சமீபத்திய பதிவுகள்

சிஸ்டம் பாஸ்வேர்ட் மறப்பவர்களுக்கு

>> Sunday, November 8, 2009

 
 

போன் மூலமாகவும் கடிதம் மூலமாகவும் பல வாசகர்கள் என் சிஸ்டம் பாஸ்வேர்டை மாற்றினேன்; அல்லது பல நாட்களாக கம்ப்யூட்டரைத் தொடவில்லை. அதனால் பாஸ்வேர்ட் மறந்து போச்சு. என்ன செய்யலாம்? என்றெல்லாம் கேட்கின்றனர். இவர்களுக்கு ஒரு அருமருந்து ஒன்று தரப்போகிறேன். 

பாஸ்வேர்ட் டைப் செய்கிறோம். சில வேளைகளில் தவறாக டைப் செய்கிறோம். சில வேளைகளில் மறந்து போய் பழைய பாஸ்வேர்ட் அல்லது வேறு ஒரு பாஸ்வேர்ட் கொடுக்கிறோம். இதற்குப் பதிலாக ஒரு பிளாப்பி அல்லது யு.எஸ்.பி. டிரைவில் பாஸ்வேர்டைப் போட்டு வைத்து அதனைச் செருகி கம்ப்யூட்டரை ஆன் செய்தால் அதுவே பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவிலிருந்து பாஸ்வேர்டை எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும் அல்லவா? ஆஹா! என்கிறீர்களா! கீழே படியுங்கள். ஆஹா அஹஹா!! என்பீர்கள்.


இந்த டிஸ்க்கிற்குப் பெயர் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க் (Password Reset Disk)  ஆகும். இந்த டிஸ்க் நீங்கள் பிளாப்பி டிஸ்க் அல்லது யு.எஸ்.பி. டிரைவ் வைத்துப் பயன் படுத்தினால் தான் சரியாக இருக்கும். 

1.முதலில் ஸ்டார்ட் கிளிக் செய்து கண்ட்ரோல் பேனல் தேர்ந்தெடுக்கவும். 


2. அதன்பின் யூசர் அக்கவுண்ட்ஸ் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். 


3. இதில் உங்கள் அக்கவுண்ட்டில் கிளிக் செய்திடவும். 


4. இப்போது கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் உள்ள சைட் பாரினைப் பார்க்கவும். இதில்Prevent a Forgotten Password என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். 

5. இனி Forgotten Password விஸார்ட் கிடைக்கும். 

6. இனி உங்கள் பிளாப்பி அல்லது பிளாஷ் டிரைவினைச் செருகவும். 


7. தற்போதைய விண்டோஸ் எக்ஸ்பி யூசர் அக்கவுண்ட் மற்றும் பாஸ்வேர்டினை டைப் செய்திடவும். பின் Nஞுதுt அழுத்தவும். சில நொடிகளில் உங்கள் Password  டிஸ்க் ரெடியாகிவிடும். 

8. இனி விஸார்டில் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.


9. இதில் Password Reset Disk என எழுதி வைக்க மறக்க வேண்டாம். இதனை எப்படி பயன்படுத்துவது? எப்போதாவது உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போய்விட்டதா? 

1.வெல்கம் ஸ்கிரீன் வந்தவுடன் உங்கள் யூசர் நேம் கிளிக் செய்து என்டர் அழுத்தவும். 


2. அடுத்து ஒரு மெசேஜ் கிடைக்கும். அதில் உங்கள் பாஸ்வேர்ட் ரீசெட் டிஸ்க்கினை செருகவும் என்று இருக்கும். 


3. அடுத்து "Use your password reset disk" என்று இருக்கும் இடத்தில் கிளிக் செய்திடவும். 

4. மீண்டும் Password Reset Wizard என்ற விஸார்ட் திறக்கப்படும். தொடர்ந்து புதிய பாஸ்வேர்ட் அமைப்பதற்கான வழி முறை கிடைக்கும். அதனைப் பின்பற்றவும். புதிய பாஸ்வேர்ட் ஒன்றி னை அமைத்து இயக்கலாம்.

5. இனி மீண்டும் ஒரு Password Reset Disk தயாரிக்க வேண்டியதில்லை. இதனையே எப்போதெல்லாம் உங்கள் பாஸ்வேர்ட் மறந்து போகிறதோ அப்போதெல்லாம் இதனைப் பயன்படுத்தலாம். விஸ்டாவிலும் இதே போல நடைமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது.அக்டோபர் 22 - தயாராய் இருங்கள்இதோ அதோ என்று கூறப்பட்டு எதிர் பார்க்கப்பட்டு வந்த மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண் டோஸ் 7 வரும் அக்டோபர் 22ல் வெளி யாக இருப்பதாக மைக்ரோசாப்ட் நிறு வனத்தால் உறுதி செய்யப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் காலண்டரில் அந்த நாளை ஒதுக்கித் தயாராய் இருந்தால் அன்றே அதனை விலைக்கு வாங்கி இன்ஸ்டால் செய்து கம்ப்யூட்டரில் புதிய அனுபவம் ஒன்றுக்குத் தயாராய் இருக்கலாம். விஸ்டா வெளியாகி 33 மாதங்கள் கழித்து அடுத்த தொகுப்பு வெளியாகிறது. சென்ற மே 5ல் முழுப் பதிப்பிற்கு முந்தைய பதிப்பு பொதுமக்களுக்கென வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 ஆறுவகையான பதிப்புகளில் வெளியாகும்.Windows 7 Starter :  ஒரே நேரத்தில் மூன்று அப்ளிகேஷன்களை மட்டுமே கையாள முடியும்.Windows 7 Home Basic: எழுந்துவரும் சந்தைக்கு ஓர் அடிப்படையான தொகுப்புWindows 7: Home Premium  எடிஷன். இதில் ஏரோ யூசர் இன்டர்பேஸ், டச் மற்றும் மீடியா சென்டர் தரப்படும்.Windows 7 Professional: ரிமோட் டெஸ்க் டாப் ஹோஸ்ட், மொபிலிட்டி சென்டர், பிரசன்டேஷன் மோட்.Windows 7 Enterpriseவால்யூம் லைசன்ஸ் மட்டுமே தரப்படும். விர்ச்சுவல் டிரைவில் இருந்து மட்டுமே பூட் செய்யப்படும். பிட் லாக்கர் உண்டு. Windows 7 Ultimate;  குறைந்த அளவி லேயே கிடைக்கும். அனைத்து வசதிகளும் இருக்கும். விண்டோஸ் எக்ஸ்பி அல்லது விஸ்டா பயன்படுத்துபவர்களுக்கு பதிப்பை மேம்படுத்தி விண்டோஸ் 7க்கு மாற ஆப்ஷன் தரப்படும். இதற்கென தனியே கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். இது குறித்த தகவல்கள் மட்டும் இனிமேல் வெளியிடப் படும் என்று தெரிகிறது


-source:dinamalar

StumbleUpon.com Read more...

உலகம் மறந்துபோக முற்பட்ட உண்மைகளை மீண்டும் உரத்துக் கூறியவர்கள்

 

itபுகலிடத்தஞ்சம் கோரி ஈழத்தமிழ் மக்கள் பயணித்த கப்பலொன்று இந்தோனேசிய கடற்பரப்பை சென்றடைந்ததுடன், அது அவுஸ்திரேலியாவை நோக்கி பயணிக்க முயன்றமை அவுஸ்திரேலியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையில் பல அரசியல் நெருக்கடிகளை உருவாக்கியுள்ளது.

இந்த அரசியல் நெருக்கடிகளுக்குள் தாம் அவதானமாகவே உள்நுழைய வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் இடம்பெயர்ந்த மக்களுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவை நோக்கி 260 பேரைக் கொண்ட மூன்று படகுகளும், கனடாவை நோக்கி 76 பேரைக் கொண்ட ஒரு கப்பலும் கடந்த சில வாரங்களில் பயணித்துள்ளன. இந்த கப்பல்களில் இருந்தவர்கள் அனைவரும் ஈழத்தமிழ் மக்கள். அவர்கள் அரசியல் தஞ்சம் கோரி அங்கு சென்றுள்ளனர். அவுஸ்திரேலியாவை நோக்கி சென்ற படகுகளில் இரண்டு படகுகள் இந்தோனேசிய படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஒரு படகு 39 பேருடன் அவுஸ்திரேலியாவை சென்றடைந்த போதும் அது கடலில் மூழ்கியதால் அதில் இருந்த 12 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. மூவரின் உடல்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன.

27 பேர் உயிர்தப்பியுள்ளனர். கனடாவை நோக்கி சென்ற "ஓஷன் லேடி' என்ற கப்பலில் இருந்த 76 பேரையும் உள்வாங்கிக் கொள்வது தொடர்பில் கனேடிய அரசு பல வாதப் பிரதி வாதங்களை முன்வைத்து வருகின்றது. கம்போடியாவில் பதிவு செய்யப்பட்ட இந்தக் கப்பல் கடந்த மாதம் 17 ஆம் திகதி கனடாவின் கடற்பரப்பை சென்றடைந்திருந்தது. அவுஸ்திரேலியாவை நோக்கி சென்று தற்போது அவுஸ்திரேலிய அரசின் கப்பலான "ஓஷானிக் விக்கிங்' கப்பலில் வைக்கப்பட் டுள்ள 78 பேரும் தம்மை அவுஸ்திரேலிய அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற கோரி க்கையை முன்வைத்து போராடி வருகின்றனர். இந்த மக்களின் அரசியல் தஞ்சங்களை குறிப்பிட்ட நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் இந்த மக்கள் இலங்கையில் நடைபெற்ற போரில் தப்பியவர்கள் எனவும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புகள் தெரிவித்துள்ளன.

போர் நிறைவுபெற்று விட்டது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில் கடந்த சில வாரங்களில் பெருமளவான ஈழத் தமிழ் மக்கள் அரசியல் அடைக்கலம் கோரி உயிரைப் பணயம் வைத்து பல ஆயிரம் மைல் கடந்து பயணம் செய்தமை உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஏறத்தாழ கடந்த 30 ஆண்டுகளாக ஈழத் தமிழர்கள் தாயகத்திலிருந்து புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளில் அரசியல்தஞ்சம் கேட்பது ஒன்றும் புதியகதை அல்ல. ஆனால் தற் போதைய நிகழ்வு முன்னெப்போதும் இல்லா தளவிற்கு சில வேறுபட்ட கருத்துகளைக் கொண்டுள்ளது. இந்த மக்களின் பயணம் உலகிற்கு ஒரு செய்தியை வலுவாக உணர்த்தி நிற்கின்றது. அதாவது ஈழத்தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளும், அடிப்படை உரிமைகளும் பாதுகாக்கப்படும் வரையிலும், அவர்கள் இலங்கையில் பாதுகாப்பாக வாழலாம் என தாம் எண்ணும் வரையிலும் உரிமைக்கான போர் என்ற நிகழ்வுகள் அங்கு அடங்கி விட்டதாக யாரும் கருத முடியாது.

அது ஏதோ ஒரு வகையில் தொடரவே செய்கின்றது. மேலும் போர் அங்கு எவ்வாறு முடிவடைந்தது என்பதையும், அதன் பின்னர் தமிழ் மக்களின் எதிர்காலம் என்பது என்ன? என் பது தொடர்பான தகவல்களையும் இந்த மக்களின் பயணம் தெளிவாக புரியவைத்திருக்கும். இது தொடர்பில் புலம்பெயர் நாடு ஒன்றில் இருந்து வெளிவரும் இணையத்தளம் ஒன்றிற்கு நேர்காணலை வழங்கிய ஊடகவியலாளரும், ஆய் வாளருமான பரணி கிருஷ்ணரஜனி தெரிவித்த கருத்தையும் இங்கு கூறுவது பொருத்தமானது."யார் என்ன வியாக்கியானம் கூறி னாலும் புகலிடத்தஞ்சம் கோரியிருப்பவர்களுக்கு இருக்கிற ஒரே அடையாளம் "இனப்படுகொலையிலிருந்து தப்பியவர்கள்' என்பதுதான். நூற்றுக் கணக்கானவர்கள் ஒன்று சேர்ந்து குழுக்களாக பல முனைகளினூடாக அரசியல் தஞ்சம் கோரியிருக்கிற நிகழ்வு சொல்கிற மிகப் பெரிய உண்மை இது. போரில் குரூரமாகத் தோற்கடிக்கப்பட்டவர் களாக தமது அடையாள நிலத்தை இழந்த வர்களாக வாழ்வதற்கான நிலமற்றவர்களாக அவர்களது இருப்பு மாறியிருப்பதை அவர்களது கூட்டு அரசியல் தஞ்சம் அறிவிக்கிறது

என தெரிவித்துள்ளார். அதாவது, இலங்கையில் போர் நிறைவு பெற்றாலும் அங்கு எல்லா இனமும் சமத்துவமான அரசியல் உரிமைகளையும், அதி காரங்களையும் கொண்டிருந்தால் மட் டுமே அமைதி ஏற்படும் என்ற வாதமும் இதன் மூலம் வலுப்பட்டுள்ளது. போரின் நிறைவுடன் உலகம் மறந்து போக முற்பட்ட ஒரு உண்மையை இந்த அப்பாவி மக்கள் உயிரைப் பணயம் வைத்து மேற்கொண்ட பயணம் மீண்டும் தூசுதட்டி உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. இலங்கையில் போரின் பின்னான நிகழ்வுகளில் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வு குறித்தும், அவர்களின் இழந்து போன மனித உரிமைகள் தொடர்பாகவும் மேற்குலகம் சில நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. ஆனால், ஆசியாவின் மிகப்பெரும் ஜன நாயக நாடாகத் தன்னைத்தானே பிரகடனப்படுத்தியுள்ள இந்தியா மௌனமாகவே இருந்து வருகின்றது.

இந்த வருடத்தின் முற்பகுதியான மார்ச் மாதத்தில் இருந்து மே மாதம் வரையிலுமான மூன்று மாத காலப்பகுதியில் இலங்கை அரசினால் அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயத்திற்குள் சிக்கியிருந்த மக்களை விடுதலைப்புலிகள் பலவந்தமாக தடுத்து வைத்துள்ளனர் என உலகிற்கு அறிவித்து வந்த இந்திய மத்திய அரசும், சில மேற்குலக நாடுகளும் கடந்த ஆறு மாதங்களாக 300,000 மக்கள் முகாம்களில் பலவந்தமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் செயல்திறன் இன்றி உள்ளன. அழுத்தங்களின் ஊடாக இந்த மக்களின் மனித அவலங்களை முடிவுக்கு கொண்டுவர கிடைத்த சந்தர்ப்பங்களைக் கூட அவர்கள் தவறவிட்டிருந்தனர். தற்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார அழுத்த மிரட்டல்களும், அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் மற்றும் போரியல் குற்ற விசாரணைகள் தொடர்பான மிரட்டல்களும் ஓரளவு பலனைக் கொடுத்துள்ளன.

இலங்கைக்கான ஜி.எஸ்.பி. பிளஸ் வர்த்தக வரிச்சலுகை நிறுத்தப்படும் என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கையும், அமெரிக்கா வின் வெளியுறவு திணைக்களம் அதன் காங்கிரஸ் சபையில் சமர்ப்பித்த இலங்கையில் நடைபெற்ற போர் தொடர்பான அறிக்கையும் இலங்கைக்கு ஓரளவு அழுத்தத்தைத் தோற்றுவித்துள்ளது. இந்த அழுத்தங்களில் இருந்து தப்புவதற்காக இலங்கை அரசாங்கம் பல நடவடிக்கைகளை அவசர அவசரமாக மேற்கொண்டு வருகின்றது. எனினும் முகாம்களில் தங்கியுள்ள மக்களைமுற்றாக மீளக்குடியமர்த்துவதுடன், 20 வருடகாலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே ஐரோப் பிய ஒன்றியத்தின் முன்நிபந்தனைகளில் முக்கியமானவை என ஐரோப்பிய ஒன்றியத் தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள் ளார்.ஆனால், இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்துவதுடன் மட்டும் ஈழத்தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப்போவ தில்லை. அவர்களின் அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படும் வரையிலும் உலகெங்கும் உள்ள ஜனநாயக நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரும் ஈழத்தமிழ் மக்களின் பயணங்கள் ஓய்ந்துவிடப்போவதில்லை.

வேல்ஸிலிருந்து அருஷ்

நன்றி்.வீரகேசரி--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழ் மக்களின் தமிழீழமும், மூன்று எதிரிகளும்

"என் எதிரிகளை நான் பார்த்துக் கொள்கிறேன், என்னை நண்பர்களிடம் இருந்து காப்பாற்று" என்றொரு வேண்டுதல் வழக்கு உண்டு, அதன் சாரம் முழுதும் தமிழீழச் சிக்கலில் குளிர்காய நினைக்கும் சில தமிழக அரசியல்வாதிகளுக்காக எழுதப்பட்டது போலவே எனக்குத் தோன்றுகிறது, உலகமெங்கும் பெருகி வரும் தமிழீழ ஆதரவுக் குரலை நெறிக்கும் வகையில் இந்தியப் பேரரசால் திட்டமிடப்படும் பல்வேறு தந்திர வித்தைகளை முறியடிக்க வேண்டிய மிகப்பெரும் பொறுப்பு தமிழர்களாகிய நமக்கு இருக்கிறது. இந்த வேளையில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்வி ஒவ்வொரு உணர்வுள்ள தமிழனின் உள்ளக் குமுறலாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

நாம் என்ன செய்ய வேண்டும்??? என்று முடிவு செய்வதற்கு முன்னாள், நம் எதிரிகள் என்ன செய்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது அவசரம் மிகுந்த ஒரு தேவையாகி இருக்கிறது. அதிகாரப்பூர்வமான தமிழீழ எதிரிகளாக மூன்று பிரிவுகளை அடையாளம் காண இயலும், முதல் எதிரி நேரிடையான இன எதிரி, உன்னுடைய அடையாளங்களை நான் எதிர்க்கிறேன் என்று தொடர்ந்து கடந்த அறுபது ஆண்டுகளாக தன்னுடைய சிங்கள மேலாண்மையை நம் மீது திணிக்கும் நேரடி எதிரி, இந்த எதிரியை எதிர் கொள்வதும் அடையாளம் காணுவதும் நமக்கு அப்படி ஒன்றும் கடினமான செயலாக இல்லை, இருக்கப் போவதும் இல்லை,

இரண்டாவது எதிரி, தமிழ் இனம் என்கிற சொல்லாடலையே வெறுக்கும் அல்லது கருவறுக்க நினைக்கும் இந்திய தேசப் பார்ப்பனீயம், இந்த எதிரியை நமக்கு நீண்ட காலமாகவே தெரியும் என்றாலும், கடந்த நான்கைந்து மாதங்களில் அதன் கோர முகத்தை நம்மால் நன்றாகவே உணர முடிந்தது, இயன்ற வகைகளில் எல்லாம் தன்னுடைய பிராந்திய வல்லரசுப் போர்வையைப் போர்த்தியபடி தமிழின அழிப்பில் மறைமுகமாக ஈடுபட்ட இந்திய தேசியம் நமது இரண்டாவது எதிரி என்பதில் நமக்கு அய்யம் இல்லை. இந்த எதிரியை மேற்குலகின் ஆதரவோடுதான் நம்மால் வெல்ல முடியும், அதற்கான அனைத்து முயற்சிகளிலும் நமது புலம் பெயர்ந்த இளைஞர்கள் முழு மூச்சாக ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது எதிரி தான் கண்டறிய முடியாத அளவிற்கு நாடகங்களையும், புனைவுகளையும் புரிந்து நம்மில் இருந்து கொண்டே நம்மைக் கருவறுக்கும் செயல்களை மிகத் தீவிரமாக இந்திய தேசியத்திற்காகச் செய்து விடத் துடிப்பவன். இந்த எதிரியை எதிர் கொள்ளத் தகுந்த மாற்று இயக்கங்களை, அரசியல் ஒருங்கிணைவுகளை நமது தமிழக மக்கள், குறிப்பாக நமது இளைஞர்கள் உருவாக்க வேண்டிய தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது.

விடுதலைப்புலிகளை ஒடுக்கி, அழித்து விட்டால் தமிழர்களின் ஒட்டு மொத்த விடுதலை உணர்வையும், தமிழர்களின் தனி அடையாளத்தையும் அழித்து ஒழித்து விடலாம் என்கிற ராஜபக்சே சகோதரர்களின் கனவில் இடி விழுந்தாற்போல உலகெங்கும் தமிழர்கள் வீறுகொண்டு எழுந்து இலங்கை அரசிற்கு எதிராக அரசியல் நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்கள், "தமிழீழம்" என்கிற ஒரு கோட்பாட்டின் அடிப்படை எதிரியான சிங்களம், தன் மேல் குத்தப்பட்ட மனித உரிமை மீறல் அடையாளங்களை அழிக்க இயலாமல் உலக அரங்கில் தலை குனிந்து நிற்கும் சூழல் உருவாகி வருவதை நம்மால் காண முடிகிறது. முதல் எதிரியான சிங்களம் தலை குனியும் நேரத்தில், இரண்டாவது எதிரி அதனைச் சரி செய்யும் வேளையில் ஈடுபடுவதையும் நாம் உணர்கிறோம், ஆம், இந்திய தேசியம் வரிந்து கட்டிக் கொண்டு இலங்கைக்குத் தொடர்ந்து சரிவுகள் நிகழாமல் காக்கும் அளப்பரிய பணியைச் செய்து வருகிறது.rm

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சில நாட்களுக்கு முன்னர் உலக வங்கிக்கு ஒரு மறைமுக மிரட்டல் விடுத்தார், உலக வங்கி இலங்கைக்குக் கடன் வழங்க மறுக்கும் சூழலில், இந்திய தேசியம் 2.6 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்கும் என்பது தான் அந்த மறைமுக மிரட்டல், உலக வங்கியின் மிகப்பெரிய பயனாளரான இந்திய தேசியம் விடுக்கும் மிரட்டலுக்கு, செவி சாய்க்க வேண்டிய நிலையில் தான் உலக வங்கி இருக்கிறது, ஏனென்றால் உலக வங்கி நடைபெறுவதற்கு ஒரு மிக முக்கியக் காரணி இந்திய தேசியம் தான், அதிக அளவில் வட்டியும் முதலும் செலுத்தும் நாடாகவும், உலக வங்கியின் மிகப் பெரிய பயனாளியாகவும் இந்திய தேசியம் இருப்பது தான் இதற்குக் காரணம் (The most valuable Customer).

வல்லரசு, புல்லரசு என்றெல்லாம் கதைகள் சொல்லிக் கொண்டு, உழைக்கும் மக்களின் பணத்தில் உண்டு கொழுக்கும் இந்திய தேசியம் உலக வங்கியின் படியளப்பில் தான் இன்னும் உயிரோடு இருக்கிறது. பெரும்பான்மையான ஆப்பிரிக்க நாடுகள் உலக வங்கியின் பிடியில் இருந்து விடுபட்டுத் தங்கள் பொருளாதாரத்தைச் சீரமைக்க ஆர்வம் காட்டும் நேரத்திலும், உலக வங்கியின் முன்னாள் அதிகாரியான அலுவாலியாவுடன் இணைந்து இந்திய தேசியத்தை ஒட்டு மொத்தமாக உலக வங்கியிடம் அடகு வைக்கும் ஆர்வம் இந்தியப் பிரதமரிடம் அளவற்றுக் கிடப்பது விந்தையான ஒன்றாகும்.eu

ஐரோப்பிய ஒன்றியம் தனது ஜி.எஸ்.பி பிளஸ் (GSP-PLUS) வரிச்சலுகைகளை இலங்கைக்குக் கொடுப்பதை நிறுத்தப் போவதாகச் சொல்லும் சூழலில், ஏனைய நாடுகள் இலங்கையுடனான தங்கள் வர்த்தகப் பரிவர்த்தனைகளை மறுபரிசீலனை செய்யப் போவதாக அறிவிப்புகள் வெளியாகும் வேளையில், ஈழத் தமிழர்களின் பிணங்களின் மீது கட்டமைக்கப் போகிற பிராந்திய வல்லரசு வெறியை இந்தியப் பார்ப்பனீய தேசியம் வெளிப்படுத்தத் துடிக்கிறது என்பதற்கு ஒரு சிறிய எடுத்துக்காட்டுத் தான் இந்த உலக வங்கிக்கான மிரட்டல்.

தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் முகாம்களைப் பார்வையிடும் நாடகம் முடிந்து இலங்கைக்கு நற்சான்று கொடுக்கும் அறிக்கையொன்றை வெளியிட்ட தமிழக முதல்வர் திருவாய் மலர்ந்து, தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமான வர்த்தக உறவுகள் மலர்ந்து செழிக்கப் போவதாகச் சொன்னதும், புதிய திட்டங்களில் இலங்கையுடன் இணைந்து செயல்படப் போவதாகச் சொன்னதும் தான் மிகக் கொடுமையானது மட்டுமன்றி மன்னிக்க முடியாததும் ஆகும். உலகம் முழுதும் வர்த்தகத் தடையை எதிர் நோக்கும் இலங்கையுடன், தொப்புள் கொடி உறவுகளாகிய நாம் வர்த்தகம் செய்யப் போகிறோம் என்ற அறிவிப்பு எத்தனை சூழ்ச்சிகள் நிறைந்தது, எத்தனை வலியைத் தரக் கூடியது என்று தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் மாநில முதல்வருக்குத் தெரியாமல் போனதும், கொஞ்சமும் நெருடாமல் இருந்ததும் வெட்கக் கேடானது. கண்டனத்திற்குரியது.mahinda_mps

தமிழக முதல்வரும் அவரது பரிவாரங்களும் தமிழீழச் சிக்கலில் என்ன செய்கிறார்கள் என்றால், கூடவே இருந்து குழி பறிக்கிறார்கள் என்பது தான் விடையாகிறது. இலங்கைக்கு உலக அரங்கில் உருவாகி இருக்கிற அவப்பெயரைத் துடைக்கும் சீரிய பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரும், அவரது பரிவாரங்களும் ராஜபக்சே சகோதரர்களின் அதிகாரப் பூர்வ செய்தித் தொடர்பாளர்களாகி இருக்கிறார்கள், உலகம் இலங்கையைப் புறக்கணிக்கத் தயாராகி வரும் சூழலில், இலங்கையின் ஆட்சியாளர்களைப் போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் உலகெங்கும் வலுப்பெறும் நிலையில், ஐக்கிய நாடுகள் அவையையே தனது கொடுங்கோன்மையின் எல்லைகளுக்குள் அனுமதிக்காத ராஜபக்சே, எப்படி தமிழக நாடாளுமன்றக் குழுவை அனுமதித்தார்???,

இது முற்றிலும் இந்திய தேசியத்தின் உளவுத் துறையினர் ஆலோசனைப்படி நடத்தப்பட்ட நாடகமாக இருக்குமோ??? என்ற மிகப் பெரிய ஐயம் நமக்குள் எழுவதைத் தடுக்க முடியவில்லை. உலக நாடுகளின் அழுத்தத்தில் இருந்தும், ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை அமைப்புகளிடமும் கொடுப்பதற்கு ஒரு நற்சான்றிதழ் தேவைப்பட்ட நேரத்தில், மிகச் சரியாகத் தனது காய்களை நகர்த்தி தமிழக நாடாளுமன்றக் குழுவை ராஜபக்சே வரவழைத்திருக்கிறார், குழுவினரும் மிகச் சிறப்பாகக் கொலைகாரர்களின் தோளுக்குப் பொன்னாடை எல்லாம் போர்த்தி, கட்டித் தழுவித் தங்கள் தேசிய அடையாளத்தைக் காட்டி வந்திருக்கிறார்கள்.gaza

இப்படி ஒருபுறம் நமது எதிரிகள் தமிழினத்திற்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் பல்வேறு சாதகமான விளைவுகளும் "தமிழீழம்" என்கிற கோட்பாட்டை வலுப்படுத்தும் வகையில் நகர்வது ஒன்று தான் சற்று ஆறுதல் தரக்கூடியது,

அவற்றில் சில இன்றியமையாதவை:

1) அமெரிக்க வெளியுறவுத் துறையால், அமெரிக்கக் காங்கிரசுக்குக் கையளிக்கப்பட்ட 67 பக்க அறிக்கையும் அது உருவாக்கும் தாக்கமும்.

2) ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி – பிளஸ் (GSP-PLUS) வரிச்சலுகை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதும் அதன் விளைவுகளும்.

3) இலங்கையின் அரசியலில் நிகழ்ந்து வரும் குழப்ப நிலை.

4) தமிழீழம் தவிர்த்த எந்தவொரு அரசியல் தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை என்கிற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குரல்

மேற்கண்ட யாவும் தானாக நிகழவில்லை என்பதையும், உலகெங்கும் வாழுகின்ற தமிழ்ச் சமூகம் தனது குரலை விடாமல் ஒலித்துக் கொண்டே, பல்வேறு போராட்டங்களையும், அரசியல் முன்னெடுப்புகளையும் மேற்கொண்டதன் விளைவுதான் இத்தகைய மாற்றங்கள் என்ற உண்மையை நாம் உணரும் போதும், நாம் என்ன செய்ய வேண்டும்? என்கிற கேள்விக்கான விடை தானாகத் கிடைக்கும்.tamil_nadu

தமிழக இளைஞர்கள், புலம் பெயர்ந்த ஈழத் தமிழ் இளைஞர்களுடன் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை இத்தகைய மாற்றங்கள் நமக்கு உணர்த்துகின்றன.இன்னும் வீரியமான அரசியல் மற்றும் ராஜதந்திர நகர்வுகளை ஒருங்கிணைந்து நாம் நிகழ்த்தினால் நமது "தமிழீழம்" என்கிற நீண்ட நெடிய பயணத்தின் தொடுபொருளை நம்மால் விரைந்து அடைய முடியும். தங்கள் அரசியல் நலன்களையும், தனி மனித வளர்வு வணிகத்தையும் ஈழத் தமிழ் மக்களின் குருதியின் ஊடாகக் காப்பாற்றிக் கொள்வதற்கும், வளர்ப்பதற்கும் பயன்படுத்தும் கபட வேடதாரிகளை அடையாளம் கண்டு புறக்கணிப்பதும் இன்றைய தேவையாகி இருக்கிறது. ஆழமான பயன்களைத் தரக்கூடிய ஊடகப் பரப்புரைகள், உலகளாவிய ஒருங்கிணைந்த தமிழ் இளையோர் கூட்டமைப்பு போன்ற திட்டங்களில் இளைஞர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். மேலும், "நாடு கடந்த தமிழீழ அரசு", உலகத் தமிழர் பேரவை" போன்ற உலகளாவிய அமைப்புகளின் குறைபாடுகளைக் களைந்து அவற்றை மென்மேலும் வலுப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.

தெரிந்தோ தெரியாமலோ, மேற்குலக நாடுகள் தமிழீழம் தொடர்பாகத் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கிறது, இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான அமெரிக்க அறிக்கையே கூட, தெற்காசியாவில் இலங்கை போன்ற ஒரு கடல் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நாட்டைத் தன் கீழ்ப்படிதலுக்குக் கொண்டு வருகிற முயற்சியாக இருக்கலாம், ஆனால், இவற்றில் இருந்து நாம் பெற வேண்டியவற்றைப் பெற்று நமது இலக்குகளை நோக்கி வெற்றிகரமாக எப்படிப் பயணிக்கப் போகிறோம் என்பது தான் நமக்கு முன்னிருக்கிற மிகப் பெரிய கேள்வி.

எமது சொந்த மண்ணில், எமது சொந்த மொழியுடன் கூடிய வாழ்க்கை நெறிகளை நாங்கள் மேற்கொள்வதைத் தடை செய்து, இன மற்றும் மொழி ஒடுக்குமுறைகளில் நம்மைச் சிறுமைப்படுத்திய சிங்களச் சிறு நரிகளுக்கும், தமிழினத்தின் தனி அடையாளம் கண்டு எப்போதும் குலை நடுங்கித் தங்கள் "புதிய தலைமுறைகளில்" ஒப்பாரி வைக்கும் பார்ப்பனீய இந்திய தேசத்திற்கும் பாடம் கற்பிக்க வேண்டிய வரலாற்றுத் தேவையைக் காலம் பல்லாயிரம் அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்து நம்மிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. மொழிக்காகவும், இனத்தின் விடுதலைக்காகவும் இறந்து போன அந்த உயிர்களின் மதிப்பை தமிழ் இளைஞர்களாகிய நாம் மீட்டு எடுப்போமா? இந்தக் கேள்விக்கான காலத்தின் பதிலில் ஒளிந்து கிடக்கிறது நமது வளர்ச்சியும், வீழ்ச்சியும்.

pulam

வெட்ட வெட்டத் தழைப்போம்!

பிடுங்கப் பிடுங்க நடுவோம்!!

அடிக்க அடிக்க அடிப்போம்!!!

அடைக்க அடைக்க உடைப்போம்!!!!

அழிக்க அழிக்க எழுதுவோம்!!!!

விழ விழ எழுவோம்!!!!

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்

நன்றி: அறிவழகன்


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மக்கள் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு: விடுதலைப் புலிகள் விளக்கம்


 

 

புலம்பெயர் நாடுகளில் தற்போது நடைபெறும் மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும் ஏனைய அமைப்புக்கள் தொடர்பாகவும் உள்ள குழப்பங்களைத் தவிர்க்கும் பொருட்டு இவ்வறிக்கை விடுக்கப்படுகிறது என அதிர்வு இணையத்திற்கு விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது. மின்னஞ்சல் மூலமாக இவ்வறிவித்தல் கிடைக்கப்பெற்றுள்ளது.தலைமைச் செயலகம், 
தமிழீழ விடுதலைப் புலிகள், 
தமிழீழம்.

09–11–2009 ஊடக அறிக்கை

சிங்கள பௌத்த பேரினவாத சக்திகளின் இனவாத உணர்வும், தமிழ் தேசிய இனத்தின் மீது கொண்டுள்ள வரலாற்று ரீதியான பழிவாங்கும் மனப்பான்மையும் ஒவ்வொரு காலகட்டங்களிலும் அதிகரித்துச் செல்வது வரலாற்றின் உண்மையாகும். காலத்திற்குக் காலம் ஆட்சிபீடம் ஏறுகின்ற சிங்கள அரசியல் தலைவர்கள் தமிழ் பேசும் மக்களின் நலன்களில் அக்கறை செலுத்தாது அவர்களது உரிமைகளைப் பறித்து தமிழ் தேசிய இனத்தைச் சிதைவடையச் செய்வதையே நோக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த வகையில் தொடர்ச்சியாக தமது அரசியல் உரிமைகளை இழந்த தமிழ் பேசும் மக்கள் அவ் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு போராட்டத்தை நிகழ்த்த வேண்டிய வரலாற்றுத் தேவை தோற்றுவிக்கப்பட்டது. அதன் ஆரம்ப வடிவமாக அகிம்சை வழியிலும் அரசியல் முறையிலும் நடைபெற்ற போராட்டத்தை வன்முறை மூலம் அடக்க முற்பட்டதாலேயே தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதப்போராட்டமாகப் பரிமாணம் பெற்றது.

ஈழத்தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல தசாப்தங்களாகத் தொடர்ந்துவரும் விடயம் என்பதுடன் அதை அடையும் வரை தமிழ் மக்கள் ஒய்ந்துவிடப் போவதுமில்லை. கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலான ஆயுதம் தாங்கிய வீரமிகு போராட்டம் முள்ளிவாய்க்கால் மானிடப் பேரவலத்தினைத் தவிர்ப்பதற்காக ஆயுதங்கள் மௌனிக்கப்பட்டன. அத்தகைய இன்றைய சூழலில் இப்போராட்டத்தைத் தொடர்ச்சியாகத் தலைமையேற்று நடாத்தவேண்டிய பாரிய பொறுப்பும் கடமையும் அனைத்துத் தமிழ் பேசும் மக்களிடமும், குறிப்பாக புலம்பெயர்ந்த தமிழ் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. தமிழீழ மக்களின் அரசியல் அபிலாசையான தமிழீழம் என்பது விடுதலைப் புலிகளின் விருப்பம் மட்டுமே என்று திரித்துக்கூறி, நியாயமானதும் ஈழத்தமிழரின் மிக நீண்டகாலப் போராட்டத்தின் எதிர்பார்ப்புமாகிய சுதந்திரத்தையும் இறைமையையும் மறுதலிக்கும் முயற்சிகள் பல்வேறு மட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றன. உண்மைக்குப் புறம்பான மாறுபட்ட செய்திகளையும், கருத்துக்களையும் பரவலடையச் செய்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்குடனும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே இன்றைய நிலையில் சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத்திற்கான தமது விருப்பையும், தாம் அதற்கான தாயகமும் தேசியமும் சுயநிர்ணய உரிமையும் கொண்டவர்கள் என்பதையும் முழு உலகிற்கும் ஆணித்தரமாகச் சொல்லவேண்டியதும், விடுதலைக்கான அரசியற் கட்டமைப்பை உருவாக்க வேண்டியதும், ஈழத்தமிழ் மக்களின் உடனடியான வரலாற்றுக் கடமையாகின்றது. 


இவ்வகையில், ஆயுதப்போராட்ட காலத்திற்கு முன்பாகவே தமிழ் பேசும் மக்கள் தமது அரசியல் அபிலாசையை மக்களாணை மூலம் வெளிப்படுத்தியமையும், முழுமையான சுதந்திர விருப்பைப் பிரகடனப்படுத்தியதுமான வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை மீண்டும் வழிமொழிவது, ஐயத்துக்கிடமின்றி இன்றைய மக்களின் விருப்பும் அதுவே என்பது உலகிற்குத் தெளிவாகப் பறைசாற்றும் நிகழ்வாக அமையும். இந்த வழிமொழிவு இன்று ஈழத்தமிழரின் தேசிய அரசியற் போக்கைத் தீர்மானிக்கும் முதற்கட்டமாகும்.

அதேநேரத்தில் பன்னாட்டுப் பரிமாணம் பெற்றுவிட்ட இலங்கைத்தீவின் அரசியற் சூழலிலும் ஈழத்தமிழரின் தற்போதைய நிலையிலும் அவர்களது அரசியற் கட்டமைப்பாக ஜனநாயக வழியில் தெரியப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசு சர்வதேசரீதியில் தமிழ் மக்களது உரிமைகளை நியாயப்படுத்தி தனியரசு அமைய பாடுபடுவது இன்றைய காலகட்டத்தின் கட்டாய தேவையாகவும் உள்ளது. 

அதேவேளை, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் வாழும் ஒவ்வொரு நாட்டிலும் உருவாக்கப்படுகின்ற மக்கள் அவைகள் ஜனநாயக முறையில் அமைவதானது மக்கள் பங்களிப்பை விரிவுபடுத்தவும், வல்லரசுப் பரிமாணங்களிலிருந்து தேசிய அரசியலைப் பாதுகாக்கவும், நாடு கடந்த தமிழீழ அரசின் அடிமட்டத்தை வலுப்படுத்தவும், இவ்வரசின் நடைமுறைச் செயற்பாட்டுக்கு உதவக்கூடியதாகவும் அமையும். 

மேற்கூறிய மூன்று அரசியல் முன்னெடுப்புக்களில் ஏதாவது ஒன்று குறைவுபடினும் அது எல்லாவற்றையும் பாதிப்பதாக அமையும், இவை ஒன்றுக்கொன்று இயைவாகவும் பாதுகாப்புத் தரக்கூடியவையாகவும் அமைதலே இலக்கை அடைவதற்கு வழிவகுக்கும். இன்றைய சூழலில் தமிழ் பேசுகின்ற மக்கள் தங்கள் அரசியல் உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக தாங்களே தலைமையேற்று நடாத்துகின்ற ஜனநாயகம் தழுவிய போராட்டத்தை தமிழீழ விடுதலைப்புலிகளாகிய நாம் ஆதரிப்பதுடன் இச்செயற்பாடுகள் முழுமையான மக்கள் பங்களிப்புடன் செய்து முடிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். 

தாயக விடுதலைக்காக தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களையும், அளப்பரிய தியாகங்கள் புரிந்த மக்களையும் எங்கள் மனங்களில் நிலைநிறுத்தி தாயக வேட்கையுடன் விடுதலை பெறும்வரை ஒன்றிணைந்து உழைத்தலே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். 


'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்'


source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

காதல் மனைவியை அழகூட்ட 8 ஆபரேஷன் செய்த டாக்டர் கணவன்


 

 

லண்டன்:காதல் மனைவியை அழகூட்ட, எட்டு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்தார் டாக்டர் கணவர். இந்த அறுவை சிகிச்சைகளை அவரே தன் வருங்கால மனைவிக்கு செய்தார்.ஜெர்மனியை சேர்ந்த புகழ் பெற்ற பிளாஸ்டிக் சர்ஜன் ரெசா வொஸாவ்(48). இவரின் காதலி கேனி; 33 வயதான இவர் ஓட்டல் பணிப்பெண்; திருமணம் செய்து கொள்ளுமுன், வருங்கால மனைவியை அழகியாக்க வேண்டும் என்று தீர்மானித்தார் டாக்டர் காதலன்.தேவையில்லாமல் அதிக சதை போட்ட இடுப்பு, தொடை, வயிறு போன்ற பகுதிகளில் அடிக்கடி "போடக்ஸ்' ஊசி மருந்தை செலுத்தி, பருமனை குறைத்தார். மார்பகத்தை பெரிதாக்க , "சிலிகான்' பஞ்சை பொருத்தினார்.இதுபோலவே, உதடு, கன்னம், நெற்றி, புருவங்கள் போன்ற இடங்களிலும் பேஷன் அறுவை சிகிச்சைகளை செய்தார். சதைப்பற்றை குறைக்க மட்டும், இரண்டு முறை அறுவை சிகிச்சை செய்தார்.மற்ற இடங்களில் கத்தியின்றி, ரத்தமின்றி அறுவை சிகிச்சை செய்தார். ஐந்தாண்டு வரை இந்த அறுவை சிகிச்சைகள் தொடர்ந்தன. அதன் பின் தான், கேனியை அவர் மணந்து கொண்டார். "கேனியை நான் ஓட்டலில் முதன் முதலில் பார்த்தபோது அவள் மிகவும் குண்டாக இருந்தாள். ஆனால், ஏதோ கவர்ச்சி காணப்பட்டது.பேஷன் மருத்துவரான நான், அவள் உடலில் சில முக்கிய பாகங்களில் அறுவை சிகிச்சை செய்தால் எப்படியிருப்பாள் என்று கற்பனை செய்து பார்த்தேன். மகா அழகியாகி விடுவாள் என்று தோன்றியது. என் அறுவை சிகிச்சைகளுக்கு அவளும் ஒத்துழைத்தாள். அதனால் தான் இன்று பேரழகியாக இருக்கிறாள்; மாடல் அழகியாகவும் வலம் வருகிறாள்' என்று டாக்டர் வொஸாவ் தெரிவித்தார்


souce:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP