சமீபத்திய பதிவுகள்

உலக மகா உளவாளிகள்!!!

>> Tuesday, November 24, 2009

 

'சாண் பிசகினால் சட்னி' என் பதே ஒற்றன் வாழ்க்கை. மன்னர் காலத்தில் சாளரம் வழி ஒட்டுக்கேட்ட இவர்கள், ஹைடெக் காலத்தில் டெக் னாலஜியில் பின்னுகிறார்கள்.

ரிச்சர்ட் சோர்ஜ்: சோவியத் யூனியனின் அல்டிமேட் உளவாளி இவர். இரண்டாம் உலகப் போர் காலத்தின் தலைவன்தான் கிங். இவருடைய சொந்தக்காரர் ஒருவர் கார்ல் மார்க்ஸின் நெருங்கிய நண்பர். அதனால் மார்க்ஸ் பற்றி ஐயாவுக்கு நிறையத் தெரியும். பத்திரிகையாளர் போர்வையில் இவர் நடத்திய தில்லாலங்கடிகள் ரஷ்யாவுக்குப் பக்கபலம். ஜெர்மனியிலும், ஜப்பானிலும் ஒற்றனாகப் பட்டையைக் கிளப்பினார். ஆனால், ஜப்பானுக்கு இவர் மீது சந்தேகம் வந்து பொறிவைத்தது. மர்ம ரேடியோ அலைவரிசைகளைக் கண்காணித்து 1941-ல் கைது செய்யப்பட்டார்.ஆனால், அவர்களால் எதையும் நிரூபிக்க முடிய வில்லை. ரிச்சர்ட் சோர்ஜ் கல்லுளிமங்கன்.துண்டு துண்டாக வெட்டினால்கூட ஒரு வார்த்தை விழாது என்று இருந்துவிட்டார்.

'எங்கள் ஒற்றனை விடுவி, உங்கள் ஒற்றனை நாங்கள் விடுவிக்கிறோம்' என ஜப்பான் சோவியத் துடன் பேரம் பேசியது. ஆனால், 'சோர்ஜா... யாருப்பா அது? எங்களுக்குத் தெரியாதே' என டகால்டி காட்டியது ரஷ்யா. எந்த நாட்டு உளவாளி என்று தெரியாமலேயே 1944 நவம்பர் 7-ம் தேதி சோர்ஜ் தூக்கிலிடப்பட்டார். 20 வருடங்களுக்குப் பிறகு 1964-ல்தான் சோவியத் 'சோர்ஜ் தன்னோட ஆள்' எனும் உண்மையை ஒப்புக் கொண்டது!

மார்கரீடா கீர்துரிடா: இவர் ஒரு செக்ஸ் சிம்பல். வசீகர வளைவுக ளால் எவரையும் துவம்சம் செய்யும் அழகி. மேடைகளில் அரைகுறை யாக ஆடிப் புகழ்பெற்ற இந்த அழகிய பெண் ஓர் உளவாளி என்று யாருமே நினைத்திருக்க வில்லை. முதல் உலகப் போர் காலத்தில் பல பேர் யுத்தக் களத்தில் புரள, இவருடைய முத்தக் குளத்தில் புரண்டனர் ராணுவத்தினரும், அரசியல் வாதிகளும். எல்லோரிடமும் விளையாடி விஷயத்தைக் கறந்தார். அதை அப்படியே பிரான்சுக்கு அனுப்பினார். கடைசியில் 1917 பிப்ரவரி 13-ம் நாள் பாரீஸில் கைதான இந்த சுட்டும் விழிச் சுடர், இறுதியில் சுட்டுக் கொல்லப் பட்டார்! 


நேதன் ஹாலே: அமெரிக்காவின் முதல் அதிகாரபூர்வஉள வாளிஇவர்தான். அமெரிக் கப் புரட்சி நடந்த காலத்தில் பிரிட்டனின் திட்டங்களை உளவுபார்ப்பதுதான் இவரது வேலை. பல அதிரடித் தகவல் களை அமெரிக்காவுக்கு வழங்கிய இவர் சீக்கிரத்தி லேயே பிடிபட்டார். தூக்குமேடையில் 'கடைசியாக என்ன சொல்ல விரும்புகி றாய்?' என கேட்கப்பட்ட போது, நேதன் ஹாலே சொன்ன பதில், 'என் நாட்டுக்காகக் கொடுக்க ஒரே ஒரு வாழ்க்கைதான் என்னிடம் இருக்கிறதே எனக் கலங்குகிறேன்'! அப்போது அவருடைய வயது 21. இதனாலேயே இப் போது வரை ஒரு ஹீரோவாகப் பார்க்கிறார்கள் மக்கள்.

க்லாஸ் எமில் ஜூலியஸ் பியூக்ஸ்: மண்டை பூரா மூளை என்பார்களே, அந்த ரகம். அணுகுண்டு தயாரிப்பு, ஆராய்ச்சி அனைத்திலும் கில்லாடி. தான் செய்யும் எல்லா ரகசிய வேலைகளையும் ரஷ்யாவுக்கு அனுப்பிவிடுவார். ஜெர்மனியில் பிறந்த ஒரு பிரிட் டிஷ்காரர் இவர்.

ஆனால், அமெரிக்காவோ இங்கிலாந்தோ என்ன செய்தாலும் அதை அறியும் உரிமை ரஷ்யாவுக்கு உண்டு என்பது இவரது கொள்கை. இவர் தரும் தகவல்களைவைத்தே அமெரிக்கா செய்வது போன்ற குண்டுகளை வடிவமைத்துக் குழப்பியது ரஷ்யா. உதாரணமாக, அமெரிக்கா தயாரித்த 'ஃபேட்மேன்' எனும் குண்டின் ஈயடிச்சான் காப்பிதான் ரஷ்யாவின் ஆர்.டி.எஸ்-1. கடைசியில் கையும் களவுமாக மாட்டி 14 ஆண்டுகள் உள்ளே போனார் பியூக்ஸ்!

 
source:yuththa vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழர்களின் தேசிய தலைவர் பிரபாகரனை வணிகச்சின்னமாக்காதீர்…

 

தேசிய தலைவர்வாழ்நாள் புரட்சியாளர் சேகுவேராவின் எண்பதாம் ஆண்டு பிறந்த நாள் விழா கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. அதையொட்டி அவரின் மூத்த மகள் அலைடா, கியுபாவில் ஓர் அறிக்கை வெளியிட்டார்.

"என் தந்தையின் பெயரையும் படத்தையும் வணிக முத்திரையாக்காதீர்கள். பிரிட்டானிகா வோட்காவிற்கும் பெப்ஸ்ஸி பானத்திற்கும் ஸ்விஸ் கைபேசிக்கும் என் தந்தையின் படத்தை விளம்பரச்சின்னமாகப் பயன்படுத்துவது அவரை அவமதிக்கும் செயலாகும்.

"நிகரமைப் பொருளியலுக்காகப் போராடியவரை மிகைத்துய்ப்பு வாதத்திற்குப் பயன்படுத்துவது முரண்பட்ட செயல். எங்களுக்குப்பணம் தேவை இல்லை. மரியாதைதான் தேவை".

Pulikal.net
பிரபாகரன் நிகழ்காலத்தின் ஈடு இணையற்ற விடுதலைப் புரட்சியாளர். விடுதலை இயக்கத் தலைவர். போர் முறையில் தேர்ந்த திறனும், அரசியலில் ஆழ்ந்த அறிவும் பெற்றவர். அவருடைய ஆற்றல், அர்ப்பணிப்பு ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடையே அவர்க்குப் பெரும் புகழை ஈட்டித்தந்துள்ளன. தமிழகத் தமிழர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய கல்வி நிறைய இருக்கிறது. தமிழ்த் தேச விடுதலைக்கு, தமிழ்மொழி விடுதலைக்கு, சாதி ஒழிப்பிற்கு, பெண் விடுதலைக்கு, சமத்துவப் பொருளியல் வளர்ச்சிக்கு என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம், ஏராளம்.

சேகுவேராவின் புகழ், வணிக நோக்கங்களுக்குப் பயன்படுத்தப்படுவதை அருவருத்தார் அவர் மகள்.

காமத்திற்கு கண் இல்லை என்பதுபோல் முதலாளியப் பண மோகத்திற்கு முறை கிடையாது. சேகுவேராவை வேட்டையாடியது முதலாளியம்; அவரது புகழ், அவரது பெயர் உலகெங்குமுள்ள இளைஞர்களின் உணர்வுகளில் மின்சாரம் பாய்ச்சுகிறது என்பதைத் தெரிந்துகொண்டபின், அவரைப் பண்டங்களின் விற்பனைச் சின்னமாக மாற்றுகிறது அதே முதலாளியம்.

கொடிய நஞ்சாக சித்தரித்த ஒருவரையே, கொன்றபின் சிறந்த குளிர்பானமாக சித்தரிக்கிறது. இந்த இரண்டுவகை முறையிலும் தனது லாபம் தான் முதலாளியத்திற்கு முதன்மை நோக்கு.

* தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகத் தமிழ் நாட்டு இதழ்கள் பயன்படுத்துவதை நாம் பார்க்கிறோம். அட்டையில் அவர் படம் போட்டால் அமோக விற்பனை. அவர் பற்றிக் கட்டுரை வெளியிட்டால் கடைகளில் இதழ்கள் தீர்ந்து விடுகின்றன. இந்தப் பின்னணியில் தான் அவர் பற்றிக் கட்டுக்கதைகள் எழுதத் தொடங்கினர் எழுத்தாளர்களும் உளவுத்துறை ஒட்டுண்ணிகளும்.

வாரம் ஒருமுறை வன்னிக்குச் சென்று பிரபாகரனுடன் பிஸ்கட்டும் தேநீரும் அருந்திவிட்டுத் திரும்பியவர்கள் போன்ற தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்துகிறார்கள். இவர்களைக் கேட்டுக்கொண்டு தான் பிரபாகரன் அரசியல் உத்திகள் வகுத்தது போலவும், பிரபாகரன் சொற்படிதான் இவர்கள் இங்கே இயங்கியது போலவும் எழுதிக் கவர்ச்சி காட்டுகிறார்கள்.

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் துரோகம் இழைத்துவிட்டு, வெளிநாட்டுக்கு ஓடிப்போய்; சிங்கள அரசுக்குக் கைக் கூலிகளாக செயல்படும் சிலர், பிரபாகரன் பற்றி புத்தகம் போடுகிறார்கள்; ஏடுகளில் கட்டுரைகள் எழுதுகிறார்கள்.இலக்கியக் குத்தகைக்காரர்கள் நடத்தும் ஏடுகள் சில, புலம்பெயர்ந்த சிங்களக் கைக் கூலிகளின் புலம்பல்களை "நடுநிலையோடு" வெளியிடுகின்றன.

விடுதலைப்புலிகளை ஆதரிப்பது போல் தொடங்கி பின்னர் தூற்றி எழுதுவது அல்லது கழிவிரக்கம் காட்டுவதுபோல் நடித்துப் பின்னர் கடிப்பது அவர்கள் உத்தி. எல்லாம் சந்தை மயம்! சிங்களத்தின் சின்னத் தூதுவர் அம்சாவிடம் ஊதியம் பெற்ற ஊடகத்துறையினர் பற்றி செய்திகள் அம்பலமாகி வருகின்றன. புலனாய்வு வாரமிருமுறை ஏடொன்றின் செய்தி ஆசிரியர் ஒருவர் கைக்கூலி வாங்கியே கோடீஸ்வரன் ஆகிவிட்டாராம். அதனால் அந்த ஏடும் அவரை நீக்கிவிட்டதாம்.

இன்னொரு பக்க வேதனை, தமிழக அரசியலில் தமிழீழத் தேசியத்தலைவர் பிரபாகரன் அவர்களை வணிகச் சின்னமாகப் பயன்படுத்துவது இன்னொருபக்க வேதனையாகும். பிரபாகரன் சொல்லியதால் தான் மக்களவைத் தேர்தலில் காங்கிரசை ஆதரித்தேன் என்று ஒரு தலைவர் கூறுகிறார். இன்னொருவரோ பிரபாகரன் கட்டளைக்கேற்ப என் அரசியலை வகுத்துக்கொண்டேன் என்கிறார்.

தமிழ்நாட்டில் அவரவர் எடுக்கும் அரசியல் சந்தர்ப்பவாத நிலைபாடுகளை ஞாயப்படுத்த பிரபாகரன் பெயரைப் பயன்படுத்துவதும், அவர் சொல்லித்தான் செய்தேன் என்பதும் அவர் பெயருக்குக் களங்கம் சேர்ப்பதாகும்.

பிரபாகரன் நிகழ்காலத்தின் ஈடு இணையற்ற விடுதலைப் புரட்சியாளர். விடுதலை இயக்கத் தலைவர். போர் முறையில் தேர்ந்த திறனும், அரசியலில் ஆழ்ந்த அறிவும் பெற்றவர். அவருடைய ஆற்றல், அர்ப்பணிப்பு ஆகியவை தமிழ்நாட்டு மக்களிடையே அவர்க்குப் பெரும் புகழை ஈட்டித்தந்துள்ளன. தமிழகத் தமிழர்கள் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய கல்வி நிறைய இருக்கிறது. தமிழ்த் தேச விடுதலைக்கு, தமிழ்மொழி விடுதலைக்கு, சாதி ஒழிப்பிற்கு, பெண் விடுதலைக்கு, சமத்துவப் பொருளியல் வளர்ச்சிக்கு என அவரிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம், ஏராளம்.

பிரபாகரன்

அதேபோல் போலிப்பட்டங்களைப் புனைந்து கொள்ளாத அவரது எளிமையும் தன்னடக்கமும் தமிழ்நாட்டிற்குத் தேவையான பாடங்கள். குடும்பப் பதவி அரசியல் கொடி கட்டிப் பறக்கும் இந்நாட்டில், குடும்பத்தையே போர்க்களத்தில் போராளிகளாக இறக்கிவிட்ட அவரது ஈகம் நாம் பின்பற்ற வேண்டிய அரியசெயல்.

"கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்

ஆற்ற லதுவே படை"

என்ற வள்ளுவப் பெருந் தகையின் போர் வரிகளுக்கேற்ப புலிப்படையை மட்டுமின்றி தம் குடும்பத்தையே பகைப்படையை எதிர்த்துக் போர்க்களத்தில் நிறுத்தியவர் பிரபாகரன்.

* இத்தனைச் சிறப்புகள் கொண்ட அரிய தலைமை தமிழினத்தில் தோன்றியதால் தமிழினத்தின் பெருமை உலகு தழுவி விரிந்தது. ஆனால் அத்தகு தலைமையைத் தமிழ்நாட்டில் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. அவரை மலினப்படுத்துதல் கூடாது. தமிழின உணர்வாளர்களில் சிலர் ரசனை உணர்வுகளில் மூழ்கி விடுகின்றனர். வீரத்தின் வர்ணனையையும் ரசிப்பது, சோகத்தின் வர்ணனையையும் ரசிப்பது என்ற நிலையில் இருக்கின்றனர்.

"பிரபாகரனோடு பேசி விட்டு வந்தேன்"

"பிரபாகரன் எனக்குக் கட்டளை இட்டார்"

என்று ஒருவர் சொன்னால் அச் சொற்களில் மயங்கிவிடுகின்றனர்.

யாராக இருந்தாலும் பின்வருமாறு கேளுங்கள்:

* "பிரபாகரன் பெருமைகளைப் பேசுங்கள்; விடுதலைப்புலிகளின் சாதனைகளைப் போற்றுங்கள். ஆனால் ஈழ விடுதலைக்கும், தமிழ்நாட்டு விடுதலைக்கும் நீங்கள் என்ன செய்து கொண்டுள்ளீர்கள்? உங்கள் வேலைத்திட்டம் என்ன? உங்கள் புரட்சிப்பணி என்ன?"

இப்படிப்பட்ட வினாக்கள் தமிழ்நாட்டில் தமிழ்த் தேசிய அரசியலை செம்மைப்படுத்த உதவும். போலித்தனமான அரசியலைத் தடுக்கும்.

நன்றி: தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம்


source:tamilspy-- 

www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கர்ப்பிணியை நிர்வாணமாக்கி தாக்கிய கிராமவாசிகள்


    லக்னோ அருகே, பிஜ்னூர் மாவட்டத்தில் உள்ள கர்ணவாலா என்ற கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. 25 வயதான தாரிணி என்ற இப்பெண்ணின் கணவருக்கு சொந்தமான இடத்தை அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிக்க பல நாட்களாக முயன்று வந்துள்ளனர். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆக்கிரமிப்பு கும்பல் வந்தபோது, தாரிணியின் கணவர் வீட்டில் இல்லை. தாரிணி தங்களுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிக்க அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். 

தொடர்ந்து உள்ளே நுழைந்த ஆக்கிரமிப்பு கும்பலை தாரிணி தடுக்க முயன்றபோது தகராறு ஏற்பட்டது. குழந்தையை சுமக்கும் கர்ப்பிணிப் பெண் என்றும் பார்க்காமல், அக்கும்பலில் இருந்தவர்கள் தாரிணியை கிழே தள்ளி உதைத்துள்ளனர். அருகில் இருந்த மரக்கட்டைகளை எடுத்து தாறுமாறாக அடித்துள்ளனர்.

அதோடு நிற்காமல், தாரிணியின் தலை முடியை பிடித்து தெருவிற்கு இழுத்து வந்து, சேலையையும் உருவியுள்ளனர். இந்த மிருகத்தனமான தாக்குதலால், தாரிணியின் வயிற்றில் இருந்த கரு சிதைந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் குமார் கவுதம் கூறியுள்ளார். 

இச்சம்பவத்துக்கு காரணமான முக்கியமான 4 பேரில் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவு ஆனவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


source:nakkheeran

www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்


 
 

பிரவுசர் சந்தையில் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்து வருகிறது. இந்த பிரவுசரின் நான்கு போட்டியாளர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உலக அளவில் ஏறத்தாழ 40 ஆயிரம் இணைய தளங்களையும், பல்வேறு வகையான புள்ளிவிபரங்களையும், தொழில் நுட்பத்தி னையும் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வரும் நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் அமைப்பு, அண்மையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிரவுசர் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் வசம் இருந்த அதன் பயனாளர் எண்ணிக்கை 67 சதவிகிதத்திலிருந்து 65.7 % ஆகக் குறைந்துள்ளது. 
ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட பயர்பாக்ஸ் பிரவுசர் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சென்ற இரண்டு மாதங்களில் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 23 சதவிகிதத்திலிருந்து 23.8% ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி பிரவுசரின் ரசிகர்கள் எண்ணிக்கை4.1% லிருந்து 4.2% ஆக உயர்ந்துள்ளது. கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2.8%லிருந்து 3.2% ஆகக் கூடியுள்ளது. ஆப்பராவின் பயனாளர்கள் 2%லிருந்து 2.2% ஆக உயர்ந்துள்ளனர்.  இந்த சதவிகிதம் என்ன மிகக் குறைவு என்று எண்ணாதீர்கள். பல கோடிக்கணக்கான இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக் கையோடு இதனைப் பொருத்திப் பார்த்தால் பல லட்சக் கணக்கில் இவர்களின் எண்ணிக்கைய நீங்கள் உணரலாம்.அண்மையில் தான் மொஸில்லாவின் பயர்பாக்ஸ் புதிய ஒரு மைல்கல்லைத் தன் பயணத்தில் கடந்தது. இதன் பதிப்பு 3.5 வெளியிடப்பட்டு, பழைய பிரவுசர் இடத்தில் அமர்ந்தது. இதன் வசதிகள் பலரின் கவனத்தை இழுத்தது. அதிவேக ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் பில்ட் இன் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளுடன், வாடிக்கையாளர்களைக் கட்டிப் போட்டிருப்பதுடன், புதியவர்களையும் ஈர்க்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, அதன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வாடிக்கையாளர்களை இழந்தாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, இப்போது அதிகமான பயனாளர்களைக் கொண்டதாக மாறிவருகிறது. இது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அமையலாம்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP