சமீபத்திய பதிவுகள்

கிரீசில் கடும் பூகம்பம்

>> Tuesday, October 14, 2008

 
 
lankasri.comகிரீஸ் நாட்டின் வடகிழக்கு பகுதியில் இன்று அதிகாலை கடும் பூகம்பம் ஏற்பட்டது. எனினும் இந்த பூகம்பம் காரணமாக உயிரிழப்போ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் வெளியாகவில்லை.

கிரீஸ் தலைநகர் ஏதென்சின் வடகிழக்கே அல்கிதா என்ற இடத்திற்கும், இவியா தீவிற்கும் இடையே கடலுக்கு அடியில் இன்று அதிகாலை 5 மணிக்கு இந்த பூகம்பம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவுகோலில் 6.6 என்ற அளவில் பதிவானதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த பூகம்பம் ஏற்பட்ட சில நிமிடங்களுக்கு பின் 2 முறை அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டதாகவும் அது கூறியுள்ளது.

அதிகாலையில் ஏற்பட்ட இந்த பூகம்பம் ஏதென்ஸ் பகுதியில் உணரப்பட்டதாகவும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பீதியுடன் வெளியேறியதாகவும்
 அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223976309&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

குண்டுவெடிப்பு வழக்கு:புத்த துறவிகளுக்கு ஆயுள் தண்டனை

 
 
lankasri.comதிபெத் குண்டுவெடிப்பு வழக்கில் எட்டு புத்த துறவிகள் குற்றவாளிகள் என நிரூபணமானது.இவர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.ஒலிம்பிக் தீப ஓட்டத்தின்போது திபெத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.

கடந்த மார்ச் 23-ம் தேதி ஜியான்பி நகர அரசு அலுவலகத்தில் குண்டு வெடித்தது.இதில் பொருள் இழப்போ,உயிரிழப்போ ஏற்படவில்லை.

இது தொடர்பான வழக்கில் எட்டு புத்த துறவிகள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.அவர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த செப்டம்பர் 23-ம் தேதியே இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் அதுகுறித்து தற்போதுதான் செய்தி வெளியாகி உள்ளது.

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223999987&archive=&start_from=&ucat=1&

 

StumbleUpon.com Read more...

தேவாலயத்தில் திடீர் தீ:விஷமிகளின் நாசவேலை?:போலீஸ் விசாரணை

 
lankasri.comபெங்களூர் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்த நிலையில்,ஒரு தேவாலயம் திடீரென தீப்பற்றி எரிந்தது.இதில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள மேஜை,நாற்காலிகள்,புத்தகங்கள் எரிந்து சாம்பலானது.இது விஷமிகளின் நாசவேலை என்று கிறிஸ்தவர்கள் புகார் கூறுகின்றனர்.ஆனால் போலீஸர் இதை மறுத்துள்ளனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

பெங்களூர் ஊரக மாவட்டம், ஆனேக்கல் தாலுகா, அத்திபெலே காவல் சரகத்தில் எடவனஹள்ளி கிராமம் உள்ளது. இங்கு ஒசூர் சாலையில் புனித அந்தோணியார் தேவாலயம் அமைந்துள்ளது.

கர்நாடகத்தில் கடந்த மாதம் பரவலாக கிறிஸ்தவ தேவாலயங்கள் தாக்கப்பட்டதை அடுத்து மாநிலம் முழுவதும் அனைத்து தேவாலயங்கள், கிறிஸ்தவ பிரார்த்தனை மையங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதேபோல புனித அந்தோணியார் தேவாலயத்திலும் போலீஸர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந் நிலையில் திங்கள்கிழமை அதிகாலை 1.15 மணியளவில் பூட்டப்பட்டிருந்த புனித அந்தோணியார் தேவாலயத்துக்குள் திடீரென தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்த அப் பகுதியில் பணியில் இருந்த போலீஸர், தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் உள்ளூர் மக்கள் அங்கு சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீப்பற்றியதில் தேவாலயத்துக்குள் பிரார்த்தனை பகுதியில் இருந்த மேசை, நாற்காலி, சில இசைக் கருவிகள், புத்தகங்கள், பாதிரியார் அணியும் ஆடைகள் உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சாம்பலானது. இது குறித்து தகவல் கிடைத்தும் எடவனஹள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயம் முன்பு குவிந்தனர்.

"இது தீ விபத்து அல்ல; விஷமிகளின் திட்டமிட்ட சதி" என்று கூறி போராட்டம் நடத்த முயன்றனர். உடனே அங்கு விரைந்த பெங்களூர் ஊரக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பி.மகேஷ், தீயணைப்பு துறை அதிகாரிகள் மற்றும் மின்வாரிய என்ஜினியர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர்.

"மின்கசிவால்தான் தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும், விஷமிகளால் தேவாலயம் தீவைக்கப்படவில்லை. தேவாலயத்துக்கு ஒரே நுழைவு வாயில் மட்டுமே உள்ளது. அங்கு போலீஸர் பாதுகாப்பில் இருந்ததால் விஷமிகள் நுழைய வழியே இல்லை என்றும் மறுப்புத் தெரிவித்தனர்".

இது குறித்து தேவாலயத்தின் பாதிரியார் சந்தோஷ் மற்றும் பெங்களூர் மறைமாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அடால்ஃப் வாஷிங்டன் கூறுகையில்,"தேவாலயத்தில் பற்றியிருந்த தீயை அணைத்த பிறகு உள்ளே சென்றுபார்த்தோம். அப்போது, அலமாரியில் இருந்த புத்தகங்கள், மெழுகுவர்த்தி ஸ்டாண்டு மற்றும் பூந்தொட்டிகள் கீழே சிதறிக்கிடந்தன. தீ விபத்து ஏற்பட்டிருந்தால் பொருள்கள் சிதறுவதற்கு வாய்ப்பில்லை. எனவே விஷமிகள்தான் இச் செயலில் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறினர்.

இது தொடர்பாக விசாரிக்க தடயவியல் நிபுணர்களின் உதவியை போலீஸர் நாடியுள்ளனர். தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223974708&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

ஒரிசாவில் மீண்டும் வன்முறை:போலீஸ்காரர் படுகொலை

lankasri.comஒரிசா மாநிலத்தில் 1மாதமாக கலவரம் நீடித்து வருகிறது.கிறிஸ்தவர்கள் கலவரத்துக்கு இதுவரை 36பேர் பலியாகி உள்ளன. நூற்றுக்கணக்கான கிறிஸ்தவ ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

கலவரத்தை அடக்க அங்கு மத்திய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் நிலைமை சீரடையவில்லை.

இந்த நிலையில் கந்தமால் மாவட்டம் ராய்சியா என்ற இடத்தில் பாதுகாப்புக்கு நின்று இருந்த 2 போலீசார் மீது கலவர கும்பல் திடீரென தாக்கியது.

அதில் ஒரு போலீஸ்காரர் தப்பி ஓடி விட்டார்.ஒருவர் சிக்கி கொண்டார். அவரை கலவர கும்பல் அடிக்கடி கொன்றது.அவரது பெயர் விவரம் தெரியவில்லை.
http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223977267&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

கிறிஸ்தவர்களுக்கான தனி இட ஒதுக்கீடு வாபஸ்!:பிஷப்புகள் கோரிக்கையை ஏற்றது அரசு

 
 
lankasri.comகிறிஸ்தவர்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீடு உத்தரவை வாபஸ் பெறுவதாகவும்,இஸ்லாமியர்களுக்கு மட்டும் 3.5சதவீத இட ஒதுக்கீடு அளிக்கப்படும் என்றும் முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கான 30சதவீத இட ஒதுக்கீட்டில் கிறிஸ்தவர்களுக்கு 3.5சதவீதமும்,முஸ்லிம்களுக்கு 3.5சதவீதமும் உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டது.இதில், வேலைவாய்ப்பில் குறிப்பாக ஆசிரியர் நியமனத்தில் கன்னியாகுமரி மாவட்ட கிறிஸ்தவர்களுக்கு அதிகளவு இடம் கிடைக்காமல் போனதாக அப்பகுதியினர் அதிருப்தி தெரிவித்தனர்.இது தொடர்பாக முதல்வரிடம் கிறிஸ்தவப் பிரதிநிதிகள் முறையிட்டனர்.

மயிலை பேராயர் சின்னப்பா:இதுகுறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஜனார்த்தனம் தலைமையிலான கமிட்டிக்கு முதல்வர் பரிந்துரைத்திருந்தார்.சிறுபான்மை சமூக பிரதிநிதிகளுடன் முதல்வர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.முதல்வர் கருணாநிதியை நேற்று தலைமைச் செயலகத்தில் சென்னை மயிலை பேராயர் சின்னப்பா,சி.எஸ்.ஐ.,பேராயர் தேவகடாட்சம்,காங்கிரஸ் சட்டசபை கொறடா பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.

கிறிஸ்தவர்களுக்கும்,முஸ்லிம்களுக்கும் தலா 3.5சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் நடைமுறைக்கு வந்த போது உயர்க்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் அனுமதியிலும்,வேலைவாய்ப்பிலும் கிறிஸ்தவர்கள் முன் பெற்ற வாய்ப்புகளை விட மிகக் குறைவாகவே பெற முடிந்துள்ளது.எனவே,கிறிஸ்தவர்களுக்கான 3.5சதவீத இட ஒதுக்கீட்டை திரும்பப் பெற்று,முன்பிருந்தபடியே இட ஒதுக்கீட்டை தொடர வேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிறிஸ்தவர்களின் இந்த கோரிக்கையைப் பரிசீலித்த பின் முதல்வர் கருணாநிதி வெளியிட்ட அறிவிப்பு:

பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும்,முஸ்லிம்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்க நல்லெண்ணத்துடன் கோரிக்கை வைக்கப்பட்டது.அரசு தனி இட ஒதுக்கீட்டுக்கான அவசரச் சட்டத்தை கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி கொண்டு வந்தது.இதில்,கிறிஸ்தவர்களுக்கு கல்வி,வேலைவாய்ப்புத் துறைகளில் உரிய இடம் கிடைக்காமல் பின்னடைவு ஏற்படக் கூடும் என்ற ஐயப்பாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

பழைய படியே இட ஒதுக்கீடு:கல்வி, வேலைவாய்ப்புகளில் பின்னடைந்துள்ள முஸ்லிம்களுக்கு இந்த தனி இட ஒதுக்கீடு மூலம் கிடைக்கிற ஆதாயத்தை அவர்கள் வரவேற்கின்றனர்.ஆனால்,கிறிஸ்தவர்களுக்கு இந்த தனி இட ஒதுக்கீடு முன்பிருந்த வாய்ப்புகளைக் குறைத்துள்ளது.எனவே,பிற்படுத்தப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு பழைய படியே இட ஒதுக்கீடு தொடர,அவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது என்றும்,சட்டத்தில் தக்க திருத்தம் மேற்கொள்வது என்றும் அரசு முடிவெடுத்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் கல்வி,வேலைவாய்ப்புகளில் இன்னும் முன்னேற்றம் காண வேண்டிய சூழ்நிலையைக் கருதி,அவர்களுக்கு மட்டும் இந்த தனி இட ஒதுக்கீடு ஆணையை நடமுறைப்படுத்த அரசு முடிவெடுத்துள்ளது.இவ்வாறு முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1224000498&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இயேசு தேவனுடைய குமார‌ர் தான் என்பதற்கு புதிய ஏற்பாட்டிற்கு வெளியேயும் ஆதாரம்

 

கிபி37ல் பிறந்த யூத வரலாற்று ஆசிரியரான ஜோஸிஃபஸ் (Josephus) என்பவர்; கிபி93ஆம் ஆண்டில் ரோம் நகரில் யூதர்களின் நீண்ட வரலாற்றை வெளியிட்டார். அவர் ரோம பேரரசில் பொந்தேயூ பிலாத்து என்ற ஆளுநரின் கீழ் யூதர்கள் இருந்ததை விவரிக்கும் போது இயேசுவைப்பற்றியும் எழுதியுள்ளார்….

இனி அவர் இயேசுவைப்பற்றி சொல்வதைக் கேட்போம்:

"ஏறக்குறைய இந்த சம காலத்தில் தான் இயேசு என்ற ஒரு ஞானி, அவரை மனிதர் என்று அழைப்பது நியாயம்தானா என தெரியவில்லை, காரனம் அவர் அநேக அதிசயமான காரியங்கள் செய்தார் சத்தியத்தை மனமகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளக்கூடிய அப்படிப்பட்ட மனிதர்களின் போதகர் இருந்தார். அவர் அநேக யூதர்களையும் அநேக கிரேக்க‌ மக்களையும் தம்மிடமாக கவர்ந்து இழுத்துக்கொன்டார். அவரே கிறிஸ்த்துவாகிய மேசியா; ந‌ம்மிடையே தலைவர்களாக இருந்த மனிதர்களது ஆலோசனையின் பேரில் பிலாத்து அவரை சிலுவையில் அறையும்படி தீர்ப்பளித்தபோது, முதலில் அவரை நேசித்தவர்கள் அவரை கைவிட்டுச் செல்லவில்லை. காரனம் அவரை பற்றித் தெய்வீகத் தீர்க்கதரிசிகள் சொன்ன இவையும், இவை போன்ற இன்னும் பல‌ அதிசயமான காரியங்களும் நிறைவேறியது போலவே அவர் மூன்றாம் நாள் மீண்டும் உயிரோடெழுந்து அவர்களுக்கு காட்சியளித்தார்; அவர் பெயரைக்கொன்டு கிறிஸ்தவர்கள் என்று அழைக்கப்படும் குலம் இன்றைக்கும் அழிந்து போகாமல் இருக்கவே செய்கிறது"

In Rome, in the year 93, Josephus published his lengthy history of the Jews. While discussing the period in which the Jews of Judaea were governed by the Roman procurator Pontius Pilate, Josephus included the following account:

About this time there lived Jesus, a wise man, if indeed one ought to call him a man. For he was one who performed surprising deeds and was a teacher of such people as accept the truth gladly. He won over many Jews and many of the Greeks. He was the Messiah.. And when, upon the accusation of the principal men among us, Pilate had condemned him to a cross, those who had first come to love him did not cease. He appeared to them spending a third day restored to life, for the prophets of God had foretold these things and a thousand other marvels about him. And the tribe of the Christians, so called after him, has still to this day not disappeared.

- Jewish Antiquities, 18.3.3 §63

(Based on the translation of Louis H. Feldman, The Loeb Classical Library.)

ஆதார‌ம்: http://members.aol.com/FLJOSEPHUS/testimonium.htm

 

http://tinyurl.com/4x8zta

 

StumbleUpon.com Read more...

நாய்களோடு நடைபயிற்சி செய்பவ‌ர்களா நீங்கள்?

 

நாய்களோடு நடைபயிற்சி செய்பவ‌ர்களா நீங்கள்?

சில‌ ச‌ம‌ய‌ம் பலர் காலை, ம‌ற்றும் மாலை வேளைக‌ளில் ந‌டைப‌யிற்சி செய்வ‌தைப் பார்த்திருக்கிறீர்க‌ளா?. அதில் சிலர் தாங்கள் வள‌ர்க்கும் நாய்குட்டியோடு ந‌டைப‌யில்வார்க‌ள். அப்போது அப்போது அந்த‌ நாய்க்குட்டி மேல் ம‌ட்டுமே அதிக‌மான‌ க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டியிருக்கும், கார‌ன‌ம் அந்த‌ நாய் த‌ன்னைவிட‌ ப‌ல‌ம் குறைந்த‌ நாய்க‌ளைப்பார்த்தால் சண்டைக்குப் போகும். மேலும் க‌ண்ணில் ப‌டும் சாலையோர‌ க‌ம்ப‌ங்க‌ளுக்கு ஓடி த‌ன் அடையாள‌த்தை ப‌திவுசெய்யும். மேலும் தெருவில் செல்வோர் மீது பாயும். இதனால் நாயோடு வந்தவர்கள் அதைக்கட்டுப்படுத்துவதிலேயே முழு நேரத்தையும் செலவிட்டுவிடுவார்கள். மொத்த‌த்தில் ந‌டைப‌யில்ப‌வ‌ர்க‌ளில் உட‌ற்ப‌யிற்சி நோக்க‌ம் நிறைவேறாம‌ல். நாய் அவ‌ர்க‌ளை த‌ன் வேலைக‌ளுக்கு கூட‌வ‌ந்து உத‌விசெய்யும் வேலைக்கார‌னாகவே தன் எஜமானை மாற்றிவிடுகிற‌து என்ப‌தே உண்மை.இது போல‌த்தான்  சில‌ர் ஆவிக்குரிய‌ வாழ்க்கைகுள் வ‌ரும் போது உல‌கப் பிர‌கார‌மான (தொலைக்காட்சி, மது, பொய், மற்றும் பல) சில பல‌ நாய்க‌ளையும் கூட்டிக்கொண்டு வ‌ந்து விடுகிறார்க‌ள். அவ‌ர்க‌ள் உண்மையாய் ஆவிக்குறிய‌ ப‌ய‌ன் தெரிந்து வந்திருந்தாலும், அந்நாய்(உலகப்பிரகாரமானவைகளுக்கு)களுக்கு  அவ‌ர்க‌ளின் நோக்க‌த்தை முறிய‌டிப்ப‌தே  முக்கிய‌ வேலையாகிப்போன‌ப‌டியால். அவர்கள் வந்த நோக்கம் நிறைவேறுவதில்லை மேலும் அவர்கள் அவைக‌ளை மிக‌வும் நேசிப்ப‌தாலும், அவைக‌ளை கைவிட‌ ம‌ன‌மில்லாமில்லாததாலும், த‌ங்க‌ள் நோக்க‌ம் நிறைவேறாம‌லேயே திரும்ப‌ வேண்டியிருக்கிற‌து.

ஆக‌வே நீங்க‌ள் ம‌ட்டும் இனிமேல் தனியாக தின‌மும் ந‌டைப‌யின்றால் ந‌டைப‌யிற்சியின் ப‌ல‌னை முழுமையாய் அனுப‌விக்க‌லாம்.
 
 

StumbleUpon.com Read more...

ஆண்களில் வழுக்கைக்கு அம்மாக்களா காரணம்..?!

 
lankasri.comஆண்களில் பிறப்புரிமை சார்ந்து தலையில் முடி (மயிர்) உதிர்தல் (வழுக்கை) ஏற்படுவதற்கு தாயிடம் இருந்து பெறப்படும் இலிங்க நிறமூர்த்தமான (பால் தெரிவு நிறமூர்த்தங்களில் ஒன்று) X வகை நிறமூர்த்தத்தில் (chromosome) உள்ள பரம்பரை அலகே (Gene) காரணம் என்று இதுவரை காலமும் நம்பப்பட்டு வந்தது.

ஆனால் X நிறமூர்த்தத்தில் உள்ள பரம்பரை அலகுக்கு நிகராக மனிதனில் உள்ள 23 சோடி நிறமூர்த்தங்களில் 20ம் சோடியில் உள்ள பரம்பரை அலகுகளும் செல்வாக்குச் செய்கின்றன என்ற தகவல் தற்போது வெளியிடப்பட்டிருப்பதுடன், அங்கு காணப்படும் தந்தை வழியில் இருந்தும் தாய் வழியில் இருந்தும் பெறப்படும் பரம்பரை அலகுகளால் கூட முடி உதிர்தல் தூண்டப்படலாம் என்ற அறிதலும் பெறப்பட்டுள்ளது.

அந்த வகையில் ஆண்களில் முடி உதிர்தலுக்கு தாய் வழி X நிறமூர்த்தத்தில் உள்ள பரம்பரை அலகு மட்டுமன்றி தந்தை வழி பரம்பரை அலகுகளும் காரணமாக இருக்கின்றன என்பதால் தந்தைக்கு முடி உதிர்தல் அல்லது வழுக்கை இருக்கும் பட்சத்தில் மகனுக்கும் இருக்க அதிக வாய்ப்புள்ளது.

அது மட்டுமன்றி ஆண்களில் சுமார் 14% பேர் மேற்குறிப்பிட்ட இரண்டு வகை பரம்பரை அலகுகளிலும் முடி உதிர்தலைத் தூண்டும் அலகுகளைக் கொண்டிருக்கின்றனர் என்பதுடன் இப்பரம்பரை அலகுகளின் தாக்கத்தால் முடியுதிர்தல் பிரச்சனை 7 மடங்கு அதிகரித்த அளவில் இளமைக் காலத்திலேயே ஏற்பட வாய்ப்பிருப்பதாக குறித்த ஆய்வில் இருந்து கண்டறிந்துள்ளனர். மேலும் ஏதாவது ஒரு முடியுதிர்தல் பரம்பரை அலகுடன் சுமார் 40% ஆண்கள் இருக்கின்றனர்.

எனவே முன் கூட்டிய மரபணு அலகு அல்லது பரம்பரை அலகு ஸ்கானின் மூலம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு முன் கூட்டிய முடி உதிர்தலைத்தடுக்க மரபணுச் சிகிச்சை (gene therapy) உட்பட பலவகை சிகிச்சை முறைகளை ஆரம்பிக்க முடியும் அல்லது முடி மீள நாட்டல் மூலம் முடியை வளர்க்க முடியும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்..!

 

 

StumbleUpon.com Read more...

டிரா‌வி‌ல் முடி‌ந்தது முத‌ல் டெஸ்ட்!

 
lankasri.comஆஸ்ட்ரேலிய-இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் எடுத்தது.

போட்டியின் கடைசி நாளான இன்று தனது 2வது இன்னிங்சைத் தொடர்ந்த ஆஸ்ட்ரேலியா அணி 6 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. ஷேன் வாட்ஸன் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிராட் ஹட்டின் 35 ரன்கள், வொய்ட் 18 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்திய பந்து வீச்சாளர்களில் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், ஹர்பஜன் 2 விக்கெட்டுகளும், ஜாகீர்கான் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

இதையடுத்து 299 ரன்களை வெற்றி இலக்காகக் கொண்டு இந்திய அணி 2வது இன்னிங்சை துவக்கியது. அதிரடியாக விளையாடி ஆஸ்ட்ரேலிய பந்துவீச்சாளர்களை திணறடிப்பார் என்று இந்திய ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துவக்க வீரர் சேவாக் 6 ரன்கள் எடுத்த நிலையில், கிளார்க் பந்தில் ஸ்லிப்பில் நின்றிருந்த ஹைடனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய டிராவிட் 5 ரன்கள் எடுத்த நிலையில் பிரெட்லீ பந்தில் பாண்டிங்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சச்சின் பொறுப்பாக விளையாடினாலும், கம்பீர் 29 ரன்களில் ஆட்டமிழந்தார்.

எனினும் அடுத்து களமிறங்கிய லஷ்மணுடன் இணைந்த சச்சின் விக்கெட் சரிவு ஏற்படாத வண்ணம் மிகவும் கவனமாக விளையாடினார். 45 ரன்களை எட்டிய பின்னர் ஆமை வேகத்தில் ரன் சேகரித்த சச்சின், ஒரு கட்டத்தில் 49 ரன்களை எட்டினார்.

விரைவில் அரைசதத்தை பூர்த்தி செய்து, வெஸ்ட்இண்டீஸ் வீரர் பிரையன் லாராவின் அதிக டெஸ்ட் ரன் சாதனையை முறியடிப்பார் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த நிலையில், கேமரூன் வொய்ட் பந்தில், ஸ்டூவர்ட் கிளார்க்கிடம் கேட்ச் கொடுத்து சச்சின் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது போதிய வெளிச்சமும் இல்லாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து லஷ்மணுடன், கங்கூலி இணைந்தார். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே போதிய வெளிச்சமின்மை காரணமாக போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சுமார் 35 நிமிடங்கள் கழித்து மீண்டும் போட்டி துவங்கிய போது மீண்டும் களமிறங்கிய லஷ்மண்-கங்கூலி இணை, ஆஸ்ட்ரேலிய பந்துவீச்சை சமாளித்து விக்கெட் இழப்பின்றி முன்னெறியது.

இன்னிங்சின் 73வது ஓவர் முடிவில் போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்ட‌ம் நிறுத்தப்படுவதாக நடுவர்கள் அறிவித்ததைத் தொடர்ந்து, ஆஸ்ட்ரேலிய அணியும் போட்டியை டிரா செய்ய ஒப்புக் கொண்டது. அப்போது லஷ்மண் 42 ரன்களுட‌னு‌ம், கங்கூலி 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

ஆஸ்ட்ரேலிய பந்து வீச்சாளர்களில் பிரெட்லீ, ஸ்டூவர்ட் கிளார்க், மிட்செல் ஜான்சன், கேமரூன் வொய்ட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

இப்போட்டியின் 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தம் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய ஜாகீர்கான் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223909542&archive=&start_from=&ucat=4&

 

StumbleUpon.com Read more...

பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்:35 தீவிரவாதிகள் பலி

 
 
lankasri.comபாகிஸ்தான் பழங்குடியினப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் 35தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

வடமேற்கு பகுதியில் ஓரக்ஜாய் மாவட்டத்தில் அல்-காய்தா தீவிரவாதிகளின் ரகசிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதாக ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் குறிப்பிட்ட வீட்டின் மீது விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் குண்டுகள் வீசப்பட்டன.இதில் ஏராளமான தற்கொலைப் படை தீவிரவாதிகள் பலியானதாக ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223888145&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

நக்சலைட்களை ஒடுக்க "கோப்ரா"தனிப்படை

 
 
lankasri.comநக்சலைட்களை ஒடுக்குவதற்காக, "கோப்ரா"( நல்லபாம்பு) என்ற பெயரில் தனிப்படை அமைக்கப்பட உள்ளது. இந்தப் படையிலிருந்து சிலரை தேர்வு செய்து,அதன்மூலம் தனி உளவுப் பிரிவை உருவாக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த தனிப்படையில் மொத்தம் 10ஆயிரம் பேர் இருப்பர்.

நாடு முழுவதும் நக்சலைட்களின் ஆதிக்கம் பெருகி வருகிறது. சில மாநிலங்களில் இவர்களின் ஆதிக்கம் அதிக அளவில் இருப்பதால், அங்கு அதிக அளவில் வன்முறைகள் நடந்து வருகின்றன. இதனால், நக்சலைட்களை ஒடுக்குவதற்காக, "கோப்ரா"என்ற பெயரில் தனிப்படை ஒன்றை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தனி உளவுப் பிரிவைக் கொண்டிருக்கும்: ஒரு பட்டாலியனுக்கு 1,000 பேர் என்ற அடிப்படையில்,10 பட்டாலியன்களை (10 ஆயிரம் பேர்) இந்தப் படை கொண்டிருக்கும். இந்த 10 பட்டாலியன்களில், ஒரு பட்டாலியனுக்கு மூன்று பேர் என்ற வீதத்தில்,30 பேர் தேர்வு செய்யப்படுவர்.அவர்கள் தனி உளவுப் பிரிவாக செயல்படுவர்.நக்சலைட் தொடர்பான விஷயங்களை,இந்த உளவுப் பிரிவினர் கண்காணிப்பதோடு, அவர்களின் நடமாட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்தும் தகவல்கள் சேகரித்து மத்திய அரசுக்கு அனுப்புவர்."நக்சலைட்கள் அல்லது பயங்கரவாதிகளை எதிர்கொள்ள வேண்டும் எனில்,உளவுப் பிரிவு இருக்க வேண்டியது அவசியம். அந்த அடிப்படையில், இந்த தனிப் படையும் தனி உளவுப் பிரிவைக் கொண்டிருக்கும்."அவர்கள், நக்சலைட்கள் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பது, அவர்களின் சதி திட்டங்களை அறிந்து கொள்வது, கிராமத்தவர்களுடனும், மற்றவர்களுடனும் தொடர்பு வைத்து,நக்சலைட்களின் நடமாட்டத்தை அறிந்து நிர்வாகத்தினருக்குத் தகவல் தெரிவிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவர்"என,மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.அவர் மேலும் கூறியதாவது:

10 பட்டாலியன்:இந்த "கோப்ரா"படை மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் கட்டுப்பாட்டில் செயல்படும். அதன் உளவுப் பிரிவு,உதவி கமாண்டன்டின் கீழ் செயல்படும்.இந்தத் தனிப்படைக்கான,10 பட்டாலியன்களில் இரண்டு பட்டாலியன்கள்,மத்திய ரிசர்வ் போலீஸ் படையிலிருந்து இந்த நிதியாண்டில் உருவாக்கப்படும். அந்தப் படையினர் சட்டீஸ்கர் மாநிலத்தில் பணியில் ஈடுபடுவர்.அடுத்த நிதியாண்டில்,மேலும் நான்கு பட்டாலியன்களும்,அதன்பின் மேலும் நான்கு பட்டாலியன்களும் உருவாக்கப்படும்.மொத்தம் மூன்று ஆண்டுகளில் 10பட்டாலியன் படையினரும் உருவாக்கப்படுவர்.

ஒப்புதல் வழங்காமல்:ஜம்மு-காஷ்மீர் உட்பட பல மாநிலங்களில் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் நக்சலைட் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர்,தங்களின் படைக்கு என,தனி உளவுப் பிரிவை அமைக்க திட்டமிட்டு,அது தொடர் பான முன்மொழிவுகளை மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளனர்.ஆனால்,அந்த முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் வழங்காமல், மத்திய உள்துறை அமைச்சகம் காலம் தாழ்த்தி வருகிறது.நக்சலைட்களை ஒடுக்குவதற்காக, "கோப்ரா"படையை உருவாக்கும் யோசனைக்கும் கடந்த ஆகஸ்டில் தான் மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தது."இடதுசாரி பயங்கரவாதம் நாட்டை பீடித்துள்ள ஒரு வைரஸ்"என, பிரதமர் விமர்சித்திருந்தும் கூட, பல மாதங்களுக்குப் பிறகே, இப்படை அமைக்க அனுமதி கிடைத்தது.இவ்வாறு மத்திய ரிசர்வ் போலீஸ் படை உயர் அதிகாரி கூறினார். நக்சலைட் அமைப்பில் தற்போது 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதுதவிர 1.50 லட்சம் பேர் அவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஆதரவு தருகின்றனர்.கடந்த ஆண்டு அக்டோபரில், போலீஸ் அதிகாரிகள் மத்தியில் உரை நிகழ்த்திய பிரதமர் மன்மோகன் சிங், "நக்சலைட்களை ஒடுக்க தனிப்படை அமைக்கப்படும்"என்றார். இந்தப்படை மொத்தம் 1,390 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223892116&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இந்து அமைப்புகள் மீது பிரதமர் கடும் தாக்கு:கிறிஸ்தவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்

இந்து அமைப்புகள் மீது பிரதமர் கடும் தாக்கு:கிறிஸ்தவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்
 
lankasri.comஒரிசா மற்றும் கர்நாடகத்தில் கிறிஸ்தவர் மீதான தாக்குதல் நமது அடிப்படை கலாசாரத்துக்கே ஆபத்தானது. மத சகிப்புத்தன்மை வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

விஸ்வ இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்புகளை மறைமுகமாகக் குறிப்பிட்டு கடுமையாக தாக்கிப் பேசினார்.

தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் பேசும்போது அவர் இவ்வாறு கூறினார். இக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அவர்களது பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஒரிசா,கர்நாடகம்,அசாம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் நடந்த வன்முறைகள் நியாயமான உணர்வுள்ள அனைவருக்கும் வேதனையளிப்பதாக உள்ளது.

இந்த வன்முறைகள்,கலவரங்கள் எல்லாம் செயற்கையாக தூண்டிவிடப்பட்டவை. மதத்தின் பெயரில் கலவரங்களை,வன்முறைகளை தூண்டி விடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேநேரத்தில் இரு தரப்புக்கும் இடையே நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

சட்டம் ஒழுங்கை நிலைநாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. அந்த வகையில் அரசு நிர்வாகம் சிறப்பாக இருக்க வேண்டும். மக்களிடையே அச்சத்தைப் போக்கி நம்பிக்கையை ஏற்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றார் அவர்.

மத நல்லிணக்கத்துக்கு,ஒருமைப்பாட்டுக்கு, அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள்.

நமது அரசமைப்புச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு செயல்படுவது அவசியம். நமக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பேசித் தீர்த்துக் கொள்ளும் வகையில் நமது அரசியல் ஜனநாயக நடவடிக்கை அமைய வேண்டும். ஜனநாயக ரீதியில் தீர்வு காண்பதைவிடுத்து நாம் ஆத்திரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக்கூடாது என்றார் பிரதமர்.

இந்த வன்முறைச் சம்பவங்கள் தற்செயலாக நடந்தவை அல்ல. இதுபோன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் அச்சுறுத்தலாக விளங்கிவரும் வகுப்புவாத சக்திகளை குறுகியகால அரசியல் லாபத்துக்காக நாம் ஊக்கப்படுத்தக் கூடாது என்றார் பிரதமர்.

சாமானிய மக்களின் உரிமையை நிலை நிறுத்துவதிலும் நாட்டின் ஒருமைப்பாட்டை காப்பதிலும் அரசியல் வேண்டாம். நமது ஜனநாயகத்தையும் பண்முகத்தன்மையையும் காப்பதில் ஒவ்வொரு அரசியல் தலைவருக்கு பொறுப்புண்டு.

மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் தீய சக்திகளை எதிராக போராட வேண்டும். சாமானிய மக்கள் அனைவரும் அமைதியையும் மத நல்லிணக்கத்தையுமே விரும்புகின்றனர் என்றார் மன்மோகன்.

தீவிரவாதம்: தீவிரவாதம் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும். இதில் சமரசத்துக்கே இடமில்லை. அதேநேரத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் தவறான முறைகளைப் பின்பற்றக் கூடாது. குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கு எதிரான நடவடிக்கையாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கு எதிரான எண்ணத்தையோ ஏற்படுத்துவதாக அமைந்துவிடக் கூடாது என்றார்.

கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள்,முதல்வர்கள்,காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி,பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் உள்பட பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

ஒருமைப்பாட்டு கவுன்சில் கூட்ட விவாதப் பட்டியலில் முதலில் தீவிரவாதம் இடம்பெறவில்லை. ஆனால் தீவிரவாதம் குறித்த விவாதமும் இடம் பெற வேண்டும் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உள்பட பாஜக ஆட்சி நடைபெறும் மாநில முதல்வர்கள் வலியுறுத்தியதை அடுத்து தீவிரவாதம் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223908472&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP