சமீபத்திய பதிவுகள்

சிங்கிளாக்கப்படும் சிங்கள ராணுவம்

>> Sunday, March 29, 2009

உலக நாடுகளின் எதிர்ப்புகளினால் சிங்கள அரசு திணறி வரும் விடயம் அனைவரும் அறிந்ததே.அதை பற்றியதான ஒரு ஆய்வுக்கட்டுரை

சிந்திக்காத சிங்களம் இதுவரை சந்திக்காத சமர்க்களம்இன்று போர்வெறி பிடித்து கோரத்தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது சிங்கள அரசு. வெற்றிக்களிப்பில் திளைத்துப்போயிருக்கும் அதன் செயற்பாடுகள் பின்விளைவுகள், எதிர்விளைவுகளை பற்றி துளியெயேனும் சிந்திக்காத விதமாக அமைந்திருக்கிறது. "தானே உலகின் வல்லரசு" என்ற பாணியில் உலக நாடுகளின் கோரிக்கைகளையும் நிராகரித்து திமிருடன் பேசிவருகிறது. இந்நிலையில், இதுவரை காலமும் சந்திக்காத சமர்க்களங்களை சந்திக்கப்போகிறது சிங்களதேசம்.

தமிழினம் மீது வில்லங்கமாகவே திணிக்கப்பட்ட போரில் தமிழினம் அதிகமாகவே இழந்துவிட்டது. "புலிகளை ஒழிக்கின்றோம்" என்று சொல்லிகொண்டு தமிழினத்தின் மீது இன அழிப்பு நடவடிக்கையை கட்டவிழ்த்து விட்டிருக்கின்றது. அப்பாவித் தமிழர்களின் அழிவுகளை, இழப்புக்களை தமது மாபெரும் வெற்றிகளாக பிரகடனப்படுத்தியும் வருகின்றது. ஆனால் அதுவே தங்களுக்கெதிராக உருவெடுத்து நிற்குமென எள்ளளவேனும் சிந்தித்துப் பார்த்திருக்காது சிங்கள அரசு. தப்பான கணிப்பு, எதேச்சைத்தனமான போக்கு மற்றும் போர்வெறிக் கொள்கை என்பவற்றுடன் வலம்வரும் சிங்கள அரசில், களயதார்த்தங்களை புரிந்து சிந்தித்து செயலாற்றக்கூடியவர்கள் யாருமே இல்லையென்பது பரிதாபமே!!!

மேலதிக செய்திகளுக்கு அழுத்தவும்

StumbleUpon.com Read more...

விடுதலைப்புலிகளின் தாக்குதலில் சிறிலங்கா படையினர் 500 மீற்றர் பின்நகர்வு: லக்பிம தகவல்சிறிலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமன்ட் மற்றும் 20 ம் கஜபாகு ரெஜிமன்ட் மீது சுமார் 300 பேர் கொண்ட விடுதலைப்புலிகளின் அணியினர் கடந்த புதன்கிழமை பானு மற்றும் லோரன்ஸ் ஆகியோர் வழிநடாத்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இத் தாக்குதலையடுத்து சிறிலங்கா படையினரின் 7ம் சிங்க ரெஜிமண்ட் தமது நிலைகளில் இருந்து 500 மீற்றர் தூரம் பின்வாங்கியிருந்ததாகவும், இச்சமயத்தில் 58 ம் படையணியின் படையதிகாரி பிரிகேடியர் சிவாந்திர சில்வா விடுமுறையில் இருந்ததாகவும், இதனையடுத்து உடனடியாக மறுநாள் அவர் களமுனைக்கு திரும்பியதாகவும், மேலும் மேலதிக படையினர் பாதுகாப்பினை பலப்படுத்துவதற்கு அப்பகுதிக்கு நகர்த்தப்பட்டதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் சிக்கிய விஜயபா படையணி

விடுதலைப் புலிகளின் குறிசூட்டுத் தாக்குதலில் சிக்கிய விஜயபா படையணி
[ஞாயிற்றுக்கிழமை, 29 மார்ச் 2009, 07:06 மு.ப ஈழம்] [பி.கெளரி]
வன்னிப் பகுதியில் கடந்த வாரம் நடைபெற்ற சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் குறிச்சூட்டுத் தாக்குதலில் சிக்கி 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி பலத்த இழப்புக்களைச் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது:

சாலை பகுதியால் நகர்வில் ஈடுபட்டு வரும் 55 ஆவது படையணியின் 7 ஆவது விஜயபா றெஜிமென்ட் படையணி விடுதலைப் புலிகளின் 10 அடி உயரமான மணல் அணை ஒன்றை கைப்பற்றும் முயற்சியில் கடுமையான சேதங்களை சந்தித்துள்ளது.

இந்த மணல் அணையில் உள்ள விடுதலைப் புலிகளின் நிலை இடங்கள் தொடர்பான தகவல்களை திரட்டும் நோக்கத்துடள் பீரங்கிப் படையணியைச் சேர்ந்த லெப். சந்திரஜித் தலைமையில் 4 பேர் கொண்ட இராணுவ அணி ஒன்று நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது.


மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP