சமீபத்திய பதிவுகள்

கர்பாலாவிலிருந்து கல்வாரிக்கு -Barakat Ullah

>> Friday, August 27, 2010

கர்பாலாவிலிருந்து கல்வாரிக்கு -Barakat Ullah



பாகிஸ்தானைச் சேந்த் மேற்கு பஞ்சாபின் எல்லைப் பிரேதஷ நகராகிய நரோலால் என்னும் ஊரில் ஷியா பிரிவைச் சேந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தில் நான் பிறந்தேன். இக்குடும்பத்தின் நேர்மை, பக்தி, சடங்காச்சாராம் ஆகியவற்றின் கராணமாகச் சமுதாயம் முழுவதும் அதை மிகுதியாக மதித்து வந்தது. என் பாட்டனாhர் தமது சொந்தப் பெயரால் அழைக்கப்படாமல் "ஜனாப்" என்றே அழைக்கப்பட்டார். மசூதி வேறு, அவர் வேறு என்று பிரிக்கப்படாதவராகக் கருதப்பட்டார். அவர் தமது கடையில் காணப்படாவிட்டால், மசூதியில்தான் காணப்படுவார், அவர் தமது மாலை தொழுகையை முடித்து விட்டு, வீட்டுக்குத் திரும்பியபின், குர்ஆனின் வசனங்களை வாசித்துக்கொண்டிருக்கும் போது, அவருடய அணைப்பில் ஆழ்ந்தவனாய் அவர் மடியில் அமர்ந்திருந்ததே, அவரைக் குறித்து எனக்குள்ள ஆதிஞாபகமாகும். என் பாட்டியார் பக்தி மிக்கவராயிருந்தமையால் அவர் மரித்துச் சமாதியடங்கிய பின், பல பெண்கள் தாங்களும் மரித்து அடக்கம் பண்ணப்படும் போது அம்மையாரின் காலடியில் தமக்கு தலைமாடாக வைத்துத் தம்மை அடக்கம் பண்ண வேண்டுமென்று வேண்டினர். இஸ்லாமுடைய நபிநாயகத்தின் பேரனாகிய இமாம் ஹ_சேன் கொல்லப்பட்டபோது திருநகராகிய கர்பாலாவுக்கு, என் பாட்டியாரின் சகோதரர் ஒருவர் யாத்திரை சென்றதுண்டு. 

எங்கள் குடும்பத்தவர் காலையில் தொழுகை செய்து குர்ஆனிலிருந்து சில திருவாசகங்களைச் சொன்ன பின்புதான் அவரவர் வேலையைத் தொடங்குவர். நான் நான்கு வயதாயிருந்தபோது, குர்ஆனை மனப்பாடம் பண்ணும்படியாக ஸைய்யத் ஷாஹ் ஸாகிபிடம் அனுப்பப்பட்டேன். அதே சமயத்தில் அவருடய மகள் என் சகோதரிக்குக் குர்ஆனைக் கற்பித்தாள். இரவு பிரார்த்தனையோடு எங்கள் வீட்டு அன்றாட வேலைகள் முடிவடையும். 

நான் வளர்க்கப்பட்ட வீட்டின் பண்பாடு இவ்விதமாக இருந்தது. நான் நான்கு வயதாயிருக்கும்போதே, கிறிஸ்தவ தொண்டர் நடத்தும் பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். தேர்வுகளில் நான் அடைந்த வெற்றியினால் அங்கிருந்து அப்பள்ளியைச் சார்ந்த ஆரம்ப நடுநிலைப் பள்ளிக்கு அனுப்பட்டேன். இவ்விரு பள்ளிகளிலும் கிறிஸ்தவப் போதனைகள் கற்பிக்கப்பட்டதோடன்றிச் சில சமயங்களில் ஏனைய பாடங்களைக் காட்டிலும் வேதபாடமே முக்கியமாகக் கருதப்பட்டது. எனக்கு நல்ல நினைவாற்றல் இருந்தமையால் நான் ஐந்தாம் வகுப்பையடைந்தபோது, பல கிறிஸ்தவர்களைக் காட்டிலும் பரிசுத்த வேதநூலை (பைபிள்) நன்கு அறிந்திருந்தேன் எந்த வருடத்திலும் நான் வேதாகப் பரிசு வாங்காமலிருந்ததாக எனக்கு ஞாபகமேயில்லை. 

என் தகப்பனராகிய ஷேய்க் ரஹ்மத் அலி பரந்த நோக்குடையவராகவும், எல்லா மதத்திற்கும் ஆதரவளிப்பவராகவும் விளங்கினார். ஹிந்துக்களும், கிறிஸத்வர்களும், முஸ்லீம் மதத்தின் எல்லா வகுப்புகளும நண்பர்களாயிருந்தனர். அவர் வாணிபம் செய்து வந்த போதிலும் ஒவ்வொரு நாளும் காலை நேரத்தில் அவர் பரிசுத்த வேதத்தையும் குர்ஆனையும் எப்படியாவது வாசித்து விடுவார். பாரசீகக் கவிஞர்களின் கவிகளையும், பாரசீக ஆசிரியர்களின் உரைநடை நூல்ககளையும் பெருவிருப்புடன் படிப்பார். அவருடைய தம்பியும் என் சிற்றப்பவுமாகிய மோஹ்ஸின் அலியோ, என் அப்பாவும் முற்றிலும் எதிர்மாறாக ஷீயா முஸ்லீம் கொள்ளகைகளை மிகவும் கண்டிப்பாகவும் வைராக்கியத்தோடும் கடைபிடித்தாh. குர்ஆனையும் அதற்குரிய விளக்க நூல்களையும் தவிர வேறெந்த மதநூல்களையும்  அவர் படிக்கவே மாட்டார். அவர் மெட்ரிக்குலேஷன் வரை கற்றிருந்தார். அக்காலத்தில் அச்சிற்றூரில் அது ஓh அரிய பெரிய படிப்பாக கருதப்பட்டது. அவர் தம் வீட்டில் ஓர் சிறு நூல் நிலையமும் வைத்திருந்தார். கிறிஸ்தவ சமயத்தையுமு; இஸ்லாமிய மதத்தில் வேறு பிரிவுகளையும் கண்டித்தும் மறுத்தும் கூறும் நூல்களே அதில் அடங்கியிருந்தன.

நான் என் பள்ளியில் வருடாவருடம் வேதாகப் பரிசுகள் பெறுவதையும், பல வேத வசனங்களை மனப்பாடமாய்க் கூறுவதையும் என் சிற்ற்ப்பா கண்டபோது, என்சமயப் பயிற்சயை இனி தாமே நடத்தவேண்டுமென்று கருதி எனக்குச் சில நூல்களை வாசிக்கும்படிக்கொடுத்தார். அச்சமயம் எனக்க வயது பன்னிரன்டு நான் ஆறாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். என் சிற்றப்பா எனக்குக் கொடுத்த புத்தகங்களை நான் எளிதில் வாசித்துப் புரிந்து கொள்ளத்தக்கதாக சாதி " பிர்தௌஸி" என்னும் ஆசிரியர்கள் எழுதிய நூல்களிலிருந்து தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை நான் படித்துக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு வழங்கின புத்தகங்களில் சுப்தத் அல் அக்லாவீல்பீ தர்ஜிஹில் குர்ஆன் அல்லல் அனாஜீல் என்ற புத்தகம்தான் என் மனதை பெரிதும் ஆட்கொண்டது. இஸ்லாம் மத போதனைகளுக்கும் கிறிஸ்தவ மதப் போதனைகளுக்குமிடையேயுள்ள ஒப்புமைகளும் பரிசுத்த வேதநூலைக் கண்டனம் பண்ணும் கூற்றுகளின் எடுத்துக் காட்டுகளும் அந்நூலில் அடங்கியிருந்தன. நூளடைவில் இந்நூல் எனது இணைப்பிhயி நண்பனாகி விட்டது. இதை ஓர் ஆயுதம் போல் நான் தாங்கிக் கொண்டு கிறிஸ்தவர்கள் கடைவீதிகளில் நி;ன்று பிரசங்கித்துக்கொண்டிருக்கும்போது, அங்கு நான் போவதுண்டு, பல கேள்விகளால் அவர்களைத் தாக்கி, அவர்களுக்கு நான் அடிக்கடி குழப்த்தையுண்டு பண்ணினதுண்டு. 

கிறிஸ்தவ சமயத்தின் மீது வெறுப்பை உண்டுபண்ணும் இத்தகைய புத்தகங்களால் ஆட்கொள்ளப்பட்டவனாய் நான் ஒருமுறை பரிசுத்த மத்தேயு எழுதின சுவிசேஷத்தின் பிரதி ஒன்றைச் சுட்டெரித்தேன். எப்பெடியென்றால், ஓர் இரவு மண்ணென்னை விளக்கொளியில் நான் அதை வாசித்துக்கொண்டிரு;தேன். அதில் எப்பகுதியை வாசித்துக் கொண்டிருந்தேன் என்பது எனக்கு இப்பொழுது நினைவில்லை, ஆனால் அதை வாசித்துக்கொண்டிருக்கும் போது, விளக்குத் தீயை அதில் மூட்டி அதை எரித்தேன். நான் செய்த செயலைக் கண்டு என் தாயர் திடுக்கிட்டார். ஆனால் நானோ அது இஞ்சில் (சுவிசேஷம்) என்னும் நூலின் ஓர் பிரதிதான் என்று அவருக்குக் கூறினேன். அவர் போட்ட கூச்சலைக் கேட்டு என் தகப்பனார் அங்கு வந்தார். நான் செய்த் செயலைக் கண்டு என்னை மிகவும் திட்டினார். குர்ஆனை ஓர் கிறிஸ்தவன் சுட்டெரி;த்தால் நான் அதைப் பொறுப்பேனா என்று என்னைக் கேட்டார். என் முகத்தில் காணப்பட்ட திகிலை அவர் கண்டபோது, சாதி என்னும் நூலிலிருந்து உனக்கு பிறர் எதைச் செய்ய வேண்டாமென்று நீ கருதுவாயோ, அதை நீயும் பிறருக்குச் செய்யாதே, என்றும் மேற்கோளைக் கூறினார். அவ்வேளையில் என் சிற்றப்பா அங்கு வந்தார். தம் தமையனாருக்கு முன்பாக அவர் எதையும் சொல்லத் துணியவில்லை. என் தகப்பனார் அவ்விடம் விட்டு அகன்றபின், நான் செய்தது தகுதியான செயலென்றும், புகழ்மிக்க செயலென்றும் என்னை வாழ்த்தியதுடன் அது பாவச்செயலாகாதென்றும் வற்புறுத்தினார். 

ஷீயா, பிரிவினருக்கு முஹர்ரம் ஓர் புனித மாதமாகும். ஏனென்றால் இமாம் ஹ_சேன் கொல்லப்பட்ட மாதம் அது. ஒவ்வொரு வருடமும் முஹர்ரம் ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாகவே ஷீயா வகுப்பைச் சேர்ந்த பையன்கள் ஒன்று கூடித் தெருக்களுடே பவனி சென்று கொண்டு, தங்கள் மார்பில் அடித்துக் கொள்வர், அவ்வேளையில் என் நண்பர்கள் நால்வரும் நானும்

    ஹ_சேன்; ஹ_சேன் ஹ_சேன் ஹ_சேன்

    ஷாஹிதே கர்பலா ஹ_சேன்

என்று பாடிக்கொண்டே செல்வோம். ஒருமுறை நாங்கள் ஒரு ஸாக்கிரை (அதாவது ஞாபக்ப்படுத்துவோரை, அல்லது தெய்வத்தைத் துதிப்பவரை) லக்னோவிலிருந்து வரவழைத்தோம் அவர் சிறு கோலைக் கொண்டு வந்திருந்தார். அதன் ஓர் முனையில் பன்னிரண்டு சிறிய கூர்மையான கத்திகள் மாட்டப்பட்டிருந்தன. அவர் அக்கத்திகளைக் கொண்டு தம் தோள்களைக் கிழித்துக் கொண்டார். இதைக் கண்டு நான் ஆவேசமுற்று அக்கோலை அவர் கையிலிருந்து பிடுங்கி என் தோள்களைக் கீறிக்கொள்ள ஆரம்பித்தேன். இதைக் கண்ட என் மாமான்மாரில் ஒருவர் அதை என் கரத்திலிருந்து பறித்துக் கொண்டார். அந்நிகழ்ச்சிக்குப்பின், நான் வைராக்கியமும் பக்தியும் மிக்க சிறுவன் ன்று எனக்குப் பேரும் புகழும் உண்டாகி விட்டது. 

என் வாலிப பருவத்தின் இன்னொரு நிகழ்ச்சி என் மனதை விட்டு அகல்வதேயில்லை. ஒருநாள் கிறிஸ்தவ ஊழியர்கள் சிலர் கடைவீதியில் பிரசங்கித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு திரு. தோமா என்பவர் உத்தரப்பிரேதசத்திலிருந்து வந்திருந்தார். துணிகளுக்கு சாநய்தோய்க்கும் ஒருவனுடைய கடைக்கு அருகில் நின்று அவர் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். முஸ்லீம் சமயத்தைச் சேர்ந்த, பருத்த உடல் கொண்ட அந்தக் கடைக்காரன், கடையிலிருந்து வெளியில் வந்து, பிரசங்கியாருக்கு முன்னால் போய் நின்று அவர் முகத்தில் துப்பி, அவர் கன்னத்தில் பலமாக அறைந்தான். இதன் விளைவாக இருவரும் கைகலந்து சண்டையிடுவர் என்று அங்கு கூடியிருந்த மக்கள் எதிர்பார்த்தனர். ஏனென்றால் திரு. தோமா அவர்களும் நல்ல தேகக் கட்டும் வலிமையும் வாய்ந்தவராயிருந்தார். ஆனால் அவரோ, தமது கைக்குட்டையை வெளியிலெடுத்துப் பொறுமையாகத் தமது முகத்தை துடைத்துக்கொண்டு "கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார்" என்று கூறிவிட்டுத் தமக்கு யாரும் எத்தீங்கும் இழைத்திராததுபோல் தொடர்ந்து பிரசங்கஞ் செய்தார். சாயக்காரன் தலைகவிழ்ந்து வண்ணமாகத் தன் கடைக்குத் திரும்பினான். திரு. தோமா அவர்கள் அவ்வேளையில் நடந்துகொண்ட விதம் எல்லோரையும் வியக்கச் செய்தது. அது என் உள்ளத்தையோ ஓர் பெரிய அசைப்பு அசைத்து விட்டது. காரணம் யாதெனில, இயேசுவானவர் மலைமீது செய்த பிரசங்கத்தில் " உங்கள் சத்துருக்களில் அன்பு கூருங்கள்" என்று கூறியுள்ளதை மெய்யாகவே யாரும் கைக்கொள்ள முடியாதென்றும், அதனால் அப்பிரசங்கம் யாருக்கும் உடன்பாடாகதென்றும் நான் பலமுறை கூறியிருந்ததுண்டு. 

நான் எட்டாம் வகுப்பை முடித்தவுடன் கிறிஸ்தவத் தொண்டர்கள் நடத்தும் உயர்நிலைப்பள்ளிக்கு என் வீட்டிலிருந்து அனுப்பப்பட்டேன். இப்பள்ளியிலும் ஒவ்வொரு வேதபாடப் பரிசையும் நானே பெற்று வந்தேன். நூர்முகம்மது என்ற பெயர் கொண்ட ஓர் முஸ்லீம் பையன் கிறிஸ்தவனாக விரும்பினான். ஆனால் நானோ அவனிடஞ்சென்று அக்கருத்தை அறவே விட்டுவிடும்படிச் செய்தேன். சமயச் சார்பான காரியங்களில் என்னை ஓர் நிபுணனாக மாணவரும் ஆசிரியரும் மதித்தனர். சுவிசேஷம் பிரசங்கிக்கப்படும் கடை வீதிகளுக்கெல்லாம் நான் சென்று பிரசங்கிமாரிடம் மனக்குழப்பத்தை தரவல்ல கேள்விகளைக் கேட்டு, இவ்விதமாகக் கூட்டத்தில் குழப்பத்தை உண்டு பண்ணிவந்தேன். 

நான் படித்துவந்த உயர்நிலைப்பள்ளி அமைக்கப்பட்டிருந்த நகர் எல்லாப் பாவங்களுக்கும் பெயர் பெற்றதாயிருந்தது. ஆதனால் நானும் கறைபடாமலிருக்கவில்லை@ கறைபடாமலிருக்கவுமுடியவில்லை. அப்பொழுது நான் வாலிப் பருவத்தை எட்டிக்கொண்டிருந்தேன். எளிதில் வாலிபரைத் தவறச் செய்யக்கூடிய வயது அது. என் பள்ளியின் சுற்றுச் சார்புகளும், நான் வசித்துவந்த விடுதியின் சூழ்நிலையும் பாவம் நிறைந்தவைகளாயிருந்தன. ஆசிரியத் தொண்டை பலகாலமாக ஆற்றிக் கொண்டிருந்த ஆசிரியர்கள் சிலவரும் அவ்விடுதியில் வசித்து வந்தனர். அவர்களில் ஒருவர் துன்மார்க்கத்தில் பெயர் பெற்றவர். இந்தப் பயங்கரமான சூழ்நிலையில் என் பாவத்தைக் குறித்து நான் ஆழ்ந்த உணர்ச்சியடைந்தேன். எப்படியாவது பாவமன்னிப்பைப் பெற வேண்டுமென்றும், செம்மையும் தூய்மையுமான வாழ்க்கையை நான் மீண்டும் அடையவேண்டுமென்றும் உணர்ந்தேன். அருகிலிருந்து மசூதிக்குச் சென்று ஒழுங்காக என் தொழுகையை நிறைவேற்றுவதுடன் பாவத்தின் வல்லமையிலிருந்தும், பிசாசின் அடிமைத்தனத்திலிருந்தும் எனக்கு விடுதலையளிக்கும்படியும கடவுளை வேண்டினேன். ஆனால் என் வேண்டுகோளுக்கோ பதில் அளிக்கப்படவேயில்லை. குர்ஆனைப் படித்துப் பார்த்தேன். எதுவும் எனக்குப்ப பாவத்தினின்று விடுதலையளிக்கவேயில்லை. நாளுக்கு நாள் என் பாவ உணர்ச்சி அதிகரித்தது@ என்னை பாவத்தினின்;று விடுவிக்ககூடியது யாது? என்ற கூக்குரலே என் உள்ளத்திலிருந்து ஓயாது எழுந்து கொண்டிருந்தது. என் படிப்பு வேளை முடிந்த போதெல்லாம் மௌலவிகளிடம் சென்றேன் தீய மனதையுடைய பையன்களின் தொடர்பை அறவே விட்டுவிட்டேன். நல்ல பையன்களோடு நட்புக்கொண்டேன். சிறந்த முஸ்லீம் குருக்களிடமும் கேட்டேன@ நான் என்னதான் பரிகாரம் தேடினபோதிலும் பாவவுணர்ச்சி என்னைவிட்டு நீங்கவேயில்லை. அது என் உள்ளத்தை விடாது அரித்துக் கொண்டேயிருந்தது. 

அப்பொழுதுதான் என் வாழ்க்ககை புதிய பாதையில் திரும்பிற்று. எவ்வாறென்றால், நான் ஒன்பதாம் வகுப்பில் முதல் நிலையில் உயர் மதிப்பெண்களுடன் தேறியிருந்த மகிழ்ச்சிமிக்க செய்தியை என் பெற்றோருக்கு அறிவிக்கப் போய்க்கொண்டிருந்தேன். ஊருக்குள் புகுந்த போது உவகைமலர்ந்த முகத்துடன் காணப்பட்டேன். ஆனால் வீட்டிற்குள் நுழையும் முன்பே, எங்கும் துக்கம் குடிகொண்டிருப்பதைக் கண்டேன். என் சிற்றப்பாவாகிய மோஹ்ஸின் என்பார் தலைவாயிலில் நின்று கொண்டிருந்தார். அவர் என்னை தனியே அழைத்துச் சென்று, என் தந்தை கிறிஸ்தவ சமயத்தைத் தழுவிவிட்டார் என்றும், அவ்வளவு காலமும் அவர் அஞ்சுமானே இஸ்லாமியா குழுவின் தலைவராயிருந்தமையால் நகர் முழுவதும் அவருக்காகப் புலம்பிக் கொண்டிருந்ததென்றுங் கூறினார். இதைக் கேட்டவுடன் யானடைந்த மன மடிவினால் கால் தள்ளாடிக் கொண்டே வீட்டினுள் சென்றேன்.



அவ்வேளையில் என் தக்பபனார் வீட்டில் இல்லை, என் தாயரும் என் இரு சகோதரிகளும் இரு சகோதரர்களுமிருந்தனர், அவர்களும் கிறிஸ்தவர்களாயிருந்தனர். அவர்களெல்லாரும் ஓடிவந்து என்னை அணைத்துக் கொண்டனர். நாங்கள் ஒன்றுகூடின உவகையில் என் உள்ளத்தை வருத்திய துயரைக் கூட மறந்து விட்டேன். அவ்வேளையில் என் சித்தப்பா வந்து என்னைத் திரும்பவும் தனியே அழைத்துச் சென்று இனி நீ

முஷ்ரிக்குகள் (பொய் மதத்தார்) நிறைந்த இக்குடும்பத்தில் இவர்களோடு ஒன்றுப்பட்டிருக்கக் கூடாது. நான் உன்னை என் புதல்வனாக சுவீகரித்து, என் மக்களைக் காட்டிலும் உன்னை அதிகமாக நேசிப்பேன். நான் உன்னை எம்.ஏ. வகுப்பு வரை படிக்க வைப்பேன். உனக்கு எவ்வித இடர்பாடும் வராதபடி உன்னைக் காத்துக் கொள்வேன், என்றார். அவர் சொன்னபடியெல்லாம் செய்வார் என்பது எனக்கு நன்கு தெரியும். ஆனால் நானோ அதற்கு உடன்படவில்லை. என் தகப்பனார் கிறிஸ்தவராயிருந்தாலும் கூட நான் அவரோடு ஓர் சிறந்த முஸ்லீமாக வாழ்வேன் என்றும் எல்லா நியாயமான முறைகளிலும் ஓர் நல்ல புதல்வனாக அவருக்கு கீழ்படிந்திருப்பேனென்றும் கூறினேன். என் தகப்பனார் வீட்டிற்கு திரும்பின போது என்னைக் கண்டு மகிழ்ச்சியுற்றார். ஆனால் நகரத்தார் அவருக்கு இழைத்திருந்த கொடுமையினால் அவர் முகத்தில் கோடுகள் விழுந்திருப்பதைப் பார்த்தபோதோ, என் உள்ளம் மிகுதியாக வேதனையுற்றது. நான் சித்தப்பாவுக்குக் கூறின விடைய அவர் கேட்டபோதும் பெருமகிழ்ச்சயைடைந்தார். 

இரண்டு நாட்கள் கழிந்தபின் நகரின் முதியோர்களாலாகிய குழுவிற்கு நான் அழைக்கப்பட்டேன். ஓர் பெரியாரின் வீட்டில் அக்குழு கூடிற்று. அவர்தான் பின்னாளிள் எனக்கு மாமனாரானவர், அவர் என் கரத்தைப் பற்றிக் கொண்டு, நான் தகப்பனாரைப் போல் கிறிஸ்தவனாகாவிடில், என்னை எம்.ஏ வகுப்பு வரை படிக்கவைப்பதாகக் குர்ஆனின் மீது சத்தியம் செய்தார். அதற்கு நான் விடையாக அங்குக் கூடியிருந்த எல்லோரையும் நோக்கி, இஸ்லாமிய மதத்தைத் துறக்கும் எண்ணம் எனக்கு இல்லையென்றும், என் பெற்றோர் எவ்வித ஈன லாபத்தையுங் கருதி கிறிஸ்தவ சமயத்தை தழுவியிருக்க முடியாதென்றும், அவ்வுண்மையை முதியோர் அறிவர் என்றும் கூறினேன். அவர்கள் என் தந்தையாரின் கருத்தை சிறிதும் சந்தேகிக்கவில்லை என்று கூறினர், என்ற போதிலும் தங்கள் குழுவின் தலைவர் முஷ்ரிக் (பொய் சமயத்தார்) ஆக மாறுவதைத் தங்களால் சும்மா பார்த்துக்ககொண்டிருக்க முடியாதென்றும், தங்கள் மத்தையும் சமுதாயத்தையும் காப்பது தங்கள் பொறுப்பென்றும் கூறினர். இதைக் கேட்ட நான் அவர்கள் கூற்றினால் வருந்துவதையும் இஸ்லாமிய மதத்தில் நான் நிலைத்திருக்கும்படி அவர்கள் எனக்குக் கையூட்டளிக்க முயன்றார் என்றும் கூறினேன். 

   அன்று நானும் என் தந்தையாரும் எங்கள் உள்ளத்தில் இருந்ததை ஒளிக்காமல் உரையாடினோம். தாம் கிறிஸ்தவ மதத்தைத் தழுவித் திருமுழுக்குப் பெற்றதைக் குறித்து தெரிவித்தால் பரீட்சை சமயத்தில் நான் கலவரம்; அடைந்து விடுவேன் என்று அஞ்சித்தான் எனக்குத் தெரியப்படுத்தவில்லை என்று கூறினார். அவர் இருபது ஆண்டுகளாக சத்தியத்தைத் தேடிக்கொண்டிருந்ததாகவும், இறுதியில் கிறிஸ்துவில்தான் அதைத் தாம் கண்டதாகவும்  கூறினார். நான் முதியோர்களிடம் கூறின தீர்மானத்தைக் கேட்டு மகிழ்ந்தார். என் தந்தையாரின்

சாந்தமும், அமைதியும், பெருமிதமும், தமது துன்பங்களையும் அவர் அன்போடும் பொறுமையோடும் சகித்த விதமும்,நகரத்தார் அவருக்கிழைத்த கொடிய துன்பங்களின் செய்தியும் என் மனத்தையுருக்கின. ஏன் தகப்பனாரின் உள்ளத்தைக் கொள்ளைகொண்ட அந்தப் புதிய ஏற்பாட்டில்

(இன்ஜில்) என்ன இருக்கிறது என்பதை வாசித்து அறியும்படித் தீர்மானித்தேன்.



  உடனே, என் தகப்பனார் தாமே என் வாசிப்பை வரையறுத்து நடத்த ஆரம்பித்தார். அவர் எனக்குக் கொடுத்த புத்தகங்களில் ஃபாந்தர் என்பார் எழுதின மிஸானுல் ஹக்கும் திஸதால் எழுதின கிறிஸ்தவ சயத்திற்கு முகம்மதிய மறுப்புரையும், இமாதுத்தின் எழுதின நூல்களும் இருந்தன. அவைகளை நான் கருத்தாகப் படித்தேன் இவற்றின் மூலமாகவும், இவற்றிற்கியைனாயான ஏனைய நூல்கள் மூலமாகவும்,

சுவிசேஷங்கள் கிறிஸ்துவின் உண்மையான கூற்றுகளைக் கொண்ட உண்மையான நூல்கள் என்பதை உணர்ந்தேன். இயேசு கிறிஸ்துவின் தெய்வத்துவம், சிலுவை பிராயச்சித்தம், திரித்துவம் என்பவற்றினைக் குறித்து என் உள்ளத்தில் எழுந்த கேள்விகள் மட்டும் நான் திருமுழுக்குப் பெறுவதற்குத் தடையாயிருந்தன. என் தந்தையார் எனக்கு வேறு நூல்களும் கொடுத்தார். ஆனால் அவைகளோ நான் புரிந்துகொள்ளக்கூடாத விதமாக உயர்நடையில் எழுதப்பட்டிருந்தன. என்றபோதிலும் எனக்குப் புரியாத தத்துவங்களை எனது விசுவாசப் பிரமாணமாகக் கொள்ளும்படியாகவும், காலம் வரும்போது அவைகளை நான் புரிந்து கொள்ளக் கூடுமென்றும் என் தந்தையார் கூறினார். கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை நான் படித்தபோது, என் தந்தையாரை நானும் பின்பற்றிக் கிறிஸ்துவை என் மீட்பராக ஏற்றுக்கொள்ளள வேண்டுமென்ற நாட்டம் என் உள்ளத்தில் உண்டாயிற்று. தீர்க்கதரிசிகள் அனைவரிலும் இயேசு கிறிஸ்து ஒருவர் மட்டும் பாவத்தை வென்றார் என்றும், அவருடய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் அவ்வுண்மை வெளியாயிற்று என்றும், ஆகவே என்னை விடாது வருத்திக்கொண்டிருந்த என் பாவங்களின்று அவர் ஒருவரே என்னை மீட்கக் கூடுமென்றும் நான் உணர்வை அடைந்தேன். 

திடீரென்று கல்வாரிச் சிலுவையின் திருப்கடவுள் என் பாவங்களை மன்னித்துவிட்டார் என்ற உணர்வடைந்தேன். நான் திருமுழுக்குப் பெற்ற போது பாவப் பெருஞ்சுமை என் தோள்களிலிருந்து நீக்கப்பட்டதாக உணர்ந்தேன். என்ன மகிழ்ச்சி. நான் பாவ மன்னிப்படைந்துவிட்டேன் என்று உணர்ந்துவுடன்  என் வாழ்க்கையில் சாந்தியும் அமைதலும் உண்டாயின. இவ்வனுபவம் எனக்கு புதிதாயும், முழுவதும் விளக்கிக் கூறக்கூடாததாயுமிருந்தது. பொருள் எனக்கு நன்கு புலனாயிற்று, பாவமில்லா ஆண்டவராகிய இயேசு என் பாவங்களுக்காகச் சிலுவையில் மாண்டார் என்ற உண்மையின் மூலம் 

பாவமன்னிப்பையும் கிறிஸ்து இயேவுக்குள் புது வாழ்வையும் நான் கண்டடைந்தபோது, இளைஞனாயிருந்தேன். அதன்பின் இத்தனை ஆண்டுகளாக நான் அனுபவித்த என் கிறிஸ்தவ அனுபவத்தைத் திரும்பிப் பார்க்கும் போது நான் தகுதியற்றவனாயிருந்தபோதே கடவுள் எனக்கு எவ்வளவாய்த் திருவருள் புரிந்தார் என்ற உணர்வினால், என் உள்ளம் நன்றியறிதலால் நிறைகிறது. எனக்கு அறிவும் வயதும் அதிகரிக்க அதிகரிக்க, அதோடு என் மனப்பாண்மையும் விரிவடைய  என் வாழ்க்கையில் மெய்யான கிறிஸ்தவ அனுபவமும் அதிகரித்துள்ளது. பாவத்தில் அழிந்துபோன மனுக்குலத்திற்குச் சிலுவையில் அறையுண்டு, மரித்து, மூன்றாம் நாளில் உயிரோடெழுந்த கிறிஸ்துவினால் மட்டுமே மீட்பின் நம்பிக்கையுண்டு என்ற உணர்வு எனக்கு மிகுதியாய் ஏற்பட்டுள்ளது. பாவத்திலிரு;து விடுதலையும், தூய்மையும் நற்குணமும் பொருந்திய வாழ்க்கையடைதலும், அவாரால் மட்டுமே வாய்க்கக்கூடும்.

என் சிந்தனைகளையும் அனுபவங்களையும் என் முஸ்லீம் சகோதரார்களுக்கு கூற வேண்டுமென்ற ஆவல் எனக்கு எப்பொழுதுமே உண்டு. இயேசுவில் பொருந்தியுள்ள சத்தியத்தை அவர்கள் காண வேண்டுமென்று நான் பல புத்தகங்கள் எழுதியுள்ளேன். கல்வாரிச் சிலுவையிலிருந்து பெருக்கெடுத்துப் பாயும் மகிழ்ச்சியையும் ஜீவனையும் அவர்களும் என்னோடு அனுபவிக்க வேண்டுமென்பதே என் நோக்கமாகும். என் வயது முதிரும் இக்காலத்தில் நமது ஆண்டவரும் உலக இரட்சகருமாகயிய இயேசு கிறிஸ்துவில் நான் இவ்வளவு காலமும் அனுபவித்த இரட்சிப்பின் சந்தோஷம் அவர்களுக்கு வாய்க்க வேண்டுமென்று விண்ணப்பித்துக்கொண்டிருக்கிறேன்.

source:http://iemtindia.blogspot.com 

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

3டி படத்தை இனி தொட்டும் பார்க்கலாம்

 
Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update

டோக்கியோ: 3டி தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. ஹாலிவுட்டில் பல சினிமாக்கள் 3டி-யில் வருகின்றன. வீட்டு நிகழ்ச்சிகளை 3டி-யில் படம் பிடிக்கும் கேமராக்கள் வந்துவிட்டன. 3டி ஒளிபரப்பு அனுமதிக்கு டிஸ்கவரி உள்ளிட்ட சேனல்கள் விண்ணப்பித்துள்ளன. 3டி காட்சிகளை பார்த்து ரசிக்கும் டிவியை எல்ஜி, சோனி, பானாசோனிக் நிறுவனங்கள் அறிமுகப்படுத்துகின்றன.

இந்நிலையில், திரையில் தெரியும் 3டி காட்சிகளை தொட்டு, தடவிப் பார்க்கும் வசதியை ஜப்பான் தேசிய அறிவியல், தொழில்நுட்ப நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. திரையில் ஒரு பலூன் வருகிறது என வைத்துக்கொள்வோம். அதை எடுப்பதுபோல கையை கொண்டு சென்றால், நம் கையில் பலூன் தவழ்வதுபோல காட்சி மாறும். பலூனின் பிம்பம் நமது கையிலேயே விழும். பலூனை தத்ரூபமாக நம் கையிலேயே பார்க்கலாம்.

குத்துவது போல விரலை கொண்டு சென்றால், பலூன் பிம்பம் மாறுதல் அடைந்து குழி உருவானது போல காட்சியளிக்கும். பிரத்யேக கேமராக்களின் உதவியுடன் நமது கைகளின் இயக்கம் தொடர்ந்து படம் பிடிக்கப்பட்டது அதற்கேற்ப காட்சிகள் மாறுகின்றன. சுகுபா நகரில் நேற்று நடந்த அறிமுக நிகழ்ச்சியின்போது இதை அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் செய்துகாட்ட, பார்த்தவர்கள் மிரண்டே போய்விட்டனர். முக்கியமான ஆபரேஷன்கள், வீடியோகேம் ஆகியவற்றில் இத்தொழில்நுட்பத்தை பயன்படுத்த உள்ளனர்.

source:dinakaran
--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP