சமீபத்திய பதிவுகள்

பல் பாதுகாப்பு...

>> Tuesday, May 25, 2010


பல் பாதுகாப்பு...
Dr. A. ஆர்த்தி பிரகாஷ்


                   சென்ற இதழில் பற்குச்சி கொண்டு பல் துலக்கும் பல நல் வழி முறைகளை நாம் அலசினோம்.

இதற்கு நீங்கள் அனைவரும் சரியான பல் துலக்கும் முறையினை அறிந்து, தெளிந்து, கடைப்பிடித்து, நற்பயனை அடைய ஆரம்பித்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

சரி...

பற்குச்சி உங்கள் பற்களில் உள்ள பிளேக்சை (Plaques) அகற்றிவிடும் என்று தப்போது நம்புகிறீர்களா?

அப்படி நீங்கள் நினைத்திருப் பீர்களேயாயின், தெரிந்துகொள்ளுங்கள். பற்குச்சியால் மட்டுமே பிளேக்சை முழுமையாக அகற்றிவிட முடியாது. வெளிப்புறங்களில் உள்ள பற்குச்சுகளால் தொடக் கூடிய பிளேக்சை மட்டுமே அகற்ற அது மிக மிக சரியான வழியாகும். பற்களுக்கு இடையே யுள்ள இடைவெளி களிலுள்ள பிளேக்சை பற்குச்சுகளால் தொடவும் முடியாது, முழுவதுமாக அகற்றவும் முடியாது.

எனவே, இந்த இடுக்குகளில் உள்ள பிளேக்குகளை அகற்ற, சிறப்பு சாதனங்கள் உள்ளன

தற்போது பலராலும் வாங்க முடிந்த, வாங்கி உபயோகிகக்கூடிய, சாதனமான இதை, சரியாக உபயோகிக்கும் முறைகளை பற்றி பார்ப்போமா..

அத்தகைய ஓர் எளிய, சிறிய, சீரிய சாதனமே பிளாசிங் (Flossing) எனப்படும். இது உலகெங்கும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டு வருகின்ற ஒன்றாகும். இதற்கு பயன்படுத்தப் படும் பொருளை (Dental floss)  டென்டல் பிளாஸ் என்பர்.

சில நாடுகளில் இம்முறையினை பற்கள் துலக்கும்போதே உபயோகிக்கப் பழகியுள்ளனர்.

இதனை உபயோகிக்க, சின்னஞ்சிறு சிறார்களை சிறு வயது முதலே பழக்கிவிடுகிறார்கள். அது என்ன பார்ப்போமா?

பிளாசிங் செய்யும் செம்மையான வழிகள்

மிக சிறிய நாடா போன்ற பொருளே டெண்டல் பிளாஸ் ஆகும். இது இன்று அனைத்து அங்காடி மற்றும் மருந்துக் கடைகளிலும் தாரளமாக கிடைக்கிறது. இதனைக்கொண்டு எப்படி நாம் நல்ல முறையில் பிளாசிங் செய்ய ஆரம்பிக்கலாம் என்பதை அறிவோம்.

ஒரு 45 செ.மீ. அல்லது 18 இஞ்ச் நீளம் கொண்ட பிளாசை எடுத்துக்கொண்டு அதனை 10 செ.மீ. அல்லது 4 இஞ்ச் நீளத்தில் இரு முனைகளிலும் நடு விரலில்சுற்றிக் கொண்டு கடைசி மூன்று விரல்களால் மடித்துப் பிடித்துக்கொண்டு 2 இஞ்ச் நீளத்தில் பிளாசை இரு ஆள்காட்டி விரல் கொண்டு பிடித்துக்கொண்டு பற்களின் இடையே செலுத்தி பற்களிலிருந்து ஈறுகளை நோக்கி நகர்த்தி தேய்க்கவேண்டும். மேலும் கீழும் மெதுவாக இம்முறையில் பிளாசை ஒவ்வொரு பல்லையும் சுற்றி மெல்ல வளைத்து மெதுவாக தேய்த்து விடவேண்டும். வேகமாகவோ, பலமாகவோ தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல் அது மெல்லிய ஈறுகளை அறுத்து ஊறு விளைவிக்கும்.

பிளாசினை உபயோகித்துக் கொண்டே மெதுவாக நகர்த்தி, ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு சுற்றி சுற்றி நகர்த்ததிக் கொள்ள வேண்டும். இது போல் அனைத்து பற்களின் இடுக்குகளிலும் பிளாசிங் செய்ய வேண்டும். நன்றாக தேய்த்தப் பின் பிளாசை முன்னும் பின்னும் நகர்த்திக்கொண்டே ஈறுகளுக்கு எதிர்புறமாக நகர்த்தி வெளியே எடுத்து விடலாம்.

பிளாசிங் செய்யாவிடில் என்ன நேரிடும்

பிளாசிங் செய்யாவிடில் இரு பற்களின் இடுக்குகளிலும் பிளேக்குகள் தங்கி கெட்டிப்பட்டுவிடும். இந்நிலையில் பல் மருத்துவரால் மட்டுமே அகற்ற முடியும் என்ற நிலைக்கு அதனை தள்ளியிருப்போம். நாளடைவில் பாக்டீரியாக்கள் இங்கு தங்கி ஈறுகளை உறுத்தி, ஊறுவிளைவித்து, பற்கள் வலுவிழந்து ஆடவும், எலும்புகள் தேயவும், வாய் நாற்றம் வீசவும் காரணமாகிவிடும்.

பற்களைத் தேய்ப்பதாலும், பிளாசிங் செய்வதாலும், பற்களுக்கு ஊறுவிளைவிக்கும் பாக்டீரியாக்களை வெளியேற்றி வாய் நாற்றம், ஈறு உபாதைகள், மற்றும் பல் இழப்பு இவைகளை தவிர்த்து, இனிய புன்னகையை வாழ்நாள் முழுதும் நமதாக்கிக்கொண்டு இன்புற்று வாழ்வோம்.

குறிப்பு

நிறைந்த முழு பயனை அடைய பற்களை முதலில் துலக்கி, பின்னர் உடனே பிளாசிங் செய்து முடித்து, அதன்பின் வாயினை நன்றாக கொப்பளித்து விடவேண்டும்.

உங்களின் வினாக்களுக்கு விடை தெரிய தொடர்பு கொள்ள  விலாசம்.

aarthiprakashdentalcare@gmail.com.


source:nakkheeran
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

”மீண்டும் யுத்தம்! தயாராகும் புலிப்படை” இந்திய – சிறிலங்கா தயாரிப்பில் புதிய திரைப்படம்!

 

"சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்" என்ற காட்சி சிறி லங்காவின் தென் பகுதிக் காடு ஒன்றில் தத்ரூபமாக எடுக்கப்படுகிறது.

காட்சியில் திருப்தி அமைந்த இயக்குனர் பாண்டியன் 'கட்' சொல்ல, காமெரா அடுத்த காட்சிக்குத் தயார் படுத்தப்படுகின்றது. "மீண்டும் யுத்தம்" என்ற இந்திய – சிறி லங்கா கூட்டுத் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தில் கேணல் ராம் அவர்களே நடிக்கிறார் என்பது ஆச்சரியமாக இருந்தது. இந்தத் திரைப்படம் பற்றி, அதன் இயக்குனர் திரு. பாண்டியன் அவர்களைக் கேட்டோம். "கடந்த ஒன்பது மாத காலமாகவே இந்தத் திரைப்படத்திற்கான கதை வசனத்தை எழுதிவிட்டு, பல தயாரிப்பாளர்களையும் தொடர்பு கொண்டேன்.

யாரும் இப்படி ஒரு றிஸ்க் எடுப்பதை விரும்பவில்லை. அதனால், இந்தத் திரைக் கதையை இலங்கையின் சிங்களத் திரைப்படத் தயாரிப்பாளர் ஒருவருக்கு அனுப்பி வைத்தேன். அவர் மூலமாக சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் திரு. கோத்தபாய அவர்களது அறிமுகம் கிடைத்தது. அவர்தான், "இந்தத் திரைப்படத்தில் கேணல் ராம் அவர்களை ஏன் நடிக்க வைக்கக் கூடாது?" என்று கேட்டதுடன், கேணல் ராம் அவர்களுடன் தொடர்பு கொண்டு அவரது சம்மதத்தையும் பெற்றுத் தந்தார் என்று கூறினார். "விடுதலைப் புலிகளின் கிழக்கு மாகாணத் தளபதியாக இருந்த கேணல் ராம் அவர்கள் எப்படி இதற்குச் சம்மதித்தார்?" என்று ஆச்சரியத்தோடு அவரிடம் கேட்டோம்.

"அதுதான் நட்பின் மகிமை…. முள்ளிவாய்க்காலில் விடுதலைப் புலிகளது படை அணிகள் நிர்மூலமாக்கப்பட்ட பின்னர், கேணல் ராம் அவர்கள் தனது அணியுடன் சிறிலங்கா படையிடம் சரணடைந்தார். அதன் பின்னர், அவர் தானாகவே வழங்கிய ஏராளமான தகவல்கள் சிறிலங்கா படையினருக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்ததால், அவரை திரு. கோத்தபாய அவர்கள் நேரடியாகச் சென்று சந்தித்துள்ளார். அதனால் ஏற்பட்ட தொடர்பு, நட்பாக மலர்ந்தது. அதுவே, இந்தப் படத்தில் கேணல் ராம் அவர்கள் நடிப்பதற்குச் சம்மதம் தெரிவிக்கக் காரணமாக இருந்தது" என்றார்.

"இந்தக் கதையும் விடுதலைப் புலிகள் பற்றியதா…?" "ஆம்…, விடுதலைப் புலிகள் பற்றியதுதான். முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குப் பின்னர்… தப்பிப் பிழைத்த போராளிகள் சிங்கள அரசைப் பழிவாங்கும் நோக்கோடு குழுக்கள், குழுக்களாகப் பிரிந்து சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறார்கள். அதனை முறியடிக்க, கேணல் ராம் அவர்கள் தலைமையில் சிங்கள இராணுவத்தால் நன்கு பயிற்றப்பட்ட ஒரு குழுவினர் களம் இறக்கப்பட்டு, அவர்கள் இந்தப் பழிவாங்கும் முயற்சிகளை முறியடிப்பதோடு, புலம் பெயர் தேசங்களில் சிறிலங்காவிற்கு எதிராக உருவாகி வரும் தமிழர் எழுச்சியையும் சிதைத்து முடிவுக்குக் கொண்டு வருகிறார் என்பதே கதை" "இது தமிழர்களுக்கு எதிரான கதை போல் இருக்கிறதே, இதை அவர்கள் ஏற்பார்களா…? இந்தப் படம் வெற்றி பெறுமா…?" என்று எமது சந்தேகத்தை அவரிடம் முன் வைத்தோம். "இது ஒரு யதார்த்தமான கதை.

இதைத் தமிழர்கள் ஏற்க மறுத்தாலும், சிங்களவர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைக்கும். ஒரே நேரத்தில் இந்தப் படம் தமிழ், சிங்களம், இந்தி எனப் பல மொழிகளில் எடுக்கப்படுகின்றது. இந்தப் படத்தில் பெரும்பாலும் தமிழர்களே நடிப்பதால், தமிழிலும் வெற்றி பெறும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது." என்றார் உற்சாகமாக. "கதையின் தளம் பற்றிச் சிறிது கூறுங்களேன்…" "கிழக்கு மாகாணத்தின் ஒரு காட்டில் நிகழ்வதான காட்சி தற்போது எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. அதில் நானும் தமிழகத்திலிருந்து வந்த பத்திரிகையாளர் பாண்டியனாக நடிக்கின்றேன்." என்றவர், திரைக் கதையின் சுருக்கம் அடங்கிய கொப்பியை எங்களிடம் நீட்டினார். "ஈழ மண்ணில் சுதந் திரக் காற்று வீசும் என்ற நம்பிக்கை இன்னமும் அற்றுப் போய்விடவில்லை.

கிழக்கு மாகாணக் காடுகளில் உள்ள மரங்களுடன் சேர்ந்து அந்த நம்பிக்கை உயர்ந்து நிற்கிறது. முள்ளி வாய்க்கால் கொடூரத்தின் ஓராண்டு நிறைவில்இ உலகத் தமிழர்கள் அனைவரும் ஈழத் துயர நினைவுகளில் மூழ்கி யிருக்கும் நிலையில்இ விடுதலை நம்பிக்கை வீழ்ந்துவிடவில்லை" "2009 மே 17-க்குப் பிறகுஇ ஈழமக்களின் வாழ்வையும் விடு தலைப் போராட்ட நிலவரத்தையும் இலங்கை ராணுவக் கட்டுப்பாட்டை மீறி அறிந்து வந்து சொல்வதற்கான வாய்ப்புகள் இல்லாததால், புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் பரிதவிப்போடு இருந்தார்கள். அந்த வேனையில் பாண்டியன் என்ற பத்திரிகையாளருக்கு, ஐரோப்பிய நாடுகளில் புலிகளின் முக்கிய தளபதியாக விளங்கும் சங்கீதன் மூலமாக ஓர் அழைப்பு வருகின்றது. ஈழ நிலவரத்தை நேரில் அறிந்துவர அவருக்கான ஏற்பாடுகளைச் செய்திருப்பதாகத் தெரிவித்த சங்கீதன், கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளும்படி அறிவுறுத்துகிறார்."

"உரிய அனுமதியுடனும் ஆவணங்களுட னும் இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு விமானப் பயணம் மேற்கொண்ட பாண்டியன், அதற்கடுத்த சமிக்ஞைக்காக காத்திருக்க வேண்டியதாயிற்று. அதன்பின், திருகோணமலைக்கு வருமாறு அவருக்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. சாலை வழியே திரிகோண மலைக்குப் பயணித்தார் பாண்டியன். வெட்ட வெளியாய் காட்சியளிக்கும் தமிழர் பகுதிகளின் துயரங்கள் கண்ணில்படுகின்றன. சிங்கள ராணுவத்தின் வாகனங்கள் ரோந்து சுற்றிய படியே இருக்கின்றன."

"விடியற்காலை நேரத்தில் திருகோணமலைக்குச் சென்ற பத்திரிகையாளர் பாண்டியனை அழைத்துச் செல்ல ஒரு வேன் வருகிறது. அந்த வேனில் இருந்தவர்கள் இளைஞர்கள். சிவில் உடையில்தான் இருந்தார்கள். ஆனால், அவர்கள் விடுதலைப்புலிகள். அவரை ஏற்றிக் கொண்ட வேன், கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சுற்றுலாதலத்திற்குச் செல்கிறது. பக்கத்திலேயே ஒரு ராணுவ முகாம். ஜீப்புகளில் சிங்கள ராணுவத்தினர் சுற்றிச் சுற்றி வருகிறார்கள். வேனில் இருந்த இளைஞர்கள் பதற்றப்பட வில்லை. அந்த சுற்றுலாதலத்திற்கு வந்திருக்கும் மற்ற வாகனங் களுடன் ஒன்றாக விடுதலைப் புலிகளின் வேனும் செல்கிறது. உள்ளே இருந்த இளைஞர்களிடம் வாக்கி-டாக்கி இருக்கிறது. அதன் மூலமாக அவர்களுக்கு கட்டளைகள் வந்தபடியே இருக்க, இவர்களும் பதிலளித்துக் கொண்டே பயணிக்கிறார்கள்."

"ஒரு குறிப்பிட்ட இடத்தில் வேன் நிற்கிறது. "அது எந்த இடம் என்று அவருக்குத் தெரியவில்லை. இறங்கியவுடன், 'வாருங்கோ..' என்றபடி அவரை அந்த இளைஞர்கள் மலைக்காட்டுக்குள் அழைத்துச் சென்றார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத காடு. மரங்கள், அடர்த்தியான புதர்கள் என வெளியே இருந்து வருபவர்களுக்கு வழி தெரியாமல் திணறடிக்கும் வகையில் இருந்த மலைக்காட்டில், இளைஞர்கள் வழிநடத்த 4 கி.மீ. தூரத்திற்கு அவரை அழைத்துச் சென்றார்கள். புதிய அனுபவம் என்பதால் அந்தச்சூழலும் நடைப்பயணமும் சற்று சிரமமாகத்தான் இருந்தது." "காட்டுக்குள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் பாண்டியனைக் காத்திருக்கச் சொல்கிறார்கள்.

அந்த இடத்தில் 50 பேருக்கு குறையாத அளவில் தமிழர்களின் படை இருக்கிறது. உலக நாடுகளை வியக்க வைத்த போராளி இயக்கமான விடுதலைப் புலிகளின் உடையுடன் முதன்முதலாக புலிப்படை யினரைப் பார்க்கிறார் பாண்டியன். அவர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றன. ஏ.கே.47 துப்பாக்கி, கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள், கண்ணி வெடிகள் இந்த ஆயுதங்களுடன் மனத் தைரியம் என்கிற வலிமையான ஆயுதத்தையும் கொண்டவர்களாக அவர்கள் இருக்கிறார்கள்." "புலிப்படையில் உள்ள ஒவ்வொருவரின் முதுகிலும் ஒரு பை இருக்கிறது.

அது, அவர்கள் ஓரிடத்திலேயே நிலைகொண்டிருப்பதில்லை என்பதையும் மலைக்காடு முழுவதும் சுற்றி வந்தபடியே இருக்கிறார்கள் என்பதையும் காட்டுகிறது. அவர்களின் உற்சாக-உத்வேக மந்திரம் பிரபாகரன். விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பெயரைச் சொன்னாலே அவர்களின் நாடிநரம்புகளில் முறுக்கேறுகிறது. காட்டில் அவர்கள் மேற் கொள்ளும் பயிற்சிகளில் பிரபாகரன் பாணியை பார்க்க முடிகிறது. குறைந்த அளவிலான போராளிப் படையை வைத்துக்கொண்டு ஒரு நாட்டின் ராணுவத்தை எதிர்கொண்டு முறியடிப்பது எப்படி என்கிற பயிற்சி களை அவர்கள் மேற் கொள்கிறார்கள். பயிற்சிகள் அனைத்தும் கடுமையான வை. காட்டுக்குள் போதிய வசதிகள் இல்லாத நிலையிலேயே இந்தப் பயிற்சிகள் தொடர்வதை புகைப்படம் எடுக்க அனுமதி கேட்கிறார் பாண்டியன்.

"நீங்க எங்களை மன்னிக்கணும். தற்போதைய சூழ்நிலையில் படம் எடுக்க ஏலாது. எங்கட நிலைமையை நீங்க புரிஞ்சவராய் இருப்பீர்கள் என நினைக்கிறோம்" என மென்மையான மறுப்பு வெளிப்படவே, புகைப்படம் எடுப்பதைத் தவிர்த்துவிடுகிறார் பாண்டியன். "ரொம்ப நன்றிங்க அய்யா… ஏதேனும் ஒரு படம் வெளியே போய் பிரசுரமாகி, அதன்மூலம் எந்தக் காடு, எத்தனை நபர்கள் என்ற பின்புலம் தெரிந்து போகுமென்டால், மீண்டும் விடுதலைப் போராட்டத்தை வலிமைப்படுத்தும் எங்களின் முயற்சிகள் தோற்றுப்போகும்" என்கிறார்கள் புலிகள்.

"பயிற்சிகளுக்குப் பிறகு, காட்டுப்பகுதியிலேயே சமையல் நடக்கிறது. அதிகம் புகை வராத மரக்கட்டைகளைக் கொண்டு கச்சிதமாக அடுப்பு மூட்டி, உணவு தயாரிக்கிறார்கள். 'தாய்த் தமிழகத்திலிருந்து வந்திருக்கிற பத்திரிகை சகோதரருக்கு நம்ம ஊரு சொதி செஞ்சு கொடுங்கோ" என்கிறார் ஒரு புலி. "சகோதரர் கேட்பதை செய்து கொடுப்போம்" என்கிறார் இன்னொரு புலி. போராட்டக்களத்திலும் அவர் களின் விருந்தோம்பல் பண்பு குறையவில்லை. "எங்கட பண்பும் வீரமும் ஒருநாளும் மறைந்து போகாது" என்கிறார்கள் புலிகள்." "அவர்களில் ஒருவர் கைக்கடிகாரத்தைப் பார்க்கிறார்.

பிறகு, தனது வாக்கி-டாக்கியில் யாரிடமோ பேசிவிட்டு, தயாராக இருங்கள் என்கிறார். அங்கிருந்த 50 புலிகளும் பொசிஷன் எடுத்து நிற்கிறார்கள். சிலர் தரையில் படுத்து, தலையை மட்டும் உயர்த்தி, துப்பாக்கியால் குறிபார்த்தபடி பொசிஷன் எடுக்கிறார்கள். சிலர், மலைக்காட்டில் உள்ள உயர்ந்த மரங்களில் ஏறி, அதன் கிளைகளில் படுத்தபடி, குறி பார்க்கிறார்கள். எல்லோரும் எதிர்பார்ப்புடன் இருந்த நேரத்தில், பத்திரிகையாளர் பாண்டியனை நோக்கி வேகமாகவும் கம்பீரமாகவும் வருகிறது அந்த உருவம்."

"நடுத்தர வயது. நன்றாக ஷேவ் செய்யப்பட்ட முகம். பிரபாகரன் போலவே இடுப்பில் பெல்ட் அணிந் திருக்க, அதில் துப்பாக்கிகள் இருக்கின்றன. பாதுகாப்புக்கு, துப்பாக்கி ஏந்திய புலிகள். பாண்டியனை நெருங்கி வந்து, "வாருங்கோ… வாருங்கோ.. உங்களைத்தான் எதிர்பார்த்திருந்தேன்" என்று கைகொடுத்த அவர், கேணல் ராம். கிழக்கு மாகாணமான அம்பாறையின் விடுதலைப்புலிகள் தளபதி."

"புலிகளின் ராஜதந்திர உத்திகளின் படி, நான்காம் ஈழப்போரின் கடைசி கட்டத்தில் கேணல் ராம் தலைமையி லான படை பங்கேற்கவில்லை. கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பு வகித்த அவரையும், வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ் மாவட்டத்திற்குப் பொறுப்பு வகித்த நகுலனையும் தங்கள் படையினருடன் பத்திரமாக இருக்கும்படி உத்தரவிட்டார் பிரபாகரன். தன்னிடமிருந்து கட்டளைகள் வந்தபிறகு களத்திற்கு வரலாம் என்பதுதான் அவரது உத்தரவு." "2009-ம் ஆண்டு மார்ச் மாதத்திலேயே 4000 பேருடன் இருவரது படைகளும் காட்டுப் பகுதிகளுக்குள் நுழைந்துவிடுகிறது.

முள்ளிவாய்க்கால் தாக்குதல்களின்போது, தலைமையின் கட்டளைப்படி இவர்கள் காட்டில்தான் இருந்தார்கள். அதனால்தான், இப்போதும் சிங்கள ராணுவத்திற்கு சவாலாக இருக்கிறார்கள்." "பாண்டியனுக்கு கைகொடுத்த கேணல் ராம், "யுத்தத்தின் கடைசி நிமிடம் வரை தலைமை எங்களை அழைக்கவில்லை. காட்டுக்குள் இருந்து போரைத் தொடரவேண்டும் என்பது விருப்பமாக இருக்கும். எங்களுடன் இருந்த 4000 புலிகளுடன், முள்ளி வாய்க்கால் தாக்குதல்களின்போது, வெளியேறி வந்த புலிகளையும் சேர்த்து தற்போது 6000 புலிகளாக பலம் பெற்றிருக்கிறோம். பெண் புலிகளும் இருக்கிறார்கள். சிங்கள ராணுவத்தின் கண்கள் எங்களைத் தேடுகின்றன. நீங்கள் காட்டுக்குள் 4 கி.மீ. சிரமப்பட்டு நடந்து வந்திருப்பீர்கள். நான் 20 கி.மீ. நடந்து வந்து உங்களை சந்திக்கிறேன். இது 100 கி.மீ.க்கு பரந்திருக்கும் மலைக்காடு. இதுதான் எங்களுக்கான பாதுகாப்பு கேடயம் என்கிறார்"

"எங்களிடம் உள்ள தொலைத்தொடர்பு வசதிகள் மூலம் சர்வதேச அளவில் அழைப்புகளைப் பெற முடிகிறது. பல நாட்டு உளவுப்பிரிவினரும் எங்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியில் இருக்கிறார்கள். எங்களது செயல்பாடுகளை மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கிறது இலங்கை ராணுவம்."

"செல்போன், வாக்கி-டாக்கி ஆகியவற்றை ஒட்டுக்கேட்டு நாங்கள் எந்தப் பகுதியில் நடமாடுகிறோம் என்பதை தெரிந்துகொண்டு, தாக்குதல் நடத்த நினைக்கிறார்கள். நாங்கள் இப்போது பாரிய அளவிலான தாக்குதலுக்குத் தயாராக இல்லை. இப்போதைய எங்கள் நோக்கம், புலிகளை ஒருங்கிணைத்து இயக்கத்தை வலிமைப்படுத்துவது, படைபலத்தையும் ஆயுதபலத்தையும் பெருக்குவது. அதன்பின்னர், தலைமை வழியில் செயல்படுவோம்."

"சிங்கள ராணுவம் எம்மை வேட்டையாட நினைக்கிறது. கடந்த வாரத்தில் ராணுவம் ஒரு படையை காட்டுக்குள் அனுப்பியது. அப்போது நடந்த சண்டையில் ராணுவத்தினர் 15 பேரை நாங்கள் சுட்டுக்கொன்றோம். எங்கள் தரப்பில் 12 பேர் பலியானார்கள். புலிகளின் உயிரிழப்பை மட்டுப்படுத்தி, சிங்கள ராணுவத்தை திணறடிக்கச் செய்யும் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறோம்" என்று சொன்ன கேணல் ராமிடம், பத்திரிகையாளர் பாண்டியன் கேள்விகளை முன்வைத்தார். ஈழப்பிரச்சினையின் இன் றைய நிலவரம் குறித்த மிக முக்கியமான அந்த கேள்வி களுக்குப் பதிலளிக்கத் தயாரானார் கேணல் ராம்" என்று கதை தொடர்கிறது.

"இந்தக் கதையில் வரும் காட்சிகள் நம்பக் கூடியதாக இல்லையே…?" "இது ஆரம்பக் காட்சிகள். இடை வேளைக்குப் பின்னர் காட்சிகள் விறு விறுப்பாக இருக்கும். முதலில், விடுதலைப் புலிகளின் சிதறுண்ட அணிகளை நம்ப வைக்க இப்படியான காட்சிகள் முக்கியம். ரஜனி, விஜயகாந்த், விஜய், அஜித் என நூற்றுக்கணக்கான பயில்வான் போன்றவர்களை ஒத்தை ஆளாக நின்று அடித்துத் துவைக்கும் காட்சிகளை விசிலடித்து ரசிக்கும் எங்கள் மக்கள் இதையும் ரசிப்பார்கள்.

அத்துடன், இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கான பெரும் நிதியினை சிறிலங்கா அரசும், கணிசமான தொகையை இந்திய அரசும் ஏற்றிருப்பதால், தயாரிப்பாளர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள்." என்று நம்பிக்கையோடு கூறிய பாண்டியன், காட்சிகளின் புகைப்படங்களை எம்மிடம் நீட்டினார். "இது, நக்கீரன் கோபால் சந்தணக் கடத்தல் வீரப்பனைப் பேட்டி கண்ட காட்சிகளை நினைவு படுத்துகிறதே…?" படங்களைப் பார்த்துவிட்டு ஆச்சரியத்தோடு கேட்டோம்

"நக்கீரன் கோபால்தான் இந்தக் கதைக்கான கருவை என்னிடம் கூறினார். அவர் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் இருப்பதால், நக்கீரன் சஞ்சிகையில் பல விபரங்களை வெளியிட்டு வருகின்றார். அவரது எண்ணப்படியேதான் இந்தக் காட்சிக்கான இடம், அமைப்பு தெரிவு செய்யப்பட்டது" என்றார் பெருமிதத்துடன்.

"உங்கள் முதல் படத்தையே, இப்படிப் பிரமாண்டமாக எடுக்கிறீர்களே… உங்கள் படம் வெற்றி பெறவும், கேணல் ராம் அவர்கள் சிறந்த நடிகருக்கான விருதைத் தட்டிக் கொள்ளவும் வாழ்த்துக்கள்!" என்று கூறி விடை பெற்றோம்.

சூரிய புத்திரன்.

source:puthinamnews

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஸ்ரீராம் சேனாவின் இந்துத்வா ரேட் அம்பலம்! BREAKING NEWS!!


கலவரம், வாடகைக்கு

"கலியுகத்துல நாடு கெட்டுப் போச்சே"ன்னு அவாள்கள் அவ்வப்போது சபிப்பது வழக்கம். இந்த கலியுகப் புலம்பலில் மற்ற பிரச்சினைகளை விட இந்துத்தவத்திற்கு மட்டும் டன் கணக்கில் வில்லங்கம் வந்து சேர்கிறது. நித்தியானந்தா பள்ளியறை பலாபலன்களால் நாடே சிரிப்பாய் சிரித்த அதே பெங்களூருவில் இப்போது சீசன் 2வாக சிறிராம் சேனாவின் விவகாரம் நாடு முழுவதும் தொலைக்காட்சிகளில் பல்லிளித்துக் கொண்டிருக்கிறது.

ஜனவரி, 2009 இல் மங்களூரு பஃப்பில் குடித்துக் கொண்டிருந்த பெண்களைத் தாக்கி விரட்டியதில் இந்திய அளவில் ஒரே நாளில் பிரபலமானது சிரிராம் சேனா. அதற்கு முன் சிறுபான்மையினரை எதிர்த்து பல கலவரங்கள் செய்திருந்தாலும் மேட்டுக்குடி சீமாட்டிகளுக்கு ஏற்பட்ட அவமானமே பல தேசிய ஊடகங்களுக்கு கவலையாக இருந்தது. அந்தக் கவலையை சேனாவும் இலவசமான பிரபலமாக நன்கு அறுவடை செய்துகொண்டது. இப்போது இதன் தலைவர் பிரமோத் முத்தாலிக் காசு வாங்கிக் கொண்டு கலவரம் செய்வதாக ஒரு கேமராவில் ஒப்புக் கொண்டிருக்கிறார். தெகல்கா – ஹெட்லைன்ஸ் டுடே இணைந்து நடத்திய ஸ்டிங் ஆப்பரேஷனில் இந்த வானரங்கள் வகையாய் சிக்கியிருக்கின்றன.

இந்த நடவடிக்கையின் படி ஒரு நிருபர் டம்மி ஆர்ட்டிஸ்ட்டாக அதாவது ஓவியனாக நடித்து முத்தாலிக்கை அணுகியிருக்கிறார். அதன்படி அவரது ஓவியக் கண்காட்சியை முத்தாலிக்கின் ராமசேனா வானரங்கள் அடித்து கலவரம் செய்தால் பிரபலமாகிவிடலாமென்றும், அதற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்பதே டீல். இதற்காக முத்தாலிக்கை மட்டுமல்ல அவரது இயக்கத்தின் மற்ற தலைவர்களையும் அந்த நிருபர் பார்த்திருக்கிறார். அவர்களும் அந்த கண்காட்சி முசுலீம்கள் இருக்கம் பகுதியில் இருந்தால் பிரச்சினையை பெரிதாக கொண்டு செல்லலாமென்று வழிகாட்டியிருக்கிறார்கள்.

உரையாடலிலிருந்து சில பகுதிகள்:

நிருபர்: நான் பிரபலமானால் எனது வியாபாரம் வளர்வதற்கு உதவியாக இருக்கும். இதைச் செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு ஆட்கள் தேவைப்படுவார்கள், எனக்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லுங்கள். இந்த கலவரத்திற்காக நான் போலீசில் புகார் கொடுக்கமாட்டேன், இது நமக்குள்ளே மட்டும் நடக்கும் விசயம். முன்பணமாக எவ்வளவு தரவேண்டுமென்று சொல்லுங்கள், கொடுத்துவிடலாம்.

(இந்த வேலையைச் செய்வதற்கு தயாரான முத்தாலிக் அதற்கான ஏற்பாடுகளை பெங்களூருவிலேயே செய்துவிடலாமென்று சம்மதிக்கிறார்.)

நிருபர்: ஐயா, இதை நான் உறுதி செய்து கொள்ளவேண்டும். உடனடியாக இல்லையென்றாலும் சில நாட்கள் கழித்துக் கூட நான் வருகிறேன். இதற்கு மொத்தமாக எவ்வளவு செலவு பிடிக்குமென்று தெரிந்தால் நான் அதற்கு ஏற்பாடு செய்து விடுவேன்.

முத்தாலிக்: நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் எங்களது கிளைத் தலைவர்…..

நிருபர்: பெங்களூருவில்…?

முத்தாலிக்: ஆமாம், பெங்களூருவில்தான். அவர், வசந்த் குமார் பவானி, பலமான கை. அவரோடு அறிமுகமாகியிருக்கிறீர்களா?

(இறுதியில் முத்தாலிக் கலவரத்தை நடத்துவதற்கு ஒப்புதல் தந்த உடன் மிச்சிமிருந்த ஒரே வேலை தொகையை நிர்ணயம் செய்வதுதான். அதற்கு முத்தாலிக் தனது தளபதிகளான பிரசாத் அட்டாவர் (சேனாவின் தேசிய துணைத் தலைவர்), மற்றும் வசந்த்  குமார் பவானி (சேனாவின் பெங்களூரு தலைவர்) இருவரையும் சந்திக்க சொல்கிறார். இதில் அட்டாவர் என்பவனை சிறையில் சந்திக்கிறார் நிருபர்.)

நிருபர்: நாங்கள் பதினைந்து இலட்சமாக கொடுத்து விடுகிறோம்.

அட்டாவர்: ஆமாம் ஆமாம்? இருந்தாலும் நான் அதை கணக்கட்டு சொல்கிறேன்.

(நிருபர்கள் அட்டாவரை மங்களூர் சிறையில் இருமுறையும், பெல்லாரி சிறையில் ஒரு முறையும் சந்தித்து பேசுகிறார்கள். அட்டாவரும் மங்களூர் பஃப்பில் நடத்தப்பட்ட தாக்குதலைப் போல செய்துவிடலாமென்று உறுதி கூறுகிறார்.)

அட்டாவர்: எவ்வளவு பணம் வேண்டுமென்று சொல்வேன்.

நிருபர்: கலவரத்திற்கு எத்தனை நபர்களை கொண்டுவருவீர்கள்?

அட்டாவர்: ஐம்பது.

நிருபர்: ஆக கலவரம் செய்ய ஐம்பது பேர் வருவார்கள்?

அட்டாவர்: நிச்சயமாக. மங்களூர் பஃப்பில் நடந்த மாதிரிதான்.

(ஆனால் கலவரத்தை எப்படி பக்காவாக நடத்த வேண்டுமென்று சொன்னவர் சேனாவின் பெங்களூரு தலைவர் பவானிதான். அவரது உரையாடலைப் பாருங்கள்.)

பவானி: கண்காட்சியைத் திறப்பதற்கு மும்தாஸ் அலியைக் கூப்பிட முடியுமா?

நிருபர்: யார் அது?

பவானி: அவர்தான் கர்நாட வக்ப் போர்டு உறுப்பினர்.

(விசயம் இப்படி நல்லபடியாக போய்க் கொண்டிருந்தாலும் முத்தாலிக் தனது இமேஜூக்கு பிரச்சினை வரக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார்.)

முத்தாலிக்: இதில் நான் நேரடியாக சம்பந்தப்பட முடியாது. இந்துத்துவ விழுமியங்களின் ஆதரவாளனென்று சமூகத்தில் எனக்கு ஒரு இமேஜ் இருக்கிறது.

நிருபர்: ஆனால் ஐயா, இது யாருக்கும் தெரியாது.

முத்தாலிக்: எல்லாம் சரிதான். ஆனால் எனது மனசாட்சி நான் ஏதோ தவறு செய்கிறேனோ என்று எச்சரிக்கிறது.

நிருபர்: எம்.எப். ஹூசைன் மற்றும் மற்றவர்களது கண்காட்சியில் என்ன செய்தீர்களோ அது போல.

முத்தாலிக்: ஆமா ஆமாம்.

நிருபர்: அதே மாதிரி என் கண்காட்சியிலும் நடக்க வேண்டும். அது பெங்களூருவின் சிவாஜி நகரிலோ, மங்களூருவிலோ இல்லை முசுலீம்கள் இருக்கும் எப்பகுதியிலும் இருக்கலாம்.

முத்தாலிக்: என்ன மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறார்கள்? அது மங்களூர், பெங்களூரு இரண்டிலும் செய்ய முடியும்.

நிருபர்: அறுபது இலட்சம் போதுமா?

முத்தாலிக்: இதை யார் உங்களுக்கு சொன்னார்கள்?

நிருபர்: வசந்த்ஜியுடன் பேசியிருக்கிறோம்.

முத்தாலிக்: பணத்தை நான் உறுதி செய்ய முடியாது. அது அவர்களின் (சேனாவின் மற்ற தலைவர்கள்) வேலை, அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

மேற்கண்ட உரையாடலிலிருந்து ராம சேனாவின் தலைவர் முத்தாலிக்கும் அவரது சகபாடிகளும் கூலிக்கு கலவரம் செய்பவர்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. இனி பிரமோத் முத்தாலிக்கின் ஜாதகத்தைப் பார்க்கலாம்.

______________________________________________

கர்நாடக மாநிலம், பெலகாம் மாவட்டம், ஹுக்கேரியில் பிறந்த முத்தாலிக்கின் தற்போதைய வயது 47. பதிமூன்று வயதாக இருக்கும்போது 1975இல் ஆர்.எஸ்.எஸ்இல் சேர்கிறார். 2004இல் பஜ்ரங்க தள்ளின் தென்னிந்திய அமைப்பாளராக நியமிக்கப்படுகிறார். தேர்தல் அரசியலில் நுழைந்து ஒரு ஆளாக விரும்பினாலும் இவருக்கு பா.ஜ.க சீட்டு கொடுக்கவில்லை. இதனால் மனம் வெறுத்த முத்தாலிக் 2005இல் பஜ்ரங்தளத்தை விட்டு விலகுகிறார். அதே ஆண்டு சிவசேனாவின் கர்நாடக மாநில தலைவராக உருவெடுக்கிறார். பிறகு அதிலிருந்து விலகி 2006இல் ராஷ்ட்ரிய இந்து சேனாவை ஆரம்பிக்கிறார். மாநிலம் முழுக்க சுற்றுப் பிரயாணம் செய்து இந்துவெறிப் பேச்சாளராக பிரபலமாகிறார். இதில் மட்டும் இவர் மீது பதினொரு மாவட்டங்களில் வழக்கு இருக்கிறது. 2008இல் சிரிராம் சேனா ஆரம்பித்ததும்தான் முத்தாலிக் நாடு அறிந்த தலைவராக பிரபலம் ஆகிறார்.

முத்தாலிக்கின் சிறிராம சேனாவின் கைங்கரியங்கள் சில:

  • 2009 ஜனவரியில் இந்து கலாச்சாரத்திற்கு விரோதமென்று கூறி மங்களூர் பஃப்பில் பெண்களை அடித்து கலவரம் செய்தார்கள். இதில் முத்தாலிக்கும் 27 பேர்களும் கைது செய்யப்பட்டார்கள்.
  • ஆகஸ்ட்டு 2008 இல் சேனாவின் குண்டர்கள் எம்.எப்.ஹூசைனது கண்காட்சியை டெல்லியில் வைத்து தாக்கி கலவரம் செய்தார்கள்.
  • 2008 இல் மதமாற்றம் என்று குற்றம் சாட்டி கர்நாடகாவின் பல கிறித்தவ தேவாலயங்களை தாக்குகிறார்கள். 2009இல் ஆறு தேவாலயங்களை அடித்து நொறுக்குகிறார்கள்.
  • 2009 பிப்ரவரியில் காதலர் தினத்தை கொண்டாடுபவர்களை பிடித்து திருமணம் செய்து வைக்கப் போவதாக முத்தாலிக் அறிவித்தார். இதை எதிர்த்து சில பெண்கள் அமைப்புகள் முத்தாலிக்கு பிங்க் நிற ஜட்டியை அனுப்பி எதிர்ப்பு தெரிவித்தன. இது நாடெங்கும் ஆதரவை ஏற்படுத்தியது.

________________________________________

நுகர்வுக் கலாச்சாரத்தின் அங்கமாகிப் போன காதலர்தினம், பஃப் இரண்டையும் பாரதக் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல் என்று முத்தாலிக் செய்த பிரச்சாரம் நடுத்தர வர்க்க பெற்றோர்களான இந்துக்களின் ஆதரவைப் பெறாமலில்லை. இளையவர்கள் இதை ஆதரிக்கவில்லை என்றாலும் பொதுவில் இந்துக்களின் சாம்பியனாக காட்டிக் கொள்ள இந்தப் போராட்டங்கள் கைகொடுத்திருக்கின்றது. மேலும் மேட்டுக்குடியின் நிகழ்ச்சி நிரலில் இத்தகைய தாக்குதல்கள் வந்த உடன்தான் தேசிய ஊடகங்கள் இதை கவனம் கொடுத்து முக்கியத்துவம் கொடுத்தன. மங்களூரு பஃப்பில் சுமார் 25 குண்டர்களை வைத்தே நடத்திய தாக்குதல் முத்தாலிக் பிரபலம் ஆவதற்கு போதுமானதாக இருந்தது.

இத்தகைய சிறு கும்பலை வைத்து ரகளை செய்யும் இந்தக் கூட்டத்தை இருக்கும் சட்டப்பிரிவுகளின் படியே கூட எளிதாக முடக்க முடியும். ஆனால் அதைச்செய்ய எந்த அரசும் துணியவில்லை என்பதை எந்த ஊடகங்களும் எழுதவில்லை. மேலும் கர்நாடகாவில் இருக்கும் பா.ஜ.க அரசு இவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரவணைக்கும் வேலையை செய்து வந்தது. இந்துத்தவா கும்பலில் இருக்கும் தீவிர இளைஞர்களை அணிதிரட்டும் வேலையை இவர்கள் செய்துவருகிறார்கள் என்பது பா.ஜ.க கும்பலுக்கு ஒரு போட்டியாக இருக்கிறது.

காதலர் தினத்திற்கு, இந்து மக்கள் கட்சி, இந்து முன்னணி, சிவசேனா என நாடு முழுக்க இவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், இந்த சிறு கும்பல்களை அடக்காமல் அரசு விட்டுவைப்பதும், ஊடகங்கள் இவர்களை பிரம்மாண்டமான சக்தி உடையவர்களாக விளம்பரம் கொடுப்பதும் தான் இவர்கள் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றது.

காசுவாங்கிக் கொண்டு இவர்கள் எதுவும் செய்வார்கள்  என்பது கூட புதிதில்லைதான். ஏனென்றால் விசுவ இந்து பரிஷத்தின் வேதாந்தி கூட ஹவாலா ஊழலில் கேமராவின் முன்னர் சிக்கியவர்தான். விசுவ இந்து பரிஷத் இயக்கம்தான் நாட்டிலேயே மிக அதிகமான வெளிநாட்டுப் பணத்தைப் பெறும் தன்னார்வ அமைப்பாகும். இந்தப் பணத்திற்கு முறையான கணக்குகள் எதுவுமில்லை என்பதுகூட ஊடகங்களில் பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கின்றது.

ஆர்.எஸ்.எஸ் இன் இந்துத்துவ வேகம் போதுமானதல்ல என்ற போட்டியின் விளைவாகத்தான் சிரிராம் சேனா, இந்துமக்கள் கட்சி போன்றோர் தோன்றி பிரபலமாகிறார்கள் என்பது உண்மைதான். ஆர்.எஸ்.எஸ் கூட்டம் நேரடியாக மறுகாலனியாதிக்கத்தின் மூலம் பெரும் ஆதாயத்தை அடையும் போது இந்தப் போட்டிக் கூட்டம் இந்துத்தவக் கற்பை முன்வைத்து இப்படி சில்லறை ஆதாயங்களை அடைகிறது. ஐ.பி.எல் ஊழலைக் காப்பதற்கு பா.ஜ.கவின் அருண் ஜெட்லி துணிவதும், பாரதா மாதாவின் கற்பைக் காப்பதற்கு காதலர் தினத்தை சிரிராம் சேன எதிர்ப்பதும் வேறு வேறல்ல.

இந்து மக்கள் கட்சி கூட தமிழ்நாட்டின் சிரிராம் சேனாதான். இந்த காவி லும்பன் கும்பல் சீரிரங்கத்தில் பெரியார் சிலையை இடித்த போதும், சிதம்பரத்தில் தீட்சிதர்களோடு சேர்ந்து கொண்டு தமிழுக்கு எதிராக களம் இறங்கிய போதும் இந்தக் காலிகளை நாங்கள் களத்தில் எதிர்கொண்டு பாடம் புகட்டினோம். ஆனால் இவர்களுக்கு தினமணி நடுப்பக்கத்தில் இட ஒதுக்கீடு செய்து ஆராதிக்கிறது. மற்ற பத்திரிகைகளும் இந்து மக்கள் கட்சி எது செய்தாலும் அதற்கு விளம்பரம் அமைத்துக் கொடுக்கின்றன.

பிரபலமே ஆகாத கவிஞர்களும், ஓவியர்களும் தமிழகத்தில் பிரபலமாக வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்? இந்து மக்கள் கட்சிக்கு ஒரு போன் போட்டு டீல் பேசினால் போதும். மிச்சத்தை அவர்களும், ஊடகங்களும் பார்த்துக் கொள்வார்கள். இந்திய அளவில் பிரபலமாக வேண்டுமென்று சொன்னால் அது சீரிராம் சேனாவிடம் போக வேண்டும். அது எப்படி என்பதைத்தான் இப்போது காமராவில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.


source:vinavu


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

எம்.எஸ்.ஆபீஸ் 2010 கூடுதல் தகவல்கள்

 
 கோடிக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் ஒரு முறையாவது, மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பின் புரோகிராம் ஒன்றைப் பயன்படுத்துகின்றனர் என்று கூறினால் அது மிகையாகாது. சிறிய, பெரிய நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள், வீடுகள் என எங்கும் எம்.எஸ்.ஆபீஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் புதிய பதிப்பு 2010 பல ஆண்டுகளாகப் பேசப்பட்டு வருகிறது. அண்மையில் இதன் வளர்ச்சி குறித்து தொடர்புள்ளவர்களுக்கு மட்டும், (மைக்ரோசாப்ட் டெக்நெட் மற்றும் எம்.எஸ்.டி.என். சந்தாதாரர்களுக்கு மட்டும்) இது டவுண்லோட் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. வரும் மே 12, நாளை மறுநாள், இத்தொகுப்பின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. வர்த்தக ரீதியாக, பொது மக்களுக்கு வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த தேதியிலிருந்து என இன்னும் அறிவிப்பு வரவில்லை.
இத்தொகுப்பு குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
ஆபீஸ் 2010, மிக ஆழமாக மேற்கொள்ளப்பட்ட சிந்தனையில், நுண்மையாக வடிவமைக்கப்பட்டு, பல சாப்ட்வேர் புரோகிராம்கள் இணைப்பாக அமைக்கப் பட்ட ஒரு பெருந் தொகுப்பாகும். இந்த தொகுப்பில் மையமாகத் தரப்படும் வேர்ட், எக்ஸெல், அவுட்லுக் மற்றும் பிரசன்டேஷன் புரோகிராம்கள், இன்றைய தேவைகளின் அடிப்படையில் புதிய மாற்றங்களைக் கொண்டுள்ளவையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
முந்தைய ஆபீஸ் தொகுப்புகளுடன் ஒப்பிடுகையில், இத்தொகுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் சிறப்பினைக் காணலாம். ஆபீஸ் 2007 தொகுப்பில் ரிப்பன் இன்டர்பேஸ் அறிமுகப்படுத்தப் பட்டது. ஆனால் முழுமையாக அனைத்து தொகுப்புகளுடனும் தரப்படவில்லை. அவுட்லுக், ஒன் நோட் மற்றும் பப்ளிஷர் தொகுப்புகளில், ஆபீஸ் 2003ல் இருந்த மெனுவே தொடர்ந்தது. ஆனால் ஆபீஸ் 2010ல் அனைத்துமே ரிப்பன் இன்டர்பேஸுக்கு மாறிவிட்டன. குறிப்பாக அவுட்லுக் தொகுப்பில் முன்பு புதைக்கப்பட்டிருந்த சில வசதிகள் அனைத்தும், ரிப்பன் இன்டர்பேஸில் எளிமையாகப் பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
ஆபீஸ் 2010ல் பைல் மெனு மீண்டும் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 2007 தொகுப்பில் ஓப்பன் அண்ட் சேவ் டயலாக் பாக்ஸ், பிரிண்ட் பங்சன் போன்றவை ஆபீஸ் மெனுவில் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. இவை இப்போது மிகத் தெளிவாக, வண்ணக் கலவையில் காட்டப்படுகின்றன. ரிப்பன் மெனுவில் இடது ஓரம் அனைத்தும் பைல் ஆப்ஷனாகத் தரப்பட்டுள்ளன.
மேலும் இந்த ரிப்பன் இன்டர்பேஸ் இணைந்து டெவலப்பர்கள் பல டேப்களைத் தங்கள் விருப்பத்திற்கேற்ப உருவாக்கி அமைக்கலாம். ஆப்ஜெக்ட், கிராபிக்ஸ் போன்றவற்றை எடிட் செய்வது, மாற்றி அமைப்பது போன்றவை, ஆபீஸ் 2010 தொகுப்பின் அனைத்து புரோகிராம்களில் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால் டெக்ஸ்ட் எடிட் செய்வதில், இந்த புரோகிராம்களுக்கிடையே வேறுபாடுகள் உள்ளன.
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் ஒன்றில் சொற்களைத் தேடுவதற்கு பைண்ட் அண்ட் ரீபிளேஸ் பயன்படுத்துகிறோம். வேர்ட் 2010ல் நேவிகேஷன் பேனில் தரப்பட்டிருக்கும் மூன்றாவது டேப்பில் இந்த தேடல்கள் அனைத்தும் தரப்பட்டுள்ளன. சர்ச் பாக்ஸில் ஒரு சொல்லை டைப் செய்கையில், அந்த சொல் இருக்கும் அனைத்து இடங்களும் ஹைலைட் செய்யப்படுகின்றன. இதனால், நாம், சொல் உள்ள அடுத்தடுத்த இடங்களை தொடர் முயற்சி இன்றி அறியலாம்.
எக்ஸெல் தொகுப்பில் அனைத்து பங்ஷன்களும் மீண்டும் துல்லிதமாகவும் வேகமாகவும் செயல்படும்படி அமைக்கப்பட்டுள்ளன. டேட்டா பேஸ் தனியே அமைத்து, எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் இணைத்துப் பயன்படுத்துபவர்களுக்கு, இந்த தொகுப்பில் பல வசதிகள் கூடுதலாகத் தரப்பட்டுள்ளன.
அவுட்லுக் 2010ல், மெனுவிற்குப் பதில் ரிப்பன் இன்டர்பேஸ் தந்திருப்பது ஒரு முக்கிய மாற்றமாகும். புதியதாக தரப்பட்டுள்ள இரண்டு வசதிகளை இங்கு குறிப்பிட வேண்டும். குயிக் ஸ்டெப்ஸ் (Quick Steps) என்ற ஒரு டூல் உள்ளது. இதில் கட்டளைகளை லிஸ்ட்டிலிருந்து எடுத்து, அவற்றைச் செயல்படுத்தும் வரிசைப்படி அமைக்கலாம். பின்னர் இதனை ஹோம் டேப்பில் உள்ள பட்டன் ஒன்றுக்கு இணைக்கலாம். இந்த பட்டனை அழுத்துவதன் மூலம் அனைத்து கட்டளைகளையும் செயல்படுத்தலாம்.
அடுத்ததாக மெசேஜ்களை குழுவாக அமைக்கும் டூல் செயல்படும் விதத்தினைக் குறிப்பிடலாம். மெசேஜ் சப்ஜெக்ட் அடிப்படையில், அவை குழுவாக அமைக்கப்படுகின்றன. இதில் புதியதாக இக்னோர் (Ignore) ஆப்ஷன் தரப்பட்டுள்ளது. இதனை அழுத்தினால், தேர்ந்தெடுக்கப்பட்ட மெசேஜ் அல்லது கான்வர்சேஷன் மற்றும் அதன் பின்னணியில் வரப்போகும் அனைத்து மெசேஜ்களும் தானாகவே நீக்கப்படுகின்றன. ஒருவருக்கு காப்பி செய்யப்படும் தேவையற்ற மெசேஜ்களை நீக்க இது பயன்படும். இந்த டூல் சப்ஜெக்ட் தலைப்பின் அடிப்படையில் செயல்படுவதால், அதில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் இந்த வசதி செயல்படாமல் போய்விடும். இந்த பிரச்னை வரும்காலத்தில் தீர்க்கப்படலாம்.
அடுத்ததாக ஆபீஸ் 2010 தொகுப்பு எவற்றை எல்லாம் கொண்டிருக்கிறது என்று பார்க்கலாம். அனைத்து எடிஷன்களும் Word, Excel, PowerPoint, மற்றும் OneNote  ஆகிய அனைத்தையும் கொண்டுள்ளன. இவை 32 பிட் மற்றும் 64 பிட் வகைகளில் கிடைக்கின்றன.
ஹோம் எடிஷன் (Home Edition) : இது கீழ்க்காணும் வகைகளில் கிடைக்கிறது. Microsoft Office Home and Student 2010 – இந்த தொகுப்பினைப் பெறும் ஒருவர், தன் வீட்டில் மூன்று பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இதனை நிறுவிக் கொள்ளலாம். மேலே சொல்லப்பட்ட இந்த நான்கு அடிப்படை தொகுப்புகள் மட்டுமே உள்ளன. இதனை எந்த வர்த்தக நிறுவனத்திலும், லாப நோக்கில் செயல்படும் அமைப்புகளிலும் பயன்படுத்தக்கூடாது. அரசு அலுவலகங்களிலும் பயன்படுத்துவது, ஒப்பந்தப்படி தடை செய்யப்படுகிறது.
Microsoft Office Home and Business 2010:  இது சிறிய அளவில் வர்த்தகத்தில் ஈடுபடுவோருக்கென வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்ட நான்கு தொகுப்புகளுடன், அவுட்லுக் தொகுப்பும் இணைக்கப்பட்டுள்ளது.
Microsoft Office Professional Academic 2010: இந்த தொகுப்பில் அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்செஸ் (Outlook, Publisher, and Access) உள்ளன. – – @__.edu என்ற இமெயில் முகவரியைக் கொண்டுள்ள எவருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. அத்தாட்சி பெற்ற கல்வி சார்ந்த அமைப்புகள் வழியாகவே இதன் விற்பனை மேற்கொள்ளப்படும்.
பிசினஸ் எடிஷன் (Business Edition): இது கீழ்க்காணும் வகைகளில் கிடைக்கிறது.
Microsoft Office Standard 2010:   இந்த தொகுப்பில், அடிப்படையான நான்கு புரோகிராம்களுடன், அவுட்லுக் மற்றும் பப்ளிஷர் இணைக்கப் பட்டுள்ளன. மொத்த வால்யூம் லைசன்ஸ் முறையில் இது விற்பனை செய்யப்படும்.
Microsoft Office Professional 2010: சில்லரை விற்பனையாளர்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அவுட்லுக், பப்ளிஷர் மற்றும் அக்செஸ் இணைக்கப்பட்டுள்ளன.
Microsoft Office Professional Plus 2010: அடிப்படை தொகுப்புகளுடன் Outlook, Publisher, Access, SharePoint Workspace (formerly Groove), Communicate, and InfoPath ஆகியவை இணைக்கப்பட்டு கிடைக்கின்றன. வால்யூம் லைசன்ஸ் முறையில் வாங்கலாம்.
ஆபீஸ் 2010 ஐ இயக்க உங்கள் சிஸ்டம் எந்த கட்டமைப்புடன் இருக்க வேண்டும் என்பதனைப் பார்க்கலாம். விண்டோஸ் எக்ஸ்பி (எஸ்.பி.3 இணைப்புடன்), விண்டோஸ் விஸ்டா எஸ்.பி.1 அல்லது பின் வந்த இணைப்புடன் ( 32 அல்லது 64 பிட்) விண்டோஸ் 7 (32 அல்லது 64 பிட்) விண்டோஸ் சர்வர் 2003 ஆர் 2 மற்றும் விண்டோஸ் சர்வர் 2008.
ஹார்ட் டிஸ்க் குறைந்தது 3 ஜிபி இதற்கென இருக்க வேண்டும். வழக்கம்போல, ஒரு ஆபீஸ் 2010 தொகுப்பு, ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமே பதிந்து இயக்க லைசன்ஸ் வழங்கப்படுகிறது. கூடுதலாக பதிவதற்கென, ஒரு சில தொகுப்புகள் மட்டும் சில வரையறைகளுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிட்டவை அல்லாமல் ஆபீஸ் ஸ்டார்ட்டர் எடிஷன் கிடைக்கிறது. ஆனால் இவை கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்கப்படுகின்றன. வெளியே தனியே சில்லரை விற்பனையில் வாங்க முடியாது. இதில் வேர்ட் ஸ்டார்ட்டர் மற்றும் எக்ஸெல் ஸ்டார்ட்டர் ஆகியவை மட்டும் உள்ளன. இதனைப் பெற்றவர்கள், கூடுதலாகப் பணம் செலுத்து முழுமையான ஆபிஸ் 2010 தொகுப்பாகத் தங்கள் ஸ்டார்ட்டர் எடிஷனை மாற்றலாம்.
இந்தியாவில் இந்த பல்வேறு தொகுப்புகளின் விலை, வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் போது தெரியவரும்.


source:dinamalar--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP