சமீபத்திய பதிவுகள்

விடுதலைப்புலிகள் மீண்டும் ஒரு வான் தாக்குதல்?

>> Friday, March 20, 2009

தமிழீழ விடுதலைப் புலிகள் மேலுமொரு வான் தாக்குதலை நடத்தக் கூடும்: காவல்துறையினர் எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள், பகல் வேளையில் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அல்லது வர்த்தக மத்திய நிலையமொன்றை இலக்கு வைத்து மேலுமொரு வான் தாக்குதலை மேற்கொள்ளக் கூடுமென காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

திடீர் தாக்குதலொன்றை நடத்த புலிகள் திட்டமிட்டுள்ளதாக காவல்துறை தலைமையகம் தகவல் வெளியிட்டுள்ளது.


.மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

மகளோடு வல்லுறவு வைத்துள்ள இந்து,முஸ்லீம்,கிறிஸ்தாவர்

தாறுமாறான எண்ணங்கள் கொண்ட மனிதர்களுக்கு மதம்,நாடு,கலாச்சாரம் என்று ஒன்றும் இல்லை.அவர்கள் எந்த மதத்தவர்களாக இருந்தாலும் எந்த நாட்டவர்களாக இருந்தாலும்,எந்த கலாச்சாரமாக இருந்தாலும் ஓரே இனத்தை சேர்ந்தவர்களாகவே கருத வேண்டும்.அது மிருக இனம்.

இதில் அந்த மதத்தவர் செய்தார்,இந்த மதத்தவர் செய்தார்,இல்லை நாத்திகர் செய்தார் என்று சொல்லிக்கொள்ளும் கீழ்தரமான செயலை எந்த மதத்தவர்களும் தங்கள் சட்டைக் காலரை தூக்கிவிட்டு சொல்ல முடியாது என்பது என் கருத்து.இதற்கு உதாரணமாக சமீபக்காலங்களாக இதயத்தை பிழிந்தெடுக்கும் சம்பவங்கள் உலகத்தில் அடிக்கடி கேட்கப்படுகிறது.


தானே மாவட்டத்தில் உள்ள மிரா ரோட்டைச் சேர்ந்தவர்

பண்பாட்டுக்கும், கலாச்சாரத்துக்கும் பெயர் போன பாரத நாட்டில் மும்பை அருகே அரங்கேறி, இந்திய மக்களை அதிர்ச்சியில் மூழ்க வைத்துள்ளது. கணினியுகம், இன்டர்நெட் யுகம் என்று கூறப்படுகிற இந்தக் காலகட்டத்தில் பணத்தாசை பிடித்து, மூட நம்பிக்கைக்கு ஆளாகி, பெற்ற மகளையே சிதைத்த ஒரு வியாபாரியின் அலங்கோலம் இது.

வியாபார நஷ்டம்

மும்பையை அடுத்த தானே மாவட்டத்தில் உள்ள மிரா ரோட்டைச் சேர்ந்தவர் அந்த வியாபாரி. அவர் தொடர்ந்து வியாபாரத்தில் நஷ்டத்தை சந்தித்து வந்தார். இந்த நிலையில் தனக்கு 20 வருடங்களாக அறிமுகமான வில்லேபார்லேயை சேர்ந்த மந்திரவாதி ஹஸ்முக் ரத்தோடை கடந்த 2000-ம் ஆண்டு சந்தித்தார். தான் வியாபாரத்தில் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதை எடுத்துக் கூறினார். அத்துடன், இந்த நஷ்டத்தில் இருந்து மீண்டு வருவதற்கு என்ன வழி என்று யோசனை கேடடார்.

அப்போதுதான் அந்த வியாபாரியிடம் மந்திரவாதி, "உங்களது மூத்த மகளுடன் நீங்கள் செக்ஸ் உறவு வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பின்னர் உங்கள் நிலைமை மாறிவிடும். வாழ்வில் வளங்கள் வந்து சேரும்'' என்றார்.

துணை போன தாய்

இதை வியாபாரி நம்பினார். வீட்டுக்கு வந்தவர், மனைவியிடம் மந்திரவாதி சொன்ன விஷயத்தை போட்டு உடைத்தார். பணத்தாசை பிடித்த மனைவியும், "மந்திரவாதி சொன்னால் சரியாகத்தான் இருக்கும். நீங்கள் அப்படியே செய்யுங்கள். நான் பார்த்துக்கொள்கிறேன்'' என்று கூறினார்.

அதுமட்டுமின்றி, தனது மூத்த மகளை அழைத்து, "நமது குடும்பம் நல்ல நிலைமைக்கு வரவேண்டும், அப்பாவின் வியாபாரம் செழிக்க வேண்டும் என்றால் அவர் சொல்கிறபடி நீ நடந்து கொள்'' என்று கூறினார். அந்தப் பெண், அந்த நிமிடத்தில், தந்தை இப்படித்தான் நடந்து கொள்வார் என்று எதிர்பார்க்க வில்லை.

.மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்


மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலி

தனது சொந்த மகளையே அவளுடைய பதினைந்தாவது வயதில் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அலி என்பவர் திருமணம் செய்திருக்கிறார்.

அந்த திருமணத்திற்கு அவர் சொன்ன காரணம் “கடவுளின் கட்டளை”. அல்லா சொல்லிவிட்டார் என்று தன்னுடைய மனைவியிடம் சொல்லி திருமணம் செய்து கொள்ள அனுமதியும் வாங்கியிருக்கிறார் அவர்.

இந்த விஷயம் நடந்து ஐந்தாறு மாதங்களாகியிருக்கின்றன. இப்போது அந்தப் பெண் தன்னுடைய தந்தையால் தாயாகியிருக்கிறாள்.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்


ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் ஜோசப்

இருபத்து நான்கு வருடங்களாக தனது மகளை (எலிசபெத்) குகை போன்ற வெளிச்சமே நுழைய முடியாத அறைகளில் பூட்டி வைத்து பாலியல் வன்முறை செய்திருக்கிறான் ஒரு தந்தை.

சின்னச் சின்ன குறுகலான குகைகள் போன்ற ஐந்தடி உயரமே உள்ள, முழுவதும் அடைக்கப்பட்ட உறுதியான அறைகளில் அவள் அடைத்து வைக்கப்பட்டிருந்திருக்கிறாள். ரகசிய அறை மூலம் தந்தை அந்த அறைகளுக்குச் செல்ல முடியும். அதற்கான நவீன கதவையும், அதைத் திறக்கும் சங்கேத எண்ணையும் யாருக்கும் சொல்லாமல் மறைத்து வைத்திருந்த அந்த கொடூரமான தந்தைக்கு இப்போது வயது 73.இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நடந்தது வியன்னாவிலிருந்து 80 மைல் தொலைவில் இருக்கும் ஆஸ்திரியாவிலுள்ள ஆம்ஸெட்டன் பகுதியில்.

எலிசபெத் பதினெட்டு வயது சுட்டிப் பெண்ணாக இருந்தபோது அவளுடைய கைகளை கட்டி ஒரு இருட்டு அறைக்குள் பூட்டி அவளை பலாத்காரம் செய்த தந்தை, அவள் வீட்டை விட்டு ஓடி விட்டதாக நாடகமாடி எல்லோரையும் நம்ப வைத்திருக்கிறான்.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

சிங்கள ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்

முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள ராணுவத்தினர் பல முனைகளில் மேற்கொண்டு வரும் தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் எதிர்த் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.


இரணைப்பாலை செந்தூரன் சிலையடி பகுதியில் புதன்கிழமை சிங்களப் படையினர் மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தினர்.


இப்பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளின் கட்டளை மையங்களை நோக்கி முன்னகர்ந்த படையினர் மீதும் விடுதலைப் புலிகள் முறியடிப்புத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.


இதில் மிகக்குறுகிய இடைவெளியில் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் நடத்திய முறியடிப்புத் தாக்குதலில் 20 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.


ஆயுதங்களை கைவிட்டு விட்டு படையினர் பழைய நிலைகளுக்கு பின்வாங்கிச் சென்றுள்ளனர்.
.மேலதிக செய்திகளுக்கு கிளிக் செய்யுங்கள்

StumbleUpon.com Read more...

புல்மோட்டையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி 60 கிலோமீற்றர் வீச்சுக் கொண்ட பல்குழல் எறிகணைகளை வீசும் இந்திய ராணுவம்

 
இந்தியப்படைகளில் ஒருபிரிவினர் மணலாற்ரை காட்டுபகுதியை முற்றூகை யிட இன்னும் ஒரு பிரிவினர் புல்மோட்டையில்இருந்து புதுக்குடியிருப்பை நோக்கி , பல்குழல் ஏவுகனை , ஆட்லறீகலாலும்....
அறூபது கிலோ மிற்றர் சென்றூ தாக்கும் ஏவுகனைமூலமாகவும் (இவ் ஏவுகனை ஜந்து கிலோ மிற்றர் பகுதிகளய் முற்றாக தாக்கி துவசம் செய்யக்கூடியது இவ் ஏவுகனையில் இருந்து எந்த உயிரினமும் தப்பமுடியாது) இந்தியப்படைகள் தாக்குதலை நடத்திக் கேண்டு நகர்வை மேற்கோண்டுள்ளதாக நம்பகரமான சிங்கள அதிகாரி உறூதிப்படுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/view.php?2adsQG7DD4cc2e5ZLu6b04dc2gE9ZTcd0eb5Vj06e24d20C6QVtde0bd4Ph2gO4ce0ecuWnZB03b42fDpYUcae

StumbleUpon.com Read more...

சுதந்திர ஈழம் மலரும் நாள் அண்மிக்கிறது.... ஒரு ஆய்வு

 
ராஜபக்சவின் முட்டாள்தனத்தால் ஈழம் மலரும் நாள் மிக அருகாமையில் வந்து விட்டது. ஒழுங்காக சமாதான காலத்தில் தனியாட்சி நடத்திக் கொண்டிருந்த புலிகளை அப்படியே விட்டிருக்கலாம். அதை விடுத்து புலிகளை வீண் வம்புக்கு இழுத்து போரை சோனியாவும், ராஜபக்சவும் தொடக்கினார்கள். இப்போது அவர்கள் வைத்த பொறிக்குள் அவர்களே சிக்கிக் கொண்டார்கள். இராணுவம் மரணப்பொறிக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. புதை குழிக்குள் சிக்கியிருக்கும் இலங்கை அரசை இனி யாராலும் காப்பாற்ற முடியாது. யாராவது அப்படி முயன்றால் அவர்களும் சேர்ந்து உள்ளே போக வேண்டியதுதான்.

ஏனென்றால் போர் எதிர்பாராத வகையில் மிகவும் நீண்டு கொண்டே செல்கிறது. காங்கிரஸ் ஆட்சி முடிவதற்குள் போர் முடிவுக்கு வந்து விடும் என்று கணித்த இவர்களின் எண்ணம் தவிடு பொடியாகிவிட்டது. 50,000 இராணுவத்தினர், ஏராளமான ஆயுதங்களை வைத்து சண்டையிட்டால் எளிதாக வெற்றி பெற்று விடலாம் என்ற இவர்களின் எண்ணம் புலிகளின் தந்திரங்களில் சிக்கி மண்ணாகிப் போனது. ஒட்டப் பந்தயங்களில் முதலில் ஒடுபவர்கள் கடைசியில் மூச்சு வாங்கி திணறுவதைப் போல முதலில் எல்லா வளங்களையும் உபயோகித்த இராணுவம் இப்போது ஆளணி இல்லாமல் திணறுகிறது. புலிகளோ எல்லா வளங்களையும் அப்படியே காப்பாற்றி வைத்திருந்து இப்போது உபயோகப்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். கடந்த இரு வார காலமாக இராணுவம் செமத்தியாக அடி வாங்கிக் கொண்டுள்ளது. இத்தனை காலமும் புலிகளுக்கு மிகப் பெரும் இழப்பு. அதே சமயம் இராணுவத்திற்கு சிறிதளவு இழப்பு என்று கதை விட்டுக் கொண்டிருந்த இராணுவம் கடந்த சில நாட்களாக இரு தரப்பிற்கும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒத்துக் கொண்டுள்ளது.

இன்னும் புலிகளிடம் என்னென்ன இரகசியமான ஆயுதங்கள் உள்ளன என்று தெரியவில்லை. கனரக ஆயுதங்கள் தங்களிடம் இருப்பதை வெளிக்காட்டாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்து கடைசியில் அவைகளை உபயோகப்படுத்தக் கூடும். எப்படியாவது ஒரு இராணுவ வெற்றியை பெற்று விடலாம். அதன் பின்பு தொடர்ந்து குடும்ப ஆட்சியை நாமே நடத்தலாம் என்று ராஜபக்ச கணக்கு போட்டார். சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. சென்ற ஆண்டின் இறுதியில் ஏற்பட்ட திடீர் பொருளாதார நெருக்கடி வலிமையான நாடுகளையே ஆட்டம் காணச் செய்திருக்கிறது. அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே வல்லரசு நாடுகளே சிரமப்படுகின்றன. இந்த இலட்சணத்தில் சுண்டைக்காய் இலங்கை நாடு போரை நடத்திக் கொண்டிருக்கிறது. போர் பெருமளவு பணத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. அரசின் பொருளாதாரமோ அதல பாதாளத்திற்கு போய் விட்டது.

புலிகள் விட்டுச் சென்ற இடங்களை மட்டும் பிடித்து வைத்துக் கொண்டு வெற்றி பெறுகிறோம் என்ற மாய வலைக்குள் மக்களை ராஜபக்ச ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். எத்தனை நாளைக்குதான் இப்படி ஏமாற்ற முடியும்? கொல்லப்பட்ட இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை கணக்கு போடுவதற்கு கணணி கூட திணறும் போலிருக்கிறதே? இ ராணுவத்தினரின் குடும்பத்தினருக்கு அவர் எப்படி பதில் சொல்லப் போகிறார்? இலங்கை அரசின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டம் வேறு தொடங்கி விட்டது. மூழ்கிக் கொண்டிருக்கும் இலங்கை பொருளாதாரத்தை எப்படி தூக்கி நிறுத்தப் போகிறார்? . பிரபாகரன் வேறு நாட்டிற்கு ஓடி விட்டார் என்று சொல்லிக் கொண்டிருந்த ராஜபக்சதான் தாக்குப் பிடிக்க முடியாமல் வேறு நாட்டிற்கு ஓடப் போகிறார். ஏனென்றால் பலவீனத்தையும் பலமாக மாற்றும் சக்தி தேசியத் தலைவருக்கு உண்டு. இந்திய காங்கிரஸ் அரசின் ஆயுள் முடிந்து விட்டது. இனிமேல் இந்திய அரசும் இந்த போரை முட்டு கொடுத்து தூக்கி விட முடியாது. பணம், ஆயுதம் கொடுத்து உதவ முடியாது. புலிகளுக்கு இந்த பிரச்சினைகள் இல்லை. அவர்களுக்கு இராணுவத்தினரிடமிருந்து பிடுங்கப்படும் ஆயுதங்களே போதும்.

இலங்கை அரசு போரை வெற்றி கொள்ள வேண்டுமானால் புலிகளின் மரபுவழிப் படைத்திறனையும் ஆளணியையும் அழிக்க வேண்டும். புலிகளின் கட்டமைப்பு வசதிகள் உடைக்கப்பட வேண்டும். மக்களையும், புலிகளையும் தனித்தனியாக பிரிக்க வேண்டும். அது எதுவும் இதுவரை நடக்கவில்லை. அப்படியே இராணுவம் பிரிப்பதில் வெற்றி கண்டாலும் புலிகள் மீண்டும் கொரில்லா படையாக மாறுவார்கள். காலத்திற்கும் தலைவலியாய் இருப்பார்கள். வன்னி மக்களோ புலித்தலைவரை விட்டு அகல மறுக்கின்றனர். ராஜிவ் மரணத்திற்கு பின் எப்போதும் இல்லாத அளவு எழுச்சி தமிழக மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. 11 இளைஞர்கள் இதுவரை உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். புலம் பெயர் தமிழர்கள் பிற நாடுகளை முடக்கும் வண்ணம் மிகப் பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவில் புலம் பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களால் இப்போது இந்திய, இலங்கை அரசுகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது

போர் நீண்டு கொண்டே செல்வதால் இலங்கை இராணுவத்தினர் சோர்ந்து போய் உளவுரண் பாதிக்கப்பட்டு உள்ளனர். இராணுவம் கைப்பற்றிய பகுதிகளில் ஏற்கனவே புலிகளின் சிறப்புப் படையணிகள் ஊடுருவி விட்டனர். ஆளணி பற்றாக்குறையால் ஊர்காவல் படைதான் அங்கு பாதுகாப்புக்கு நிற்கப் போகிறது. மக்கள் எழுச்சியுடன் புலிகள் ஒரு பெரிய ஊடறுப்புத் தாக்குதலை நிகழ்த்தும் போது இலங்கை இராணுவம் இறுதி மூச்சை விடும். வெற்றிக்கனி நிச்சயம் பறிக்கப்படும். காலம் நமக்கு சாதகமாக கனிந்து வருகிறது, இந்த சந்தர்ப்பத்தை நாம் நழுவ விடக் கூடாது. ஆகவே தனியரசை நிறுவ நமது மக்கள் மன உறுதியை இழக்காமல் எழுச்சியுடன் தொடர்ந்து போராடினால் நிச்சயம் ஈழத்தை வென்றெடுக்கலாம். அந்த பொன்னாள் வெகு தொலைவில் இல்லை.

தமிழ்நாட்டிலிருந்து அதிபதி.

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

ஒரிசாவில் மக்களை தாக்கி அழிக்க முன்னனியில் நின்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்

ஒரிசாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சுட்டுக்கொலைமாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அட்டூழியம்
ஒரிசா மாநிலம் கந்தமால் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். தலைவர் பிரபாத் பானிகிராகி. இவர் கடந்த ஆண்டு விசுவஇந்து பரிஷத் தலைவர் லட்சுமணானந்த சரஸ்வதி கொலையை தொடர்ந்து நடந்த கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் ஆவார். கடந்த 14-ந் தேதிதான் ஜெயிலில் இருந்து ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்நிலையில், அவர் ருடிகுமா கிராமத்தில் தனது ஆர்.எஸ்.எஸ். நண்பரின் வீட்டில் தங்கி இருந்தார். அப்போது, துப்பாக்கி ஏந்திய 15 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் புகுந்து பிரபாத் பானிகிராகியை சுட்டுக்கொன்றனர். சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. கொலையாளிகளை பிடிக்க போலீசார் விரைந்தனர். ஆனால் அவர்களின் வருகையைத் தடுக்க தீவிரவாதிகள் மரங்களை வெட்டி சாலையில் போட்டனர்.

StumbleUpon.com Read more...

செவ்வாய்கிழமை தொடக்கம் புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற மோதலில் 600க்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பகுதியில் முன்நகர்வை மேற்கொண்டுள்ள படையினரை வழிமறித்து விடுதலைப்புலிகள் மேற்கொண்டுவரும் தாக்குதலில் இதுவரை 320க்கும் மேற்பட்ட படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 400க்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று புதன்கிழமை தொடக்கம் இன்று பிற்பகல் வரையில் இரணைப்பாலை மற்றும் புதுக்குடியிருப்பு-முல்லைத்தீவு வீதி,சாலை தெற்கு பகுதி என்பனவற்றிலேயே படையினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக விடுதலைப்புலிகளின் வட்டாரங்களை மேற்கொள்காட்டி அங்கிருக்கும் எமது ‘முரசம்’ செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP