சமீபத்திய பதிவுகள்

மனிதப் பேரவலப் பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான்

>> Friday, December 25, 2009

 

 


மக்கள் வாழ்வுக்கு அச்சுறுத்தல் நிறைந்த முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இலங்கையும் பாகிஸ்தானும் இடம்பெற்றுள்ளன. எல்லைகளற்ற மருத்துவர்கள் (எம்எஸ்எஃப்) என்கிற சர்வதேசத் தன்னார்வ அமைப்பு இந்தப் பட்டியலை வெளியிட்டுள்ளது.

1998-ம் ஆண்டிலிருந்து தற்போதுவரையான உலக மனிதப் பேரவலங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. உலகமெங்கும் உள்ள இந்த அமைப்பின் மருத்துவர் குழுக்கள் அனுப்பிய அறிக்கைகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இலங்கை, பாகிஸ்தான், சூடான் ஆகிய நாடுகளில் உயிர்காக்கும் சேவைகளை வழங்க முன்வந்த அந்த நாடுகளின் அரசுகளே தடுத்துவிட்டதாக எம்எஸ்எஃப் குறைகூறியிருக்கிறது. யேமன், ஆப்கன், பாகிஸ்தான், காங்கோ போன்ற நாடுகளில் சேவை புரிந்தவர்கள் நேரடியாகத் தாக்கப்பட்டனர் என்றும் எம்எஸ்எஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source:dinamani

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மூளைக்கு ‘ஓவர் லோடு’: சிந்திக்கும் திறன் இழக்கும் அபாயம்

 


1  

இன்றைய நிலையில் மூளைக்கு அதிகமான தகவல்களை "ஓவர் லோடு' செய்வதால், மனிதர்கள் ஆழ்ந்து சிந்திக்கும் திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
எங்கும், எதிலும் கம்ப்யூட்டர் மயமாகிவிட்ட இக்காலத்தில், தகவல் தொடர்பு அதிகரித்து, மக்கள் ஏராளமான விஷயங்களை தெரிந்து கொள் கின்றனர். குறிப்பாக, தொலைக்காட்சி, இன்டர்நெட், இ-மெயில் உள்ளிட்ட பல ஊடகங்கள் மூலம் தினசரி ஒரு லட்சம் வார்த்தைகள், அதாவது ஒரு வினாடிக்கு 23 வார்த்தைகளை மூளைக்குள் திணிக்கின்றனர்.
கடந்த 1980ம் ஆண்டில் 4 ஆயிரத்து 500 டிரில்லியன் வார்த்தைகள் மூளைக்குள் செலுத்தப்பட்டன. ஆனால், 2008ம் ஆண்டில் 10 ஆயி ரத்து 845 டிரில்லியனாக <உயர்ந்து விட்டது. இது 1980ம் ஆண்டை விட இரு மடங்குக்கும் அதிகம். இந்த கணக்கில் மக்கள் சாதாரணமாக உரையாடும் பேச்சு இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில், கம்ப்யூட்டர், தொலைக்காட்சி மற்றும் ஊடகங் களில் இருந்து பெறப்பட்ட தகவல்களில் மொத்த அளவு 3.6 ஜெட்டாபைட்ஸ் (3.6 எம்.என்., மில்லியன் கிகாபைட்ஸ்) என்று கணக்கிடப்பட்டுள்ளது.
இது குறித்து கம்ப்யூட்டர் மொழியில் கூறுவதென்றால் தினசரி 34 கிகாபைட்ஸ் மனித மூளைக்குள் திணிக்கப் படுகிறது. இது, ஒரு வாரத்தில் லேப்- டாப் கம்ப்யூட்டரில் செலுத்தப்படும் வார்த்தைகளின் எண்ணிக்கைக்கு இணையானது. தொடர்ந்து அதிகமான தகவல்கள் திணிக்கப்படுவதால் மூளையில் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது என்று கலிபோர்னியாவில் உள்ள சாண்டியாகோ பல் கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சாண்டியாகோ பல்கலைக்கழக துணை பேராசிரியர் ரோகர் பான் கூறுகையில்,"அதிக தகவல்களை திணிப்பதால், குறைந்தபட்ச இடைவெளி நேரத்தில் மூளை சோர்வடைந்து விடுகிறது. இதனால் ஆழ்ந்து சிந்திப்பது தடைபடுகிறது' என்கிறார். "பரபரப்பாக கம்ப்யூட்டரை இயக்கவும், மொபைல்போனில் பேசவும், "டிவி' பார்ப்பதிலும் ஆர்வம் காட்டும் தற்காலத்தில் மக்கள், அதற்காக அதிக நேரம் செலவு செய்கின்றனர். அதிகமாக சிந்திப்பதற்கும், உணர்வதற்கும் அவர்கள் நேரம் ஒதுக்குவதில்லை. மொத்தத்தில், தற்காலத்தில் உள்ளது போல முன் எப்போதும் இந்த அளவிற்கு மனித மூளைக்கு வேலை கொடுத்ததில்லை. இது பாதிப்பை ஏற்படுத்தும்' என்று நியூயார்க்கில் உள்ள மனநோய் மருத்துவர் எட்வர்டு ஹாலோவெல் தெரிவிக்கிறார்.
"கடந்த 20 ஆண்டுக்கு முன் கற்றதை விட, தற்போது, மக்கள் அதிகமாக கற்றுக் கொள்கின்றனர். இதனால், மூளையை பயன்படுத்துவது அதிகரித் துள்ளது. மூளையின் அளவு அதிகரிப்பது அதை பயன்படுத்துவதை பொறுத்தது. மூளையில் புதிய செல்கள் பிறப்பதும், புதிய நரம்பு இணைப்புகள் கிடைப்பதும், ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவங்களின் வாயிலாக கிடைக்கும் நிகழ்வுகளுக்கு ஏற்ப இருக்கும்' என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக நரம்பியல் பேராசிரியர் காலின் பிளாக்மோர் கூறுகிறார்.


source:dinakaran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்துவாக அங்கீகரிக்கக்கோரி மலேசிய கோர்ட்டில் பெண் மனு


 

கோலாலம்பூர்:மலேசியாவில் வசிக்கும் இந்திய வம்சாவழி பெண், தன்னை இந்துவாக அங்கீகரிக்க கோரி, கோர்ட்டில் மனு செய்தார்.மலேசியாவை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மனைவி சித்தி ஹாஸ்னா(27).இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மலேசிய கோர்ட்டில் ஹாஸ்னா ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "நான் ஐந்து வயது சிறுமியாக இருந்த போது தெருவில் சுற்றித் திரிந்தேன். பங்காரம்மா என்ற பெயர் கொண்ட என்னை தத்தெடுத்த, சமூகத் தொண்டு அமைப்பினர், சில சடங்குகளை செய்து, என்னை முஸ்லிமாக அறிவித்தனர். சிறுவயதில் புரியாத மொழியில் அவர்கள் சொன்ன வாக்குறுதியை என்னால் பின்பற்ற இயலவில்லை. தற்போது, நான் இந்து மத முறைப்படி வாழ்ந்து வருகிறேன். எனவே, என்னை இந்துவாக அறிவிக்க வேண்டும். முஸ்லிம் மதத்திலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்' என ஹாஸ்னா கூறிள்ளார். இந்த மனு குறித்து, இரண்டு வார காலத்திற்குள் பதில் அளிக்கும் படி முஸ்லிம் நல வாரியத்திற்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கருப்பையில் குழந்தையின் வளர்ச்சி


 

 

 தாயின் கர்ப்பப்பையில் சிசு வளர்ந்து பத்து மாதங்கள் கழித்து ஜனிப்பது தெரிந்த விஷயம்தான். கர்ப்பப்பையில் குழந்தையின் வளர்ச்சி  எப்படி என்று தெரியுமா? நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். குறிப்பாக குழந்தையை சுமக்கும் தாய்மார்கள் முப்பது  நாட்கள் வரை கருவின் நிலை தெளிவற்றதாகவே இருக்கும்.

ஒரு மாத காலத்திற்குப் பிறகு சிசுவின் வளர்ச்சியில் வேகம் தென்படுகிறது. கை,கால்கள் உருவாவதற்கான அடிப்படைக் குறிகள் இப்போது  தோன்றுகின்றன. மூளைப் பகுதியில் வளர்ச்சி ஏற்படுகின்றது. எட்டாவது வாரத்தில் தான் சிசுவுக்கு ஒரு தெளிவான உருவத் தோற்றம் உ ண்டாகிறது. அப்போது சிசுவின் வளர்ச்சி ஒரு அங்குலமாக இருக்கும்.

ஏழாவது வாரத்திலிருந்தே சிசுவின் உறுப்புகளில் இயக்க உணர்வு தோன்றி விடும். தசைகள் விரிந்து சுருங்கும் இயல்பினை பெற்றிருக்கும்.  அந்த சமயத்தில் மூக்குப் பகுதி உருவாகத் தொடங்கும். கை, கால்களில் விரல்கள் தோன்றிவிடும். கண்களின் பகுதி முழுமையடைந்தாலும் மூடியே இருக்கும். கருவில் உருவாகும் சிசு நான்காவது மாத வாக்கில் தனது கை விரல்களை நன்கு மடக்கி நீட்டக் கூடிய அளவுக்கு முன்னேற்ற கரமான வளர்ச்சியைப் பெற்று விடுகிறது. சிறுநீரகமும் உருவாகத் தொடங்கிவிடுகிறது. 

நான்காவது மாதத்தில் சிசுவின் உடல் வளர்ச்சி இரண்டு மடங்காகிறது. அதாவது அதன் உடலின் நீளம் நாலரை அங்குலமாகி விடுகிறது.

அதற்குப் பிறகு சிசுவின் எலும்புகளில் நல்ல வளர்ச்சி காணப்படும்.

ஐந்து, ஆறு மாதங்களில் சிசுவின் தலையில் முடி வளரத் தொடங்கி விடுகிறது. ஆனால் அதன் கண்களில் பெரிய மாறுதல்கள் ஏற்படுவதி ல்லை.

சிசு பிறக்கும் காலத்திற்குச் சற்று முன்தான் கண்களின் சீரான வளர்ச்சி. கண்களின் நிறம் ஆகியவற்றைக் காண முடிகிறது.

தாயின் வயிற்றிலிருந்து சிசு வெளியேறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பாகத்தான் உணர்ச்சி, அவை உணரும் உறுப்புகள் ஆகியன இயக்கம்  பெறுகின்றனவாம்.

ஏழு மாதங்கள் கடந்து சில நாட்கள் ஆனதும்,எலும்புகள் மற்ற உறுப்புகளின் வளர்ச்சி அனேகமாக முழுமை பெறுகிறது.

இப்படியாகக் கருவில் நடைபெறும் சிசுவின் வளர்ச்சி இயக்கத்தின் கால அளவு, அதாவது கரு உருவான பின் சிசுவின் கர்ப்ப வாச காலம்  266 நாட்களாகிறது. 


source:dinakaran

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP