சமீபத்திய பதிவுகள்

நளினி- பிரியங்கா சந்திப்பால் புதிய சர்ச்சை: ராஜீவ்காந்தி கொலையில் மேலும் மர்ம முடிச்சுகள்

>> Thursday, April 24, 2008

நளினி- பிரியங்கா சந்திப்பால் புதிய சர்ச்சை: ராஜீவ்காந்தி கொலையில் மேலும் மர்ம முடிச்சுகள்

சென்னை, ஏப். 24-

கடந்த மார்ச் மாதம் 19-ந்தேதி, வேலூர் சிறை யிலிருக்கும் நளினியை, பிரியங்கா ரகசியமாக சந்தித்து திரும்பினார்.

இந்த சந்திப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான புதிய சர்ச்சை களை ஏற்படுத்த தொடங்கி யிருக்கிறது.

தனது ரகசிய சந்திப்பு வெளியே தெரிந்ததும் டெல்லியில் இருந்த பிரியங்கா "இந்த சந்திப்பின் மூலம் எனது மனபாரம் குறைந்திருக்கிறது. வேறு உள்நோக்கம் எதுவும் கிடை யாது'' என்று கூறினார்.

இருந்த போதிலும் நளினியை சந்திக்க பின் னணியில் மிக முக்கிய காரணம் இல்லாமல் இல்லை என்ற பரபரப்பு நாடு முழுவதும் நிலவிவரு கிறது.

தொடக்கத்தில் "தங்களுக்கு எதுவும் தெரியாது'' என்று மறுத்த ஜெயில் அதிகாரிகள் பின்னர் "முறைப்படிதான் எல்லாம் நடந்தது'' என்றனர்.

இந்த சந்திப்பின் போது அவர்கள் பேசிக்கொண்டது என்னப

"என் தந்தை நல்லவர் தானே! அவரை ஏன் கொலை செய்ய வேண்டும்'' என்று பிரியங்கா கேட்ட தாகவும், "எனக்கு அது பற்றி எதுவும் தெரியாது'' என நளினி சொன்னதாகவும் கூறப்பட்டது.

நிஜம் அதுவல்ல! ராஜிவ் கொலையில் மேலும் நிறைய மர்மங்கள் இருக்கின்றன. நளினியிடம் அந்த மர்ம முடிச்சுகள் பற்றிய விஷயங்களை பிரியங்கா பெற்றுச்சென்று இருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர் கள்.

ராஜிவ்காந்தி கொலைச் சதி தொடர்பான ஆயுள் தண்டனைக் கைதிகளில் ரவிச்சந்திரன் என்பவரும் ஒருவர். இவரும் வேலூர் சிலையில்தான் இருக்கிறார்.

இவரது சார்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ராஜிவ்காந்தி கொலைச் சம்பவத்தில் ஹரிபாபு என்ற போட்டோ கிராபர் எடுத்த புகைப்படம்தான் அடிப்படை ஆதாரம்.

இதனடிப்படையில் ராஜிவ்வை கொன்றவர் தணு என்கிற பெண் மனித வெடிகுண்டு ஆவார். ஆனால் அந்த தணு யார்ப அவருக்கு எந்த ஊர்ப அவரது குடும்பத்தினர், உறவினர்கள் யார்ப யார்ப என்று எந்தத் தகவல்களும் தெரியவில்லை.

விடுதலைப்புலிகளின் கொடியேந்தியபடி ஒரு பெண் புகைப்படம் வெளி யிடப்பட்டு, இவர்தான் தணு என்று சொல்லப்பட்டது. ஆனால் அவர் தணு அல்ல. அனுஜா என்பவர் என்று கூறப்படுகிறது.

இது தவிர ராஜிவ்வை கொல்ல பயன்படுத்திய இடுப்பு பெல்ட் வெடிகுண்டு எங்கிருந்து வந்ததுப யார் தயாரித்ததுப யாரால் வரவழைக்கப்பட்டது என்பது இன்னமும் புரியாத புதிராகவே இருக்கிறது.

ராஜீவ்காந்தி கொல்லப் படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு கொழும் பில் உள்ள இலங்கை தூத ரகத்திற்கு ஒரு தொலை பேசி தகவல் வந்தது. அதில் ராஜீவ் கொலை குறித்து முன்னமே தெரி விக்கப்பட்டது. இந்த விஷயம் புலனாய்வு போலீசாரால் உறுதி செய்யப்பட்டாலும்கூட, அதைப் பேசியது யார்ப எங்கிருந்து பேசப்பட்டதுப என்பதற்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.

இது தவிர சி.பி.ஐ.யின் தனிப்பிரிவான "மல்டி டெவலப்பிங்மானிட்டரிங் ஏஜென்சி'' என்ற புலனாய்வு பிரிவு இன்ன மும் ராஜிவ் குறித்த தனது விசாரணையை முடிக்கவில்லை.

இப்படி பல்வேறு விஷயங்கள் குறித்து சந்தேகங்கள் தொடர் கின்றன.

இது பற்றி தணுவுக்கு நெருக்கமாக இருந்த நளினிக்கு தெரிந்திருக்கலாம் என்ற அடிப்படையில் தான் பிரியங்கா சந்தித்ததாக சொல்லப்படுகிறது.

ராஜிவ் கொலை தொடர்பான அனைத்து விஷயங்களிலும் ஆரம்ப காலம் முதலே மிகவும் நுணுக்கமாக கவனித்து வருகிறார் பிரியங்கா.

இது குறித்த விசாரணை யில் நிறைய சந்தேகங்கள் இருப்பதாக அவர் கருதுவதாக கூறப்படுறது.

நளினி-பிரியங்கா சந்திப்பு நீண்ட நேரமாக நடந் திருக்கிறது. அவர்கள் நிறைய பேசி உள்ளனர். தனக்கு சோனியாவால்தான் தண்டனை குறைக்கப் பட்டது என்பதால் நளினியும் ரொம்பவே மனம் விட்டு பேசியுள்ளார்.

இதற்கிடையே பிரியங்கா போல் முன்னாள் ஜனாதிபதி வி.வி.கிரியின் மகள் மோகினி கிரியும் முன்னதாக நளினியை சிறையில் சந்தித்த விஷயம் வெளியே தெரிந்துள்ளது.

சோனியா காந்தியின் குடும்பத்திற்கு நெருக்கமான இவர் அந்த சந்திப்பின் போது ராஜிவ் கொலை பற்றி ஏராளமாக பேசியுள்ளார்.

இவை தவிர தணு யார்? என்பது தனக்கு தெரியும் என்று ரவிச்சந்திரன் புதிய வெடிகுண்டை போட்டிருக்கிறார்.

எனவே நளினி- பிரியங்கா சந்திப்பு விவகாரம் இதோடு நிற்க போவதில்லை. இன்னும் வெடித்துச் சிதறப் போகும் விஷயங்கள் நிறைய இருப்பதாகவே புலப்படுகிறது.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

தடுப்பூசி போட்டதில் பலியான 4 குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்பு

தடுப்பூசி போட்டதில் பலியான 4 குழந்தைகள் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதி உதவி: சட்டசபையில் கருணாநிதி அறிவிப்புதிருவள்ளூர் மாவட் டத்தில் தடுப்பூசி போடப்பட்ட 4 குழந்தைகள் பலியான சம்பவம் குறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினார்கள்.

இதன் மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் அரி (அ.தி.மு.க.), சுதர்சனமம் (காங்கிரஸ்), சிவாஜி (தி.மு.க.), வேல்முருகன் (பா.ம.க.), மகேந்திரன் (மார்க்சிஸ்ட் கம்ï), பத்மாவதி (இந்திய கம்ï.), செல்வம் (விடுதலை சிறுத்தை ) ஆகியோர் பேசினார்கள்.

இந்த சம்பவத்துக்கு காரணம் என்ன என்பது பற்றி முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அதிக அளவில் நிதி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு பதில் அளித்து சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் டாக்டர்கள் குழு ஆய்வு மேற்கொண்டது தட்டம்மை தடுப்பூசி போட்டதால் நந்தினி, பூஜா, மோகனப்பிரியா ஆகிய பெண் குழந்தைகளும், லோகேஷ் என்ற ஆண் குழந்தையும் இறந்து விட்டது.

மருத்துவ குழுவின் ஆய்வின்படி கடுமையான ஒவ்வாமை காரணமாக அந்த குழந்தைகள் இறந் திருக்கலாம் என்று தற் போது கருதப்படுகிறது. இந்த தட்டம்மை தடுப்பு மருந்து ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டு வாங்கப்பட்டு உள்ளது. அது தயாரிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 2008. அது காலாவதி ஆகும் நாள் ஜனவரி 2010.

இந்த தடுப்பு மருந்து மற்றும் அதில் கலப்பதற்கு பயன்படுத்தப்பட்ட திரவம் ஆகியவை இமாசல பிரதேசத்தில் உள்ள ஆய்வு மையத்துக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத் தில் 276 குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இதே தடுப்பு மருந்து வழங்கப்பட்டு அனைத்து குழந்தைகளும் நலமாக உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர் பாக செவிலியர் மற்றும் மருந்தாளுனர் 4 பேர் தற்காலிகமாக வேலை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். மத்திய அரசு ஆய்வுக் குழுவும் வருகிறது. சம்பவம் பற்றி அறிந்ததும் முதல்-அமைச்சர் கருணநிதி கட்டளைப்படி நானும், உறுப்பினர் சிவா ஜியும் அங்கு சென்று குழந் தைகளை இழந்த பெற் றோருக்கு ஆறுதல் கூறி சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக் கொண்டோம். மேலும் சந் தேகத்தின் அடிப்படை யில் மருத்துவ மனையில் சேர்க் கப்பட்ட குழந்தைகள் நல மாக உள்ளனர்.

அ.தி.மு.க. உறுப்பினர் பேசும் போது, இந்த சம்ப வத்தை குற்றச்சாட்டாக கூறினார்.

அ.தி.மு.க. ஆட்சியின் போதும் திருச்சி மாவட் டத்தில் யானைக்கால் மாத் திரை சாப்பிட்ட 4 பேர் இறந்தனர். இது போன்ற சம்பவங்கள் எதிர்பாராமல் நடப்பவை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் தொகை எவ்வளவு என் பதை முதல்-அமைச்சர் அறி விப்பார்.

இவ்வாறு கூறினார்.

பின்னர் முதல்- அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

உச்ச கட்ட சோகம் என்று சொல்லும் அளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விஷ மருந்து அருந்தி வயதில் பெரி யவர்கள் இறப்பது போன்ற சம்பவம் அல்ல இது. ஏதும் அறியாத இளம் குழந்தைகள் 4 பேர் மரணத்தை தழுவி இருக்கிறார்கள்.

4 குழந்தைகளின் பெற்றோரும் அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் ஆறுதல் கொள்ளும் அளவுக்கு அந்த குடும்பத்துக்கு உறு துணையாக அதிக நிதி வழங்க வேண்டும் என்று இந்த பிரச்சினை பற்றி பேசிய உறுப்பினர்கள் குறிப் பிட்டார்கள்.

எனவே இந்த சம்பவத்தில் நாமே கொன்று விட்டதாக கருதி இறந்த ஏழுமலை மகள் நந்தினி, அல்லிமுத்து மகள் பூஜா, மோகன் மகள் மோகனப் பிரியா, குப்பையா மகன் லோகேஷ் ஆகியோர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் வீதம் அரசு சார்பில் ரூ.12 லட்சம் வழங்கப்படும்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.

இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர் தவிர அனைத்து கட்சியினரும் வரவேற்று நன்றி தெரிவித்து பேசினர்.

http://www.maalaimalar.com/

StumbleUpon.com Read more...

ஜிஹாதிகளின் போலி பெரியார் குடுமி அவிழ்ப்பு(ஒஹோ இது வேறயா?)

இஸ்லாமிய நண்பர்களின் புது முகமூடி

நண்பர் உமர் அவர்கள் இஸ்லாமிய நண்பர்களுக்கு இணையத்தில் பதில் எழுதி வருவது அனைவரும் அறிந்ததே.

ஆனால் இதற்கு பதில் எழுத முடியாத இஸ்லாமிய நண்பர்கள் பல குறுக்கு வழிகளில் முற்சித்து தோல்வி அடைந்தே வருகின்றனர்.அதே வரிசையில் முதலில் போலி மெயில் விவகாரத்தில் மாட்டி விழி பிதுங்கியது அனைவரும் அறிந்ததே.

ஆனால் பதில் அளிக்க முடியாவிட்டால் எதிர் தரப்பினரை பயமுறுத்துவது,மிரட்டல் விடுவது.அல்லாவின் பெயரில் சாபமிடுவது என அனைத்து வித்தைகளையும் செய்து விட்ட இஸ்லாமிய நண்பர்கள் தற்பொழுது புது வேஷத்தை போட ஆரம்பித்துள்ளனர்.

அது என்ன வேஷம்?"

தங்களை இணையத்தில் நாஸ்திகர்களாக காட்டி இஸ்லாமை பற்றி கேள்வி எழுப்பும் நம்மை இந்துக்களாக அடையாளம் காட்ட முயற்சித்து வருகிறார்கள்.அதாவது இஸ்லாமை பற்றி எழுதுகிறவர்கள் அனைவரும் பார்ப்பணர்கள் என்னும் எண்ணம் அனைவருக்கும் உண்டாக வேண்டும்.அதே நேரத்தில் அவர்களை திட்டி எழுதுவது.நாம் கேட்கும் எந்த கேள்விக்கும் பதில் அளிப்பது கிடையாது.அல்லது பதில் என்ற போர்வையில் நம்மை படு கேவலமாக திட்டி வஞ்சம் தீர்துக்கொள்ளுவது இதுவே இவர்களின் புதிய வழிமுறையாகும்.

இவர்கள் தங்களை நாஸ்திகர்களாக காட்டி அதே நேரத்தில் நம்மை பார்ப்பணர்களாகவும் காட்ட முயற்சி எடுத்து வருகிறார்கள்.ஆனால் கர்த்தர் பெரியவர்.இவர்கள் எந்த முயற்சி எடுத்தாலும் அது ஜெயம்பெற போவதில்லை.

இவர்களின் புது முகமூடியை அறிய
இரண்டு சுட்டிகளை இங்கு தருகிறேன்.நீங்கள் விருப்பப்பட்டால் அந்த கட்டுரைகளை இங்கு யாராவதும் பதித்துக்கொள்ளவும்.

http://unmaiudaiyaan.blogspot.com/2008/04/blog-post.html

http://unmaiudaiyaan.blogspot.com/2008/04/2.html

http://www.tamilchristians.com/

StumbleUpon.com Read more...

காபிர் : அன்று சொன்னதை இன்று வழிமொழிகிறார்

காபிர் : அன்று சொன்னதை இன்று வழிமொழிகிறார்

முன்பொருமுறை என்னிடம் திண்ணையில் திரு.ஹெச்.ஜி.ரசூல் அவர்கள் விவாதம் புரிந்திருந்தார்கள். அதில் காபிர் என்றால் தவறில்லை 'எங்களுக்கு நீங்கள் காபிர், உங்களுக்கு நாங்கள் காபிர், அதனால் அது ஒரு சாதாரண விஷயம்' என்ற தொணியில் எழுதியிருந்தார்கள். இத்தருணத்தில் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்று அதை சுட்டிக் காட்டுவது நாகரிகமன்று என்று இந்த அறிவிப்பு திண்ணையில் வெளியான போது அமைதி காத்திருந்தேன்.
இப்போது இப்னு பஷீரா/அன்சார் அவர்களிடம் விவாதித்துக் கொண்டிருக்கின்ற நிலையில் இது நினைவுக்கு வந்தது. ரசூல் அவர்களின் நூலில் இருக்கும் வாசகங்கள் இவை. இத்தனையாண்டுகளாக நான் என்ன சொல்லி வந்தேனோ, அதை இப்போது ரசூலே ஒத்துக் கொண்டுள்ளார் - அதாவது, காஃபிர் என்றால் அவரது உயிருக்கு ஈமான் கொண்ட முஸ்லீம்களிடமிருந்து பாதுகாப்பு கிடையாது, அவருக்கு அடிப்படை மரியாதை ஈமானிகளால் தரப்படாது, அவருடைய உடமைகள் கொள்ளையடிக்கப்படும் (அல்லாஹ்வின் அனுமதி இதற்கு உண்டு - ரசூல் சொல்லாமல் விட்டிருக்கும் விஷயம், பெண்களும் குடும்பத் தலைவரின் உடமைகள் என்கிறது இஸ்லாம்). இப்போது தனக்கு என்று வந்தவுடன், இந்த காஃபிர் பத்வா பற்றிய உண்மைகள் வெளிவருகின்றது பாருங்கள்.
இதில் நான் ரசூலைக் குறை சொல்லவோ, அவர் மோசமான நபர் என்று நிரூபிக்கவோ முயலவில்லை. நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் சில இஸ்லாமியர்களுள் அவரும் ஒருவர். ஆனால், என்ன சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்றால், மதம் என்ற மாயக்கண்ணாடி நமது கண்களை எப்படியெல்லாம் கட்டிப் போடுகிறது பாருங்கள். ஜிகாதையும், காபிர் என்ற அடையாளப்படுத்துதலையும் நான் சுட்டிக் காட்டியபோது தனது மதத்தின் கோட்பாடுகள் நியாயம் என்று வாதிட்ட ரசூல், மிகச் சிறந்த சிந்தனையாளர், நல்ல மனிதர், பண்பானவர், ஆழமாக பல விஷயங்களையும் சிந்திப்பவர் - ஆனால், இவருக்கே தனது மதக்கோட்பாடு எவ்வளவு வன்முறை நிறைந்தது என்பது தான் பாதிக்கப் படும்போதுதான் புரிகிறது, இப்போதே கண் திறக்கிறது.
இந்நிலையில், அதிகம் சிந்திக்காமல் 'சாமி சொல்லிடுச்சு, பூதம் சொல்லிடுச்சு, அல்லாஹ் தண்டிப்பார், நம்ம நபி இதைச் சொல்லியிருக்கிறார், அதைச் சொல்லியிருக்கிறார்' என்று ஏடுகளைப் படித்தும், மதத்தலைவர்கள், மார்க்க 'மேதைகள்' சொல்வதையும், என்றோ ஒருநாள் வாழ்ந்து இறந்து போன ஒரு அரபி(நபி) சொன்னதையும் நம்பும் சாமான்ய இளைஞர்கள் அடிப்படைவாதிகளாக, கடவுளின் கட்டளைகளை நிறைவேற்றுகிறோம் என்று நம்பிக்கொண்டு குண்டு வைப்பவர்களாக, கொலை செய்பவர்களாக மாறிப்போவதில் என்ன அதிசயம் இருக்கிறது.
இந்து மதத்தை சீர்திருத்த முயன்றவர்களையெல்லாம் மறுத்துவிட்டீர்கள் என்று ஹமீது ஜாஃபர் ஒருமுறை திண்ணையில் எனக்கு பதிலெழுதியிருந்தார் (அது அபத்தத்தின் உச்சகட்டம் என்பது தனி விஷயம் - அது இஸ்லாம் மற்ற மதத்தவர்களைப் பார்த்து குறை கூறுவது, மற்ற மதத்தவரின் மீது வன்முறையைப் பிரயோகிப்பதை நியாயப்படுத்த பயன்படுத்தப்படும் வாதம்). இந்து மதத்தில் சீர்திருத்தம் கொண்டு வருவதற்கு எத்தனையோ பேர் முயற்சி செய்தார்கள், இன்னும் முயற்சி செய்துகொண்டிருக்கிறார்கள், மதமே வேண்டாம் என்று ஒதுங்கி இருப்பவர்களும் ஏராளமாக இருக்கின்றார்கள் - ஆனால், இஸ்லாமிய சமூகத்தில் எத்தனை நாத்திகர்களைப் பார்க்க முடிகிறது? எத்தனை சீர்திருத்தவாதிகளைப் பார்க்க முடிகிறது? கடவுளே வந்தால் கூட கல்லடிபடுவார் என்று தோன்றுகிறது, ஏனெனில், அது கடவுள் இல்லை - சைத்தான் ஏனெனில் என்றோ கட்டமைக்கப்பட்ட ஒரு அரபி நூலில் கடவுள் என்றால் இதுதான் என்று 1400 வருடங்களுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று சொல்லி.
கடவுள் இவர்களை காப்பாற்றட்டும், இவர்களைக் காப்பாற்றுவதன் மூலம் நம்மையும், இந்த உலகையும் காப்பாற்றட்டும்.
நேச குமார்.
***
காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் - நூல் வெளிவந்துள்ளது
அறிவிப்பு
காபிர்பத்வா,ஊர்விலக்கம்
முஸ்லிம் உரையாடல்
காபிர்பத்வா,ஊர்விலக்கம் முஸ்லிம் உரையாடல் என்றதொரு நூல் தற்போது வெளிவந்துள்ளது.

கவிஞர் ஹெச்.ஜி.ரசூல் அவர்தம் குடும்பத்தின் மீது நிகழ்த்தப்பட்ட இரட்டை வன்முறைக்கு எதிரான 102 பக்கங்களைக் கொண்ட கருத்துப் பதிவு ஆவணம் இது. இதனை தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் முன்னணி வெளியிட்டு உள்ளது.
இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டது.
முதற்பகுதி ஊர்விலக்கம் ஹெச்.ஜி.ரசூல் நேர்முகம் 9 அத்தியாயங்களையும்
தவறாக புரிந்து கொள்ளப்பட்ட எழுத்து இரண்டாம் பகுதி குரானில் குடிக்கு தண்டனை உண்டா உள்ளிட்ட ஏழு அத்தியாயங்களையும் கொண்டுள்ளது.
மசூறா பகுதி மூன்றில் கருத்தாய்வு கூட்ட உரைகள் ,
உயிர்மை,காலச்சுவடு உள்ளிட்ட 13க்கும் மேற்பட்ட தமிழகத்தின் மாற்று இதழ்களின் மதிப்பீடுகள்
,திண்ணை உள்ளிட்ட இணையதள வலைப் பதிவுகள்,
28க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் படைப்பாளிகளின் ஊர்விலக்கம் பற்றிய கருத்துரைகள் தொகுக்கப்பட்டுள்ளன.
Excommunication தொடர்பான தமிழகத்தின் முதல் நூலாக கூட இது இருக்கலாம்.
காபிர் என்றால் அந்த நபருக்கு ஸலாம் சொல்லக் கூடாது,
பள்ளிவாசலில் தொழ அனுமதிக்க கூடாது,
அவரது மனைவி குழந்தைகளுடனான உறவு ரத்து செய்யப்படும்,
இறந்துவிட்டால் மய்யித்தை முஸ்லிம் மையவாடியில் அடக்கம் செய்ய முடியாது,
அவரது சொத்துக்களை அபகரிக்கலாம்,
அவரைக் கொல்லக் கூட செய்யலாம்
என்பதான பிக்ஹ் சட்ட அம்சங்களைக் கொண்ட காபிர்பத்வாவையும்,
ஊர்விலக்கத்தையும் குமரிமாவட்ட உலமா சபையும், தக்கலை அபீமுஅ நிர்வாகமும்
சேர்ந்து ரசூல் மீது நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன?
என்ற முன்னுரையின் கேள்விகளோடு இந்நூல்
மறைக்கப்பட்ட பல உண்மைகளை உரத்துப் பேசுகிறது.
நூலின் பெயர் : காபிர் பத்வா ஊர்விலக்கம்
முஸ்லிம் உரையாடல்
பக்கங்கள் : 102
விலை : ரூ.50/
வெளியீடு : இக்ரஹ்
பதிப்பாளர் ; தமிழ் முஸ்லிம் எழுத்தாளர் முன்னணி
(த.மு.எ.மு.)
: திருவண்ணாமலை.
http://www.thinnai.com/?module=displaystory&story_id=80803273&format=html
http://islaamicinfo.blogspot.com/2008/04/blog-post_23.html

Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP