சமீபத்திய பதிவுகள்

பைபிள் மீது கைவைத்து அமேரிக்க அதிபரின் பதவியேற்பு

>> Tuesday, January 20, 2009


StumbleUpon.com Read more...

விண் கற்கள் பூமியில் மோதக் கூடிய அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்

 
coolswiss.com விண் கற்கள் பூமியின் மீது மோதக் கூடிய அபாயம் நிலவுவதாக விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர்.

ஒவ்வொரு ஆயிரம் வருடங்களுக்கு சில தடவைகள் பூமி மீது விண் கற்கள் மோதுவது வழமையானதொன்றன ஆய்வாளர்கள் சுட்க்காட்டுகின்றனர்.

பிரபஞ்சத்திலிருந்து பூமி மீது மோதவரும் விண் கற்கள் தொடர்பில் ஆய்வு நடாத்துவதற்கு வருடாந்தம் 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட வேண்டுமென ஐக்கிய நாடுகள் சபையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பாரிய பொருட்கள் பூமி மீது மோதுண்டதாகவும், எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக் கூடும் எனவும் பேர்ன் வானசாஸ்திர நிபுணர் இன்கோ லியா தெரிவித்துள்ளார்.

எமது வாழ் காலத்தில் இவ்வாறானதோர் அபாயம் ஏற்பட வாய்ப்பில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் சுவிட்சர்லாந்தில் சர்வதேச வானவியல் தினம் அனுஸ்டிக்கப்பட இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
http://www.lankasritechnology.com/index.php?subaction=showfull&id=1232135044&archive=&start_from=&ucat=2&

StumbleUpon.com Read more...

அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா நாடு முழுவதும் விழாக்கோலம் (படம் இணைப்பு)

lankasri.comவாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா நேற்று பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை.

கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பின தந்தைக்கும், அமெரிக்காவின் கென்சாசை சேர்ந்த வெள்ளையின தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒபாமாவும் கருப்பர் இனத்தவராக கருதப்படுகிறார். அவர் ஹவாயிலும், இந்தோனேசியாவிலும் சில காலம் வளர்ந்தவர். சாதாரண பணியாளராக வாழ்க்கையை துவக்கி, அமெரிக்காவின் மிக உயரிய பதவியை அடைந்துள்ளார்.

ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர்.இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன் ஒபாமாவை, வெள்ளை மாளிகையின் வடக்கு போர்டிகோவில் வரவேற்றார், பதவி விலகிய அதிபர் புஷ். பின் அங்கிருந்து, பதவியேற்பு விழா நடக்கும் அரங்குக்கு இருவரும் சென்றனர்.கடந்த 1861ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பதவியேற்ற போது, அவர் பயன்படுத்திய பைபிள் புத்தகத்தில் கைவைத்தபடியே, அதிபர் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஒபாமா.பதவியேற்பு விழாவை ஒட்டி, காபிடல் அரங்கம் பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உளவுத்துறையை சேர்ந்தவர்கள், குறிபார்த்து சுடுவதில் பெரும் திறமை பெற்றவர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களும் லட்சக்கணக்கில், அங்கு குழுமியிருந்து, ஒபாமாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன் நகரம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்கு அமெரிக்க காபிடல் கட்டடத்தின் மேற்கு அரங்கில் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. அமெரிக்க அரசின் கடற்படை பேண்டு குழுவினர், சான் பிரான்சிஸ்கோ , சான் பிரான்சிஸ்கோ கிரிஸ் இசைக்குழு அமைப்பினர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்தினர்.கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டயயானி பெயன்ஸ்டீன், கூட்டு பார்லிமென்ட் கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வரவேற்புரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார்.

துணை அதிபர் ஜோ பிடெனுக்கு சுப்ரீம் கோட் இணை நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின், ஜான் வில்லியம்சின் இசை நிகழ்ச்சி நடந்தது.நாட்டின் முதல் பெண்மணியாகும் மிச்சேல், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை எடுத்து வந்து, கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்தபடி பதவி பிரமாணம் எடுத்தார் புதிய அதிபர் ஒபாமா. சரியாக 10.38 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 10.45 மணிக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றார்.ஒபாமா பதவியேற்பு விழாவை ஒட்டி நகரின் மையப்பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது.தற்போது, 47 வயதாகும் ஒபாமாவிடம் இருந்து, சிக்கலான நிலையை சந்தித்துவரும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்கட்சியினர், கடுமையான விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.

இனப்பாகுபாடு ஒழிவதற்காகவும், கருப்பர், வெள்ளையர் சமத்துவத்துக்காகவும் கடுமையாக போராடி மறைந்த, மனித உரிமை தலைவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் கல்லறையில் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்திய ஒபாமா, "மக்களுக்கு இந்த நாடு நிறைய செய்யவேண்டியுள்ளது' என்று குறிப்பிட்டார்.தன்னை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு நேற்று முன்தினம் விருந்து அளித்து கவுரவித்தார் ஒபாமா. இதில், வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காலின் பாவெல், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடென் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, அதிபர் தேர்தல் விவாதங்களின் போது நடந்த, சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள மெக்கெய்ன் தயங்கவில்லை. கலகலப்பாக விருந்து நடந்து முடிந்தது.

கைதிகளுக்கு தண்டனை குறைப்பு : புஷ் கடைசி நாள் கையெழுத்து: அதிபராக ஒபாமா பதவியேற்றதும், புஷ்ஷின் எட்டு ஆண்டு அதிபர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. உடன் புஷ், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் சிலர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஆண்டிரீஸ் விமானப்படை தளத்துக்கு சென்றனர். அங்கு விமானப்படை விமானம் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தது.அதில், தன் சொந்த ஊரான டெக்சாசுக்கு புறப்பட்டுச் சென்றார். டெக்சாஸ், மிட்லாந்தில் தரையிறங்கிய புஷ், அங்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்ட பின், கிராபோர்டு பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு சென்றடைந்தார்.புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தின் கடைசியில், நாட்டின் பல தலைவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.

ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், தென்கொரியா, இஸ்ரேல், பிரேசில், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினார்.பதவிக்காலம் முடிவுக்கு வரும் கடைசி நாளான்று, 189 கைதிகளுக்கு மன்னிப்பும், ஒன்பது பேருக்கு தண்டனைக் கால குறைப்பும் வழங்கினார். இதற்கு முன், கிளின்டன் பதவி விலகும் போது, 396 பேருக்கு மன்னிப்பும், 61 பேருக்கு தண்டனைக் குறைப்பும் வழங்கினார். அதிபர் ரீகன் பதவி விலகும் போது, 393 பேருக்கு மன்னிப்பும், 13 கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பும் வழங்கியிருந்தார்.

lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


lankasri.com


http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1232481855&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

வன்னியில் பொதுமக்களை இலக்கு வைத்து அகோர பீரங்கித் தாக்குதல்: 17 பேர் குடும்பம் குடும்பமாக படுகொலை; 51 பேர் படுகாயம்

 
 
 
வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் 5 சிறுவர்கள் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 51 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
சுதந்திரபுரம் சந்தியில் பிள்ளையார் கோவில் பின்பாக உள்ள இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1:45 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

25 குடும்பங்கள் வாழ்ந்து வரும் ஒரு காணிக்குள் 6 எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. இதில் சிறுவன் உட்பட இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

அழகன் பிரசாந்தன் (வயது 12) மற்றும் மாணிக்கவாசகர் சிவயோகம் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர்.

இருவரும் அந்த இடத்திலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, உடையார்கட்டு குரவில் பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைத் தாக்குதலை நடத்தினர். இதில் சிறுமி ஒருவரும் மற்றும் இளைஞர் ஒருவரும் உடல் சிதறிப் பலியாகினர்.

இவர்களை மீட்கும் நடவடிக்கையை மேற்கொள்ள முடியாதளவுக்கு படையினரின் செறிவான எறிகணைத் தாக்குதல்கள் அப்பகுதியை நோக்கி கடுமையாக நடத்தப்படுகின்றன.

இந்த இரு தாக்குதல்களிலும் சிறுவர்கள் உட்பட 30 பேர் படுகாயமடைந்தனர்.

மரியதாஸ் (வயது 52)

அகமதி (வயது 11)

மனோன்மணி (வயது 68)

கவிதா (வயது 30)

ஜெயரூபன் (வயது 14)

அன்பரசன் (வயது 07)

கிருபாகரன் (வயது 18)

பத்மநாதன் (வயது 44)

ரவீந்திரன் (வயது 36)

கல்யாணி (வயது 34)

ரவிச்செல்வன் (வயது 33)

அருளானந்தம் (வயது 53)

கனகம்மா (வயது 63)

ரவிச்சந்திரன் (வயது 39)

பரமலிங்கம் (வயது 40)

வக்சலா (வயது 17)

சந்திரராஜ் (வயது 14)

சசிதரன் (வயது 30)

தினேஸ்குமார் (வயது 30)

இரத்தினகுமார் (வயது 28)

யோ.சுரேஸ் (வயது 32)

சி.றெஐிதா (வயது 15)

நிறோசினி (வயது 37)

யோசேப் லியோன் (வயது 47)

சிவகுமார் ராதா (வயது 36)

சீரழகன் (வயது 23)

செ.பிரபு (வயது 32)

ஐ.நாகராசா (வயது 50)

இ.சுதர்சினி (வயது 52)

சி.கல்யாணி (வயது 35)

ஆகியோர் படுகாயமடைந்தனர்.

இதில் கொல்லப்பட்ட சிறுவன் அழகன் பிராசந்தனின் தாயார் அவரின் உடன்பிறப்பும் படுகாயமடைந்துள்ளனர்.

இதனிடையே, விசுவமடு வள்ளுவர்புரத்தில் நடத்தப்பட்ட எறிகணை வீச்சில் சின்னத்துரை மதனகுமார் (வயது 33) என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.

இதில் துரைசிங்கம் (வயது 55) என்பவர் படுகாயமடைந்துள்ளார்.

சுதந்திரபுரம் கிழக்குப் பகுதி இடம்பெயர்ந்த பொதுமக்கள் குடியிருப்புக்கள் மீது இன்று பிற்பகல் 4:40 நிமிடத்துக்கு சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

இதில் 3 சிறுவர்கள் உட்பட 11 அப்பாவி பொதுமக்கள் உடல் சிதறிப் பலியாகினர்.

இவர்களின் உடல்கள் உடையார்கட்டு நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இவற்றில் குடும்பமாக பலர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள் உடனடியாக அடையாளம் காணப்படவில்லை.

இத்தாக்குதலில் 9 பேர் படுகாயமடைந்தனர்.

கண்ணன் (வயது 25)

கருணா (வயது 38)

குகதாசா (வயது 30)

சைதனியா (வயது 18)

தேவன் (வயது 22)

வசந்தா (வயது 42)

கணேசன் (வயது 36)

வேலாயுதம் (வயது 52)

யோகலிங்கன் (வயது 46)

ஆகியோர் படுகாயமடைந்தனர்.

தேவிபுரத்தில் சிறிலங்கா படையினர் இன்று நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

மாறா இலுப்பையிலிருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த கார்த்தி சண்முகசுந்தரம் என்பவர் கொல்லப்பட்டார்.

இதில் 11 பேர் படுகாயமடைந்தனர்.

கே.ரவி (வயது 36)

மா.கலைச்செல்வன் (வயது 31)

இ.சுலக்சன் (வயது 7)

கனகலிங்கம் (வயது 55)

வேகானம் (வயது 25)

ஜெயரட்ணா (வயது 11)

அன்பரசன் (வயது 7)

தங்கையா (வயது 57)

மகிந்தன் (வயது 29)

நாகராசா (வயது 39)

மேலும் ஒருவரின் பெயர் விவரம் கிடைக்கப்பெறவில்லை.

இவர்கள் வள்ளிபுனத்தில் உள்ள முல்லைத்தீவு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதல் மற்றும் வான் தாக்குதல்களினால் படுகாயமடைந்த பொதுமக்கள் தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

சிறிலங்கா படையினர் இடம்பெயர்ந்த லட்சத்துக்கும் அதிகமான மக்கள் அடைக்கலமடைந்துள்ள உடையார்கட்டு-சுதந்திரபுரம்-தேவிபுரம் மக்கள் குடியிருப்புக்களை இலக்கு வைத்து மக்களை படுகொலை செய்யும் தாக்குதல்களை செறிவாக நடத்தி வருகின்றனர்.

இதனால் மக்கள் மீண்டும் இடம்பெயரும் அவலம் ஏற்பட்டுள்ளது.
 

 

 
 

StumbleUpon.com Read more...

முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறிலங்காவின் டோறா மூழ்கடிப்பு: 15 கடற்படையினர் பலி

 
 
முல்லைத்தீவு கடற்பரப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா தாக்கி மூழ்கடிக்கப்பட்டதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
முல்லைத்தீவு கடற்பரப்பில் தாக்குதல் மற்றும் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறாக்கள் மற்றும் சுப்பர் டோறாக்கள் அணி மீது நேற்று திங்கட்கிழமை இரவு 11:28 நிமிடத்துக்கு கடற்கரும்புலிகள் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் கடற்கரும்புலிகளால் சிறிலங்கா கடற்படையின் உயர்வலு சுப்பர் டோறா பீரங்கிப் படகு தாக்கி மூழ்கடிக்கப்பட்டுள்ளது.
இதில் 15 கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் தரப்பில் கடற்கரும்புலி லெப்.கேணல் நிதி மற்றும் கடற்கரும்புலி கப்டன் வினோதன் ஆகிய இரு கடற்கரும்புலிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.puthinam.com/full.php?2b24OOK4b33C6Df04dctVo0da0eA4AK24d2ISmA3e0dM0Mtlce02f1eW2cc4OcY4be

StumbleUpon.com Read more...

சிறிலங்காவிலிருந்து அரச வன்முறைகளால் "அகதிகளாகும்" ஊடகவியலாளர்கள்: எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு

சிறிலங்காவிலிருந்து அரச வன்முறைகளால் "அகதிகளாகும்" ஊடகவியலாளர்கள்: எல்லைகள் அற்ற ஊடகவியலாளர் அமைப்பு
 
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்துவது, தனக்கு எதிரான செய்திகள் வெளியிடப்படுவதை தடுக்கும் அரசின் உத்திகளில் ஒன்று என்று எல்லைகள் அற்ற ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் ஆசிய-பசுபிக் பிராந்திய தலைவர் வின்சன்ற் புறொசல் கூறியுள்ளதாவது:
சிறிலங்காவை விட்டு பல ஊடகவியலாளர்கள் வெளியேறி வருவதால் ஊடகவியலாளர்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி சிறிலங்கா அரசு அவர்கள் வெளியேறுவதை துடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அனைத்துலக சமூகம் குடிவருவோரை தடுப்பதில் தீவிரமாக உள்ளது. ஆனால், அவர்கள் சிறிலங்கா அரசு பயங்கரமான சூழ்நிலைகளை உருவாக்குவதை நிறுத்துவதே புத்திசாலித்தனமானது.
சிறிலங்கா அரசின் வன்முறைகளால் தான் அதிக ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
சிறிலங்காவில் ஊடகவியலாளர்கள் இரத்தம் சிந்துவது, தனக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதை தடுக்கும் அரசின் உத்திகளில் ஒன்று. ஊடகவியலாளர்கள் இல்லாத நாடு ஜனநாயக நாடாக இருக்க முடியாது.
சிறிலங்கா அரசில் அங்கம் வகிக்கும் உயர் அதிகாரிகள் நேரடியான அச்சுறுத்தல்களை விடுத்து வருவதனால் அங்கு வாழ்வது சாத்தியமற்றது என்ற நிலை தோன்றியுள்ளது.
முக்கியமான ஊடகங்களில் பணியாற்றி வந்த பல ஊடகவியலாளர்கள் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களினால் நாட்டை விட்டு வெளியேறவில்லை, அவர்கள் அரசின் அழுத்தங்களினால் வெளியேறி வருகின்றனர்.
லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலையை தொடர்ந்து ஐந்து ஊடகவியலாளர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். தற்போது எம்ரிவி தொலைக்காட்சியின் தலைவரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
சிறிலங்காவில் இருந்து ஊடகவியலாளர்களும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பொதுமக்களும் வறுமை காரணமாக வெளியேறவில்லை அரசியல் பழிவாங்கல்கள் காரணமாகவே வெளிவருகின்றனர் என்று அவர் கூறியுள்ளார்.

 

http://www.puthinam.com/full.php?2bVRtMe0dAe3R0ecLA7x3a4F5Bh4d2lYc3cc2GoZ3d428XV2b024Tp3e

StumbleUpon.com Read more...

கனடாவில் இந்திய துணை தூதரகம் முன்பாக தமிழர்கள் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு

கனடாவில் இந்திய துணை தூதரகம் முன்பாக தமிழர்கள் மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு
 
சிறிலங்கா அரசாங்கத்தின் இனப்படுகொலையை கண்டித்தும் உடனடிப் போர் நிறுத்தத்தை கோரியும் கனடா, ஒன்ராறியோ மாநிலத்தில் உள்ள ரொறன்ரோ நகரில் அமைந்திருக்கும் இந்திய துணை தூதரகத்தின் முன்பாக நேற்று மாபெரும் கவனயீர்ப்பு நிகழ்வு நடைபெற்றது.
கனடிய தமிழ் மகளிர் அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த இக்கவனயீர்ப்பு நிகழ்வு நேற்று திங்கட்கிழமை காலை 9:30 நிமிடம் தொடக்கம் முற்பகல் 11:30 நிமிடம் வரை இடம்பெற்றது.
ரொறன்ரோவில் கடுங்குளிரான காலநிலை இருந்தும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தாயக மக்களின் அவலங்களை காண்பிக்கும் பதாதைகளை தாங்கியவாறு வீதியின் இருமருங்கும் அணிவகுத்து நின்றனர்.




"இந்தியாவே உடனடியாக போரை நிறுத்து"
"சிறிலங்காவிற்கு ஆயுத உதவிகளை நிறுத்து"
"சிறிலங்கா அரசே தமிழ் மக்களைக் கொல்லாதே"
"இந்தியாவே தமிழ் மக்களைக் காப்பாற்று"
போன்ற வாசகங்களை தாங்கியும், முழக்கமிட்டும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினர்.
அத்துடன், தாயக பேரவலத்தை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் மாற்று இன மக்களுக்கு வழங்கி கவனத்தை ஈர்க்கச் செய்தனர்.
 










 

http://www.puthinam.com/full.php?2b34OOK4b33C6Df04dctVo0da0eA4AK24d2ISmA3e0dK0Mtbce02f1eW2cc4OcY4be

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP