சமீபத்திய பதிவுகள்

தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் முன்நகர்ந்த சிறிலங்கா படையினர் மீது தாக்குதல்: 51 படையினர் பலி; 150 பேர் காயம்

>> Friday, January 16, 2009

 
 
கிளிநொச்சி மாவட்டம் தருமபுரத்தில் இருந்து மும்முனைகளில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய முன்நகர்வுகளுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
தருமபுரம் பகுதியில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை 12:00 மணியளவில் சிறிலங்கா படையினரின் சிறப்பு தாக்குதல் கொமாண்டோக்கள் கனரக சூட்டாதரவுடன் மும்முனைகளில் முன்நகர்ந்தனர்.
இவர்கள் மீது விடுதலைப் புலிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர். இன்று பிற்பகல் 2:00 மணியளவில் படையினரின் நகர்வுகள் யாவும் விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
இதில் 51 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 150 படையினர் காயமடைந்துள்ளனர்.
களமுனையில் பெருமளவிலான படையினரின் உடலங்களும் படையப் பொருட்களும் சிதறிக் கிடக்க காணப்படுகின்றன.
40 மில்லிமீற்றர் குண்டு செலுத்தி - 01
ஆர்பிடி எல்எம்ஜிக்கள் - 02
ஆர்பிஜி - 01
ரி-56-2 ரக துப்பாக்கிகள் - 02
ஆர்பிகே எல்எம்ஜி - 01
உள்ளிட்ட படையப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக விடுதலைப் புலிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

 

 

StumbleUpon.com Read more...

NGO க்களினால் அழைத்துச் செல்லப்பட்ட நிபுணர்களே விமான ஓடுதளங்களை அமைத்துள்ளனர் - பாதுகாப்பு தரப்பினர்:

புலிகளின் ஓடுதளங்கள் மிகவும் நோத்;தியான முறையில் அமைக்கப்பட்டிருந்தமையே இதற்கான காரணம் எனவும் இதுவரை புலிகளின் 5 விமான ஓடுதளங்களைத் தாம் கைப்பற்றியுள்ளதாகவும் பாதுகாப்பு தரப்பினர் கூறியுள்ளனர்.


கடந்த காலங்களில் இலங்கைக்கு சென்ற நிவாரணப் பணியாளர்கள் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படவில்லை எனவும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இவர்களுக்கு வீசா அனுமதிகள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


விடுதலைப்புலிகளின் விமான ஓடுதளங்கள் மிகவும் நேர்த்தியான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சாதாரணமாவர்களினால் இவ்வாறு அமைக்க முடியாது எனவும் பாதுகாப்பு உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான ஓடுதளங்களை மாத்திரமல்லாது, விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்செல்வன் தங்கியிருந்த பதுங்குகுழியையும் கிளிநொச்சியில் தங்கியிருந்த சர்வதேச தொண்டு நிறுவன செயற்பாட்டாளர் ஒருவரே அமைத்ததாகவும் அவர் தற்போது நாட்டில் இருந்து வெளியேறி சென்று விட்;டார் எனவும் அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.(globaltamilnews)
http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

சிறுமியுடன் எஸ்கேப் ஆன சிறுவன்





http://www.dinamalar.com/worldnewsdetail.asp?News_id=2342&cls=row4&ncat=INL

StumbleUpon.com Read more...

அலங்காரமாக சாப்பிடுங்கள்!

 
 
   

குறிப்பிட்ட பழத்தை தனித்தனியாக சாப்பிட விரும்பாதவர்கள் பல்வேறு பழங்களை ஒன்றாக கலந்து சாப்பிடலாம். இதைத்தான் ஸ்டைலாக சார்ட் என்கிறார்கள்.

எப்போதும் பந்தாவாக சாப்பிட விரும்பும் ரகமா நீங்கள்ப

ஒவ்வொரு பழத்தையும் எப்படி வெட்டினால் அலங்காரமாக இருக்கும், என்பது பற்றி சில டிப்ஸ்.

பச்சை மற்றும் கறுப்பு திராட்சைகளை சாலட்டின் மீது அலங்காரமாக அடுக்கி வைத்தால் நன்றாக இருக்கும்.

மாதுளைகளையும் அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம்.

எலுமிச்சை தோலை நூல் நூலாக சீவி சாலட் மீது தூவ லாம். இந்த எலுமிச்சை நூல்களைப் பொடிப் பொடியாக நறுக்கி சாலட் மீது தூவினால் வித்தியாசமான டேஸ்ட் கிடைக்கும்.

எலுமிச்சை ஸ்லைஸ்களை முறுக்கி அலங்காரத்துக்குப் பயன்படுத்தலாம்.

ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழங்களின் தோலை சீவி எடுத்து, சுருட்டி விட்டால், அட சிவப்பு மற்றும் பச்சை நிற ரோஜாக்கள் ரெடி!

சதைப்பகுதி சிவப்பாக இருக்கும். கொய்யா மற்றும் அத்திப்பழங்களை வெட்டி வைத்து பூ போல அலங்கரிக்க லாம்.

ஆரஞ்சு தோல், கிர்ணிப் பழத்தோல் போன்றவற்றை சாலட்டுக்கான கப்களாக்கி அதில் பழங்களை நிரப்பி பரிமாறலாம்!
 
 
சமையலோ சமையல் 
   
கண்ணாடிப்பாத்திரங்களில் உள்ள கறையை நீக்க உப்பும் வினிகரும் உபயோகித்து கழுவலாம்.

லிப்ஸ்டிக் கறையை போக்க ïகலிப்டஸ் ஆயில் உபயோகியுங்கள்.

எண்ணெய் பிசுக்கு உள்ள பாத்திரங்களை சுத்தப்படுத்த முதலில் கடலை மாவைத் தடவி பின் நீர் கொண்டு அலம்புங்கள்.

மட்டன் சிக்கன் இவற்றை அரைக்க மிக்சி பயன்படுததப்பட்டால் அதன் பின் 2 பிரட் துண்டுகள் போட்டு அரையுங்கள். பிசுக்கும் வாடையும் போயே போச்சு.

பாத்திரங்கள் சமையலின் போது அடிப்பிடித்து விட்டால் அதில் சோப் நீரை நிரப்பி 10 நிமிடங்கள் கொதிக்க வைத்த பின் கழுவுங்கள்.
 
 
7 வகை வடை! 
   

பீட்ரூட் வடை


தேவையானவை: பீட்ரூட் துருவல் - ஒருகப், உளுத்தம் பருப்பு - ஒரு கப், பச்சைமிளகாய் - 3, இஞ்சி - சிறிய துண்டு, பெரிய வெங்காயம் - 2, கறிவேப்பிலை - சிறிது, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம் பருப்பைக் கழுவி அரைமணி நேரம் ஊற வைத்து அதிகம் தண்ணீர் ஊற்றாமல் நன்றாக அரைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். மாவில் பீட்ரூட் துருவல், வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். எண்ணெய் காய்ந்ததும் மாவுக் கலவையை எடுத்து வடைகளாக தட்டி, நடுவில்துவாரமிட்டு எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுக்கவும். சுவையான பீட்ரூட் வடை ரெடி!


உருளைக்கிழங்கு வடை

தேவையானவை: தோல் சீவி துருவிய உருளைக்கிழங்கு - அரைகப், உளுத்தம் பருப்பு-ஒருகப், பச்சரிசி -கால் கப், காய்ந்த மிளகாய் - 8, பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை, பச்சைமிளகாய் -5, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, இஞ்சி - ஒரு துண்டு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசி, உளுத்தம் பருப்பை ஊற வைத்து, தண்ணீரை வடித்து, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி மாவுடன் சேர்த்து, துருவிய உருளைகிழங்கு, உப்பு போட்டு கலந்து கொள்ளவும். எண்ணெயைக் காய வைத்து கனமான வடைகளாக தட்டி பொரித்து எடுக்கவும்.


மக்காச்சோள வடை

தேவையானவை: மக்காச்சோள ரவை - ஒரு கப், பச்சரிசி - அரை கப், உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: மக்காச்சோள ரவை, அரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் தனித்தனியே ஊற வைத்து தண்ணீரை வடித்து உப்பு சேர்த்து கெட்டியாக வடை பதத்தில் அரைக்கவும். கறிவேப்பிலை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கி சேர்த்து கலக்கவும். எண்ணெய் காய்ந்ததும் வடையாக தட்டி பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.

மொறுமொறுப்பாகவும் சுவையாகவும் இருக்கும்.


சேமியா வடை

தேவையானவை: சேமியா - ஒரு கப், கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், வெங்காயம் - 1, கேரட் - 1, கடலை மாவு - அரை கப், மல்லித்தழை, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: சேமியாவை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். வெங்காயம், கேரட்டைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு கடலை மாவு, கரம் மசாலா, உப்பு, மல்லித்தழை, கறிவேப்பிலை, வெங்காயம், கேரட்டை சேமியாவுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் வடையைத் தட்டிப்போட்டு வேக விட்டு எடுக்கவும்.

சூடாக சாப்பிட சுவையான வடை இது.


எள்ளு வடை

தேவையானவை: பச்சரிசி -2 கப், எள் -2 டேபிள்ஸ்பூன், வெல்லம் - ஒரு கப், எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: அரிசியை ஊற வைத்து வடித்து, இடித்து, சலித்துக் கொள்ளவும். எள்ளை வறுத்து மாவில் கொட்டி, வெல்லத்தைப் பொடித்துப் போடவும். பிறகு மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் மாவு கலவையை வாழை இலையில் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


வாழைக்காய் வடை

தேவையானவை: பெரிய துண்டுகளாக நறுக்கிய வாழைக்காய் -2 கப், பொடியாக நறுக்கிய வெங்காயம் - அரை கப், பச்சை மிளகாய் -6, கடலை மாவு - 2 கப், இஞ்சி -ஒரு துண்டு, கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: வாழைக்காயில் அளவாக தண்ணீர் ஊற்றி, நன்றாக வேக வைக்கவும். பச்சைமிளகாய், இஞ்சி, மல்லித்தழை, கறிவேப்பிலை இவற்றைச் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் கடலைமாவு வேகவைத்து தோலுரித்த வாழைக்காய், வெங்காயம் மற்றும் நறுக்கியவற்றைப் போட்டுத் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். எண்ணெய் காய்ந்ததும் வாழையிலையிலோ அல்லது பால் கவரிலோ எண்ணெய் தடவி வடைகளாக தட்டி சிவந்ததும் எடுக்கவும்.

புதினா சட்னியுடன் சாப்பிட செம ருசி!


கோதுமை ரவை வடை

தேவையானவை: கோதுமை ரவை - ஒரு கப், கெட்டித்தயிர் -ஒரு கப், நறுக்கிய வெங்காயம் - கால் கப், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை: தயிரில் கோதுமை ரவை, வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மல்லித்தழை, உப்பு சேர்த்து நன்கு பிசையவும். எண்ணெய் காய்ந்ததும் வடைகளைத் தட்டி பொன்னிறமாக எடுக்கவும்.

குறிப்பு: இஞ்சி, பச்சைமிளகாயை அரைத்தும் சேர்க்கலாம்.
 
 
ஆப்பிள் சட்னி 
   

தேவை: ஒண்ணேகால் கிலோ ஆப்பிள், 2 வெங்காயம், இஞ்சி சிறியது. 500 கிராம் சர்க்கரை, ஒரு பெரிய தேக்கரண்டி உப்பு, ஒரு பெரிய தேக்கரண்டி மிளகாய்த் தூள், 6 கிராம் க்ளேஷியல் அசிடிக் அமிலம்.

செய்முறை: ஆப்பிளைத் தோல் சீவி விதைகளை அகற்றி துண்டுகளாக்கிக் கொள்ளவும். வெங்காயம் மற்றும் இஞ்சியைக் கூட தோல் உரித்து ஆப்பிளோடு சேர்த்து இதனையும் மிக்ஸியில் கூழாக்கிக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் இந்த கூழோடு, சர்க்கரையைச் சேர்த்து வேக விடவும். சற்று வெந்த பிறகு உப்பு, கரம் மசாலா மிளகாய்த் தூளைச் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். க்ளேஷியல் அசிடிக் அமிலம் சேர்த்துக் கலக்கவும். பிறகு சுடச்சுட பாட்டிலில் நிரப்பி வைக்கவும்.
 
 
5 வகை பூரி 
   

பாலக் பூரி

தேவையானவை: கோதுமை மாவு-2 கப், உப்பு-சுவைக்கேற்ப, சீரகம்-கால் டீஸ்பூன்,பாலக் கீரை (பசலைக் கீரை) ஒரு கட்டு, மிளகாய்தூள்-கால் டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய்-ஒரு டீஸ்பூன்,எண்ணெய்-பொரிக்க தேவையான அளவு.

செய்முறை : பசலைக் கீரையை ஆய்ந்து, கழுவி, தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் வேகவிட்டு, தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் சிறிது தண்ணீர் தெளித்து மையாக அரைத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் உப்பு, சீரகம், நெய் அல்லது எண்ணெய், மிளகாய்தூள் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். தண்ணீருக்கு பதிலாக பாலக் கீரை அரைத்த விழுதைச் சேர்த்துப் பிசையவும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது சேர்த்துக்கொள்ளலாம். பிசைந்த மாவை சிறு பூரிகளாக தேய்த்துப் பொரித்தெடுக்கவும். (குறிப்பு: கீரையை அரைக்கும் போது ஐஸ் வாட்டர் தெளித்து அரைத்தால் பச்சை நிறம் அப்படியே இருக்கும்).

கடலைமாவு தயிர் பூரி

தேவையானவை : கடலை மாவு-2 கப், தயிர்-அரை கப், கரம் மசாலாதூள்-அரை டீஸ்பூன், மிளகாய்தூள்-அரை டீஸ்பூன், வறுத்துப் பொடித்த சீரகத்தூள்-அரை டீஸ்பூன், தனியாதூள் அரை டீஸ்பூன், உப்பு-சுவைக்கேற்ப ஓமம்-அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள்-ஒரு சிட்டிகை, தண்ணீர்-சிறிதளவு, நெய் அல்லது எண்ணெய்-ஒரு டீஸ்பூன், எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.

செய்முறை : எண்ணெய் தவிர மீதி எல்லாப் பொருட்களையும் சேர்த்துப் பிசைந்து, பூரிகளாகத் தேய்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும். மசாலா தயிர் (மிளகாய்தூள்,உப்பு, வறுத்த சீரகத்தூள் சேர்த்தது) இதற்கான சூப்பர் சைட்-டிஷ்.

மேத்தி பூரி

தேவையானவை: கோதுமை மாவு-2 கப், மேத்தி (வெந்தயக் கீரை) ஆய்ந்தது-ஒரு கப், உப்பு-சுவைக்கேற்ப, சீரகம்-கால் டீஸ்பூன், நெய் அல்லது எண்ணெய்-ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன், மிளகாய்தூள்-கால் டீஸ்பூன், எண்ணெய்-பொரிக்க தேவையான அளவு.

செய்முறை : வெந்தயக்கீரையை சுத்தம் செய்து மற்ற எல்லாப் பொருட்களுடனும் கலந்து சிறிது தண்ணீர் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். ஒரு ஈரமான துணியில் மாவை வைத்து சுற்றி, 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்.

பச்சை பட்டாணி பூரி

தேவையானவை: கோதுமை மாவு-ஒரு கப், மைதா மாவு-ஒரு கப், உப்பு-சுவைக்கேற்ப, சீரகம்-கால் டீஸ்பூன், இஞ்சி, பச்சைமிளகாய் விழுது-அரை டீஸ்பூன், கரம் மசாலாதூள்-கால் டீஸ்பூன் பச்சை பட்டாணி அரை கப், எண்ணெய்-தேவையான அளவு.

(பட்டாணியை ஊறவைத்து உபயோகிக்கலாம்). கோதுமை மாவையும் மைதா மாவையும் கலந்து, உப்பு, எண்ணெய் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். பச்சைப்பட்டாணி விழுது, சீரகம், மிளகாய் விழுது, கரம் மசாலா எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.

பூரி மாவை செப்பு போல செய்து உள்ளே பட்டாணி மசாலாவை வைத்து மீண்டும் தேய்த்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

பாதாம் பூரி

தேவையானவை : மைதா-2 கப், இனிப்பு சேர்த்த கோவா-அரை கப், வெல்லம் (பொடித்தது) 3 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்தூள் கால் டீஸ்பூன் முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், உலர்திராட்சை (எல்லாம் சேர்த்துப் பொடித்தது) 2 டேபிள்ஸ்பூன், உப்பு ஒரு சிட்டிகை, நெய் ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.

செய்முறை : மைதாவில் துளி உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும். வாணலில் சிறிது நெய்யைக் காயவைத்து, கோவா, பொடித்த பருப்புகள், வெல்லம், ஏலக்காய் எல்லாவற்றையும் போட்டுக் கிளறி வைக்கவும். மைதாமாவில் சிறு செப்புகளாக செய்து, பூரணத்தை ஸ்டாப் செய்து பூரிகளாகத் தேய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதில் கலந்திருப்பவை எல்லாமே, சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் என்பதால், இதை வடநாட்டில் `ராஜபோக' பூரி என்பார்கள். 
 
 

StumbleUpon.com Read more...

பறவை மோதியதால் விமானம் ஆற்றில் விழுந்தது; 155 பேர் உயிர் தப்பிய அதிசயம்

 

நிïயார்க், ஜன. 16-

அமெரிக்காவின் நிïயார்க் நகரில் இருந்து கார் லோட்டி நகருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர்பஸ் 320 ரக விமானம் புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் 6 சிப்பந்தி கள் உள்பட 155 பேர் இருந்தனர். அந்த உள்நாட்டு விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த விமானத்தின் இறகுகள் மீது பறவைகள் மோதியது. இதில் விமானத்தின் இறகுகள் சேதம் அடைந்ததுடன் என்ஜினுக்குள் அந்த பறவைகள் சிக்கிக் கொண்டன.

இதை அடுத்து விமானம் தாறுமாறாக பறக்கத் தொடங்கியது. பறவை மோதியது பற்றி விமானி உடனடியாக கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். கோளாறு ஏற்பட்டு தாறு மாறாக பறந்த அந்த விமானத்தை விமானி சாமார்த்தியமாக மான்ஹாட்டன் அருகே தரை இறக்க முயன்றார்.

ஆனால் விமானம் அங்குள்ள ஹட்சன் ஆற்றில் விழுந்தது. ஆற்றில் விழுந்த விமானத்தில் இருந்து பயணிகள் வெளியே குதித்தனர். சிலர் தண்ணீரில் பாதி அளவு மூழ்கியபடி மிதந்த விமானத்தின் இறகுகள் மீது ஏறி நின்று கூக்குரல் போட்டனர். மீட்பு படையினர் உடனடியாக வந்து பயணிகள் அனைவரையும் மீட்டனர். உயிர் தப்பியவர்களில் ஒரு குழந்தையும் இருந்தது நல்ல வேளையாக இந்த விபத்தில் யாரும் உயிர் இழக்கவில்லை.

விமானம் விழுந்த ஆற்றுப் பகுதியில் கடும் குளிர் நிலவியது. நடுங்க வைக்கும் கடும் குளிரில் தண்ணீரில் தத்தளித்த பல பயணிகள் மயக்கம் அடைந்து விட்டனர். ஆபத்தான நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பறவை மோதி விமானம் சேதம் அடைந்த போது அதை அருகில் உள்ள ஒரு குட்டி விமான நிலையத்தில் விமானி தரையிறக்க முயன்றார். ஆனால் அது தவறுதலாக ஆற்றில் விழுந்து விட்டது.
 

StumbleUpon.com Read more...

இஸ்ரேல் குண்டு வீச்சில் `ஹமாஸ்' இயக்க மந்திரி பலி; ஐ.நா. சபை உதவிக்குழு கட்டிடமும் தகர்ப்பு

 

 

பாலஸ்தீனத்தின் காசா நகரம் மீது இஸ்ரேல் விமானங்களும் பிரங்கி படையினரும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. 21-வது நாளாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதலை நிறுத்தும்படி ஐ.நா. சபை விடுத்த கோரிக்கை களையும் இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ஏற்கனவே பாலஸ்தீனத்தின் காசா நகரில் இருந்த ஹமாஸ் இயக்கத்தினரின் அலுவலங்கள் தகர்க்கப்பட்டு விட்டன. 21 நாட்களாக நடந்த தாக்குதல்களில் பலியான வர்கள் எண்ணிக்கை 1000-க்கும் அதிகமாகி விட்டது.

இந்த நிலையில் பாலஸ் தீனத்தின் ஜபாலியா பகுதியில் ஹமாஸ் இயக்கத்தின் உள்துறை மந்திரி சயீத் சலாம் வீடு மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசியது. இதில் அந்த மந்திரி பலியானார். அவரது மகன் மற்றும் சகோதரரும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

காசா பகுதியில் தாக்கு தலில் வீடுகளை இழந்து முகாம்களில் தங்கி உள்ளவர்களுக்கு நிவாரண பொருள்கள், மருந்துகள், உணவுப்பொருட்கள் வழங்க ஐ.நா. சபை ஏற்பாடு செய்துள்ளது. காசா பகுதியில் உள்ள ஐ.நா. சபை கிளை அலுவலகத்தில் டன் கணக்கில் இந்த பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன.

அந்த கட்டிடம் மீதும் இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின. இதில் 3 பேர் பலியானதுடன் டன் கணக்கில் மருந்து பொருட்கள் நாசம் அடைந்தன.

இஸ்ரேலின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து ஐ.நா. சபை அவசரமாக கூடுகிறது.
 

StumbleUpon.com Read more...

சிரிக்கவும் சிந்திக்கவும் சில செய்திகள்.

                                                                                                தொகுப்பு: கணேஷ் அரவிந்த்

அறிவை வைக்க மறந்துட்டானே...

ஒரு சமயம் கடையத்தில் உள்ள வேடுவர்கள் சாமிக்குப் பூஜை போட்டனர். அவர்களுள் ஒருவனுக்கு ஆவேசம் வந்து, சாமி ஆட ஆரம்பித்தபடி பின் வரும் பாட்டைப் பாடினான்.

பாக்கும் வச்சான்; பழமும் வச்சான்;
வெத்திலையும் வச்சான்; பொயிலையும் சேத்து வச்சான்;
ஆனால் ஒன்னு வைக்க மறந்துட்டானே...
சுண்ணாம்பில்லே; சுண்ணாம்பில்லையே!

அப்போது அங்கு வந்த பாரதியார், அந்தப் பாட்டைக் கேட்டு பலமாகச் சிரித்து விட்டார்.

அருகிலிருந்தோர், " ஏன் சிரிக்கிறீர்கள்? " என்று கேட்டனர்.

"இப்பாட்டு நம் மக்களுக்குக் கூட ஒரு வகையில் பொருந்தும்" என்றார் பாரதியார்.

" எப்படி? "

"தமிழ்நாட்டு மக்களுக்குக் கடவுள் நிலமும் வச்சான், பலமும் வச்சான், நிகரில்லா செல்வம் வச்சான். ஆனா, ஒன்னு வைக்க மறந்துட்டானே? "

"என்ன அது ? " என்று மீண்டும் கேட்டார்கள்.

"அறிவை வைக்க மறந்துட்டானே, மண்டையில் அறிவை வைக்க மறந்துட்டானே..."

இதைக் கேட்ட நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

JJJJJ

 வேறொரு  நல்ல மருத்துவரை...

மருத்துவர் ஒருவர் தன் நோயாளியிடம் உண்மை சொல்ல வேண்டிய காலம் வந்து விட்டதை உணர்ந்தார்.

"நீங்கள் மிகவும் நோயுற்றிருப்பதால் மிஞ்சிப் போனால் இரண்டு நாள்களுக்கு மேல் உயிருடன் இருக்க மாட்டீர்கள். ஏதேனும் ஏற்பாடுகள் செய்ய வேண்டுமானால் செய்து கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டு, "யாரையேனும் பார்க்க விரும்புகிறீர்களா? " என்று கேட்டார்.

நோயாளி மெல்லிய குரலில் "ஆம்" என்றார்.

"யாரை?"

"வேறொரு  நல்ல மருத்துவரை..."

JJJJJ

நீங்கள் யாருக்கு...?

ஆபிரகாம் லிங்கன் அவருடைய ஷீவிற்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்த ஒருவர், "சார், உங்கள் ஷீவிற்கு நீங்களேதான் பாலீஷ் போடுவீர்களா?" என்று கேட்டார்.

லிங்கன், " ஆமாம். நீங்கள் யார் ஷீவிற்குப் பாலீஷ் போடுவது வழக்கம்? " என்று திருப்பிக் கேட்டார்.

                                                                                                         JJJJJ

குணப்படுத்தி விடுவார்கள்.

ஒரு சமயம் இங்கிலாந்தின் பிரதம மந்திரியாக இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் ஒரு மனநோய் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது அங்கிருந்த மனநோயாளி "நீங்கள் யார்? " என்று கேட்டார்.

சர்ச்சில் "நான்தான் பிரதம மந்திரி சர்ச்சில்" என்று மிடுக்குடன் சொன்னார்.

"கவலைப்படாதீர்கள். நான் இங்கே வந்த போது ஹிட்லராக இருந்தேன். என்னைக் குணப்படுத்தி விட்டார்கள். அதுபோலவே உங்களையும் விரைவில் குணப்படுத்தி விடுவார்கள். " என்றார் அந்த மனநோயாளி.

JJJJJ

பெயர்தான் கெட்டுப் போகிறது.

டாக்டர் மத்தேயு பெய்லி என்பவர் ஜார்ஜ் மன்னருக்கு மருத்துவ ஆலோசகர். இலக்கியவாதியும் கூட.

ஒரு நாள் எழுத்தாளர் ரினால்ட்ஸ் என்பவர் தன் உடல் நிலையைப் பரிசோதித்துக் கொள்ள மத்தேயுவிடம் வந்தார்.

" டாக்டர், நான் அதிகம் எழுதுவதால் என் உடல் நிலை மோசமாகிவிட்டதா? " என்று கேட்டார்.

அதற்கு மத்தேயு , "நீங்கள் அதிகமாக எழுதுவதால் உங்கள் உடல் நிலை கெட்டுப் போகவில்லை. உங்கள் பெயர்தான் கெட்டுப் போகிறது. " என்றார்.

source:                    

StumbleUpon.com Read more...

திரையில் முதன் முதலாய்

 

 

முதல் காட்சி 

1896 ஆம் ஆண்டு, ஏப்ரல் 23ம் தேதி நியூயார்க்கிலுள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மியூசிக் ஹாலில் "வாட்வில்லி குழுவினரால் இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி.

முதல் மௌனப்படம்

1903 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட "ஒரு அமெரிக்கத் தீயணைப்புப் படைவீரனின் வாழ்க்கைப் படம்தான் முதல் மௌனப்படம்.

முதல் வசனம்

உலகின் முதல் பேசும்படம் 1927 ஆகஸ்ட்டில் வந்தது வார்னர் பிரதர்ஸ் தயாரித்த "ஜாஸ் பாடகன்" நடிகர் ஆல் ஜால்சன் நடித்தார், பாடினார். பேசும் படத்தில் முதலில் பேசப்பட்ட வசனம் "நீங்கள் இதுவரை ஒன்றும் கேட்கவில்லை" என்பதே.

முதல் தங்கப்பதக்கம்

இந்தியாவில் முதன்முதலில் தயாரித்த திரைப்படம் ஹரிச்சந்திரா(ஆண்டு:1915). முதன்முதலில் தயாரித்த பேசும் திரைப்படம் "ஆலம் ஆரா"(ஆண்டு: 1918). தங்கப்பதக்கம் (ஜனாதிபதி விருது) பெற்ற முதல் திரைப்படம் செம்மீன் (ஆண்டு:1965)
 
 
முதல் கவர்ச்சி நடிகை

முதன் முதலாய் அந்நாளிலேயே திரையில் திறந்த தோள்பட்டையைக் காட்டி,  சட்டையைக் குறைத்துக் கொண்டு பின்புறம் முதுகு தெரியும்படி கவர்ச்சி காட்டி "பிளாட்டினம் பிளாண்ட்" எனும் பெயரை ரசிகர்களிடம் பெற்றவர் நடிகை ஜீன்ஹார்லோ தான்.



முதல் ஆஸ்கார் அவார்டு

மிகச்சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படும் அகாடமி அவார்டை முதன் முதலாய்ப் பெற்றது. 1927-ல் வெளியான ஒரு ஊமைப்படம்தான்(இந்த அகாடமி அவார்டுதான் தற்போதைய ஆஸ்கார் விருதாக மாறியது). இந்தப்படத்தை இப்போது பார்த்தாலும் கூட திரில் ஏற்படுமாம். இந்தப்படத்தின் பெயர் இறக்கைகள்(Wings)

-கணேஷ் அரவிந்த்.
 
source :         

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP