சமீபத்திய பதிவுகள்

வான்புலிகள் பயன்படுத்திய புதிய குண்டுகள்: "சண்டே ரைம்ஸ்"

>> Wednesday, November 5, 2008

வான்புலிகள் கடந்த வாரம் நடத்திய தாக்குதலின் போது வீசப்பட்ட குண்டுகள் முன்னயை குண்டுகளில் இருந்து வேறுபட்டவை. இந்த குண்டுகள் வானிலேயே வெடிக்கும் தன்மை கொண்டவை என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

கடந்த வாரம் விடுதலைப் புலிகளின் இரு தளங்களுக்கு இடையில் நடைபெற்ற உரையாடலில் கறுப்பு பறவைகள், கறுப்பு காற்று என்னும் சொற்பிரயோகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததை படையினரின் புலனாய்வுத்துறை அவதானித்திருந்தது.

எனவே, விடுதலைப் புலிகள் ஒரு தாக்குதலை நடத்தப்போகின்றனர் என்பது எதிர்பார்க்கப்பட்டது.

முதலில் யாழ். குடாநாட்டில் உள்ள படையினர் மீது பீரங்கி தாக்குதலை நடத்தப் போகின்றனர் என ஊகித்த படைத்தரப்பு எச்சரிக்கைகளை விடுத்திருந்தது.

எனினும், அதற்கான விடை செவ்வாய்கிழமை இரவு தெரிந்துவிட்டது. வானம் தெளிவாக இருந்தது. இரவு 10:00 மணியளவில் வான்புலிகளின் இரு வானூர்திகள் அக்கராயன் பகுதி வான்பரப்பில் பறந்து செல்வதை 57 ஆவது படையணி படையினர் அவதானித்துள்ளனர்.

முறிகண்டிக்கு மேலாக பறந்த வானூர்திகள் பெரியமடு ஊடாக நாட்டன்கண்டலை அடைந்திருந்தது. 10:23 நிமிடமளவில் மன்னார் பகுதி படையினரின் தலைமையகமான தள்ளாடி தளத்தை அடைந்த வானூர்திகளில் ஒன்று மூன்று குண்டுகளை வீசியது.

வீசப்பட்ட இந்த குண்டுகள் முன்னயை குண்டுகளில் இருந்து வேறுபட்டவை என படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இந்த குண்டுகள் வானிலேயே வெடிக்கும் தன்மை கொண்டவை. இது முன்னைய குண்டுகளை விட தாக்குதிறன் அதிகமானவை. சி-4 வெடிமருந்து நிரப்பப்பட்ட இந்த குண்டுகள் 25 கிலோ நிறைகொண்டவை.

இதன் போது இரு இராணுவத்தினரும், வான்படையைச் சேர்ந்த ஒருவரும் காயமடைந்திருந்தனர். அதன் பின்னர் வானூர்தி விடத்தல்தீவுக்கு மேலாக பறந்து முல்லைத்தீவை அடைந்துவிட்டது.

இரண்டாவது வானூர்தி கட்டுக்கரைகுளத்திற்கு மேலாக பறந்து சிலாவத்துறைக்கு மேலாக சென்றது. இதனை வவுனியாவில் உள்ள இந்தியாவினால் வழங்கப்பட்ட இந்திரா-II கதுவீ அவதானித்துள்ளது.

இந்த கதுவீ வவுனியா தளம் மீதான தாக்குதலை தொடர்ந்து புதிதாக கொண்டு வரப்பட்டதாகும்.

மன்னார் பாலாவி பகுதியில் நிறுவப்பட்டுள்ள மற்றுமொரு இந்திரா கதுவீயிலும் வானூர்தி அவதானிக்கப்பட்டுள்ளது.

வானூர்தி வில்பத்து காட்டுப்பகுதிக்கு மேலாக பறந்து புத்தளத்தை அடைந்த போது 11:23 நிமிடமளவில் மிரிகம பகுதியில் நிறுவப்பட்டுள்ள சீனா தயாரிப்பான முப்பரிமான கதுவீ மற்றும் கட்டுநாயக்கா வான்படை தளத்தில் உள்ள இந்திரா கதுவீகளில் அவதானிக்கப்பட்டது.

இரு பரிமான கதுவீகள் திசையையும், தூரத்தையும் கணிப்பிட்ட போது, முப்பரிமான கதுவீகள் அதன் உயரத்தையும் கணித்திருந்தன.

வான்புலிகள் கொழும்பில் இருந்து 15 கி.மீ தூரத்தில், 10 கி.மீ தூரத்தில், 5 கி.மீ தூரத்தில் உள்ளனர் என்ற தகவல்கள் கொழும்பை அடைந்த வண்ணம் இருந்தன.

முதலில் வானூர்தி கட்டுநாயக்கா வான்படை தளத்தை நோக்கி வருவதாகவே கருதப்பட்டது. அதனை தொடர்ந்து யுஎல்-425 என்ற இலக்கமுடைய பாங்கொக்கில் இருந்து வந்த வானூர்தியும் கொங்கொங்கில் இருந்து வந்த கதே பசூபிக் வானூர்தியும் சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.

கொழும்பு நகரத்தின் வெளிச்சங்களும் அணைக்கப்பட்ட போது கொழும்பை அச்சம் சூழ்ந்து கொண்டது.

முப்படையினரின் தலைமையகங்கள், இரத்மலானை வானூர்தி நிலையம், கொழும்பு துறைமுகம், முக்கிய பிரமுகர்களின் இல்லங்கள் போன்றவற்றின் விளக்குகளும் அணைக்கப்பட்டதுடன், வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளும் தயார் நிலைக்கு கொண்டுவரப்பட்டன.

திடீரென வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகளின் தாக்குதல் தொடங்கியது.

ஆனால், வான்புலிகளின் வானூர்திகள் களனி பாலத்திற்கு மேலாக பறந்து வட்டமிட்டு களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மீது 11:46 நிமிடமளவில் மூன்று குண்டுகளை வீசிவிட்டு சென்றுள்ளன.

தாக்குதல் நடைபெறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் கதுவீ திரைகளில் இருந்து வான்புலிகளின் வானூர்தி மறைந்து விட்டது.

எனவே, அவர்கள் தாக்குதல் இலக்கினை நோக்கி மிகவும் தாழ்வாக பறந்து சென்றிருக்கலாம்.

ஆனால், அனல் மின் உற்பத்தி நிலையத்தில் இருந்த வானூர்தி எதிர்ப்பு பீரங்கிகள் ஏன் வானூர்தியை நோக்கி தாக்குதலை நடத்தவில்லை என்பது தெளிவில்லாமல் உள்ளது. இதன் இயங்குதன்மை மட்டுப்படுத்தப்பட்டது என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

வான்புலிகளின் தாக்குதலை தொடர்ந்து மின் உற்பத்தி நிலையத்தில் தீ பரவியது, தீயணைப்பு படையினர் ஒரு மணிநேரம் போராடி தீயை அணைத்திருந்தனர்.

மின்சக்தி மற்றும் எரிபொருள்துறை அமைச்சகத்தின் செயலாளாரின் கருத்தின் படி மின்பிறப்பாக்கிகளின் கட்டுப்பாட்டு தொகுதி மற்றும் குளிரூட்டும் தொகுதிகள் சேதமடைந்ததாக தெரியவந்துள்ளது.

திருத்தப் பணிகளுக்கு 100 மில்லியன் ரூபாய்கள் செலவாகும் என அவர் தெரிவித்துள்ள போதும், அதனை விட அதிகமான தொகை தேவை என மூத்த பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். திருத்த வேலைகள் பூர்த்தியாக ஆறு மாதங்கள் எடுக்கலாம்.

வான்புலிகளின் வானூர்திகளை தாக்குவதற்கு கட்டுநாயக்கா வான்படை தளத்தில் இருந்து இரு எஃப்-7 வானூர்திகள் எழுந்த போது அவற்றில் ஒன்றின் சில பகுதிகள் உடைந்து வீழ்ந்ததனால் அது தரையிறக்கப்பட்டது.

பின்னர், வானோடி வேறு ஒரு வானூர்தியை எடுத்துச் சென்றிருந்தார். இந்த வருடத்தின் தொடக்கத்தில் வான்படை ஆறு எஃப்-7 வானூர்திகளை கொள்வனவு செய்திருந்தது. இந்த வானூர்திகள் வெப்பத்தை நாடிச்செல்லும் ஏவுகணைகளை உடையவை.

வான்புலிகளின் வானுர்தி வந்த பாதையால் திரும்பிச் சென்ற போது எஃப்-7 வானூர்தி அதனை மூன்று இடங்களில் தனது கதுவீ திரையில் அவதானித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், அதனை தமது தாக்குதல் இலக்கிற்குள் எடுக்க முடியவில்லை என வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தாக்குதல் இலக்கிற்குள் வானூர்தி உள்வாங்கப்பட்டாலே ஏவுகணை தொகுதி சுயமாக இயங்கும்.

எஃப்-7 வானூர்திகள் ஏழு தடவைகள் பறப்புக்களை மேற்கொண்ட போதும் வான்புலிகளின் வானூர்தி வன்னியை அடைந்து விட்டது.

வான்புலிகளின் வானூர்திகள் அவற்றின் வெப்பக்கதிர்களை வெளிவிடும் தன்மையை மாற்றி அமைத்துள்ளதாக வான்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனவே தான் எஃப்-7 வானூர்தியின் தாக்குதல் இலக்கில் இருந்து அது தப்பியுள்ளது.

எனினும் கடந்த ஊதா கதிர்களை குழப்பும் சாதனங்களை வான்புலிகள் பயன்படுத்தியிருக்கலாம் என பிறிதொரு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எஃப்-7 வானூர்தியே சிலின்-143 வானூர்திகளை தவறவிடும் போது அரசு எவ்வாறு மிகவும் நவீன மிக்-29 வானூர்திகளை கொள்வனவு செய்ய முயற்சித்திருந்தது என்பது தொடர்பாக தற்போது கேள்விகள் எழுந்துள்ளன.

மேலும், வான்புலிகள் தரையிறங்கிய இடத்தையும் வானில் பறப்பில் ஈடுபட்ட வானூர்திகளால் கண்டறிய முடியவில்லை.

இதனிடையே, கொழும்பை நோக்கி பறந்த வான்புலிகளின் வானூர்தியையும் படையினரின் எஃப்- 7 வானூர்தியையும் கடற்படையினர் தமது கடந்த ஊதா கதிர்களில் இயங்கும் ஒளிப்படக்கருவிகள் மூலம் படமாக்கியுள்ளனர். அதனை கடந்த புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் கடற்படை தளபதி அரச தலைவருக்கு காண்பித்துள்ளார்.

வான்புலிகளின் தாக்குதலில் பல விடயங்கள் தெளிவாகியுள்ளன.

முதலாவது தாக்குதல் வானூர்தி 45 நிமிடங்களில் தனது தாக்குதலை முடித்து கொண்டு திரும்பிவிட்டது.

இரண்டாவது வானூர்தி கொழும்பை அடைவதற்கு ஒரு மணிநேரம் 46 நிமிடங்கள் எடுத்துள்ளது.

அதே அளவு நேரத்தையே அது திரும்பி செல்வதற்கும் எடுத்திருக்கும். இது எட்டாவது தடைவை மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்.

இந்த தகவல்கள் கொழும்பு தலைவர்களை கடுமையாக பாதித்திருக்கும் என்பது உண்மை.

இதனிடையே களனிதிச அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு மேலாக எஃப்-7 வானூர்தி வெப்பத்தை நாடிச்செல்லும் ஏவுகணையை ஏவியிருந்தால் அது அதிக வெப்பத்தை வெளிவிடும் மின்நிலையத்தையே தாக்கியிருக்கும், அதனால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டிருக்கும் என மின்நிலைய பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த செவ்வாய்கிழமை வான் தாக்குதலை நடத்திய வான்புலிகளுக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் நீலப்புலிகள் விருதை முல்லைத்தீவில் உள்ள இடம் ஒன்றில் வழங்கியதாக தமிழ் இணையத்தளங்கள் படம் வெளியிட்டுள்ளன.

வான்புலிகள் தமது வான்பாதுகாப்பு பொறிமுறைகளை தாண்ட முடியாது எனவும் அவ்வாறு வந்தால் அதற்கான விளைவுகளை சந்திப்பார்கள் எனவும் வான்படையின் மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து வந்த நிலையில் வான்புலிகள் கடந்த செவ்வாய்கிழமை வெற்றிகரமாக தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர் என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் : kusnacht siva
http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1225602359&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...

தப்பியோடும் இராணுவத்தினரால் சிறிலங்கா படையினருக்கு நெருக்கடி

தப்பியோடும் இராணுவத்தினரால் சிறிலங்கா படையினருக்கு நெருக்கடி
இராணுவத்திலிருந்து பெருமளவானோர் தப்பியோடுவதனால் சிறிலங்கா படையினர் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவல்களில் முக்கிய பகுதிகள் வருமாறு:

2006 ஆம் ஆண்டு வரை இராணுவத்திலிருந்து 9,500 பேர் தப்பியோடியுள்ளதாக "ராவய" சிங்கள வார ஏடு தெரிவித்திருந்தது.

ஆனால், ஆய்வு செய்யப்பட்ட அறிக்கைகளின் படி போர் தொடங்கியதிலிருந்து 25,000 படையினர் தப்பியோடியுள்ளனர். அவர்கள் பின்னர் அதிகாரபூர்வமாக விலக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆனால், தற்போது இராணுவத்திலிருந்து தப்பியோடுவோர் அண்மையில் படையில் இணைந்தவர்கள் ஆவர்.

2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 15,000 பேர் தப்பியோடியுள்ளனர். இது கணிசமான தொகையாகும்.

இராணுவத்திலிருந்து அதிகளாவானோர் தப்பியோடி வருவதனால் முன்னணி அரங்குகளில் பணியாற்றும் படையினர் அதிகாரிகளால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றனர்.

படையினரின் பகுதிகளில் இருந்து செல்லும் பேருந்துகளும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. பேருந்துகளில் இராணுவத் தரப்பைச் சேர்ந்தவர்களின் தோற்றத்துடன் காணப்படுவோர் தனியாக அழைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர்.

கடந்த ஓகஸ்ட் மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் வன்னிக் களமுனைகளில் இருந்து 700-க்கும் அதிகமான இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர்
தகவல் : kusnacht siva
http://www.swisstamilweb.com/cutenews/show_news.php?subaction=showfull&id=1225863208&archive=&start_from=&ucat=&

StumbleUpon.com Read more...

கும்ளே சிறந்த வீரர்:மிஸ்பா புகழாரம்

lankasri.com"உலக கிரிக்கெட் அரங்கில் கும்ளே மிகச் சிறந்த வீரர்.போராட்டக் குணம் கொண்ட அவரது ஓய்வு, இந்தியாவுக்கு இழப்பு" என்கிறார் மிஸ்பா உல் ஹாக்.இந்திய கிரிக்கெட் அணியின் சுழல் ஜாம்பவான் அனில் கும்ளே.

சமீபத்தில் டில்லியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன்,தனது 18ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்றார்.

இவரது ஓய்வு குறித்து பாகிஸ்தான் அணியின் துணை கேப்டன் மிஸ்பா உல் ஹாக் கூறுகையில்,"கும்ளே ஓய்வு அறிவிப்பு,இந்தியாவுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.ஆடுகளத்தில் போராட்டக் குணம் கொண்டவர் கும்ளே.விளையாட்டின் மீது அவருக்குள்ள உண்மையான ஈடுபாடு,அவரை மரியாதைக்குரிய இடத்தில் வைத்துள்ளது.ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இடையிலேயே அவர் ஓய்வை அறிவித்தது எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. இருப்பினும் ஒரு சீனியர் வீரரான கும்ளேவுக்கு,எப்பொழுது ஓய்வு பெற வேண்டும் என்பது நன்றாகவே தெரியும்" என்றார்.

சரியான முடிவு:கும்ளேவின் ஓய்வு குறித்து பாகிஸ்தானின் அப்ரிதி கூறியதாவது:கும்ளேவின் இடத்தை யாராலும் ஈடுசெய்ய முடியாது.ஆனால் கும்ளே சரியான நேரத்தில் தான் ஓய்வை அறிவித்திருக்கிறார்.உயர்வும்,மதிப்பும் இருக்கும் போதே கும்ளே ஓய்வு முடிவை அறிவித்தது வரவேற்கத்தக்கது.இவ்வாறு அப்ரிதி கூறினார்.
Lankasri Sports : SiGaRaM
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1225874361&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

ஒபாமாவுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து (பட இணைப்பு)

 
 
lankasri.comஅமெரிக்க அதிபர் தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி சார்பில் மெக்கைன் போட்டியிட்டார்.72வயதாகும் இவர் வியட்நாம் போரில் ஈடுபட்டவர். இவர் அதிபர் தேர்தலில் தோற்றுப் போனார்.தனதுசொந்த மாநிலமான அரிஜோனாவில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.அப்போது தோல்வியை ஒப்புக் கொள்வதாகவும்,வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் கூறினார்.

அவர் மேலும் பேசுகையில்,அமெரிக்கர்கள் அனைவரும் வேற்றுமையை மறந்து நமது பேரக்குழந்தைகளுக்காக,எதிர்கால சந்ததியினருக்காக அமெரிக்காவை வலிமையான நாடாக விளங்க உழைப்போம்.அமெரிக்காவை எதிர் நோக்கியுள்ள சவால்களை சந்திக்க ஒபாமாவுக்கு நான் முழுஒத்துழைப்பு அளிப்பேன் என்றார்.

ஒபாமாவுக்கு அமெரிக்க அதிபர் புஷ் டெலிபோனில் வாழ்த்து தெரிவித்தார்.அப்போது புஷ்கூறியதாவது:-

அமெரிக்காவின் அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்ட உங்களை என் சார்பிலும் என் மனைவி சார்பிலும் வாழ்த்துகிறேன்.அத்துடன் உங்களுடன் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த உங்களதுகுடும் பத்தினருக்கும்,ஆதரவாளர்களையும் வாழ்த்துகிறேன்.

வாழ்க்கையில் நெடியபயணம் மேற்கொண்டுள்ளீர்கள்.அதை எளிமையாக நடக்க உதவுவேன் என உறுதியளிக்கிறேன்.வாழ்த்துகிறேன் மகிழ்ச்சியை சந்தோஷமாக கொண்டாடுங்கள்.

இவ்வாறு புஷ் கூறினார்.

ஒபாமாவையும் அவரது குடும்பத்தினரையும் வெள்ளை மாளிகைக்கு விரைவில் வருமாறும் புஷ் அழைப்பு விடுத்தார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் கிளிண்டன்,அவரது மனைவி கிளாரி கிளிண்டன்,பிரான்ஸ் அதிபர் நிக்கோலஸ் சர் கோசி,நியூசிலாந்து அதிபர் ஹெலன் கிளார்க் மற்றும் உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவில் இருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியும்,பாரதீய ஜனதா சார்பில் செய்தி தொடர்பாளர் முக்தார் அப்பாஸ் நக்வி ஆகியோரும் வாழ்த்து தெரி்வித்துள்ளார்கள்.

ஒபாமாவுக்கு அமெரிக்கா வாழ் இந்தியர்கள் அமைப்பு சார்பில் அதன் தலைவர் சந்சிங்சத்வால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்து எடுக்கப்பட்ட ஒபாமாவை வாழ்த்துகிறேன்.உங்கள் ஆட்சியில் இந்தியா-அமெரிக்கா இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தேசிய ஓவர்சீஸ் காங்கிரஸ் பொது செயலாளர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் புஷ் ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாக இந்தியா-அமெரிக்கா இடையே அரசியல் மற்றும் மக்களிடையேயான நட்புறவும் வளர்ந்து வரலாற்று சாதனை படைத்தது. அது தங்கள் ஆட்சியிலும் நீடிக்கும் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

 
lankasri.com


 
lankasri.com


 
lankasri.com


 
lankasri.com


 
lankasri.com

 

 
 

StumbleUpon.com Read more...

பராக் ஒபாமாவுக்கு போப்பாண்டவர் வாழ்த்து

 
 
lankasri.comஅமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள பராக் ஒபாமாவுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மதத் தலைவர் போப்பாண்டவர் 16-வது பெனடிக்ட் வாழ்த்து தெரிவித்தார்.

இது தொடர்பாக ஒபாமாவுக்கு அவர் அனுப்பிய வாழ்த்து மடலில்,உலகம் முழுவதும் அமைதி தவழ,நல்லெண்ணம் கொண்டவர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனை போப்பாண்டவரின் செய்தித் தொடர்பாளர் பெட்ரிகோ லம்பார்டி,வாடிகனில் புதன்கிழமை தெரிவித்தார்.

 

 

StumbleUpon.com Read more...

ஆர்எஸ்எஸ் தலைவர் சுட்டுக்கொலை

ஒரிசாவின் கந்தமால் மாவட்டத்தில் ஆர்எஸ்எஸ் தலைவர் ஒருவர் மாவோயிஸ்டுகள் என சந்தேகிக்கப்படுபவர்களால் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டார்.இதனால் ஒரிசாவில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.கந்தமால் மாவட்டத்தைச் சேர்ந்த உள்ளூர் ஆர்எஸ்எஸ் தலைவர் தனு பிரதான்.

இவரை குமரிகாவ்ன் கிராமத்தில் வைத்து மாவோயிஸ்டு தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்படும் 3பேர் புதன்கிழமை மதியம் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி கந்தமால் மாவட்டத்தில் விஎச்பி தலைவர் லட்சுமணனாந்த சரஸ்வதி மாவோயிஸ்டுகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1225919513&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

வான் புலிகளுக்கு விருது வழங்கினார் பிரபாகரன்

இலங்கை ராணுவத்திற்கு எதிராக விமான தாக்குதல் நடத்திய விடுதலைப் புலிகளின் வான் படையைச் சேர்ந்தவர்களுக்கு நீலப்புலிகள் மற்றும் மறவர் விருதுகளை வழங்கி, பிரபாகரன் கவுரவித்தார்.

இலங்கையில் ராணுவ முகாம்கள் மீது வான் தாக்குதலில் சிறப்பாக செயல்பட்ட விடுதலைப் புலிகளுக்கும், கர்ணல் கிட்டு பீரங்கி படையின் போராளிகளுக்கும் விடுதலைப் புலிகளின் இயக்கத்தலைவர் பிரபாகரன் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

ரகசியஇடம் ஒன்றில் நேற்று நடைபெற்ற இந்த விருது வழங்கும் விழாவில்,இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் பலியான கரும்புலி மாவீரர்களுக்கு பிரபாகரன் விளக்கேற்றி, மாலை சூட்டி அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து 3 முறைக்கு மேல் வெற்றிகரமாக தாக்குதல்களை நடத்திய விடுதலைப் புலிகளின் வான் புலிகளுக்கு மறவர் விருதை அவர் வழங்கினார்.

மேலும் கடந்த செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வவுனியா, இலங்கை கூட்டுப் படை தளம் மீதான தாக்குதல் நடத்திய வான் புலிகளுக்கும் கர்ணல் கிட்டு பீரங்கிபடை போராளிகளுக்கும் பிரபாகரன் சிறப்பு பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் விடுதலைப் புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், கட்டளை தளபதிகள், போராளிகள் உட்பட பலர் கலந்து கொண்டதாக புலிகள் ஆதரவு இணைய தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)

StumbleUpon.com Read more...

ஆமாம் நான் குழப்பவாதிதான்-‍ரஜினிகாந்த்

 
 09.11.08  ஹாட் டாபிக்

ப்போ நடக்கும், அப்புறம் நடக்கும்' என எதிர்பார்க்கப்பட்ட ரஜினி-ரசிகர்கள் சந்திப்பு கடந்த திங்களன்று நடந்தே முடிந்துவிட்டது. நவம்பர் முதல் தேதியன்று, தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் கலந்து கொண்ட கையோடு, யாரும் எதிர்பாராத நேரத்தில் தன்னுடைய ரசிகர்கள் முன் தோன்றி அவர்களுக்கு அருளாசி வழங்கியிருக்கிறார், சூப்பர் ஸ்டார். ஒகேனக்கல் பேச்சுக்கு கன்னடர்களிடம் வருத்தம், `குசேலன்' படத்தின் தோல்வி, அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் காட்டிய எதிர்ப்பு, அந்தப் படத்தில் பேசிய வசனத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்ட அதிருப்தி என தன்னைச் சுற்றி சூறாவளியாகச் சுழன்ற பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா? என்ற எதிர்பார்ப்பு பல தரப்புகளிலும் கிளம்பியிருந்த நிலையில்தான் இந்தச் சந்திப்பு நடந்து முடிந்திருக்கிறது.

தலைமை மன்றத்தில் இருந்து தொலைபேசி மூலமாக இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல் கிடைத்ததும் கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தின்  முன்பு ஞாயிற்றுக்கிழமை இரவே ரஜினியின் பக்தகோடிகள் குவிந்துவிட்டார்கள். அதிகாலையில் இருந்து மாவட்டவாரியாக நிர்வாகிகள்  மண்டபத்துக்குள் அழைக்கப்பட்டு, ரஜினியிடம் கேட்க விரும்பும் கேள்விகள் எழுதி வாங்கப்பட்டன. அரசியல் தொடர்பான கேள்விகளுக்குத் தடை விதித்திருந்தார்கள். ஆங்கில செய்திச் சேனல்களின் லைவ் வாகனங்கள் உள்பட நிருபர்கள், போட்டோகிராபர்கள், வீடியோகிராபர்கள் என கல்யாண மண்டபமே களேபரமானது.

வெளியிலும், மண்டப வளாகத்திலும் காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள் உள்ளே செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அவர்களை அமைதிப்படுத்த முயன்று மைக்கில் கத்திக் கொண்டிருந்தார், அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்திய நாராயணா. மண்டபம் அமைந்துள்ள சாலை, போலீஸாரால் சீல் வைக்கப்பட்டது. ரஜினி எப்போது வருவார்? எப்படி வருவார் என எல்லோர் கண்களும் மண்டபத்தின் வாசலை நோக்கி இருக்க, சரியாக பத்து மணிக்கு மண்டபத்துக்குள் உள்ள கெஸ்ட் ஹவுஸில் இருந்து ரஜினி பிரசன்னமானார். தனக்கே உரிய வேகமான நடையில் மண்டபத்துக்குள் நுழைந்து, மேடையில் ஏறி மத்தியில் போடப்பட்டிருந்த நாற்காலியில், `படையப்பா' பாணியில், கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தார்.

உட்கார்ந்த வேகத்தில் எழுந்து மேடையின் இடது ஓரத்தில் போடப்பட்டிருந்த மைக் அருகே வந்து நின்றார். தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிபரப்பானது. பிறகு பேசத் தொடங்கிய ரஜினி, ``அனைவருக்கும் வணக்கம். உங்கள் எல்லோரையும் இந்த சந்தர்ப்பத்தில் சந்திப்பதில் ரொம்ப சந்தோஷம். நீங்கள் அமைதியாக இருந்தால்... முதலில் உங்களுடன் போட்டோ எடுப்பதாக இருந்தது. ஆனால் கூட்டம் அதிகமாகிவிட்டது. முந்நூறு பேர்தான் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன். குரூப் போட்டோ எடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை.

ஒருமுறை சச்சிதானந்தா சுவாமி பேசும்போது, `உங்களுக்கு என்ன வேண்டும் என்று எனக்குத் தெரியாது. உங்கள் சந்தேகங்களைக் கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன்' என்றார். அந்தக் கூட்டம் ரொம்ப சிறப்பாக நடந்தது. என்ன பிரச்னை யென்றால், எனக்கு அவ்வளவு அறிவு கிடையாது. சத்தி (நாராயணா)  உங்களிடம் சொல்லி கேள்விகள் வாங்கியிருக்கிறார். எதைக் கேட்பது? எதைக் கேட்கக் கூடாது என்றும் அவர் சொல்லியிருக்கிறார். முதலில் மீடியா, பிரஸ் வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால் பிரஸ்ஸை அவாய்ட் பண்ண வேண்டாம்; பண்ண முடியாது என்று அழைத்தோம். பிரஸ்ஸில் பத்துப் பேர் இருந்தால், பத்துக்கோடி ஜனங்கள் இருக்கிற மாதிரி இல்லையா? (பலத்த கைதட்டல்).

இது டிஃப்ரண்ட் கான்செப்ட். வெற்றிகரமாக இந்தக் கூட்டத்தை நீங்கள் நடத்திக் கொடுத்தால், ஒவ்வொரு ஆண்டும் இதுபோல் ஒரு சந்திப்புக் கூட்டம் நடத்தலாம்'' என்றார்.

மேடையின் வலது பக்க மைக்கில் ரஜினியின் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் நண்பரும், மேனேஜருமான சுதாகர், ரசிகர்கள் எழுதிக் கொடுத்த ஒவ்வொரு கேள்வியாக வாசிக்க, ரஜினி பதிலளித்தார்.

இந்த இனிய சந்திப்பு தொடருமா? (ரஜினி பாஸ்கர், நாகை மாவட்டம்)

``இதற்கு ஏற்கெனவே பதில் சொல்லிவிட்டேன்.''

உங்கள் ரசிகர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

``என்னுடைய ஃபேன்ஸ், முதலில் குடும்பத்தைப் பாருங்கள். உங்கள் குடும்பத்தை நீங்கள் பார்த்துக் கொண்டால் சமூகம் உங்களைக் கவனித்துக் கொள்ளும்.''

மனதில் உறுதியுள்ள நூறு இளைஞர்கள் விவேகானந்தருக்குக் கிடைக்கவில்லை. ஆனால் உங்களுக்கு நாங்கள் இருக்கிறோம். நல்ல பாதையை நீங்கள் காட்டுவீர்களா? (சேகர், நெல்லை)

``இதில் சந்தேகம் இல்லை. (பலத்த கரவோசை). நிறையப் பேர் இருக்கிறீர்கள். அதுதான் எனக்குப் பயமாக இருக்கிறது. வழி நடத்த பொறுப்பு ஜாஸ்தி இருக்கணும். ஒழுங்காக வழி நடத்த வேண்டும் . இல்லையென்றால், அமைதியாக இருக்க வேண்டும்.''

தமிழக மக்களின் அங்கீகாரம் பெற்ற அமைப்பு நம்முடையது. அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள மக்களுக்குச் செய்ய வேண்டிய பணி என்ன? (அமலன், கன்னியாகுமரி)

``எந்தப் பணியையும் இன்னும் முடிவு செய்யவில்லை. என் பணி ஆக்ட் பண்ணுவது. இப்போதைக்கு என் கவனம் `எந்திரன்'தான். அதுபற்றி நான் எதுவும் சொல்லக் கூடாது. இந்த மாதிரி ஒரு படம் இந்தியாவில் வந்ததே இல்லை. இந்தப் படம் பற்றி இந்தியாவே பேசும். பத்து ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தின் கதையை என்னிடம் சொன்னார்கள். பொருளாதாரம் இல்லாமல், அப்போது `சிவாஜி' கதையை ஓகே பண்ணினேன். எந்திரனின் பட்ஜெட் 150 கோடி. இது பத்தாது. அதனால்தான், மூன்று மொழியில் எடுக்கிறோம். நிறைய ஃபாரின் டெக்னீஷியன்கள் வேலை செய்கிறார்கள். `எந்திரன்' முடியட்டும்.''

அன்புத் தலைவா, மன்றக் கொடி, மன்றக் கட்டடம், உறுப்பினர் படிவம் இருந்தால் சமுதாயத்தில் ஒரு அந்தஸ்து இருக்குமே? மாவட்டந்தோறும் நலத்திட்டங்கள் செய்ய ஆவன செய்ய வேண்டும்! (பெரியசாமி, கடலூர்)

``அந்தஸ்தைத் தேடிப் போகக் கூடாது. தானே வரவேண்டும். சுயநலம் இல்லாமல் இருந்தால் அந்தஸ்து தானே வரும். பணம், ஜனங்கள் இரண்டையும் ஒரே இடத்தில் வைக்கக் கூடாது. அது தப்பாயிடும். எதிர்காலத்தில் என்னுடைய நேரடி கண்காணிப்பில் நலத்திட்ட உதவிகளைச் செய்வேன். என்னிடம் யாரும் பணத்தை எதிர்பார்க்காதீர்கள். உங்கள் பணத்தையும் எடுக்க மாட்டேன். யாரிடமும் பணம் வாங்க மாட்டேன்.''

விருப்பம் உள்ள அமைப்பில் சேர்ந்து பணியாற்றுங்கள் என்று சொன்னீர்கள். உங்களை விட்டு எந்த அமைப்புக்கும் செல்ல மாட்டோம். (நஸ்ருதீன், வேலூர்)

``நன்றி!'' (பலமாக சிரிக்கிறார். பலத்த கரவோசை)

இலவசத் திருமணங்கள், இலவச நோட்டுப் புத்தகங்கள் வழங்கும் நலத்திட்டங்களை நிறுத்தி விட்டீர்களே?

``முப்பது மாவட்டங்களிலும் இலவசத் திருமணங்கள் நடத்திவிட்டேன். அப்போது தெரிந்து செய்த உதவிகளை இப்போது தெரியாமல் செய்கிறேன்.''

பதிவு செய்யாத மன்றங்களைப் பதிவு செய்ய வேண்டும். புதிய மன்றங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்?

``பதிவு செய்யாத மன்றங்களை நானே உட்கார்ந்து , கவனித்துப் பதிவு செய்யப் போகிறேன். வருஷத்துக்கு மூன்று படங்கள் நடித்துக் கொண்டிருந்தேன். இப்போது, படங்கள் செய்வது குறைந்துவிட்டது. அதனால் புதிய மன்றங்களைப் பதிவு செய்ய விரும்பவில்லை.''

ரசிகர் மன்றத்துக்கு எதிராகச் செயல்படும் மன்ற நிர்வாகிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்!

``நன்றி.''

`குசேலன்' தோல்விக்குக் காரணம், கெஸ்ட் ரோலில் நடித்துவிட்டு நீங்கள் வாங்கிய இருபத்தைந்து கோடி ரூபாய் சம்பளம்தான் என்கிறார்கள்?

தீர்க்கமாக யோசிக்கிறார். ரசிகர்கள் கரவோசை எழுப்புகிறார்கள். ``பட பூஜையின் போதே வெறும் இருபத்தைந்து சதவிகிதம்தான் படத்தில் வருகிறேன் என்றேன். அதைத் திரும்பத் திரும்பச் சொல்ல வேண்டாம் என்று எனது குரு கே..பி. சார் என்னிடம் சொன்னார். `அந்தப் படத்தைத் தயாரிக்க நானே பணம் தருகிறேன். நாமே ரிலீஸ் செய்யலாம். படத்தின் ரிசல்ட்டைப் பார்த்துவிட்டு, விநியோகஸ்தர்களுக்கு விற்கலாம் என்று யோசனை சொன்னேன். அதைக் கேட்காமல் தெலுங்கு, மலையாளத் தயாரிப்பாளர்களைச் சேர்த்து, காண்ட்ராக்டில் எனக்கே தெரியாமல் கையெழுத்துப் போட்டுவிட்டார்கள். மூன்று தயாரிப்பாளர்களும் சேர்ந்து எனக்குச் சம்பளம் தந்தார்கள். அது பெரிய தொகைதான். ஆனால் இருபத்தைந்து கோடி இல்லை. படத்தை 62 கோடிக்கு விற்றது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. அதை நான் கெடுக்க வேண்டாம் என்று அமைதியாக இருந்துவிட்டேன்.

அந்தப்  படத்தை ரசிகர்கள் மறுபடியும் மறுபடியும் பார்த்தால்தான் போட்ட முதலீட்டை எடுக்க முடியும். யாரும் அந்தப் படத்தைத் திரும்பப் பார்க்கவில்லை. அந்தப் படத்தின் தலைவிதி அவ்வளவுதான். இதில் நான் எப்படி பொறுப்பாக முடியும்?''

ரசிகர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் சத்தியநாராயணாவை கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும்!

``கொஞ்ச நாட்களாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது. 88 வயதான அவரது தந்தையும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அவரையும் சத்திதான் கவனித்துக் கொண்டார். சத்தியை நான்தான் ஓய்வெடுக்கச் சொல்லியிருந்தேன்.''

முதலில் ராகவேந்திரர் சுவாமி என்றீர்கள். பின்னர், அருணாச்சலேஸ்வரர் என்றீர்கள். அப்புறம் பாபா என்கிறீர்கள். ஏன் இந்தக் குழப்பம்? (கணேசன், தஞ்சை)

``கேள்வி கேட்டது யாரு இல. கணேசனா? நான் மதம் மாறவில்லையே? அப்படி மாறினாலும் தப்பே இல்லை. இவர்கள் எல்லாம் ஆன்மிக குருக்கள். என்னை யாரும் வற்புறுத்த முடியாது. நான் ஒரு ஹிந்து. ஆன்மிகத்திலும் பல ஸ்டேஜ் இருக்கு. ஒவ்வொருத்தரையும் தெரிந்து கொள்கிறேன். ஹிந்து தர்மத்தில் பல ஸ்டேஜ் இருக்கிறது. இன்னும் ஆழமா, இன்னும் ஆழமா போய்க்கொண்டிருக்கிறேன். ராகவேந்திரர், ரமணமகரிஷி, பாபா இவர்கள் என் ஆன்மிக குருக்கள்.''

ரஜினி ரசிகர்களின் எதிர்காலம் என்ன? தொடர்ந்து நடிப்பீர்களா?

`` `எந்திரன்'தான் இப்போதை என் எதிர்காலம். தொடர்ந்து நடிப்பேனா என்று தெரியாது. பணத்துக்காகவோ, புகழுக்காகவோ நடிக்க மாட்டேன். தமிழ் மக்களுக்குப் பெருமை தரும் படங்களில் மட்டும் இனி நடிப்பேன்.''

கிருஷ்ணகிரி, நாச்சிக்குப்பம்தான் உங்கள் பூர்வீகம். அங்கு உங்கள் தாய், தந்தைக்கு நினைவிடம் கட்டலாமே?

``நல்ல யோசனை. கண்டிப்பாகச் செய்யலாம்.''

பத்திரிகையாளர்கள் உங்களைக் குழப்பவாதி என்று எழுதுகிறார்களே?

``பத்திரிகையாளர்களை வைத்துக் கொண்டு இந்தக் கேள்வி கேட்கலாமா? சில நேரங்களில் நான் கொஞ்சம் அப்படித்தான் நடந்து கொள்கிறேன். எதிலும் அனுபவம் வரவேண்டும் இல்லையா? தெரிந்தே தப்புச் செய்வது கிடையாது. சுயநலத்துக்காக நான் எதுவும் செய்வது கிடையாது. எனது அறிக்கையைக் குழப்பம் என்கிறார்கள். அந்த நேரத்தில் நான் அந்த முடிவை எடுக்காமல் இருந்திருந்தால் பெரிய குழப்பமே நடந்திருக்கும். புரிந்தவர்களுக்குப் புரியும்; புரியாதவர்களுக்கு நான் குழப்பவாதிதான். நான் முழுச்சிக்கிட்டேன். இனி என்னை யாரும் அப்படிச் சொல்ல முடியாது. சொன்னாலும் ஒன்றும் இல்லை.''

கன்னடர்களிடம் மன்னிப்புக் கேட்டீர்களா? வருத்தம் தெரிவித்தீர்களா? (உலகநாதன், கோவை)

``நான் முன்னால் போகப் பார்க்கிறேன். நீங்கள் பின்னாலேயே போகிறீர்கள். ஒகேனக்கலுக்கும் சினிமாக்காரர்களுக்கும் சம்பந்தம் கிடையாது. பெங்களூருவில் உள்ள நல்ல தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள்தான் ரிலீஸ் செய்கிறார்கள். கன்னடர்களும் தமிழ்ப் படங்களைத்தான் பார்க்கிறார்கள். அதுதான் அங்குள்ளவர்களுக்கு வயிற்றெரிச்சல். என்ன இருந்தாலும் `உதைக்கணும்' என்று நான் சொல்லியிருக்கக் கூடாது. அது நாகரிகம் இல்லை. அவர்களிடம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று நான் சொல்லிவிட்டேன். எனது ரசிகர்களும் `வரட்டும்' என்று கையில் கத்தியுடன் இருந்தார்கள். தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் வந்து, `ஏதாவது செய்யுங்கள்' என்று கேட்டார்கள். நம்மால் உருவான பிராப்ளம். நாம்தான் சரி செய்யணும் என்று வருத்தம்தான் தெரிவித்தேன். அதை மன்னிப்பு என்று பத்திரிகைகள் சொல்லிவிட்டார்கள். அதுவும் சுயநலத்துக்காகக் கேட்கவில்லை. பொதுநலத்துக்காகத்தான் கேட்டேன்.''

ரசிகர்களுக்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

``சினிமா ரசிகர்கள், ரஜினி ரசிகர்கள் என இரண்டு தரப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் நடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நீங்கள் கேட்டதால் சண்டை, டான்ஸ், காமெடி என்று வந்துவிட்டேன். எல்லாத்தையும் கலந்து கொடுக்க இப்போ தலையைப் பிச்சிக்கிறேன்.''

பிறந்த நாள் அன்று கூட உங்களைச் சந்திக்க முடியாதா? எங்களுக்கு என்ன செய்வீர்கள்? (ஜோதிகுமார், புதுவை)

``பிறந்த நாளன்று தனிமையில் அமர்ந்து `நான் ஏன் பிறந்தேன்?' என்று யோசிப்பேன். அதற்கே எனக்கு நேரம் சரியாகிவிடும். உங்களைச் சந்திக்க முடியாது. உங்களுக்கு எதைச் செய்தாலும் ஒழுங்காகச் செய்வேன்.''

இதன்பின்னர், கேள்விகள் முடிந்துவிட்டது என்று அறிவிக்கப்பட்டது.

மீண்டும் பேசத் தொடங்கிய ரஜினி, ``உங்கள் கேள்விகளுக்கு ஹேட்ஸ் ஆஃப்! வருஷா வருஷம் இது மாதிரி ஒரு சந்திப்பு இருக்கும். (கைதட்டல்). நாளைக்கு (செவ்வாய்) `சுல்தான்' ஷூட்டிங் இருக்கு. பதினான்காம் தேதி ஹைதராபாத்திலும் சென்னையிலும் `எந்திரன்' ஷூட்டிங். மேடையில் `கடமையைச் செய் பலனை எதிர் பார்' என்று எழுதியிருக்கிறேன். `பலனை எதிர்பார்க்காதே' என்று கண்ணன் சொன்னதை நானும் ஆரம்பத்தில் ஏற்றுக் கொண்டேன். ஆனால் அவர் சொன்னது மேல் மட்டத்தில் உள்ளவர்களுக்கு. நமக்கல்ல. வெளிநாடுகளிலும் `பலனை எதிர் பார்' என்றுதான் சொல்கிறார்கள். அரசியல் கேள்விகள் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அரசியலில் திறமை, புத்திசாலித்தனம், உழைப்பு இருந்தால் மட்டும் போதாது. நேரம், சந்தர்ப்பம், சூழ்நிலை இருந்தால் வெற்றி கிடைக்கும். 1996-ல் எனக்கு (நாற்காலியைக் காட்டி) `சீட் இருக்கு உட்காருங்கள்' என்றார்கள். யாரோ வெற்றியில் எனக்கு சீட் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

யாரிடமும் ஸ்டைல் பண்ணி சான்ஸ் கேட்டு சினிமாவுக்கு வரவில்லை. ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டில் இரண்டு வருஷம் படித்து சினிமாவைக் கற்றுக் கொண்டுதான் சினிமாவுக்கு வந்தேன். பலவந்தமாக அரசியலுக்குச் செல்வது, கட்டாயத் திருமணம் போலாகிவிடும். மறுபடியும் மறுபடியும் சொல்கிறேன். ஆண்டவன் கட்டுப்பாட்டில் நானிருக்கிறேன். கடவுள் சொன்னால் நாளைக்கே நான் தயார்!'' என்று ரஜினி முடித்ததும் தேசியகீதம் ஒலித்தது. பாட்டு முடிந்ததும் மின்னலென நடந்து மீண்டும் கெஸ்ட் ஹவுஸுக்குள் நுழைந்துவிட்டார்.

``குசேலன் தோல்வி மற்றும் கன்னடர்களிடம் வருத்தம் கேட்ட விவகாரத்தில் உங்கள் இமேஜில் சற்று சறுக்கல் ஏற்பட்டிருக்கிறது. பெரிய அளவில் தயாரிக்கப்படும் `எந்திரன்' படத்தின் வியாபாரம் இதனால் பாதிக்கக் கூடும் என்று, அந்தப் படம் சம்பந்தப்பட்டவர்கள் கொடுத்த பிரஷரால்தான் இந்தச் சந்திப்புக்கு ரஜினி ஓகே சொல்லியிருக்கிறார்'' என்று ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரே நம் காதில் போட்டுச் சென்றார்கள்.

இதற்கிடையே, ரசிகர்களுக்கு சாம்பர் சாதமும் தயிர் சாதமும் மதிய உணவாக வழங்கப்பட்டது. கெஸ்ட் ஹவுஸுக்குள் சென்ற ரஜினியிடம் பேட்டி எடுக்க நிருபர்களும், போட்டோ எடுக்க ரசிகர்களும் நீண்ட நேரம் காத்துக் கிடந்தார்கள். கடைசி வரை ரஜினி வெளியே வரவே இல்லை. இந்த இரு தரப்பினரின் காத்திருப்பு இனி தொடரும்!

ஸீ வெற்றி
படங்கள் : ஞானமணி

source:kumudam.com

StumbleUpon.com Read more...

காந்தி சொன்னதைதான் பிரபாகரன் செய்கிறார்

 
 09.11.08  ஹாட் டாபிக்

ரே நாள் இரவில்  குபீரென தமிழ் உணர்வாளர்கள் இதயத்தில் குடியேறிவிட்டார்கள் இயக்குநர்கள் சீமானும் அமீரும். இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட இவர்கள், ஏழு நாள் சிறைவாசத்துக்குப் பிறகு நிபந்தனை ஜாமீனில் விடுதலையாகியிருக்கிறார்கள். விடுதலையாகி வெளியே வந்த இவர்களை தமிழ் இயக்குநர்கள் பட்டாசு கொளுத்தி, மலர்க் கிரீடம் சூட்டி வரவேற்று மகிழ்ந்து போனார்கள். நீதிமன்ற உத்தரவுப்படி தினமும் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வருகிறார்கள். சிறை சென்று திரும்பிய அவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர், அவர்களின் பேச்சில் முன்பிருந்ததை விட வீரியம் கூடியிருந்ததை உணர முடிந்தது. "நாங்கள் பேசியதில் தவறில்லை'' என்பதை அவர்கள் தொனியில் கேட்கமுடிந்தது. மதுரையில் ஒரு விடுதியில் தங்கியுள்ள சீமானைச் சந்தித்தோம். கேள்விகளை முன்வைத்தபோது அவரின் பதில்கள் அக்னியாக வந்து விழுந்தன.

சென்னையில் சினிமா நடிகர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் குறித்து உங்கள் கருத்து என்ன?

``இலங்கைத் தமிழர்களைக் காக்க பல்வேறு இயக்கங்கள், கட்சிகள் போராடும்போது, தங்களது திரைப்பட வர்த்தகத்தை விரிவடையச் செய்ததில் ஈழத்தமிழர்களுக்கும் பங்குண்டு என்பதை திரைப்பட நடிகர்கள் மறக்கவில்லை. அதற்கு நன்றிக்கடனாக இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் ஈழத்தமிழர்களின் உரிமைக்காக யார் குரல் கொடுத்தாலும் அது பாராட்டுதலுக்குரியதே. உண்ணாவிரதத்தில் பங்கேற்ற கமல், ரஜினி உள்ளிட்ட முக்கிய நடிகர்கள் அனைவருமே தங்கள் உணர்வைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

`அடிப்படை உரிமைகள் மறுக்கப்படும்போது தீவிரவாதம் எழுந்தே தீரும்' என கமல் கூறியது சரியான வார்த்தை. `சர்வதேச ராணுவ பலத்தை வைத்துக்கொண்டு முப்பதாண்டுகளாகப் போராடியும் வெற்றி முடியவில்லையென்றால், உங்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளுங்கள்' என ரஜினி கூறியதும் சரியானதே. ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வரவேண்டும். அதாவது, ரஜினியின் கருத்தை இந்தியா உணரவேண்டும் என்பதே  என் விருப்பம். தமிழர்களின் உணர்வை இந்த உண்ணாவிரதம் சரியாக வெளிப்படுத்தியுள்ளது. நடிகர்களுக்கு சமூக அக்கறை இருப்பதை நிரூபித்திருக்கிறது.''

ரஜினியின் பார்வை இந்தியாவுக்கு வேண்டும் என்கிறீர்கள். அப்படியென்றால், இலங்கைப் பிரச்னையில் இந்திய நிலைப்பாடு குறித்து என்ன கருதுகிறீர்கள்?

``ஒருங்கிணைந்த இலங்கை மீது இந்தியாவுக்கு ஏன் அவ்வளவு அக்கறை எனப் புரியவில்லை. இலங்கையில் தமிழீழம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதை முடிவு செய்துவிட்டு, அதனடிப்படையில் இந்தியா செயல்படுகிறது. இலங்கையில் இருதரப்பினருக்கிடையே பிரச்னை. அப்படியிருக்கையில் இரு தரப்பினரிடையேயும் பேசுவதுதானே நியாயம். ராஜபக்ஷேவையும் அவரது ஆதரவாளர்களையும் வரவேற்கிறார்கள். பேசுகிறார்கள். ஆனால் ஏன் தமிழீழத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசுவதில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பி.க்களிடமாவது பேசலாமே.

இலங்கையைப் சேர்ந்தவர்களுக்கு இந்தியாவில் ராணுவப் பயிற்சி கொடுக்கிறார்கள். இது குறித்துக் கேட்டால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தியாவில் பயிற்சி கொடுப்பது வழக்கம் தான் என்கிறார்கள். அப்படியானால், பாகிஸ்தானைச் சேர்ந்தவனுக்கும் சீனாவைச் சேர்ந்தவனுக்கும் பயிற்சி கொடுப்பீர்களா? அவர்களுக்குக் கொடுப்பதும் சிங்களனுக்குக் கொடுப்பதும் ஒன்றுதான். இலங்கைப் பிரச்னைக்கு ராணுவத்தின் மூலம் தீர்வு காணமுடியாது என்று சொல்கிறீர்கள். அப்படியிருக்கையில் ஏன் ராணுவ உதவி செய்கிறீர்கள்? நீங்கள் கொடுத்த ஆயுதத்தை அவன் தமிழனை நோக்கித்தானே பிரயோகப்படுத்துகிறான். செஞ்சோலையில் குழந்தைகள் கொல்லப்பட்டபோது சிறு வருத்தம் கூட இந்தியா தெரிவிக்கவில்லையே. மனிதநேயம் இங்கு மரித்துப் போயிற்றா..?

சொந்த நாட்டில் ஐந்து லட்சம் தமிழ் மக்களை அகதிகளாக சிறைப்பிடித்து வைத்திருக்கிறது இலங்கை. தமிழர்கள் வாழும் பகுதிக்கு பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. அடிப்படைத் தேவைகள் ஏதும் செய்து தரப்படவில்லை. இதை ஏதும் கண்டிக்காத ஒரு நாடு, எப்படி மனிதநேயம் மிக்க நாடாக இருக்கமுடியும்? பொற்கோயிலில் நடந்த ராணுவ நடவடிக்கைகளை சீக்கியர்கள் மறக்கவும் மாட்டார்கள் மன்னிக்கவும் மாட்டார்கள் என்கிறார் மன்மோகன் சிங். அதேபோலத் தான் இலங்கையில் இந்திய அமைதிப்படை தமிழர்களுக்குச் செய்த அட்டூழியத்தை ஒருபோதும் தமிழன் மறக்கமாட்டான். மனித நேயத்தைப் புதைத்துவிட்டு  தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் செய்கிறது இந்தியா. இந்திய தலைமை, தமிழினத்துக்கு எதிராக உள்ளது. இங்கு நடப்பது இந்திய அரசல்ல.''

தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக நீங்கள் தொடர்ந்து பேசி வருகிறீர்களே?

``காந்தி சுடப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ். தடைசெய்யப்பட்ட இயக்கம். அப்போது யாரும் பேசவில்லையா? தடைசெய்யப்பட்ட ஓர் இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசக்கூடாது என்றால், அது சர்வாதிகார நாடாகத்தான் இருக்கமுடியும். இந்தியா சர்வாதிகார நாடு எனச் சொல்வீர்களேயானால் நான் ஏதும் பேசாமல் இருக்கத் தயார். ஆனால், இது ஜனநாயக நாடு. தடைசெய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாகப் பேச ஜனநாயக நாட்டில் உரிமை உண்டு என நான் நம்புகிறேன்.''

விடுதலைப்புலிகள் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறார்களே?

``அவர்கள் போரிடவில்லை. சர்வதேச ராணுவ உதவியுடன் தங்களைத் தாக்கும் இலங்கையிடம் இருந்து தற்காத்துக் கொள்ளவே போராடிக்கொண்டிருக்கிறார்கள்.. `ஜெயவர்த்தனே உண்மையான பௌத்தனாக இருந்திருந்தால், நாங்கள் ஆயுதம் தூக்கவேண்டிய அவசியம் வந்திருக்காது' என்பார் பிரபாகரன். அதுதான் உண்மை. தமிழர் பகுதியில் இலங்கை ராணுவம் ஆறாயிரம் முறை குண்டு வீசியிருக்கிறது. ஒவ்வொரு குண்டும் ஆயிரம் கிலோ எடை கொண்டது. சர்வதேச போர் முறைப்படி பள்ளிக்கூடங்கள், வழிபாட்டுத்தலங்கள், சிறார்கள்,  கர்ப்பிணிப் பெண்கள், நூலகம் போன்றவற்றின் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என உள்ளது. இதில் எதையும் இலங்கை ராணுவம் கடைப்பிடிக்கவில்லை. இதை ஏன் யாரும் கண்டிக்கவில்லை?

ஆயுதத்தைப் பயன்படுத்தி, அச்சுறுத்தி தமிழ்ப் பெண்களை பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்குகிறான் சிங்களவன். அதைத் தடுக்க வேண்டுமானால், அவன் பயன்படுத்திய அந்த ஆயுதத்தை எடுப்பதைத் தவிர வேறு எது தீர்வாக இருக்கமுடியும்? அங்கு விடுதலைப்புலிகள் நடத்துவது வீரஞ்செறிந்த அறப்போர். மரணத்தை முன்னிறுத்தி விடுதலைப் போரில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே நேரத்தில் விடுதலைப்புலிகள், மனிதநேயம் கொண்டவர்கள். இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்றும் நடப்பவர்கள். ஆனையிறவு போரில் நாற்பதாயிரம் சிங்களப் படைவீரர்களை விடுதலைப்புலிகள் சுற்றிவளைத்தார்கள். இந்தியா  போர் நிறுத்தம் செய்யக் கேட்டுக்கொண்டதால், அவர்கள் போர்நிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். இலங்கை என்றைக்காவது இப்படி மனிதநேயத்தை வெளிப்படுத்தியதுண்டா?''

தமிழீழம் கேட்பதுதானே பிரச்னை?

``தமிழீழம் கேட்பதை யார் தீர்மானிப்பது? அங்கு வாழும் தமிழ் மக்கள்தானே முடிவு செய்யவேண்டும். அவர்களிடம் யாராவது கருத்துக் கணிப்பு நடத்தினார்களா? இல்லையே! வாடகைக்கு வந்தவன் வீட்டைக் காலி செய்யமாட்டேன் என்றால் எப்படி பொறுத்துப் போகமுடியும்?''

விடுதலைப்புலிகள் இயக்கம் தீவிரவாத இயக்கமாகத்தானே கருதப்பட்டு வருகிறது?

``தீவிரவாதம், பயங்கரவாதம் என்பதைத் தீர்மானிப்பதெல்லாம் மக்களும் காலமும்தான். நான்கைந்து அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அறையில் உட்கார்ந்து கொண்டு அதைத் தீர்மானிக்கமுடியாது. நெல்சன் மண்டேலாவை எந்த நாடாளுமன்றம் தீவிரவாதி என்றதோ, அதே நாடாளுமன்ற வளாகத்தில் அவர் சிலை திறக்கப்பட்டது. எனவே காலம்தான் தீவிரவாதமா, பயங்கரவாதமா என்பதைத் தீர்மானிக்கும். இரு நாடுகளுக்கிடையே நடக்கும் போரில் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்களை, உள்நாட்டு போராட்டக் குழுவான விடுதலைப் புலிகள் மீது இலங்கை ராணுவம் பயன்படுத்துகிறது. இதற்கு பல நாடுகளும் ஆயுதங்களைத் தருகிறது. கொத்துக்கொத்தமாக ஓர் இனம் மடிய அது உதவுகிறது. இது ஒரு சர்வதேச பயங்கரவாதம். இதைக் கண்டிக்கத் துப்பில்லாத எந்த நாட்டினம் விடுதலைப்புலிகளைத் தீவிரவாதிகள் எனச் சொல்ல அருகதையற்றவர்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கம் ஓர் இனத்தின் விடுதலைக்கான இயக்கம். தமிழீழ மண்ணில் நடப்பது காந்திய வழியிலான போர்தான். `இனப் படுகொலை நடப்பதைப் பார்த்துக்கொண்டு அகிம்சையுடன் இருக்கமுடியாது. அதை அடக்க எந்த விதமான ஆயுதத்தையும் எடுக்கத் தயார்..' என காந்தி சொல்வார்.  காந்தி சொன்னதைத்தான் பிரபாகரன் செய்கிறார். `உலகின் எந்த மூலையில் ஒரு நாடு விடுதலைக்காகப் போராடுகிறது என்றாலும், அதை இந்தியா ஆதரிக்கும்' என பிரகடனப்படுத்தினார் நேரு. ஆனால் இந்தியா ஏன் தமிழீழ விடுதலையை ஏற்க மறுக்கிறது எனத் தெரியவில்லை.''

உண்ணாவிரதத்துக்கு வந்த நடிகர் எஸ்.வி. சேகர் இலங்கையின் உள் விவகாரங்களில் இந்தியா தலையிட முடியாது எனக் கூறியிருக்கிறாரே?

``எஸ்.வி. சேகரை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்த மக்களை எண்ணித்தான் வேதனைப்பட வேண்டியிருக்கிறது. ஈழத்தின் உள்நாட்டுப் பிரச்னையில் ராஜீவ்காந்தி தலையிட்டதால்தான் இன்றைக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது. நானூறு தமிழக மீனவர்கள் சுடப்பட்டார்களே... அது எந்த நாட்டுப் பிரச்னை என்கிறார் சேகர். குறைந்தபட்சம் கருத்துச் சொல்லியிருக்க வேண்டியதுதானே! ஈராக்கில் அமெரிக்கா தலையிட்டபோது சேகர் கேட்டிருக்கலாமே. அவருக்குப் புரிதல் அவ்வளவு தான்..''

சிறையில் இருந்த அனுபவம்..

``விருப்பத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்த பணி அது. சிக்கல் வரும் எனத் தெரியும். அதற்காகச் சொல்லவேண்டியதைச் சொல்லாமல் இருந்தால் என்னை என் தமிழ்ச் சமுதாயம் மன்னிக்காது...'' என ஆவேசத்தோடு முடித்துக்கொண்டார் சீமான்.

ஸீ ப. திருமலை
படங்கள் : ராமசாமி

``என் குடும்பத்தாரின் குறை நீங்கிவிட்டது!''

-அமீர்

இயக்குநர் அமீர் மதுரைக்காரர். தனது வீட்டில் இருக்கிறார். இவர் தந்தை காங்கிரஸ்காரர். காமராஜருக்கு நெருக்கமானவராம். "நான் மதுரை வரமாட்டேங்கிறேன் என்கிற என் குடும்பத்தாரின் குறை இப்போது நீங்கிவிட்டது" எனச் சிரித்துக்கொண்டே பேசத்தொடங்கினார்.

சிறை அனுபவம் எப்படி?

``தவறு செய்துவிட்டு சிறைக்குச் சென்றிருந்தால் பயம் இருக்கும்.   தமிழர்களுக்காக, என் இனத்துக்காகச் செல்கிறேன் என்ற பெருமைதான் இருந்தது. எனவே சிறை குறித்தான கவலை ஏதும் இல்லை. என்றாலும், இது புதுமாதிரியான அனுபவம். ஒரு முகாமிற்குச் சென்றது போலிருந்தது. பாதுகாப்பு கருதி எங்களை தண்டனைக் கைதிகளோடு வைத்திருந்தார்கள். நாங்கள் எந்தச் சலுகைகளும் கேட்கவில்லை. முதலில் தரையில் படுத்தோம். எலி தொந்தரவு காலை கடிக்கும் அளவு வந்துவிட்டது. பிறகு கட்டில் கொடுத்தார்கள். காலையில் சப்பாத்தி - சட்னி, மதியம் அரிசிச் சோறு தந்தார்கள். இரவில் பெரும்பாலும் நாங்கள் பழங்கள் சாப்பிட்டுக்கொள்வோம். டீ, காப்பி குடிக்கும் பழக்கம் இருவருக்கும் (சீமான், அமீர்) இல்லை என்பதால் குடிக்கவில்லை. கைதிகள் பிரியத்துடன் தந்த பால் இல்லாத காபியைச் சாப்பிட்டோம். பத்திரிகைகளைப் பொறுத்தவரை குமுதம் ரிப்போர்ட்டர் உள்பட வாரம் இருமுறை இதழ்களைத் தருவதில்லை. நாங்கள் கொண்டு போன புத்தகங்களைப் படிக்கவே எங்களுக்கு நேரம் இல்லை. அந்த அளவுக்குக் கைதிகள் எங்களிடம் வந்து குறைகளைச் சொல்லி ஆறுதல் தேடுவார்கள்.
கைதிகள் கொடுத்த கத்தைகத்தையான மனுக்களை சிறைத்துறை அதிகாரியிடம் நடவடிக்கைக்காக கொடுத்துவிட்டு வந்தேன்!'' என்றார் அமீர்.

source:kumudam.com

StumbleUpon.com Read more...

பயங்கரவாதத்தின் நிறம் காவி! - ஞாநி

 
இந்தத் தலைப்பில் இருக்கும் ஆச்சரியக் குறி உண்மையில் தேவையற்றது. காவி பயங்கரவாதம் அல்லது ஹிந்து பயங்கரவாதம் என்பது ஒன்றும் புதிதானதோ ஆச்சரியகரமானதோ அல்ல.
.

ஆனால் பயங்கரவாதத்தின் நிறம் இஸ்லாமியர்கள் பயன்படுத்தும் பச்சை அல்லது இடதுசாரிகளின் சிவப்பு என்று மட்டுமே நம் மனங்களில் பத்திரிகைகளும் ஊடகங்களும் நீண்ட காலமாகப் பதியவைத்து வந்திருக்கின்றன. காவியையும் பயங்கரவாதத்தையும் தொடர்புபடுத்தியதே இல்லை.
 
 காவி, சிவப்பு, பச்சை எல்லாமே நல்ல நிறங்கள். மனிதர்களின் தவறுக்காக நாம் நிறங்களை இழிவுபடுத்துகிறோம்.

இந்த வாரம்தான் சில ஆங்கில செய்தி சேனல்கள் பயங்கரவாதத்தின் நிறம் காவியாக மாறுகிறது என்றெல்லாம் தலைப்பிட்டு செய்தித் தொகுப்புகள் வழங்கியிருக்கின்றன.

 காரணம் மாலேகாவ்ன். மகாராஷ்டிர மாநிலத்தில் நாசிக் மாவட்டத்தில் இருக்கும் இந்தச் சிறுநகர்,  மதக் கலவரங்களுக்கும் மோதல்களுக்கும் குண்டு வெடிப்புகளுக்கும் தொடர்ந்து பெயர் வாங்கிய இடம். 2006ல் இஸ்லாமியர் வாழும் பகுதிகளிலும் மசூதி, கல்லறைப் பகுதிகளிலும் சைக்கிள்களில் வைக்கப்பட்ட குண்டுகள் வெடித்ததில் 37 பேர் இறந்தார்கள். நூற்றுக் கணக்கானோர் காயமடைந்தனர். இந்த கொடூரத்துக்குக் காரணமானவர்கள் என்று சொல்லி இஸ்லாமிய மாணவர் அமைப்பான சிமி உறுப்பினர்களை காவல்துறை கைது செய்தது.

 இப்போது ஒரு மாதம் முன்பு செப்டம்பர் 29 அன்று மோட்டார் சைக்கிளில் வைத்த குண்டு வெடிப்பில் ஆறு பேர் இறந்தனர். சுமார் 30 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

 இந்தக் கொடூரத்தைச் செய்தவர்கள் ஹிந்து பயங்கரவாதிகள் என்று இப்போது காவல்துறை அறிவித்திருக்கிறது. கைதாகியிருக்கும் நால்வரில் ஒருவர் பெண் `சாது'!

 சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி (வயது 38).  இரு வருடம் முன்பு சந்நியாசினி ஆனவர். அதற்கு முன் ப்ரத்ஞா சிங்காக இருந்தபோது விஸ்வ ஹிந்து பரீக்ஷத் அமைப்பில் பொறுப்பில் இருந்தார். அதற்கு முன்னால் 18 வருட காலம் பி.ஜே.பி.யின் மாணவர் பிரிவான அகில பாரத வித்யார்த்தி பரீக்ஷத்தில் உறுப்பினராக இருந்தவர்.  மீதி நான்கு கைதிகளும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர். குண்டு வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் சாத்விக்குச் சொந்தமானது.

 மாலேகாவ்னில் குண்டு வெடித்த அதே நேரத்தில் குஜராத்தில் மொடாசா என்ற ஊரிலும் மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்தது. அங்கே 16 வயதுச் சிறுவன் இறந்தான். பத்துப் பேர் காயமடைந்தனர். இந்தக் கொடூரத்திலும் சாத்வி கோஷ்டிதான் தொடர்புடையது என்று காவல்துறை கருதுகிறது.  இரு நிகழ்ச்சிகளிலும் ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பயன்பட்டிருக்கிறது.

 விஸ்வ ஹிந்து பரீஷத், பஜ்ரங் தளம் போன்ற பல்வேறு ஆர்.எஸ்.எஸ். அவதாரங்களையெல்லாம் மீடியா அதிகபட்சமாக மதவாத அமைப்புகள் என்று சொல்லுமே தவிர, பயங்கரவாத அமைப்புகளாக வர்ணித்ததில்லை. வெடிகுண்டு, ஆர்.டி.எக்ஸ். கொடூரங்கள் செய்பவர்கள் முஸ்லிம் பயங்கரவாதிகள்தான் என்ற கருத்தையே மீடியா பரப்பி வந்திருக்கிறது.

 ஆனால் ஆயுதப் பயிற்சி முதல் வெடிகுண்டுத் தயாரிப்பு வரை பல சம்பவங்களில் ஆர்.எஸ்.எஸ். அவதாரங்கள் ஈடுபட்ட செய்திகள் வெளிவந்தபோதும் அவை அடக்கி வாசிக்கப்பட்டன.  2006-ல் மகாராஷ்டிரத்தில் நாந்தெத் நகரில் ஆர்.எஸ்.எஸ். பிரமுகரும் ஓய்வு பெற்ற அரசு இன்ஜினீயருமான லக்ஷ்மண் ராஜ்கொண்டவார் வீட்டில் குண்டு வெடித்ததில் அவர் மகனும், இன்னொரு ஆர்.எஸ்.எஸ் ஊழியரும் இறந்தார்கள். நான்கு பேருக்குக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த ஒருவர் தப்பி ஓடி பின்னர் கைதானார். எல்லாரும் வெவ்வேறு ஊர்களைச் சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள்.

 ஆகஸ்ட் 2008-ல் கான்பூரில் குண்டு தயாரித்துக் கொண்டிருக்கும்போது ராஜீவ் மிஸ்ரா, பூபேந்திர சோப்ரா என்ற இரு ஆர்.எஸ்.எஸ். ஊழியர்கள் வெடிவிபத்தில் இறந்தார்கள்.  சுமார் நான்கைந்து வருடங்களாகவே மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்களின் மசூதிகளுக்கருகே குண்டுகள் வெடித்த பல நிகழ்ச்சிகளில், ஆர்.எஸ்.எஸ்.சின் வெவ்வேறு அவதார புருஷர்கள் சம்பந்தப்பட்டிருப்பது காவல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டது. 

 தமிழ்நாட்டிலேயே தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டு வெடிப்பு நிகழ்ச்சியில், குண்டு வைத்ததே ஆர்.எஸ்.எஸ்.சின் தமிழக அவதாரமான இந்து முன்னணிதான் என்பது அம்பலமாகிவிட்டது. ரவி பாண்டியன் என்ற இந்து முன்னணிக்காரரும் இன்னும் 7 இந்து முன்னணியினரும் இதில் கைதானார்கள். 2002-ல் ஈரோடு மாவட்டத்தில் சதுமுகை என்ற கிராமத்தில் அம்மன், விநாயகர், முனீஸ்வரன் சிலைகள், கோயில்கள் நாசப்படுத்தப்பட்டன. இதைச் செய்தது பெரியார் திராவிடர் கழகத்தினர் என்று காவல்துறையில் மாவட்ட இந்து முன்னணியினர் அதிகார பூர்வமாகப் புகார் செய்தார்கள். கடைசியில் துப்புத் துலக்கியதில் நாசவேலை செய்ததே இந்து முன்னணியைச் சேர்ந்த செல்வகுமார், மஞ்சுநாதன் என்ற இருவர்தான் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது போன்ற செய்திகள் சில சமயம் பத்திரிகைகளிலும் தொலைக்காட்சிகளிலும் வந்தாலும், அவற்றுக்கு தொப்பியும் தாடியும் வைத்த பயங்கரவாதிகள் சம்பந்தமுள்ள நிகழ்ச்சிகளுக்கு சமமான முக்கியத்துவம் தரப்படுவதில்லை. இஸ்லாமிய சிமி அமைப்பினர் கைதுகள் எல்லா தினசரிகளிலும் 4 காலம், எட்டுக் காலம் தலைப்புகள், முதல் பக்கச் செய்திகள். சாத்வி பூர்ண சேத்னானந்த் கிரி கைது ஒரு தினசரியிலும் முதல் பக்கத்தில் இல்லை. உள்ளேயும் சின்னதாக ஒரு மூலையில். ஹிந்து மத வெறி அமைப்பினர் குஜராத்தில் முஸ்லிம்களையும் ஒரிசாவில் கிறிஸ்துவரையும் கொத்துக் கொத்தாக கொன்றபோதும் சரி, இப்போது ஓரிரு சாமியார்கள் சிக்கும் போதும் சரி இதையெல்லாம் ஹிந்து பயங்கரவாதம் என்று வர்ணிக்கத் தயங்கும் நிலைதான் இருக்கிறது.

 


தவிர, பயங்கரவாதம் என்பது வெடிகுண்டும் ஆர்.டி.எக்ஸும் துப்பாக்கித் தாக்குதலும் மட்டுமா ? மனித மனங்களுக்குள் துவேஷத்தை வளர்ப்பது, அதை வளர்ப்பதற்காக வன்முறையில்லாமலே எல்லா விஷமங்களையும் செய்வதும் பயங்கரவாதம்தான்.   தன் வீட்டுக்குத் தானே தீ வைத்துக் கொண்டு பங்காளி மீது பழி போடுவது முதல், ஒருவர் கைதானதும் அவர் எங்கள் அமைப்பில் இல்லை எப்போதோ விலகிவிட்டார் என்று சமாதானம் சொல்வது வரை எல்லாமே விஷமமான உத்திகள்தான். காந்தியைக் கொல்வதற்கு முன்பாக கோட்சே ஆர்.எஸ்.எஸ்.சிலிருந்து விலகியதும் இஸ்மாயில் என்று கையில் பச்சை குத்திக் கொன்டதும் ஒன்றும் கருத்து வேறுபாட்டால் விலகவில்லை. அது ஒரு விஷமத்தனமான உத்தி.

 மதவெறி பயங்கரவாதம் பல வருடங்களாக இந்தியாவில் இருந்து வருகிறது. மேலை நாடுகளில் மத வெறி என்பது அரசியல் ஆட்சி நிர்வாக அமைப்பிலிருந்து பிரிக்கப்பட்ட பின்னர்தான் அங்கே இன்று காணப்படும் பொருளாதார, வாழ்வியல் மேம்பாடுகள் ஏற்பட்டன.இந்தியாவில் அரசியலுடன் மதத்தைப் பிணைப்பதையே கோட்பாடாகக் கொண்டு இயங்கிய ஹிந்து மகாசபாவின் தொடர்ச்சியாகவே ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி. முதல் முஸ்லிம் லீக், அல் உமா வரை பார்க்க வேண்டும். 

 தமிழ்நாட்டில் இந்து முன்னணியும் பிள்ளையார் ஊர்வலங்களும் 90_களில் வருவதற்கு முன்னால் அல் - உமா இல்லை. ஒரு மதத்தில் இயங்கும் மதவெறி அமைப்புதான் இன்னொரு மதத்தின் மதவெறி அமைப்பை போஷித்து வளர்க்கும் சத்துணவு.

 இன்று மதவெறியர்களின் பயங்கரவாதத்தின் முகம் மாறி வருகிறது. பாபர் மசூதியை இடிக்கத் திரண்ட கும்பலின் முகங்களைப் பார்த்தாலே தெரியும். படிப்பறிவு இல்லாமல், அடித்தட்டு வாழ்க்கையில் பொருளாதார நலிவுற்ற முகங்கள். இந்த முகங்களுக்கும் இஸ்லாமிய பயங்கரவாதிகளாகக் கைதாகும் முகங்களுக்கும் வேறுபாடுகள் இல்லை. ஒரே வேறுபாடு தொப்பியும் தாடியும்தான். ஏழ்மையும் படிப்பறிவின்மையும் பொதுத் தன்மைகள்.

ஆனால், நாம் எப்போதும் எய்தவர்களை விட்டுவிட்டு அம்புகளையே  துரத்திக் கொண்டு இருக்கிறோம். மத வெறி பயங்கரவாதத்தின் அசல் முகம் இந்த அம்புகளல்ல. இரு தரப்பிலும் அடிமட்டத் தொண்டர்களை உணர்ச்சிவசப்படுத்தி  நாச வேலைகளுக்கு மூளைச் சலவை செய்து அனுப்பி வைக்கும் முகங்கள், வளமான சொந்த வாழ்க்கை உடையவை. பெரும் பல்கலைக்கழகங்களில் உயர்படிப்புப் படித்து நவீன தொழில்நுட்ப அறிவுடன் இயங்கும் முகங்கள்.  முகத்தைப் பார்த்து இவர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்ல முடியாத முகமூடிகள் அணிந்த முகங்கள். வள்ளுவர் இதைத்தான் `மக்களே போல்வர் கயவர்' என்று குறித்திருக்கிறார்.

 இன்று இணையதளத்தில் ஒரு வாரம் உலவினால்  போதும்.  இந்த முகங்களைத் தரிசித்துவிடலாம். ஹிந்துத்துவா, பெரியாரியம், தமிழ் தேசியம், இஸ்லாமிய சர்வதேசியம், முழுமுச்சான முதலாளித்துவம், அதி தீவிர மார்க்சியம், என்று பல வகைக் கோட்பாடுகளை முன்வைக்கும் குரல்களின் ஊடே கலந்து ஒலிக்கும் பயங்கரவாதக் குரல்களும் உண்டு.  எழுதக் கூசும் வசைச் சொற்கள் முதல் எல்லா கேவலமான உத்திகளையும் கருத்துப் பரப்பலுக்காகப் பயன்படுத்தும்  குரல்களின் சொந்தக்காரர்களின் முகங்கள் நேர்த்தியானவை. அமைதியானவை. உயர் படிப்பும் தொழில்நுட்ப அறிவும் இணைந்த மூளைகளைச் சுமக்கும் முகங்கள்.

 பல பத்திரிகை, ஊடக அலுவலகங்களில் நான் சந்தித்திருக்கும் உயர் பொறுப்பினரில் சிலரின் தனிப் பேச்சுக்களில் மத, சாதி வெறிகள் எப்போதும் இழையோடுகின்றன. அவரவர் சாமர்த்தியத்துக்கு ஏற்ப இது பேச்சில் நாசூக்காகவோ, அல்லது கொச்சையாகவோ  வெளிப்படும். 
 

பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்கள் இவைதான். நம் மனங்கள்தான். மீண்டும் வள்ளுவரைத்தான் நினைவுபடுத்த வேண்டியிருக்கிறது. மனத்துக் கண் மாசிலன் ஆதல்தான் முதல் தேவை. மாசு படிந்த மனங்கள்தான் பயங்கரவாதத்தின் விதைகள். பயங்கரவாதத்துக்கென்று தனி நிறம் ஏதுமில்லை. அது ஒரு பச்சோந்தி. எல்லா நிறங்களிலும் வரும். அது காட்டுவது நிறமே அல்ல; கறை.

 இந்தக் கறையை நீக்கக்கூடிய ஒரே சோப்புத்தூள், மதம்&கடவுள் முதலியவற்றை அதிகபட்சம் வீட்டுக்குள்ளே மட்டும் வைத்துக் கொள்ளும் சமூகத்தை உருவாக்குவதுதான். உடனடியான தேவை பாரபட்சம் இல்லாமல் எல்லா மதங்களின் வெறி அமைப்புகளையும் தடை செய்யும் நடவடிக்கைதான். இதை ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி.யிலிருந்து தொடங்க வேண்டும்..

 

நன்றி: குமுதம்

StumbleUpon.com Read more...

அமெரிக்க அதிபர் தேர்தல் 2008

அமெரிக்க அதிபர் தேர்தல் 2008
 

 

 
 
 
 
 

StumbleUpon.com Read more...

3பேரிடம் கற்பிழந்த சிறுமியை கல்லால் எறிந்து கொன்ற தீவிரவாதிகள்-சோமாலியாவில் கொடூரச் செயல்

சோமாலியா நாட்டில் கற்பை பறிகொடுத்த சிறுமியை கல்லால் எறிந்து தீவிரவாதிகள் கொன்றனர்.சோமாலியா நாட்டின் கிஸ்மோ பகுதியை சேர்ந்தவர் துக்ளவ்.இவருடைய மகள் ஆயிஷா இப்ராகிம் துக்ளவ் (வயது 13).இந்த சிறுமியை 3காமுகர்கள் சேர்ந்து கதற கதற கற்பழித்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.

மகளின் பரிதாப நிலையை கண்டு துக்ளவ் தாரை,தாரையாக கண்ணீர் வடித்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதியில் உள்ள முஸ்லிம் தீவிரவாதிகளின் தலைவன்,"கற்பை பறிகொடுத்த ஆயிஷா உயிரோடு இருக்க கூடாது.அவளை கற்களால் எறிந்து மரண தண்டனை கொடுங்கள்" என்று தீவிரவாத கும்பலுக்கு உத்தரவிட்டான்.

அதன்படி கிஸ்மாயோ அருகே உள்ள சகபாப் என்ற இடத்தில் உள்ள அரங்கத்தில் ஒரு லாரி நிறைய கற்கள் கொண்டு வந்து குவிக்கப்பட்டது.

பொதுமக்கள் ஆயிரம் பேர் முன்னிலையில் 50தீவிரவாதிகள் தங்களுடைய தலைவன் உத்தரவுப்படி சிறுமி ஆயிஷா மீது சரமாரியாக கற்களை வீசி தண்டனையை நிறைவேற்றினர்.

இதில் உடல் முழுவதும் ரத்த காயம் அடைந்து துடிதுடித்து விழுந்த ஆயிஷாவை தீவிரவாதிகள் உயிரோடு சமாதியாக்கினார்கள்
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1225875776&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி-பராக் ஒபாமா பேச்சு

அமெரிக்க தேர்தலில் வெற்றி பெற்ற பராக் ஒபாமா சிகாகோவில் நடந்த கூட்டத்தில் தனது லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் பேசினார்.அப்போது அவர் கூறியதாவது:-அமெரிக்கர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை இந்த உலகுக்கு மீண்டும் ஒருமுறை உணர்த்தும் வகையில் எனது தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் எங்களை உருவாக்கியவர்களின் கனவு நனவாகி இருக்கிறது.நான் எப்போதும் சவால்களை நேர்மையுடன் எதிர்கொள்வேன்.இனி அமெரிக்காவில் நிறைய மாற்றங்கள் வரும்.

இந்த வெற்றி அமெரிக்கா உண்மையாகவே ஒருங்கிணைந்த நாடு என்பதை காட்டுகிறது.இந்த வெற்றி அமெரிக்க மக்களின் குரல்.நான் எப்போதும் நேர்மையுடன் இருப்பேன்.எந்த சவாலையும் நேர்மையுடன் சந்திப்பேன்.இது சவால்களை சந்திப்பதன் தொடக்கம்.

என் மனைவியும்,குழந்தைகளும் இல்லாமல் இந்த வெற்றி இல்லை.நான் அமெரிக்காவை என் உயிராக நேசிக்கிறேன்.அதன் வளர்ச்சிக்காக தொடர்ந்து கடுமையாக உழைப்பேன்.

தற்போது நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.அதை சீரமைக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பேன்.

இந்த நேரத்தில் நான் ஈராக் பாலைவனங்களிலும்,ஆப்கானிஸ்தான் மலைப் பகுதிகளிலும் நாள் முழுவதிலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் துணிச்சல் மிகுந்த அமெரிக்க வீரர்களை ஒரு கணம் நினைவு கூறுகிறேன்.அவர்கள் நமக்காக செய்து வரும் தியாகங்களுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது.அவர்களின் நலன்களை மேம்படுத்தவும் விரிவான திட்டம் வகுக்கப்படும்.

இவ்வாறு பராக் ஒபாமா பேசினார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1225875599&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

அமெரிக்க அதிபர் தேர்தல்: ஒபாமா அபார வெற்றி-அதிகஇடங்களை கைப்பற்றி புதிய வரலாறு படைத்தார்

lankasri.comஅமெரிக்க அதிபர் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். தற்போதைய அதிபர் ஜார்ஜ்புஷ்சின் பதவிக்காலம் வருகிற ஜனவரி மாதம் முடிகிறது. இதனால் அங்கு அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

ஜார்ஜ்புஷ்சின் குடியரசு கட்சி சார்பில் ஜான் மெக் கைனும் ஜனநாயக கட்சி சார்பில் பராக் ஒபாமாவும் போட்டியிட்டனர்.

அதிபர் தேர்தல் ஓட்டுப் பதிவு நேற்று முன்தினம் நள் ளிரவு தொடங்கியது. அமெ ரிக்காவில் மொத்தம் 50 மாகாணங்கள், ஒரு மாவட் டம் உள்ளது.

அனைத்து இடங்களிலும் தேர்தல் நடந்தது. ஒவ்வொரு மாகாணத்திலும் அங்குள்ள கால சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி ஓட்டுப் பதிவு நேரம் மாற்றி அமைக்கப்பட்டிருந் தது. எனவே இந்திய நேரப் படி இன்று பகல் 11.30 மணி வரையிலும் தேர்தல் நடந்தது.

ஒவ்வொரு மாகாணத்தி லும் ஓட்டுப் பதிவு முடிந் ததுமே உடனடியாக ஓட்டு எண்ணிக்கை தொடங் கியது.

அதில் தொடக்க முதலே ஒபாமாவுக்கு அதிக ஓட்டுகள் கிடைத்தன.

அமெரிக்க தேர்தல் முறைப்படி மக்களின் நேரடி ஓட்டு மூலம் அதிபரை தேர்வு செய்வது இல்லை. மக்கள் ஒவ்வொரு மாகாணத்திலும் கட்சிகள் சார்பில் நிறுத்தப் படும் தேர்வுக் குழு உறுப் பினர்களுக்கு (பிரதிநிதிகள்) ஓட்டுப் போட்டு அவர்களை தேர்வு செய்வார்கள். பின்னர் அவர்கள் ஓட்டு போட்டு அதிபரை தேர்வு செய்வார் கள்.

51 மாகாணங்களிலும் மொத்தம் 538 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட வேண் டும். இதில் யாருக்கு 270 உறுப்பினர்கள் கிடைக்கிறார் களோ, அவர்கள் அதிபராக வெற்றி பெறுவார்கள்.

ஒரு மாகாணத்தில் எந்த கட்சிக்கு அதிக உறுப் பினர்கள் கிடைக்கிறார் களோ அந்த கட்சியே அந்த மாகாணத்தின் ஒட்டு மொத்த உறுப்பினர்கள் இடத்தையும் கைப்பற்றியதாக கருதப்படும். எனவே எதிர்க்கட்சி வெற்றி பெற்று இருந்தாலும் கூட அதிக இடம் பெற்ற கட்சிக்கே அந்த இடம் போய்விடும்.

இன்று ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதுமே ஒபாமா வின் ஜனநாயக கட்சி உறுப் பினர்களே அதிகம் பேர் வெற்றி பெற்றனர்.

காலை நிலவரப்படி மொத்தம் 44 மாகாணங் களின் முடிவு தெரிய வந்தது. அதில் 24 மாகாணங்களை ஒபாமா கைப்பற்றினார். 20 மாகாணங்கள் ஜான் மெக் கைனுக்கு கிடைத்தது.

இதன்படி ஒபாமாவுக்கு 297 உறுப்பினர்களும், மெக்கைனுக்கு 138 உறுப் பினர்களும், கிடைத்துள் ளனர். இன்னும் 103 உறுப் பினர்கள் முடிவு தெரிய வேண்டியது.

ஒபாமா வெற்றிக்கு தேவை யான 270 இடங்களை தாண்டி அபார வெற்றி பெற்று விட் டார். இன்னும் உள்ள 103 இடங்களிலும் பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் ஒபாமா வுக்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் கறுப்பு இனத்தை சேர்ந்த ஒருவர் அமெரிக்காவில் முதல் அதிபராக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்து உள்ளார்.

மக்கள் அளித்துள்ள ஓட் டின் படி இதுவரை ஒபா மாவுக்கு 3 கோடியே 65 லட்சத்து 74 ஆயிரத்து 584 ஓட்டுகளும், மெக்கைனுக்கு 3 கோடியே 44 லட்சத்து 51 ஆயிரத்து 323 ஓட்டுகளும் கிடைத்து உள்ளன.

தேர்தல் முடிவு படி ஒபாமா வெற்றி பெற்று இருந்தாலும் 538 உறுப்பினர்களும் ஓட்டு போட்டு தான் முறைப்படி அதிபரை தேர்வு செய்வார் கள். இந்த தேர்தல் டிசம் பர் மாதம் 15-ந் தேதி நடக்கிறது.

இதன் ஓட்டு எண்ணிக்கை ஜனவரி மாதம் 6-ந் தேதி பாராளுமன்ற கூட்டுகூட்டத் தில் நடத்தப்படும். அப் போது தான் ஒபாமா முறைப் படி அதிபராக தேர்ந்தெடுக் கப்படுவார்.

புஷ் பதவி காலம் ஜனவரி 20-ந் தேதி முடிவடைகிறது. அன்றே ஒபாமா புதிய அதிப ராக பதவி ஏற்றுக் கொள்வார்.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1225866378&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP