சமீபத்திய பதிவுகள்

புலிகளின் மௌனம் எதுவரை ?

>> Wednesday, August 12, 2009

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணிகள் கொழும்பில் தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடும் என்று புலனாய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
ஸ்ரீலங்கா அரச படைகளால் கைது செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலாளர் கே.பி.யை மீட்பதற்குரிய இராஜதந்திர முயற்ச்சிகள் தோல்வி அடையும் பட்சத்தில் இராணுவ ரீதியில் தமது எதிர்ப்பினை புலிகள் காண்பிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கொழும்பிலும் அதன் சுற்றுப் புறங்களிலும் உறங்கு நிலையில் வைக்கப்பட்டுள்ள தற்கொலை குண்டுதாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் இந்த தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
 
புலிகளின் தாக்குதல்கள் அரசியல் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இலக்குகள் மீதாகவோ அல்லது சாதாரண பொதுமக்கள் மீதானதாகவோ இருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
புலிகளுக்கு சார்பான சில வெளி நாடுகளின் தீவிர அழுத்தங்கள் காரணமாகவே இந்த உறங்கு நிலை உறுப்பினர்கள் தாக்குதல் நடத்துவது தவிர்க்கப்பட்டு வந்துள்ளதாகவும் எனினும் கே.பியின் கைதினை அடுத்து அந்த நாடுகளும் இலங்கை அரசாங்கத்தின் மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை கைவிட்டு ஜனநாயக வழிக்கு திரும்புவதற்கு எத்தனங்களை மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் ஜனநாயக போராட்டதையும் அழிப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்ச்சிகள் சில உலக நாடுகளை விசனமடையச் செய்துள்ளதாகவும் அதன் காரணமாக விடுதலைப் புலிகளை மீண்டும் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட அவை ஊக்கப்படுத்துவதாகவும் தெரியந்துள்ளது.
 
இந்த நிலையில் புலிகளின் மரபு சார் போராட்ட வலு மட்டுமே தற்போது தோற்கடிக்கப்பட்டுள்ளதாகவும் எனினும் அவர்களின் ஏனைய போராட்ட வடிவங்கள் முன்னரைவிட பலமானதாக மாறியுள்ளதாகவும் வெளிநாட்டு புலனாய்வு அமைப்பு ஒன்று இலங்கை அரசாங்கத்திற்கு தகவல் வழங்கியுள்ளது.
 
கே.பியை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கான இராஜதந்திர நகர்வுகளை ஏற்கனவே புலிகளின் வெளிநாட்டு பிரிவுகள் முன்னெடுத்து வரும் நிலையில் அவை பலனளிக்க தவறினால் வன்னி படை நடவடிக்கையில் தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு பழிவாங்கும் வகையில் பலத்த அழிவுகளை ஏற்படுத்தும் தாக்குதல்களை புலிகள் தெற்கில் நடத்தக் கூடும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
புலிகளின் தாக்குதல் நடைபெறக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதை பாதுகாப்பு விவாரங்களுக்கான அமைச்சரவை பேச்சாளர் ஹெகலிய ரம்புக்வெலவும் உறுதிப்படுத்தியுள்ளார்.
 
எது எப்படி இருப்பினும் புலிகளின் மௌனம் எப்போது கலையும் என்பதை காலம் தான் தீர்மானிக்கும்.

StumbleUpon.com Read more...

கே.பி.கைது நாடகமா?பரபரப்புத்தகவல் சம்மந்தப்பட்ட முக்கிய பெண்மணி யார்?

இந்த செய்தி உறுதிபடுத்தப்பட்டால் பிறகு பதிவு

செய்யப்படும்

StumbleUpon.com Read more...

கே.பி கைதுகுறித்து சர்வதேச மன்னிப்புச் சபை கண்டனம் வெளியிட்டுள்ளது

 
 

தமிழீழ விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்ட முறை சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானதென அனைத்துலக மன்னிப்புச் சபையின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளா ஸாம் சபாரி தெரிவித்துள்ளார்.
 
இலங்கை அரசாங்கத்திடம் குமரன் பத்மநாதனை மலேசியா ஒப்படைத்த விதம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
கைது செய்யப்படும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு அமையவே தண்டிக்கப்பட வேண்டும் எனவும், மாறாக இலங்கையிடம் ஒப்படைக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
 
எவ்வாறெனினும், மலேசியாவில் குமரன் பத்மநாதன் கைது செய்யப்பட்டாரா என்பது குறித்து அந்த நாடு இதுவரையில் தெளிவான விளக்கம் எதனையும் முன்வைக்கவில்லை.
 
சித்திரவதை செய்யப்படக் கூடிய சாத்தியமுடைய சந்தர்ப்பத்தில் குற்றவாளிகள் என்ற போதிலும் அவர்களுக்கு அடைக்கலம் வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
குமரன் பத்மநாதன் எவ்வாறு இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறித்த சந்தேகம் பெரும் சர்ச்சையை எற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

StumbleUpon.com Read more...

தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் சிறிலங்கா தோற்றுவிட்டது: அமெரிக்கா

தமிழர்களுடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் சிறிலங்கா தோற்றுவிட்டது: அமெரிக்கா
25 வருடகால போர் முடிவுக்கு வந்துவிட்ட நிலையிலும் சிறுபான்மையினரான தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ளும் விடயத்தில் சிறிலங்கா தோல்வி அடைந்துள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இது மீண்டும் வன்முறைகள் தலைதூக்குவதற்கு வழிவகுத்துவிடக்கூடும் என்றும் அது கூறியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க விவகார துணை அமைச்சர் றொபேர்ட் பிளேக், நேற்று திங்கட்கிழமை அசோசியேட் பிறஸ் செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

அனேகமாக அடுத்த ஜனவரி மாதம் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும் அரச தலைவர் தேர்தல் நடந்து முடியும் வரைக்கும் அரசியல் முரண்பாடுகளைத் தீர்ப்பதில் ஆர்வம் காட்டப் போவதில்லை என்று குறிப்பிட்டுக் காட்டியிருப்பது தன்னை விசனமடைய வைத்துள்ளது எனவும் பிளேக் குறிப்பிட்டுள்ளார்.

"2010 ஜனவரி மாதம் என்பதை விட்டுவிட்டு இன்னும் விரைவாக, தீர்வு நோக்கி முன்னேறுவதற்கான வழிவகைகளை அரசு கண்டறிய வேண்டும். ஏனெனில் மக்கள் நம்பிக்கை இழக்கும் ஆபத்து இருக்கிறது. அது பயங்கரவாதத்துக்கான புதிய உந்துதலை, பலத்தைக் கொடுக்கக்கூடும்" என்றார் பிளேக்.

80 ஆயிரத்துக்கும் ஒரு லட்சத்திற்கும் இடைப்பட்ட மக்கள் கொல்லப்பட்ட போர் முடிந்துவிட்ட பின்னர், தாமும் அரசியல் செயற்பாடுகளில் ஒரு பாகம் என்று தமிழ் மக்களை அரசு உணர வைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள சுமார் 3 லட்சம் தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசு நடமாட்ட சுதந்திரம் வழங்க வேண்டும் என்று பிளேக் கூறினார்.

அத்துடன், முகாம்களில் இருந்து 10 ஆயிரம் பேர் வெளியேறிச் செல்வதற்கு அரசு அனுமதியளித்துள்ளமை குறித்தும் இந்த மாத இறுதிக்குள் மேலும் 40 ஆயிரம் பேருக்கு அவ்வாறான அனுமதி வழங்கப்பட உள்ளமை தொடர்பிலும் குறிப்பிட்ட பிளேக், இருப்பினும் அந்த மக்கள் "தமது விருப்பத்துக்கு மாறாக அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்" என்றார்.

"நடமாடுவதற்கான சுதந்திரம் அவர்களுக்கு அவசியம். ஆனால் முகாம்களைவிட்டு வெளியேற அவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை" என்றார் பிளேக்.

மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் அமெரிக்கா நிபந்தனைகள் எதனையும் விதிக்காது எனக் கூறிய பிளேக், எனினும் புனர்நிர்மாணத்திற்கான நீண்டகால உதவிகள், மக்களின் மீள்குடியமர்வு மற்றும் அதிகாரப் பகிர்வு விடங்களில் அவர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலேயே தங்கியுள்ளது எனவும் தெளிவுபடுத்தினார்.

இதேவேளையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவுவதற்காக ஒரு கோடி 50 லட்சம் டொலர் பெறுமதியான உணவுப் பொருட்களை நேற்று வழங்கியுள்ளது.

முகாம்களில் இருந்து தமது சொந்த வீடுகளுக்குத் திரும்பிச் செல்பவர்களுக்கு வழங்குவதற்காகவே இந்த உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடு திரும்புபவர்களுக்கு ஆறு மாதங்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் இதன் மூலம் வழங்கப்படும் என அனைத்துலக மேம்பாட்டுக்கான அமெரிக்க நிலையம் தெரிவித்தது.


StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP