சமீபத்திய பதிவுகள்

அல்லாஹ் அருளிய வேதம் முழுமையானதா?

>> Monday, January 28, 2008

பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?-உமரின் மொழிபெயர்ப்பு கட்டுரை

                

அல்லாஹ் அருளிய வேதம் முழுமையானதா? என்ற கேள்விக்கு இந்த கட்டுரையின் ஆசிரியர் சொல்லும் பதில் "இல்லை"  என்பதே.தொடர்ந்து படிப்போமா----தெய்வமகன்

 


பைபிளையும் குர்ஆனையும் சரியாக ஒப்பிடுவது எப்படி?

ஆசிரியர்: சாமுவேல் கிரீன்

COMPARING THE BIBLE AND THE QUR'AN
(How to do it Accurately)

By Samuel Green


தமிழாக்கம்
( ஆங்கிலத்தில் இக்கட்டுரையை படிக்க
இங்கு சொடுக்கவும்)


கிறிஸ்தவர்களும் முஸ்லீம்களும் சில விவரங்களைப் பற்றி விவாதிக்கும் போது, சில நேரங்களில் பைபிளையும் குர்ஆனையும் ஒன்றையொன்று ஒப்பிடுகிறார்கள். அவர்கள் பெரும்பான்மையாக கீழ் கண்ட விதங்களில் (தலைப்புக்களில்) அவைகளை ஒப்பிடுகிறார்கள்.
வேதங்கள் எப்படி பாதுகாக்கப்பட்டது (Preservation of text )

வேதங்களின் அதிகாரபூர்வமான தொகுப்புக்கள் (Formation of canon )

இயேசு, பெண்கள், போர்கள் போன்ற தலைப்புகள் குறித்து வேதங்கள் என்ன போதிக்கின்றன (Teaching about Jesus, women, warfare, etc. )

விஞ்ஞான பிழையின்மை (அ) ஆதாரம் (Scientific accuracy )

முரண்பாடுகள் (Contradictions)


நானும் இப்படிப்பட்ட ஒப்பிட்டு முறையைத் தான் கடந்த காலத்தில் செய்துவந்தேன். உண்மையில் இது ஒரு பிழையுள்ள மற்றும் நம்மை தவறான வழியில் நடத்தக்கூடிய "ஒரு ஒப்பிட்டு முறையாகும்". இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

காரணம் 1: பைபிள் மற்றும் குர்‍ஆன் வசனங்களின் சூழ்நிலை (Reason 1. The Context of the Bible and Qur'an)

குர்ஆன் முகமதுவின் வாழ்க்கையைச் சுற்றியுள்ள விவரங்களையும் மற்றும் வெளிப்பாடுகளையும் சொல்கிறது. முகமது, தன் வாழ்க்கையில் நிகழ்ந்த பல சூழ்நிலைகளுக்கு பதிலாக குர்‍ஆன் வசனங்களைச் சொன்னார் அல்லது அவருக்கு வசனங்கள் வெளிப்பட்டது. ஆனால், அந்த சூழ்நிலைகள் (அ) சந்தர்பங்கள் என்ன? போன்ற விவரங்கள் குர்‍ஆனில் எழுதப்படவில்லை. அதாவது, குர்‍ஆன் தன் சொந்த வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), கால வரிசை விவரங்களையும்(Chronology) கொண்டு இருக்கவில்லை. குர்‍ஆனை சரியாக புரிந்துக்கொள்வதற்கு, அதன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தெரிந்துக்கொள்வது மிக மிக அவசியமாக உள்ளது. ஆனால், இந்த சூழ்நிலையையும், காலவரிசை முறையையும் நாம் தெரிந்துக்கொள்ளவேண்டுமானால், குர்‍ஆனுக்கு வெளியே உள்ள "இஸ்லாமிய பாரம்பரிய" நூல்களாகிய "ஹதீஸ்களையும், சீராவையும் (Hadith or Sira literature)" நாம் படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட நூல்கள் நமக்கு குர்‍ஆன் வசனங்கள் வெளிப்பட்ட சூழ்நிலையை சொல்கின்றன. இஸ்லாமிய அறிஞர் Habib Ur Rahman Azami (ஹபீப் உர் ரஹ்மான் அஜாமி) "குர்‍ஆன் ஹதீஸ்கள் மீதும் சீராவின் மீதும் ஆதாரப்பட்டுள்ளது " என்று மிகவும் தெளிவாகச் சொல்லியுள்ளார்.
ஹதீஸ்கள் பயனற்றவை என்றும், அதிகார பூர்வமற்றது என்றும் அவைகளை ஒதுக்கிவிட்டால், குர்‍ஆனில் உள்ள பெரும்பான்மையான வசனங்களின் பொருளும், அவைகளை புரிந்துக்கொள்வதும் முடியாமல் போய்விடும். (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)

(I)t is almost impossible to understand or explain the meaning of a large number of Qur'anic verses if the Traditions are rejected as useless and inauthentic. (Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, pp. 29-31.)

ஆனால், பைபிள் வித்தியாசமானது. பைபிள் தன் வசனங்களை புரிந்துக்கொள்ள தேவையான சூழ்நிலையையும்(Context), காலவரிசை விவரங்களையும்(Chronology) தன்னுள் கொண்டுள்ளது. பைபிளின் வெளிப்பாடுகள் உலகம் உண்டானது எப்படி என்ற விவரங்களோடு ஆரம்பிக்கிறது, அதன் பிறகு நடந்த நிகழ்வுகளை சொல்லிக்கொண்டு வந்து கடைசியில், உயிர்த்தெழுதல் காலத்தைப் பற்றி சொல்லி விட்டு, சரியாக முடிவடைகிறது. பைபிள் பல கட்டளைகளை கொடுக்கும் போது அல்லது நற்செய்தியை அறிவிக்கும் போது, அவ்வசனங்கள் எந்த சூழ்நிலையில்(Context) வெளிப்பட்டது என்ற விவரங்களை மிகவும் தெளிவாகச் சொல்கிறது. ஆகவே, நீங்கள் பைபிளை புரிந்துக்கொள்ள வேண்டுமானால், உங்களுக்கு தேவை பைபிள் மட்டும் தான்.

இறைவனுடைய வார்த்தைகள் எப்படி இருக்கவேண்டுமோ அது போல, பைபிள் தன் சுயதேவையை தானே பூர்த்திசெய்துக்கொள்ளும் தகுதியுடையதாக உள்ளது. எனவே, பைபிளை குர்‍ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் மற்றும் அது தவறான முடிவுக்கு கொண்டுபோகும்.
(The Bible is self-sufficient, as the word of God should be. Therefore to compare the Bible to the Qur'an alone is misleading and inaccurate.)

காரணம் 2: பழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகள் (Practices and Beliefs)

இஸ்லாமின் பெரும்பான்மையான அடிப்படை கோட்பாடுகள், நம்பிக்கைகள் பற்றிய விவரங்கள் குர்ஆனில் இல்லை.

"முகமது சொன்னது, செய்தது" என்று சொல்லக்கூடிய "சுன்னா-Sunnah" என்பது குர்‍ஆனுக்கு துணையாக உள்ள அடுத்தபடியான நூல்கள் ஆகும். உண்மையைச் சொல்லவேண்டுமானால் சில சந்தர்பங்களில் இந்த "சுன்னா" குர்‍ஆனை விட அதிக முக்கியத்துவம் பெறுகிறது அல்லது "சுன்னா" வின் கை குர்‍ஆனைவிட ஒரு படி மேலே நிற்கிறது.

உதாரணத்திற்கு ஒரு எடுத்துக்காட்டை இங்கு சொல்லட்டும் , அதாவது குர்‍ஆன் தினமும் மூன்று முறை நமாஜ் செய்யவேண்டும்(24:58 and 11:114) என்று சொல்லும் போது, சுன்னா "ஐந்து முறை" தினமும் நமாஜ் செய்யவேண்டும் என்று சொல்கிறது (முஸ்லீம்கள் இன்று பின்பற்றுவது "சுன்னா" நிர்ணயித்த தினமும் 5 முறை நமாஜ் செய்வதைத்தான், குர்‍ஆன் சொல்வதை அல்ல‌ ).


இன்னும் சில சந்தர்பங்களில் இஸ்லாமின் ஆரம்ப கால பழக்கவழக்கங்களை பார்க்கும் போது, சில பழக்கங்கள், "சுன்னா" விற்கு முரண்பட்டவையாக கூட இருந்தது. உண்மையைச் சொல்லவேண்டுமானால், குர்‍ஆன் வெளிப்படையாக எல்லா கட்டளைகளையும் சொல்லவில்லை , இஸ்லாமின் அடிப்படை கட்டளைகளையாவது குர்‍ஆன் முழுமையாக சொல்வதில்லை. அதாவது, குர்‍ஆன் "நமாஜ் (தொழுகை)" செய்யவேண்டும் என்று கட்டளையிடுகிறது, ஆனால், எப்படி செய்யவேண்டும்? என்று சொல்வதில்லை. எப்படி நமாஜ் செய்யவேண்டும்? என்ற வழிமுறை முழுக்க முழுக்க "சுன்னா"வின் மீது ஆதாரப்பட்டுள்ளது. (Cyril Glass鬠"Sunnah", The Concise Encyclopedia of Islam, pp. 381-382.)

குர்ஆன் தினமும் தொழவேண்டிய தொழுகையாகிய "நமாஜ்" என்ற சலாவை(Salah) கடமையாக்கி அதை கட்டளையிட்டுள்ளது, மற்றும் அதை எப்படி செய்யவேண்டும் என்ற சில விவரங்களை (like Qiyam, Ruku`, Sujud and Qira'ah) குர்ஆன் சொல்கிறது. ஆனால், நமாஜை சரியான முறையில் எப்படி செய்யவேண்டும் என்பதையும், இந்த நமாஜ் சம்மந்தப்பட்ட இதர செயல்பாடுகள் எந்த வரிசையில் செய்யவேண்டும் என்பதைப் பற்றிய விவரங்கள் குர்ஆனில் சொல்லப்படவில்லை. அதே போல, ஹஜ்(Hajj) என்னப்பட்ட "மக்காவிற்குச் செல்லும் புனித யாத்திரை" என்பது ஒரு மதசம்மந்தப்பட்ட கடமை என்று குர்ஆன் சொல்கிறது. ஆனால், ஹஜ் என்பதை எந்த ஒழுங்கில்(Method) செய்யவேண்டும்? ஹஜ் செய்யும் போது என்னென்ன சாம்பிரதாயங்களை(Formalities) எப்படி செய்யவேண்டும்? போன்ற விவரங்களை குர்ஆன் விவரிப்பதில்லை. ஹஜ்ஜை எப்படி செய்யவேண்டும் என்று சரியான வழிமுறையை நபியே செய்துகாட்டியுள்ளார். (Habib Ur Rahman Azami, pp. 10-11.)

குர்ஆன் மற்றும் சுன்னா(Sunnah) என்ற இரண்டின் உதவியுடன் மட்டுமே இஸ்லாம் சட்டம்(Islamic Shariah) முழுமைபெறும். (Habib Ur Rahman Azami, p. 5.)


எப்படி தொழவேண்டும்? எப்போது தொழவேண்டும்? மற்றும் என்ன சொல்லி தொழவேண்டும்? ஹஜ் கடமையை நிறைவேற்றும் போது அதை எப்படி செய்யவேண்டும்? சுன்னத்து(circumcision) எப்படி செய்யவேண்டும்? போன்ற, இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் பெரும்பான்மையாக முகமதுவின் செயல்பாடுகளிலிருந்து(சுன்னா) வருகிறது . இஸ்லாமுக்கு சுன்னா(Sunnah) என்பது மிக முக்கியமானது, ஆனால், சுன்னா என்பது குர்ஆனிலிருந்து வரவில்லை, அதற்கு பதிலாக அது ஹதீஸ்களிலிருந்தும், சீராவிலிருந்தும் வருகிறது. மறுபடியும் நாம் கவனிக்கும் பொது, பைபிள் கோட்பாடுகள் இப்படி இல்லை. ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான எல்லாவற்றையும் பைபிள் தன்னகத்தே கொண்டுள்ளது. இறைவன் நம்மை இரட்சிப்பதற்காக என்ன செய்தார்? மற்றும் இதனால் தன் பெயர் எப்படி கனப்படுத்தப்படும் மற்றும் நாம் எப்படி வாழவேண்டும்? போன்றவற்றை பைபிள் தெளிவாகச் சொல்கிறது. பைபிள் நம்முடைய ஞானத்திற்கும் விடுதலைக்கும் ஆதாரமாக உள்ளது. எனவே, பைபிளை குர்‍ஆனோடு மட்டும் ஒப்பிட்டு பார்ப்பது பிழையுள்ளதாகும் (inaccurate) மற்றும் அது தவறான முடிவுக்கு(misleading) கொண்டுபோகும்.

மிகச் சரியான ஒப்பிடும் முறை ( A More Accurate Comparison )

இப்போது ஒன்று மட்டும் தெளிவாக புரிந்துவிட்டது, அதாவது பைபிளை குர்ஆனோடு ஒப்பிடுவது என்பது சரியான ஒப்பிடுதல் அல்ல. ஏனென்றால், பைபிள் கிறிஸ்தவத்தின் அஸ்திபாரம் ஆகும். ஆனால், குர்ஆன் இஸ்லாமின் அஸ்திபாரம் அல்ல. மாறாக, குர்ஆன், ஹதீஸ்கள், மற்றும் சீரா இவை மூன்றும் இஸ்லாமின் அஸ்திபாரமாக உள்ளது. நீங்கள் கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய புத்தகங்களை நேர்மையாகவும், சரியான முறையிலும் ஒப்பிட்டு பார்க்கவேண்டும் என்று விரும்பினால், நீங்கள் இவ்விரு மார்க்கங்களின் முக்கியமான புத்தகங்களை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டும்.
( If you want an honest and accurate comparison between the books of Christianity and Islam then you must compare the essential books of both religions.)

ஹதீஸ்கள் பற்றிய சில விவரங்கள்: "ஹதீஸ் - hadith" என்ற வார்த்தையின் அர்த்தம் "ஒரு பொருளின் விவரம் அல்லது செய்தி (an account or news about something) " என்பதாகும். ஒரு ஹதீஸின் அளவு ஒரு வாக்கியமாகவோ அல்லது ஒரு பக்கம் அளவிற்கோ இருக்கும். இஸ்லாமைப் பொருத்தவரை முகமது என்ன சொன்னாரோ மற்றும் அவர் என்ன செய்தாரோ அது தான் ஹதீஸ்களின் முக்கிய கருப்பொருளாக உள்ளது. இதைத் தான் "சுன்னா" என்றுச் சொல்வார்கள், ஆக, ஹதீஸ்களில் இருப்பது "சுன்னா" ஆகும். ஹதீஸ்கள் பலவகையில் மிகப்பெரிய தொகுப்புகளாக உள்ளது. முக்கியமான ஹதீஸ் தொகுப்புக்கள் என்ன என்று பேராசிரியர். மசுத்-உல்-ஹசன் அவர்கள் விளக்குகிறார்.

முசன்னப் ("Musannaf"[1]) முறைப்படி அங்கீகரிக்கப்பட்ட ஹதீஸ்களின் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அல்-புகாரி (கி.பி. 870 ) [7658 ஹதீஸ்களின் தொகுப்பு]

முஸ்லீம் (கி.பி. 875 ) [7748 ஹதீஸ்களின் தொகுப்பு]

அபு தாவுத் (கி.பி. 875 ) [5276 ஹதீஸ்களின் தொகுப்பு]

அல்-திர்மிதி (கி.பி. 892) [4415 ஹதீஸ்களின் தொகுப்பு]

அல்-நசய் (கி.பி. 915) [5776 ஹதீஸ்களின் தொகுப்பு]

இபின் மஜா (கி.பி. 886) [4485 ஹதீஸ்களின் தொகுப்பு]

... அல்-புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ் தொகுப்புக்கள் மிகவும் உயர்ந்ததாகவும் உண்மையானதாகவும் மதிக்கப்படுகிறது, எனவே இவை இரண்டும் "அல்-சஹிஹை - Al-Sahihain" ஆதாரப்பூர்வமான மற்றும் அதிகாரபூர்வமான ஹதீஸ்கள் என்று அழைக்கப்படுகிறது.
Al-Bukhari
The collection of hadith  by Imam Bukhari. 9 volumes in the  English/Arabic translation.
Muslim
The collection of hadith  by Imam Muslim. 8 volumes in the  English/Arabic translation.


மஸ்நத் - "Musnad"[2] முறைப்படி மிகவும் புகழ்பெற்ற ஹதீஸ் "அஹமத் இபின் ஹன்பல் " (கி.பி. 855 )தொகுத்த ஹதீஸ் தொகுப்பாகும்.

ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்களில், முகமது நபி என்ன சொன்னாரோ அல்லது செய்தாரோ போன்ற செய்திகளை மட்டும் அது உள்ளடக்கிக் கொண்டு இருப்பதோடு மட்டுமல்லாமல், ஷியா இமாம்கள்(அறிஞர்கள்)சொன்னதும் செய்ததும் அது உள்ளடக்கியுள்ளது.


ஷியா முஸ்லீம் பிரிவினரின் ஹதீஸ் தொகுப்புக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


முஹம்மத் இபின் யாகுப் அல்-குல்லுனி (கி.பி. 939)

முஹம்மத் அல்-ஹும்மி (கி.பி. 991)

தஹிர் அல்-ஷரிப் அல்-முர்தஜா (கி.பி. 1004)

முஹம்மத் அல்-துசி (கி.பி. 1067) (Prof. Masud-ul-Hasan, History of Islam, vol. 1, p. 613.)

"முவட்டா மாலிக் - Muwatta of Malik" என்ற பெயரில் ஒரு முக்கியமான ஹதீஸ் தொகுப்பும் உள்ளது.

சீராவைப் பற்றிய சில விவரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம். "சீரா"க்கள் என்பது முகமதுவின் வாழ்க்கையைப் பற்றிய சரிதைகள் ஆகும். இவைகள் முகமதுவின் வாழ்க்கையின் சூழ்நிலையையும், கால வரிசை முறையையும் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையும், கால வரிசை முறையும் தான் குர்ஆன் வசனங்களின் சூழ்நிலையும்(Context), காலவரிசையு(Chronology)மாக இருக்கிறது. பழமைவாய்ந்த இரண்டு சீராக்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

முஹம்மத் இபின் இஷாக் (கி.பி. 773) Via இபின் ஹிஸம் (கி.பி. 840) recension, சீரத் ரசூல் அல்லாஹ் (English translation 798 pages[3].)

முஹம்மத் இபின் சைத் (கி.பி. 852), கிதாப் அல்-தபாகத் அல்-கபீர் (English translation, 1097 pages[4].)


( Muhammad ibn Ishaq (d. 773 C.E.) via ibn Hisham's (d. 840 C.E.) recension, Sirat Rasul Allah. (English translation 798 pages[3].)

Muhammad ibn Sa'd (d. 852 C.E.), Kitab al-Tabaqat al-Kabir, (English translation, 1097 pages[4].))

Ibn Ishaq
Ibn Ishaq, Sirat Rasul Allah  translated as 'The Life of Muhammad'
Ibn Sa'd
Ibn Sa'ad, Kitab Al-Tabaqat Al-Kabir

இக்கட்டுரையை படிக்கும் நீங்கள், இஸ்லாம் மார்க்கத்திற்கு குர்ஆன் மட்டுமல்லாமல், இன்னும் பல முக்கியமான புத்தகங்கள் இருப்பதை கவனிக்கமுடியும். இந்த இதர புத்தகங்களின் அளவை பார்க்கும் போது அவைகள் குர்ஆனை விட மிகவும் பெரியதாக காணப்படுகிறது.

புகாரி மற்றும் முஸ்லீம் ஹதீஸ்களில் உள்ள வசனங்களின் எண்ணிக்கை குர்ஆனின் மொத்த வசனங்களாகிய 6236 வசனங்களை விட அதிகமாக உள்ளது. ஒரு முன்னாள் இஸ்லாமிய அறிஞர் ஒரு முறை எனக்கு கீழ்கண்டவாறுச் சொன்னார், அதாவது, "இஸ்லாமில் 10% குர்ஆன் மற்றும் 90% ஹதீஸ்கள் (ஹதீஸ் மற்றும் சீரா)" என்றார். குர் ஆன் என்பது ஒரு "வரை படத்தின்" நான்கு பக்கங்களிலும் போடப்பட்டு இருக்கும் சட்டங்கள்(Frame) போன்றது. குர்ஆன் சில எல்லைகளை குறித்துக் கொடுக்கும், ஆனால் அந்த படத்தில் வரையப்பட்டிருக்கும் விவரங்கள் அனைத்தும் ஹதீஸ்கள் மூலமாக கொடுக்கப்படுகிறது. ( The Quran is like the frame of a picture. It sets some boundaries, but the details of the picture are provided by the traditions. )

சில செயல்முறை விளக்கங்கள்: (Some Application)

1. பைபிளை குர்ஆனோடு ஒப்பிடும் இஸ்லாமிய அறிஞர்கள் மற்றும் தலைவர்கள் நேர்மையுள்ளவர்களாக நடந்துக்கொண்டு மக்களை ஏமாற்றுவதை இனி நிறுத்திவிடவேண்டும். அவர்கள் இனி "குர்ஆன் தனக்குள் தானே முழுமையானது அல்ல" என்று மக்களுக்கு போதிக்கவேண்டும். இனி பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவதோடு மட்டுமல்லாமல், இஸ்லாமில் உள்ள முக்கியமானதாக கருதப்படும் இதர அனைத்து புத்தகங்களையும் ஒப்பிடுங்கள். ஒரு இஸ்லாமிய அறிஞர் இப்படி நேர்மையற்ற முறையில் பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிட்டு வாதாடுவதை, இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் கவனிக்க நேர்ந்தால், உடனே தைரியம் கொண்டு அவர் செய்துக்கொண்டு இருக்கும் இந்த தவறை அவருக்கு எடுத்துக்கூறுங்கள்.

2. "பைபிளோடு குர்ஆனை மட்டும் ஒப்பிடுவது சரியானது" தான் என்று கிறிஸ்தவர்கள் நினைத்துக்கொண்டு ஏமாந்துப் போகாதீர்கள். இதைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள். கிறிஸ்தவம் என்பது பைபிள் ஒன்றின் மீது மட்டும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாம் குர்ஆன் மீது மட்டுமல்ல, அதோடு கூட ஹதீஸ்கள் மீதும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லீம் "இரண்டு புத்தகங்களையும்" ஒப்பிடுங்கள் என்று உங்களிடம் கூறினால், உடனே நீங்கள் "நேர்மையான முறையில்" ஒப்பிடவேண்டுமானால், குர்ஆனோடு கூட ஹதீஸ்களையும், சீராவையும் பைபிளோடு ஒப்பிடவேண்டும் என்று அழுத்திச்சொல்லுங்கள்.

3. ஒரு வேளை இக்கட்டுரையை படிக்கும் நீங்கள் ஒரு "கிறிஸ்தவரல்லாதவராகவோ" அல்லது ஒரு "முஸ்லீமாகவோ" இருப்பீர்களானால்,"உண்மையில் குர்ஆனும் பைபிளும் ஒரே வகையான புத்தகங்கள் இல்லை" என்பதை நினைவில் கொள்ளவும். குர்ஆன் என்ன வசனங்கள் சொல்கிறதோ அந்த வசனங்கள் வெளிப்பட்ட சந்தர்ப்பத்தை(சூழ்நிலையை - Context )அது சொல்வதில்லை அல்லது இஸ்லாமில் பின்பற்றப்படும் பல கோட்பாடுகளைப் பற்றிய சூழ்நிலையை குர்ஆன் சொல்வதில்லை. இவைகள் வேறு புத்தகங்களிலிருந்து வருகிறது. ஆனால், ஒரு கிறிஸ்தவனுக்கு தேவையான நம்பிக்கை மற்றும் அவன் பின்பற்றவேண்டிய எல்லா கோட்பாடுகளையும் பைபிள் தன்னிடம் கொண்டுள்ளது.

4. நாங்கள் "இயேசுவை உங்கள் உள்ளத்தில் ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று உங்களுக்கு அழைப்பு விடுக்கும் போது, பைபிள் ஒன்றை மட்டும் நீங்கள் நம்பினால் போதும் என்றுச் சொல்கிறோம்.

5. ஒரு சாதாரண கிறிஸ்தவன் "பைபிள் முழுவதையும் படித்து அதன் கோட்பாடுகளை நன்றாக புரிந்துக்கொள்ள" அவனால் முடியும், ஆனால், ஒரு சாதாரண முஸ்லீம் குர்ஆனையும் மற்றும் இஸ்லாமில் உள்ள எல்லா புத்தகங்களையும் படித்து புரிந்துக்கொள்வது என்பது மிகவும் கடினமான வேலையாகும். ஏனென்றால், இஸ்லாமிய அடிப்படை கோட்பாடுகள் அடங்கிய புத்தகங்கள் அதிக அளவில் உள்ளது, மட்டுமல்லாமல் அவைகள் எல்லாம் இன்னும் மொழிபெயர்க்கப்படவில்லை. உண்மையைச் சொல்லவேண்டுமானால், முகமதுவின் வாழ்க்கையை முதன் முதலில் சரிதையாக எழுதிய, இபின் இஷாக் அவர்களின் புத்தகமாகிய "சூரத் ரசூல் அல்லா - Ibn Ishaq's, Sirat Rasul Allah" என்ற புத்தகத்தை பெரும்பான்மையான முஸ்லீம்கள் படிப்பதில்லை.

பின் குறிப்புகள் :


[1] Where the hadiths are ordered according to topic.
[2] Where the hadiths are ordered according to narrator.
[3] Ibn Ishaq, Sirat Rasul Allah, translated as, The Life of Muhammad, (tr. A. Guillaume), Karachi: Oxford University Press, 1998.
[4] Ibn Sa'ad, Kitab Al-Tabaqat Al-Kabir, (tr. S Moinul Haq) New Delhi: Kitab Bhavan, 2 volumes, no date.

References

Habib Ur Rahman Azami, The Sunnah in Islam, U.K.: UK Islamic Academy, 1995.
Prof. Masud-ul-Hasan, History of Islam, Delhi: Adam Publishers & Distributors, 2002.
Cyril Glass鬠The Concise Encyclopedia of Islam, San Francisco: Harper & Row, 1989.

Copyright © 2007 Samuel Green.

மூலம்: http://answering-islam.org/Green/compare.htm

ஆசிரியர் சாமுவேல் கிரீன் அவர்களோடு தொடர்பு கொள்ள: மெயில் விலாசம்
ஆசிரியருடைய இதர கட்டுரைகள் ஆங்கிலத்தில் படிக்க : இங்கே சொடுக்கவும்.


தமிழாக்கம் முற்றிற்று

நன்றியுரை: நான் சகோதரர் சாமுவேல் கிரீன் அவர்களுக்கு மெயில் அனுப்பி,
ஆன்சரிங் இஸ்லாம் தளத்தில் வெளியாகியுள்ள அவருடைய கட்டுரைகளை மொழிபெயர்க்க அனுமதி கெட்டபோது, உடனே எனக்கு அனுமதி கொடுத்தார். அதற்காக அவருக்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

http://www.geocities.com/isa_koran/tamilpages/Authors/samuelgreen/CompareGreen.htm

StumbleUpon.com Read more...

போலி முஸ்லீமாக இருந்தவர் தன் மதத்தை மாற்றினார்

அகமதிய இயக்கத்தை மற்ற இஸ்லாமிய அமைப்புகள் போலிகள் என்று சொல்லுகின்றனர்.அதனால் தான் இந்த தலைப்பு.
                                                                             
                                                                                தேவப்பிரியன்

 
 
ஒரு அகமதிய முஸ்லீமகா இருந்த நஸரத் அமன் அவர்கள் இயேசுகிறிஸ்துவை தான் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டதை பற்றி விவரிக்கிறார்.இந்த கட்டுரையின் ஆங்கில மூலத்தின் தொடுப்பு;http://www.islamreview.com/testimonials/whychristian.shtml
 
 
 
 
நான் ஏன் கிறிஸ்தவனானேன் ? நஸரத் அமன்
1958 ம் வருடத்தில் ஒரு தீவிர இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்தேன்;. பாகிஸ்தானில் அகமதியாக்கள் அமைப்பால் நடத்தப்படுகிற இஸ்லாமியப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்தேன். இப்படி படித்துக் கொண்டிருந்தபோது, இஸ்லாம் மத்தைப் பற்றி படிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகமானது, அதனால் நான் அகமதியாக்கள் அமைப்பில் சேர்ந்தேன். 1974 ம் வருடத்தில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் இந்த அமைப்பு ஒரு இஸ்லாமிய மதபேத அமைப்பாக அறிவிக்கப்பட்டது.

கிறிஸ்தவத்திற்கு எதிரான அகமதியாக்களின் நூல்களில் கிறிஸ்து அல்லது மேசியா என்ற பதங்களைக் கண்டேன்;. அகமதியாக்கள் அமைப்பின் ஸ்தாபகர் மிர்ஷா குலாம் அகமது தன்னை மஸிஸ்( வாக்குப் பண்ணப்பட்ட மேசியா) என்று அறிவித்திருந்தார். எனக்கு புதுமையும், கவரக்கூடியதுமாயிருந்த அகமதியக் கொள்கைகளையும், போதனைகளையும் பிரச்சாரம் செய்வதில் நான் மிகுந்த ஆர்வமுடையவனாயிருந்தேன். பைபிளிலுமு; குர்ஆனிலும் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைப் பற்றியுள்ள குறிப்புகளை அர்த்தம் உணராமலேயே நினைவுகூர்ந்தேன்.

 
என்னை இரட்சித்த ஒரு தவறு


ஒரு நாள் நான் ஒரு சபையைக் கடந்து சென்றுகொண்டிருந்தேன், அப்போது அங்கேயிருந்த பாதிரியாரிடம் சென்று , அவர் ஏன் இன்னும் முஸ்லீமாக மாறவில்லை? தீர்க்கதாரிசனமாக சொல்லப்பட்ட அனைத்து பண்புகளும் முகமதுவில் நிறைவேறியிருக்கிறதே? என்று கேட்க சாரியான வாய்ப்பு என்று நினைத்தேன், அப்படியாக சென்று பாதிரியை சந்தித்தேன்;. என்னை ஒரு முஸ்லீம் என்று அறிமுகம் செய்துகொண்டேன், நான் பாதிரியிடம் , இயேசுவே முகமதுவின் பாதரட்சைகளைத் தான் சுமப்பதற்கும் தகுதியில்லாதவன் என்று சொல்லியிருக்கும்போது நீங்கள் ஏன் முகமது நபியை விசுவாசிப்பது இல்லை என்று கேட்;டேன். அதற்கு அவர் இதை இயேசு எங்கு சொல்லியிருக்கிறார் என்று ஏதாவது ஆதாரம் கொடுப்பீர்களா? என்று கேட்டார் . உடனே நான் மத்தேயு 3.11-12 வசனங்களை எடுத்து அவருக்கு வாசித்து காண்பித்தேன், அவர் முழு அதிகாரத்தையும் வாசிக்க சொன்னார். 1-17 வரையான அந்த முழு வசனங்களையும் வாசித்தபோது அது யாரால் யாரைப்பற்றி சொல்லப்பட்டது என்பது தெளிவாக புரிந்தது, யாரும் விளக்கவேண்டியதில்லை. நான் அவமானமடைந்தேன் உடனே மற்றொரு வசனத்தையும் அவருக்கு காண்பித்தேன் அது யோவான் 14. 30
இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை, இந்த உலகத்தின் அதிபதி வருகிறான் ,
அவனுக்க என்னிடத்தில் ஒன்றுமில்லை,
அந்த பாதிரி சொன்னார் நீ இந்த வசனத்தை முகமதுவிற்கு பொருத்திக்கூறுவாய் என்றால் நான் அதை மறுக்கமாட்டேன். பிறகு அவர் இந்த வசனத்;தை மற்ற வசனங்களின் வெளிச்சத்தில் விளக்கினார் உலகத்தின் அதிபதி என்ற இப்பதம் யோவான் 12. 32 மற்றும் 16.11 ஆகிய வசனங்களில் உலகத்தின் அதிபதி என்பது சாத்தானைக் குறிக்கிறது என்று விளக்கினார்.

நான் எனக்குள்ளே பெருத்த அவமானமடைந்தேன் என்னுடைய அமைப்பின் மீதும் இந்த குறிப்புகளை தன்னுடைய புஸ்தகத்தில் எழுதியிருக்கிற அந்த இரண்டாவது மேசியா என்று அழைத்துக்கொள்கிற அவர் மீதும் பயங்கரமான கோபத்தோடு பாதிரியின் அறையிலிருந்து வெளியேறினேன், அதற்கு பிறகு நான் குர்ஆனையும் பைபிளையும் ஆழமாக படிக்க ஆரம்பித்தேன். இதற்காக நான் பாகிஸ்தானில் உள்ள ஒரு வேதாகமப்பள்ளியில் புறக்கல்வி முறையில் படிக்கத் துவங்கினேன். ஒரு தீவிர இஸ்லாமிய பிரசங்கியாக இருந்த எனக்கு குர்ஆனையும் பைபிளையும் தெளிவாகக் கற்று மேசியா என்ற வார்த்தையின் ஆழ அர்த்தத்தை அறிய ஆவல் அதிகமானது. பைபிளில் வாக்குப் பண்ணப்பட்ட மேசியாவின் இரண்டாம் வருகையைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருந்தபோது மேசியாவின் முதல் வருகையைப் பற்றியும் தீர்க்கதாரிசன நிறைவேறுதல்களைப்பற்றியும் அறிய எண்ணினேன்.

நான் குர்ஆனில் வசனங்களிலும் மொழிநடையிலும் அதிக பழக்கப்பட்டிருந்தபடியால் வேதத்தை படிக்கும் போதே இரண்டையும் ஒப்பிட்டுக்கொண்டிருந்தேன். கிறிஸ்தவ கிரேக்க வசனங்கள் ( புதிய ஏற்பாடு) என்னை மிகவும் கவர்ந்தது. அவை ஏதோ வாழ்க்கைச் ரித்திரம் மட்டுமல்ல ஆனால் ஒவ்வொரு வர்ணணையிலும் இறைவன் மனிதனோடு நடந்து வந்ததை வெளிப்படுத்தும் பல சம்பவங்கள் உண்டாயிருக்கிறது.

குர்ஆனைப் படிக்கும் போதோ எதுவும் விசேஷமாக இல்லை ழூன்றில் இரண்டு பங்கு பேய் வணக்கத்தின் கட்டுக்கதைகளும், தோராவிலிருந்து திரித்து கேலியாக சித்தாரிக்கப்பட்ட படைப்புகளாயிருந்தது. குர்ஆனைப் படிக்கும் போது எந்த ஒரு நபரும் தன்னுடைய கவனம் சிதறாமல்பார்த்துக்கொள்ள முடியாது ஏனென்றால் குர்ஆனில் தொடர்ச்சியாக ஒவ்வொரு இரண்டு ழூன்று வசனங்களுக்கும் பிறகு தலைப்புகளும் விஷயங்களும் மாறுகிறது.

இப்புவியின் ஊழியித்தில் இயேசு தன்னுடைய பெரிய அதிகாரத்தை வெளிப்படுத்தியதை உணர்ந்தேன். அவர் முழு நிச்சயமுடையவராகவும் அதிகாரமுடையவராகவும் தன்னை குற்றம்சொல்லுகிறவர்களை எதிர்க்ககூடியவராகவும் இருந்தார். அவரை குற்றம்சொல்லிக்கொண்டிருந்தவர்கள் ஒருநாளும் அவரை நேராக எதிர்க்ககூடாதவர்களாயிருந்தார்கள். (யோவான் 6 .41, 43 மற்றும் யோவான் 8. 38,44)

ஆனால் முகமதுவின் விஷயத்தில் அவரைக் குறைகூறினவர்கள் மிகவும் உறுதியாகவும் .எதிர்க்ககூடியவர்களாவும் இருந்தார்கள். அவர்கள் சொன்னார்கள் ,

 

(சுரா 17;90-93 திருப்புமுனை)

 

நான் குர்ஆனையும் பைபிளையும் மிகத் தீவிரமாக படித்தேன். குர்ஆனின் ஒரு வசனம் என்னை உலுக்கியது , என்னுடைய எல்லா நம்பிக்கைகளும் அர்ப்பணங்களும் தவிடுபொடியானது. குர்ஆனின் அந்த வசனம் சொல்லுகிறது .நான் வரப்போகிற புதிய துதன் இல்லை, எனக்கு என்ன செய்யப்படும் என்று எனக்குத் தெரியாது. நான் எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை மட்டுமே பின்பற்றுகிறேன். உங்களைத் தெளிவாக எச்சரிப்பதே என்னுடைய பணி ஆகும்

நியாயத்தீர்ப்பின் நாள் (அழிவு) மட்டும் காத்திருக்க எனக்கு பொறுமையில்லை , தன்னைப் பற்றியும் ன்மேல் விசுவாசம் வைப்பவர்களை பற்றியும் அறியாத ஒருவரை நான் எப்படி பின்பற்றமுடியும்?

மாற்றம

95 சதவீதம் முஸ்லீம்கள் இருக்கிற பாகிஸ்தானில் மதமாறுவது என்பது சமுதாய, பொருளாதார மற்றும் கலாச்சார சவாலாக இருந்தது. கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு மதம்மாறுவது என்பது உறவுகளோடும் சமுதாயத்தோடும் உள்ள ஐக்கியத்ததை விடுவதாகும். எந்த நேரத்திலும் தாக்குதலுக்கு உள்ளாவோம் என்ற பயம் இருந்துகொண்டேயிருக்கும். இஸ்லாமின் பெயரால் முஸ்லீம் மக்கள் கிறிஸ்தவர்களுக்கு எதிராக எதைவேண்டுமானாலும் செய்யலாம், சொந்தக்காரர்களும் நண்பர்களும் கூட தங்கள் தனிப்பட்ட மற்றும் சொத்துபிரச்சனைகளை வைத்து கிறிஸ்தவர்களுக்கு விரோதமாக இவர்கள் முகமதுவையும் குர்ஆனையும் குறைகூறினார்கள் என்று சொல்லி பழிவாங்கமுடியும். தெய்வ தூஷணம் என்ற பெயரில் கிறி்ஸ்தவர்களுக்கு மரணதண்டனைகூட வழங்கப்படலாம் ஆனால் அல்லாவின் பெயரில் சொல்லப்படும் தவறான குற்றச்சாட்டுகளுக்கு எந்த தண்டணையும் கிடையாது,

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நான் கிறிஸ்துவை என்னுடைய சொந்தரட்சகரா ஏற்றுக்கொண்டு என் பெற்றோருக்கும் உறவினருக்கும் தெரியாமல் மறைமுகமாக 1979 ம் வருடத்திலே ஞானஸ்தானம் பெற்றேன.; 10 வருடங்கள் வரை நான் கிறிஸ்தவர்களுக்கு மத்தியில் கிறிஸ்தவனாகவும் என்னுடைய வீட்டில் முஸ்லீமாகவும் வாழ்ந்து வந்தேன். இறுதியாக ஒரு முஸ்லீம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளுமாறு என் பெற்றோரின் கட்டாயம் அதிகமனபோது என்னால் என்ரட்சிப்பை மறைத்துவைக்கமுடியவில்லை,

நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன் ஏனென்றால் தான் யார் என்பது என் ரட்சகருக்குத் தெரியும் (யோவான் 17 .14)

நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான். (யோவான் 14 .6)

இப்பொழுது இயேசு கட்டளையிட்டதுபோல் (மத்தேடூடூ 28. 20) சுவிஷேசத்தை பிரசங்கிப்பது தான் என்னுடைய பாரமாயிருக்கிறது. சுவிஷேசத்தை பிரசங்கியாவிட்டால் எனக்கு ஐயோ ( 1கொரி 9 . 16)

பாக்கிஸ்தானில் 2001 வரை commumity developmement project manager ஆக வேலை செய்துவந்தேன்.தற்பொழுது நான் கனடாவில் வசித்துவருகிறேன்.

கிறிஸ்தவத்தை குறித்த எந்த விதமான கேள்விகளுக்கும்,விவாதங்களுக்கும் என்னை தராளமாக தொடர்பு கொள்ளலாம்.

Nusrat Aman
E-mail:
naman@gosonic.ca
E-mail: nusrat04@hotmail.com
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP