சமீபத்திய பதிவுகள்

புலிகளின் தலைவர் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடல்வழி நகர்வை மேற்கொண்டிருக்கலாம்: இராணுவத்திற்கும் கடற்படைக்கும் இடையே கருத்து மோதல்

>> Friday, April 24, 2009

தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகள் குறித்து இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவித்துள்ளன.

விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகளை கட்டுப்படுத்த கடற்படை தவறியிருப்பதாக இராணுவத் தலைமைக்கு இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் ஏலவே முறையிட்டிருந்தனர்.

இதனையடுத்து கடற்படையினருக்கு என அதிசக்தி வாய்ந்த கதுவீகள் (ராடார்)  பொருத்தப்பட்ட படகுகளும் அதிவேக படகுகளும் கொள்வனவு செய்யப்பட்டு கடலில் கடற்படையின் பலம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

அத்துடன், விடுதலைப் புலிகளின் கடல்வழி நகர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்காக நான்கு வலயங்களைக்கொண்ட கடல்வழி பாதுகாப்பு நடைமுறையும் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், மீண்டும் தற்போது இராணுவ உயர்மட்டத்திற்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் இருப்பிடம் குறித்தே இராணுவ உயர்மட்ட அதிகாரிகளுக்கும் கடற்படை உயர்மட்டத்திற்கும் இடையில் தற்போதைய கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் கடல்வழி நகர்வை கட்டுப்படுத்த முடியாமல் அவரை கடற்படையினர் கோட்டைவிட்டிருப்பதாக இராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விசனம் எழுப்பப்பட்டுள்ள போதும் அந்த குற்றச்சாட்டை கடற்படை அடியோடு மறுத்துள்ளது.

குறிப்பாக, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் நீர்மூழ்கிக் கப்பல் மூலம் கடல்வழி நகர்வை மேற்கொண்டிருக்கலாம் என களத்தில் உள்ள இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், கடல்வழியாக அவர் எந்தவொரு நகர்வையும் செய்யமுடியாது என்றும் தமது பாதுகாப்பு அத்தகையதே என்றும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் வாசிக்க அழுத்தவும்................

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP