பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் எங்கள் நபிகள் நாயகம் சொன்னது எல்லா காலங்களுக்கு பொருந்தும் என்று ஜிஹாதிகள் கொடி பிடிப்பது எல்லாறும் அறிந்ததுதான்.
ஆனால் அவர் சொன்ன சின்ன சின்ன விஷயங்கள் கூட நடைமுறையில் செய்ய விரும்மும் அவர்கள் கீழே உள்ள அவருடைய வார்த்தைகளை அப்படியே கீழ்படிவார்களானால் பெண்களின் நிலை என்னவாக முடியுமோ தெரியவில்லை.பெண்கள் அடிமைகளாகவே இருக்க வேண்டும் என்பதில் அவருக்கு இருந்த அனந்தத்தை நினைக்கும் போது ஆஹா என்ன ஒரு பெருந்தன்மை என்றே நினைக்கத்தோன்றுகிறது.
பாகம்
2, அத்தியாயம் 28, எண் 1862 இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
சந்திக்க "மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர்
பாகம்
2, அத்தியாயம் 28, எண் 1864 அபூ
ஸயீத்(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் நான்கு விஷயங்களைச் செவியுற்றேன். அவை எனக்கு மிகவும் விருப்பமானவை. (அவை:) 'கணவனோ மணமுடிக்கத் தகாதவரோ இல்லாமல் இரண்டு நாள்கள் தொலைவுக்கு ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது! நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! அஸருக்குப் பிறகிலிருந்து சூரியன் மறையும் வரையிலும், ஸுப்ஹுக்குப் பிறகிலிருந்து சூரியன் உதிக்கும் வரையிலும் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது! மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய பள்ளிவாசல் மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறு பள்ளி வாசல்களுக்கு (அதிக நன்மையை நாடி)ப் பயணம் செய்யக் கூடாது!"
"அபூ ஸயீத்(ரலி), நபி(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு போர்களில் பங்கெடுத்திருக்கிறார்கள்!" என்று (அறிவிப்பாளர்களில் ஒருவரான) கஸ்ஆ கூறுகிறார்.
பாகம்
2, அத்தியாயம் 30, எண் 1995 நபி
(ஸல்) அவர்களுடன் பன்னிரண்டு யுத்தங்களில் பங்கெடுத்த அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நான் நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளைச் செவியுற்றேன். அவை என்னைக் கவர்ந்தன. அவை: 'ஒரு பெண் தன்னுடைய கணவன் அல்லது மணமுடிக்கத் தகாத உறவினர் ஒருவர் தம்முடன் இருக்கும் நிலையில் தவிர, (மற்ற நிலைகளில்) இரண்டு நாள்கள் தொலைவுள்ள பயணத்தை மேற்கொள்ளக் கூடாது! ஈதுல் ஃபித்ர், ஈதுல் அள்ஹா (நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள்) ஆகிய இரண்டு நாள்களில் நோன்பு நோற்கக் கூடாது! ஸுப்ஹுக்குப் பிறகு சூரியன் உதிக்கும் வரையும் அஸருக்குப் பிறகு சூரியன் மறையும் வரையும் தொழக் கூடாது! (அதிக நன்மையைப் பெற நாடி) மஸ்ஜிதுல் ஹராம், பைத்துல் முகத்தஸ், என்னுடைய இந்தப் பள்ளி வாசல் (மஸ்ஜிதுந் நபவீ) ஆகிய மூன்று பள்ளி வாசல்களைத் தவிர வேறெதை நோக்கியும் பயணத் மேற்கொள்ளக் கூடாது!" பாகம்
3, அத்தியாயம் 56, எண் 3006 இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்" என்று கூறினார்கள்.
பாகம்
3, அத்தியாயம் 56, எண் 3006 இப்னு
அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.
"ஓர் ஆண் ஒரு பெண்ணுடன் தனித்திருக்க வேண்டாம். எந்த ஒரு பெண்ணும் தன்னுடன் மணமுடிக்கத் தகாத உறவினர் (மஹ்ரம்) ஒருவர் இருக்கும் போதேயன்றி பயணம் செய்ய வேண்டாம்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே! இன்ன புனிதப் போரில் கலந்து கொள்ள நான் என் பெயரைப் பதிவு செய்துள்ளேன். என் மனைவியோ ஹஜ்ஜுக்குப் புறப்பட்டுவிட்டாள். (இந்நிலையில் நான் என்ன செய்வது?)" என்று கேட்டதற்கு நபி(ஸல) அவர்கள், 'நீ போய் உன் மனைவியுடன் ஹஜ் செய்" என்று கூறினார்கள்.
Read more...