சமீபத்திய பதிவுகள்

எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method

>> Tuesday, November 10, 2009


எண்கள்-engal


எண்கள்-enkalகிழமைகள்-kizhamaikal


தமிழ் எழுத்துக்கள்-Alphabetதமிழ் எழுத்துக்கள்-Alphabet
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -1 - Vowels - Learn

எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -2- Vowels - Learn
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -3- Vowels - Learn
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -4- Vowels - Learn
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -5- Vowels - Learn
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -6- Vowels - Learn

எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -7- Vowels - Learnஎளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -8- Vowels - Learn
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -9- Vowels - Learn
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -10- Vowels - Learn
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -11- Vowels - Learn
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -12- Vowels - Learn

எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -13- Vowels - Learn

எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -14- Vowels - Learn

எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -15- Vowels - Learn
எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -16- Vowels - Learn

எளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -17- Vowels - Learnஎளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -18- Vowels - Learnஎளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -19- Vowels - Learnஎளிய முறையில் தமிழ் எழுத்துக்களை கற்றுக்கொள்ளல்-Easy and simple method - Lesson -20- Vowels - Learn

StumbleUpon.com Read more...

ஜீன்ஸ் போட்டால் ஜெயில் : சூடானின் சூடான சட்டம்

இப்படி ஒரு துயரம் நடக்குமென கிரேஸ் உஷாங் கனவிலும் நினைத்திருக்க வாய்ப்பில்லை. நைஜீரியா தனது 49வது சுதந்திர தினத்தை உற்சாகமாய் கொண்டாடிக் கொண்டிருந்த அக்டோபர் ஒன்றாம் தியதி. கிரேஸ் உஷாங் எனும் அந்த இளம் பெண் ஆனந்தமாய் தெருவில் வந்தாள். சமீபத்தில் தான் அவள் கல்லூரிப் படிப்பை முடித்து விட்டு நைஜீரியாவின் என்.வொய்.எஸ்.சி யில் இணைந்திருந்தாள்.

என்.வொய்.எஸ்.ஜி (National Youth Service Corps என்பது நைஜீரியாவிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு அமைப்பு. பல்கலைக்கழகங்களில் பட்டம் வாங்கியவர்களும், பாலிடெக்னிக் முடித்தவர்களும் இதில் ஓராண்டு பணி புரியவேண்டும். தங்கள் வீடுகளை விட்டு தூரமான ஒரு நகரில் மக்களோடு மக்களாகக் கலந்து வாழவேண்டும். பல்வேறு கலாச்சாரங்களைப் புரிந்து கொள்ளவும், மக்களுக்கு உதவவுமே இந்த ஏற்பாடு.

தெருவில் நடந்தவளை மொய்த்தன சில வாலிபக் கண்கள். பின் அவர்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டு கிரேஸை நோக்கி வெறித்தனமாக வந்தனர். அங்கேயே கதறக் கதற அந்த இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்தார்கள். பின் கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியில்லாமல் ஹாயாக நடந்து போனார்கள். அவர்கள் அவளைப் பலாத்காரம் செய்யக் காரணம் அவள் அணிந்திருந்த உடை ! அது ஆபாச உடையாம் !

அவள் அணிந்திருந்ததோ ஒரு பேண்ட் மற்றும் மேலாடை ! இத்தனைக்கும் அது போலீஸ் யூனிபார்ம் போன்றது ! என்.வொய்.எஸ்.ஜி யின் அதிகார பூர்வ யூனிபார்ம் ! அதுவே ஆபாசமாம். ஆபாசக்காரிக்கு மரண தண்டனை கொடுத்தோம் என கூலாகச் சொன்னார்கள் கொலையாளிகள்.

நைஜீரியாவில் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் ஏதும் இன்னும் அமுல்ப்படுத்தப்படவில்லை. கடந்த ஆண்டு செனட்டர் குழுவில் அதற்கான அஸ்திவாரம் போடப்பட்டது. நைஜீரியா நன்றாக இருக்க வேண்டுமென்றால் ஆபாச ஆடை தடுப்புச் சட்டம் வேண்டும் என உரை நிகழ்த்தினார் செனட்டர் உஃபாட் எக்கேட். இது சட்டமானால், ஆபாச உடை அணியும் பெண்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள், சாட்டையால் அடிக்கப்படுவார்கள் !

journalists_activists_and_politicians_detained_inஎது தான் இவர்களுடைய பார்வையில் ஆபாச உடை. கழுத்திலிருந்து இரண்டு இஞ்சுக்குக் கீழே காலின் கடைசி வரை முழுசும் மூட வேண்டும். இந்த பகுதியில் ஏதாவது கொஞ்சம் வெளியே தெரிந்தால் ஜெயில் தான். டிரஸ் கொஞ்சம் மெலிசாக இருந்தால் ஜெயில். ஜீன்ஸ் போட்டா ஜெயில். டிரஸ் டைட்டா இருந்தா ஜெயில். அதுவும் 14 வயது நிரம்பினாலே பெண்கள் இதைப் பின்பற்றியாக வேண்டும் ! அரசு இந்த திட்டத்தை சட்டமாக்க வேண்டுமென நினைக்கிறது. நைஜீரியப் பெண்களுக்கோ உள்ளுக்குள் திகிலடிக்கிறது. இந்த சட்டம் என்னென்ன அதிர்ச்சிகளைத் தருமோ எனும் அவர்களின் பயம் நூறு சதம் நியாயம். அதற்கு சரியான உதாரணமாய் இருக்கிறது சூடானில் நடந்த நிகழ்ச்சி.

சூடானில் ஒரு ஹோட்டலில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார் லுப்னா ஹுசைன் எனும் பெண். இவர் ஒரு பத்திரிகையாளர். யு.என் னில் பணியாற்றிக் கொண்டிருந்தார். திடீரென காவல் துறையினர் அவளையும் அவளுடன் அந்த ஹோட்டலில் இருந்த 12 பெண்களையும் கைது செய்தனர்.

முதலில் அவருக்கு ஏதும் புரியவில்லை. "என்ன சமாச்சாரம்" என்று விசாரித்தால், ஆபாச உடை தடுப்புச் சட்டமாம். சூடானில் ஆபாச உடை தடுப்புச் சட்டம் செயல்பாட்டில் இருக்கிறது ! இவர் அணிந்திருந்ததோ, கொஞ்சமும் உடலை வெளியே காட்டாத லூசான பேண்ட் ! முழுசும் மறைக்கும் மேலாடை ! லுப்னா திகைத்துப் போனார். இவருடைய திகைப்பையெல்லாம் காவல் துறை கண்டு கொள்ளவில்லை. எல்லாரையும் தூக்கி ஜெயிலில் எறிந்தார்கள். லுப்னாவுக்கு இருநூறு டாலர்கள் அபராதம் ! பிடிபட்ட பெண்களில் வேறு பத்து பேருக்கு என்ன தண்டனை தெரியுமா ? 40 கசையடிகள் !

நாற்பத்து மூன்று வயதான லூப்னா கொதித்துப் போனார். இதெல்லாம் கொடுமை. நான் பணத்தைக் கட்ட மாட்டேன். தைரியமிருந்தால் அடித்துப் பாருங்கள். கேவலமான இந்த சட்டத்துக்கு எதிராகப் போராடாமல் விடமாட்டேன் என கர்ஜித்தார். அரசு இவருடைய கத்தலையெல்லாம் காது கொடுத்துக் கேட்கவில்லை. இவருடைய விருப்பத்துக்கு மாறாக பத்திரிகை சங்கத்தினர் இவரை வெளியே கொண்டு வந்தார்கள். கட்ட வேண்டிய 210 டாலர்களை கார்த்தோம் கோர்ட்டில் கட்டினார்கள்.

லுப்னாவுக்கு செம கடுப்பு. எப்படி என்னை வெளியே எடுக்கலாம் ? காட்டுமிராண்டிச் சட்டத்துக்கு நாம் ஏன் உடன் படவேண்டும் என படபடத்தார். சிறையில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் ஆபாச உடை சட்டத்தில் கைதாகி உள்ளே இருக்கிறார்கள். அவர்களுக்கு யார் பணம் கொடுப்பது ? யார் விடுவிப்பது. அதில் பலர் கசையடி பட்டு கதறித் துடிக்கிறார்கள். அவர்களுக்கு யார் அரணாய் நிற்பது என லூப்னா வெகுண்டெழுந்தார். இதை உலகின் கவனத்துக்கு கொண்டு போகாமல் விடமாட்டேன் என கொதித்தார். கடந்த ஆண்டில் மட்டுமே சூடானின் கார்த்தோம் மாநிலத்தில் கைதான பெண்கள் சுமார் 40,000 பேர் என்பது குறிப்பிடத் தக்கது.

லுப்னா உடனடியாக நூற்றுக்கணக்கான அழைப்பிதழ்கள் அடித்தார். மின்னஞ்சல்கள் அனுப்பினார். "சூடானின் பத்திரிகையாளர் lubna12லுப்னா சாட்டையடி வாங்கப் போகிறார், வந்து பாருங்கள்" என்பதே தகவல். வழக்கு விசாரணைக்கு வந்தது. லுப்னா யு.என் பணியில் இருப்பதால் சும்மா விட்டு விடலாம் என நீதிபதி கூறினார். லுப்னாவோ, என்னை விட வேண்டாம். நான் யு.என் வேலையை ராஜினமா செய்கிறேன். சூடான் நாட்டுப் பெண்ணாக இந்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடுவது தான் முதல் வேலை என்றார்.

இந்த மனித உரிமைகள் மீறலை லுப்னா உலகின் கவனத்துக்கும் கொண்டு சென்றார். மனித உரிமைகள் கமிஷனும் தூக்கம் கலைந்து என்ன நடக்கிறது எனப் எட்டிப் பார்த்தது. அவர்கள் கேட்ட அதிர்ச்சிச் செய்திகள் அவர்களை நிலை குலைய வைத்தன. ஒரு பெண்ணுக்கு அவளுக்குப் பிடித்தமான உடை அணிய உரிமை இல்லையா ? அதுவும் பல கோடிப் பெண்கள் உலகெங்கும் அணியும் டீசண்டான உடையை அணிந்தாலே ஜெயிலா ? என மனித உரிமைகள் கமிஷன் களத்தில் இறங்கியிருக்கிறது.

அரசோ, இதில் மனித உரிமைகள் மீறல் ஏதும் இல்லை. எங்கள் இஸ்லாம் கோட்பாடுகளின் படி இந்த உடை தவறானது. சமூகத்தின் கலாச்சாரத்தைக் கெடுக்கக் கூடியது. 2005ல் நாட்டில் இயற்றப்பட்ட சட்ட எண் 152 க்கு இந்த ஆடை எதிரானது என அரசு பிடிவாதம் பிடிக்கிறது.

லுப்னா விடவில்லை. நானும் முஸ்லிம் தான். இஸ்லாமுக்கு எதிரான எதையும் நான் செய்யவில்லை. இந்தச் சட்டம் தான் இஸ்லாமுக்கு எதிரானது என மதத்தைத் துணைக்கு அழைத்தார். இவருடைய துணைக்கு எகிப்தின் உயர் இஸ்லாமிய தலைவர் கிராண்ட் முஃப்டி அலி கோமா வந்திருக்கிறார். இப்படி ஒரு சட்டம் இருப்பதை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது என ஆரம்பிக்கிறார் அவர். பெண்கள் பேண்ட் போடுவதை இஸ்லாம் மதம் தடுக்கவில்லை. பேண்ட் லூசாக, திக்கான துணியில் , உடலை மறைப்பதாக இருந்தால் போதும். இன்றைக்கு வரும் பெரும்பாலான உடைகள் பேண்ட் போன்ற மாடலில் தான் வருகின்றன. அதைத் தவிர்க்க முடியாது. உடைகளை இறுக்கமாய் அணிவது தான் தவறு என்கிறார் அவர்.

 பெண்களுக்கு சம உரிமை, சுதந்திரம் என்று வாய்கிழியப் பேசும் உலகின் உண்மை நிலை இது தான். நைஜீரியாவில் நடந்த கிரேஸ் உஷாங்கின் மரணம் நைஜீரிய மக்களைப் போராட வைத்திருக்கிறது. சூடானில் வில் லுப்னாவுக்கு ஏற்பட்ட அவமானம் சூடான் மக்களை விழிக்க வைத்திருக்கிறது. பேண்ட்ஸ், ஜீன்ஸ் இவையே ஆபாசம், ஜெயில் குற்றம் என்பது உலகில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உலக அளவில் தனது கவனத்தைச் செலுத்தி வரும் மனித உரிமைகள் கமிஷன் என்ன செய்யப் போகிறது என்பது தான் இப்போதைய சர்வதேசக் கேள்வி !

source:sirippu.wordpress
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஒரு வினாடிக்கு ஒரு காசு' கட்டண முறை வாடிக்கையாளருக்கு பயன் அளிக்குமா?


Mobil Cell Phone Royalty Free Stock Photo டாட்டா டோகோமோ நிறுவனம், அதன் ஜி.எஸ்.எம். செல்போன் சேவையில் ஒரு வினாடிக்கு ஒரு காசு கட்டணம் வசூலிக்கும் புரட்சித் திட்டத்தை அறிமுகம் செய்தது. இதனைத் தொடர்ந்து இத்துறையைச் சேர்ந்த இதர நிறுவனங்களும் இதே திட்டத்தை அறிமுகம் செய்தன. ஆனால் ஒரு சில நிறுவனங்கள் இத்திட்டத்தை புரியாத சில `சூட்சுமங்களுடன்' அறிமுகம் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனால் இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு எப்போதும் ஆதாயமளிப்பதாக இருக்காது என்று கூறப்படுகிறது. சலசலப்பு டாட்டாவின் புரட்சித் திட்டம் அறிமுகமானதும் செல்போன் சேவை துறையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்நிறுவனம் இத்திட்டத்தால், குறைந்த காலத்தில் அதிக அளவில் வாடிக்கையாளர்களை ஈர்த்து வருவதாக செய்திகள் வெளிவந்தன. உடனே இதர செல்போன் சேவை நிறுவனங்கள் அனைத்தும் அலறியடித்துக் கொண்டு, அவற்றின் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் `இனி உங்களுக்கும் ஒரு விநாடிக்கு ஒரு காசுதான்' என்று எஸ்.எம்.எஸ். அனுப்பின. பொதுத் துறை நிறுவனமான பீ.எஸ்.என்.எல்.லும் இத்திட்டத்தை அறிமுகம் செய்வதாக அறிவித்தது. செல்போன் வாடிக்கையாளர்கள் அனைவரும் பூரித்துப் போயினர். இத்திட்டத்தில், நிறுவனங்களின் `சூட்சுமத்தை' சரிவர புரிந்து கொள்ளாமல், நாடு முழுவதுமாக ஏராளமான வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட தொகைக்கு ரீசார்ஜ் செய்து கொண்டு புதிய கட்டண முறைக்கு மாறிக் கொண்டனர். ஆனால் இத்திட்டத்தில் பல குழப்பங்கள் உள்ளன என்பதை இப்போதுதான் வாடிக்கையாளர்கள் உணரத் தொடங்கியுள்ளனர். முருகன் என்ற ஒரு பலசரக்கு கடை உரிமையாளரின் செல்போனில் இனி ஒரு விநாடிக்கு ஒரு காசுதான் என்று எஸ்.எம்.எஸ். வந்தது. மிகுந்த மகிழ்ச்சியடைந்த அவர் உடனே அந்த திட்டத்துக்கு மாறிக் கொண்டார். பிறகு பேசப் பேசத்தான் `சூட்சுமம்' புரிந்தது. தான் செய்த தவறும் புரிந்தது. மேலும் 90 காசுகள் முருகன் முதலில் ஒரு நிமிடத்துக்கு 30 காசு அடிப்படையில் செல்போனில் மணிக்கணக்கில் பேசிக் கொண்ருந்தவர். அப்போது அவர் 3 நிமிடங்கள் (180 வினாடிகள்) பேசினால், அதற்கான கட்டணம் 90 காசுகள்தான். இப்போது அவர் 3 நிமிடத்துக்கு ரூ.1.80 காசுகள் செலுத்த வேண்டும். அதாவது இப்போது மேலும் 90 காசுகள் `பறி' கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளார். இதே போல் செல்போன் சேவையில் முன்னணியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் ஒரு குறிப்பிட்ட திட்டத்தில், அந்நிறுவனத்தின் நெட்வொர்க்கில் ஒரு நிமிடத்துக்கு 39 காசுகளும், இதர நெட்வொர்க்கில் ஒரு நிமிடத்துக்கு 59 காசுகளும் கட்டணம் வசூலிக்கும் முறை முன்பு ஒரு சமயம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்கள், பழைய முறையின் கீழ் ஒரு நிமிடத்துக்கு (60 வினாடிகள்) 39 அல்லது 59 காசு செலுத்தினால் போதும். ஆனால் இப்போது அனைத்து நெட்வொர்க்கிலும் ஒரு நிமிடத்துக்கு 60 காசுகள் செலுத்த வேண்டும். தொல்லை புதிய திட்டத்தில் சேருவதற்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு உங்களது செல்போனை `உயிரூட்டிக்' கொள்ள வேண்டிய தொல்லையும் உண்டு. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குத்தான். மறுபடியும் உயிர் கொடுக்கவில்லை என்றால் திட்டம் `செத்து' விடும். கூட்டிக் கழித்துப் பார்த்தால் ஏறக்குறைய எல்லா திட்டமும் ஒன்றுதான் என்ற நிலை உருவாகி உள்ளது. டாட்டா டோகோமோவின் திட்டம், இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் (டிராய்) கவனத்தையே ஈர்த்தது. விநாடி அடிப்படையிலான கட்டண முறையை பொதுவாக்கவும் திட்டமிட வைத்தது. ஒரு விநாடிக்கு ஒரு காசு திட்டத்தில் சேர்வதற்கு முன்பாக ஒரு வாடிக்கையாளர் தற்போது எந்த திட்டத்தில் உள்ளார் என்பதையும், எது ஆதாயமளிப்பது என்பதையும் நன்கு ஆராய்ந்து அதன் பின்பு முடிவு செய்வது நல்லது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், `ஒரு வினாடிக்கு ஒரு காசு' திட்டம் என்பது குறைந்த நேரம் பேசுபவர்களுக்கே ஆதாயம் அளிக்கும். அதே சமயம், செல்போனில் அதிக நேரம் பேசும் வாடிக்கையாளர்களுக்கு இது அதிக செலவினம் ஏற்படுத்தும் என பலர் கருத்து தெரிவித்தனர்.


source:daily thanthi
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சூடாகி வரும் சிங்களத்தின் தேர்தல் களமும், திக்கற்ற ஈழத் தமிழர்கள் நிலையும்!

 
இலங்கைத் தீவில் யுத்த களம் தற்காலிக ஓய்வுக்கு வந்த நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. 2010-ம் ஆண்டு தேர்தல் ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த ஆட்சியைத் தமதாக்கிக் கொள்வதற்கான காய் நகர்த்தல்களில் சிங்களப் பேரினவாதப் பெரும் கட்சிகள் இரண்டும் வேகமாகச் செயற்பட்டு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் களமுனைத் தொடர்ந்து நவீன துட்டகைமுனுவாக சிங்கள இனத்தால் கொண்டாடப்பட்ட இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எதிர்வரும் தேர்தலிலும் தோற்கடிக்கப்பட முடியாதவராகவே கருதப்பட்டார். அவரது வெற்றிப் பேரிகை முழக்கங்களும், வெற்றி விழாக்களும் அதை நோக்கியதாகவே வடிவமைக்கப்பட்டது.

இறுதிவரை விடுதலைப் புலிகளுடன் இருந்த மூன்று இலட்சம் தமிழ் மக்களை எதுவித மனிதாபிமான தயக்கங்களும் இன்றி முள்வேலி முகாம்களுக்குள் அடைத்து வைத்து சிங்கள இனவாத சமூகத்தைக் குளிர்வித்தார்.

தமிழ் மக்களுக்கு யார் அதிக கொடுமைகளை இளைக்கிறார்களோ, தமிழ் மக்களை யார் அதிகமாக இழிவு படுத்துகிறார்களோ, அவர்களே சிங்கள தேசத்தின் பிதா மகர்களாகவும், ஆளும் தகுதியுடையவர்களாகவும் சிங்கள இனத்தால் கவுரவம் படுத்துவதே சுதந்திர சிறிலங்காவின் வரலாறாக இருந்து வருகின்றது.

சுதந்திர இலங்கையின் முதல் பிரதமரான டி.எஸ். சேனநாயக்கே தமிழர்களின் அரசியல் பலத்தைத் தகர்க்கும் முயற்சியாக மலையகத் தமிழர்களின் பிரஜா உரிமையைப் பறித்ததன் மூலமாகத் தனது இனவாத சிந்தனையை சிங்கள இனத்திற்கு நிரூபித்தார்.

அவரிடமிருந்து ஆட்சியைத் தனதாக்கிக்கொள்ள வியூகம் வகுத்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா 1956-ம் ஆண்டில், 24 மணித்தியாலத்தில் தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வருவேன் என்று சிங்கள இனத்திற்குச் சூளுரைத்தன் மூலம் அவரால் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை சுதந்திரக் கட்சியின் முதல் பிரதமரானார்.

அவர் மூட்டிய இனவாதத் தீயில் உருவான முதலாவது இனக் கலவரத்தில் 200 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் பலியானார்கள். ஆயிரக் கணக்கான தமிழர்கள் படுகாயங்களுக்குள்ளானதுடன் தமிழர்களின் சொத்துக்களும் அழிக்கப்பட்டன.

1959-ம் ஆண்டில் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா அவர்கள் சிங்கள பெளத்த பிக்கு ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் பதவிக்கு வந்த அவரது மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கா காலத்திலேயே தமிழ் மாணவர்கள் மீதான தரப்படுத்தல் அமூலுக்கு வந்தது.

இவரது பதவி காலத்தில், 1974-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசார் புகுந்து குழப்பம் விழைவித்ததனால் 9 தமிழர்கள் பலியானார்கள். இவரது ஆட்சி தொடர்ந்த 1977-ம் ஆண்டு இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்முறைகில் பல நூறு தமிழர்கள் பலி கொள்ளப்பட்ட சம்பவமும் அரங்கேறியது.

இவரைத் தொடர்ந்து, 1977-ம் ஆண்டில் இனவாதத்தை மூலதனமாகக் கொண்டு ஆட்சிப்பீடமேறிய ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற களியாட்ட நிகழ்வொன்றில் மாணவர்களுக்கும் பொலிசாருக்கும் இடையே இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதற்குப் பழி வாங்கும் வகையில் இரண்டு பொலிசார் கொலை செய்யப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழர்கள் மீதான இன வன்முறை நிகழ்த்தப்பட்டு, தமிழர்கள் பலர் படுகொலை செய்யப்பட்டனர். ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்திலேயே 1983 கறுப்பு ஜுலை இன அழிப்பு நடவடிக்கையும் அரங்கேறியது.

ஆக மொத்தத்தில், சிங்கள தேசத்தின் தேர்தல்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக மற்றெந்த அடிப்படைத் தேவைகளையும் தாண்டி தமிழர்கள் மீதான இனவாத, இனக் குரோதமே முக்கியம் பெறுகின்றது.

தமிழ் மக்கள் மீதான வெற்றிக்காக சிங்கள இனம் எந்த விலையையும், எந்தத் தியாகத்தையும் செய்வதர்க்கு எப்போதுமே தயாராக உள்ளது. அதை அடிப்படையாகக் கொண்ட காய் நகர்த்தல்களே சிங்கள தேசத்தில் இப்போதும் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

சர்வதேச நாடுகளின் கண்டனங்களையும் கணக்கில் கொள்ளாமல் இந்திய அரசின் துணையோடு மிகப் பெரிய தமிழின அழிப்பை நடாத்தி முடித்து, முட்கம்பி வேலிகளுக்கும் மிகுதித் தமிழர்களை முடக்கி, எஞ்சிய தமிழர்களையும் அச்சத்தில் உறையவைத்துள்ள மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துக் களமிறங்கும் தைரியம் ஐக்கிய தேசியக் கட்சிக்குக் கிடையாது என்று உணரப்பட்ட காரணத்தால், மகிந்த அரசுக்கு எதிரணியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்து, ஒரு பொது வேட்பாளரைக் களம் இறக்க வேண்டிய நிலைக்கு ஐக்கிய தேசியக் கட்சி தள்ளப்பட்டுள்ளது.

இதே வேளை, போர்க் களத்தின் நாயகனாக சிங்கள மக்களால் கொண்டாடப்படும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஓரம் கட்டும் முயற்சியில் மகிந்த சகோதரர்கள் ஈடபட்டு வருவதனால் அதிருப்தி அடைந்த சரத் பொன்சேகாவை பொது வேட்பாளராகக் களமிறக்கும் முயற்சியில் ஜே.வி.பி., ஹெல உறுமய ஆகிய தீவிர சிங்கள இனவாதக் கட்சிகள் முனைப்புக் காட்டுகின்றன.

மகிந்தவை எதிர்த்துக் களமிறக்க வேறு தெரிவு இல்லாத நிலையில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி, சரத் பொன்சேகா மூன்றாவது வேட்பாளராகக் களம் இறங்கினால் தாம் நிச்சயம் வெற்றி பெற்று விடலாம் என்று நம்புகின்றது. சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தல் களத்தில் இறங்குவதென்று தீர்மானித்துவிட்டால் மகிந்தவின் வெற்றி கேள்விக் குறியாகவே அமையப் போகின்றது.

ஜனாதிபதி தேர்தல் களத்தில் மகிந்தவை எதிர்த்து எதிரணியின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா மட்டுமே களம் இறங்குவாராக இருந்தால் ஈழத் தமிழர்கள் வேடிக்கை மட்டுமே பார்க்கலாம்.

மாறாக, அது முத்தரப்புப் போட்டியாக மாற்றம் பெற்றால், மேற்குலகு செல்வாக்குச் செலுத்தக்கூடிய வேட்பாளரை வெற்றி பெறச் செய்வதனூடாக குறைந்த பட்சம் யுத்த களத்து மனித உரிமைகள் மீறல்களையாவது வெளிக்கொணர்ந்து, அதற்குக் காரணமானவர்களைத் தண்டிப்பதன் மூலம் ஈழத் தமிழர்கள் தமக்கான எதிர்கால பாதுகாப்பை உருவாக்கிக் கொள்ள முடியும்.

 பாரிஸ் ஈழநாடு


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நெருக்கடிகள் சூழ்ந்த நிம்மதியற்ற சரத் பொன்சேகா….?

 

sa_foஜெனரல் சரத் பொன்சேகா போர் நடந்த காலத்தில் மட்டுமன்றி, அதற்குப் பின்னரும் அடிக்கடி பேசப்படும் ஒருவராக மாறிவிட்டார். கடந்த வாரம் முழுவதும் அவர் பற்றிய செய்திகளே ஊடகங்களில் அதிகமாக இடம்பெற்றிருந்தன.

அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளால் அவர் விசாரணைக்கு அழைக்கப்பட்ட தகவல் வெளியானதுமே இலங்கை அரசு பதறிப் போனது. விசாரணையில் இருந்து அவரை மீட்டு, இலங்கைக்குக் கொண்டு வருவதற்கு, பல்வேறு வழிகளிலும் முயற்சிகளை மேற்கொண்டது.

அது ஜெனரல் சரத் பொன்சேகாவைக் காப்பாற்றுவதற்கான முயற்சியா அல்லது பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவைப் பாதுகாப்பதற்கான முயற்சியா என்ற கேள்வி இருக்கவே செய்கிறது.

எவ்வாறாயினும் இலங்கை அரசு அமெரிக்க அதிகாரிகளின் விசாரணைக்கு முகம் கொடுக்காமலே அவரை அவசர அவசரமாக கொழும்புக்கு அழைத்து வந்து விட்டது.

இலங்கை அரசு இதைப் பெரிய சாதனையாகக் கூறிக் கொண்டிருப்பினும் சர்வதேச அளவில் இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது.

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சாட்சியம் ஒன்றை அளிக்க வருமாறு கடந்த வாரம் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது உள்நாட்டு பாதுகாப்பு திணைக்களம்.

ஒக்லஹோமாவில் கடந்த 4 ம் திகதி மாலை 4.30 மணியளவில் விசாரணைக்கு சமுகமளிக்கும்படி ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி ஜெனரல் சரத் பொன்சேகா வாஷிங்டனிலுள்ள இலங்கைத் தூதரகத்துக்கு எழுத்து மூலம் அறிவித்தார். இந்தத் தகவல் கிடைத்ததுமே அரசாங்கம் உண்மையில் திகைத்துப் போனது.

ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவின் கிறீன் கார்ட் வதிவிட உரிமையைப் பெற்றுக் கொண்டவர். ஆனால் அவர் அமெரிக்கப் பிரஜை அல்ல. அங்கு அவர் நிரந்தரமாக வசிக்காததால் தான் இந்த விசாரணை என்று கூறப்பட்டாலும் இந்த விசாரணையின் பின்னணி குறித்த சந்தேகங்கள் அரசுக்கு எழுந்தது.

வன்னியில் நடந்த போர் குறித்த அறிக்கை ஒன்றை அண்மையில் அமெரிக்கா வெளியிட்டிருந்தது.

போர்க்குற்ற மீறல்கள் பட்டியலிடப்பட்டிருந்த இந்த அறிக்கையில் இலங்கை அரசு மீதும், புலிகள் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இந்தப் பின்னணியில் அமெரிக்காவின் நகர்வுகளை இலங்கை அரசு அச்சத்துடன் பார்த்ததில் அர்த்தம் இருந்தது.

இதனால் தான் அரசு அவசர அவசரமாக ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்கான சட்ட ஆலோசகர்களை நியமித்தது.

அதேவேளை, அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரிய போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் அதனை தீர்த்துக் கொள்வதற்கு உதவுமாறு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்காசிய விவகார பிரதிச் செயலாளர் ரொபேர்ட் ஓபிளேக்கிடம் வேண்டுகோள் விடுத்தார்.

அதேவேளை, அமெரிக்க வதிவிட உமையைப் பெற்ற ஒருவருக்கு இராஜதந்திரப் பாதுகாப்பு வழங்குவதிலும் சிக்கல் இருந்தது. அமெரிக்கப் பிரஜைகளும், வதிவிட உரிமை (கிறீன்கார்ட்) பெற்றுக் கொண்டவர்களும் அமெரிக்காவின் சட்டங்களுக்கு அமைய செயற்பட வேண்டும் என்பதால் விசாரணை ஜெனரல் சரத் பொன்சேகாவுக்குச் சாதகமாக இருக்குமா என்ற கேள்வியும் எழுந்தது.

அம்பலாங்கொடையில் நடந்த நிகழ்வு ஒன்றில் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்திருந்ததாக் கூறப்பட்ட கருத்துகளே அவருக்கு எதிராகத் திரும்பக் கூடிய நிலை இருந்தது.
புலிகளுடனான யுத்தத்தின் போது இராணுவச் சட்டங்களை மீறிச் செயற்பட வேண்டியிருந்ததாகவும், வெள்ளைக் கொடியுடன் சரணடைய முயற்சித்த புலிகள் இயக்க உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் ஜெனரல் சரத் பொன்சேகா அம்பலாங்கொடையில் நிகழ்த்திய உரையொன்றில் கூறியதாகவும் அமெரிக்காவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவையெல்லாம் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால் தான் இலங்கை அரசு பதறிப் போனது.
அதேவேளை ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அரசியல் நடத்த முற்பட்ட ஜே.வி.பி, ஐ.தே.க போன்ற கட்சிகளும் அதிர்ச்சியடைந்தன.

இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு அமெரிக்காவுக்கு என்ன உரிமை இருக்கிறது என்று கிளர்ந்தெழுந்தார் ஜே.வி.பி.யின் தலைவர் சோமவங்ச அமரசிங்க.
ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்துவதற்கு அமெரிக்காவுக்கு எந்த அதிகாரம் கிடையாது என்ற அவரது கருத்து நகைப்புக்கிடமானதாகவும் இருந்தது.

அமெரிக்க வதிவிட உரிமை பெற்றவர் என்ற அடிப்படையில் தான் இந்த விசாரணைக்கு ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருந்தார். அப்படிப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடத்த அமெரிக்காவுக்கு உரிமை இல்லை என்று கூறுவது எந்தவகையிலும் பொருத்தமற்றது.

இதேவேளை, இலங்கை விவகாரங்களில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையீடு செய்தால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தது ஜாதிக ஹெல உறுமய.

இந்தநிலையில், புலிகளுடனான போர் தொடர்பாக எந்த விளக்கம் தேவையென்றாலும் முப்படைகளினதும் தளபதி என்ற வகையில் போருக்கு உத்தரவிட்ட தன்னிடம் கேட்குமாறு, அமெரிக்காவுக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிடம் பணித்தார்.

வழக்கமாக இதுபோன்ற உத்தரவுகளை அரசாங்கம் வெளியிடுவதில்லை. ஆனால் இந்த விபரத்தை அரசாங்கமே அறிக்கை மூலம் தெரிவித்திருந்தது.

ஜனாதிபதியின் உத்தரவை அடுத்து, கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவரை அழைத்த வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான சாட்சியங்களைப் பெறும் அமெரிக்காவின் முயற்சிக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தார்.

அத்துடன் ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணைக்கு சமுகமளிக்காமல் உடனடியாகக் கொழும்பு திரும்புமாறு அரசாங்கம் தகவல் கொடுத்தது. இதையடுத்து விசாரணைக்கு அழைக்கப்பட்ட தினத்துக்கு முதல்நாளே வாஷிங்டனில் இருந்து கொழும்புக்குப் புறப்பட்டார்.

அமெரிக்க அதிகாரிகளின் விசாரணைக்கு சமுகமளிக்காமல் நாடு திரும்பியதால் அவரது வதிவிட உரிமை ரத்தாகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அதேவேளை இந்த விசாரணைக்கு முகம் கொடுத்திருந்தால் அவர் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிக்குள் சிக்கியிருக்கலாம்.

அவர் விசாரணையில் எந்தத் தகவலையும் வழங்காமல் போயிருந்தாலும் கூட சிலவேளைகளில் அரசியல் சூழ்நிலைகளால் காட்டிக் கொடுத்தவராக அடையாளப்படுத்தப்படும் அபாயம் அவருக்கு இருந்தது.

இப்போதைய நிலையில் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு இலங்கையில் இருந்தாலும் சரி அமெரிக்காவில் இருந்தாலும் சரி நெருக்கடிகளும் நிம்மதியற்ற நிலையும் தொடரத் தான் போகின்றது.

நாடு திரும்பிய ஜெனரல் சரத் பொன்சேகாவை வைத்து அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தமது வசதிக்கேற்ப அரசியல் நடத்தத் தொடங்கி விட்டன.

ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் அமெரிக்கா விசாரணை நடத்த முனைந்தது அரசின் சூழ்ச்சியாக இருக்கக் கூடும் என்று ஐ.தே.க.வின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெவித்திருந்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் இத்தகைய முயற்சியில் அரசாங்கம் இறங்கியிருக்கலாம் என்பது அவரது ஊகம்.

அதேவேளை, அமெரிக்காவின் விசாரணைக்கு சமுகமளிக்காமல் நாடு திரும்பியதன் மூலம் நாட்டின் கௌரவத்தை அவர் பாதுகாத்து விட்டதாகவும் அவரைப் போலவே பசில் ராஜபக்ஷவும், கோத்தபாய ராஜபக்ஷவும் அமெரிக்க வதிவிட உரிமையை நிராகரிக்க வேண்டும் என்று கோயிருக்கிறது ஜே.வி.பி.

இப்படிப் பல கோணங்களிலும் ஜெனரல் சரத் பொன்சேகா விவாதப் பொருளாக்கப்பட்டுள்ளார்.

தற்போதைய நிகழ்வுகள் ஜெனரல் சரத் பொன்சேகா அரசியலில் இறங்க விரும்பினாலும் சரி விரும்பாவிட்டாலும் சரி அவரை அரசியலுக்குள் இழுத்து வரும் வகையிலானதாகவே அமைந்திருக்கின்றன.

சுபத்திரா

நன்றி வீரகேசரி--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

KIDS Zone tamil songs videos::குழந்தைகள் பாட்டு வீடியோ

நமது பாரதம்-namathu barathamநிலா நிலா ஓடி வா - Nila Nila Odi Vaa
குவா குவா வாத்து-uva kuva Vaathu
அம்மா இங்கே வா வா-Amma Inge Vaa Vaa
தோசை அம்மா தோசை-Dosai Amma Dosaiகைவீசம்மா கைவீசு-Kai Vessammaஎங்கள் வீட்டு பூனை-ENgal Veetu poonai

மாம்பழம்-Mambalam
என் பொம்மை-En PombaiTamil Cartoon Songs

StumbleUpon.com Read more...

பு லம்பெயர் நாடுகளில் முளைவிடும் புதிய துரையப்பாக்கள்

 

சமீபகாலமாக அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கினால் மாத்திரமே எமது இலக்கை அடைய முடியும் என்ற போர்வையில் சில தமிழ் புத்தபிரான்கள் தமிழ் மக்களிடையே போதனை நடத்தி வருகின்றனர். தடுப்பு முகாமில் உள்ள மக்களை விடுவிக்கவும், குழந்தைகளைப் பராமரிக்கவும், மற்றும் பல்வேறு உதவிகளை ஈழத்துத் தமிழர்களுக்கு செய்வதற்கு அரசாங்கத்தின் உதவி தேவை என இவர்கள் நாக் கூசாமல் பல பரப்புரைகளை பிரித்தானியத் தமிழர்களின் மனதில் விதைத்து வருகின்றனர். சிங்கள அரசின் கால்களில் விழுந்தால் நன்மை என்றால் விழுந்துவிடலாம் என்கின்றனர்.

யாருடைய ஏற்பாடு?

முள்ளிவாய்க்காலில் உக்கிரபோர் நடந்தவேளை தமிழ் நாட்டில் தமிழர்கள் பொங்கி எழா வண்ணம் ஊழல் பல செய்த இலங்கை துணைத்தூதர் ஹம்சா தற்போது பதவி உயர்வுபெற்று மகிந்தவால் பிரித்தானியாவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்பது யாவரும் அறிந்ததே.

புலம்பெயர் நாடுகளில் குறிப்பாக பிரித்தானிய வாழ் தமிழர்கள் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்கள், பிரித்தானிய தமிழர்களின் போராட்டங்களால் இலங்கை அரசு இன்றுவரை பல அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது என்றால் அது மிகையாகாது. அப்படியான ஒரு கால கட்டத்தில் பிரித்தானிய தமிழர்களின் போராட்டத்தை உடைத்து, மக்களைப் பிளவு படுத்தி போராட்டத் திறனைக் குறைப்பதற்காக சிறப்புச் செயலாளராக மகிந்தவால் ஆசி வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவரே இந்த ஹம்சா. இவர் தனது நாடகத்தை அரங்கேற்ற ஆரம்பித்துள்ளார். அதற்கேற்றால் போல ஆட சிலர் தயாராகி வருகின்றனர்.

யார் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கப்போகிறார்கள்?

அதாவது யார் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கப் போகிறார்கள், இதை வெளிப்படையாகப் பேச இவர்கள் ஏன் தயங்குகிறார்கள். பல்வேறு மட்டத்தில் பிரித்தானியாவில் இயங்கும் சில அமைப்புகளில் உள்ள சில புல்லுருவிகளே தற்போது அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் நோக்கைக் கொண்டவர்களாக கானப்படுகின்றார்கள். இவ்வாறு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கப்போவதாகக் கூறும் சிலர், பிரித்தானியப் பொதுமக்களின் சுயவிபரக் கோவைகளையும் வைத்திருக்கிறார்கள் என்பதை நாம் முதலில் அறிந்துகொள்ளவேண்டும். பல்வேறு காரணத்திற்காக பொது மக்களின் சுய விபரங்களை திரட்டிவைத்திருக்கும் சில சிறிய அமைப்புகளில் உள்ளவர்கள் இவ்வாறு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கும் பட்சத்தில், இந்த விபரங்கள் எவ்வளவு வீதம் பதுகாப்பாக பேணப்படும் என்பதில் பெரும் ஐயப்பாடு காணப்படுகிறது.

அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கினால் எதைச் சாதிக்க முடியும்?

இவர்கள் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்கினால் எதைச் சாதிக்க முடியும் என எண்ணுகின்றனர்? தந்தை செல்வா காலம் முதல் ஏமாற்றப்பட்டு வரும் தமிழினம் பல துரோகங்களைச் சந்தித்துள்ளது. விடுதலைப் புலிகளால் தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட யுத்த நிறுத்த அறிவிப்புகள் நிராகரிக்கப்பட்டது, எள்ளி நகையாடியது சிங்களம். இறுதி நேரம் வரை புலிகளையும், மக்களையும் முடிந்தவரை அழித்தொழித்த சிங்கள அரசுடன் சேர்ந்தியங்கி இனி என்ன லாபம்? சர்வதேச அனுசரணையுடன் ஒழுங்கு செய்யப்பட்டு, வெள்ளைக் கொடியுடன் வந்த புலிகளின் தலைவர்களை கொன்ற சிங்களத்திடம் நாம் எதனை எதிர்பார்க்க முடியும். அன்று கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாத சிங்கள அரசு, இனிக்கொடுக்கப்போகும் வாக்குறுதியை காப்பாற்றுமா? இதை இனியும் நாம் நம்பலாமா?

அரசியல் சாராத அமைப்புக்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயற்படவேண்டும் என்று கூறுவதில் என்ன நியாயம் இருக்கிறது? இதில் சுயநலமே மேலோங்கியுள்ளது. அதாவது விடுதலைப் புலிகள் பலமாக இருந்த காலகட்டத்தில், தமிழர்களுக்கும் புலிகளுக்கும் உதவிய சிலர், தற்போது தம்மை பாதுகாத்துக் கொள்ள இலங்கை அரசுடன் இணைந்து சிங்கள தேசிய அரசியல் நீரோட்டத்தில் நீச்சலடிக்கப்பார்க்கிறார்கள் என்பதே யதார்த்தமாகும். இப்படியான ஒரு விதையை முதலில் விதைத்து, அதனை அறுவடை செய்யக் காத்திருக்கிறார் ஹம்சா. இதற்கு துணைபோகும் சில அமைப்புக்களின் பிரதி நிதிகள் தமது கொள்கைகளை மீள் பரிசீலனை செய்வது நல்லது. 

எந்த விடயங்களில் அவர்கள் அரசுடன் ஒத்துப்போக உள்ளனர் என அவர்கள் பகிரங்கமாகத் தெரிவிக்கவேண்டும். அதை இணைந்து போவதன் மூலமாக மட்டுமா சாதிக்க முடியும் என்ற விவாதத்திற்கு பதிலளிப்பது நல்லது. புலம் பெயர் நாடுகளில் உள்ள இவ்வாறான அமைப்புக்களின் பிரதிநிதிகள் அரசுடன் தேசிய நீரோட்டத்தில் இணைந்தால், நாளை இவர்களையே ஒரு உதாரணமாகக் காட்டி இலங்கை அரசு உலக நாடுகளிடம் இலங்கையில் ஒரு இனப் பிரச்சனையே கிடையாது என்ற தொனியில் பேசும் வாய்ப்புகள் உள்ளது. எமது போராட்ட வரலாறும், நாட்டுக்காய் உயிரிழந்த போராளிகளையும் உங்கள் மனதில் ஒரு கணம் எண்ணிப்பாருங்கள். அவர்கள் திரு உருவப்படத்திற்கு முன்னால் நின்று நாம் செய்வது சரியா எனச் சிந்தியுங்கள். மாவீரர்கள் உங்கள் மனதை தூய்மையாக்குவார்கள்... அந்த சக்தி அவர்களுக்கு உண்டு.

புலத்தில் புதிதாக முளைத்திருக்கும் புத்தபிரான்களே சிங்கள அரசின் தேசிய நீரோட்டத்தில் கலக்க இருக்கும் உங்கள் முடிவால் எமது தமிழினம் கவிழ்ந்துவிடக் கூடாது.

உங்கள் கருத்துக்கள் வரவேற்க்கப்படுகிறது 
athirvu@gmail.com


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

PAN CARD :`பான்கார்டு' தொலைந்துவிட்டால் மாற்று கார்டு வாங்குவது எப்படி?


`பான்கார்டு' தொலைந்துவிட்டால் மாற்று கார்டு வாங்குவது எப்படி?

இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு

எனது `பான்கார்டு' (நிரந்தர வருமான வரி கணக்கு எண் அட்டை) தொலைந்து விட்டது. ஆனால், அதன் நகல் என்னிடம் உள்ளது. மாற்று பான்கார்டு பெறுவது எப்படி?

`பான்கார்டு' தொலைந்து விட்டால், மாற்று `பான்கார்டு' பெறுவதற்கு, அதற்கென்று நிர்ணயிக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். இந்த விண்ணப்ப படிவத்தை வருமான வரித் துறையின் வலைதளத்திலிருந்து (வெப்சைட்) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான வலைதள முகவரி http://www.utitsl.co.in  ஆகும். இந்த விண்ணப்பத்துடன், தனிநபர் அடையாள அட்டை, வசிப்பிடச் சான்று போன்றவற்றிற்கான ஆதாரச் சான்றிதழ்களையும் அனுப்ப வேண்டும்.

மாற்று `பான்கார்டு' பெறுவதற்கு ஒரு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் செலுத்த வேண்டும். `பான்கார்டு' தொடர்பான நடவடிக்கைகளை வருமான வரித் துறைக்காக ï.டி.ஐ. மற்றும் என்.எஸ்.டீ.எல். ஆகிய அமைப்புகள் மேற்கொண்டு வருகின்றன. பழைய நிரந்தர கணக்கு எண்ணில்தான் மாற்று `பான்கார்டு' வழங்கப்படும்.


source:dailythanthi
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP