சமீபத்திய பதிவுகள்

உங்கள் அறிக்கை மழையை சற்று நிறுத்த முடியுமா ஜெகத் காஸ்பர் அவர்களே

>> Thursday, October 8, 2009

ஜெகத் காஸ்பர் அவர்களே சற்று நிறுத்த முடியுமா உங்கள் அறிக்கை மழையை

 

"சஞ்சனா அனுபம்" என்ற தலைப்பில் நக்கீரனில் மீண்டும் உங்கள் அறிக்கை மழை எம்மையெல்லாம் நனைத்து நிற்கிறது. தடிமன் காச்சல் வராத குறைதான். சூறாவழி, புயல்காற்று எல்லாம் ஓய்ந்த பின்னரும் உங்கள் அறிக்கை மழை மட்டும் இன்னமும் ஓயவில்லை. சிலர் பரபரப்புச் செய்தியை வெளியிட்டு பணம் சம்பாதிப்பார்கள், ஆனால் பணம் சம்பாதிக்க பரபரப்புச் செய்திகளை உங்களை வைத்து உருவாக்குகிறார்கள் நக்கீரன் பதிப்பகத்தினர். 

உங்கள் கட்டுரைகளை கடந்த 5 மாதங்களாகப் படித்துவருகிறேன். மே மாதம் 18ம் திகதிக்குப் பின்னர் உக்கிரமடைந்துள்ள நீங்கள், பிரபல்யமாவதற்கும், பணம் சம்பாதிக்கவும் எமது உன்னத விடுதலைப் போராட்டமா கிடைத்தது ?. நீங்கள் ஈழத்திற்குச் சென்றிருந்தபோது வெரிடாஸ் வானொலியின் அறிவிப்பாளர் என்ற வகையில் ஒரு மரியாதையின் நிமிர்த்தமாக தேசிய தலைவர் உங்களுடன் 6 நிமிடம் பேசினார். அப்போது அங்கு நின்றிருந்தவன் நான். ஆம் அதே நீல நிற ஆடையில். 

நலம் விசாரித்த தலைவரிடம், உங்களை அறிமுகப்படுத்தி அங்கிருந்து அகன்றீர்கள். பின்னர் கிடைத்த ஈழத்து நட்புகள் அவர்கள் ஒவ்வொருவரும் சொல்லும் செய்திகளை சேகரித்து, உங்கள் அனுபவமாக அல்லவா வெளிவிடுகிறீர்கள். இதில் கொடுமையான விடையம் என்னவென்றால் நான் உங்களுக்குச் சொன்ன செய்தியையும் நீங்கள் சமீபத்தில் நக்கீரனில் உங்கள் அனுபவம்போல வெளியிட்டுள்ளீர்கள். இது ஒன்று மட்டும் போதுமே. 

அத்துடன் இன்றைய தினம் நக்கீரனில் சஞ்சனா அனுபவம் என்ற தலைப்பில் ஒரு யாழ்ப்பாணப் பெண்மணியை பேட்டி காண்பதுபோலவும், அவர் கருத்துக்கள் போல உங்கள் கருத்துக்களைக் கூறியிருப்பதும் வியப்பாக உள்ளது. இது நாள் வரை தமிழீழம் மற்றும், தேசிய தலைவர் மற்றும் போராட்டம் என நீங்கள் பேசிவந்ததால் எல்லாரும் மொளனமாக இருந்தார்கள். ஆனால் தற்போது யாழ்ப்பாணப் பெண்மணியூடாக இந்திய குடிவரவு அதிகாரிகள் மென்மையாக நடந்துகொண்டார்கள் என்றும் ப.சிதம்பரம் சமாதானத்திற்காக பாடுபட்டார் எனவும் நீங்கள் கூற முனைவதை எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

தமிழ் நாட்டில் வசிக்கும் ஒவ்வொரு இலங்கைத் தமிழர்களும் கியூ பிரிவால் அவதானிக்கப்படுவதும், ஆங்காங்கே கைதுசெய்யப்படுவதும், வேலைகளில் அமர்த்தப்படுவதில் வேற்றுமை பார்க்கப்படுவதும் யாவரும் அறிந்த உண்மை. மண்டபம் முகாம் தொடக்கம் செங்கல்பட்டு சிறப்பு முகாம்வரை ஈழத்தமிழர்கள் அடைத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் நீங்கள் மத்திய அரசிற்கு வக்காளத்து வாங்க ஆரம்பித்திருப்பது பெரும் சந்தேகங்களைக் கிளப்புகிறது. 

இந்திய உளவுப் பிரிவினருடன் நீங்கள் சேர்ந்து இயங்குவது போலான தோற்றப்பாட்டை உருவாக்குகிறது. தொடர்ந்தும் அந்தக் கட்டுரையில் ப.சிதம்பரம் சமாதானத்திற்காய் உழைத்தவர் என்று நீங்கள் பகிரங்கமாக குறிப்பிடுவதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஏன் எனில் இறுதிப்போர் நடைபெறும் கால கட்டத்தில் விடுதலைப் புலிகளை சரணடையச் சொன்ன நபர்களில் ப.சிதம்பரமும் அடங்குகிறார்.

கலைஞர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்கும்போது, பறந்துவந்து அதனை முடிவுக்குக் கொன்டுவந்த சிதம்பரம் அவர்கள், இலங்கையில் உடனடிப் போர் நிறுத்தம் வந்துவிட்டதைப்போல பேசியதும் நாம் அறிவோம். உங்களுக்கும் கலைஞர் மகள் கனிமொழிக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தையும் நாம் நன்கு அறிவோம் ! இந்தச் சூழலில் வெறும் அறிக்கைகளை வெளியிட்டு, புகழைச் சம்பாத்திக்க நினைக்காமல் ஈழத் தமிழர்களுக்கு உங்களால் உதவமுடியுமா எனப் பாருங்கள். எமது இனத்தின் விடுதலைக்கு உரம் சேர்க்கமுடியுமா எனச் சிந்தியுங்கள். 

வார்த்தைகளோடு விளையாடும் நீங்கள்.. ஈழத் தமிழர்களின் வாழ்கையோடு விளையாடாதீர்கள். 

உங்கள் மனதை நான் ஏதேனும் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்

இங்கணம்

தமிழரசு


--

source:athirvu
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஈழநாடு ஆசிரியருக்கு ரி.ஆர்.ரி வானொலி கொலை மிரட்டல்

 

eelanaduபிரான்சிலிருந்து வெளியாகும் ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர் சிவகுரு பாலச்சந்திரன் அவர்களுக்கு இன்று மாலை கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பல வாரங்களாக தமிழ் தேசிய ஆதரவு அரசியல் கட்டுரைகளை தொடர்ச்சியாக எழுதிவந்த திரு. சி. பாலச்சந்திரன் அவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரி.ஆர்.ரி. தமிழ் ஒலி வானொலியில் சுவிஸ் நேரத்தில் இடம்பெற்ற தமிழ்த் தேசியத்தைச் சிதைக்கும் நோக்கில் நடாத்தப்பட்ட கலந்துரையாடலைக் கண்டித்து அண்மையில் வெளியிடப்பட்ட கட்டுரை தொடர்பாகவே இந்தக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

07-10-009 புதன்கிழமை பாரிஸ் பாராளுமன்றத்திற்கு முன்பாக இடம்பெற்ற வழமையான ஒன்றுகூடலில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்த வேளை, அங்கு அவரை இடைமறித்த ரி.ஆர்.ரி. வானொலி உரிமையாளர் தர்சன் எனப்படும் சிறீரங்கன், அறிவிப்பாளர் ரவீந்திரன் ஆகிய இருவரும் அவரைத் தரக்குறைவாக ஏசியதுடன் தாக்குவதற்கும் ஈற்பட்டனர்.

அங்கு கூடியிருந்தவர்கள் இடையில் புகுந்து மறித்த போதும், அந்த இருவராலும் ஆசிரியர் பாலச்சந்திரன் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்கள். ஏற்கனவே, கடந்த 30-09-009 அன்று மாலையும் இதே போன்று தொலைபேசியிலும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

source:nerudal
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மக்கள்தான் புலிகள்; புலிகள்தான் மக்கள்; இவர்களை நீங்கள் எவ்வாறு பிரித்து இனம் காண முடியும்

 மக்கள்தான் புலிகள்; புலிகள்தான் மக்கள்; இவர்களை நீங்கள் எவ்வாறு பிரித்து இனம் காண முடிம்
kaelinதமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும், அப்பாவி பொதுமக்களையும் அரசாங்கம் எவ்வாறு  வேறுபடுத்தி அறிந்து கொள்ளப் போகின்றதென ஐக்கிய நாடுகள் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
 
முகாம்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் காணப்படுவதாக அரசாங்கம் வெளியிட்டு வரும் கருத்துக்களில் நியாயம் இருப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் மற்றும் அகதிகளுக்கான விசேட பிரதிநிதி வோல்டர் கெலீன் தெரிவித்துள்ளார்.

வவுனியா உள்ளிட்ட இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களுடன் புலி உறுப்பினர்கள் ஊடுறுவியிருப்பதாகவும், அவர்களை வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் வரையில் பொதுமக்களை மீளக் குடியேற்ற முடியாது எனவும் அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.
 
எனினும், புலிகளையும் பொதுமக்களையும் அரசாங்கம் எவ்வாறு வேறுபடுத்தி அறிந்து கொள்ளும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
விடுதலைப் புலிகளினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அரசாங்கத்தின் வாதத்தில் நியாயம் இருப்பதாகவே தாம் உணர்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், மக்களை மீள் குடியேற்றுவது குறித்த சரியான திட்டங்களை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


source:nerudal

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இந்த வார இணையதளம்: மனதிற்கு இதமான இயற்கை

  

ஏன் மலை வாசஸ்தலங்களுக்கும், இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கும் சுற்றுலா செல்கிறோம். அவற்றின் அருகே, அவற்றோடு இணைந்து இருக்கையில் நம் மனது லேசாகிறது; நாம் நம் கவலைகளை மறக்கிறோம். பல்வேறு பிரச்சினைகளில் நம் மனது அல்லாடுகையில் நமக்கு இலவசமாக இதம் தரும் இடங்கள் இந்த இயற்கை தானே.  இந்த இடங்களுக்குச் செல்ல முடியாதவர்கள், நேரம் இல்லாதவர்கள் எழில் கொண்ட அந்த காட்சிகளை நல்ல போட்டோக்களாகப் பெற்று, அவற்றைப் பார்த்து பரவசம் அடைகின்றனர். அத்தகைய அழகு கொழிக்கும் இடங்களை ஓர் இணைய தளம் நமக்குத் தருகிறது. நாம் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதற்காகவே, தேர்ந்தெடுத்து இந்த உலகின் அற்புத இயற்கைக் காட்சிகளை பதிந்து வழங்குகிறது. ஒரு போட்டோ காலரியாக, வரிசையாக இல்லாமல், ஒரு பிளாக் போல, பல பக்கங்களில் இது அமைந்துள்ளது. மொத்தம் 9935 பக்கங்கள் உள்ளன. ஒவ்வொரு பக்கத்திலும் 10 படங்கள் உள்ளன. எத்தனை பக்கங்களில் இது இருக்கும் என்று எண்ணுகிறீர்கள். ஆச்சரியப்பட வேண்டாம். ஏறத்தாழ 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிளாக்காக இது நீண்டு இருக்கிறது. இவற்றை வகை வகையாகப் பிரித்தும் காணலாம். அண்மையில் மக்களிடையே பிரபலமானவை, புதிதாக சேர்க்கப்பட்டவை, இன்று அதிகமாகக் காணப்பட்டவை, அதிக வோட்டுகள் பெற்றவை, குறிப்புகள் எழுதப்பட்டவை, மிக அதிகமாக மக்களிடையே இடம் பெற்றவை எனப் பல வகைகளில் இவை பிரிக்கப்பட்டும் தரப்படுகின்றன. ஒவ்வொரு போட்டோ அருகேயும் இந்த வகைப் பிரிவுக்கான டேப்கள் தரப்பட்டுள்ளன. இந்த போட்டோக்களைப் பார்ப்பது மட்டுமின்றி, இவற்றின் அழகு குறித்து வோட்டும் போடலாம். உங்களிடம் மிக அழகான போட்டோ ஒன்று உள்ளதா? அதனை இந்த தளத்திற்கு அனுப்பலாம். அதற்கான அப்லோட் படிவம் ஒன்று இதில் தரப்பட்டுள்ளது. 
இந்த தளத்திற்குள் நுழைந்தால் நேரம் போவதே தெரியாமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம். இந்த தளம் கிடைக்கும் முகவரி: http://pixdaus.comsource:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

பாது. செயலாளரின் வலைத்தளத்திலிருந்து சரத் பொன்சேகா படம் நீக்கம்


 

 

பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் மேற்பார்வையின் கீழ் இயக்குகின்ற பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ வலைத்தளத்தளமான defence வலைத்தளத்திலிருந்து முப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவில் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது. ராணுவத்தினரின் 60 ஆண்டு விழாவை சிறப்பிக்கும் விதமாக மத்திய வங்கியால் 1000 ரூபா பெறுமதியான இரு நாணயங்கள் வெளியிடப்பட்டன. ஒக்டோபர் 3 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநரால் இந்நாணயம் வெளியிடப்பட்ட செய்தியைப் பிரசுரிக்கும்போதே சரத் பொன்சேகாவின் புகைப்படம் நீக்கப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவுக்கும் கோத்தபாயவுக்கும் இடையிலான முறுகலைத் தொடர்ந்தே சரத் பொன்சேகாவின் படங்கள் defence இலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் மேற்படி நிகழ்வு குறித்து புகைப்படங்களை வெளியிட்ட பத்திரிகைகள் சரத்தின் புகைப்படங்களையும் உள்ளடக்கியுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

--

source:athirvu

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP