சமீபத்திய பதிவுகள்

ஒரிசாவில் 2 பேர் வெட்டிக் கொலை:மீண்டும் பதற்றம்

>> Saturday, October 4, 2008

 
 
lankasri.comஒரிசாவில் கலவரம் பாதித்த கந்தமால் மாவட்டத்தில் வியாழக்கிழமை அடையாளம் தெரியாத நபர்களால் 2 பேர் வெட்டிக் கொல்லப்பட்டனர். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.சிந்துபங்கா கிராமத்தில் இரவு நேரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 15 வயது சிறுவன் உள்பட இருவரை கோடரியால் வெட்டி கொலை செய்துள்ளனர்.

இது தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை. கொலையாளிகளை போலீஸர் தீவிரமாகத் தேடி வருகின்றனர் என்று மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண குமார் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி விஎச்பி தலைவர் லட்சுமணானந்தா சரஸ்வதி மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கந்தமால் மாவட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். தற்போது அங்கு இருவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு மீண்டும் பதற்றம் நிலவுகிறது.

விஎச்பி கோரிக்கை: இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக அப்பாவி இந்துக்களை போலீஸர் கைது செய்கின்றனர். இதனைத் தடுக்க மாநில முதல்வர் நவீன் பட்நாயக் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

லட்சுமணானந்தாவை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என்று விஎச்பி வலியுறுத்தியுள்ளது.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223101776&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட வேண்டும்:அத்வானி அழைப்பு

 

 
 
lankasri.comதீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று பா.ஜ.க. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி அழைப்பு விடுத்துள்ளார்.தில்லியில் உள்ள அத்வானியின் இல்லத்தில் வியாழக்கிழமை ஜோத்பூர் தலைமைக் காஜி அயூப் சாகிப் தலைமையில் முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவினர் அவரைச் சந்தித்துப் பேசினர்.

பாஜகவின் மற்றொரு தலைவர் நஜ்மா ஹெப்துல்லாவும் அவர்களுடன் சென்றிருந்தார். இந்த சந்திப்பு குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கூறியது:

முஸ்லிம் மக்களுக்கு சிறந்த கல்வி கிடைக்க வேண்டும். தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்கள் கரங்களை இணைத்துப் போராட வேண்டும் என்று அத்வானி கேட்டுக் கொண்டதாக அவர் கூறினார். முஸ்லிம் மதத்தில் உள்ள ஒரு சில தீய நபர்கள் அந்த மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தி விடுகின்றனர். இதற்கு வறுமை, வேலைவாய்ப்பு இன்மையும் முக்கியக் காரணமாகிறது. மத்தியில் ஆட்சி செய்து வரும் காங்கிரஸ்தான் இதற்குப் பொறுப்பு என்ற நஜ்மா ஹெப்துல்லா குற்றம்சாட்டினார்.

 

 

StumbleUpon.com Read more...

சிகரெட்டை கைவிட மதச்சடங்கு:குடும்பத்தினரால் தம்பதி அடித்துக் கொலை

சிகரெட் பழக்கத்தை நிறுத்த நடத்தப்பட்ட மதச் சடங்கில் கணவன்-மனைவி அவர்களது குடும்பத்தினரால் அடித்துக் கொல்லப்பட்டனர்.இந்த மதச்சடங்கில் படுகாயமடைந்த 15 வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மலேசிய நாட்டில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மலேசியாவைச் சேர்ந்த தம்பதி முகமது இப்ராஹிம் (47), ரோஸினா (41). இவர்கள் வியாழக்கிழமை தங்கள் உறவினர்கள் வீட்டுக்குச் சென்றனர். அப்போது இப்ராஹிமிடம் உள்ள புகைப் பழக்கம், ரோஸினாவுக்கு ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்பது குறித்து பேச்சு எழுந்தது.

அங்கிருந்த அவரது உறவினர் ஒருவர் மதச் சடங்கு மூலம் புகைப் பழக்கத்தையும், நோயையும் போக்கி விட முடியும் என்று ஆலோசனை வழங்கினார்.

இதனையடுத்து உறவினர்கள் நான்கு பேரும் தம்பதிகளை "மதச்சடங்குப் படி"கையில் கிடைத்த பொருள்களைக் கொண்டு சரமாரியாகத் தாக்கத் தொடங்கினர். அவர்களது தலையை மேசையில் வைத்து இடித்தனர். இதில் தம்பதிகள் இருவரும் படுகாயமடைந்து சுயநினைவை இழந்தனர்.

மதச்சடங்கு முடிந்து ஒருமணி நேரமாகியும் அவர்கள் மயங்கிய நிலையில் இருந்ததால், உறவினர்கள் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ வரச் செய்தனர்.

எனினும் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இத்தம்பதிகளுடன் சிறுமி ஒருவருக்கும் இது போன்ற மதச் சடங்கு நடத்தப்பட்டது. அந்தச் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தம்பதி, சிறுமியைத் தாக்கிய உறவினர்கள் 4 பேரை போலீஸர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223101502&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இங்கிலாந்து அறக்கட்டளைக்கு நல்லெண்ண தூதராக கஜோல் நியமனம்

இங்கிலாந்து அறக்கட்டளைக்கு நல்லெண்ண தூதராக கஜோல் நியமனம்
 
lankasri.comஇங்கிலாந்தில் உள்ள லூம்பா அறக்கட்டளைக்கு நல்லெண்ண தூதராகவும், புரவலராகவும் பிரபல இந்தி நடிகை கஜோல் நியமிக்கப் பட்டுள்ளார்.இங்கிலாந்தில் உள்ள இந்த அறக்கட்டளையானது குறிப்பாக இந்தியாவில் விதவை தாய்மார்களின் பிள்ளைகள் கல்வி கற்பதில் பெரும் உதவி செய்யும் பணியை செய்துவருகிறது.

நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்ட கஜோலுக்கு லூம்பா அறக்கட்டளை தலைவி செர்ரி பிளேர், கஜோல் நியமனத்திற்கான பத்திரத்தை வழங்கினார். இங்கிலாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மனைவிதான் செர்ரி பிளேர். மகாத்மா காந்தியின் பிறந்ததினத்தை ஒட்டியும், இந்தியாவில் சிறப்பாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை ஒட்டியும் நேற்று முன்தினம் மாலையில் லண்டனில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த நியமன பத்திரத்தை கஜோலிடம், செர்ரி பிளேர் வழங்கினார். கஜோல் நடித்த தில்வாலே துல்கானியா லே ஜாயேங்கே, குச் குச்சு ஹோத்தாகே போன்ற படங்கள் மிகவும் பிரபலமானவை.

நியமன பத்திரத்தை பெற்றபின் பேசிய கஜோல், நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் நான் முடிந்த அளவு நல்லமுறையில் செயல்படுவேன் என்று கூறினார். இந்த அறக்கட்டளையை துவக்கிய ராஜ் லூம்பா பேசுகையில், இந்த அறக்கட்டளையின் முன்னேற்றத்திற்கு கஜோல் சிறந்த முறையில் செயல்படுவதோடு, நிதி வசதியையும் பெருக்கிட உதவுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்திற்கான இந்திய ஹை கமிஷனர் சிவசங்கர் முகர்ஜி, லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன், முன்னாள் மேயர் கென் லிவிங்ஸ்டன், இங்கிலாந்து பாராளுமன்ற தலைவர்களில் ஒருரான லார்டு நவநித் தோலகியா உள்பட மற்றும் பல முக்கிய பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

அறக்கட்டளையின் தற்போதைய தலைவர் செர்ரி பிளேர் பேசும்போது, இந்த அறக்கட்டளையானது தனது பணியை இந்தியாவில் மட்டுமல்லாது, இங்கிலாந்து, நேபாளம், தென் ஆப்பிரிக்கா, லுவாண்டா ஆகிய நாடுகளிலும் தனது பணியை மேற்கொள்ளும் என்றும் தெரிவித்தார்.

 

 

StumbleUpon.com Read more...

ஒரிஸ்ஸா: இந்து பெண் கற்பழித்து எரித்துக்கொலை!

 
ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவர் என நினைத்து இந்து மதத்தை சேர்ந்த இளம் பெண்ணை கலவரக் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்து உயிரோடு எரித்துக்கொன்ற சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரிஸ்ஸாவில் கடந்த மாதம் 23ம் தேதி விஸ்வ ஹிந்து பரிஷத் தலைவர் உள்பட 5 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தையடுத்து அங்கு கலவரம் வெடித்தது.

விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர், கிறிஸ்தவ தேவாலயங்கள் அடித்து நொறுக்கியதோடு, கிறிஸ்தவ மக்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்தமாதம் 24 ஆம் தேதி தொடங்கிய வன்முறை வெறியாட்டம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இதன் எதிரொலியாக, கடந்த மாதம் கந்தமால் மாவட்டத்தில் 28 வயது கன்னியாஸ்திரி ஒருவர், கலவரக் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் சமீபத்தில் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த கன்னியாஸ்திரியை காப்பாற்ற முயன்ற பாதிரியாரையும் அந்த கும்பல் அடித்து உதைத்து நிர்வாணமாக்கியது.

இதுகுறித்து அந்த கன்னியாஸ்திரி, காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மாதமாகியும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பத்திரிகைகளில் செய்தி வெளியான பின்னரே, இதுகுறித்து விசாரணை நடத்த மாநில அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையே, கடந்த மாதம் 25 ஆம் தேதி நடந்த மற்றொரு பாலியல் பலாத்கார கொடுமையும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

ஒரிஸ்ஸாவின் பர்கத் மாவட்டத்தில், கிறிஸ்தவ தேவாலயத்தில் உள்ள ஓர் அனாதை விடுதியில் ரஜனி என்ற 20 வயது மாணவி பணிபுரிந்து வந்தார்.

இந்த அனாதை விடுதிக்குள் புகுந்த கலவரக் கும்பல், ரஜனியை பாலியல் பலாத்காரம் செய்தது. அவரை காப்பாற்ற முயன்ற பாதிரியாரை அடித்து உதைத்து, பக்கத்து அறையில் போட்டு பூட்டியது.

பலாத்காரத்தின் போது, ரஜனியில் அலறல் அந்த கிறிஸ்த தேவாலயம் முழுவதும் எதிரொலித்துள்ளது. எனினும், அவரை காப்பாற்ற போலீசார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பலாத்காரம் முடித்ததும், அந்த கும்பல் ரஜனி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, உயிரோடு எரித்துக்கொன்றது.

ரஜினி ஓர் கிறிஸ்தவப் பெண் என நினைத்து அந்த கும்பல் இந்த வெறியாட்டத்தில் ஈடுபட்டுள்ளது. ஆனால், இந்து மதத்தைச் சேர்ந்த ரஜனி ஓர் கல்லூரி மாணவி. அவர் தனது படிப்பு தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வதற்காக அந்த அனாதை விடுதியில் பகுதி நேர ஊழியராக பணிபுரிந்து வந்தார்.

அனாதையான ரஜனியை, குழந்தை இல்லாத ஓர் தம்பதியினர் எடுத்து வளர்த்து வந்தனர். இந்நிலையில் தான், பட்டப்பகலில் கிறிஸ்தவ அனாதை விடுதிக்குள் பலாத்காரம் செய்து, எரித்துக்கொல்லப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, அந்த பகுதி மக்கள் கூறுகையில், "மாநில அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதேபோன்று வெளியே வராத பல கொடுமைகள் தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கின்றன" என்று தெரிவித்துள்ளனர்.

 
(மூலம் - வெப்துனியா)
 
 
 

 

http://in.tamil.yahoo.com/News/National/0810/04/1081004013_1.htm

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP