சமீபத்திய பதிவுகள்

விண்கற்களில் தண்ணீர் : நாஸா கண்டுபிடிப்பு

>> Friday, May 7, 2010

  

Tamil news paper, Tamil daily news  paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political  news, business news, financial news, sports news, today news, India  news, world news, daily news update

விண்கற்களில் தண்ணீர் இருப்பதை அமெரிக்காவின் நாஸா விண்வெளி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.  சூரியனைச் சுற்றிவரும் கோள்களைத் தவிர ஏராளமான விண்கற்களும் வான்வெளியில் சுற்றி வருகின்றன. இவற்றில் பல கற்கள் ராட்சத அளவில், அதாவது 200 கிலோ மீட்டருக்கு மேல் அகலமாக இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

அந்தக் கற்களை அமெரிக்காவின் நாஸா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். ஹவாய் தீவில் ராட்சத டெலஸ்கோப்பை அமைத்து அதன் மூலம் இந்த கற்களை அவர்கள் ஆய்வு செய்தனர்.
ஆய்வின் போது, அந்தக் கற்களில் தண்ணீர் இருப்பது தெரிய வந்தது. உறைந்த நிலையில் அவற்றின் மேல் பகுதிகளில் தண்ணீர் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றது.

தண்ணீர் இருப்பதால் அவற்றில் உயிரினங்கள் வாழவும் வாய்ப்பு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. அதுபற்றியும் தற்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். நிலவில் தண்ணீர் இருப்பதை இந்தியாவின் சந்திராயன் ஓடம் கண்டுபிடித்தது.

அதே போன்று சூரியனைச் சுற்றி வரும் பல்வேறு கோள்களிலும் தண்ணீர் இருக்கிறதா என்று விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருந்தனர். அதன் போதே விண்கற்களில் தண்ணீர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. .


source:dinakaran

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

எதுவும் எனக்கு கவலையில்லை

StumbleUpon.com Read more...

முள்ளிவாய்க்கால் முடிவல்ல:நேர்காணல்

StumbleUpon.com Read more...

“போதை” லேகியம்:கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண்கள் மயக்கம்

"போதை" லேகியம் சாப்பிட்டதால் கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண்கள் மயக்கம்; டி.வி.யில் மீண்டும் ஒளிபரப்பியதால் பரபரப்பு

நகரி, மே. 7-
 
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதய்ய பாளையம் அடுத்த பத்தூர் வல்லம் பகுதியில் அமைந்துள்ளது கல்கி பகவான் ஆசிரமம். இங்கு கல்கி பகவானாக இருப்பவரின் உண்மையான பெயர் விஜயகுமார். இதற்கு முன்பு இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்தார். இவரது மனைவி புஜ்ஜம்மா. இவர் தற்போது தனது பெயரை அம்மா பகவானாக மாற்றிக்கொண்டு பத்மாவதி தாயாரின் அவதாரம் என்று கூறி வருகிறார்.
 
இந்த 2 பகவான்களையும் வழிபட தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவைச் சேர்ந்த பக்தர்கள் செல்கிறார்கள். இங்கு வரும் பெண் பக்தர்கள் போதை பிரசாதம் கொடுத்து கற்பழிக்கப்படுவதாக கடந்த மாதம் ஆந்திர மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
 
மேலும் அங்கு போதையில் பெண்கள் ஆட்டம் போடுவது ஏ.பி.என். தெலுங்கு டி.வி.யில் ஒளிபரப்பானது. இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் ஏ.பி.என். டி.வி.யில் நேற்று இரவு கல்கி பகவான் ஆசிரமத்தில் பெண்களுக்கு "போதை" லேகியம் கொடுக்கப்படும் காட்சிகள் மீண்டும் ஒளிபரப்பானது. அதில் பெண்கள் போதை லேகியம் சாப்பிட்டதும் ஆட்டம் போடுவதும் பின்னர் மயங்கி விழுவதுமாக இருந்தனர்.
 
முதன் முதலாக இந்த லேகியம் சாப்பிடுவோரின் வாயில் இருந்து நுரை தள்ளுகிறது. அவர்களை அங்குள்ள ஊழியர்கள் (தாசாஜிக்கள்) தூக்கிச் சென்று தண்ணீர் தெளிக்கிறார்கள். ஆனாலும் போதை லேகியம் சாப்பிடுவதால் 24 மணி நேரம் கழிந்தே அவர்கள் விழிக்கிறார்கள். இக்காட்சிகளை பார்த்த ஆந்திர மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.
 
கல்கி பகவான் ஆசிரமத்தில் பணியாற்றிய சாந்தி என்பவர் கூறும்போது, நான் கடந்த சில ஆண்டுகளாக கல்கி பகவான் ஆசிரமத்தில் தாசாஜியாக (தன்னார்வ ஊழியர்) பணியாற்றினேன்.
 
அப்போது ஆசிரமத்திற்கு வரும் ஆண்-பெண்களிடம் ராமகிருஷ்ணன பரமஹம்சர், மீராபாய், ரமணமகரிஷி போல் முக்தி அடைய ஆசைப்படுகிறீர்களா? என்று விஜயகுமார் (கல்கி பகவான்) கேட்பார். முக்தி அடைய விரும்பும் பக்தர்களுக்கு போதை கலந்த லேகியத்தை கொடுக்கச் சொல்வார்.
 
அந்த போதை லேகியத்தை சாப்பிடும் அனைவரும் 24 மணி நேரமும் மயக்க நிலையில் இருப்பர். அப்போது அவர்களுக்கு என்ன நடக்கிறது என்றே தெரியாது. சில பெண்கள் அரை நிர்வாண கோலத்தில் ஆட்டம் போடுவார்கள். அதை விஜயகுமார் பார்த்து ரசிப்பார்.
 
மயக்க நிலையில் உள்ள பெண்களை ஆசிரம நிர்வாகிகள் சிலர் ரகசிய அறைகளுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருப்பர்.
 
இதன் காரணமாக ஏராளமான பெண்கள் கர்ப்பமாகி உள்ளனர். அவர்களுக்கு ஆசிரமத்தில் வைத்தே கருக்கலைப்பு செய்யப்பட்டுள்ளது. இது அங்குள்ள ஊழியர்களுக்கு நன்றாகத் தெரியும்.
 
இந்த ஆசிரமத்தில் நடைபெறும் கொடூர சம்பவங்கள் பற்றி போலீஸ், மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் குற்ற வாளிகள் சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறார்கள்.
 
போதை லேகியம் கொடுத்து ஏராளமான பெண்களை சீரழித்து வரும் விஜயகுமார், புஜ்ஜம்மா (அம்மா பகவான்) மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
கல்கி பகவான் ஆசிரமத்தில் முக்திக்காக கொடுக்கப்படும் லேகியம் சாப்பிட்டபலர் வயிறு சம்பந்தமான நோய், மஞ்சள் காமாலை, சிறுநீரக கோளாறால் அவதிப்படுகிறார்கள். அவர்களுக்கு ஆசிரமம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.
 
இவ்வாறு அவர் கூறினார்.
 
கல்கி பகவான் மீது நடவடிக்கை எடுக்காத முதல்வர் ரோசையாவை கண்டித்து மகளிர் அமைப்புகள், பொது நல அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன. பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள இந்த திடீர் கொந்தளிப்பால் கல்கி ஆசிரம நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்

source:maalaimalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

யு-ட்யூப் ஐந்தாவது ஆண்டு விழா


 
 

இன்று வீடியோக்களுக்கென தனித் தளமாய் அனைவரின் விருப்ப தளமாக இயங்குவது யு–ட்யூப். இதில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகப் பதிவு செய்து, தங்களின் வீடியோ காட்சியைப் பதிவு செய்து, உலகம் அறியத்தரலாம்; அல்லது தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் பார்க்கத் தரலாம். முதல் முதலில், இதில் ஒரு வீடியோ பைலைப் பதிந்தவர் யு–ட்யூப் தளத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜாவர் கரிம் என்பவர். 'Me at the Zoo'  என்ற 19 விநாடிகள் ஓடும் வீடியோ பைல் ஒன்றை இந்த தளத்தில் ஏப்ரல் 23 அன்று பதிந்தார். சென்ற வாரம் இதன் ஐந்தாவது ஆண்டுவிழா நிறைவேறியது. தான் சாண்டியாகோ விலங்கியல் பூங்கா சென்று வந்த நிகழ்வினைப் படமாக எடுத்து இத்தளத்தில் பதிந்து, இத்தளத்தின் முதல் பயனாளராகவும் மாறினார். இதன் பின் பல லட்சக்கணக்கான வீடியோ பைல்கள் இதில் பதியப்பட்டு, இன்று பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது யு–ட்யூப் தளம். திரைப்படங்கள் தயாரிப்பவர்கள் கூட இதில் தங்கள் பட பைல்களைப் பதிந்து, இலவசமாகவும் கட்டணம் செலுத்திப் பார்க்கும் வகையிலும் தர முன்வந்துள்ளனர். யு–ட்யூப் தளமும் அண்மையில் அமெரிக்கா நாட்டில் மட்டும், கட்டணம் செலுத்தி வீடியோ பைல்களை வாடகைக்கு விடும் திட்டத்தினை இந்த தளத்தில் ஆரம்பித்துள்ளது.
தொடர்ந்து அனைத்து நாட்டிற்கும் இது விரிவாக்கம் செய்யப்படுமானால், தியேட்டர்களில் சென்று படம் பார்க்கும் கூட்டம் குறையலாம். ஐந்தாவது பிறந்த நாளைக் கொண்டாடிய யு–ட்யூப் தளத்திற்கு நாமும் வாழ்த்துக்களைக் கூறுவோம்.


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கருங்கல்லில் இங்க் பேனா : நாமக்கல் சிற்பி சாதனை

 
 

Human Intrest detail news

நாமக்கல்:ரெட்டிப்பட்டியை சேர்ந்த சிற்பி ஒருவர் ஒரே கல்லில் பேனா வடிவமைத்து, அதில், இங்க் நிரப்பி எழுதியும் வருகிறார்.நாமக்கல் ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் சிற்பி ஜெகதீசன். இவர் கல்லில் பல்வேறு வடிவங்களை வடித்து சாதனை படைத்துள்ளார். முதலில் ஒரே கல்லில் ஆறு கன்னிகள் கொண்ட கற்சங்கிலி வடிவமைத்தார். பின், ஒரே கல்லில் 42 கன்னிகள் கொண்ட கற்சங்கிலியும், நகரும் கல்தேர் போன்றவற்றை வடிவமைத்தார்.அடுத்த கட்டமாக, கருங்கல்லில் பேனா வடிவமைத்து, அதில் எழுதி வருகிறார்.

இதுகுறித்து சிற்பி ஜெகதீசன் கூறியதாவது:நானும், எனது சகோதரரும் சிற்பத் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். சிற்பத்தொழிலுக்கு புதிய பரிமாணம் கொடுக்கும் வகையில், பல்வேறு புதிய சிற்பங்களை வடிவமைக்கிறோம். கல்லால் ஆன கற்சங்கிலி, நகரும் தேர் போன்றவற்றை வடிவமைத்தோம்.தற்போது கல்லால் ஆனா பேனா செய்துள்ளோம். அந்த பேனா 150 கிராம் எடை கொண்டது. பேனா முள், கழுத்து, இங்க் நிரப்பும் பகுதி, மூடி என ஒவ்வொன்றும் தனித்தனி கல்லால் செய்யப்பட்டது. ஒரு கிலோ எடை கொண்ட கல் 150 கிராம் போனாவாகி உள்ளது.மற்ற பேனாவைப் போல், இதில் இங்க் நிரப்பி எழுதமுடிகிறது. ஒரே நாளில் இந்த பேனா வடிவமைக்கப்பட்டது. பேனாவில் முள்ளுக்கு இங்க் வருவதற்காக உலியால் கீரப்பட்டுள்ளது. மற்றப் பேனாவைப் போல் இதில் அற்புதமாக எழுத முடிகிறது, என்றனர்.


source:dinamalar--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP