சமீபத்திய பதிவுகள்

இந்து மதம் தமிழர்களுடையதா?

>> Friday, October 3, 2008

 

தாயகத்து செய்திகளை உடனுக்குடன் தருவதில் முன்னணியில் நிற்கும் இணையத் தளங்களில் "பதிவு" இணையத் தளம் குறிப்பிடத்தக்கது. அதே போன்று "சூரியன்" இணையத்தளமும் பாராட்டத்தக்க வகையில் பணியாற்றி வருகின்றது. தேசியத்திற்கான பரப்புரைப் பணியில் இந்த இணையத் தளங்கள் தங்களுடைய பங்களிப்புகளை சிறப்பான வகையில் வழங்கி வருகின்றன

அறிவியல் சார்ந்த பல கட்டுரைகளையும் இந்த இணையத் தளங்கள் வழங்கி வருகின்றன. இந்த நிலையில் மயூரன் என்பவர் எழுதிய ஒரு வெங்காயத்தனமான கட்டுரையை வெளியிட்டு தம்முடைய பெருமைக்கு களங்கம் சேர்த்துள்ளன.

 

(முக்கிய குறிப்பு: பலர் சுட்டிக்காட்டிய பின்பு "பதிவு" இணையத்தளம் குறிப்பிட்ட கட்டுரையை நீக்கிவிட்டது. "பதிவு" இணையத்தளத்திற்கு எம் நன்றிகள்)

அக் கட்டுரை இதுதான்: http://www.sooriyan.com/index.php?option=c…3&Itemid=32

 

கட்டுரையில் "நம் மூதாதையர்களான இந்துக்கள்", "எமது இந்துக்கள்" "எம் இந்துக்களான பழந்தமிழர்" போன்ற வசனங்கள் மீண்டும் மீண்டும் இடம் பெறுகின்றன. இந்துக்கள்தான் விமானத்திற்கான அறிவை முதலில் உலகத்திற்கு தந்தார்களாம். அந்த இந்துக்கள் எங்களுடைய முதாதையர்களாம். என்னே கட்டுரையாளரின் அறிவு!!

ரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்றவைகள் எல்லாம் தமிழர்களின் இலக்கியங்களா? இவைகளுக்கும் தமிழர்களுக்கும் என்ன சம்பந்தம்? அட, இந்து மதத்திற்கும் தமிழர்களுக்கும்தான் என்ன சம்பந்தம்? கட்டுரை எழுதியவருக்கும், வெளியிட்டவர்களுக்கும் வரலாறே தெரியவில்லை. இதில் "அறிவியல்" மட்டும் எப்படி புரிந்து விடும்?

சங்க இலக்கியங்களில், ஐம்பெருங்காப்பியங்களில் வரும் வானூர்த்தி பற்றிய தகவல்களையும் தந்த கட்டுரையாளர் அத்தோடு நிறுத்தியிருக்கலாம். ஆனால் அங்கும் தன்னுடைய இந்துத்துவ வெறியை வெளிப்படுத்துகிறார்.

மணிமேகலை, சீவகசிந்தாமணி போன்றவற்றில் உள்ள வானூர்த்தி பற்றிய தகவல்களை கட்டுரையாளர் குறிப்பிடுகின்றார். சீவகசிந்தாமணி "மயிற்பொறி" என்ற ஒரு வானூர்த்தி பற்றிய தகவலை தருகின்றது. ஆனால் சீவகசிந்தமாணியின் "மயிற்பொறியை" விட இராமாயணத்தின் "புஸ்பகவிமானம்" உயர்ந்தது என்று கட்டுரையாளர் சொல்கின்றார்.

 

இதில் ஒளிந்திருக்கும் அரசியலை புரிந்து கொள்வது ஒன்றும் கடினம் இல்லை. சீவகசிந்தமாணி சமண சமய தத்துவங்களை சொல்கின்ற ஒரு காப்பியம். ஆனால் "புஸ்பகவிமானத்தை" சொல்கின்ற இராமாயணம் இன்றைக்கு இந்துக்களுடைய காப்பியமாக இருக்கின்றது. சமணம் சொல்கின்ற "மயிற்பொறியை" விட இந்துத்துவம் சொல்கின்ற "புஸ்பகவிமானம்" உயர்ந்தது என்பது மதவெறி மிக்க இந்தக் கட்டுரையாளரின் கருத்து.

இந்தக் கட்டுரையாளருக்கு மதவெறி இல்லையென்றால், "தமிழர்களுடைய முதாதையர்கள் இந்துக்கள்" என்று வரலாற்றையே திரித்திருக்க மாட்டார். தமிழர்களுடைய முதாதையர்களுடைய மதம் இந்து மதம் அல்ல. இந்து மதம் மிகவும் பிற்காலத்தில் தமிழர்களிடம் பரவிய ஒரு மதம்.

தமிழர்களுடைய மூதாதையர்களின் வழிபாடு நடுகல் வழிபாடாகவும் சிற தெய்வ வழிபாடாகவும் இருந்தது. தம்மோடு வாழ்ந்து, தமக்காக சாவடைந்த பெருவீரர்களை போற்றி வழிபட்டார்கள். இந்தச் சிறு தெய்வங்கள் அனைத்தும் பின்பு வந்த இந்து மதத்தால் உள்வாங்கப்பட்டு இல்லாமல் செய்யப்பட்டன. எஞ்சியுள்ள சிறு தெய்வங்கள் கோயிலுக்கு வெளியே நிற்கின்றன.

தமிழர்களுடைய மூதாதையர்களின் காத்திரமான இலக்கியங்களுள் பெரும்பாலானவை சமண, பௌத்த மதத்தவர்களால் உருவாக்கப்பட்டவை. திருக்குறளாக இருக்கட்டும், ஐம்பெரும் காப்பியங்களாக இருக்கட்டும் சமண, பௌத்த மதத்தவர்களால் உருவாக்கப்பட்டவையே.

தமிழர்களுடைய மூதாதையர்களுடைய மதம் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தை சுட்டிக் காட்டுவது முட்டாள்தனம். அதுவும் தமிழர்களுடைய பல நூல்களையும், நாகரீகத்தையும் அழித்த இந்து மதத்தை சுட்டிக்காட்டுவது பெரும் மோசடியான செயல்.

ரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்றவற்றை எழுதியவர்களுடைய பேரன்கள் இன்றைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கட்டுரையாளர் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழ் தேசியத்தை அழிப்பதற்கான அனைத்து வேலைகளையும் ஓடியாடிச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்தேசியத்தை அழிக்கத் துடிப்பவர்களின் மூதாதையர்களை தமிழர்களுடைய மூதாதையர்களாக காட்டுகின்ற கேவலமான வேலையை யாரும் செய்ய வேண்டாம். அப்படிச் செய்வது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் செய்கின்ற துரோகம் ஆகும்.

சமஸ்கிருத மொழிக்கும் தமிழுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று அறிவியல்ரீதியாக நிறுவப்பட்டுள்ளது. பல மொழியியல் வல்லுனர்கள் பல ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இதை நிறுவியுள்ளார்கள்.

சமஸ்கிருதம் "இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை" சேர்ந்தது. சமஸ்கிருத மொழிக் குடும்பத்தை சேர்ந்தவர்கள் உருவாக்கியுள்ள வானூர்த்தி குறித்த நூல்களுக்காக, இந்தியாவில் இருக்கும் ஆரியமொழியினரோ அல்லது ஐரோப்பிய மக்களோ பெருமைப்பட்டுக் கொள்ளலாம். தமிழர்கள் இதில் பெருமைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை.

முடிவாக தமிழர்கள் ஒவ்வொரு காலத்திலும் பல வகையான மதங்களை பின்பற்றி வந்திருக்கிறார்கள். நடுகல் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, சமணம், பௌத்தம், சைவம், இந்துத்துவம் என்று பல மதங்களை பல்வேறு காலகட்டங்களில் பின்பற்றியுள்ளார்கள். ஈழத்திலும் ஒரு காலத்தில் பெரும்பான்மையான தமிழர்கள் பௌத்தர்களாக வாழ்ந்துள்ளார்கள்.

ஒரு இனத்தின் மதம் என்றோ, அல்லது அந்த இனத்தின் மூதாதையர்களின் மதம் என்றோ ஒன்றை சுட்டிக்காட்ட முடியாது.

தமிழினத்தோடு எவ்விதத்திலும் பொருந்தாத ஒரு இனம் தன்னுடைய மொழியில் உருவாக்கிய ரிக்வேதம், இராமாயணம், மகாபாரதம், சமரங்கன சூத்திரா, வைமானிக சாஸ்திரம் போன்ற நூல்களை எங்களுடையவை என்று சொல்வது கையாலாகத்தனமானது.

இந்த நூல்களை எம்முடைய மூதாதையர்கள் உருவாக்கினார்கள் என்று சொல்வது அறிவுகெட்டத்தனமானது. "தமிழர்களின் மூதாதையர்கள் இந்துக்கள்" என்ற கருத்து எந்த விதத்திலும் அறிவியலோடு சம்பந்தப்படாதது. மதவெறியை வெளிப்படுத்துகின்ற கருத்து இது.

தேசியத்திற்கு பணியாற்றும் ஊடகங்கள் இவ்வாறான கட்டுரைகளை வெளியிட்டு தமது தரத்தை தாழ்த்திக் கொள்ள வேண்டாம்.

- வி.சபேசன்
 

தமிழர்களின் வானூர்த்தி அறிவு குறித்து சரியான வகையில் அலசுகின்ற சில கட்டுரைகள்:

 

http://www.alaikal.com/index.php?option=co…5&Itemid=48

http://www.aaraamthinai.com/sirappuparvai/…pr28sirappu.asp

 

http://www.webeelam.net/?p=229

StumbleUpon.com Read more...

“சம்பிரதாயம்” என்பதன் பின்னால் ஒளிந்திருக்கும் சாதி வெறி!

 

"சாவு வீட்டில் நடந்த காட்டுமிராண்டித்தனம்" என்ற தலைப்பில் கணவனின் இறுதி நிகழ்வில் மனைவியின் தாலி பலவந்தமாக கழற்றப்பட்ட சம்பவம் பற்றி எழுதியிருந்தோம்.

இந்தச் சம்பவம் எமக்கு அதிர்ச்சியையும் வேதனையையும் தந்திருந்தது. ஆனால் பலருக்கு இது ஒரு சாதரண விடயமாகத்தான் பட்டது. அது மட்டும் அல்ல. தாலி அறுப்புச் சடங்கை ஆதரிக்கவும் செய்தார்கள். இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் சம்பந்தப்பட்ட பெண்ணின் கதறலை நையாண்டி செய்து நகைச்சுவைப் பதிவுகளையும் எழுதினார்கள்.

இவ்வாறான காட்டுமிராண்டித்தனமான சம்பிரதாயங்களை ஆதரித்து, கட்டிக் காப்பாற்றுவதற்கு எமது தமிழ் சமூகம் முனைவதற்கு என்ன காரணம்? கணவனை இழந்து கதறுகின்ற பெண்களை சம்பிரதாயத்தின் பெயரில் சித்திரவதை செய்யும் சடங்குகளை விடமாட்டோம் என்று படித்தவர்கள் கூட அடம்பிடிப்பதற்கு என்ன காரணம்?

இதற்கு மதவெறி ஒரு முக்கிய காரணம். இதனோடு சாதிவெறியும் ஒரு காரணம். சாவுவீட்டில் நடக்கின்ற சம்பிரதாயங்களுக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் ஆச்சரியப்படலாம். சம்பந்தம் இருக்கிறது. இதைச் சற்று ஆழமாகப் பார்க்க வேண்டும். அதற்கு முன் அண்மையில் டென்மார்க்கில் நடந்த ஒரு கூத்தைப் பார்ப்போம்.

சில வாரங்களுக்கு முன்பு டென்மார்க்கில் ஒருவர் இறந்து விட்டார். அவருக்கான இறுதி நிகழ்வுகளை நடத்தித் தர ஒரு பார்ப்பனரை அழைத்த போது அவர் மறுத்துவிட்டார். தன்னுடைய சாதிப் பிரிவு அதைச் செய்வது இல்லை என்றும், பார்ப்பனர்களில் உள்ள "சைவஐயர்" என்னும் பிரிவுதான் சாவுவீட்டில் இறுதி நிகழ்வுகளை செய்ய வேண்டும் என்று அவர் சொல்லிவிட்டார். அப்படி செய்யவில்லையென்றால் தான் 31ம் நாள் நிகழ்வுகளை செய்து தரமாட்டேன் என்றும் சொல்லி விட்டார். அவர் ஆலயங்களில் பூசை செய்யும் பிரிவைச் சேர்ந்தவர். இவர்களை ஈழத்தில் "சிவாச்சாரியார்கள்" என்று சொல்வார்கள்.

இறந்தவரின் உறவினர்கள் "சைவஐயரை" தேடி கடைசியில் லண்டனில் ஒருவரைக் கண்டுபிடித்தார்கள். அவர் ஏறக்குறைய 1000 யுரோக்களை கூலியாகக் கேட்டார். அத்துடன் இறுதி நிகழ்வுகளுக்கு தேவையானவை என்று மிக நீளமான பொருட்களின் பட்டியலைக் கொடுத்திருந்தார். எல்லாவற்றிற்கும் சம்மதித்து அவரை லண்டனில் இருந்து வரவழைத்து இறுதி நிகழ்வுகளை செய்தார்கள்.

இனிமேல் இறப்பு ஏதாவது நடந்தால் லண்டனில் இருந்துதான் "சைவஐயரை" அழைக்க வேண்டும் என்பதால், டென்மார்க்கில் உள்ள சில தமிழர்கள் கூடி இதற்காக ஒரு சங்கம் அமைத்துள்ளார்கள். தமிழுக்கு சங்கம் அமைத்த காலம் போய், இன்றைக்கு ஐரோப்பாவில் செத்த வீடு செய்வதற்கு சங்கம் அமைக்கின்ற அளவிற்கு தமிழன் வந்து விட்டான்.

இந்தச் சங்கத்தின் மூலம் தமிழர் கலாச்சாரப்படி இறுதி நிகழ்வுகள் செய்ய என்று சொல்லி டென்மார்க் அரசிடம் பணம் பெற்று, அதன் மூலம் "சைவஐயரால்" ஆகும் செலவை ஈடு செய்வதுதான் அவர்கள் திட்டம்.

இந்தச் சங்கத்தை அமைப்பதற்கான முதலாவது கூட்டம் நடைபெற்ற போது, அதில் கலந்து கொண்ட ஒருவர் இப்படிச் சொன்னார், "நான் ஒரு செத்த வீட்டிற்கு கொள்ளிப் பானை கொத்தினேன், அதன் பிறகு எல்லோரும் என்னைத்தான் கொள்ளிப்பானை கொத்தக் கூப்பிடுகிறார்கள், நாங்கள் என்ன அந்த ஆட்களோ?". இப்படி கோபமாகவும் வருத்தமாகவும் கேட்ட அவர் நிறையப் புரட்சிக் கவிதைகளை எழுதுபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இந்தச் சங்கத்தின் நோக்கம் டென்மார்க் அரசிடம் இருந்து பணம் பெறுவது மட்டும் அல்ல. சாதியையும் கட்டிக் காப்பதுதான். தனியாளாக கொள்ளிப் பானை கொத்தினால், அவர்களுடைய சாதி மானம் போய் விடுமாம். சங்கத்தின் பெயரில் கொத்தினால், அது பறவாயில்லையாம்.

சாவு வீட்டிற்கு சைவஐயரை அழைத்து 31ஆம் நாள் நிகழ்விற்கு சிவாச்சாரியர்களை அழைத்து, பார்ப்பன வர்ணத்தில் உள்ள சாதிகளின் இருப்பையும் பிழைப்பையும் காப்பதோடு, வேளாள சாதியினரின் ஆதிக்கத்தின் அடையாளத்தையும் தக்க வைப்பதே இந்த சங்கத்தின் நோக்கம்.

இப்பொழுது மீண்டும் விடயத்திற்கு வருவோம். இந்துத் தமிழர்கள் தமது வாழ்க்கையில் பல நிகழ்வுகளை சந்திக்கின்றார்கள். பிறந்தநாள், பூப்புனிதநீராட்டு விழா, திருமணம் என்று நிறைய நிகழ்வுகளைக் கொண்டாடுகின்றர்கள். ஆனால் ஒரு சாவு நிகழ்வில் வெளிப்படுவது போன்று வேறு எந்த நிகழ்விலும் சாதிகளின் இருப்பு வெளிப்படுத்தப்படுவது இல்லை.

ஒரு சாவின் போது சலவைத் தொழில் செய்யும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து வெள்ளை கட்டுவார்கள். பறை அடிக்கும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வந்து பறை அடிப்பார்கள். இறந்தவரின் மகனுக்கு மொட்டை அடிக்கும் வேலையோடு, வேறு சிறு வேலைகள் செய்வதற்கு முடி வெட்டும் சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். பூசை சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய "சைவஐயர்" சமூகத்தை சேர்ந்தவர்கள் வருவார்கள். இடுகாட்டில் விறகுகளை வெட்டியான் சமூகத்தை சேர்ந்தவர் அடுக்கி வைப்பார். இத்தனை சாதிகளும் வந்து போன பின்னர் 31ஆம் நாள் "சிவாச்சாரியார்கள்" வருவார்கள்.

இதுதான் இந்து சம்பிரதாயப்படி நடக்கின்ற சாவு ஒன்றின் இறுதி நிகழ்வு. ஒரு சாவு நிகழ்வில் கூட மனிதர்களுக்குள் பல சாதிகள் உண்டு என்பதையும், அவர்களுக்கு என்று தனியான தொழில்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதையும், அந்தச் சாதிகளில் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்பன உண்டு என்பதையும் வெளிப்படுத்தும் மனிதத்திற்கு விரோதமான ஒரு சம்பிரதாயமே இந்த இந்து மதச் சம்பிரதாயம் எனப்படுவது.

இங்கே புலம்பெயர்ந்த நாடுகளில் இந்த சம்பிரதாயங்களை அப்படியே நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது வேளாள பார்ப்பனிய சாதி வெறியனருக்கு ஒரு குறையாகவே இருக்கின்றது. இதனால் சங்கங்கள் அமைத்து "இந்து சம்பிரதாயம்" என்ற பெயரில் சாதிகளின் இருப்பை முடிந்தவரை தக்க வைக்க முனைகின்றார்கள்.

சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் இந்த நிகழ்வில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்வதற்கும் இந்த சாதி வெறியர்கள் தயாராக இல்லை. மிகவும் உணர்வுபூர்வமானதாக கருதப்படும் தாலி விடயத்தில் மாற்றங்களை கொண்டு வருவதானது, பின்பு மற்றைய விடயங்களிலும் மாற்றங்களை கொண்டுவருவதற்கு ஒரு உந்துகோலாக அமைந்து விடும் என்பதுதான் இவர்களுடைய முக்கிய அச்சம்.

சாம்பல் கரைப்பதற்கு சைவஐயர்கள் வரவேண்டும் என்பதும் 31ஆம் நாள் சிவாச்சாரியார் வரவேண்டும் என்பதும் சம்பரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. தாலியை அணிந்தபடி வந்து பின்பு தாலியை கழற்றி கணவனின் பிணத்தின் மீது வைக்க வேண்டும் என்பதும் சம்பிரதாயத்தின் பெயரில்தான் நடக்கிறது. ஒரு சம்பிரதாயத்தை முற்றிலும் இல்லாமல் செய்வது என்பது மற்றைய சம்பிரதாயங்களையும் காலப் போக்கில் இல்லாமல் செய்து விடக் கூடும். இதனால் சாதிவெறி பிடித்தவர்கள் சம்பிரதாயங்களை மாற்ற மாட்டோம் என்று பிடிவாதமாக நிற்கிறார்கள்.

ஒரு புறம் பெண்கள் மறுமணம் செய்யக் கூடாது என்ற பிற்போக்குச் சிந்தனை, மறுபுறம் இந்தச் சம்பிரதாயங்களை நீக்கி விட்டால் இந்து மதத்தில் வேறு ஒரு மண்ணும் இல்லையே என்ற கவலை, இன்னொரு புறம் சாதிகளின் இருப்பை வெளிப்படுத்தும் ஒரு நிகழ்வு அப்படியே பின்பற்றப்பட வேண்டும் என்ற வெறித்தனம், இவைகள் எல்லாம் சேர்ந்துதான் இவர்களை "சம்பிரதாயம்" என்று கூக்குரல் இட வைக்கின்றது. காட்டுமிராண்டித்தனமாக நடக்கச் செய்கிறது.

- வி.சபேசன் (11.01.08)
 

http://www.webeelam.net/?p=231

StumbleUpon.com Read more...

சித்திரையில் தமிழ்ப் புத்தாண்டா?

 

 

எதிர்வரும் 13 ஆம் திகதியை - அதாவது ஏப்பிரல் மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையை - தமிழ்ப் புத்தாண்டுத் தினமாக, உலகெங்கும் வாழுகின்ற தமிழ் மக்கள் கொண்டாடப் போகின்றார்கள். அன்றைய தினம் சைவ ஆலயங்களில் - மன்னிக்கவும் - இந்து ஆலயங்களில் - கடவுள்களைச் சமஸ்கிருத மொழியில், தமிழர்கள் வழிபட்டுப் புண்ணியம் பெறவும் போகின்றார்கள். மீண்டும் ஒருமுறை சர்வதாரி ஆண்டு - மறுபடியும் மன்னிக்கவும் - சர்வதாரி வருடம் பிறந்துள்ளது என்று மன மகிழ்ந்து வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டாடப் போகின்றார்கள்.

இந்த ஆண்டின் தைப்பொங்கல் தினமான ஜனவரி மாதம் 15 ஆம் திகதியை, தமிழீழ மக்கள் தமது புத்தாண்டுத் தினமாகக் கொண்டாடியதோடு மட்டுமல்லாது, அன்றைய தினத்தில் நல்லளிப்பு என்ற கைவிசேட நடைமுறையைத் தொடங்கியிருந்தார்கள் என்பது யாவரும் அறிந்ததே! தமிழ் நாடு அரசும் தை முதல் நாள்தான் தமிழரின் புத்தாண்டுத் தினம் என்பதற்கு, இந்த ஆண்டு சட்டவடிவம் கொடுத்துள்ளது.

நாம் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக மீண்டும், மீண்டும் சொல்லி வந்துள்ள ஒரு கருத்தான 'தமிழர்களின் புத்தாண்டுத் தொடக்கம் சித்திரை மாதத்தில் வருவதல்ல, தை மாத முதல் நாளான தைப் பொங்கல் தினமே, தமிழரின் புத்தாண்டுத் தினம்" என்பதனை, மீண்டும் இம்முறை வலியுறுத்த விழைகின்றோம்.

சித்திரை மாதத்தில் "பிறப்பதாகச்" சொல்லப்படும் இந்த ஆண்டுப் பிறப்புத்தான் தமிழர்களின் புத்தாண்டா? பல்லாயிரம் ஆண்டுப் பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டுள்ள தமிழினத்தின் புத்தாண்டு, சித்திரை மாதத்தில்தான் வருகின்றதா? இந்த ஆண்டுப் பிறப்பு உண்மையில் தமிழர்களின் ஆண்டுப் பிறப்புத்தானா?

இந்தப் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் (?) ஆரம்பமாகவுள்ள இவ்வேளையில் வரலாற்று உண்மைகளையும், ஆய்வுகளையும் தர்க்க ரீதியாகச் சிந்தித்துப் பார்ப்பதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கமாகும். அத்துடன் பண்டைத் தமிழரின் காலக் கணக்கு முறை குறித்தும் கருத்தில் கொள்ள விழைகின்றோம்.

இப்போது வழக்கத்தில் உள்ள ஆண்டுக்கணக்கு முறையைக் கவனத்தில் எடுத்துக்கொண்டால் அது பற்சக்கர முறையில் உள்ளதைக் கவனிக்கலாம். அறுபது ஆண்டுகள், பற்சக்கர முறையில் திரும்பித் திரும்பி வருவதை நாம் காண்கின்றோம். இந்த அறுபது ஆண்டுகளுக்கும் பரபவ முதல் அட்சய என்று அறுபது பெயர்கள் இருக்கின்றன.

இந்த அறுபது ஆண்டுகளின் பெயரில் ஒரு பெயர் கூடத் தமிழ்ப் பெயர் இல்லை!

இந்த அறுபது ஆண்டுப் பற்சக்கர முறை குறித்து முதலில் கவனிப்போம். இந்த முறை வடநாட்டு மன்னனான சாலிவாகனன் என்பவனால் கிறிஸ்துவுக்கு பின் 78 ஆம் ஆண்டில் வடநாட்டில் ஏற்படுத்தப்பட்டது என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுவார்கள். கனிஷ்கன் என்ற அரசனாலும் இது ஏற்படுத்தப்பட்டது என்று கூறுவோரும் உண்டு. பின்னர் தென்னாட்டில் ஆரியர்களின் ஊடுருவலால், ஆட்சியால் இந்த ஆண்டுமுறை படிப்படியாக பரப்பப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது. எந்த ஓர் இனத்தவரின் ஆட்சி ஒரு நாட்டில் நிறுத்தப்படுகின்றதோ அந்த இனத்தவரின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள், கலைகள் போன்றவை அந்த நாட்டினரின் பழக்க வழக்கங்களோடு கலந்து விடுவது இயல்பு. அந்த வகையில் இந்தச் சாலிவாகன முறை பின்னர் மெல்ல மெல்ல நடைமுறைப் பழக்கத்திற்கு வந்து விட்டது. அறுபது ஆண்டு பற்சக்கர முறை காரணமாக ஆரியர்களிடையே அறுபது வயது நிரம்பியவர்கள் சஷ்டி பூர்த்தி என்ற அறுபதாண்டு விழாவைக் கொண்டாடும் வழமையும் இருக்கின்றது.

மேலும் இந்த அறுபது ஆண்டு முறையைப் புகுத்திய ஆரியத்தின் விளக்கமும் மிகுந்த ஆபாசம் நிறைந்த பொருள் கொண்டதாகும். அபிதான சிந்தாமணி என்ற நூலில் 1392 ஆம் பக்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடப்படுகின்றது.

'ஒருமுறை நாரதமுனிவர், கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கின்றீரே, எனக்கு ஒரு கன்னிகையாவது தரலாகாதா? என்று கேட்டார். அதற்குக் கண்ணன், "நான் இல்லாத பெண்ணை வரிக்க" என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் சென்று பார்த்தார். ஆனால் எங்கும் கண்ணன் இல்லாத பெண்களைக் காண முடியாததால், நாரதர் மீண்டும் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி "நான் தேவரீரிடம் பெண்ணாக இருந்து ரமிக்க எண்ணம் கொண்டேன்" என்றார். கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து, ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார். இவருடன் கண்ணன் அறுபது வருடம் கூடி, அறுபது குமாரர்களைப் பெற்றார். அவர்கள் "பிரபவ முதல் அட்சய" இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாகும் பதம் பெற்றார்கள்."
(அனைவரும் ஆண்களே, பெண்கள் எவரும் இல்லை)

தமிழனும் தன்னை மறந்ததால் ஆண்டு "வருடமாகி´" விட்டது. வடமொழியில் "வர்ஷா" என்றால் பருவ காலம், மழைக்காலம் என்று அர்த்தம். உலகெல்லாம் வாழுகின்ற இனத்தவர்கள் தத்தமக்குரிய ஆண்டுப் பிறப்பில் தான் நற்பணிகளை தொடக்குகிறார்கள். ஆனால் இந்த சித்திரைப் பிறப்பில் தமிழர்கள் திருமணம், தொழில் தொடக்கம் போன்ற எதையுமே செய்வதில்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

பண்டைத் தமிழரின் காலக் கணக்கு முறை குறித்துப் புரிந்து கொள்ளுதல் இவ்வேளையில் பொருத்தமானதாக இருக்கக்கூடும். 'தமிழன் இயற்கையை வணங்கி வந்தவன். மழை, வெயில், குளிர், பனி, தென்றல், வாடை இவை மாறி மாறிப் பருவ காலங்களில் மனிதனை ஆண்டு வந்ததால் இக் காலச் சேர்வையைத் தமிழன் "ஆண்டு" என்று அழைத்தான்" என்று திரு வெங்கட்ராமன் குறிப்பிடுகின்றார். மேல்நாட்டு அறிஞர் சிலேட்டர் என்பவர் தமிழருடைய வானநூற் கணித முறையே வழக்கில் உள்ள எல்லாக் கணிதங்களிலும் நிதானமானது என்று கூறியுள்ளார். தொல்காப்பியத்திலும், சங்க நூல்களிலும் காணப்படும் வானியற் செய்திகள் உருப்பெற்றமைக்கு பல்லாயிரமாண்டுகள் பிடித்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரியர் ஊடுருவலுக்கு முன்னரேயே தமிழர்கள், வானியலில் அரும் பெரிய அளவில் முன்னேறி இருந்தனர் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள். தமிழகத்துப் பரதவர்கள் திங்களின் நிலையைக் கொண்டு சந்திரமானக் காலத்தை கணித்தனர் என்றும், தமிழகத்து உழவர்கள் சூரியன், திங்கள் ஆகியவற்றின் இயக்கத்தையும், பருவங்களையும் அறிந்திருந்தனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 
தமிழகத்தில் வானியலில் வல்ல அறிஞர்களை அறிவர், கணி, கணியன் என அழைத்தார்கள். அரசனுடைய அவையில் பெருங்கணிகள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. மூவகைக் காலமும் நெறியினாற்றும் " அறிவர்கள்"குறித்துத் தொல்காப்பியரும் குறிப்பிடுகின்றார்.

தமிழர்கள் காலத்தைக் கணித்ததைச் சுருக்கமாகப் பார்ப்போம். தமிழர்கள் இயற்கையை ஆதாரமாகக் கொண்டு, காலத்தைப் பகுத்தார்கள். ஒரு நாளைக் கூட ஆறு சிறு பொழுதுகளாகத் தமிழர்கள் அன்றே பகுத்து வைத்தார்கள். வைகறை, காலை, நண்பகல், ஏற்பாடு, மாலை, யாமம் என்று அவற்றை பகுத்து அழைத்தார்கள். அது மட்டுமல்ல, அந்த ஆறு சிறு பொழுதுகளின் தொகுப்பையும் அறுபது நாழிகைகளாகப் பகுத்துக் கணக்கிட்டார்கள். அதாவது ஒரு நாளில் ஆறு சிறுபொழுதுகள் உள்ளன. அந்த ஆறு சிறு பொழுதுகள் கழிவதற்கு அறுபது நாழிகைள் எடுக்கின்றன என்று தமிழர்கள் பண்டைக் காலத்தில் கணக்கிட்டார்கள். ஒரு நாழிகை என்பது தற்போதைய 24 நிமிடங்களைக் கொண்டதாகும்.

அதாவது பண்டைக்காலத் தமிழர்களது ஒரு நாட் பொழுதின் அறுபது நாழிகைகள் என்பன தற்போதைய கணக்கீடான 1,440 நிமிடங்களோடு - அதாவது 24 மணித்தியாலங்களோடு - அச்சொட்டாகப் பொருந்துகின்றன. தமிழர்கள் ஒரு நாட் பொழுதை, தற்போதைய நவீன காலத்தையும் விட, அன்றே மிக நுட்பமாகக் கணித்து வைத்திருந்தார்கள் என்பதே உண்மையுமாகும்.

பின்னாளில் வந்த ஆரியர்கள் ஓர் ஆண்டை நான்கு பருவங்களாக மட்டும்தான் வகுத்தார்கள். ஆனால் பண்டைக்காலத் தமிழர்களோ, தமக்குரிய ஆண்டை, அந்த ஆண்டுக்குரிய தமது வாழ்வை, ஆறு பருவங்களாக வகுத்திருந்தார்கள்.

1. இளவேனில் - (தை-மாசி மாதங்களுக்குரியது)
2. முதுவேனில் - (பங்குனி - சித்திரை மாதங்களுக்குரியது)
3. கார் - (வைகாசி - ஆனி மாதங்களுக்குரியது)
4. கூதிர் - (ஆடி - ஆவணி மாதங்களுக்குரியது.)
5. முன்பனி - (புரட்டாசி - ஐப்பசி மாதங்களுக்குரியது)
6. பின்பனி - (கார்த்திகை - மார்கழி மாதங்களுக்குரியது)

காலத்தை, அறுபது நாழிகைகைளாகவும், ஆறு சிறு பொழுதுகளாகவும், ஆறு பருவங்களாகவும் பகுத்த பண்டைத் தமிழன் தன்னுடைய புத்தாண்டு வாழ்வை இளவேனிற் காலத்தில்தான் தொடங்குகின்றான். இங்கே ஒரு மிக முக்கியமான விடயத்தை வாசகர்;கள் கருத்தில் கொள்ள வேண்டும்! பண்பாட்டுப் பெருமை கொண்ட மற்றைய பல இனத்தவர்களும், தங்களுடைய புத்தாண்டு வாழ்வை, தங்களுடைய இளவேனிற் காலங்களில்தான் ஆரம்பிக்கின்றார்கள். தமிழர்கள் மட்டுமல்ல, சீனர்களும், ஜப்பானியர்களும், கொரியர்களும், மஞ்சூரியர்களும் என, பல கோடி இன மக்கள் - தொன்மையான பண்பாட்டு வாழ்வினைக் கொண்ட பெருமை வாய்ந்த மக்கள்- தங்களுடைய இளவேனிற் காலத்தையே தமது புத்தாண்டாகக் கொண்டாடி வருகின்றார்கள்.

இடையில் தமிழன் மட்டும் மாறி விட்டான்! ஆளவந்த ஆரியர்களின் அடிமையாக மாறியது மட்டுமல்லாது, இன்றும் கூட ஆரியர்களின் பண்டிகைகளான சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி போன்ற பண்டிகைகளை, தன் இனத்துப் பண்டிகைகளாக எண்ணி மயங்கிப் போய்க் கிடக்கின்றான்.

இவை குறித்து பேராசியரியர் க.பொ.இரத்தினம் அவர்கள் கீழ் வருமாறு அன்று கூறியிருந்தார்.

'சித்திரை வருடப்பிறப்பு" என்பது சாலிவாகனன் என்ற வடநாட்டு அரசனால் பின்னாளில் நிலைநாட்டப்பட்டது. இந்த அரசனுக்கு முன்னர் பல்லாயிரம் ஆண்டுகளாக நயத்தக்க நாகரிகத்துடன் வாழ்ந்த தமிழ் மக்கள் தம் நாட்டுப் பெருமகன் ஒருவனுடன் இணைந்த தொடர் ஆண்டை நிலை நாட்ட முயலாதது பெரும் விந்தையாக உள்ளது………. (சித்திரை வருடப் பிறப்பை) வரவேற்று, (அதன் மூலம்) தமிழினத்தின் பழமையையும், பண்பையும், சிறப்பையும், செல்வாக்கையும் (இன்றைய தமிழர்கள்) சிதைத்து வந்துள்ளமை பெரும் வெட்கத்திற்கு இடமானதாகவும் இருக்கின்றது. தமிழ் மக்களிடையே நிகழ்ந்த மானக்கேடான, நகைப்புக்கிடமான செயல் இது ஒன்று மட்டும்தானா? - தமிழ் மக்களின் கோவில்களிலே இன்று தமிழ் மொழியும், தமிழ் இசையும் ஒதுக்கப்பட்டுள்ளள…

- என்று பேராசிரியர் க.பொ. இரத்தினம் அவர்கள் மிகக் கடுமையாக விமர்சித்து இருந்தார்.

அப்படியென்றால் தமிழனின் புத்தாண்டு - உண்மையான - சரியான- வரலாற்று ரீதியான புத்தாண்டுத் தினம்தான் எது?
தமிழனுக்கு வருடம் பிறப்பதில்லை.
"புத்தாண்டு ஆரம்பமாகின்றது."

அந்தத் தினம் தான் எது?
'தமிழனுக்கு தைத்திங்கள் முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு ஆகும்."

பொங்கல் திருநாள் தமிழரின் தனிப்பெரும் திருநாள் ஆகும்.

பொங்கல் திருநாளைத் தமிழர்கள் புதுநாள் என்று அழைத்தார்கள். பொங்கல் திருநாளுக்கு முதல் நாளை, போகி (போக்கி) என்று அழைத்தார்கள். போகி என்பது, போக்கு - போதல் என்பதாகும். (ஓர் ஆண்டைப் போக்கியது- போகியது- போகி) பொங்கல் என்பது பொங்குதல் - ஆக்குதல். இது தொழிற் பெயர். புத்தொளி, பொங்கல் என ஆகுபெயர் ஆகியுள்ளது.

தமிழாண்டின் தொடக்கக் காலகட்டம், உழைப்பின் பயனைப்பெற்று மகிழும் காலகட்டமாகவும் அமைந்தது. புத்தொளி வழங்கிய கதிரவனைப் போற்றிய தமிழ் நெஞ்சம் உழைப்பையும், தனக்குத் துணை நின்ற உயிரையும் போற்றியது. கதிரவனின் சுழற்சியைக் கொண்ட காலக்கணிப்பைக் காட்டும் அறிவியலும், நன்றியுணர்வை வெளிப்படுத்தும் முதிர்ந்த பண்பாடும் பொங்கல் விழாவில் போற்றப்படுவதை நாம் காணலாம்.

"தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற முதுமொழியை "புத்தாண்டு வந்தால் புதுவாழ்வு மலரும்"- என்ற கருத்தோடு ஒப்பு நோக்கிப் பார்க்க வேண்டும்.

தமிழர்கள் மட்டுமல்ல, உலகத்தில் பல கோடி வேற்று இன மக்களும் தத்தமக்குரிய இளவேனிற் காலத்தையே புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டிருந்தோம். உதாரணத்திற்காக யப்பானிய மக்களின் புத்தாண்டை தமிழர்களின் புத்தாண்டான பொங்கல் திருநாளோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.

தமிழர்-ஜப்பானிய பண்பாட்டு ஒற்றுமை நிலையை வெளிப்படுத்தும் நடைமுறையாகத் தைப்பொங்கல் விளங்குகிறது. யப்பானியர் தை 14 ஆம் திகதி அன்று பழைய பயன்பாட்டுப் பொருட்களை எரிப்பார்கள். தமிழர்களும் அவ்வாறே செய்கின்றார்கள்.

தை 15 ஆம் நாள் ஜப்பானியர்களும், தமிழர்கள் போன்று தோரணங்களை தொங்கவிட்டு புதுநீர் அள்ளி, பருப்புச் சேர்த்து சமைத்த பொங்கலைப் பரிமாறுகின்றார்கள். தமிழர்கள் பொங்கல் பானையில் பால் பொங்கும் போது "பொங்கலோ பொங்கல்" என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள். அதே போல் ஜப்பானியர் தமது புத்தாண்டான தை 15 ஆம் நாளில் FONKARA - FONKARA என்று மகிழ்ச்சி ஆரவாரம் செய்வார்கள்.

தை 16 ஆம் நாள் பணியாளர்களுக்குப் புத்தாடை வழங்கல், முன்னோர்க்கு படையல் செய்தல், கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தல், மாடுகளுக்கு உணவளித்தல் போன்ற காரியங்களை தமிழர்கள் செய்வது போலவே யப்பானியர்களும் செய்கிறார்கள்.
பருப்புத் தவிடு பொங்க - பொங்க
அரிசித் தவிடு பொங்க - பொங்க
- என்ற கருத்துப்படப் பாடப்படும் யப்பானிய வாய் மொழிப் பாடலில் "பொங்க-பொங்க" என்ற சொற்களுக்கு யப்பானிய மொழியில் 'HONGA-HONGA'' என்றே பாடுகிறார்கள்.

அன்புக்குரிய வாசகர்களே! நேரம் கருதி சில விடயங்களை மட்டும் இங்கே உதாரணத்துக்கு காட்டினோம். தமிழனின் புத்தாண்டு தைப்பொங்கல் தினம்தான்! ஆனால் தற்போதைய நிலைமை என்ன?

அன்றைய தமிழன் நிலத்தை உழுதான். அந்த நிலத்தையும் ஆண்டான். அதனூடே தன் பண்பாட்டையும், நாகரீகத்தையும் உயர்த்தினான். இயற்கையோடு ஒன்றி, இயற்கையை வழிபட்டான். இயற்கைக்கு நன்றியும் தெரிவித்தான். அவனது மாண்பு மிகு வாழ்வில் எந்த ஓர் அங்கத்திலும் மண்ணின் மாண்பு மிளிர்ந்தது. அது மண்ணை ஒட்டியே மலர்ந்தது. அந்த மண் நமக்குரியதாக இன்று இல்லாததால், நமது பண்பாட்டுப் பெருமையும் நம்மை விட்டு மறைந்து வருகின்றது.

இதற்கு ஓர் உதாரணமாக இந்தச் சித்திரை வருடப் பிறப்பை சுட்டிக் காட்டலாம்.

தனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச் சட்டமொன்று சொல்கிறது.
இப்போது எமக்கு ஒரு தனித்துவமான பண்பாடு இருக்கின்றதா? என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை.

அன்புக்குரிய வாசகர்களே! இன்றைய நடைமுறை யதார்த்தத்தைச் சுட்டிக்காட்டித் தர்க்கிக்கவே நாம் இவ்வாறு மேற்கோள் காட்டினோம். இல்லாவிட்டால் யார்-யார் எந்த எந்த நாளில் எந்த எந்தக் கொண்டாட்டங்களையும் கொண்டாடுவதைத் தடுப்பதற்கு நாம் யார்? எவரும் - எதையும் - எப்படியும் கொண்டாடட்டும் ஆனால் பெயரை மட்டும் சரியாகச் சொல்லட்டும். - 'தமிழனை வென்ற, ஆரியப் புது வருடப் பிறப்பு"

இந்தக் கட்டுரைக்குப் பல நூல்களும், ஆய்வு நூல்களும் பயன்பட்டன. முக்கியமாகத் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஒப்பியன் மொழி நூல், வாக்கிய பஞ்சாங்கம், பண்பாட்டுக் கட்டுரைகள், செம்பருத்தி சஞ்சிகைக் கட்டுரைகள், பொங்கலே தமிழ்ப் புத்தாண்டு- மலேசிய சிறப்பு மலர், தமிழர் ஜப்பானியர் வாழ்வில் தைப்பொங்கல் போன்ற நூல்கள் பேருதவி புரிந்தன. சில சொல்லாக்கங்களும் சொல்லாடல்களும் அப்படியே எடுத்தாளப்பட்டுள்ளன. காலத்தின் தேவை கருதி ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் சில கருத்துக்கள் மீண்டும் இடம் பெற்றுள்ளன. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது மனங் கனிந்த நன்றிகள்.

 

http://www.webeelam.net/?p=262

StumbleUpon.com Read more...

ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை : அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)

 ஈஸா குர்‍ஆன் மற்றும் அபூமுஹை


அஸ்லிம் தஸ்லம் (أسلم تسلم)


அபூமுஹையும் மறைத்த விவரங்களும்
 

முன்னுரை: முகமது பல அரசர்களுக்கு கடிதம் எழுதினார்கள், அவர்களை இஸ்லாமுக்கு அழைப்பு விடுத்தார்கள். இக்கடிதங்கள் வெறும் அழைப்பிதழ் என்று நினைத்துக் கொள்ளவேண்டாம், இவைகளில் முகமது பயப்படவைத்து, அழைப்பு விடுத்தார், அதாவது இஸ்லாமை ஏற்கவில்லையானால், உங்கள் ஆட்சி நிலைக்காது, நான் போர் புரிவேன் என்ற தோரணையில் எழுதினார். முகமது எழுதிய பல கடிதங்களில் நான் ஒரு கடிதத்தை வெளியிட்டு இருந்தேன். அனைத்து கடிதங்களையும் அபூ முஹை அவர்கள் வெளியிட்டார்கள்.

 


அக்கடிதங்களில் பெரும்பான்மையானவற்றில் ஒரு குறிப்பிட்ட வார்த்தையை அல்லது வரியை தமிழில் வித்தியாசமாக மொழிபெயர்த்து வெளியிட்டு இருந்தார்கள், அபூமுஹை அவர்கள்(அக்கடிதங்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட புத்தகத்திலிருந்து எடுத்ததாக சொன்னார்கள்).

 
பிறகு நான் கீழ் கண்ட கட்டுரையை வெளியிட்டேன்.
 
 
 
 
இந்த மேலே உள்ள கட்டுரையில் எந்த வரிகளில் வித்தியாசமாக மொழி பெயர்க்கப்பட்டுள்ளது என்று நான் தெளிவாக விளக்கினேன், இருந்தாலும் மறுபடியும் அபூமுஹை அவர்கள் கேட்டதாலும், ஒரு சில கேள்விகளை முன்வைத்ததாலும், இக்கட்டுரையில் அவைகளை விளக்குகிறேன்.
 
அபூமுஹை அவர்கள் கேட்ட கேள்விகள்:

… "இஸ்லாமிய அறிஞர்கள் தமிழில் மொழிபெயர்க்கும் போது வேண்டுமென்றே சில வார்த்தைகளை மறைத்து விட்டார்கள்'' என்று கூறும் பிற மத நண்பர்கள், தங்கள் விமர்சனத்தை உண்மைப்படுத்த, இஸ்லாமிய அறிஞர்கள் மறைத்த வார்த்தைகள் எது? என்பதை மூலமொழியிருந்து எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளனர். …

…கேள்வி எழுப்பியதோடு "மறைத்த உண்மை எது?" என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருக்கலாமே! …

Source: http://abumuhai.blogspot.com/2008/08/blog-post.html
 
 
1) "மறைத்த உண்மை எது?"

 
அபூமுஹை அவர்கள் "மறைத்த உண்மை எது?" என்று நான் எழுதியிருக்கலாம் என்று கேட்கிறார்கள். ஆனால், அவர் என் கட்டுரையை சரியாக படிக்கவில்லை போலத் தெரிகிறது.

 
அதாவது, நான் எழுதிய கட்டுரையில் அவர் எழுதிய அனைத்து கடித கட்டுரைகளிலிருந்து எந்த வார்த்தை வித்தியாசமாக உள்ளது என்றும், அதன் ஆங்கில கட்டுரையும் பட்டியல் இட்டு, அந்த குறிப்பிட்ட வார்த்தைகளை அல்லது வரிகளை குறிப்பிட்டு இருந்தேன். இதை சரியாக பார்த்து படித்து இருந்தாலே, அபூமுஹை அவர்களுக்கு நன்றாக‌ புரிந்திருக்கும்.

 
இன்னும் முஸ்லீம்களுக்கு விளங்கவேண்டுமென்பதற்காக, கீழ் கண்டவாறு எழுதியிருந்தேன்.
 
ஆங்கிலத்தில் "if you embrace Islam, you will find safety" என்று உள்ளதை

தமிழில் "
நீ இஸ்லாத்தை ஏற்றுக்கொள், ஈடேற்றம் பெறுவாய்" என்று மொழிபெயர்த்துள்ளார்கள்.

 
 
எந்த விவரம் மறைக்கப்பட்டுள்ளது என்று மேலே உள்ள வரிகளை படித்துமா உங்களுக்கு புரியவில்லை? அபூமுஹை அவர்களே?

 
வேண்டுமானால் மறுபடியும் சொல்கிறேன், "அரசர்களை பயப்படவைத்து இஸ்லாமை ஏற்றுக்கொள் என்று முகமது சொன்னதை, முகமது சாதாரணமாக ஒரு அழைப்பிதழ் அனுப்புவதாக எழுதியுள்ளீர்களே" இது தான் மறைக்கப்பட்டுள்ளது.

முகமது தன் கடிதங்களில், இஸ்லாமை வாள் மூலமாக பரப்ப முடிவு செய்துள்ளதை நீங்கள், அமைதியான முறையில் பரப்பும்படி எழுதியுள்ளதாக எழுதியுள்ளீர்களே, இது தான் மறைக்கப்பட்டுள்ளது.
 
 
 
2) அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்கள் கடிதங்களே போதும் இஸ்லாமை அமைதியான முறையில் முகமது பரப்பவில்லை என்பதற்கு!

 
நீங்கள் அதாவது முஸ்லீம்கள் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெய‌ர்த்தோம் என்றுச் சொன்னீர்களே, அந்த கடிதங்களே போதும். இதற்கு மூல மொழியில் சரிபார்க்கவேண்டிய அவசியமில்லை. "if you embrace Islam, you will find safety" என்ற வார்த்தைகள் மட்டுமல்ல, நீங்கள் பதித்த கடிதங்களின் இதர வரிகளே சொல்கின்றன, முகமது பயப்படவைத்து தான் இஸ்லாமை பரப்ப முயற்சி செய்தார் என்பதை.

 
உதாரணத்திற்கு, நீங்கள் அரபியிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்த்த வரிகளை சிறிது பாருங்கள்.
 
 
நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக் கொண்டால் உங்களையே நான் ஆட்சியாளர்களாக ஆக்கி விடுவேன். நீங்கள் இருவரும் இஸ்லாமை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டால் நிச்சயம் உங்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. எனது வீரர்கள் உங்களது நாட்டிற்கு வெகு விரைவில் வந்திறங்குவார்கள். எனது நபித்துவம் உங்களது ஆட்சியை வெல்லும்.'

Source: http://abumuhai.blogspot.com/2008/07/8.html
 
 
அ) யார் யாரை ஆட்சியாளர்களாக ஆக்குவது? இஸ்லாமுக்கு அழைப்பிதழ் அனுப்பி அழைத்தவர், இப்படித் தான் அழைப்பார்களா?

ஆ) "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளாவிட்டால் உங்கள் ஆட்சி கழிந்துவிடுவது நிச்சயம" என்றால் இதன் பொருள் என்ன? இது அழைப்பிதழா அல்லது பயப்பிதழா?

இ) இஸ்லாமை ஏற்காவிட்டால், ஏன் முகமதுவின் வீரர்கள் அழைப்பிதழ் அனுப்பப்பட்ட நாட்டில் வந்து இறங்குவார்கள்? அதாவது, இஸ்லாமை அந்த நாட்டு அரசர் ஏற்கவில்லையானால், முகமதுவின் தோழர்கள் அந்த நாட்டிற்குச் சென்று, நல்ல சமுதாய சேவைகளை செய்து, இஸ்லாம் சொல்லும் நல்ல காரியங்களை மக்களுக்குச் செய்துக்காட்டி, இஸ்லாமுக்கு நல்ல பெயரை கொண்டு வருவதற்காகவா? அந்த நாட்டில் வந்து இறங்குவார்கள் என்று முகமது சொல்லியுள்ளார்? அல்லது இரத்த ஆறை அல்லாவின் பெயரால் உருவாக்குவதற்காகவா?

ஈ) ஏன் இவரது நபித்துவம், மற்றவர்களின் ஆட்சியை வெல்லவேண்டும். மனிதர்களின் மனதில் முகமதுவும் அவரது இஸ்லாமும் ஆட்சி பிடிக்கனுமா அல்லது நாட்டை பிடிக்கனுமா?

அரபியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்த்த உங்களது அடுத்த கட்டுரை இப்படிச் சொல்கிறது:
அஸத் இப்னு குஸைமா கிளையைச் சேர்ந்த ஷுஜா இப்னு வஹப் இக்கடிதத்தை எடுத்துச் சென்றார். இவர் ஹாரிஸிடம் கடிதத்தை ஒப்படைத்த போது, அதைத் தூக்கி எறிந்துவிட்டு''என்னிடமிருந்து எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும். இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன்'' என்று கர்ஜித்தான். இவன் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளவில்லை.

Source: http://abumuhai.blogspot.com/2008/07/67.html
 
 
அ) ஒருவருக்கு இஸ்லாமை தழுவும் படி அழைப்பிதழ் அனுப்பினால், அதை படித்தவுடன் அல்லது அதில் எழுதியதை கேட்டவுடன், ஏன் அந்த அரசன் கோபம் கொள்ளவேண்டும்?

 
ஆ) எனது ஆட்சியை யாரால் பிடுங்க முடியும் என்று அந்த அரசன் ஆவேசமாக கொதித்து எழ காரணமென்ன? உன் ஆட்சியை நான் எடுத்துக்கொள்வேன் என்று அந்த கடிதத்தில்(மன்னிக்கவும், அழைப்பிதழில்) இருந்தால் தானே அந்த அரசன் கோபம் கொண்டு இப்படி பேசமுடியும்?

 
இ) "இதோ நான் அவரிடம் புறப்படுகிறேன் என்று கர்ஜித்தான்" என்று நீங்களே மொழிபெயர்த்துள்ளீர்கள். இதன் பொருள் என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று எண்ணுகின்றேன். ஒரு கடிதத்தில் "இஸ்லாமுக்கு உங்களை அழைக்கிறேன், விருப்பம் இருந்தால், தழுவுங்கள், இல்லையானால் உங்கள் விருப்பம், அழைப்பது என் கடமை என்றுச் சொல்லியிருந்தால், ஏன் அவர் கர்ஜிக்கப்போகிறார்"?

 
இப்படிப்பட்ட கேள்விகளுக்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள் அபூமுஹை அவர்களே. ஒரு வேளை இப்படி இல்லை, மூல மொழியில் வேறு மாதிரி இருக்கின்றது என்றுச் சொல்லப் போகிறீர்களா? அப்படி சொல்லமாட்டீர்கள் ஏனென்றால், நீங்கள்(முஸ்லீம்கள்) தான் நேரடியாக அரபியிலிருந்து மொழிபெயர்த்தது என்று நீங்களே சொல்லியுள்ளீர்கள்.
 
 
3) உங்களைத் தவிர உலகத்தில் உள்ள மற்ற அனைத்து முஸ்லீம்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு தவறு என்றுச் சொல்கிறீர்களா?

 
அன்பான அபூமுஹை அவர்களே, நான் தமிழில் மொழிபெயர்த்தது தவறு என்றுச் சொல்வதற்காக, ஒரு நொண்டிக் காரணத்தைச் சொல்லியுள்ளீர்கள். அதாவது, அரபியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்து, அதைப் பார்த்து நான் தமிழில் மொழிபெயர்த்ததால், நான் சொல்வது தவறு என்றுச் சொல்கிறீர்கள். அப்படியானால், என் கட்டுரையில் அக்கடிதங்கள் ஆங்கிலத்தில் கொடுத்து இருந்தேனே, அது கூட ஒரு இஸ்லாமிய தளம் மொழிபெயர்த்ததையே கொடுத்து இருந்தேனே? அது நேரடியாக அரபியிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது தானே. உங்களுக்கு ஆங்கில வார்த்தைகளில் உள்ள பொருள் தென்படவில்லையா?

 
தமிழ் முஸ்லீம்கள் சொல்வது தான் உண்மை, உலகத்தில் மற்ற யார் சொன்னாலும், முஸ்லீமாக இருந்தாலும் அவர்கள் சொல்வது தவறு! அப்படித் தானே?

 
உண்மையிலேயே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்குமானால், அதாவது, முகமது யாரையும் பயமுறுத்தி கடிதம் எழுதவில்லை என்று நீங்கள் நம்புகிறவராக இருந்தால், நான் கொடுத்த ஆங்கில தளத்துடன் தொடர்பு கொண்டு,

 
"ஏன் இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயரை கொண்டுவருகிறீர்கள்?,

ஏன் தப்பு தப்பான விவரங்களை பதிக்கிறீர்கள்?

நம்முடைய நபி அவர்கள் அமைதியான முறையில் கடிதம் எழுதினால், அதை மாற்றி தப்பாக மொழிபெயர்த்து இப்படி உலகமெல்லாம் ஒரு பொய்யான செய்தியை பரப்புகிறீர்களே, இது நியாயமா? என்று கேட்டு இருப்பீர்கள்.

 
உங்களுக்கு அரபி தெரியவில்லையானால், எங்களிடம்(தமிழ் முஸ்லீம்களிடம்) கேட்டால், நாங்கள் உங்களுக்கு சரியாக மொழிபெயர்த்து தருகிறோம், இனி இப்படி செய்யாதீர்கள்" என்று கேட்டு இருப்பீர்கள்.

 
அதை விட்டுவிட்டு, என்னிடம் மூல மொழியில் எந்த வார்த்தை மறைக்கப்பட்டு இருக்கிறது என்று சொல்லுங்கள் என்றும், உங்கள் மொழிபெயர்ப்பு தவறு என்றும் சொல்லிக்கொண்டு இருக்கமாட்டீர்கள்.

 
இன்னும் ஒரு படி மேலே சென்று, "இஸ்லாமை ஏற்றுக்கொள்ளுங்கள், ஈடேற்றம் பெருவீர்கள்" என்று நீங்கள் மொழி பெயர்த்த அரபி வார்த்தையை முகமது எழுதிய கடிதங்களிலிருந்து எடுத்து, அரபியில் அவ்வார்த்தையை பதித்து, இந்த வார்த்தையைத் தான் நாங்கள் தமிழில் இப்படிமொழி பெயர்த்தோம், இதற்கு இது தான் அர்த்தம் என்றுச் சொல்லியிருப்பீர்கள். அதையும் செய்யாமல், "எந்த வார்த்தை என்று சொல்ல நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்" என்று என்னிடம் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்.
 
 
4) ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கண்டன கடிதம் எழுதுங்கள், இஸ்லாமியர்களே!

 
ஓமன் நாட்டு அரசாங்கம் தன் அருங்காட்சியகத்தில், ஓமன் நாட்டுக்கு முகமது அவர்கள் எழுதிய க‌டிதத்தை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து பதித்துள்ளார்கள். அதனை ஆங்கிலத்தில் கீழ்கண்டவாறு மொழிபெயர்த்துள்ளார்கள். தமிழ் முஸ்லீம்களுக்கும், இதர தமிழர்களுக்கும் "இஸ்லாம் அமைதி மார்க்கம் இல்லை" என்று முகமது எழுதிய கடிதங்கள் ஆங்கிலத்திலும், தமிழிலும் நான் வெளியிட்டதால், இவர்களுக்கு மட்டுமே தெரிய வாய்ப்பு இருந்தது, அதனை தவறு என்றுச் சொன்னீர்கள். ஆனால், ஓமன் நாட்டிற்கு உலகத்தின் பல நாடுகளின் பயணிகள் யார் சென்றாலும், ஆங்கிலத்தில் அக்கடிதத்தை(தவறாக மொழிப்பெயர்த்துள்ள கடிதத்தை)க் கண்டு இஸ்லாமை பயப்படவைத்து தான் முகமது பரப்பினார் என்பதை "தவறாக" புரிந்துக்கொள்வார்கள். எனவே, அந்நாட்டிற்கு கீழ் கண்டாவாறு அல்லது உங்கள் பாணியில் கடிதம் எழுதி, கண்டனம் தெரிவித்துக்கொள்ளுங்கள், அந்த வரிகள் மாற்றப்படும் வரை தொடர்ந்து செயல்படுங்கள்.

 
"Peace be upon the one who follows the right path! I call you to Islam. Accept my call, and you shall be unharmed. I am God's Messenger to mankind, and the word shall be carried out upon the miscreants. If, therefore, you recognize Islam, I shall bestow power upon you. But if you refuse to accept Islam, your power shall vanish, my horses shall camp on the expanse of your territory and my prophecy shall prevail in your kingdom."
 
மேலே உள்ள ஆங்கில எழுத்துக்களில்(அடிக்கோடிட்ட வரிகளில்) முகமது பயப்படவைத்து தன் இறைவன் அல்லாவின் மார்க்கத்தை பரப்பியதாக மொழிபெயர்த்துள்ளார்கள். இஸ்லாமியர்களே, இந்த மொழிபெயர்ப்பும் உங்களுக்கு தவறாக காணப்படலாம், ஒருவேளை உங்களுக்கு தவறாக காணப்பட்டால், உடனே, ஓமன் நாட்டு அரசாங்கத்திற்கு ஒரு கடிதம் எழுதி, தமிழ் முஸ்லீம்கள் அனைவரும் கையெழுத்து இட்டு, உங்கள் கண்டனத்தை அனுப்புங்கள்.
 
 
"ஓமன் நாட்டு அரசாங்கமே, உனக்கு அரபி தெரியவில்லையானால், எங்களை (தமிழ் முஸ்லீம்களை) கேளுங்கள், நாங்கள் கற்றுக்கொடுக்கிறோம் மற்றும் மொழி பெயர்த்துக் கொடுக்கிறோம், ஆனால், இப்படி இஸ்லாமுக்கு கெட்டபெயர்(இந்தியாவில்) கொண்டு வரும்படி நடந்துக்கொள்ள வேண்டாம்"
 
என்று எழுதுங்கள், உங்கள் இஸ்லாம் அமைதி மார்க்கம் என்பதை நிலை நாட்ட இப்படிப்பட்ட நல்ல செயல்களைச் செய்து உங்கள் ஈமானை அல்லாவிற்காக அவனது அமைதி மார்க்கத்திற்காக, அவரது ரசூலுக்காக காட்டுங்கள்.
 
5) Aslim Taslam (Arabic: أسلم تسلم) என்றால் என்ன?

 
முதலாவதாக, முகமது வாள் மூலமாகத் தான் இஸ்லாமை பரப்பினார் என்பதற்கு ஆங்கிலத்தில் உள்ள கடிதங்களே போதும் சாட்சி சொல்வதற்கு, கார‌ண‌ம் ஆங்கில‌த்தில் மொழிப் பெய‌ர்த்த‌வ‌ர்க‌ளும், உங்க‌ளைப்போல‌ முஸ்லீம்க‌ளே.

இரண்டாவதாக, நீங்கள் நேரடியாக அரபியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்தது என்றுச் சொல்லிக்கொள்ளும் கடிதங்களில் உள்ள இதர விவரங்களே போதும், முகமதுவின் பிரச்சாரம் எப்படி இருந்தது என்பதை அறிய.

மூன்றாவதாக, நீங்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க, முகமது அவர்கள் தங்கள் கடிதங்களில் எழுதிய அரபி வார்த்தைகளைத் தருகிறேன்.
 
 
Aslim Taslam (Arabic: أسلم تسلم)
 
 
Aslim Taslam (Arabic: أسلم تسلم) is a phrase meaning "accept Islam and you will be saved".[1] that was taken from the letters sent by the Islamic prophet Muhammad to various kings and rulers in which he urged them to convert to Islam.[2][3] ….

References in Hadith

Sahih Muslim narrates in Kitab Al-Jihad wa'l-Siyar (The Book of Jihad and Expedition) Book 19, Number 4294, Chapter 2: Appointment of the Leaders of Expeditions by the Imam and His Advice to Them on Etiquettes of War and Related Matters: "Invite them to (accept) Islam; if they respond to you, accept it from them and desist from fighting against them."[7] …..

Critical responses

In response to the aslim taslam invitation to submit to Islam, the Italian author and journalist Oriana Fallaci asserted the rejoinder "lan astaslem" (Arabic: لن استسلم ) meaning "I will not surrender". [15] [16] Michelle Malkin has taken up this slogan as a response to the WTC terrorist attacks[17]

["lan astaslem" (Arabic: لن استسلم )

இத்தாலிய‌ ஆசிரியர் மற்றும் செய்தியாளர் ஓரியான ஃபல்லசி என்பவர் "லன் அஸ்டஸ்லெம்" என்றாராம், அதாவது, "நான் இஸ்லாமுக்கு சரணடையமாட்டேன்" என்றுப்பொருள். இதே ஸ்லோகத்தை மைக்கேலே மல்கின் என்பவரும், உலக வர்த்தக மையம் தகர்க்கப்பட்டதற்கு எதிர்த்து இப்படியே சொன்னாராம். ]


On September 17, 2006, in response to the Pope Benedict XVI Islam controversy, Imad Hamto, a Palestinian religious leader, said: "We want to use the words of the Prophet Muhammad and tell the pope: Aslim Taslam." This was interpreted as a warning.[3][18][vague]

[இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI

இஸ்லாம் பற்றி போப் பெனடெக்ட் XVI அவர்களின் விமர்சனத்திற்கு எதிராக‌(செப்டம்பர் 17 2006) பாலஸ்தீன இஸ்லாம் மத தலைவர் இமத் ஹன்டோ அவர்கள், கூறினார்கள்: " நாம் நம் நபி அவர்கள் சொன்ன அதே வார்த்தையை இப்போது போப்பிற்கு கூற விரும்புகிறோம்: அதாவது, "அஸ்லிம் தஸ்லம்" என்பதாகும். ]


Source: http://en.wikipedia.org/wiki/Aslim_Taslam

 
 
முடிவுரை: அன்பான அபூமுஹை அவர்களே, நீங்கள் இஸ்லாமை இந்தியாவிற்காக திருத்திச் சொல்லவேண்டாம் (Don't try to Customize Islam for India) , எத்தனை நாட்கள் திருத்திச் சொல்வீர்கள்? ஒரு நாள், ஒரு மாதம், ஒரு வருடம் நூறு வருடம், ஆயிரம் வருடங்கள் பிறகு ஒரு நாள் உண்மை வெளிவந்தே தீரும். முகமது அவர்கள் அனுப்பிய கடிதங்களில் பயமுறுத்தல்கள் இருந்தன, மற்றும் வாள் மூலமாக தன் மார்க்கத்தை அவர் பரப்பினார் என்று புரிந்திருக்கும். இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? அபூமுஹை அவர்களே , "இல்லை இல்லை" முகமது எழுதிய கடிதங்களில் அன்பு இருந்தது, அராஜம் இல்லை, அமைதி இருந்தது, கொடுமை இல்லை என்றுச் சொல்லப்போகிறீர்களா?

வெளியரங்கமாகாத அந்தரங்கமுமில்லை, வெளிக்கு வராத மறைபொருளுமில்லை - இயேசு


 

StumbleUpon.com Read more...

ஒரிசா,கர்நாடகத்தில் மதக் கலவரம்:விரிவான அறிக்கைதர பிரதமர் உத்தரவு

 
lankasri.comஒரிசா மற்றும் கர்நாடகத்தில் அண்மையில் ஏற்பட்ட மதக் கலவரம் தொடர்பாக விரிவான அறிக்கையை அளிக்குமாறு உள்துறை அமைச்சருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இரு மாநிலங்களிலும் தொடர்ந்து வன்முறை நீடித்து வருவதால் இங்கு நிலவும் சூழ்நிலை குறித்து விரிவான அறிக்கை அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவ்விரு மாநிலங்களிலும் தற்போது நிலவும் சூழ்நிலை குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்பட உள்ளது. அதற்கு வசதியாக ஒரிசா மற்றும் கர்நாடக மாநிலங்களில் நிலவும் சூழ்நிலை குறித்து விரிவான அறிக்கையை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளதாக மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் பி.ஆர். தாஸ்முன்ஷி கூறினார்.

ஒரிசாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதா? என்று கேட்டதற்கு, அரசியல் சட்ட விதிகளுக்கு உள்பட்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாக முன்ஷி பதிலளித்தார்

 

 

StumbleUpon.com Read more...

எல்லை காந்தியின் பேரனை கொல்ல முயற்சி-வீடு மீது வெடிகுண்டு வீச்சு;4 பேர் பலி

 
lankasri.comபாகிஸ்தானில் எல்லை காந்தி பேரனை கொல்ல முயற்சி நடந்தது. அவரது வீடு மீது குண்டு வீசியதில் 5 பேர் பலியானார்கள்.பாகிஸ்தானில் அவாமி தேசிய லீக்கட்சியின் தலைவராக இருப்பவர் அஸ் பாண்டியார் வாலிகான். எல்லை காந்தி என்று அழைக்கப்பட்ட கான்அப்துல் வாலிகானின் பேரன் இவர்.

வட மேற்கு எல்லை மாகாணத்தில் இவரது கட்சி தான் ஆட்சியில் உள்ளது.

ரம்ஜான் பண்டிகையை யொட்டி அஸ்பாண்டியார் வாலிகான் சார்சதா பகுதியில் உள்ள தனது வீட்டில் பொது மக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்தார்.

அப்போது சிலர் இவரது வீடு மீது வெடிகுண்டுகளை வீசினார்கள். இந்த தற் கொலை படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் அவரது வீடு இடிந்தது. பாதுகாப்பு வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கி சண்டையும் நடந்தது.

தீவிரவாதிகளின் வெடி குண்டு தாக்குதலிலும் துப்பாக்கி சண்டையிலும் வாலிகானின் உதவியாளர் உள்பட 5 பேர் பலியானார்கள். வாலிகான் காயம் ஏதும் இன்றி தப்பி விட்டார்.

தலிபான் தீவிரவாதிகள் தான் இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிய வந்துள்ளது.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP