சமீபத்திய பதிவுகள்

எங்கள் கேள்விக்கு பதில் சொன்னால் மரண தேதியை சொல்லுவோம்

>> Monday, August 31, 2009

கேள்விக்கு பதில் சொன்னால் மரண தேதியை சொல்லும் இணைய தளம்

 

நியூயார்க், ஆக. 31-

கேள்விக்கு பதில் சொன்னால் மரண தேதியை சொல்லும் இணைய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.  அமெரிக்காவில் உள்ள கார்னஜிக் மெல்லன் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் "ஹெத்ரிக் ரேங் கிங்ஸ் டாட்காம்" என்ற பெயரில் இணைய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
 
இந்த இணைய தளத்துக்குள் சென்றால் பல்வேறு கேள்விகள் இருக்கும் அதற்கு பதில் அளித்தால் அவர்களுக்கு எப்போது மரணம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்ற தகவலை சொல்கிறது.
 
 
நமது உடல் நிலை, நாம் வசிக்கும் இடத்தின் பூகோள ரீதியான சூழ்நிலை, நமது பிறந்த தேதி போன்ற விவரங்களை கேட்கும். கேள்விகளில் இருந்து ஆய்வு செய்து மரணம் சம்பவிக்கும் காலத்தை சொல்லும்.

ஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்த நோயினால் அதிகம் பேர் மரணத்தை சந்திப்பார்கள் வயதி வாரியாக நடக்கும் மரணங்கள் போன்ற விவரங்களையும் இந்த இணைய தளம் சொல்கிறது.

 
 
மூலம்:மாலைமலர்
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ithratholam yehova sahayichu-MALAYALAM CHRISTIAN SONGS

StumbleUpon.com Read more...

மாஜி போலீஸ் கமிஷனர் தேமுதிகவில் இணைந்தார்

 

 

சென்னை நகர முன்னாள் போலீஸ் கமிஷனர் பி.காளிமுத்து இன்று தேமுதிகவில் இணைந்தார்.
. 
சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர் பி.காளிமுத்து. அவர் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். 


அவரை விஜயகாந்த் வரவேற்று கட்சியில் இணைத்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் பா.பார்த்தசாரதி, கே. பாண்டியராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.
 --
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஈழத்தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் - ஐ.நா. அதிகாரி


ஈழத்தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி விசாரணை நடத்த வேண்டும் - ஐ.நா. அதிகாரி

UNஇலங்கைத் தமிழர்கள் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப்படுவதைக் காட்டும் விடியோ தொடர்பாக தன்னிச்சையான விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என இலங்கை அரசை ஐ.நா. சிறப்பு விசாரணை அதிகாரி பிலிப் ஆல்சன் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்றதொரு விசாரணை மூலமாக அரசு மீது தவறு இல்லை எனத் தெரியவந்தால், அரசின் நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் ஏற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கும் என்றும், இப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என அரசு உறுதியாக நம்பினால், விசாரணைக்கு உத்தரவிடாமல் தவிர்ப்பது எந்தவகையிலும் நியாயமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

 

அதே நேரத்தில், விடியோ காட்சிகள் அனைத்தும் உண்மையென நிரூபணமானால்,  அது சர்வதேசச் சட்டங்களை மீறியவையாகவே கருதப்படும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இலங்கைக்குச் செல்வதற்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் தமக்கு இதுவரை அனுமதியளிக்கப்படவில்லை எனவும் ஆல்சன் குறிப்பிட்டார்.


 விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரிலேயே 'சேனல் 4' தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தப் படுகொலைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்தக்காலப் பகுதியில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பாக இலங்கை அரசின் மீது போர்க் குற்றச்சாட்டைச் சுமத்துவதற்கு இது ஒரு சிறந்த ஆதாரம் என மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

 
source:murasam
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

காட்சிப் பதிவான சிங்களக் கொடூரங்கள்! - ஈழநாடு ஆரியர் தலையங்கம்

>> Sunday, August 30, 2009

காட்சிப் பதிவான சிங்களக் கொடூரங்கள்! - ஈழநாடு ஆரியர் தலையங்கம்
சாட்சிகள் இல்லாமல் நடாத்தப்பட்ட பல்லாயிரக் கணக்கான தமிழர்களின் படுகொலைகள் அம்பலத்திற்கு வராத வேளையில், மனிதாபிமானமுள்ள புலம் பெயர்ந்த சிங்கள ஊடகவியலாளர்களால் வெளியிடப்பட்ட அந்த வீடியோப் பதிவு உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
சிங்கள அரசின் தமிழினப் படுகொலைகளுக்கும் பின் புலமாக இருந்து, இறுதிவரை வன்னியின் அவலக் குரல்கள் அடங்கிப் போகும்வரை சிங்கள அரசுக்குத் துணை நின்ற இந்திய அரசும் இந்தக் காட்சிப் பதிவு பற்றி விசாரணை தேவை என்று கூறியுள்ளது.

ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பாரிய வளங்களையும் ஆயுதங்களையும் வழங்கிய மேற்குலகு, சிறிலங்கா அரசு மேற்கொண்ட சாட்சிகளற்ற தமிழினப் படுகொலைகளைக் கண்டு, சிறிலங்கா அரசு மீது போர்க் குற்ற விசாரணை நடாத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா. முன்றலில் வைத்த போதும் சிங்கள அரசுக்கு உறுதுணையாக நின்று அதைத் தோற்கடித்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. புதிதாக வெளிவந்த இந்தப் படுகொலைக் காட்சிப் பதிவு இந்தியாவையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. 

உலக நாடுகளை அதிர்ச்சிக்குள் தள்ளியுள்ள இந்த வீடியோ காட்சிப் பதிவு உண்மையற்றது. சிறிலங்கா இராணுவத்திற்கு அபகீர்த்தி உண்டாக்கும் விதத்தில் போலியாகத் தயாரிக்கப்பட்டு வெளியிடப் பட்டுள்ளது என்று சிங்கள அரசு அதனை வழமை போலவே மறுத்துள்ளது. 

வன்னியில் நடந்தேறிய கொடூரங்களை அங்கிருந்த ஊடகவியலாளர்கள் பதிவு செய்து வெளியிட்ட காட்சிப் பதிவுகள் உலக நாடுகளால் அலட்சியம் செய்யப்பட்டது. வன்னி மக்கள் 'எங்களைக் காப்பாற்றுங்கள்' என்று எழுப்பிய அவலக் குரல்களும் அவர்கள் புதை யுண்டும், எரியுண்டும் போகும்வரை உலக நாடுகளால் கண்டு கொள்ளப்படாமலே விடப்பட்டதன் பின்னணியிலும் இந்தியாவே இருந்துள்ளது. 

புலம்பெயர் தமிழர்களின் தொடர் போராட்டங்களையும், தமிழகத் தமிழர்களின் கொந்தளிப்ப்புக்களையும், மனித உரிமை அமைப்புக்களின் தொடர் வற்புறுத்தல்களையும் அசட்டை செய்ய முடியாத நெருக்கடி காரணமாக இந்த வருடத்தின் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரையிலான காலப் பகுதிகளில் 7,000 அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதாக அறிவித்த ஐ.நா. 'வேலிக்கு ஓணான் சாட்சி' என்பது போல, சிறிலங்காவிற்கு மிகவும் வேண்டப்பட்டவரான விஜய் நம்பியார் அவர்களைத் தூது அனுப்பி யுத்தத்தை நிறுத்தச் சொன்னது. 

தமிழக மக்களை ஏமாற்ற நாராயணன், சிவசங்கர் மேனன் ஆகியோரை அனுப்பிய இந்தியா செய்த அதே காரியங்களை விஜய் நம்பியாரும் கச்சிதமாகச் செய்து முடித்த பின்னர் இந்தியாவுக்குச் சென்று தனது கடமையை முடித்துக்கொண்டு ஐ.நா.விற்கு அறிக்கை சமர்ப்பித்தார். 

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் சிறிலங்கா சென்ற ஐ.நா. வின் செயலாளர் நாயகம் பான் கி மூன் மகிந்த ராஜபக் ஷக்களின் வரவேற்பிலும், கவனிப்பிலும் குளிர்ந்து போய் முள்ளிவாய்க்கால் படுகொலைகளை மூடிமறைக்கப் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார். முள்ளிவாய்க்கால் மேலாகப் பறந்து சென்ற பான் கி மூன், அங்கு கனரக ஆயுதங்கள் பாவிக்கப்பட்டதற்கான தடயங்களைக் காணவே முடியவில்லை என்று அறிவித்தார். 

ஈழத் தமிழர்களின் ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டத்தைப் 'பயங்கரவாதம்' என்ற ஒற்றை வார்த்தையில் அடக்கி, விடுதலைப் புலிகளையும் பயங்கரவாதிகளாகப் பட்டியலிட்ட உலக நாடுகள் அத்தனையும் ஈழத் தமிழர்கள் மீதான இந்தப் படுகொலைகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் தற்போது ஏற்பட்டுள்ளது. 

அதைவிடவும் முக்கியமாக எஞ்சியுள்ள தமிழீழ மக்களை யாவது காப்பாற்றுவதற்காகத் தொடர்ந்தும் போராட வேண்டிய அவசியம் புலம் பெயர் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ளது. சிங்கள தேசத்தின் உச்சக்கட்ட கொடூரங்களின் ஒரு துளியாவது வெளிச்சத்திற்கு வந்துள்ள இந்த வேளையில் உலக நாடுகளினதும், மனித உரிமைகள் அமைப்புக்களினதும் மனச்சாட்சியுடன் போராடுவதற்கான பெரும் பணியினை அந்தக் கொடூரக் காட்சிகள் எம்மிடம் சுமத்தியுள்ளது. 

தமிழீழப் போராட்ட வரலாற்றில், தம்மை அர்ப்பணித்த ஒவ்வொரு விடுதலைப் புலியும், ஒவ்வொரு ஈழத் தமிழனும் வரலாற்றை நகர்த்தியே மண்ணில் வீழ்ந்துள்ளார்கள். அவர்களது மரணங்கள் மகாத்தானவை. அவற்றில் வீரமும் தியாகமும் மட்டுமல்ல, விடுதலைப் போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் ஆற்றலும் எமக்காக விட்டுச் செல்லப்படுகின்றன. 

சிங்கள தேசம் ஊடகவியலாளர்களையும், தொண்டு நிறு வனங்களையும் உள்ளே அனுமதிக்காமலேயே நிகழ்த்தி முடித்த, நிகழ்த்தி வரும் இந்தப் படுகொலைகள் அம்பலத்திற்கு வந்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றால், அது அவர்களது மகத்துவத்தையும், அவர்களது புனிதத்தையும் எங்களுக்கு உணர்த்துகின்றது. 

அந்த வீடியோப் பதிவில் எத்தனையோ இளைஞர்கள் சித்திரவதை செய்யப்பட்டு, நிர்வாணப்படுத் தப்பட்டு கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட இறுதிக் கணத்தில்கூட அவர்கள் மண்டியிடவில்லை. உயிர்வாழ்வதற்காக இலட்சியத்தை விட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, அவர்கள் இறுதிக் கணத்திலும் தமிழீழ விடிவுக்காகவே பிரார்த்தித் திருப்பார்கள். அந்த மகத்தான தியாகமே இந்தக் காட்சிப் பதிவுகள் சிங்கள ஊடகவியலாளர்களால் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

சிங்கள தேசத்துடன் யுத்தத்தை நிறுத்தி, சமாதான வழிகளில் ஈழத் தமிழர்களின் சோகத்திற்கு முடிவு தேட முயற்சித்த விடுதலைப் புலிகளின் புதிய செயலாளர் நாயகமாகப் பொறுப்பேற்றுக்கொண்ட கே.பி. அவர்களும் சதி மூலம் கடத்தப்பட்டு சிங்கள தேசம் கொண்டு செல்லப்பட்டுள்ளாhர். இது சிங்கள தேசத்தின் சமரசமற்ற இனவெறி சிந்தனையின் உச்சக்கட்ட வெளிப்பாடே. 

சிங்கள அரசைப் பொறுத்தவரை, தமிழர்கள் அடக்கி ஆளப்பட வேண்டியவர்கள். சிங்களவர்களால் ஆளப்பட வேண்டியவர்கள். சரத் பொன்சேகாவின் வார்த்தைப்படி 'எதையுமே மேலதிகமாகக் கேட்காமல்' வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்கள். 

இந்தக் கணத்திலாவது நாங்கள் எமக்குக் காலம் வழங்கியுள்ள வரலாற்றுக் கடமையினை நிறைவேற்றி ஈழத்தில் எஞ்சியுள்ள எமது உறவுகளைக் காப்பாற்றத் தவறினால், இலங்கைத் தீவு எதிர்காலத்தில் தமிழர்களற்ற சிங்களத் தீவாக மாற்றம் பெற்றுவிடும். 

சிங்கள இனவாத மேலாதிக்கத்தை ஏற்க மறுக்கும் தமிழர்கள் படுகொலை செய்யப்பட, அதைச் சீரணிக்க மறுப்பவர்கள் கடல் கடந்து செல்ல, தமிழீழம் அதன் சொல்லை இழந்து சிங்கள பூமியாகிவிடும். அப்போது, நாம் அந்த மண்ணுக்கு உரிமையோடு அல்ல, உல்லாசப் பிரயாணமாகக் கூடச் செல்ல முடியாத அவலங்களை எதிர்கொள்ள நேரிடும். 

இரண்டாவது உலகப் போரின்போது கிட்லரின் நாசிப் படைகளால் எண்ணற்ற யூதர்கள் சிங்களப் பாணியில் படுகொலை செய்யப்பட்ட பின்னர், புலம்பெயர் தேசங்களிலிருந்து யூதர்கள் உயிர்த்தெழுந்து இஸ்ரயேல் என்ற தங்கள் தேசத்தை உருவாக்கியது போலவே, புலம் பெயர் தமிழர் தமிழர்களும் சிலிர்த்தெழுந்து தமிழீழ மண்ணை மீட்கவேண்டும். அந்த மாவீரர்களதும், மக்களதும் அணையாத தமிழீழக் கனவை நிறைவேற்ற வேண்டும். இதுவே வரலாறு படைக்கப் புறப்பட்ட அந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் அஞ்சலி!

நன்றி: பாரிஸ் ஈழநாடு
தகவல் : உழவன்


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஐக்கிய நாடுகளின் கடப்பாடு பற்றி புலிகள் விசனம்

 

நிராயுதபாணிகளான அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கும் ராணுவத்தினரை வீடியோவில் பார்த்த பின்னரும் கூட ஐக்கிய நாடுகள், பிற சர்வதேச அமைப்புகளின் மௌனம் பற்றி கேள்வி எழுப்பியுள்ளார் உருத்திரகுமார்.

நிராயுதபாணிகளான அப்பாவித் தமிழர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்ற வீடியோ காட்சியால் உலக மக்களே அதிர்ச்சியாகியுள்ள நிலையில், ஐக்கிய நாடுகள்  மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் எந்த வித நடவடிக்கைக்களுமே இன்னமும் எடுக்கவில்லை. இந்த அமைப்புகள் இருப்பதன் கடப்பாடு, நடவடிக்கை எடுப்பதில் அவர்கள் காட்டும் நேர்மைபற்றி புலிகளின் உத்தியோகத்தராகக் கருதப்படும் வி. உருத்திரகுமாரன் விசனம் தெரிவித்து கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோவை இலங்கைக்கு எதிரான பிரச்சாரங்களுக்காக தாம் பயன்படுத்தப் போவதாக உருத்திரகுமாரன் கூறியதாக இந்தியா டுடே என்ற பிரபல சஞ்சிகை கூறியுள்ளது. இதுவரை இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் எடுக்காமல் உள்ளமை தமிழர்களைப் பழிவாங்கும் செயலாக உள்ளதோடு மட்டுமல்லாமல், ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளின் சட்டதிட்டங்களைப் பலவீனப்படுத்துவதோடு, அவற்றின் நேர்மைக்கும் பங்கம் விளைவிக்கிறது என்று தொடர்ந்து கூறியுள்ளார் உருத்திரகுமாரன்.

இதுபற்றிய விசாரணையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தாமாகவே செய்யும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், பாதுகாப்பு சபைக்கு இதுபற்றி அறிவிக்கும் எனவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணைகளைத் தொடங்குவதற்கு பாதுகாப்புச் சபையின் அனுமதியைப் பெறும் எனவும் தாம் மேலும் நம்புவதாகக் கூறியுள்ள இவர் அவற்றுக்கெல்லாம் இந்தியாவின் ஆதரவு மிக முக்கியமாகத் தேவைப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.


source:athirvu

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சோனியாவுக்கு கட்டாய திருமணம்

>> Saturday, August 29, 2009


அரியானா மாநிலம் சிங்வால் கிராமத்தை சேர்ந்தவர் சோனியா. இவர் வேறு ஜாதியைச் சேர்ந்த வேத்பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் சோனியாவை அவரது குடும்பத்தினர் கட்டாயப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்து விட்டனர்.
எனவே வேத்பால் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு அவர், போலீஸ் உதவியுடன் மனைவியை அழைத்து செல்லலாம் என்று உத்தர விட்டது. 

இதனால் வேத்பால் 15 போலீசாருடன் சென்று மனைவியை அழைத்து வர அந்தகிராமத்துக்கு போனார். அப்போது கிராமத்தினர் போலீஸ் முன்னிலையிலேயே வேத்பாலை அடித்து கொன்றனர். 

இந்த சம்பவம் கடந்த ஜூலை 23-ந்தேதி நடந்தது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இப்போது ஊர்பஞ்சா யத்தார் சோனியாவுக்கு வேறு ஒருவருடன் கட்டாய திருமணம் செய்து வைத்து உள்ளனர். சோனியாவின் குடும்பத்தினரும் இந்த திருமணத்துக்கு ஆதரவாக இருந்துள்ளனர். 

ஆனால் இதுபற்றி புகார் ஏதும் இல்லாததால் போலீசார் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை
.

-- 
www.thamilislam.co.cc

source:paranthan

StumbleUpon.com Read more...

கே.பியை சி.பி.ஜ விசாரிக்கும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன

கே.பியை சி.பி.ஜ விசாரிக்கும் எனச் செய்திகள் வெளியாகியுள்ளன
 

அடுத்தமாதம்(செப்டெம்பர்) இந்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஜ இலங்கை சென்று குமரன் பத்மநாதனை விசாரிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தியாவில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தேடப்பட்டு வருவதாகக் கூறப்படும் கே.பியை தாம் விசாரிக்கவேண்டும் என ஏற்கனவே சி.பி.ஜ விடுத்த கோரிக்கை இலங்கை அரசால் நிராகரிக்கப்பட்டிருந்தது. தற்போது அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதால் அடுத்த மாதம் நடுப்பகுதியில் இந்திய அதிகாரிகள் இலங்கை செல்லவுள்ளனர்.
 
அத்துடன் கே.பியை இந்தியாவுக்கு நாடுகடத்துவது குறித்து இந்திய அதிகாரிகள் இரகசியப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியப்படுகிறது. எஸ்.எம். கிருஷ்ணா, எம். நாராயணன் உட்ப்பட பல முக்கிய இந்திய அதிகாரிகள் இது குறித்து இலங்கை அரசுடன் அலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது இவ்வாறிருக்க கே.பியை தற்போது பாரிய சித்திரவதைக்கு உள்ளாக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளதாவும் தகவல்கள் கசிந்துள்ளன.
 
பனாகொடை முகாமில், "யூனிட் கோத்தபாய" என்றழைக்கப்படும் மிகவும் இரகசியமான இடம் ஒன்றில் கே.பி வைக்கப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. முகாமின் இப்பகுதி மிகுந்த பாதுகாப்புடன் காணப்படுவதாகவும், மின்சாரம் மூலம் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் கருவிகள் சமீபத்தில் இம் முகாமுக்கு கொன்டுசெல்லப்பட்டதாகவும், சில ஊர்ஜிதமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.


மூலம்:அதிர்வு
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மீண்டும் அதிர்ச்சியூட்டும் படங்கள் :இலங்கை இராணுவத்தின் கோரம்

 
 

அதிர்ச்சியூட்டும் இப் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இருப்பினும் விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஏ9 வீதியாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. போரில் இறந்தவர் என்று கூடப்பாராமல், பெண்களையும் இளைஞர்களையும் இலங்கை இராணுவம் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்துள்ளது. இவர்கள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் ஆடைகள் இலங்கை இராணுவத்தால் களையப்பட்டுள்ளது.

பிறிதொரு படத்தில் இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது. திறந்தவெளியில் உடலங்களை நீண்டநேரம் விட்டிருப்பதால், காகங்கள் உடலைத் தின்ன காத்திருக்கும் காட்சிகள் நொஞ்சைப் பிளக்கின்றன. சிங்கள இனத்தை காடையர் இனத்தில் கூடச் சேர்க்க முடியது, அவர்களை விடக் கேவலமான இனமாக, இவர்கள் இருக்கிறார்கள். இவை இன்று நேற்று புதிதாக முளைத்து வருவதில்லை.

இவர்கள் பிறக்கும்போதே இவ்வாறான கேரக்குணமும், இனத்துவேசமுடனுமே பிறக்கின்றனர் என்பதே உண்மை. உலக நாடுகள் இவர்கள் மீது அனைத்துத் தடைகளையும் வித்தித்து, ஒதுக்கிவைக்கவேண்டும். இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தவேண்டாம். ஒரு கிடங்கையாவது கிண்டி உடலத்தை மூடியிருக்கலாம் ஆனால் இறந்த உடலத்தை நிர்வானமாக்கிப் பார்க்கும் சாக்கடைப் புத்தி உலகிலேயே சிங்கள இனத்திற்கு மட்டும் தான் இருக்கும்.

புலிகள் வன்முறையாளர்கள் என விமர்சிப்பவர்களுக்கு புலிகள் ஏன் ஆயுதம் ஏந்தத் துணிந்தார்கள் என்பது தற்போது நன்கு விளங்கியிருக்கும். இனிவரும் காலங்களில் நாம் எவ்வாறு செயல்படப் போகிறோம் என்பதே தற்போதை முக்கியமாக ஆராயப்படவேண்டிய விடையமாகும்.

comments posted: 29-08-2009

by: Thanabalan

this is so disturbing image, we need to do something

by:  Kathirvel

என்ன கொடுமையப்பா .வகை தொகை இன்றி தமிழனைக் கொன்று குவித்துள்ளான் சிங்களவன். தமிழ் நாட்டில் நாம் என்னசெய்தோம் என எண்ணிப் பார்க்கிறேன், அனைத்துச் செய்திகளையும் துணிச்சலாக வெளியிடும் அதிர்வுக்கு நன்றி--
 

StumbleUpon.com Read more...

அற்புதமான நாய்-காணொளி

StumbleUpon.com Read more...

புலிகளின் போரியல் நுட்பங்களை அறிவதற்கு விரும்பும் வல்லரசுகள்

 
விடுதலைப் புலிகளுடனான போரில் வெற்றி பெற்ற இலங்கை அரசிடம் இருந்து, இப்போது வெளியாகும் கருத்துகள் அதன் இராணுவத் திமிரை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளன. பிரித்தானிய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்களை வழங்குவதை மீள் பரிசீலனை செய்யவேண்டும் என்றும், பிரித்தானியா வழங்கிய ஆயுதங்கள், தமிழர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்றும், அந்த நாட்டு நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சி குழு கோரியிருந்தது. 

இது குறித்து இலங்கையின் முப்படைகளினது உயர் அதிகாரிகள் வெளியிட்டிருக்கின்ற கருத்துகள் பிரித்தானியாவை ஏளனப்படுத்துவது போன்று அமைந்துள்ளன.

பிரித்தானியாவிடம் கப்பல்களையோ, விமானங்களையோ, ஆட்டிலறிகளையோ அல்லது வேறெந்த ஆயுதங்களையோ வாங்கி, போரில் வெற்றி பெறவில்லை. இது அந்த நாட்டு எம்.பிக்களுக்குத் தெரியாது போல இருக்கிறதென்று கிண்டலடித்திருந்தனர் அவர்கள்.

1996ம் ஆண்டு பிரித்தானியா பத்து 30மி.மீ பீரங்கிகளையும், அதற்கான 6,000 ரவைகளையும் வழங்கியிருந்தது. இவை கடற்படையின் அதிவேகத் தாக்குதல் படகுகளில் பொருத்தப்படுவதற்காக வாங்கப்பட்டிருந்தன. இதற்குப் பின்னர் பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை அரசு வெளிப்படையாக ஆயுதங்களை வாங்கவில்லை. ஆனால் பின்னர் 30மி.மீ பீரங்கிகளுக்கான ரவைகளைக் வாங்க முற்பட்டபோது- அவற்றை விற்க பிரித்தானியா மறுத்து விட்டது என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், பிரித்தானிய அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழுவின் கோரிக்கை இலங்கை அரசாங்கத்தினாலும், அரசபடைத் தளபதிகளாலும் நேரடியாகவும்- மறைமுகமாகவும் ஏளனப்படுத்தப்பட்டிருக்கிறது. அதேவேளை, இப்படிப்பட்டதொரு சூழலில் பிரித்தானியாவிடம் இருந்து ஒரு கோரிக்கை வந்திருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றன.

அதாவது, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கு காரணமாக அமைந்த கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணியின் அனுபவங்களை அறிந்து கொள்வதற்கு பிரித்தானியப் பாதுகாப்பு அதிகாரிகள் விருப்பம் தெரிவித்திருக்கிறார்களாம்.

இலங்கையின் பாதுகாப்புத் தரப்பு இப்படியொரு தகவலை வெளியிட்ட காலகட்டமானது, இது உண்மையா என்ற கேள்வியை எழுப்ப வைத்திருக்கிறது. பிரித்தானியாவின் ஆயுத உதவியின்றியே போரை நடத்தி வெற்றி பெற்றதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய கருத்து வெளியிட்டிருந்த பின்னணியில் தான் இந்தத் தகவலும் வெளியாகியிருக்கிறது.

பிரித்தானியா தம்மிடம் அனுபவங்களை கேட்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம் என்று பெருமைப்படும் விதத்தில் இலங்கையின் கருத்துகள் அமையவில்லை. புலிகளுக்கு எதிராகப் போரிட ஆயுதங்களைத் தர மறுத்த பிரித்தானியா, இன்று போரின் அனுபவங்களை பெறுவதற்குத் தம்மிடம் கெஞ்சுகிறதென்று, அந்த நாட்டைக் கொச்சைப்படுத்தும் விதத்திலேயே இலங்கைப் படையதிகாரிகளின் கருத்துகள் அமைந்துள்ளன. 

இலங்கைப் படைகள் புலிகளுக்கெதிரான போரில் பெற்ற வெற்றி முக்கியமானதொன்று தான். ஆனால் இது உலகத்தில் நிகழ்ந்திராத ஒன்றெனக் கூறிப் பெருமை கொள்ள முடியாது. 
உலகில் எங்குமே வல்லரசுகளால் கூட, நிகழ்த்த முடியாத அற்புதத்தை நிகழ்த்தியிருப்பதாக இலங்கைப் படைகள் தம்மைத் தாமே புகழ்ந்து கொண்டிருக்கின்றன. 

ஆனால், 1950 இல் மலேசியாவில் விடுதலை கோரிய ஆயுதப் போராட்டத்தை பிரித்தானியா முழுமையாக நசுக்கியிருந்தது. 

பஞ்சாபில் சீக்கியர்களும், காஷ்மீரில் முஸ்லிம்களும், கிழக்கு மாநிலங்களில் இடதுசாரி மாவோயிஸ்டுகளும் தனிநாடு அமைப்பதற்கு ஆயுதப் போராட்டங்களை நடத்தியபோதும் இந்திய அரசு அவற்றை தோற்கடித்திருந்தது. 

இப்படிப் பல உதாரணங்கள் இப்போது வந்து விட்டன. இந்த வரிசையில் மற்றொன்றாகவே இலங்கைப் படைகளின் வெற்றியும் அமைந்திருக்கிறதே தவிர, எல்லாவற்றுக்கும் முன்னுதாரணமான ஒன்றாக இருக்கவில்லை.

புலிகளுக்கு எதிரான போர் முடிந்த பின்னர், முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒரு இராணுவ வெற்றிவிழா நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் பேசிய அப்போதைய இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா, இந்தப் போரில் பெற்ற அனுபவங்களைக் கற்றுக் கொள்ள, உலகமே தம்மிடம் வரிசையாக வந்து நிற்கப் போவதாகக் கூறியிருந்தார்.

புலிகள் இயக்கம் உலகில் மிகவும் வல்லமை பெற்றதொரு இராணுவ அமைப்பாக, முப்படைகளையும், மரபுசார் படையணிகளையும் கொண்டதாக இருந்தது உண்மை. 
அப்படிப்பட்டதொரு இயக்கத்தை இராணுவ ரீதியாகத் தோற்கடித்தது இலங்கைப் படைகளுக்கு முக்கியமானதொரு வெற்றி தான்.

அதுபோலவே இந்தப் போரின் மூலம் சிறந்த அனுபவங்களை அவர்கள் பெற்றிருப்பதும் மறுக்க முடியாதது. சில நாட்களுக்கு முன்னதாக இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய மோதறையில் உள்ள கவசப் படையணியின் தலைமையகத்துக்குச் சென்றிருந்தார்.

அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர், இலங்கை இராணுவத்தின் கிளர்ச்சி முறியடிப்பு போருபாயங்களை அறிந்து கொள்ள பல்வேறு நாடுகளும் விருப்பம் தெரிவித்துள்ளன என்று தெரிவித்திருந்தார்.

எனவே வெளிநாடுகள் இராணுவங்களுக்கு கிளர்ச்சி முறியடிப்புப் பயிற்சிகளை வழங்குவதற்கு, முல்லைத்தீவில் பயிற்சி முகாம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவித்திருந்தார் 
பாகிஸ்தான் போன்ற நாடுகள் இங்கு பயிற்சி பெற விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார்.

ஆனால், முல்லைத்தீவில் பாகிஸ்தான் இராணுவத்துக்குப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த அவரே, பின்னர் அதை மறுத்தார். முல்லைத்தீவில் பாகிஸ்தான் படைகளுக்கு பயிற்சி வழங்கப்படாது.  தென்பகுதியில் வைத்தே பயிற்சி அளிக்கப்படும் என்று கூறியிருக்கிறார் லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய.

புலிகளைத் தோற்கடித்தது பற்றி அனுபவங்களைப் பெறுவதற்கு வெளிநாட்டுப் படைகள் ஆசைப்படுவது முக்கியமானதொரு விடயமே. ஆனால் இந்தப் பெருமை இலங்கை இராணுவத்துக்குக் கிடைத்திருப்பதற்குக் காரணமே புலிகள் தான்.

ஒருவரின் குணத்தை அவரது நண்பன் யார் என்பதைக் கொண்டு முடிவு செய்யலாம். அதுபோன்றே ஒரு படையின் பலத்தை அறிய அந்தப் படையின் எதிரியைக் கொண்டே மதிப்பிடலாம் என்பார்கள்.

இந்த வகையில் புலிகளின் பலம், திறன், ஆற்றல் ஆகியனவே, இந்த முறியடிப்புப் போருக்கு முக்கியத்துவத்தைக் கொடுத்திருக்கிறது.

புலிகள் இயக்கத்தின் போரியல் வளர்ச்சி பற்றி, அவர்களின் திறன் பற்றி சர்வதேச இராணுவ விற்பன்னர்கள் பலரும் கடந்த காலங்களில் இலங்கைக்குச் சென்று நேரில் அறிந்திருந்தனர். இப்போது அவர்கள் தோற்கடிக்கப்பட்ட விதம் பற்றி அறிய ஆசைப்படுகின்றனர்.

அதேவேளை, இலங்கைப் படைகளின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றி அறிந்து கொள்ள பிரித்தானியா ஆசைப்படுவதாக தகவல் வெளியிடப்பட்டிருப்பது தான் ஆச்சரியம்.

புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டது சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் தான் என்பதை மறைக்கவே இலங்கை அரசு இப்படியான தகவல்களை வெளியிடுவது போலத் தெரிகிறது. 
ஒரு கட்டத்தில் புலிகளைத் தோற்கடிக்க சர்வதேசம் உதவ முன்வரவில்லை என்று கூறியது அரசாங்கம். பின்னர் சில ஆசிய நாடுகளைத் தவிர வேறு மேற்குநாடுகள் உதவவில்லை என்றும் கூறியது.

இப்போது பிரித்தானிய ஆயுதங்களின் மூலம் புலிகளைத் தோற்கடிக்கவில்லை என்கிறது. இந்தியாவின் உதவியைப் பெறவில்லை என்கிறது. இப்படிப் பல உண்மைகளை மறைத்து தமது இராணுவ வல்லமையை, வெற்றியை மிகைப்படுத்திக் கொள்வதில் இலங்கை அரசும், படைகளும் முயற்சி செய்து வருகின்றன.

இலங்கைக் கடற்படையின் சிறிய படகுத் தாக்குதல் அணிகளின் தந்திரோபாயம் பற்றிய அறிந்து கொள்ள பிரித்தானியா விருப்பம் வெளியிட்டது உண்மையானால்- அதற்கான பெருமையும் புலிகளுக்கேயுரியது.

கடற்புலிகளின் கடல் ஆதிக்கத்துக்கு முடிவு கட்டுவதில் முக்கிய பங்கு வகித்தது- நான்காவது கட்ட ஈழப்போரில் கடற்படை அறிமுகப்படுத்திய விசேட படகுப் படையணி

(Special Boat Squadron-SBS) மற்றும் துரித நடவடிக்கைப் படகு அணி (Rapid Action Boat Squadron -RABS) ஆகியனவாகும்.

இலங்கைக் கடற்படையில் விசேட படகுப் படையணி 1993இல் அமைக்கப்பட்டது. இரண்டாம் கட்ட ஈழப்போர் மற்றும் மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போதும் இது செயற்பட்டது. 
அதேவேளை துரித நடவடிக்கைப் படகு அணி தான் நான்காவது கட்ட ஈழப்போர் காலத்தில் உருவாக்கப்பட்டது. 

இந்தப் படையணிகளின் உருவாக்கமே புலிகளின் தோல்விக்குக் காரணம் என்று கூற முடியாது. இந்தப் படையணிகளுக்கு வழங்கப்பட்ட படகுகள், ஆயுதங்கள் தான் முக்கிய மாற்றத்துக்கு வழிவகுத்தது.

கடற்படையின் சுடுபல சக்தியை அதிகரிக்கும் வகையிலும், கடற்கரும்புலிகளின் தாக்குதல்களை முறியடிப்பதற்கு ஏற்ற வகையிலுமே இந்தத் தந்திரோபாயத்தைக் கடற்படை அறிமுகப்படுத்தியிருந்தது.

இரண்டாம், மூன்றாம் கட்ட ஈழப்போர்களின் போது கடற்படை அழிவுகளை சந்தித்ததற்கான காரணங்களை ஆராய்ந்த போது- ஒற்றை இயந்திரம் கொண்ட சண்டைப் படகுகளும், குறைந்த சூட்டு வலுவும் தான் தமது பலவீனம் என்று கண்டறிந்தது.

புலிகள் தமது பாரிய சண்டைப் படகுகளில் 250 குதிரைவலு கொண்ட நான்கு இயந்திரங்களைப் பொருத்தியிருப்பர். சிறிய சண்டைப் படகுளில் இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருக்கும். ஒரு இயந்திரம் பழுதானால் கூட மற்றதைப் பயன்படுத்தித் தப்புவதற்கு இது வாய்ப்பானது. இதன் அடிப்படையில் தான் கடற்படை தமது தந்திரோபாயத்தை மாற்றியமைத்தது.

இதற்கான ஆய்வுகளின் போது புலிகளின் தாக்குதல் படகுகளே முன்மாதிரிகளாக எடுக்கப்பட்டன. இதன் அடிப்படையில் மூன்று வகையான படகுகள் உருவாக்கப்பட்டன. இதில் பெரியது- 17 மீற்றர் நீளமானது. இது கட்டளை மற்றும் சண்டைப் படகுக்கான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டது.

இரண்டரை மீற்றருக்கு எழும்பும் அலைகளையும் சமாளித்துப் பயணம் செய்யக் கூடியது இந்தப் படகு. இரண்டாவது வகைப் படகு 14மீற்றர் நீளம் கொண்டது. 
அடுத்தது- 23அடி நீளத்தை கொண்டது. இதற்குப் பெயர் அரோ (Arrow)  இது 1.25 மீற்றர் உயருமான அலைகளிலும் லாவகமாகப் பயணம் செய்யக் கூடியது.

14மீற்றர் மற்றும் 17மீற்றர் நீளமான கரையோர ரோந்துப் படகுகளில் 250 குதிரை வலுக்கொண்ட நான்கு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
37 நொட்ஸ் வேகத்தில் இவை பயணம் செய்யும்

இந்தப் படகுகளில் 23மி.மீ இரட்டைக்குழல் பீரங்கி   (23 mm Double-barrel gun) ஒன்று, சிங்கப்பூர் தயாரிப்பான 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் (CIS 40 mm Automatic Grenade Launcher) ஒன்று, 12.7மி.மீ விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் இரண்டு என்பன பொருத்தப்பட்டன.

23அடி நீளம் கொண்ட 'அரோ' தாக்குதல் படகுகளில் 250 குதிரைவலு கொண்ட இரண்டு இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால் 35 நொட்ஸ் வேகத்தில் பயணம் செய்யக் கூடியது. 
இதில் 23மி.மீ பீரங்கி அல்லது 12.7மி.மீ துப்பாக்கி மற்றும் 40மி.மீ தன்னியக்க கிரனேட் லோஞ்சர் என்பன பொருத்தப்பட்டுள்ளன.

இதன்மூலம் கடற்புலிகளின் செறிவான சுடுபல சக்தி கடற்படையால் தோற்கடிக்கப்பட்டது. இந்தத் தந்திரோபாயம் கடற்புலிகளிடம் இருந்து கடற்படை கற்றுக் கொண்டது தான்.

அரோ வகைப் படகுகள் பிரித்தானியா, அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளின் கடற்படைகளின் பாவனையில் உள்ளது. ஆனால் அவற்றில் ஆகக் கூடியது 12.7 மி.மீ துப்பாக்கியைத் தான் பொருத்தியிருக்கிறார்கள்.

இந்தப் படகுகளில் 20மி.மீ, 23மி.மீ பீரங்கிகளையும் பொருத்தி கடற்சமர்களை நடத்த முடியும் என்று இலங்கைக் கடற்படைக்குக் காட்டிக் கொடுத்ததே புலிகள் தான். 
இப்போது அந்த உத்தியைத் தான் பிரித்தானியா கேட்பதாகக் கூறிப் பெருமைப்படுகிறது இலங்கை அரசு.

அதைவிடக் கடற்படை வடிவமைத்த அரோ வகைப் படகுகள் கூடக் கடற்புலிகளின் படகுகளை மாதிரியாக்கக் கொண்டே வடிவமைக்கப்பட்டவை.

கடற்புலிகளை முன்மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கைக் கடற்படையின் படகுகள், தந்திரோபாயங்களைப் பற்றி அறிந்துகொள்ள பிரித்தானியா விரும்புகிறதென்றால் அது இலங்கைக் கடற்படைக்குரிய பெருமையல்ல. புலிகள் இராணுவ ரீதியாக அழிக்கப்பட்டாலும்,  அவர்கள் போரியலில் தமக்கென முத்திரை பதித்திருக்கிறார்கள் என்பது உறுதியாகியுள்ளது.

அவர்களின் போரியல் நுட்பங்களை, தந்திரோபாயங்களை, கற்றுக் கொள்ள வெளிநாடுகள் விரும்புகின்றன என்றால், அதற்காக பெருமைப்படக் கூடியது இலங்கை அரசு அல்ல. 
புலிகள் இயக்கமே. 

 
source:tamilwin

StumbleUpon.com Read more...

CNN தொலைக் காட்சியிலும் காண்பிக்கப்பட்டது இராணுவத்தின் அராஜகம்

>> Friday, August 28, 2009

அமெரிக்காவில் மிகப் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான CNN இல் இலங்கை இராணுவம் தமிழ் இளைஞர்களைச் சுட்டுக்கொல்லும் கோரக் காட்சிகள் ஒளிபரப்பாகியுள்ளன. அந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கெகலிய ரம்புக்வெல்லவை தொடர்புகொண்டு CNN கேட்ட கேள்விகளால், இலங்கை அரசின் நம்பகத்தன்மை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மனித உரிமை ஆர்வலர், இலங்கை அரசாங்கம் பொய்கூறிவருவதாக நேரடியாகவே தாக்கியுள்ளார். அதன் காணொளி இணைக்கப்பட்டுள்ளது.


source:athirvu

StumbleUpon.com Read more...

தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் மரணம் ஆதாரம் அற்றது- இந்தியா


தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் மரணம் ஆதாரம் அற்றது – இந்திய அதிகாரிகள் விசாரணை

RAWதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறித்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக, இந்திய அதிகாரிகள் குழுவொன்று விரைவில் இலங்கை வரவுள்ளதாகத் தெரிய வருகிறது.

ராஜீவ் காந்தி படுகொலை குறித்து விசாரிக்கும் பல்துறை கண்காணிப்பு முகவர் அமைப்பு அதிகாரிகளே இவ்வாறு இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக புதுடில்லி செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் முற்றாக முடக்கப்பட்டுவிட்டதாக இலங்கை அரசு அறிவித்துள்ள போதும், விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை இந்திய அரசு மேலும் ஒருவருட காலத்திற்கு தடைசெய்துள்ளது.

மேற்படி விசாரணைகளை மேற்கொள்ளவிருக்கும், பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் காலம், கடந்த மே மாதம் 31 ஆம் திகதியுடன் முடிவடைந்த நிலையில் மூன்று மாதத்திற்குப் பின்னர் மீண்டும் அதற்கு ஒரு வருட நீடிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த நிலையிலேயே பல்துறை கண்காணிப்பு விசாரணை அமைப்பின் அதிகாரிகள் விடுதலைப் புலிகளின் தலைவர் குறித்து ஆராய்வதற்காகவும் மேலதிக தகவல்களை பெறுவதற்காகவும் விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளதனால், ராஜீவ் காந்தி கொலைவழக்கினை முடிவுக்குக் கொண்டுவரவேண்டிய தேவை இந்திய அரசாங்கத்திற்கு இருக்கிறது. ஆயினும் அதற்கு முன் பிரபாகரன் கொல்லப்பட்டது திட்டவட்டமாக உறுதி செய்யப்பட வேண்டும். இலங்கை அரசால் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளபோதிலும், இதை அறிவித்த முறைகளில் ஏற்பட்டுள்ள குழப்பங்களால் , அந்த அறிவிப்பு பலதரப்பிலும் சந்தேகங்களை உருவாக்கியுள்ளன.

அதே சமயம், தமிழகத்திலுள்ள , ஈழஆதரவு அரசியல்வாதிகளாலும், ஆதரவாளர்களாலும், பிரபாகரன் உயிரோடிருக்கின்றார் எனும் செய்தி தொடர்ச்சியாகப் பரப்புரை செய்யப்பட்டு வருவதும், இது விடயத்தில் சுலபமான முடிவுக்கு இந்தியா வரமுடியாதுள்ளதெனவும் கூறப்படுகிறது.


source:nerudal

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சிங்கள விடுதலை புலிகள் சதிவேலை

இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வீடியோக்கள் சிங்கள புலிகளால் விநியோகம்: திவயின
இலங்கை இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையிலான வீடியோக்களை ஜெர்மனியில் உள்ள சிங்கள விடுதலைப் புலி  உறுப்பினர்களே விநியோகம் செய்துள்ளனர் என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இராணுவத்தினர் தமிழர்களை படுகொலை செய்வதாக சித்தரிக்கும் போலியான காட்சிகள் அடங்கிய வீடியோக்களை ஜெர்மனியில் உள்ள ஐந்து சிங்கள விடுதலைப் புலி உறுப்பினர்களே விநியோகம் செய்துள்ளனர்.
 
இந்த வீடியோ காட்சிகள் முழுக்க முழுக்க போலியானவை எனவும் இராணுவத்திற்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் இவை தயாரிக்கப்படடுள்ளன எனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.
 
ஜே.டி.எஸ். எனும் பெயரையுடைய அமைப்பே இவ்வாறான வீடியோக்களை விநியோகம் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
இந்த வீடியோக் காட்சிகள் பிரிட்டன், அமெரிக்கா மற்றும் புலிகளுக்கு சார்பான இணைய தளங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
 
மூலம்:தமிழ்வின்

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தலைவரின் முகமா அது? 

                     மே-17 வரை நந்திக் கடற்கரை யில் நின்ற சிவரூபன் தொடர்கிறேன்... 

எங்கும்பிணக்காடாய் கிடந்த வட்டுவாகல்-முள்ளி வாய்க்கால் பிரதான வீதியில் தமிழர் உடலங்களில் என் கால் கள் பட்டுவிடக்கூடாதென்ற கவனத் தோடும், மனதின் பாரங்களோடும் நகர்ந்து கொண்டிருந்தேன். ஒரு குறிப் பிட்ட இடம் வந்ததும் வீதியின் இருபுறமும் துப்பாக்கிகளை மக்களை நோக்கி நீட்டியவாறு சிங்களக் கைக்கூலிகள் நின்றிருந்தனர். கடைசியாக புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியை விட்டு வெளியே வந்து விட்டோமென்பது புரிந்தது. சுதந்திர வாழ்க்கை முடிந்து போய்விட்ட உணர்வு உடல் முழுதும் பரவியது. களைத்துப் போயிருந்த மனது மேலும் களைத் தது.

வட்டுவாகல் பாலம் பக்கமாய் நடந்தேன். பாலத் தின் இருபுறமுமாய் விரிந்து கிடந்த நீரேரியை பார்த்தேன். தண்ணீர் பரப்பு தெரியவில்லை. எங்கு பார்க்கினும் தமிழரின் பிணங் கள் மிதந்து கொண்டிருந்தன. அனைத்து உடல்களுமே ஆடை யின்றிக் கிடந்தன. அநேகம்பேர் எம் குலப் பெண்கள். கொடுமை யை பதிவு செய்யக்கூட என் கண்களால் பார்க்க முடியவில்லை. எனினும் அந்த நீரில் மிதக்கும் பிணங்களூடே என் சொந்த உறவு கள் இருக்கக்கூடுமென்பதால் நின்று பார்த்தேன். பல உடல்களில் நகக்கீறல்களும், கடித்துக் குதறிய காயங்களும் தெரிந்தன.

ஆண்கள் பெரும்பாலோரது உடல்கள் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிடந்தன. சுடப்பட்டும், அடித்தும், வெட்டியும் கொல்லப் பட்டிருக்கிறார்களென்பது தெரிந்தது. கரையொதுங்கிய உடல்களில் பசித்த தெரு நாய்கள் பற்கள் பதித்த காட்சியை காணப் பொறுக்க வில்லை. பாலத்தைக் கடந்து அங்கிருந்து இராணுவ முகாம் வாயிலருகே நடந்தோம். ""புலி தனியா பிரிஞ்சு வாங்கோ... பொது மக்கள் தனியா பிரிஞ்சு போங்கோ...'' என்று கொச் சைத் தமிழில் சிங்களன் அறிவித்துக் கொண்டிருந் தான். அச்சத்தின் மின்னல் பிடரியில் பாய்ந்தது. அருகி லிருந்த மக்கள் விரக்தியோடு முணுமுணுத்தார்கள். ""இனி அவன் ஆட்சிதானே... இதுக்குப் பயந்துதானே புலியளோட ஓடி வந்தம்... பல நாட்கள் அணு அணுவாய் சாவதிலும் பார்க்க புலியளோட அங்க நின்டு கௌர வமா செத்திருக்கலாம்...'' என்றெல்லாம் பேசிக் கொண்டே பிரிந்தார்கள். என் மனைவி, பிள்ளை உறவுகள் எப்படியேனும் உயிர் தப்பியிருப்பார்கள் என்ற நம்பிக்கையில் நானும் நடந்து கொண்டிருந்தேன்.

இரண்டு பக்க கம்பி வேலிக்கு நடுவே மூன்று லட்சம் மக்கள் ஊர்ந்தோம். கம்பி வேலிக்கு மறுபுறத்தில் இருந்து நாக்கு நனைக்க ஒரு முடறு தண்ணீர் கொடுத் தார்கள். ஐம்பதாயிரம் பேருக்கு எனச் சொல்லப்பட்ட கம்பிவேலி முகாமுக்குள் அத்தனை பேரையும் அடைத் தார்கள். சுற்றிலும் சுடும் நிலையில் ராணுவத்தினர். ஒரு சிலர் தமிழ் கதைத்தார்கள். அவர்களில் ஒருவ னிடம் மெல்லச் சென்று கேட்டேன். "என் உறவுகளைக் காணவில்லை, தேடிப் பார்க்கலாமா?' என்று. ""கம்பி வேலிக்குள் மட்டும் தேடிப் பாருங்கள். வெளியே போற வங்களை சுடச் சொல்லி உத்தரவு'' என்றான் அவன். தொடர்ந்து பேசிய அவன், ""இவ்வளவு பேரும் எங்க இருந்தீங்கள்... ஐம்பதாயிரம் பேர் என்றுதானே நினைத் தோம்'' என்று வியப்பாகக் கேட்டான். நான் சொன் னேன், ""ஐம்பதாயிரம் பேர் வரை செத்துவிட்டார்கள். நாங்கள் பங்கரில் இருந்து தப்பி வாறம்'' என்றேன். "பங்கருக்குள் இத்தனை நாள் எப்படி இருந்தீர்கள்?' என்று மேலும் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான். அவனோடு பேசிக்கொண்டிருந்தபோது வேறொரு ராணு வக் கூட்டத்தினர் பொதியுணவு கொண்டு வந்தார்கள்.

இருந்தது மூன்று லட்சம் மக்கள். அவர்கள் கொண்டு வந்ததோ சுமார் 3000 உணவுப் பொதிகள். எப்படி பங்கீடு செய்வதென்று தெரியாமல் நாய்களுக்கு எலும்புத் துண்டுகளை வீசுவது போல் கம்பிவேலிக்கு வெளியே நின்று கொண்டு மக்கள் கூட் டத்தினர் மீது கேவலச் சிரிப் புடன் வீசி எறிந்தார்கள். ஏதோ எறிபந்து விளையாடுவதுபோல் மேலும் மேலும் எள்ளி நகையாடிச் சிரித்துக்கொண்டே எறிந்தார்கள். தமிழரின் இயலா மை அவமானக் களத்தில் அவர்களின் அரை மணி நேர விளையாட்டு முடிந்தபோது, சில வயது போன வர்களும் எட்டுப் பத்து சிறுவர்களும் நெரிசலில் சிக்கி மூச்சடங்கிப் பிணங்களாய் கிடந்தார்கள். கைக்குழந்தையுடன் உணவுப் பொட்டலம் கிடைக் காதா எனச்சென்ற தாய் மூச்சுத் திணறி இறந்து போன குழந்தையுடன் திரும்பியதும், "பசிக்குது, ஒரு பார்சல் குடுங்கோ' என்று கூவிக் கேட்டுக்கொண்டே நெரிசலில் குரலடங்கிப் போன சிறுவர்களும், தண் ணீராவது தாருங்கோ எனக்கேட்டு மிதியுண்டு மடிந்த முதியவரும் அன்றைய நாள் எமது வரலாறு சந் தித்த பேரவலத்தின் பதிவு செய்யப்படாத சாட்சிகள்.

வாகனத்தில் ஏற்றுவதற்காக கம்பி வேலிக் குள்ளிருந்து வரிசை பிடிக்கச் சொன்னார்கள். அதற்குள்ளாகவே காட்டிக் கொடுக்கும் சிலரை சிங்களம் விலைக்கு வாங்கியிருந்தது. அந்தக் கேவலப் பிறவிகள் தங்களுக்கு தனிப்பட்ட முறையில் பிடிக்காத, பக்கத்து வீட்டுக்காரர்களையெல்லாம் கூட "புலிகள்' என்று கை நீட்டிக் காட்ட ராணுவத் தினர் தனியாக அவர்களைப் பிடித்துச் சென்றனர். தமிழன் வீழ்ந்ததும் வீழ்வதும் காட்டிக் கொடுக்கும் எட்டப்பர்களாலென்பது மீண்டும் ஒருமுறை வேதனை யோடு அங்கே அரங்கேறிக் கொண்டிருந்தது. 

எம் தேசியத் தலைவர் அடிக்கடி இரண்டு விஷயங்களைச் சொல்வார். ஒன்று, ""நேர்மையான வர்கள்போல நடிப்பவர்களைவிட நேர்மையானவர் களாக இருப்பவர்களைத்தான் எனக்குப் பிடிக்கும்'' என்பது. இன்னொன்று ""எதிரிகளைவிட துரோகி களே ஆபத்தானவர்கள்'' என்றும் அவ்வப்போது நினைவுபடுத்துவார். நடைமுறை ஒழுங்குகளில் தமிழ் சமூகம் மீது தலைவர் காட்டிய இறுக்கத்திற்கு காரணமும் இந்த இனத்தின் மோசமான துரோகக் குணங்களை அவர் உள்ளார அறிந்திருந்த காரணத்தினால்தான்.

அந்த இடத்தில், அந்த கணத்தில் இப்போது சிங்கள ஆமிக்காரனைவிட அடை யாளம் காட்டிக் கொடுத்துக் கொண்டிருந்த எம் இனத்துக் கூலிகள்தான் அதிக அச்சத்தை தந்தார்கள்.

உடல் சோதனைக்கு ஒவ்வொருவரும் உள்ளாக்கப்பட்டோம். காட்டிக்கொடுக்கும் துரோகக் கூலிகள் நின்ற இடத்தைக் கடந்து உடல் சோதனைக்குப் போனேன். கட்டிய கோவணத்தையும் அவிழ்த்துப்போட்டு பரி சோதித்தார்கள். எனக்குள் கொலைவெறி ஆவேசம். அடக்கிக்கொண்டேன். என்றேனும் எம் தேசியத்தலைவன் மீண்டும் அழைப்பு விடுத்தால், அல்லது தகுதியானதோர் விடுதலை தலைமை எமக்குத் தெரிகின்ற நாளில் அவன் சொல்லும் திசையில் இலக்கு நோக்கி நகர இந்த உயிர் இப்போதைக்கு இருக்கவேண்டுமென்ற வைராக்கியத்தில், வந்த ஆவேசத்தையெல்லாம் அடக்கிக்கொண்டேன். இங்கே எழுத முடியாத ஒரு கெட்ட வார்த் தையை மட்டும் பம்பலாய் வாயில் முணுமுணுத் தேன். சோதனையெல்லாம் முடிந்து ஒருவழியாய் பேருந்தில் ஏறியபோது மே-18 முற்பகல் ஆகியிருந்தது. முல்லைத்தீவிலிருந்து வவுனியா செட்டிக்குளம் வதை முகாம் நோக்கி பேருந்து புறப்பட்டது. 

எங்கு கொண்டுபோகிறார் களோ, என்னவெல் லாம் நடக்கப் போகிறதோவென்ற பதற்றம். பேருந்தின் பின்கதவு அடைக் கப்பட்டு முன் கதவில் இரண்டு ராணுவத் தினர் சுடும் நிலை யில் கொடூர முக பாவத்தோடு எம்மை அவதானித்துக்கொண்டிருந்தனர். நூற்றுக்கணக்கான பேருந்துகள் ஓமந்தை சோதனைச் சாவடிக்குமுன் நின்று நகர்ந்தன. 2006 வரை இந்த சோதனைச் சாவடி புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது. புலிகள் தமது குடிவரவு (Immigration) மற்றும் சுங்கம் (Customs)பிரிவினரை உருவாக்கி முதலில் அமர்த்திய இடம் இது. இன்றோ எல்லாம் சூன்யமாகிப்போன உணர்வு உயிரைப் பிழிந்தது.

இன அழித்தலின் அடுத்த கட்டம் ஓமந்தையில் ஆரம் பித்தது. ""புலியாக இருந்தவர்கள் அனைவரும் தனியாகப் பதியவும்'', ""ஒருநாள் பயிற்சி எடுத் திருந்தாலும் தனியாகப் பதியவேண் டும்'', ""எல்லைப்படை பயிற்சி எடுத்தவர் களும் பதியவேண்டும்'', ""எங்களுக்கு எல்லாம் தெரியும், பொய் சொல்லி பதிவு செய்தால் தப்பிக்க முடியாது -மரணம்தான்'' என்றெல்லாம் அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

பதிவு செய்துவிட்டவர்களெல்லாம் ஒருபுறமாய் கூடி கதைத்துக்கொண்டிருந்தபோதுதான் அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியில் எம் தலைவன் வீரமரணம் செய்துவிட்டான் என்ற செய்தியைக் காட்டினார்கள். என் சுவாசம் நின்றது. இதய நாடிகள் ஒடுங்கின. என்னையு மறியாது கண்களில் நீர். பின்னோக்கி நினைவுகள் ஓடின. 1989-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். இந்தியப்படைகள் எம் தலைவனை சுற்றி வளைத்து "சதுரங்கம் 1,2,3 (Operation Checkmate) என பெயரிட்டு நின்றபோது மண லாற்றுக் காட்டில் நிலை தடுமாறாது, அருகில் போராளிகள் கொள்கலன்களில் உயர்ரக பெட்ரோல் சுமந்துகொண்டே சண்டையிட்ட அந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. "உயி ரற்ற என் உடலோ, சாம்பலோகூட அந்நியப் படைகளிடம் கிடைக்கக்கூடாது' என்று உடன்நின்ற போராளிகளுக்கு உத்தரவிட்டுத்தான் சண்டை புரிந்துகொண்டிருந்தார் எம் தலைவன். போர்க்களத்தில் தன்னையே கொடையாக் கும் அக்கினியாய் நின்றுகொண்டுதான் அன்று எம்மை வழிநடத்தினார் அவர். உன்னிப்பாக தொலைக்காட்சியில் காட்டப்பட்ட உடலையும் தலையையும் பார்த்தேன். நிச்சயமாக முகமும் தலையும் எம் தலைவனுடையதல்ல என்பது தெரிந்தது. முற்றுகை வளையத்திற்குள் சிக்கியிருந்தாலும்கூட எம் தலைவன் எதிரிக்கு நெருப்பாய், புயல்காற்றாய் தான் இருப்பார்.

(நினைவுகள் சுழலும்) 

 

மூலம்:நக்கீரன்

StumbleUpon.com Read more...

காலத்தை தவறவிட்டால் வரலாறு எம்மை மன்னிக்காது

>> Thursday, August 27, 2009

 
தமிழ் மக்களுக்கு எதிராக சிறீலங்கா அரசு மேற்கொண்டுவரும் தொடர்ச்சியான இன அழிப்பின் கோரத்தாண்டவம் ஒன்றை பிரித்தானியாவின் சனல் போஃர் தொலைக்காட்சி நிறுவனம் துணிச்சலாக வெளிக்கொண்டு வந்துள்ளது.

சிறீலங்காவில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பே இந்த காணொளியை வெளியிட்டிருந்தது. அதனை பிரித்தானியா தொலைக்காட்சி துணிச்சலாக உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. இந்த நவீன உலகில் காண்பவர்கள் கண்கலங்கி போகும் அளவிற்கு நிர்வாணமாக இழுத்து வரப்படும் இளைஞர்கள் ரீ-56 ரக துப்பாக்கிகள் மூலம் மிக அருகில் வைத்து தலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் மனித மனங்களை உலுக்கியுள்ளது.

இந்த படுகொலையானது இந்த வருடத்தின் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழப்பகுதிகளில் இருந்து இராணுவத்தினரால் வெள்ளை வானில் கடத்தப்பட்டவர்கள், கைதுசெய்யப்பட்டவர்களே பெருமளவில் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர் என்பது தெளிவானது.

தொழில்நுட்ப வசதிகள் குறைந்த முன்னைய காலங்களில் உலகில் நடைபெற்ற படுகொலைகளுக்கான ஆதாரங்களை சேகரிப்பது கடினமானது. ஆனாலும் கூட ஆதாரங்களை தேடி கண்டறிந்து மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை தண்டித்த இந்த ஜனநாயக உலகம் மிருகங்களை போல வெட்ட வெளிகளுக்குள் இழுத்து வரப்பட்டு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கான பல ஆதராங்கள் கிடைத்துள்ள நிலையில் என்ன நடவடிக்கையை எடுக்கப்போகின்றது?

சிறீலங்கா அரசு மேற்கொண்ட போர் குற்றங்கள் பலவற்றிற்கான ஆதாரங்களை மேற்குலக ஊடகங்கள் துணிச்சலாக வெளியிட்டு வரும் நிலையில் ஐ.நாவையும், மனித உரிமைகள் மீது சிறிதளவேனும் நம்பிக்கை கொண்டுள்ளமேற்குலக நாடுகளையும், அனைத்துலக மனிதாபிமான அமைப்புக்களையும் நோக்கி நாம் மிகப்பெரும் அழுத்தங்களை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

சிங்கள இனவெறியர்களின் இந்த கோரத்தாண்டவத்தையும், ஆதரவற்ற நிலையில் அனாதரவாக செத்துவிழும் தமிழ் மக்களின் தலைவிதியையும் வெளிக்கொண்டுவந்துள்ள இந்த காணொளி படத்தை உலகில் உள்ள ஒவ்வொரு தமிழ் மகனும் பார்க்க வேண்டும்.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இதனை பார்க்கவேண்டும். முடிந்தால் உலகத்தின் அத்தனை மனித குலங்களும் இதனை பார்க்கவேண்டும் அதற்கான வழியை நாம் ஏற்படுத்த வேண்டும். தமிழ்நாட்டில் எத்தனையோ பல ஊடகங்கள் உள்ள நிலையில் அவை தமிழ் இனத்தின் பேரவலம் தொடர்பாக தனித்துவமாக செய்திகளை சேகரித்து போட முடியாத நிலையில் மேற்குலக ஊடகங்கள் தமிழ் மக்களின் பேரவலங்களை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவருவது மிகவும் போற்றத்தக்கது.

தமிழக தொலைக்காட்சிகள் களிப்பூட்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பில் எம்மை ஒரு மயைக்குள் தள்ளிவருகையில் மேற்குலகம் எமக்காக குரல்கொடுப்பது எமக்குள் ஒரு சிறிய நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தி வருகின்றது.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலகில் பரந்து வாழும் அத்தனை தமிழ் மக்களும் ஒன்று திரண்டு போராடுவதற்கு தேவையான ஆதாரங்களை மேற்குலக ஊடகங்கள் மெல்ல மெல்ல வலுப்படுத்தி வருகின்றன. ஆனால் அதற்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டிய கடமை எம்மிடம் தான் உண்டு.

தமிழ் இன அழிப்பில் ஈடுபட்ட படை அதிகாரிகளை வெளிநாடுகளில் தூதுவர்களாக நியமிப்பதன் மூலமும், அவர்களை ஐ.நா சபைக்கு அழைத்து செல்வதன் மூலமும் அவர்களின் மீதுள்ள குருதிக்கறைகளை சிறீலங்கா அரசு கழுவ முற்படுகின்றது. ஆனால் அதனை தடுத்து நிறுத்தி அனைத்துலக நீதிமன்றத்தில் சிறீலங்கா அரசினை நிறுத்த வேண்டிய கடமையும், அதற்கான பலமும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் மக்களுக்கு உண்டு. அதற்கான காலம் இன்னும் கடந்துவிடவில்லை.

ஆனால் காலத்தை நாம் தவறவிட்டால் வரலாறும் எம்மை ஒருபோதும் மன்னிக்கப்போவதில்லை.


source:sankathi

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழ்ப் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும்!

>> Wednesday, August 26, 2009

தமிழ்ப் புத்திஜீவிகள் சிந்திக்க வேண்டும்! – சண் தவராஜா

தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தம் என வர்ணிக்கப்பட்ட யுத்தத்தில் மிகப்பெரிய மனித அவலத்தைச் சந்தித்த சுமார் 3 இலட்சம் மக்கள் இன்று வன்னியின் வதைமுகாம்களில் அடைக்கப் பட்டிருக்கிறார்கள். பனையால் விழுந்தவனை மாடேறி மிதித்த கதைக்கு ஒப்பான வகையில் அவர்கள் அடைத்து வைக்கப்பட்டு மூன்று மாதங்கள் நிறைவடைந்தள்ள வேளையிலும் அவர்களின் மீளக் குடியேற்றம் தொடர்பிலான தீர்க்கமான நடவடிக்கை எதனையும் சிங்கள அரசாங்கம் மேற்கொள்ளவில்லை. 180 நாட்களுக்குள் அவர்களை மீளக் குடியமர்த்தப் போவதாக அறிவித்திருந்த அரசு, தற்போது அந்த அறிவிப்பிலிருந்து முற்றிலுமாகப் பின்வாங்கியிருக்கின்றது.

'உலகில் யுத்தம் நடந்த இடங்களில் பார்த்திராத அவலத்தை சிறி லங்காவில் கண்டேன்" என ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கி மூன் தெரிவித்ததன் மூலம் யுத்தத்தின் சேதாரங்கள் என்னவென்பதை அவர் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார். இது தவிர, பன்னாட்டு சுதந்திர ஊடகங்களும் அவ்வப்போது யுத்த அவலங்களையும், வன்னித் தடுப்பு முகாம்களில் அப்பாவித் தமிழ் மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகள் தொடர்பிலும் தகவல்களை வெளியிட்டு வந்தன. இந்தத் தகவல்கள் முழுமையானவை அல்ல என்பதை, சிறி லங்கா மனித உரிமைகள் சட்டத்தரணியும், இமடார் நிறுவனத் தலைவியுமான கலாநிதி நிமல்கா பெர்ணாண்டோ அண்மையில் தமிழ்நாட்டில் வைத்துத் தெரிவித்த கருத்துக்கள் உறுதிப் படுத்துகின்றன.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் பேசுகிறோம் என இதுநாள்வரை கூறி வந்த பல தமிழர்களே, இன்று வாய்மூடி மௌனிகளாக உள்ள நிலையில் தனது உயிருக்கு நிச்சயம் ஆபத்து உள்ளது என்பதை நன்கு தெரிந்து வைத்துக் கொண்டும் கலாநிதி நிமல்கா இவ்வாறு தைரியமாகக் கருத்து வெளியிட்டமைக்காக அவரை நிச்சயமாகப் பாராட்டியே ஆக வேண்டும்.

இலங்கைத் தீவிலே வாழுகின்ற தமிழர்களை சிங்களப் பேரினவாதம் திட்டமிட்டுக் கொடுமைப்படுத்தி வருகையில், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தி வருகையில், அந்தச் சமூகத்தின் மத்தியிலே இருந்து – எதுவித உள்நோக்கமும் இன்றி – இத்தகைய கருத்துக்கள் வெளிவருவது என்பது ஆறுதலான ஒரு விடயம்.

அதேவேளை, அவர் வெளியிட்ட தகவல்கள் நெஞ்சை உலுக்குவதாக அமைந்துள்ளன. குறிப்பாக, இளம் தமிழ்ப் பெண்கள் சிங்களப் படையினரின் பாலியல் பசியைத் தீர்க்கப் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தமை கண்ணில் நீரை வரவழைக்கிறது.
யுத்தம் மிகவும் உக்கிரமமாக நடைபெற்ற இவ்வருட ஆரம்பத்தில் 'தமிழ்ப் பெண்களை உங்களுக்கு இரையாக்கிக் கொள்ளுங்கள். ஆண்களை கடலுக்கு இரையாக்குங்கள்" என சிறிலங்காவின் முன்னை நாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்திருந்ததாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.

இந்தச் செய்தி உண்மையோ, பொய்யோ நாமறியோம். ஆனால், நடைபெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கும் போது சரத் பொன்சேகாவின் பாதையையே படையினர் பின்பற்றுவது தெரிகின்றது.

வன்னித் தடுப்பு முகாம்களில் நடைபெற்றுவரும் அவலம், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அந்த மக்களின் துயரம் ஒட்டு மொத்தமாக முடிவுக்குக் கொண்டுவரப்பட ஒருங்கிணைக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்தவொரு மட்டத்திலும் எடுக்கப் படுவதாகத் தெரியவில்லை. மறுபுறம், ஈழத் தமிழர்கள் மத்தியில் இருந்தும் காத்திரமாக குரல் எழுப்பப்படுவதாகவும் தெரியவில்லை.

தடுப்பு முகாம் மக்களின் துயரம் முடிவடையாத சூழலில் பருவமழை வேறு அந்த மக்களை வெகுவாகச் சோதித்து வருகின்றது. மழை காரணமாக உருவான வெள்ளத்தினால் முகாம்களுக்குள் இருக்க முடியாத நிலையில் கொட்டும் மழையிலும் வெட்டவெளியில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாக்கப் பட்டிருப்பது கொடுமையிலும் கொடுமை.

இந்த வேளையில் ஈழத் தமிழர் மத்தியில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமே இந்த மக்களின் விடுதலைக்காகத் தொடர்ச்சியாகக் குரல் தந்து வருகின்றது. இந்தக் குரலுக்கு ஆதரவாக, பின்பலமாக இருக்க வேண்டிய புலம்பெயர் தமிழர்கள் சீரான தலைமை இல்லாத நிலையில் சிதறுண்டுபோய்க் கிடக்கின்றார்கள். இந்த நிலை வெகுவிரைவில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

'எங்கள் பகைவர் ஓடி மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே" என்ற வாசகம் இன்று பொய்த்துப் போயுள்ளது. தமிழர்கள் மத்தியலே இன்று முன்னெப்போதையும் விட அதிக அளவிலான பிளவுகளும், பேதங்களும், அவநம்பிக்கையும் நிலவி வருகின்றன.

இதற்கெல்லாம் காரணம் எம் மத்தியிலே சரியான அரசியல் தலைமை இல்லாமையே.
ஆனால், மீகாமன் இல்லாத கப்பல் போன்று தமிழ்ச் சமூகம் தொடர்ந்தும் நீண்ட காலத்துக்குப் பயணிக்க முடியாது. எனவே, தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான ஒரு உறுதியான, பலமான, விவேகமான தலைமைத்துவம் அவசரமாகவும், அவசியமாகவும் கட்டியெழுப்பப்பட வேண்டும். இதில், தமிழ்ப் புத்திஜீவிகள் குறிப்பாக புலம்பெயர்ந்த நாடுகளில் வாழ்பவர்கள் அதிக கவனஞ் செலுத்த வேண்டும்

 

source:nerudal

StumbleUpon.com Read more...

எம் தமிழீழ மக்களுக்காக…..வணங்கா மண்ணிலிருந்து அடங்கா தமிழன்

ஓர் குறுகிய இடைவெளிக்குப் பின்பு உங்களை ஓர் ஒலிப்பேழயின் வழியாக சந்திப்பதையிட்டு எமது தலைவனின் வழியில் உருவான தமிழன் என்ற ரீதியில் சற்று ஆறுதல் அடைகின்றேன்.

StumbleUpon.com Read more...

கதற வைக்கும் காட்சிகள்

கப்பட்டதுண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம்.

கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித்தது. ஓவென்று அழ வேண்டும் போலிருந்தது. என் கால்கள் சிதறிக் கிடந்த தமிழர் தசைகள் மேல் பட்டுவிடக்கூடாதே என்ற பக்தியோடு தவண்டு தவண்டு நகர்ந்தேன்.

அங்குமிங்கும் சிங்களக் காட்டேறிகள் ஏவிக் கொண்டிருந்த எறிகணைகள் கூவிக் கூவிப் பறந்து பாய்ந்து கொண்டிருக்க வீதியோர மரத்தடியொன்றின் கீழ் தாயொருத்தி பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருந்தாள். அவளது கணவன் சற்று முன்னர்தான் எறிகணை வீச்சில் இறந்திருக்க வேண்டும். இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் கணவனை இறுகப் பிடித்துக் கொண்டு அந்த இளம் தாய் பிரசவ வலியில் வீறிட்டுக் கதறிய அவலத்தின் கோலத்தை எப்படி நான் மறப்பேனய்யா?

மல்ட்டிபேரல் (ஙமகபஒ இஆததஊக) எறிகணைகளின் அதிர்வில் தாயின் வயிற்றிலிருந்து குழந்தை முல்லைத்தீவு மண்ணில் விழுந்தது. குழந்தையின் காலைப்பிடித்து இழுத்து அந்தத் தாய் தன் மார்போடு போர்த்தினாள். அவ ளுக்கு உதவ உறவுப் பெண்களோ வேறெவருமோ அங்கிருக்கவில்லை. பிறந்த பிள்ளையை அணைப்பதா, அருகில் இறந்து கிடக்கும் கணவனுக்காய் அழுவதா என்று தெரியாமல் இடது கையால் கணவனின் உடலையும் வலது கையால் இப்போது பெற்ற தன் செல்வத்தையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டுக் கதறிய காட்சியை எப்படி நான் பதிவு செய்வேன்?

தன் ஆடைகளை ஒதுக்கி ஒழுங்கு செய்யும் பிரக்ஞை கூட இல்லாதவளாய் அந்தத்தாய் அழுது கொண்டிருந்தாள். உடல் சோர்ந்தவளாய் மண்தரையில் தலை சாய்ந்து படுத்தவரை மட்டும் தூரத்தில் நின்று பார்த்தேன். முதல் தாகம் தீர்க்க தாய்ப் பாலுக்காய் அக்குழந்தை வீறிட்டு அழுததையும் கண்டேன். ராஜபக்சேவும், கோத்தபய்யாவும் ரத்தமும் சதையும் சேரப் பிணம் தின்னும் கொடிய ராட்சதக் கழுகுகளாய் என் கண்முன் நின்றார்கள். நீங்கள் அழிவீர்களடா... சிங்களம் இதற்கெல்லாம் பதில் சொல்லித்தான் தீர வேண்டுமடா... என்றெல்லாம் மனது கொதித்தது.

கையறு நிலையின் கைதியாய் முன் நகர்ந்தேன். அந்தத் தாயும் பிள்ளையும் என்ன ஆனார்களோ என்று எண்ணியே பல இரவுகள் தூக்கமும் நிம்மதியும் இழந்து தவிக்கிறேன். இப்படித்தான் மே முதல் வாரம் முள்ளி வாய்க்கால் தற்காலிக வைத்தியசாலைக்குச் சென்றிருந்தேன். ஓலைக் குடிசைதான் அன்று எங்களின் அவசர மருத்துவ சேவைப் பிரிவு. குடிசையின் தாழ்வாரத்தில் குண்டுவீச்சில் தாய், தகப்பன் இருவரையும் இழந்த சுமார் ஒரு வயதுக் குழந்தை கிடத்தப்பட்டிருந்தது. அதே குண்டுவீச்சில் தன் இரு கால்களையும் இந்தக் குழந்தை இழந்திருந்தது. கிட்டப் போய் அக்குழந்தையை கண்களில் நீர் மல்கப் பார்த்தேன். குளு கோஸ் ஏற்றப்பட்டுக் கொண்டிருந்தது. குளுகோஸ் வயரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டே என்னைப் பார்த்து அக்குழந்தை சிரித்தது. நடந்த வற்றின், நடந்து கொண்டிருப்பவற் றின் கொடூரங் களும், விபரீதங் களும் அந்தக் குழந் தைக்குப் புரிந்திருக்கவில்லை. அருகில் நின்று கொண்டிருந்த மருத்துவ தாதியிடம், ""தாய், தகப்பன்...'' என்று ஆரம்பிக்கவே, ""எல்லாம் இப்போது நான்தான்'' என்று கூறியபடியே என்னை நிமிர்ந்து நோக்கி குடிசைக்கு சற்று தூரத்தில் குவியலாய் கிடந்த தமிழர் சடலங் களைக் காட்டினார். ""இதுக்குள்ளதான் இந்தக் குழந்தையிண்ட தாயும் தகப்பனும்'' என்றார்.

பெற்றோரை இழந்து, இரண்டு கால் களையும் இழந்து என்ன நடந்ததென்றே தெரியாது குளுகோஸ் ஒயரை பிடித்து விளையாடிப் புன்னகைத்த இந்தக் குழந்தையின் முகமும், சற்றுமுன் வீதியோரத்தில் பிறந்து தாயின் முதற் பாலுக்காய் வீறிட்டு அழுத அந்தப் பிஞ்சின் முகமும் என்னை விட்டு அகல மறுக்கின்றன. எனக்கு மரணம் வருகின்றவரை இந்த அவலத்தின் காட்சிகள் என்னை விட்டு நீங்குமென்றும் நான் நினைக்கவில்லை.

மனதில் வெறுப்பும், நெருப்பும் விரக்தியு மாய் -இப்படியா எங்கள் விடுதலைப் பய ணம் முடிவுறவேண்டுமென்ற வேதனையுடன் தொடர்ந்து நடக்க முயன்றேன். அவலத்தின் அடுத்த காட்சி அங்கே அரங்கேறிக்கொண்டி ருந்தது.

வீதியை விட்டு சற்று தொலை. எறிகணை விழுந்து வெடிக்கிறது. பிளிறிச் சிதறிய புழுதி அடங்கியபின் பார்க்கிறேன். மரத்தடியில் இருந்த ஒரு தமிழ்க் குடும்பம் கண்ணெதிரே கணப்பொழுதில் சிதறிக் கிடக்கிறது. எழுந்திருக்க முடியாத அளவுக்கு படுகாயமடைந்த தகப்பனின் கால்களும் கைகளும் விட்டுவிட்டுத் துடிப்பது மட்டும் தெரிகிறது. எறிகணை விழுந்தபோது அந்தத் தாய் தன் பிள்ளைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்திருக்கிறாள். குழந்தையை இறுக அணைத்தபடியே அத்தாய் சிதைந்துபோய் உயிர் பிரிந்து கிடக்கிறார். அவளது இடதுபுற மார்பில் ஷெல் குண்டு பாய்ந்து சிதைத்திருக்கிறது. இப்போதும் கொடூரத்தின் கொலைவெறி புரியாத அப்பிஞ்சுக் குழந்தை தாயின் வலதுபுற மார்பை பாலுக்குத் தேடுகிறது.

பக்கத்தில் ஓர் சிறுமி நான்கு வயது இருக்கலாம், முந்திய பிள்ளையாக இருக்கக் கூடும். அந்தப்பிள்ளை கையில் ஓர் தட்டுடன் "அம்மா பசிக்குது... அம்மா பசிக்குது...' என்று அழுதுகொண்டிருந்தது. தகப்பனுக்கு அருகில் பையன். சுமார் ஆறு வயது இருக்கலாம். ""அப்பா... எல்லாரும் போகினும் வாங்க, போவோம் ஆமி வறான், எழும்புங்கோ அப்பா... தண்ணீர் விடாக்குது... கெதியா எழும்புங்கோ அப்பா...'' என்று குளறிக்கொண்டிருந்தான்.

நின்று நிதானித்து அங்கு என்னதான் நடந்துகொண்டிருக்கிறதென்று சிந்திக்கிற நிலையிலோ, ஒருவருக்கொருவர் உதவும் நிலையிலோ ஒருவருக்கொருவர் ஆறுதல் சொல்லும் நிலையிலோ எவரும் இருக்கவில்லை. எங்கும் மரணம் வெறியாடிக்கொண்டிருந்தது. ஈவிரக்கம் ஏதுமின்றி இன அழித்தலின் இறுதி காட்சி அரங்கேறிக்கொண்டிருந்தது. மரணத்தின் நிலமாய் தமிழ் ஈழம் நின்றது. இறந்து கிடந்த தாயின் மார்பில் பால் முகர்ந்து தேடிய அப் பச்சிளங்குழந்தை எமது அவலநாளின் அழியா காட்சியாய் காலம் முழுதும் நிற்கும்.

தொடர்ந்து நகர்ந்தேன். தேசியத் தலைவர் அடிக்கடிச் சொல்வாரே... ""அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பிக் கொடு'' என்று... அப்படிச் சொன்னதோடு நிறுத்தாமல் சிங்களனுக்கும் நாங்கள் இப்படி ஈவிரக்கமின்றிக் கொடுமை செய்திருந்தால் ராஜபக்சேவும் கோத்தபய்யாவும் இந்த வெறியாட்டம் ஆடியிருக்கமாட்டார்களே... என்றெல்லாம் மனது எண்ணியது. முன்பொருமுறை சட்டக்கல்லூரி உரையொன்றில் தந்தை செல்வநாயகம் சொன்னாரே... ""தமிழ் மக்களுக்கு எதிர்காலத்தில் எவ்வித பாதுகாப்பும் இருக்காது -கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்...'' என்று, ஆம் கடவுளும் எம்மைக் கைவிட்ட நாளில் நா வறண்டு நடந்துகொண்டிருந்தோம். தமிழனாய் பிறந்ததையிட்டு என்னை நானே சபித்துக்கொண்டேன். உலகத்தின் சகலர் மீதும் கோபமாய் வந்தது. மீண்டும் முன்பு நான் குறிப்பிட்ட உணர்வு... : ""ஐயா, ஒபாமாவே... கடைசி நம்பிக்கையாய், நீங்கள் ஏதாவது செய்வீர்களெனக் காத்திருந்தோமே... வானில் வந்த ஒவ்வொரு விமானத்தையும் பார்த்திருந்தோமே... ஏமாற்றி விட்டீர்களே....'' என்று மனம் புலம்பியது.

(நினைவுகள் சுழலும்)


source:nakkheeran

StumbleUpon.com Read more...

இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-video

>> Tuesday, August 25, 2009


இன்று பிரித்தானிய சனல் 4 தொலைக்காட்சியில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் உள்ள இராணுவ வதைமுகாமில், உடம்பில் ஒட்டுத்துணி கூட இல்லாத நிலையில் தமிழ் இளைஞர்களை நிர்வானமாக்கி, தலையில் சுடும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அதிர்ச்சியான இந்த புகைப்படங்களும் காணொளிகளும் எவ்வாறு வெளிவந்தன என்று தொலைக்காட்சி சித்தரித்துள்ளது.

கண்கள் கட்டப்பட்டுள்ள நிலையில், பூட்ஸ் காலால் உதைத்து பின்னர் தமிழ் இளைஞரைச் சுடும் காட்ச்சியைப் பார்த்தும் நாம் சும்மா இருந்துவிட முடியுமா ? சாகப் போகிறோம் என்று தெரிந்து ஒன்றும் பேசாமல் நிசப்தமாக நிற்கும் ஒரு நிராயுதபாணியை சிங்கள அரக்கன் கொல்கிறானே. இரண்டாவதாகச் சுடப்படும் தமிழ்ச் சகோதரன் எந்தப்பக்கத்தில் இருந்து வெடிவெடித்து சன்னம் பாயப்போகிறது என்று தெரியாமல் தலையை அங்கும் இங்குமாக அசைக்கிறான் , அவன் நிலையைச் சற்றி நினைத்துப்பாருங்கள் தமிழர்களே ! இனியும் நாம் சும்மா இருக்க முடியுமா ? இதற்கான பதிலடியை நாம் எப்போதுகொடுக்கப்போகிறோம்.

தமிழர்கள் மீது இனப்படுகொலை நடக்கவில்லை என வாய்கிழிய குரல்கொடுத்துவரும், இலங்கை-இந்திய அரசுகள், மற்றும் அதன் நேச நாடுகள் வெட்கி நாணும் வகையில், இலங்கை இராணுவம் அரக்கத்தனமான காரியங்களில் ஈடுபடுகிறது. ஈராக்கில் பக்தாத் சிறையில் அமெரிக்க துருப்புக்கள் இவ்வாறு ஈராக்கியர்களைக் கொன்றுகுவித்தது.

ஆனால் பின்னர் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டார்கள், இலங்கைத் தீவில் நடப்பதை எந்த வெளிநாடுகளும் பாராமுகமாக இருக்கின்றன. அங்கே எம் தமிழ் உறவுகள் நாளுக்கு நாள் செத்துமடிந்தவண்ணம் உள்ளனர். தமிழ் இளைஞர்கள், மற்றும் யுவதிகளைக் முழு நிர்வாணமாக்கி கண்ணைக் கட்டி துப்பாகியால் ஈவிரக்கமின்றி சுடும் சிங்கள அரக்கர்களுடனா நாம் இனிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடப் போகிறோம்.

எம் இனம் அங்கே சிறுகச் சிறுக வெளியுலகிற்குத் தெரியாமல் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதே யதார்த்தம்.

புலம்பெயர் தமிழர்களே சிந்தியுங்கள் ! இனி நாம் என்னசெய்யப்போகிறோம் என்று.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails