தப்பியோடும் இராணுவத்தினரால் சிறிலங்கா படையினருக்கு நெருக்கடி
>> Wednesday, November 5, 2008
தப்பியோடும் இராணுவத்தினரால் சிறிலங்கா படையினருக்கு நெருக்கடி | |
இராணுவத்திலிருந்து பெருமளவானோர் தப்பியோடுவதனால் சிறிலங்கா படையினர் பெரும் நெருக்கடிகளை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்ட தகவல்களில் முக்கிய பகுதிகள் வருமாறு: 2006 ஆம் ஆண்டு வரை இராணுவத்திலிருந்து 9,500 பேர் தப்பியோடியுள்ளதாக "ராவய" சிங்கள வார ஏடு தெரிவித்திருந்தது. ஆனால், ஆய்வு செய்யப்பட்ட அறிக்கைகளின் படி போர் தொடங்கியதிலிருந்து 25,000 படையினர் தப்பியோடியுள்ளனர். அவர்கள் பின்னர் அதிகாரபூர்வமாக விலக அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது இராணுவத்திலிருந்து தப்பியோடுவோர் அண்மையில் படையில் இணைந்தவர்கள் ஆவர். 2008 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை 15,000 பேர் தப்பியோடியுள்ளனர். இது கணிசமான தொகையாகும். இராணுவத்திலிருந்து அதிகளாவானோர் தப்பியோடி வருவதனால் முன்னணி அரங்குகளில் பணியாற்றும் படையினர் அதிகாரிகளால் உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றனர். படையினரின் பகுதிகளில் இருந்து செல்லும் பேருந்துகளும் கடுமையான சோதனைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது. பேருந்துகளில் இராணுவத் தரப்பைச் சேர்ந்தவர்களின் தோற்றத்துடன் காணப்படுவோர் தனியாக அழைத்து விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். கடந்த ஓகஸ்ட் மற்றும் செப்ரெம்பர் மாதங்களில் வன்னிக் களமுனைகளில் இருந்து 700-க்கும் அதிகமான இராணுவத்தினர் தப்பியோடியுள்ளனர் | |
|
0 கருத்துரைகள்:
Post a Comment