அறிவியல் புதுமை
>> Monday, May 26, 2008
இசைக் கலைஞன் ரோபோ
சமீப காலங்களில் வித விதமான, ரக ரகமான வேலைகளைச் செய்யும் ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டு வருகின்றன. நடனமாடும் ரோபா, விளையாடும் ரோபோ போன்ற ரோபோக்களும் இதில் அடக்கம். அந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ளது `இசைக் கலைஞன் ரோபோ'. இசை நிகழ்ச்சிகளை நடத்தும்போது, அதற்கு தலைமையாக இருக்கும் இசை வல்லுனர், இசையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப கைகளை அசைத்து உற்சாக மூட்டுவார். இசை நிகழ்ச்சி நடக்கும்போது இசை வல்லுனர் கைகளை அசைப்பது போல, புதிய ரோபோ கணக்கச்சிதமாக கைகளை அசைக்கிறது. அமெரிக்காவில் உள்ள இசைக்குழுவின் தலைவர் கைகளை அசைப்பதை போலவே, ரோபோவும் கைகளை அசைக்கும் படி உருவாக்கி உள்ளனர். `சாத்தியமில்லாத கனவு' என்ற தலைப்பில் ரோபோவை தலைவராக கொண்டு இசை நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். இசை நிகழ்ச்சியின்போது, பார்வையாளர்களை நோக்கி மட்டுமின்றி இசைக் கலைஞர்களின் அருகில் சென்று, ரோபோ கைகளை அசைத்த விதம் அனைவரையும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது.
செங்குத்தான பகுதிகளில் எளிதாக ஏறுவது, மேடுபள்ளமான இடங்களில் தடுமாறாமல் ஓடுவது என இந்த ரோபோ கூடுதல் திறமைகளையும் பெற்றுள்ளது.
இனி வரும் காலங்களில், `அட்ராஅட்ரா நாக்குமொக்க, நாக்குமொக்க' ... என்று ரோபோக்கள் பாடினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
http://www.dailythanthi.com/Irmalar/home/second_page.asp?issuedate=5/24/2008&secid=76
விண்வெளி சுற்றுலா!
கோடை காலத்தில் ஊட்டி, கொடைக் கானல் என சுற்றுலா செல்வதைப் போல, விண்வெளிக்கும் சுற்றுலா செல்லும் காலம் விரைவில் வர இருக்கிறது. விண்வெளி வீரர்கள் மட்டுமே விண்வெளிக்கு சென்று வந்த நிலை மாறி, சாதாரண மனிதர்களையும் அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. அமெரிக்க நிறுவனம் ஒன்று இதற்கான சோதனைக்காக ஆளில்லாத விண்வெளி ஓடம் ஒன்றை கடந்த வருடம் அனுப்பி இருந்தது. அந்த ஓடம் வெற்றிகரமாக விண்வெளியை சுற்றி வந்துள்ளது. 27 கோடி மைல்கள் தூரம் அந்த ஓடம் சுற்றி வந்துள்ளது.
4.4 மீட்டர் நீளமும், 8 மீட்டர் அகலமும் கொண்ட இந்த விண்வெளி ஓடம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 2011-ம் ஆண்டில் மனிதர்கள் செல்லக்கூடிய வகையிலான விண்வெளி ஓடங்களை பிரமாண்டமாய் வடிவமைத்து, மனிதர்களுடன் சேர்த்து அனுப்ப திட்டமிட்டுள்ளனர். இந்த முயற்சியும் வெற்றி அடைந்தால், மனிதர்களுக்கு வானமே எல்லை என்ற வார்த்தை நிஜமாகும்.