|
சமீபத்திய பதிவுகள்
மசூதிகளை கண்காணிக்கவில்லை : அமெரிக்கா மறுப்பு
மசூதிகளை கண்காணிக்கவில்லை : அமெரிக்கா மறுப்பு | |
| |
அமெரிக்காவில் உள்ள மசூதிகள், அமெரிக்கப் புலனாய்வுத் துறையால் கண்காணிக்கப்படுவதாக வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு கலிஃபோர்னியாவில் உள்ள மசூதிகளை, அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ. கண்காணித்து வருவதாகவும், இது முஸ்லிம்களின் உரிமைகளில் தலையிடுவதாகும் என்றும் முஸ்லிம் சமுதாயத் தலைவர் ஒருவர் கூறியதாக சாண் டியாகோ யூனியன் டிரிப்யூன் இதழில் செய்தி வெளியானது. மேலும் இவ்விவகாரத்தை அமெரிக்கக் காங்கிரசில் எழுப்ப வேண்டும் என்று அவர் கூறியதகவும் அதில் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள எப்.பி.ஐ. இணை இயக்குநர் ஜான் மில்லர் , தனிமனிதர்களின் சட்டபூர்வமான நடவடிக்கைகளைக் கண்காணிப்பது தங்கள் நோக்கமல்ல அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார். சட்டபூர்வமாக இயங்கும் முஸ்லிம் அமைப்புகள் எங்கிருந்தாலும், அவற்றைக் கண்காணிக்கவோ குறிவைக்கவோ மாட்டோம். வழிபாட்டுத் தலங்களின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கண்காணிப்பது எங்களின் நோக்கமல்ல. எப்.பி.ஐ.யின் தலைமை வழக்கறிஞர் பரிந்துரைகளின் அடிப்படையில்தான் தனிநபர் அல்லது குழுவின் நடவடிக்கைகள் கூர்ந்து கவனிக்கப்படவோ அல்லது புலனாய்வோ செய்யப்படும் என அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளார். | |
(மூலம் - வெப்துனியா) |
'இளைஞர்களைக் காக்க புகையிலை விளம்பரங்களை தடை செய்க'
'இளைஞர்களைக் காக்க புகையிலை விளம்பரங்களை தடை செய்க' | |
| |
உலகிலுள்ள 1.8 பில்லியன் இளைஞர்களைக் காப்பதற்கு, உடனடியாக அனைத்து நாடுகளும் புகையிலை விளம்பரங்களுக்கு முழுமையாக தடை விதிக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் (உ.சு.நி.) கேட்டுக்கொண்டுள்ளது. 'உலக புகையிலை எதிர்ப்பு தினம்' இன்று (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், உயிரைக் கொல்லும் புகையிலைப் பழக்கத்துக்கு இளைஞர்கள் பலரும் அடிமையாவதற்கு தூண்டுதலாய் இருக்கும் புகையிலை விளம்பரங்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்பதை உலக சுகாதார நிறுவனம் இந்த ஆண்டு வலியுறுத்த முடிவு செய்துள்ளது. பல கோடி ரூபாய் செலவில், உலகம் முழுவதுமுள்ள புகையிலை நிறுவனங்கள் செய்யும் விளம்பரங்கள், இளைஞர்களின் புகைப்பழக்கத்துக்கு தூண்டுகோலாய் அமைகின்றன என்பதை, அண்மைக்கால மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்திருப்பதை உலக சுகாதார நிறுவனம் தனது செய்திக்குறிப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. கவர்ச்சிக்கும், சக்திக்கும், எதிர்பாலினத்தவரை ஈர்க்கவல்லதாகவும் புகையிலை பங்காற்றுவதாக, தவறான போக்கில் விளம்பரங்கள் மூலம் இளைஞர்களை புகையிலை நிறுவனங்கள் வசியப்படுத்துவதாக உ.சு.நி. வெகுவாக சாடுகிறது. "புகையிலையை விட்டொழிவதாலும், அப்பழக்கத்தின் விளைவால் மரணமடைவதாலும் குறைகின்ற வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு, இப்பழக்கத்துக்கு இளம் வயதினர் அடிமையாவதற்கான வழிகளைப் பின்பற்றி, தங்களது வியாபாரத்தை புகையிலை நிறுவனங்கள் பெருக்கிக் கொள்கின்றன" என்கிறார், உ.சு.நி.யின் தலைமை இயக்குனர் டாக்டர் மார்கிரேட் சான். "புகையிலையை விளம்பரப்படுத்துதல், பிரபலப்படுத்துதல் போன்ற அனைத்து வடிவிலான நடவடிக்கைகளை தடை செய்தால்தான், உலக இளைஞர்களை காப்பற்ற முடியும்" என்று மார்கிரேட் திட்டவட்டமாக கூறுகிறார். உலக அளவில் பெரும்பாலும் 18 வயதிற்கு உள்ளாகவே புகைப்பழக்கத்துக்கு இளைஞர்கள் ஆளாகின்றனர். குறிப்பாக, 25 சதவிகிதத்தினர் 10 வயதுக்கு முன்பாகவே இப்பழக்கத்தைத் தொடங்கிவிடுகின்றனர். திரைப்படங்கள், இணைய தளங்கள், ஃபேஷன் பத்திரிகை இதழ்கள், இசை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகளின் மூலம் தங்களது விளம்பரங்களை இளைஞர்களைக்கு எளிதில் கொண்டு சேர்க்கிறது புகையிலை நிறுவனங்கள். பள்ளிச்சிறார்களும் இளம்பெண்களும்! உலக அளவில் 13 முதல் 15 வயது வரையிலான பள்ளிச் சிறார்களில் 55 சதவிகிதத்துக்கும் மேற்பட்டோர், புகையிலை விளம்பரங்களை நேரடியாக பார்க்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர். வளரும் நாடுகளிலோ 80 சதவிகித இளைஞர்களை புகையிலை நிறுவனங்கள் குறிவைப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மேலும், உலக அளவில் மாணவிகளிடத்திலும் புகைப்பழக்கம் துரிதமாக பரவிவருவது அதிகரித்துள்ளதாகவும் உ.சு.நி. எச்சரிக்கிறது. தற்போது, உலக அளவில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டோர் புகைப்பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர். ஆண்டுதோறும் உலக மக்கள் தொகையில், 5.4 மில்லியன் பேரின் உயிர்களை புகைப்பழக்கம் குடிக்கிறது! இந்தியாவில் இப்பழக்கத்தால் ஆண்டுக்கு ஏழத்தாழ 10 லட்சம் பேர் இறக்கின்றனர். உலக அளவில் அடுத்த 50 ஆண்டுகளில் 520 மில்லியன் மக்கள், புகைப்பழக்கத்துக்கு பலியாகும் அபாயம் உண்டு என்றும் உ.சு.நி. எச்சரிக்கிறது. | |
(மூலம் - வெப்துனியா |
பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது
பெண்கள் கவனத்திற்கு
மொபைல் கேமிராக்கள், கையடக்க வீடியோ கேமிராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப் படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
குறிப்பாக தன் கணவன் மற்றும் வீட்டில் உள்ள ஆண்கள் வெளிநாடுகளில் இருக்க தனியாக வெளியிடங்களுக்கு செல்லக் கூடிய, தனியான தமது காரியங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடிய நிலையில் உள்ள நம் சமுதாயப் பெண்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இருக்கவே, நம் சமுதாய பெண்களின் மத்தியில் இதுபற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பொது இடங்களில் காமிராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் காமிராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில் வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய நிலையில் பல குடும்பப் பெண்களின் படங்கள், வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். ஹிஜாப் அணியும் பெண்கள் இது பற்றி கவலைப்பட வேண்டாம் என்றாலும். பர்தா அணியாமல் வெளியே செல்லும் பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் :
பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில், மற்றும் கழிவறை, குளியலறைகளில் காமிராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும் சக மாணவர்கள் தங்களை காமிராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும் இன்று சகஜமாக நடந்து வருகிறது. இதிலும் பர்தாவைப் பேணும் மாணவிகள் தப்பித்தார்கள் என்று சொல்லலாம் மற்றவர்கள் கவனமாக எப்பவும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
பொதுக்கழிப்பிடங்கள், குளியலறைகள், ஹோட்டல் அறைகள் :
பொதுக் கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும்போது வேலை நிமித்தமாக அங்கு ஹோட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும், கழிப்பறை, குளியலறைகளிலும் காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும். தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் காமிராக்கள் அங்கு பொருத்தப் பட்டிருக்கலாம் கவனம் தேவை.
மருத்துவமனைகள் (ஆஸ்பத்திரிகளில்) கவனம் தேவை :
மருத்துவமனைகளுக்கு செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள். தக்க துணையுடன் செல்வது நல்லது, மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும் போதும், ஆடைகளை மருத்துவ காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும் போதும் கவனமாக இருங்கள், காமிராக்கள் எதுவும் பொருத்தப் பட்டிருக்கிறதா என்பதை கவனித்து உறுதி செய்து கொள்ளுங்கள், மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று எதாவது மருந்துகளை உட்கொள்ள சொல்லும் போதும் கவனம் தேவை உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும்.
இப்படித்தான் ஒரு மருத்துவர் தன் மருத்துவமனைக்கு கால்வலி என்று வந்த குடும்பப் பெண்களுக்கு மயக்க மருந்து கொடுத்து தனி அறைக்கு எடுத்துப் போய் அவர்களின் கற்பையும் சூறையாடி மானபங்கம் செய்து அவர்களை ஆடையின்றி படமெடுத்து, வீடியோவாகவும், புகைப்படமாகவும் இன்டர்நெட்டில் விற்பனை செய்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தான், இன்றைக்கு அந்த குடும்பப் பெண்களின் அலங்கோல புகைப்படங்கள், வீடியோக்கள் இன்டர்நெட்டில் வலம் வருவதை யாராலும் தடுக்க முடியவில்லை.
ஆகவே மருத்துவமனைகளுக்கு செல்லும் நமது பெண்கள் தக்க துணையுடனும் சென்று அங்கு மிக்க கவனத்துடனும் இது பற்றிய விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.
துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது அங்கு உடைகளைப் போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும். அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும் பெண்கள் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் அங்கு கண்டிப்பாக கேமிராக்கள் தங்களை கண்காணிக்ப் பொறுத்தப் பட்டிருக்கும், வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா, துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமிராக்கள் பொருத்தப் பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். காமிராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும். கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு இவைகளைகப்பற்றியும் நாம் தெரிந்து கொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும். ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக் காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும். இந்த உடை மாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் காமிராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கவனத்தில் கொண்டு செயல்படவும்.
நம்மையறியாமலேயே நம்மை படமெடுத்து, வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது. இதற்கு காரணம் கையடக்க காமிராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக் கொள்ளவும் தக்க விழிப்புணர்வை நம் சமுதாயப் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை எப்பவும் ஏற்படுத்த வேண்டும். - சகோதரர். சுலைமான்
ஆட்டி வைக்குது
செல்பாஸ்: சூப்பர் மார்க்கெட்டில் சிதறிக் கிடக்கும் பொருட்களை எடுத்து அடுக்கி வைக்கிறார் ஊழியர் ஒருவர். பொருட்கள் இப்படி கிடப்பதற்குக் காரணம் நிலநடுக்கம். ஐஸ்லாந்தின் செல்பாஸ் நகரில்தான் இந்த காட்சி.
ஐஸ்லாந்தின் தென்பகுதியில் நேற்று முன்தினம் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
புதுமை கார்
டோக்கியோ: போக்குவரத்து நெரிசல் என்பது உலகமெங்கும் உள்ள பிரச்சனை. வளர்ந்த நாடான ஜப்பானில் இது அதிகம். எனவே ஒரு நபர் மட்டும் பயணம் செய்யும் காரை உருவாக்கினால் என்ன என்று யோசித்த ஜப்பானியர்கள் அதனைக் கண்டுபிடித்தே விட்டார்கள்.
படத்தில் டோக்கியோ பல்கலைக்கழக மாணவர் அதனை ஓட்டிச்செல்கிறார். சி&காம்ஸ் என்பது இந்தக் காரின் பெயர். மின்சாரத்தில் 30 வினாடிகள் சார்ஜ் செய்தால் 20 நிமிடம் இந்தக் கார் செல்லுமாம்.
மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் இக்கார் செல்லும். சின்னக் கண் இருந்தாலே கண்டுபிடிப்பும் சிறியதாகத்தான் இருக்கும் போலிருக்கிறது!
இலங்கை தமிழ் பெண்ணுக்கு பிறந்த `அதிசய குழந்தை' முற்றிலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து உயிருடன் பிறந்தது
இலங்கை தமிழ் பெண்ணுக்கு பிறந்த `அதிசய குழந்தை'
முற்றிலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து உயிருடன் பிறந்தது
மெல்போர்ன், மே.31-
ஆஸ்திரேலியாவில், இலங்கை தமிழ் பெண் ஒருவருக்கு `அதிசய குழந்தை' பிறந்தது. முழு கர்ப்ப காலத்திலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே வளர்ந்து, உயிருடன் பிறந்துள்ளது.
இலங்கை தம்பதி
இலங்கையை சேர்ந்த ரவி தங்கராஜா-மீரா என்ற தம்பதியர், ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு காயத்ரி என்ற 6 வயது மகள் உள்ளார். இந்நிலையில் மீண்டும் மீரா கர்ப்பம் அடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், ஆஸ்திரேலியாவில் டார்வின் நகரில் உள்ள ஒரு தனியாÖëஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மகப்பேறு டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை எடுக்க தயாரானார்கள். அப்போது மீராவின் வயிற்றில் கண்ட காட்சி, டாக்டர்களை திடுக்கிட வைத்தது. குழந்தை, கர்ப்பப்பையில் இருப்பதற்கு பதிலாக, அதற்கு வெளியே உள்ள சினைப்பையில் இருந்தது. ஒரு சிலருக்கு இப்படி சினைப்பையில் கரு உருவாகி இருந்தாலும், அதை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, அந்த கருவை அழிக்க செய்து விடுவார்கள். ஏனென்றால், கர்ப்பப்பைக்கு வெளியே கரு வளர்ந்து பெரிதானால், அது தாய்க்கும், சேய்க்கும் உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும்.
உலகிலேயே முதல்முÛ
ஆனால், மீராவுக்கோ, முழு கர்ப்ப காலத்திலும் கர்ப்பப்பைக்கு வெளியிலேயே கரு வளர்ந்து குழந்தையாக உருவெடுத்துள்ளது. அது உயிருடனும் பிறந்து டாக்டர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்படி நடப்பது உலகிலேயே இதுதான் முதல்முறை என்று கருதப்படுகிறது. இதனால் அந்த பெண் குழந்தையை `அதிசய குழந்தை' என்று டாக்டர்கள் வர்ணிக்கிறார்கள். அந்த குழந்தைக்கு `துர்கா' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
பெண்ணின் சினைப்பை உற்பத்தி செய்யும் கரு முட்டையுடன், ஆணின் உயிரணு இணைந்து கரு உண்டாகும். இந்த கரு, கருக்குழாய் வழியாக பயணம் செய்து கர்ப்பப்பையை அடைந்து குழந்தையாக வளரும். இதுதான் இயல்பான நடைமுறை. ஆனால், மீராவுக்கோ கரு, கருக்குழாய் வழியாக கர்ப்பப்பைக்கு செல்லாமல், சினைப்பையிலேயே தங்கி குழந்தையாக வளர்ந்து விட்டது.
டாக்டர் பேட்டி
மீராவுக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஆன்ட்ரூ மில்லர் கூறியதாவது:-
சினைப்பையின் வலப்புறத்தில் குழந்தையை பார்த்தவுடன் என்னால் நம்ப முடியவில்லை. சினைப்பையின் தோல் மெல்லியதாக இருந்ததால், உள்ளே இருந்த குழந்தையின் தலை முடியையும், முக தோற்றத்தையும் என்னால் பார்க்க முடிந்தது. குழந்தை வளரும்போது சினைப்பை கிழியும் அபாயம் உள்ளது. எந்த நேரமும் சினைப்பை கிழிந்து, அதனால் தாய்க்கும், சேய்க்கும் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் மீராவுக்கு அப்படி நடக்கவில்லை. அவர் உண்மையிலேயே அதிர்ஷ்டசாலி.
மருத்துவ அதிசயம்
இன்னும் சொல்லப்போனால், அவருக்கு கர்ப்பப்பைக்கு வெளியே குழந்தை வளர்வதை ஆரம்பத்திலேயே கண்டிருந்தால், அதை கலைக்க சொல்லி இருப்போம். ஆனால் அப்படி நடக்காமல், அவர் நன்றாக குழந்தையை பெற்றுள்ளார். இது மருத்துவ உலகிலேயே ஒரு அதிசய சம்பவம். இப்படி ஒரு சம்பவத்தை இதற்கு முன்பு நான் கேள்விப்பட்டது கூட கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=416024&disdate=5/31/2008