் போலீசார் கூறியதாவது,

மேற்கு வங்க அரசு மற்றும் சிஐடி போலீசார் வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் இந்த விவகாரம் குறித்து விசாரிக்கவிருக்கின்றனர். சவூதியில் சிக்கியுள்ள பெண்களின் குடும்பத்தாரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் இது தொடர்பாக 2 ஏஜென்சி நிபுணர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றனர். 

source:tamil.oneindia

--
http://thamilislam.blogspot.com

StumbleUpon.com Read more...

இணையத்தில் 'செக்ஸ்' தேடலில் பாகிஸ்தான் முதலிடம்.

 

 

இணையத்தளத்தில் 'செக்ஸ்' குறித்து அதிகம் தேடுதலை மேற்கொண்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தையும் இந்தியா இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளன. கூகுள் இணையத்தளத்தின் மூலம் 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல்கள் தொடர்பான தரவுகளின்படி, செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட நாடாக பாகிஸ்தான் உள்ளது. இந்தியா இரண்டாமிடத்திலும் வியட்நாம் மூன்றாமிடத்திலும் எகிப்து நான்காமிடத்திலும் இந்தோனேஷியா ஐந்தாமிடத்திலும் உள்ளதாக 'கூகுள் ட்ரென்ட்ஸ்' தரவுகள் வெளிப்படுத்துகின்றன.

இதேவேளை செக்ஸ் எனும் வார்த்தையை அதிகம் தேடியவர்களைக் கொண்ட 10 நகரங்களில் 8 இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளன. பாகிஸ்தானின் லாகூரும் வியட்நாமின் ஹனோயும் முதல் 10 நகரங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியாவை சாராத நகரங்களாகும். இவ்வருடத்தில் மாத்திரமல்லாது கூகுள் தேடல் தளத்தில் இதுவரைக்காலமும் அதிக செக்ஸ் தேடலை மேற்கொண்டோர் உள்ள நாடுகளின் பட்டியலும் பாகிஸ்தான் தான் முதலிடத்தில் உள்ளது. இதில் இந்தியாவை 3 ஆம் இடத்திற்கு தள்ளிவிட்டு வியட்நாம் இரண்டாமிடத்தில் உள்ளது.
'20 மில்லியன் இணைத்தள பாவனையாளர்களைக் கொண்டுள்ள நிலையில் அந்த எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவரும் நிலையில், சகல வருடங்களுக்குமான உலகளாவிய 'செக்ஸ் தேடல் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பெற்றுள்ளது' என பாகிஸ்தானின் த எக்ஸ்பிரஸ் ட்ரிபியூன் பத்திரிகை தெரிவித்துள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டைப் பொறுத்தவரை பெப்ரவரி, ஓகஸ்ட் மாதம் தவிர்ந்த ஏனைய சகல மாதங்களிலும், செக்ஸ் என்ற வார்த்தையை தேடியவர்களை அதிகம் கொண்ட உலகின் முதல் 10 நகரங்களின் பட்டியலில் பாகிஸ்தானின் லாகூர் நகரம் இடம்பெற்றுள்ளது. பெப்ரவரி, ஓகஸ்ட் மாதங்களுக்கான பட்டியலில் எந்தவொரு பாகிஸ்தான் நகரமும் இடம்பெறவில்லை என அப்பத்திரிகை தெரிவித்துள்ளது. இதேவேளை கடந்த வருடத்தில் செக்ஸ் என்ற வார்த்தையை தேடியவர்களை அதிகம் கொண்ட நகரங்களின் பட்டியலில் உலகளவில் இந்தியாவின் லக்னோ முதலிடத்தையும் கொல்கத்தா இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளன. சென்னை உலகளவில் 7 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.


source:athirvu


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஷு வீச்சு -ராகுல் மீது

>> Monday, January 23, 2012

டேராடூன்: உத்தரகண்டில், தேர்தல் 
பிரசார கூட்டத்தில் பங்கேற்ற 
காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் மீது, 
நேற்று வாலிபர் ஒருவர் ஷூவை 
வீசினார். உடனடியாக அந்த வாலிபரை, 
போலீசார் கைது செய்தனர். அன்னா 
ஹசாரே அணியைச் சேர்ந்தவர்கள் 
மீது, இரண்டு நாட்களுக்கு முன் ஷூ 
வீசப்பட்ட நிலையில், தற்போது, ராகுல்
மீதும் ஷூ வீசப்பட்டுள்ளது.
உத்தரகண்ட் மாநிலத்தில், வரும் 30ம் 
தேதி, ஒரே கட்டமாக சட்டசபை 
தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அந்தக் கட்சியின் பொதுச் செயலர் ராகுல், தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே முதல்கட்ட பிரசாரத்தை முடித்த அவர், தற்போது இரண்டாவது கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
தூரத்தில் விழுந்த ஷூ : இந்நிலையில், டேராடூனில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் ராகுல் பங்கேற்ற போது, அவரை நோக்கி வாலிபர் ஒருவர், ஷூவை வீசினார். ஆனால் அந்த ஷூ, ராகுல் இருந்த இடத்திலிருந்து, 10 மீட்டர் தூரத்தில் விழுந்தது. உடன், ஷூ வீசிய கிஷன்லால் என்ற வாலிபரை, போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம், தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என,  


டேராடூன் போலீஸ் அதிகாரி கோஸ்வாமி கூறினார். ஷூ வீசிய வாலிபரை, காங்., தொண்டர்களும், மற்றவர்களும் தாக்க முற்பட்ட போது, "அவரைத் தாக்க வேண்டாம்' என்றும் ராகுல் கேட்டுக் கொண்டார். பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி, இரண்டு நாட்களுக்கு முன், உத்தரகண்ட் மாநிலத்தில், அன்னா ஹசாரே அணியினர் பிரசாரத்தைத் துவக்கிய போது, அங்குள்ள அரங்கம் ஒன்றில் அவர்களின் மீது ஷூ வீசப்பட்டது. அந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் முடிவதற்குள், ராகுல் மீது ஷூ வீசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பா.ஜ.,வை விமர்சித்த ராகுல் : முன்னதாக, பல்வேறு தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பேசிய ராகுல், ஊழல் விவகாரம் தொடர்பாக, பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்தார் 

அப்போது அவர் கூறியதாவது: ஊழலை எதிர்த்துப் போராடுவதில், நாங்கள் அக்கறை காட்டவில்லை என, பா.ஜ., கட்சியினர் சொல்கின்றனர். ஆனால், தங்கள் கட்சி ஆளும் கர்நாடகா, சத்திஸ்கர், உத்தரகண்ட் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் நடக்கும் ஊழல்களை அவர்கள் கண்டுகொள்வதில்லை. மத்தியில் உள்ள காங்கிரஸ் கட்சியோ, ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் உட்பட பலரை சிறைக்கு அனுப்பியுள்ளது. பலமான லோக்பால் மசோதாவை காங்., தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்தது. அந்த மசோதா, பார்லிமென்டில் நிறைவேறவிடாமல், பா.ஜ., தடுத்து விட்டது. இவ்வாறு ராகுல் பேசினார். 

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

அதிர்ச்சி தினமும் 4 மணி நேரம் தூங்கும் வீரர்கள்

>> Monday, January 9, 2012 புதுடில்லி:எல்லைப் பாதுகாப்பு படையில் பணிபுரியும் பெரும்பாலான வீரர்கள், தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்குவதற்கு அனுமதிக்கப்படுவதாகவும், உயர் அதிகாரிகள், அவர்களை கடுமையாக திட்டுவதாகவும், சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லையைப் பாதுகாக்கும் பணியில், எல்லைப் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள், பல்வேறு பிரச்னைகளால் மன அழுத்தத்துக்கு ஆளாகி, கடும் பாதிப்பிற்கு ஆளாவதாக அடிக்கடி தகவல் வெளியானது. இதையடுத்து, இவர்களின் பிரச்னைக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்த, மத்திய அரசு முடிவு 

செய்தது.உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும், மத்திய போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவு, இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவுகள், சமீபத்தில் உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்டன. உள்துறை செயலர் ஆர்.கே.சிங், இந்த ஆய்வு முடிவை வெளியிட்டார்.அதில் கூறப்பட்டுள்ளதாவது:எல்லைப் பாதுகாப்பு படையில், கான்ஸ்டபிள் போன்ற கடைமட்டத்தில் பணிபுரியும் வீரர்களில், 70 சதவீதத்தினர், தங்களுக்கு போதிய அளவில் ஓய்வு வழங்கப்படுவது இல்லை என, குறை கூறியுள்ளனர். ஒரு நாளைக்கு, நான்கு மணி நேரம் மட்டுமே 

தூங்குவதற்கு, உயரதிகாரிகள் தங்களை அனுமதிப்பதாகவும் கூறுகின்றனர். தூக்கமின்மை காரணமாக, மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும், சிறிய அளவில் தவறு செய்தால் கூட, உயரதிகாரிகள், தங்களை கடுமையாகவும்,தரக் குறைவான வார்த்தைகளாலும் திட்டுவதாகவும் கூறியுள்ளனர்.
இதுபோன்ற மன அழுத்தத்தால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்ப்பதற்காக, உடனடியாக போதிய அளவில் மனநல ஆலோசகர்களை கொண்ட கவுன்சிலிங் நடத்தப்பட வேண்டும். மேலும், வீரர்களிடம், உயரதிகாரிகள் கடுமையாக நடந்து கொள்வதைத் தவிர்க்கவும், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

source:dinamalar

StumbleUpon.com Read more...

இஸ்லாமியர்களுடனான கிறிஸ்தவர்களின் மாபெரும் விவாதம்

>> Saturday, January 7, 2012


கிறிஸ்துவுக்குள் நம்மால் நேசிக்கப்படுகிற நமது நண்பர்களில் சிலர் எடுத்திருக்கும் புதிய முயற்சி. இஸ்லாமிய சகோதரர்களுடன் நேரடியான விவாத அமர்வு.

இதன் வழியாக கர்த்தருடைய சுத்த சுவிஷேசம் அனைவருக்குள்ளும் அறிவிக்கப்பட வேண்டும். குறிப்பாக இஸ்லாமிய சகோதரருக்குள்ளே ஒரு தாக்கத்தை உண்டு பண்ண வேண்டும். இஸ்லாமிய சகோதரார்கள் இரட்சகருடைய இரட்சிப்பை அடைய வேண்டும். 

ஆத்தும பாரமுள்ள ஒவ்வொருவரும் இந்த அமர்வுக்காக..., 
ஊக்கமாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.


நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்? 
நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். அவர்களுடைய பயமுறுத்தலுக்கு நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் இருந்து. கர்த்தராகிய தேவனை உங்கள் இருதயங்களில் பரிசுத்தம்பண்ணுங்கள். 
உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவுசொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள். 
கிறிஸ்துவுக்கேற்ற உங்கள் நல்ல நடக்கையைத் தூஷிக்கிறவர்கள் உங்களை அக்கிரமக்காரரென்று உங்களுக்கு விரோதமாய்ச் சொல்லுகிற விஷயத்தில் வெட்கப்படும்படிக்கு நல்மனச்சாட்சியுடையவர்களாயிருங்கள். 1பேது 3: 13...16
என்கிறதான வேதவசனத்தின்படி செயல்படுகிற நமது நண்பர்களுக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். மீண்டும் கேட்டுக்கொள்ளுகிறேன். ஆத்தும பாரமுள்ள ஒவ்வொருவரும் இந்த அமர்வுக்காக ஊக்கமாக ஜெபித்துக் கொள்ளுங்கள்.


மேலும் முழுமையான விபரங்களுக்கு: -  http://www.iemtindia.com/ 

source:krmchuch.blogspot


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

சிங்களப் பெண் உதவியாளருடன் இலங்கை ஓட்டலில் கருணா கும்மாளம் ( படங்கள் )

இலங்கையில் தமிழ் மக்களுக்காக போராடிய விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பிரபாகரன் தலைமையிலான படையில் கிழக்கு மாகாண படையை நிர்வகிக்கும் கர்னல் பொறுப்பில் இருந்தவர் விநாகமூர்த்தி முரளீதரன் என்ற கருணா.
 ஒரு கட்டத்தில் இவர் செய்த நிதிமுறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து பிரபாகரன் இவரைக் கண்டித்தார்.  

 உடனே தனது பொறுப்பில் இருந்த வீரர்களுடன் விடுதலைப்புலிகள்  இயக்கத்தில் இருந்து வெளியேறிய கருணா,   
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் என்ற தனி அமைப்பை தொடங்கினார்.

அத்துடன் விடுதலைப்புலிகள் இயக்க வீரர்கள் மீதும் தாக்குதல் நடத்தினார்.  பின்னர் ராஜபக்சே அரசிடம் விலை
போனார்.   

கடந்த 2008ம் ஆண்டு ராஜபக்சே கட்சியில் சேர்ந்த கருணா,  தேர்தலில் போட்டியிட்டு  எம்.பி. ஆனார்.  பின்னர் 
2009ம் ஆண்டு இவருக்கு தேசிய ஒருமைப்பாட்டு துறை அமைச்சர் பதவியையும் ராஜபக்சே வழங்கினார்.

சொகுசு வாழ்க்கையை அனுபதிதுக்கொண்டிருக்கும் கருனா,  அவ்வப்போது வெளிநாடுகளுக்கும் சென்று  அங்குள்ள 
தமிழின ஆதரவாளர்களையும் சந்தித்து அவர்களையும் தங்கள் பக்கம் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.    ஆனால் கருணாவின் துரோகத்தை மறக்க தமிழர்கள் ஒருபோதும் தயாராக இல்லை.  அவரை புறக்கணித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 1ம் தேதி இலங்கை ஓட்டல் ஒன்றில் புத்தாண்டை மது விருந்துடன் கொண்டாடி 
மகிழ்ந்துள்ளார்.    இவரது அலுவலகத்தில் அந்தரங்க பெண் உதவியாளராக இருப்பவர் சாந்தினி.  இவருடன் மிக நெருக்கமாக ஆடிப்பாடி  மகிழ்ந்துள்ளார் கருணா. 

இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.  இவையெல்லாம் கருணா மீது ஏற்கவே உலகத்தமிழர்களுக்கு 
இருக்கும்  கோபத்தை பன்மடங்கு அதிகரிக்கச்செய்துள்ளன.

கருணாவின் சுயரூபத்தை பாருங்கள்  என்று தமிழர்கள் தங்கள் கொதிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.   தமிழினத்தை 
காட்டிக்கொடுத்தற்கு ராஜபக்சே கொடுத்த பரிசுதான் இந்த சிங்களப்பெண் சாந்தினி என்றும் கடுமையாக சாடியுள்ளனர்.


source:nakkheeran

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

>> Thursday, January 5, 2012


சென்னை: பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் நோய் வந்தால் சேர்த்து வைத்த, சொத்து பத்தெல்லாம் பறந்து போய் விடுமோ என அஞ்சும் நிலை உருவாகியுள்ளது. அந்தளவிற்கு தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் பகல் கொள்ளையாக உள்ள நிலையில், தமிழகத்திலேயே முதன் முறையாக கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனை பொதுமக்களுக்கு பத்து ரூபாயில் நோய்க்கு தீர்வு தருகின்றனர்.

சென்னை தண்டையார்பேட்டை தாண்டவராயன் தெருவில் கடந்த 2010ல் சென்னை வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் பியாரிலால் ஜெயினின் உதவியுடன் ஏழைகளுக்கு தொண்டு செய்ய வேண்டும் என்று எண்ணிய சகுந்தலா என்பவரின் பெயரில் தொடங்கப்பட்டது தான் சகுந்தலா தேவி மகப்பேறு மருத்துவமனை. இம் மருத்துவமனை ரூ. மூன்று கோடி செலவில் பலரின் நிதியுதவியுடன் தொடங்கப்பட்டது. பெண்களுக்கு மகப்பேறு சிகிச்சை அளிப்பதில் பகுதி மக்களின் முதல் தேர்வாக இம்மருத்துவமனை உள்ளது. 

இங்கு பிள்ளை பேறு பெறும் பெண்களுக்கு அனைத்து வித பரிசோதனைகளுடன், தேவைப்படும் பட்சத்தில் அறுவை சிகிச்சை மூலமாகவும் மிக குறைந்த செலவில் மகப்பேறு சிகிச்சை அளிக்கின்றனர்.
இன்று தலைவலி மற்றும் காய்ச்சல் வந்தால் கூட, மருத்துவரை அணுகினால் குறைந்தபட்சம் மருத்துவருக்கு நூறு ரூபாய் அழ வேண்டியிருக்கும். ஆனால் இங்கு மருத்துவ பரிசோதனைக்கு வெறும் பத்து ரூபாய் மட்டுமே கட்டணமாக பெறுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல், சுகப்பிரசவத்திற்கு ஆயிரம்ரூபாயாகவும், அறுவை சிகிச்சைக்கு ஆறாயிரத்து 500 ரூபாயும் கட்டணமாக பெறுகின்றனர். இந்த கட்டணங்கள் கூட, மருத்துவர்கள் மற்றும் மருத்துவ குழுவினரின் சம்பளத் தேவைக்காக தான் வாங்கப்படுகிறது என மருத்துவமனை செயலரும், கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்க உயர்மட்டக்குழு உறுப்பினருமான மாரிமுத்து கூறினார்.
மேலும் அவர் கூறியதாவது: மக்களுக்கு குறைந்த செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று எண்ணியே இம்மருத்துவமனை 

ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பித்து ஓன்றரை ஆண்டாகி விட்டது. இதுவரை 827 பெண்களுக்கு சுகப்பிரசவமாகவும் அறுவைசிகிச்சை மூலமாகவும் மகப்பேறு வைத்தியம் பார்த்திருக்கிறோம்.
தினமும் வருகிற புறநோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை எண்பதாயிரத்தை தாண்டி விட்டது. இங்கு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே மற்றும் இ.சி.ஜி., உள்ளிட்ட மகப்பேறுக்கு தேவையான அனைத்தையும் ஒரே இடத்தில் அமைத்துள்ளோம். இம்மருத்துவமனைக்கு என்றுஇதுவரை விளம்பரம் கூட செய்தது கிடையாது. எல்லாம் மக்களின் பூரண நிம்மதியே எங்களுக்கு விளம்பரமாக அமைந்து வருகிறது. ஆந்திராவிலிருந்து கூட இங்கு சிகிச்சைக்காக வருகின்றனர். வண்ணாரப்பேட்டை கட்பீஸ் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இயங்கும் இம்மருத்துமனையில் பெறப்படும் குறைந்த கட்டணங்கள் கூட மருத்துவர்களின் சம்பளத் தேவைக்காக மட்டுமே வாங்கப்படுகிறது. சிகிச்சையை பொறுத்தமட்டில் மக்களுக்கு இலவசம் என்றே சொல்லலாம். தமிழகத்திலேயே ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மருத்துவமனை நடத்தப்படுவது இங்கு தான் உள்ளது என்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP