சமீபத்திய பதிவுகள்

இரக்கமில்லா வெறித்தனத்தில் இலங்கை ராணுவம்!--'வீடியோ பதிவு யாருக்காக?'

>> Wednesday, March 4, 2009

 

'அப்பாவையும் அக்கம் பக்க உறவுகளையும் காவு வாங்கிய சிங்கள ராணு வத்துக்கு எடுபிடி வேலைகள் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

பாது காப்பு வளையம் என்கிற பெயரில் என் போன்றவர்களைப் பாடாகப் படுத்துகிறார்கள் ராணுவத்தினர்.

கொஞ்சம் அழகாகப் பிறந்த பாவத் துக்காக,

நினைக்கும்போதெல்லாம் குதறப்பட்ட என் தோழி, இப்போது சித்தப்பிரமை பிடித்துக் கிடக்கிறாள்.

ஆனா லும், ஆடை கிழிக்கும் வேலை மிச்சமென நினைத்து பிரமை பிடித்தவளையும் பிறாண் டுகிறது ராணுவம்!''

-மனிதநேயமுள்ள மருத்துவர் ஒருவர் மூலமாக வெடித் திருக்கும் ஈழப்பெண்ணின்

குரல், நெஞ்சையே நொறுக்கிப் போடுகிறது. ராணுவத்தை நம்பிப்போன அப்பாவித் தமிழ் மக்களின் மொத்த நிலைமையும் விவரமாகச் சொல்லி அதிர வைக்கிறார்கள் கொழும்பில் இருக்கும் பத்திரிகையாளர் சிலர்.

''புலிகளுடனான போரை நடத்தும்போதெல்லாம் ராணுவம் போடும் வெறியாட்டங்களைத் தமிழ் மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால்தான் ராணுவத் தரப்பினர், எவ்வளவோ வற்புறுத்தியும் தமிழ் மக்கள் பாதுகாக்கப்பட்ட வளையப் பகுதிக்குச் செல்லவில்லை. இந்தக் கடுப்பில் கொத்து குண்டுகளையும் பாஸ்பரஸ் குண்டுகளையும் வீசி, மக்களை உயிர் பயத்தில் ஓடவைத்தது ராணுவம். இதனால் வேறு வழியில்லாமல் ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தின் முகாம்களுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். சோதனை முடிந்து அனுப்பப்படுபவர்களை பெண்கள், குழந்தைகள், ஆண்கள் என்று பிரிக்கிறார்கள். ஆண்களை யும், பெண்களையும் இலங்கை அரசுக்கு ஆதரவாக மாறிக்கிடக்கும் தமிழ் தலைவர்கள் சிலருடைய ஆதரவாளர்கள் விசாரிக்கிறார்கள். சந்தேகப்படும்படி அவர்கள் யாரையெல்லாம் குறித்துத் காட்டுகிறார்களோ... அவர்களுக்கெல்லாம் அடுத்த சில நிமிடங் களிலேயே முடிவு கட்டுகிறது ராணுவம்.

மக்களோடு மக்களாகப் புலிகள் ஊடுருவி கிளிநொச்சி, யாழ்ப்பாணப் பகுதிகளில் மரப்பொந்து களிலும் மண்ணுக்குள்ளும் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்கள் மூலமாக ராணுவம் மற்றும் சிங்கள அரசில் இருக்கும் முக்கிய ஆட்களைக் கொன்றுவிடுவார்களோ என்கிற அச்சத்தில்தான் தங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைவர்களை இந்த ஆராய்ச்சி வேலையில் இறக்கியிருக்கிறது ராணுவத் தரப்பு. இளைஞர்கள் எந்த விசாரணையும் இன்றியே ரகசிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அழிக்கப்படுகிறார்கள். இளம்பெண்களின் நிலையைச் சொல்ல வேண்டியதே இல்லை. ராணுவத்தின் வல்லுறவுக்கு உடன்படாமல் வீம்பு காட்டும் பெண்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்நடத்தப்படுகிறது. அவர்களை சிறுநீர் கழிக்கக்கூட அனுமதிக்காமல் நடத்தப்படும் சித்ரவதைகளை ராணுவத்தில் இருக்கும் ஒன்றிரண்டு நேர்மையான அதிகாரிகளே மீடியாக்களிடம் சொல்லி வருந்தி இருக்கிறார்கள்.

இதற்கிடையில், தமிழ்ப் பெண்களை வற்புறுத்திப் புணர்வதைக்கூட இரக்கமேயில்லாமல் வீடியோ பதிவும் செய்கிறார்கள். இத்தகைய வீடியோ பதிவுகள் யாருக்கு எதற்காக அனுப்பி வைக்கப்படுகின்றன என்பது மட்டும் புரியாத புதிராக இருக்கிறது. ராணுவ வீரர்கள் செய் வதைக் காட்டிலும், தமிழ்ப் பெண் களைப் பெரிய அளவில் சித்ரவதை செய்வது ராணுவத்தின் உளவுத் துறையில் இருக்கும் சிலர்தான்.

அவர்கள் தங்கள் முகாம்களில் எடுபிடி வேலைகள் செய்யவும், விரும்பும்போதெல்லாம் இச்சை களைத் தீர்த்துக்கொள்ளவும் இளம்பெண்களைப் பயன் படுத்துகிறார்கள். உளவுத் துறையின் வெறியாட்டத்துக்கு இரையாகி, பலியான பெண்களில் பலரும் எரிக்கப்பட்டு விடுகிறார்கள்.

உலக நாடுகளிடம், 'எங்களை நம்பி வந்த மக்களுக்குத் தரமான உணவும் மருந்துப் பொருட்களும் வழங்குகிறோம்!' என்று சொல்லும் சிங்கள அதிகாரிகள், உண்மையில் வெறித்தனத்தைத் தவிர, வேறெதையும் தமிழ் மக்களிடம் காட்டவில்லை. இத்தகைய கொடுமைகளை ராணுவம் செய்வது பற்றி சிங்கள மக்களுக்குக்கூடத் தெரியாது. மருத்துவர்கள் மற்றும் செஞ்சிலுவை சங்கத்தினர் மூலமாக வெளிவந்திருக்கும் இத்தகைய கொடூரங்கள், இரக்கமுள்ள சிங்கள மக்களிடமும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக் கிறது!'' என்கிற கொழும்பு பத்திரிகையாளர்கள்,

''தற்காலிக விடுப்பிலிருக்கும் ராணுவ வீரர்கள், இளம் பெண்களின் கற்பைச் சூறையாடி, அவர்களின் உறுப்புகளை அறுத்து எறியும் அவலமும் நடக்கிறது. வவுனியா மற்றும் விசுவமடு பகுதிகளில் இருக்கும் இடைத் தங்கல் முகாம்களில் தமிழ்ப் பெண்கள் எந்தளவுக்கு சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என்று நேர்மையான ராணுவ அதிகாரிகளே எங்களிடம் சொல்கிறார்கள். ஐ.நா-வின் பிரதிநிதியாக அந்த இடைத் தங்கல் முகாம்களுக்கு வந்த ஜான் கோல்ம்ஸின் கவனத்துக்கு அத்தகைய கொடூரங்கள் கொண்டு செல்லப்பட்டும், இலங்கையின் நிவாரண அமைச்சரான ரிஷாட், அதை திசைதிருப்பி, மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை மறைத்துவிட்டார்...'' என்றார்கள்.

இதற்கிடையில், இந்திய பிரதமருக்கு ஈழப்பெண்களின் பரிதாபகரமான நிலை குறித்து தமிழ் தேசிய கூட்ட மைப்பைச் சேர்ந்த எம்.பி. ஒருவர் அவசரக் கடிதம் எழுதி யிருக்கிறார். அதில், ''வவுனியா மருத்துவமனையில் தமிழ் கர்ப்பிணிகளை வற்புறுத்திக் கருவைக் கலைக்கிறார்கள். இத்தகைய கொடுமைகளை அரங்கேற்றச் சொல்லி மருத்து வர்களையும் ராணுவம் மிரட்டுகிறது. மொத்தத்தில், தமிழ்ப் பெண்களைக் குறிவைத்து ராணுவம் நடத்தும் வெறியாட்டம், ஹிட்லர் காலத்தில்கூட நடக்காதது!'' என்று சொல்லவொண்ணா வேதனையோடு கலங்கி யிருக்கிறார்.

இறுதி சவம் விழுவதற்குள்ளாவது உலகத்தின் இரக்கப்பார்வை ஈழத்தின் பக்கம் விழுமா?

 

http://www.tamilnews.dk/index.php?mod=article&cat=srilankannews&article=12094

StumbleUpon.com Read more...

தவிப்பில் தமிழினம்….சுகபோகத்தில் தமிழின தலைவர்கள்(துரோகிகள்)

 

vanni_20090218002இன்று தமிழர்கள் முழுமையான மொழி சுதந்திரம், முழுமையான நாட்டு சுதந்திரம் இல்லாமல் வாழ்கின்றார்கள். இதை சொன்னாலும் விளங்கிக் கொள்ள கூடிய நிலையிலும் அவர்கள் இல்லை.
காரணம் நமது துடிப்பான தலைமைகள் கூட சுகபோகத்திற்கு அடிமை பட்டு சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருப்பதுதான்.

இப்படி 25 விகிதமானோர்கள் சுகபோகமாகத்தில் தன்னை மறந்து வாழ்ந்து கொண்டிருக்க 75 விகிதமானோர் வசதிகளற்ற சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அவர்கள் குடிசையிலும் வீதியோரங்களிலும் மர நிழல்களிலும் வாழ்வதை என்னவென்பது?

வுpழித்தெழு தமிழா! வுpழித்தெழு! நீ தூங்கியது போதும். இருக்கும் எச்ச சொச்சங்களும் ஒன்றொன்றாக உன்னை விட்டுப் போய் கொண்டு இருக்கிறது. சேரன், சோழன், பாண்டியன் என்ற மன்னர்கள் வாழ்ந்த காலம் எப்போது? அவர்கள் வீரத்தோடு வாழ்ந்தது உண்மையா அவர்கள் தமிழ் மொழியை வளர்த்தவர்களா என்று நம் வரலாறு கூட கேள்விக்கிடமாக போகின்றது.

அவர்கள் தமிழோடும் வீரத்தோடும் வாழ்ந்திருந்தது உண்மையானால் இன்று இவை அழிந்து கொண்டிருப்பது கண்டு துடித்து எழாமல் இருப்பது எப்படி? இன்று தமிழ் மொழி வீடுகளில் சுத்தமாக பாவனையற்று போய் கொண்டிருக்கிறது. பலர் பேசுவது தமிழ் மொழியா என்று யோசிக்கும் அளவுக்கு ஆங்கிலம் கலந்து தமிழ் வீழ்ந்நு கொண்டிருக்கின்றது. சாதாரண பாமரனும் தன் உண்ணும் சாதத்தை கூட ரைஸ் என்றும் மீல்ஸ் என்றும் கூறும் அளவுக்கு ஆங்கிலழ் எங்கும் ஆதிக்கம் செலுத்தும் நிலை உருவாகி விட்டது.

ராமர் அணை என்பது தொப்புள் கொடி உறவாக ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கை வரை கட்டப்பட்டது என்பது வரலாற்று உண்மை. ஆனால் சேது சமுத்திர கால்வாய் திட்டத்தில் அந்த உறவும் பொய்யாகின்றது. இராமன் கதை கூட கற்பனை என்றும், இராமர் பாத்திரமும் கற்பனை என்றும் ஒரு தமிழர் தலைவராலேயே மறுப்பு கூறப்படுகின்றது. அதாவது இராமர் வழிபாடு, அனுமன் வழிபாடு எல்லாம் ஏமாற்று வணக்கங்களாக சித்தரிக்கப்படுகின்றது. இன்று தமிழர்களின் மொழி, வணக்க வழிபாடுகள் என்பன எல்லாம் அழிந்து போக வழி சமைக்கப்பட்டுள்ளது.

அன்று பாரதி தமிழுக்கு ஒரு விழிப்பை துடிப்பை ஏற்படுத்தினான். அதன் பின் வந்த பாரதிதாசன் "தமிழுக்கு இன்னல் என்றால் சங்காரம் நிஜம்" என்று முழங்கினான். "தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா!" என்ற முழக்கம் எங்கும் எழுந்தது. அந்த நேரம் தமிழ் தலைவர் பெரியார் தமிழன் வீழ்ந்த காரணத்தை ஆராய்ந்து அதனை உடைத்தெறிய சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்தார். புpராமண, ஆரியர்களால் தமிழ் சமூதாயம் பல சாதி கூறுகளாக பிரிக்கப்பட்டதை உடைத்தெறிய தமிழர் படையை தட்டி விட்டார்.

அவரால் தளபதியென வளர்க்கப்பட்ட அறிஞர் அண்ணா என்றழைக்கப்பட்ட திரு அண்ணாதுரையால் திராவிட நாடு என்ற உணர்வு பூர்வமான கோசம் தமிழகமெங்கும் ஓங்கி ஒலித்தது. திராவிட நாடு திராவிடருக்கே என்ற கோசம் வேகமாக வளர்ந்து வந்தது. அறிஞர் அண்ணாவின் படை வளர்ச்சியில் தந்தை பெரியாரின் இயக்கம் தொய்வடைந்தது. அறிஞர் அண்ணாவின் படையில் தமிழ் மொழி விழிப்படைந்தது. அவர் படையில் பேராசிரியர்கள், புலவர்கள், வித்துவான்கள் என்று எண்ணிலடங்காத தமிழ் இளைஞர் கூட்டம் தெருவெங்கும் தமிழ் கூட்டியது. எங்கு திரும்பிலும் தமிழ் மொழி ஓங்கி வளர்ந்தது.

அதற்கேற்ற வகையில் அவர்தம் படையில் நாவலர், நெடுஞ்செழியன், இரா சம்பந்தன், திரு ல.ப. நடராஜன், மதியழகன், ஆசைதம்பி, கவிஞர் கன்னதாசன், கலைஞர் கருணாநிதி, அன்பழகன், சீனிவாசன் என்று எண்ணற்ற தமிழர் கூட்டம் தமிழகத்தை தமிழ் மொழி உணர்வால் உயர்த்தியது. இந்நேரம் திராவிட நாடு திராவிடருக்கே என்ற கோசம் துடிப்பாக தமிழ் உணர்வுகளில் மேலோங்கியது. இந்த நேரம் இந்தியா அதாவது மத்திய அரசே கலங்கும் அளவுக்கு துடிப்பு தமிழர் உள்ளமெங்கும் உயர்ந்தது.

இந்த நேரத்தில் தமிழர் துடிப்பை அடக்கும் முறையில் வஞ்சகமான மாநில சுயாட்சி தேர்தல்; வந்தது. இந்த தேர்தலில் நம் தலைவர்களுக்கு, தி.மு.க எனும் "திராவிட முன்னேற்ற கலகம்" அதற்கு போட்டியிட எண்ணம் வந்தது. போட்டியிட்டது. திரண்ட தமிழர்கள் தி.மு.க. விற்கு வாக்களித்து அது வெற்றி பெற வழி சமைத்தார்கள்.

ஆட்சி அமைத்ததோடு எல்லாம் சரி. ஆட்சி கதிரை எல்லா சுகங்களையும் தந்தது. வந்த வழி மறந்தது. கொண்ட கொள்கை விட்டகன்றது. கை கோத்து அணைத்து வந்தவர்கள் கை விடப்பட்டார். முதலில் பிரிந்தார் இரா. சம்பந்தன். தொடந்து பிரிந்து சென்றவர் கவிஞர் கன்னதாசன். இப்படியாக தி.மு.க.வின் தாணைத் தளபதிகள் ஒவ்வொருவராக பெயர் தெரியாமல் மறைந்து போனார்கள். அண்ணாவை புற்று நோய் பறித்து கொண்டது.

அதன் பின் பிளவுகள். மக்கள் திலகமென போற்றி வளர்க்கப்பட்ட ஆ.பு.சு. வெளியே வீசப்பட்டார். தொடர்ந்து விலகியவர்கள் நாவலர் மற்றும் இரா நெடுஞ்செழியன் ஆகியோர். மற்ற தாணைத் தளபதிகள் என்ன ஆனார்கள் என்றுமறியா வகையில் அவர்கள் பெயர் மறைந்தது. தளபதிகளுக்கே இப்படியென்றால் சாதாரண தொண்டன், உணர்வு கொண்ட தமிழ் மக்களுக்கெல்லாம் என்ன நடந்து இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். வெட்கப்படும் அளவுக்கு வேதனை கொண்டோம்.

அலங்கரிக்கும் அரசியல் கதிரையின் சுகபோகத்தில் தமிழனின் விழிப்பு வீழ்ச்சி கொண்டது. வெட்கப்பட்டு வேதனைப்பட்டு வழி தடுமாறி நிற்கின்றது.

இன்று அந்த தமிழ் விழிப்பு நிலையில் வந்த தளபதிகளில் ஒருவர் மட்டும் கதிரையை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார். ஆனால் தந்தை பொரியாரின் சுயமரியாதை கோசம் மட்டும் உயரவேயில்லை. இதனால் இன்று தமிழ் இளைஞர்கள் தமிழ் பெரியார்களை, தமிழ் அறிஞர்களை எல்லாம் சும்மா பேச்சாளர்களாகவே பார்க்கின்றனர்ஃ

இந்த நிலை மாற வேண்டும். இராமன் அணை விவகாரம் தமிழ் நாட்டையும், ஈழத்தையும் தொடர்பு கொண்ட ஒரு வரலாறு. இது கவி குளம் கட்டியதோ அணில் குளம் கட்டியதோ என்பதல்ல எங்கள் வாதம். இது எங்ள் நாட்டை சார்ந்த வரலாறு. இதன் பின்புலம் ஒரு வணக்க வழிபாடும் உண்டு. ராமர் கதை கற்பனை என்ற வாதத்தை நாம் ஏற்றுக் கொள்வோம். அப்படியென்றால் அந்த கதையை புணைந்த வால்மிகி முனிவருக்கு கடலுக்கடியில் தமிழ் நாட்டுக்கும், ஈழ நாட்டுக்கும் இடையில் உள்ள நீருக்கடி தொடர்பை எப்படி தெரிந்து கொண்டார். அவர் கடலுக்குள் நீந்தி போய் கண்டாரா இல்லை கணணி மூலம் பார்த்தாரா?

அது போகட்டு; இலங்கை தீவில் மலை நாட்டில் ஓரிடம் உண்டு. இதற்கு நுவரெழியா என்று பெயர் இங்கு சீதா எழிய என்ற ஒரு இடம் உண்டு. இது காடும் வனமும் சேர்ந்த இடம். இந்த இடத்தில் தான் சீதையை ராவணன் சிறை வைத்திருந்தான் என்றும், இங்கு சீதா பிராட்டி குளித்த இடம், உறங்கிய இடம் என்று அடையாள படுத்தக்கூடிய கதைகளும் உண்டு. பிரிதொரு இடத்தில் விகாரை ஒன்று உள்ளது. அதற்கு "திவுருங்வெல" விகாரை என்று பெயர். அதாவது சீதை தீக்குளித்து சத்தியம் செய்தது இந்த இடத்தில் தான் என கதைகள் கூறுகின்றன. இப்படி பல அடையாள கதைகள் உண்டு. இவற்றை ஆராய்வோர் ஆராயலாம்.

ஆராய ஆயிரம் உண்டு. இன்று நமது திராவிட பெரியார் எடுத்துக் கொண்டு வெளி வந்த சுய மரியாதை இன்று உள்ளதா? தமிழனுக்கு பாரதத்தில் மரியாதை உண்டா? "கண்ணீர் துளிகள்" என அவரால் தூற்றப்பட்டவர்களாவது இன்று சுயமரியாதையை பெற்று விட்டனரா?

"தமிழ் மொழியும் தமிழ் கலை கலாசாரங்களையும் உலகம் எல்லாம் பரப்ப வழி செய்வோம"; என்ற பாரதியின் கனவு என்ன ஆனது? இந்த நேரத்தில்:-

1956ம் ஆண்டு ஈழத்திருநாட்டில் தமிழர்களின் மொழியுரிமை மறுக்கப்பட்டது. அன்று காந்தியின் வழியில் ஈழத்திருநாட்டில தந்தை செல்வநாயகத்தால் சத்தியாகிரக போராட்டம் ஆரம்பமானது. சுpங்கள காடையர் அதாவது சிங்கள காடையர்களால் அனுப்பப்பட்டவர்களால் கல்லெரிந்து காயப்படுத்தி அடித்து உதைத்து கலைக்கப்பட்டது. இங்கு தமிழனின் சுயமரியாதைக்கு ஏற்பட்ட களங்கத்திற்கு அன்று தமிழ் நாட்டில் அண்ணாவின் தலைமையில் ஆதரவு கூட்டங்கள் நடைபெற்றன. அதில் இன்றைய தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் அன்று பேசியதில் ஒன்றை நினைவு கூற விரும்புகின்றேன்.

"தமிழனுக்கு என்று ஒரு கொடியிருந்தால்

தமிழனுக்கு என்று ஒரு படை இருந்திருந்தால்

இன்று ஈழத்தில் தமிழர் துயர் படுவாரோ?"

என்று இள வயதின் துடிப்பின் காரணமாக அடுக்கு மொழியில் அன்று கூறியது இன்று என்ன ஆனதோ? இன்று இந்தியாவில் தமிழனுக்கு என்று ஒரு கொடியுண்டா அல்லது தனக்கென துடிப்பான படைதான் உண்டா? அன்று ஒரு படை இருந்ததோ இல்லையோ தெரியாது. ஆனால் இன்றும் தமிழன் வதைப்பட்டு உதைப்பட்டு வீடிழந்து நாடிழந்து உலகெங்கும் பரவி கிடக்கின்றார்கள். அதேநேரம் எஞ்சியுள்ள தமிழர்களோ படும் வதையோ சொல்லில் அடங்காது. பெரும் பெரும் கொடுமைகள் தமிழருக்கு எதிராக அரங்கேறுகின்றன.

அத்தோடு இலங்கை சிங்கள படைகளுக்கு இந்திய அரசு ஆயுத உதவிகள் செய்கின்றது. சிங்கள படைக்கு பயிற்சி வேறு அளிக்கின்றது. ஈழ தமிழர் படும் அல்லல்களை இந்தியாவில் யாரும் நினைத்தால் கூட தமிழக அரசே சட்டம் போட்டு அந்த உணர்வை அடக்குகின்றது. தமிழர் எழுச்சியை, தமிழர் விடுதலை உணர்வை சிங்கள அரசோடு சேர்ந்து அடக்குகின்றது. தமிழக இளைஞர்களோ துடிக்கின்றார்கள். முறையான தலைமையொன்றை தேடுகின்றார்கள்.

ஆனால் தமிழ் மாநில முதலமைச்சரோ அன்று மேற் கூறிய வார்த்தைக்கு உரியவரான கலைஞர் கருணாநிதி அவர்கள் தான் கூறியதையையே தான் மறந்து தமிழர்களை அழித்து ஒழிக்க படைக்கலங்களும் பயிற்சிகளும் சிங்கள படைகளுக்கு கொடுத்து உதவுகின்றார். உறங்கும் பூனை பொல் தான் ஒன்றும் அறியாத அப்பாவி போல் தமிழகத்திலுள்ள தமிழ் ரத்தங்களை ஏமாற்றுகின்றார்.

மற்ற துடிப்பான தலைமைகளோ தம்மத்தியில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற முதுபொழியை பின்பற்றாமல் ஒற்றுமையின்றி தனித்தனியாக இயங்குவதால் உலகம் முழுதும் உள்ள தமிழர்கள் வெட்கப்பட்டு வேதனைப்பட்டு நிற்கின்றோம். இன்று உலகம் தமிழர்களை பார்த்து கேலி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

உயிரை இழந்து, உடமையை இழந்து, உறவுகளை இழந்து கடைசியில் பூர்வீக நிலத்தையும் இழந்து யுத்த பூமியில் செத்து மடிகிறோம். எங்கள் தொப்புள் கொடி உறவுகளெல்லாம் தவித்து மாய்கின்றன. ஆனால் தமிழனின் தலைவர் என்று கவி ஞாலம் போடுபவர் மட்டும் இன்னும் சயனத்தில். நன்றாக தூங்கட்டும். அவர் விழிக்கும் போது அவரின் நாட்காலி பறிக்கப்பட்டிருக்கும்.
—அ. சுப்பிரமணியம்–தாயகத்தில் இருந்து.

 

http://www.nerudal.com/nerudal.1249.html

StumbleUpon.com Read more...

புலிகளை ஓரே நாளில் அடித்து முடித்துவிட முடியும்

http://epaper.thinakkural.com/images/articlepopup_bottomleft.gif

StumbleUpon.com Read more...

ராஜீவ் கொலையில் சுப்பிரமணியசாமி தொடர்பு - பெரியார் முழக்கம்

 
 
ராஜீவ் கொலையில் நடந்த சதி பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட ஜெயின் கமிஷன் சந்திராசாமி - சுப்ர மணியசாமி இருவர் மீதும் சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. ராஜீவ் கொலையில் - தமிழகத் தலைவர்களைத் தொடர்புபடுத்தி மிரட்டி வந்தவர் சுப்ரமணியசாமி. இந்த பார்ப்பனரே - ராஜீவ் கொலையில் சந்தேகத்துக்கு உரியவர். ஜெயின் கமிஷன் - சுப்ரமணியசாமி மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
ஜெயின் கமிஷன் அறிக்கையில் சுப்ரமணியசாமி பற்றி கூறப்பட்டிருப்பது என்ன? இதோ சில பகுதிகள்:
1995 ஜூன், ஜூலையில் சந்திராசாமியும், சுப்ரணியசாமியும் லண்டனுக்குப் போயிருக்கிறார்கள். இவர்களில் லண்டன் பயணத்தின் நோக்கம் குழப் பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்து கிறது.
காலிஸ்தான் விடுதலைப் படையைச் சார்ந்த ஜெக்ஜித்சிங் சவுகான் என்பவர் - அகாலிதளம் கட்சியைச் சார்ந்த சேவா தாஸ் என்பவரிடம் ராஜீவ் காந்தியைக் கொல்லத் திட்டம் இருப்ப தாகக் கூறி இருக்கிறார். இதை சேவா தாஸ் என்பவர் ஜெயின் கமிஷன் முன் தெரிவித்தார். லண்டனில் உள்ள சவுகான் வீட்டில் - தீவிரவாதிகள் பங்கு கொண்ட ஒரு கூட்டம் நடந்தது என்றும், அதில் இந்தக் கொலைத் திட்டம் பற்றி கூறப்பட்டது என்றும் அவர் மேலும் கூறினார். இந்த நிலையில் - சவுகானை அப்ரூவராக மாறும்படி வலியுறுத்தவே சந்திராசாமியும், சுப்ரமணியசாமியும் லண்டன் சென்றார்களா என்று, கமிஷனில் கேள்வி எழுப்பப்பட்டது. ஜெயின் தனது அறிக்கையில் இதைக் குறிப்பிட்டு சுப்ரமணியசாமிக்கு எதிராக சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறார்.
கமிஷன் முன்பு சுப்ரமணியசாமி நடந்து கொண்ட முறையையும் கமிஷன் குறை கூறியுள்ளதோடு, பல தேவை யான பொருத்தமுள்ள கேள்விகளுக்கு, சுப்ரமணியசாமி பதிலளிக்க மறுத்து விட்டதால் உண்மையைக் கண்டறிய அவர் ஒத்துழைக்கவில்லை என்றும் கமிஷன் தனது அறிக்கையில் 8-வது பகுதியில் 231-வது பக்கத்தில் சுட்டிக் காட்டியுள்ளது.
If would appear that consistant and persistant effort is there on his (Subramania samy) part not to answer the questions which are most relevant in order to find out the truth (jain commission report vol. viii-page 231)
இந்தப் பின்னணியில் - சுப்ரமணிய சாமி பற்றி அவரது கட்சிச் செயலாளராக இருந்த வேலுசாமி என்பவர் ஜெயின் கமிஷன் முன்பு அளித்த சாட்சியத்தையும் குறிப்பிட வேண்டும்.
வேலுசாமி அளித்த சாட்சியம்:
1991 மே 24-ம் தேதியோடு தமிழகத் தில் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இருந்தது. அதற்கு 3 நாட்களுக்கு முன்பு மே 31-ம் தேதி ராஜீவ் திருப்பெரும் புதூரில் கொலை செய்யப்பட்டார்.
மே 19-ம் தேதி தில்லியிலிருந்து தமிழகம் வந்த சுப்ரமணியசாமி திருப்பெரும்புதூர் பகுதிக்குத்தான் சென்றார். திருப்பெரும்புதூர் வழியாக நாங்கள் காஞ்சிபுரம் சென்று, பகல் உணவை முடித்துக் கொண்டு வாலாஜா பாத்துக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு, மீண்டும் காஞ்சிபுரம் திரும்பி கூட்டம் பேசிவிட்டு, பிறகு திருத்தணி, பள்ளிப்பட்டுக்குச் சென்று பிரச்சாரம் செய்துவிட்டு வேலூர் திரும்பினோம்.
அடுத்த நாள் 20-ம் தேதி சேலம், ஆத்தூர் சென்றுவிட்டு நான் விடை பெற்று திருச்சி சென்றுவிட்டேன். அடுத்து 21-ம் தேதி காலை சுப்ர மணியசாமி, விமானம் மூலம் டில்லி செல்லத் திட்டமிட்டிருந்தார். 21-ம் தேதி பகலில் டில்லியில் ஒரு முக்கிய வேலை இருக்கிறது. எனவே, அதை முடித்துக் கொண்டு 22-ம் தேதி சென்னை வந்து திருச்சி வழியே மதுரைக்குச் செல்கிறேன் என்று என்னிடம் சுப்ரமணியசாமி பயணத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார்.
21-ம் தேதி இரவு தான் ராஜீவ் கொலை செய்யப்படுகிறார். அன்று சுப்ரமணியசாமி நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தது. 21-ம் தேதி காலையில் அவர் திட்ட மிட்டபடி டில்லி செல்லவில்லை. அவரின் அன்றைய அனைத்து நடவடிக்கைகளும் மர்மமாகவே இருந்தன. அன்று, அவர் யாரை யாரைச் சந்தித்தார் என்ற விவரங்களும் ரகசியமாகவே இருக்கின்றன. 21-ம் தேதி காலை அவர் சென்னை விமான நிலையம் அருகே உள்ள டிரைடென்ட் ஓட்டலில்தான் தங்கியிருந்தார். சென்னையில் அவர் ஏன் மர்மமாகத் தங்கினார் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது. தன் கட்சியின் நெருங்கிய தோழர்களுக்குக் கூட தெரிவிக்காமல் அவர் தில்லி பயணத்தை ரத்து செய்தது ஏன் என்பது மர்மமாகவே இருக்கிறது.
நான் 21-ம் தேதி காலை - தில்லிக்கு சுப்ரமணியசாமியின் வீட்டுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண் டேன். அவர் சென்னையில்தான் இருப்பார் என்று அவரது மனைவி கூறினார். பிறகு கட்சிப் பிரமுகர்களிடம் தொடர்பு கொண்டு விசாரித்தேன். சுப்ரமணியசாமி எங்கு இருக்கிறார் என்ற விவரம் யாருக்கும் தெரியவில்லை.
21-ம் தேதி காலை தில்லிக்கு விமானம் மூலம் புறப்படப் போவதாகக் கூறிய சுப்ரமணியசாமி அன்று காலையில் தில்லி பயண டிக்கெட்டை ரத்து செய்தார். பிறகு சென்னையி லிருந்து பெங்களூருக்கு திருப்பெரும் புதூர் வழியாக காரில் செல்ல வேண்டிய அவசியமென்ன? இதைத் தனது முக்கியத் தோழர்களுக்குக்கூட தெரிவிக்காமல் மறைத்தது ஏன்?
பெங்களூரில் யாரைச் சந்திக்க அவர் அவசரமாகப் போனார்? ராஜீவ் கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் பெங்களூரைத் தளமாகக் கொண்டு செயல்பட்டிருக்கலாம். ராஜீவ் கொலைக்குப் பிறகு கூடி அவர்கள் பெங்களூர் வழியாக வெளிநாட்டுக்குத் தப்பியிருக்கலாம். இந்த நிலையில் பெங்களூருக்கு யாரையோ அவசர மாகச் சந்திக்க சுப்ரமணியசாமி சென்றிருக்கிறார்.
அப்போது சுப்ரமணியசாமி மத்திய அமைச்சர். அமைச்சர் பதவிக்குரிய பல்வேறு வசதிகள் அவருக்கு உண்டு. மே 21-ம் தேதி அவருக்காக செய்யப் பட்ட ஏற்பாடுகள் என்ன? பாது காப்புக்காக செய்யப்பட்ட வசதிகள் என்ன? இது பற்றிய ஆவணங்களை தமிழக அரசு மற்றும் மத்திய அரசிடமிருந்து ஜெயின் கமிஷன் பெற வேண்டும்.
21-ம் தேதி இரவு 10.25 மணிக்கு நான் சுப்ரமணியசாமி வீட்டுக்குத் தொலை பேசியில் பேசினேன். அப்போது ராஜீவ் கொலை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. யாருக்குமே எதுவுமே தெரியாது. 23-ம் தேதி அவரது திருச்சிப் பயணத்தை உறுதி செய்து கொள்ளவே நான் தொடர்பு கொண்டேன். தொலைபேசியை எடுத்த சாமி, என் குரலைக் கேட்டதும், மிக சர்வ சாதாரணமாக, ராஜீவ் காந்தி படு கொலை செய்யப்பட்டுவிட்டார் என்ற செய்தியைச் சொல்லத்தானே போன் செய்தீர்கள்? என்றார். நான் அதிர்ந்து போனேன். வெளி உலகத்துக்குத் தெரியாத தகவல் - இவருக்கு மட்டும் எப்படி தெரிந்தது?
சிறிது நாட்கள் கழித்து - அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் டிருந்த திருப்பெரும்புதூர் காங்கிரஸ்  வேட்பாளர் மரகதம் சந்திரசேகரை நலம் விசாரிக்க நானும் சாமியும் போனோம். மரகதத்துக்குத் துளி காயம் கூட ஏற்படவில்லை. மரதகம் அம்மாள் பாசாங்கு செய்வது போலவே எனக்குத் தோன்றியது.
மரகதம் பற்றி பேச்சு எடுத்தபோது - அறையில் சொல்கிறேன் - நிறைய விஷயம் இருக்கு என்றார் சாமி. திருப் பெரும்புதூரில் - பொதுக் கூட்டத் துக்குத் தேர்வு செய்த இடம் மரகதத்துக்கேத் தெரியாது. அவருக்கே தெரியாமல் சிலர் தேர்வு செய்து விட்டனர். அது சதிகாரர்களுக்குச் சாதகமாகிவிட்டது என்றார் சாமி. இந்த அளவுக்குத் துல்லியமான தகவல்கள் சாமிக்கு எப்படித் தெரிந்தன?
பிரதமர் சந்திரசேகருக்குத் தெரியும் முன்பே எனக்கு ராஜீவ் மரணச் செய்தி தெரிந்துவிட்டது என்று சுப்ரமணியசாமி கூறியிருப்பதை கமிஷன் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- என்று சுப்ரமணியசாமியுடன் மிக நெருக்கமாக உடனிருந்த திருச்சி இ.வேலுசாமி தனது சாட்சியத்தில் கூறி இருக்கிறார்.
ஜெயின் கமிஷன் முன்பு தரப்பட்ட இந்த சாட்சியமும் கமிஷன் தந்துள்ள பரிந்துரையும் சுப்ரமணியசாமி மீது விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. 

 

 

StumbleUpon.com Read more...

சர்வதேசத்தின் நகர்வுகள் களத்தில் மாறுதலை ஏற்படுத்துமா?-இதயச்சந்திரன்

 
வன்னிக் களம் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. புதுக்குடியிருப்பை கைப்பற்றிவிட்டோமென கூறிய மறுதினமே, அங்கு தொடர்ந்தும் சண்டை நடைபெறுவதாக உதய நாணயக்கார கூறுகிறார்.
இராணுவம் நிலைகொண்டுள்ள, பின் தளப்பகுதிகளில், விடுதலைப் புலிகளின் அணிகள், ஊடுருவித் தாக்குதல் மேற்கொள்வதாக களச் செய்திகள் வெளிப்படுத்துகின்றன.

அதேவேளை இரு வாரங்களிற்கு முன்னர், ஒட்டிசுட்டானில் அமைந்துள்ள கட்டளை மையம்

தாக்கப்பட்டதாக பாதுகாப்பு இணையத்தளம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன் எதிர் வினையாக, முன்னரங்கில் மோதலில் ஈடுபட்டுள்ள சில அரச படையணிகள் பின்னகர்த்தப்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அரசு கூறும் குறுகிய நிலப்பரப்பில், சமர்கள் தீவிரம் அடையும் அதேவேளை கொழும்பு மீதான வான் கரும்புலிகளின் தாக்குதல்கள் பலத்த சேதத்தை உண்டு பண்ணியுள்ளன. அரச இறைவரித் திணைக்களம் மீது இத் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக இராணுவப் பேச்சாளர், உண்மையை மூடி மறைக்க முயன்றுள்ளார். பாதுகாப்புக் காரணங்களைக் கூறி, வான்படைத் தலைமையகத்தைப் பார்வையிட, ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

அயல்நாட்டு வானோடிகள் 12 பேர், இத்தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஆதார பூர்வமான செய்தியன்று வெளிவந்துள்ளது.இந்த அந்நியப்படை வானோடிகளே, முன்னரங்கில் யுத்த உலங்கு வானூர்திகளை இயக்குவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.கடைசியாகக் கையிருப்பில் இருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு விமானங்களையும் சுட்டு வீழ்த்தி, வான்புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டிய சிங்களத்தின் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்கா, விடுதலைப் புலிகளின் விமானங்களால் இந்தியாவிற்கு ஆபத்து ஏற்படலாமென்று ஒன்றுக்குப் பின் ஒன்று முரணான தகவல்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

அச்சமூட்ட இவ்வாறான கண்டுபிடிப்புக்களை வெளியிடும் சரத்பொன்சேக்கா, தாக்குதல் நடாத்திய விமானத்தில் காணப்பட்ட தொடர் இலக்கங்களிலிருந்து, அவை தென்னாபிரிக்காவிலிருந்து பெறப்பட்டதாக புதிய தகவலொன்றையும் உலவ விட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவில் அதிகரித்து வரும் ஈழ ஆதரவுப் போராட்டங்களைச் சிதைப்பதற்கு, அந்நாட்டின் மீது அவதூறுகளை சுமத்தும் உத்திகளை சிங்களம் கையாளத் தொடங்கியுள்ளதென்று கருதலாம். ஆனாலும் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரசும், கம்யூனிஸ்ட் கட்சியும் மற்றும் பல இன அழிவுக்கெதிரான அமைப்புக்களும் இணைந்து குவாசுலு என்கிற மாநிலத்தில் நிகழ்த்திய ஈழ அங்கீகாரப் போராட்டமே சிங்களத்தை அதிர வைத்துள்ளதென்பதை இவர்களின் பரப்புரைகளிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

அதேவேளை பிரித்தானிய நாடாளுமன்றத்திலும், அமெரிக்க செனட் சபை விசேட கூட்டத்திலும் சிறீலங்கா விவகாரம் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளதை நோக்கலாம். ஆனாலும் இலங்கையில் நடைபெறுவது பயங்கரவாதப் பிரச்சனை என்கிற தனது கோட்பாட்டிலிருந்து, இன்னமும் பிரித்தானிய வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்ட் அவர்கள் மாறவில்லைபோல் தெரிகிறது.சிறீலங்காவிற்கான பிரித்தானியாவின் விசேட தூதுவராக. திரு. டெஸ் பிறவுனி (DES BROWNE) அவர்களை நியமித்திருப்பதாக, பல வாரங்களாகக் கூறப்படும் கதையே திரும்பவும் பெருமையாக முன் வைக்கப்பட்டது.

பிரித்தானியா ஓரங்கட்டிய விவகாரத்தை ஒரு உறுப்பினர் அம்பலமாக்கியபோது டேவிட் மிலிபாண்ட் கொடுத்த விளக்கம், மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது.அதாவது இவ் விவகாரத்தை பாதுகாப்புச்சபையில் முன்வைக்கும் போது, யாராவது ஒரு உறுப்பினர் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அந்நகர்வினைத் தடுத்தால், அதனை மறுபடியும் கொண்டுவர முடியாத இக்கட்டான நிலையன்று ஏற்படலாமென்பதால், தாம் அதற்கு அநுசரணை வழங்கவில்லையென்று புதிய வியாக்கியானமொன்றை பிரி, வெளியுறவு செயலர் கூறியிருந்தார்.

அதேவேளை அமெரிக்க செனட்சபையின் விசேட கூட்டத்தில் சிறீலங்கா விவகாரம் சற்று ஆழமாக விவாதிக்கப்பட்டது.வெளியுறவிற்கான உப குழு ஏற்பாடு செய்திருந்த இக்கட்டத்தினை திரு. கேசி ( Casey)வழிநடாத்த, 2003 - 2006 வரை சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவராகவிருந்த திரு. ஜெவ்ரி, லன்ஸ்டெட் அவர்களும், மனித உரிமைக்கண்காணிப்பகத்தின் விசேட ஆய்வாளர் அனா. நைஸ்ரட் (Ms. Anna Neistat)அம்மையாரும், செனட்டர் திரு. பொப். பீட்ஸ் (BOB.DDIETZ) அவர்களும் பங்குபற்றினர்.

சிறீலங்காவின் ஊடக அடக்கு முறை குறித்து விரிவாக ஆராய்ந்த பொப். பீட்ஸ் அவர்கள், எதிர்கால சிறீலங்கா அரசின் மாற்றங்கள் குறித்து பேசுகையில், அந்நாடு இன்னுமொரு சிம்பாம்வேயாகவோ அல்லது இராணுவ ஆட்சி நடக்கும் மியன்மார் (பர்மா) போன்றோ தோற்றம் பெறலாமெனக் கூறினார்.ஆயினும் ஜோர்ஜ் புஷ்சின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கத் தூதுவராகப் பணிபுரிந்த ஜெவ்ரி லன்ஸ்டேட்டின் பேச்சில், சிங்களத்திற்கு சார்பான தொனியே அதிகம் காணப்பட்டது.மகிந்த இராஜபக்ச ஒரு இனவாதி அல்ல என்கிற கருத்தை உறுதிபடக் கூறினார் லன்ஸ்டேட். அத்தோடு அமெரிக்காவைப் பொறுத்தவரை, எந்தவிதமான கேந்திர நலனும் சிறீலங்காவில் இல்லையென்பதை அவர் கூற முற்பட்டாலும், ஏனையோர் நிகழ்த்திய உரைகளில் அதன் உண்மைத் தன்மை வெளிப்பட்டது.

தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதால், அமெரிக்கா இப்பிரச்சனையில் தலையிட்டு, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இது குறித்த தீர்மானமொன்றினை நிறைவேற்ற வேண்டுமென அனா. நைஸ்ராட் அம்மையார் கூறுகையில், இதனை ரஷ்யாவும், சீனாவும் தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுக்குமென்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது.இந்த விவாதத்தில் கலந்துகொண்ட அனைவரும், இரண்டு முக்கிய விடயங்கள் குறித்து பேசுவதை தவிர்த்தார்களென்றே கூற வேண்டும்.

தமிழ்மக்களின் ஏக தலைமை, தமிழீழவிடுதலைப் புலிகள் என்கிற பேருண்மையை இப்பெருமக்கள் ஒத்துக்கொள்ள விரும்பவில்லை. இரண்டாவதாக, சர்வதேச வல்லரசாளர்களின் ஆடுகளமாக சிறீலங்கா மாறிவிட்டதென்கிற பிராந்திய யதார்த்தத்தையும் இவர்கள் ஆராய முயலவில்லை. சீனாவும் பாகிஸ்தானும், சிறீலங்காவின் நிரந்தர நண்பர்கள் என்பதையும், தற்காலிக தந்திரோபாய நண்பன் இந்தியா என்பதையும், இவர்களின் விவாத உட்பொருள் உணர்த்தினாலும், சிங்களத்தின் சர்வதேசப் பார்வை குறித்து இவர்களின் சந்தேகம் அதிகரித்திருப்பதை காணக்கூடியதாகவிருக்கிறது.விடுதலைப்புலிகளை சிங்களத்தால் அழிக்க முடியாதென்கிற கருத்தும் இவர்களிடம் தென்படுகிறது.

உருமாற்றமடையக்கூடிய போராட்ட வடிவங்கள் பற்றி எல்லோரும் பேசினார்கள்.இந்தியாவை மீறி, புதிய நகர்வொன்றை துணிவாக முன்னெடுக்க முடியாத தடுமாற்றமும், பொருளாதார நண்பன் ஜப்பான் சுமத்தும் சிங்கள சார்பு அழுத்தங்களும், அமெரிக்காவை ஆட்டிப்படைப்பதுபோல் தெரிகிறது.ஆயினும் வலிந்த தாக்குதல்களை முன்னெடுத்து சில பிரதேசங்களை விடுதலைப் புலிகள் மீட்டெடுத்தால், அமெரிக்கத் தயக்கம் மாறுதலடையலாம்.அதனையே அமெரிக்க அரசு எதிர்பார்ப்பது போலுள்ளது.

-இதயச்சந்திரன்-


நன்றி ஈழமுரசு.

நன்றி:தமிழ்கதிர்

 

http://www.swisstamilweb.com/

StumbleUpon.com Read more...

வன்னியின் பல பகுதிகளிலும் ஊடுறுவல்,கரும்புலித்தாக்குதல்

     
[    
  
altவன்னியில் பல பகுதிகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் ஊடுறுவித்தாக்குதல் நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதுடன் கரும்புலித்தாக்குதல்களையும் நடத்தியுள்ளதாக படை வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.
 
நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆணையிரவின் கிழக்கே உள்ள வண்ணாண்குளம் பகுதியில் ஊடுறுவி தாக்குதல் நடத்திக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் அணிகளில் இருந்த பெண் கரும்புலி ஒருவர் இந்த கரும்புலித்தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்போது கரும்புலி பெண் சிங்கள படையின் 55ஆவது படைப்பிரிவின் மீதே தாக்குதல் நடத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
 
இந்த மோதலின்போது படையினருக்கு பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவித்துள்ளதோடு மோதல் தொடர்ந்து இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.

 
இந்த தாக்குதலில் ஊடுறுவியுள்ள விடுதலைப்புலிகளின் அணிகள் வெற்றிலைக்கேணியின் பல பகுதிகளிலும் தாக்குதலில் ஈடுபட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதேபோன்று சாலைப்பகுதியிலும் விடுதலைப்புலிகளின் அணிகள் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

http://www.swissmurasam.net/2008-10-17-05-11-45/12642-2009-03-04-11-37-43.html

StumbleUpon.com Read more...

இலங்கையில் நடப்பது குருட்டுத்தனமான போர். தமிழர்களும் சிங்களவர்களும் சகோதரர்கள்

இலங்கையில் நடப்பது குருட்டுத்தனமான போர். தமிழர்களும் சிங்களவர்களும் சகோதரர்கள். - தமிழ் பெளத்தர்கள் ஒரு பார்வை. : நோர்வே நக்கீரன்

முப்பது வருடங்களுக்கு மேலாக விழும் பிணங்ளை பிழை பிழையாக எண்ணியே கணக்குப் படிகிறார்கள் எங்கள் பிள்ளைகள்.

ஆமியில் ஒரு பிணம் இரண்டாகவும், தமிழ் பிணம் அரையாகவுமே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். ஆசிரியருக்கு என்னவழுத்தமோ யாரறிவார்.

அரசும் அதிகாரங்களும் ஆமிப் பிணங்களைக் காற்பங்காகவும் தமிழர் பிணங்களை தலைக்கு நான்கு

மேலாகவும் கணக்கெடுத்து வரவு வைக்கிறது. புதிய கணித மேதைகள் எங்கள் நாட்டில் இப்படி உருவாகிறார்கள். வாழ்க கணிதம்.

இலங்கையில் போரானது அடிப்படையில் அர்த்தமற்ற கணக்கு என்பதை எத்தனைபேர் அறிவார்கள். இதை முதலில் சிங்கள அரசியல்வாதிகளும், அறிவுஜீவிகளும் அறிந்து கொள்வது மிக முக்கியமானது. அரசு அழிக்க நினைப்பதும் அழிப்பதுவும் தமதுடன் பிறப்புக்களான தமிழர்களையே.

மகாவம்சம் காலங்காலமாக சிங்கள அரசியல் நலனுக்காகவும், சிங்கள நலனுக்காகவும் மாற்றி மாற்றி எழுதப்பட்டதே மகாவம்சம். திறந்த மனங்கொட்டவர்களால் இதைத் திருத்தியமைக்கக்கூட முடியவில்லை. தேசியம் தேசியம் என தமிழ், சிங்கள அரசியல்வாதிகள் கட்டியெழுப்பியது துவேசத்தையும் பிரிவினையையும் இனவிரோதங்களையுமே.

இலங்கை பல இராசதானிகளை காலங்காலமாகக் கொண்டிருந்தது. இதில் முக்கியமானவை யாழ்பாண, கோட்டை, கண்டி இராச்சியங்களாகும். சில காலகட்டங்களில் தென்னிந்திய தமிழ் அரசுகள் முக்கியமாக சோழ பாண்டிய அரசுகள் இலங்கையில் கோலோச்சியுள்ளன. சிங்களவர் தம்மை ஆரியரென்றும் உயர்ந்தவர்கள் என்றும் மகாவம்சம் கூறிக்கொள்வதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் கிடையாது. விஜயன் வடஇந்தியாவில் இருந்து வந்தான் என்றும் அவன் இங்குள்ள கறுப்பும், கட்டையுமான வேடுவப் பெண்ணை மணந்தான் என்றும் கட்டுக்கதைகளை விட்டு இலங்கையில் ஒர் அர்த்தமற்ற இனவழிப்பு நடந்து கொண்டிருக்கிறது.

விஜயனும், நண்பர்களும் துஸ்டர்கள் என்று ஒரிசார், பீகார் போன்ற இந்திய மேற்குப் பகுதியில் இருந்து அரசனான விஜயன் தந்தையால் நாடு கடத்தப்பட்டார்கள். இவர்கள் இலங்கையில் கரையொதுங்கி வேடுவகுலத்தை திருமணம் செய்ததால் சிங்களவினம் உருவானது என்பது ஒருகதை. நல்ல உயரமும், அழகும், பராக்கிரமமும் கொண்ட இந்திய விஜயனும் நண்பர்களும் இப்படிப்பட்டு கறுப்பும் குள்ளமான குவேனியையும் வேடுவிச்சிகளையும் கல்யாணம் கட்டினார்கள் என்பதை நம்பக்கூடியதாக இருக்கிறதா? தவித்தவாய்க்குத் தண்ணீராக இருந்திருக்கலாம். ஆனால் உண்மை….?

மதமாற்றங்கள் :

தேவநம்பியதீசன் எனும் இந்து மன்னன் வேட்டையாடிக் கொண்டு இருக்கும் போது ஒருகுரல் கேட்டுத் திரும்பினான். அந்தக் குரல் கூறியது "மானைத் தொடரும் மன்னரே மதியத் தொடர்வீராக" இது ஒரு பிச்சுவின் குரல். இதனை அடுத்து பல மூளைச்சலவையின் பின் தீசன் புத்தனானான் அவனைத் தொடர்ந்து அவன் ஆட்சியின் கீழ் இருந்த மக்களும் புத்தமதத்தைத் தழுவிக்கொண்டார்கள் என்பதுதான் உண்மை வரலாறு.

புத்தமதமானது சாம்பிராட் அசோகனின் காலத்தில் அல்லது அதற்குப்பின்தான் இலங்கைக்கு வந்திருக்க முடியும். அப்போது இலங்கையில் வேறு ஒருமதம் பிளக்கத்தில் இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு. சிங்களவர்கள் எல்லாம் புத்தமதத்தவர்கள் என்று வாதிடுவார்களானால் இவர்கள் அசோகன் காலத்துக்குப் பிந்தியவர்கள் என்பது உறுதி. இதன் பிரகாரம் சிங்கள இனம் மட்டுமல்ல மதமும் வந்தேறியதே.

சுமார் 13ம் நூற்றாண்டுகளில் வடபகுதியான யாழ்பாணத்தில் தொற்றுநோய் காரணமாக பெருந்தொகையான மக்கள் அழிந்தார்கள். இதனால் யாழ் மன்னன் இந்தியாவின் தென்பகுதியில் இருந்து குடியும் குடித்தனமுமாக தமிழர்களை யாழ்பாணத்தில் குடிறேற்றினான். இதனால்தான் யாழ்பாணப்பகுதியில் வாழ்பவர்கள் பேசுவது சிலவேளை மலையாளிகள் பேசுவதுபோல் இருக்கிறது என்று இந்தியத் தமிழர்கள் சொல்வார்கள். சிங்கள மக்களும் அரசும் தமிழர்கள் 13ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து வந்தவர்கள் தான் முன்பே வந்து நாடு பிடித்தவர்கள் உரிமையுள்ளவர்கள் என்று கூறுகின்றனர். இதுவே சிங்களவரின் வெறுவாய்க்கு அவல் கிடைத்த மாதிரியாகிற்று.

இலங்கையின் வடபகுதியான யாழ்பாணத்தில் வாழ்ந்த தமிழர்கள் புத்த மதத்தைத் தழுவியிருந்தனர் என்பதற்கான ஆதாரங்கள் அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் இரண்டு காப்பியங்கள் புத்தகாப்பியங்கள் என்பதினூடாகவும் புத்தமதம் தமிழுக்கு அன்நியமில்லை என்பதும் நிரூபணமாகிறது. தமிழர்கள் இலங்கையிலும் இந்தியாவிலும் பலபகுதிகளில் புத்தமதத்தைச் சார்ந்து இருந்துள்ளனர். ஒரே மொழியில் பலமதம் என்பது இயற்கையான ஒன்றென்பது கண்ணூடு. இதே போன்று தமிழ்மொழியைக் கொண்ட பௌத்தர்களும் இந்துக்களும் ஒரே காலத்திலேயே யாழ்பாணத்தில் வாழ்ந்திருக்கிறார்கள்.

யாழ்பாணத்தில் மாதகலுக்கருகில் சம்பில்துறை எனும் சிறிய கடற்கரைக் கிராமம் உள்ளது. அது ஒரு துறைமுகமாக இருந்திருக்க வேண்டும். சம்பில்துறை எனும் பெயரிலேயே அது துறைமுகம் என்பது துலங்குகிறது. அங்கேதான் சங்கமித் திரை எனும் பிச்சுணி வந்து இறங்கினாள் என்று சரித்திரம் கூறுகிறது. 80 களில் இக்கிராமத்துக் கடற்கரையில் அன்று நாம் சென்று குளிப்பது வளக்கம். அங்கே ஒரு கற்தூண்வளைவு வீழ்ந்து கிடந்தது. அதுதான் சங்கமித்திரை வளைவுவாகும். அவள் கொண்டுவந்த வெள்ளரசுதான் பறாளாய் முருகமூர்த்தி கோவிலில் அன்று நின்றது இன்று நிற்கிறதோ தெரியவில்லை. கல்வளைவு வைக்கும் அழவிற்கு யாழ்பாணத்தில் தமிழர்களும் அரசும் புத்தமத்தைச் சார்ந்திருந்தார்கள் அல்லது வரவேற்றிருக்கிறார்கள் என்பதே உண்மை.

புத்த சின்னங்கள் கண்டெடுக்கப்பட்ட இடமெங்கும் சிங்களவர்தான் இருந்தார்கள் என்று எண்ணுவதும், விவாதிப்பதும் குருட்டுத்தனமானது. புத்தமதம் சிங்களவர்களுக்கு மட்டும் சொந்தமானது என்பது குருட்டு விவாதமே. புத்தம்சார்ந்த மணிமேகலையின் கதையைக் காவிமாக எழுதிய இளங்கோவடிகள் மலையாளப் பகுதியில் இருந்தே அதை எழுதினார் அதை ஏன் தமிழில் எழுதினார்? மலையாளத்தில் எழுதவில்லை? இன்று மணி மேகலை தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றாக இருக்கிறது. அன்று மலையாளமெனும் மொழி இல்லாது இருந்திருக்கலாம். இருந்தாலும் ஆட்சி மொழியில்லாது இருந்தி ருக்கலாம். பௌத்தம் தமிழுடன் பின்னிப் பிணைந்த ஒன்றாகவே அன்று இருந்திருக்கிறது என்பது சான்று.

உங்கள் மனங்களில் தமிழர்களும் இந்துமதம் எப்படி என்று கேள்வி எழலாம். தமிழர்கள் ஒரு காலத்தில் சிவனை, முருகன், வைரவர், காளி, வீரபத்திரர்களை வணங்கும் சைவர்களாகவே இருந்தார்கள். இந்தச் சிவனை வணங்கும் சைவமானது சமணம், வைஸ்ணவம் புத்தம் போன்ற மதங்களால் அழிக்கப்பட்ட வந்தது. முக்கியமாக புத்தமத வருகையால் சைவம் முற்றாக அழியும் நிலைக்கத் தள்ளப்பட டது. அரசர்கள் மதம் மாறும் வேளை மக்கள் விரும்பியும், விரும்பாமலும் மதம் மாறினார்கள், மாற்றப்பட்டார்கள். சமயகுரவர்கள் தான் மீண்டும் சைவசமயத்தை தென்னிந்தியாவில் கட்டி எழுப்பினார்கள் என்பது தான் வரலாறு.

இலங்கையில் தென்னிந்தியாவின் பாதிப்பு என்றும், ஏன் இன்றும் உள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது. சைவ மதவழிபாடுகளுக்கு முன்னர் தமிழர்கள் மேற்கு இந்தியாவிலும் இன்றைய பாக்கிஸ்தானின் கிழக்குப் பகுதிலும் இருந்த இந்து நதிக்கரையில் மொகஞ்சதாரோ கரப்பா எனுமிடங்களில் நாகரீகமடைந்த ஒரு இனமாக வாழ்ந்தார்கள். ஆரிய வருகை, படையெடுப்புக்களால் வேடுவத்தன்மை குன்றிய திராவிடர்களான தமிழர்கள் புலம்பெயர்ந்து இந்தியாவின் கீழ்பகுதிகளுக்கு நகர்ந்தார்கள் என்பது சரித்திரம். சிந்துவெளிப் பள்ளத்தாக்கில் தமிழர்கள் இயற்கையையும் சிலர் சிவலிங்கத்தையும் வணங்கினார்கள் என்று அறியப்படுகிறது. இது பற்றிய ஆய்வு இக்கட்டுரைக்கு முக்கியமற்றது.

மதவருகைகளாலும் அரசர்களின் மதமாற்றங்களாலும் மொழியில் பல மாற்றம்களும் புதிய மொழிகளும் உருவாயின. உதாரணம் திராவிடமொழிகளான கர்னடம், மலையாளம், தெலுங்கு, துலு. தமிழ்தாய் வணக்கப்பாடலில் இதைக் கேட்கலாம் இந்தத் துலுவே உலகஅழகி ஐஸ்வரியாவின் தாய் மொழி என்பது குறிப்பிடத்தக்கது.

இத்திராவிட மொழிகள் அனைத்தும் தமிழில் இருந்தே உருவாயின. இந்து, பௌத்த மதங்களின் வருகைகளே மொழியில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ஒரு மொழிதானே இனத்தை வரையறுக்கிறது. இதனால் புதிய இனங்கள் உருவாயின. தமிழும் 70 விகித வடமொழியும் சேர்ந்தே தெலுங்கும், 40விகித வடமொழியால் மலையாளமும் உருவாகியது. இதே போன்றே இலங்கையில் சிங்களமும் உருவாகியது என்பதை அறிக. பௌத்தமதத்தின் மந்திரங்களான பிரித்துகள்கள் முக்கியமாக வடமொழியிலும் பாழியிலும் தான் இருந்தது. பாழிமொழி இருந்த இடம் தெரியாது வடமொழிக்கு முன்னரே செத்துவிட்டது. இப்படியான மொழிக் கலப்புக்களால்தான் புதிய இனங்கள் உருவாயின.

இந்தியா பல்லின மக்களையும் மதங்களையும் கொண்ட ஒருநாடு. மதங்கள்தானே உலகில் போர்களின் வித்தாக இருக்கிறது. சரி சிங்களவர் சொல்வது போல் அவர்கள் வடநாட்டில் இருந்து வந்தால் சிங்கள மொழியில் எப்படித் தமிழின் ஆளுமை ஆழமாக அமைந்திருக்கும். ஆக உண்மை என்னவெனில் மதம் மட்டுமே வடமொழி மந்திரங்களுடன் (பிரித்துகள்களுடன்) வந்ததே தவிர மக்களான திராவிடத் தமிழ் இயக்கர் நாகர் அங்கேயே இருந்தார்கள் என்பதே உண்மை. சிங்கள வர்கள் வடவிந்தியாவில் இருந்துதான் வந்தார்கள் எனின் இவர்கள் இலங்கையின் ஆதிகுடியல்லர். இங்கே திராவிடர் ஆரியர் என்ற கதைக்கே இங்கு இடமில்லாது போகிறது. ஆரியம் என்பது ஒருநிலையற்ற சமன்பாடாகும். கிட்லரும் ஒரு சாதிப்ப ட்டியல் வைத்திருந்தான். அதில் யூதரும் கீழத்தேயத்தவர்களும் நாய்களுக்குக் கீழான சாதியென்றே குறிப்பிட்டிருக்கிறான்.

கடைசி மன்னன்:

இலங்கையின் கண்டி மன்னனும் கடைசி மன்னன் தமிழனான விக்கிரமராஜசிங்கன் என்பது யாவரும் அறிந்ததே. இவனுடைய இயற்பெயர் கண்ணுச்சாமி என்பதாகும். இவனை சிறீவிக்கிரமராஜாசிங்கன் என்று அழைப்பது வழக்கம். சிங்களவர் வாழும் பகுதி கண்டி, அங்கே சிங்களவர் தான் வாழ்ந்தார்களா என்பது கேள்விக்குரிய விடயம். முழுக்க முழுக்க சிங்களவர் வாழும் பகுதியில் எப்படி ஒரு தமிழரசன் உருவாகியிருக்க முடியும். இவன் எங்கிருந்து தன்படையுடன் குதித்தான் என்று கூற முடியுமா? கப்பம் கட்டாத சிங்களச் சிற்றரசர்களை சிறைப்பிடித்து அவர்கள் தலையை வெட்டி உரலில் இட்டு அவர்கள் மனைவியரைக் கொண்டு இடிப்பித்தானென்று கூறப்படுகிறது.

இயக்கர் - நாகர்:

மனிதன் குரங்கிலிருந்து வந்தாலும் சரி, மனிதனில் இருந்து வந்தாலும் சரி ஒரு சங்கிலித் தொடராய் மரபணுச்சங்கிலி என்றும் இருக்கும். இயக்கர் நாகர் என்று இரண்டு இனங்கள் இலங்கையில் இருந்ததென்றால் அவை ஒன்றுக்கொன்று இரத் தவுறவுடன்தான் இருந்திருக்க முடியும். வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இங்கும் சிங்களவரும் தமிழரும் இரத்த தொடர்புடையவர்கள் என்பது தெளிவாகியது. தந்தை வேறானாலும் தாய் ஒன்றாக இருந்திருக்கலாம். இயக்கருடன் இந்தி யாவின் வடபகுதியில் இருந்து தந்தையால் துஸ்டர்கள் எனத்துரத்திவிடப்பட்ட விஜயனும் நண்பர்களும் கலந்து வந்த வம்சம்தான் சிங்களவர் என்று மகாவம்சம் கூறுகிறது. அவ்வாறாயின் இவர்கள் வந்தேறு குடிகள் என்பது உறுதியாகிறது. பீகார் அசம் போன்ற பகுதிகளின் சிங்கக்கொடி முக்கியத்துவம் பெறுவதையும் காணலாம்.

இதேபோன்றே தமிழர்கள் நாகரின் வம்சாவளி என்பதற்கும் சிலசான்றுகளை நாம் முன்வைக்கலாம். இந்தியாவின் தென்பகுதியில் நாகர்பட்டினம், நாகர்கோவில் என்றுண்டு. இதேபோல் இலங்கையின் வடபகுதயில் நாகர்கோவில் உண்டு. இந்தியாவில் திருநெல்வேலி போல் யாழ்பாணத்தில் திருநெல்வேலி என்றொருகிராமம் உண்டு. உணவுமுறை கலாச்சரப் பின்னணிகளில் நாம் தென்னிந்தியரை ஒத்திருப்பது முக்கிய சான்றாகிறது
 
பூகோளமாற்றம்:

இற்றைக்கு சுமார் 5000 ஆண்டுகளுக்கு முன் இலங்கைக்கு இந்தியாவில் இருந்து நடந்தே போகக்கூடிய தரைவழிப்பாதை இருந்தது. இப்போ இராமாயணம், பதினேளாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இராமபாலம் என்பது பற்றி நீங்கள் வினாவலாம். ஆம் அது வெறும் கட்டுக்கதையே. தரைவழிப்பாதை இருக்கும் போது எதற்குப் பாலம்? ஆபிரிக்காவில் இருந்து அஸ்திரேலியா வரையிலான நாடுகள் இணைந்த நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்தது என்பது ஆய்வு. இதைக் குமரிக்கண்டம் என்றும் லெமூரியாக்கண்டம் என்றும் அழைத்தார்கள். காலப்போக்கில் சுனாமி, நிலக்கீழ் அசைவுகளால் கண்டம் கடலுடன் இழுபட்டுப் பிரிந்தது. அப்போ இலங்கைத்தீவு மட்டும் இந்தியாவின் வால் போல் ஒட்டிக் கொண்டிருந்தது, இருக்கிறது.

பூகோளரீதியாக இலங்கை இந்தியா ஒரே நாடாகவே இருந்தது சான்று. பல சுனாமிகளாலும், நிலவசைவுகளாலும், கடலரிப்புக்களாலும் இலங்கை மீண்டும் காலப் போக்கில் பூகோளரீதியில் தனிமைப்படுத்தப்பட்டது. இதற்கான போதிய ஆதாரங்கள் உண்டு. பூகோளரீதியாக இந்தியாவின் தென்பகுதியில் இருந்து இலங்கை முழுவதும் திராவிடரே இருந்தார்கள். இயக்கர்களும் திராவிடரே. திராவிடரைத் தவிர இன்னொரு இனம் அங்கு வானத்தில் இருந்து குதித்திருக்க முடியாது. இலங்கையின் தென்பகுதியில் ஒரு புதிய இனம் உருவாகியிருக்குமானால், அது இலங்கையில் தென்பகுதிகளில் வாழ்ந்த திராவிட இயக்கருடன் கலந்ததாகவே இருக்க முடியும்.

அரசியல் பிழைப்புக்காக வோட்டு வங்கிகளை நிரப்ப இனத்தை சாதியையொரு கருவியாகப் பாவித்ததின் பலனே இன்றைய இலங்கை அழிவாகும். அன்று அரசியலில் தலைமை தாங்கிய எல்லா சிங்கள அரசியல்வாதிகளின் பேரன் பூட்டன் எல்லாம் தமிழர்களாகவே உள்ளார்கள். உ.ம்: டட்லிசெனநாயக்கா, சிறீமாவோ பண்டாரநாயக்க, ஜே.ஆர்.ஜெயவோதனா..!! இல்லையென்று கூறமுடியுமா?

இயக்கர் நாகர் என்ற இருவேறுபட்ட குழுக்கள் சாதிவழிகள் இருந்தனவென்றால் சிங்களவர் தமிழர்களை வைத்து மரபணுப்பரிசோதனை எடுத்தால் உண்மை புலனாகும். ஒரே நாடு என்று தமிழ் மக்களை அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அரசு இதைச் செய்யுமா? இந்தச் சோதனையில் அடிப்படை நேர்மை மிக முக்கியமானது. இந்தப் பரிசோதனையை உலக நாடுகள் நடுநிலையுடன் செய்து எடுத்து வைத்த விஞ்ஞான முடிவை வைத்துக்கொண்டு போரைத் தொடர்வதா விடுவதா? என்பதை அரசும் புலிகளும் தீர்மானிக்கட்டும். இதற்குப் பின்பாவது நாங்கள் இது வரை கொன்றது எமது சகோதரங்களா? இரத்த உறவா? இல்லையா? என்பது புரியும். செய்யுமா அரசு? உதவுமா உலக நாடுகள்? ஓரு கூட்டு முடிவையும், இலங்கையில் அமைதியை ஏற்படுத்த மட்டுமல்ல இனிவரும் காலங்களில் வரவிருக்கும் இன்கலவரங்களைத் தடுப்பதற்குமாக இதைச் செய்வீர்களா? போலித்தனமான, பொய்மையும் இதயசுத்தியுமில்லாத சமாதான உடன்படிக்கைகள், வட்ட மேசை மகாநாடுகள் எமக்கு வேண்டாம். தேசியம் எமது நாட்டில் சிங்கள, தமிழ் அரசியல்வாதிகளால் கட்டி எழுப்பப்பட்டிருக்குமானால் இன்று எமக்கும் இலங்கைக்கும் இப்படி ஒரு நிலை வந்திருக்காது.

காலங்காலமாக பேச்சுவார்த்தை, வட்டமேசை மகாநாடுகள் எந்தப் பலனையும் அழிக்கவில்லை, அழிக்கப் போவதும் இல்லை. குத்து வெட்டுக்குரோதங்களை மனங்களில் வளர்த்துவிட்டு ஒரேநாடு, ஜனநாயமென்று கதைப்பதும், கொல்வதும் அழிவையே தொடர்ந்து ஏற்படுத்தும். இன்று அரசு புலிகளை அழிக்கலாம். நாளை தோன்றும் புரட்சியையும் இனக்கலவரங்களையும் தடுக்க முடியாது. ஒரேநாடு என்றால் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் அரசு முன்வைப்பது முக்கியம். ஒற்றுமைக்கான அடித்தளங்களை இருபகுதிகளில் கட்டி எழுப்புவதுடன் மக்களிடையே நாம் இலங்கையர் என்ற தேசிய ஒற்றைமையை ஏற்படுத்தாது ஒர் ஐக்கிய இலங்கையை நினைத்தும் பார்க்க இயலாது.

மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என்று முளக்கமிடும் இரசபக்ச ஐக்கிய இலங்கை பற்றி எப்படிக் கதைக்க முடியும். துவேசப் பிக்குகளின் கட்டுக்கதைப்படி மகாவம்சம் கூறுகிறது தமிழன் ஈனச்சாதி கொல்வது பாவம் இல்லை என்கிறது. புத்தமத்தில் முதலும் மூலமுமே கொல்லாமையாகும். கொல்லு எனக்கூறும் மகாவம்சம் எப்படி ஒரு புத்தநூலாக இருக்க முடியும்?  புத்தனின் பல்லைப் பிடுங்கிவந்தவர்களா தமிழர்களை விடப்போகிறார்கள். இப்படிப்பட்ட துவேசத்தை வளர்க்கும் மகாவம்சத்தை நிறைவேற்றுகிறேன் என முழக்கமிடும் இரசபக்சவால் நாட்டில் எப்படி ஒரு அமைதியான ஐக்கிய இலங்கையை நிறுவமுடியும். இது எமக்குக் காட்டும் சமிஞ்ஞையானது தமிழ்பேசம் தமிழர்களும், முஸ்லீம்களும் கொன்று குவிக்கப்படுவார்கள் என்பதாகும்.

இன்று யாழ்ப்பாணத்தை துப்பாக்கி முனையில் வாய்மூடி மௌனியாய் வைத்திருப்பது போன்று தொடர்ந்தும் வைத்திருக்க இயலாது. இன்று புலிகளை அழிக்கலாம், ஆனால் வெகுசனம் வெகுண்டெழுந்தால் எல்லாம் தவிடுபொடியாகும். இன்றைய இலங்கையின் அரசதலைவர் தன்னரசியல் வாழ்வைத் தக்கவைக்க புலிகளை அழிப்பது என்று தமிழர்களையும் ஏழை எழிய சிங்களச் சிப்பாய்களையும் களபலியெடுத்தும் கொடுத்தும் கொண்டு இருக்கிறார். சிங்கள மக்களிடையே புரையொடிக்கிடக்கும் பொருளாதார, வேலையின்மைப் பிரச்சனைகளை மறைப்பதற்கும், பேக்காட்டுவதற்கும் தமிழர், புலியழிப்பு போர் நடக்கிறது. இலங்கையானது அயல் நாடுகளுக்கும் அன்னிய நாடுகளுக்கும் ஏலம்போட்டு விற்று, ஆயுதங்கள் பெற்று வங்கி பெட்டிகள் எல்லாம் நிரப்பி முடிந்துவிட்டது. அடு த்து தேர்தலில் வெல்லுவதும் உறுதியாயிற்று.

புலிகளை ஓரங்கட்டியபின் சிங்கள மக்களிடையே எழுவிருக்கும் வெகுஜனப்போராட்டத்துக்கு முகம்கொடுக்க அரசு தயாரா? ஒரே நாடு என்பவர்கள் ஒரேமக்கள், பொதுவேலைத்திட்டம் துவேச அழிப்பு, அது பற்றிய விளக்கங்கள், சட்டத்திருந்தங்கள் என்ற குணங் குறிகளைக்காட்டுங்கள். அன்றேல் சிங்கள, தமிழ் பகுதிகளில் எழும்பவிருக்கும் புதிய ஆயிதப் புரட்சிகளுக்கு இனிவரும் அரசுகள் முகம் கொடுக்க முடியாத நிலைவரும். இது ஒரு இலங்கைக்கான எதிர்வு கூறலாகும்.
 
தமிழ்மக்கள் புரட்சிக்கும் போருக்கும் பழக்கப்பட்டவர்கள் பயிற்றப்பட்டவர்கள். எழுச்சி என்று வரும்போது புரட்சியடைய நேரம் காலம் எடுக்காது. புலிகளை முற்றாக அழிப்பது மிகக்கடினம். அப்படி அரசல் முடிந்தால் அடுத்து இலங்கை அரசு எதிர்கொள்வது ஒரு தேசிய பொதுவுடமைக்கான ஆயுதப்புரட்சி என்பதை யாரும் மறுக்கக்கூடாது. இதை சிங்கள தமிழ்மக்கள் இணைந்தே செய்வார்கள் என்பது திண்ணம்.

சரித்திரரீதியாகவும், விஞ்ஞான ஆய்வுரீதியாகவும், தர்க்கரீதியாகவும் தமிழர்கள் புத்தமத்தைத் தழுவியிருந்தார்கள் என்பது உண்மை. புத்த சின்னங்கள் இருக்கும் இடமோ அன்றி அகழ்வகளில் எடுக்கப்படும் இடமோ சிங்களவர்தான் இருந்திருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.

இக்கட்டுரையில் தமிழ்பேசும் முஸ்லீங்களைத் தனியாகக் குறிப்பிட்டு எழுதவில்லை. இவர்களும் தமிழர்கள்தான் இஸ்லாத்தை மதமாகக் கொண்டுள்ளனர்

இன்று அரசு நடத்துவது ஒரு குருட்டுத்தனமான அரசியலும், தூரநோக்கற்ற சுயலாப வியாபாரமுமே. சிங்கள மக்களை ஏமாற்றும் உத்தி. மகாவம்சத்தை நிறைவேற்றுவதன் ஊடாக புலியழிப்பு போர் எனும் போர்வையில் தமிழின அழிப்பு நடக்கிறது. இது முழுக்க முழுக்க ஒரு இனச்சுத்திகரிப்பாகும்

 

http://www.tamilnews.dk/index.php?mod=article&cat=srilankannews&article=12052

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP