சிங்களப் பெண்களிடம் பாலியல் வல்லுறவு
>> Monday, June 15, 2009
பௌத்தர்களின் புனிதப் பிரதேசமாக போற்றப்படும் அனுராதபுரி ஸ்ரீமஹாபோதி பிரதேசத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டு வரும் சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த பெண் சிப்பாய்கள் மீது காவல்துறை உயரதிகாரிகள் பாலியல் சித்திரவதை மேற்கொள்வதாக ஹெலதிவ பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
அனுராதபுரத்தில் உள்ள உயர் காவல்துறை அதிகாரிகளும் பிரபல அரசியல் தலைவர்களும் இவ்வாறு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச அரசியல்வாதிகளின் அழுத்தம் காரணமாக குறித்த பெண்கள் சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.ஸ்ரீமஹாபோதி பிரதேசத்தில் 60 பெண்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்களில் பெரும்பாலானோர் இவ்வாறு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.