சமீபத்திய பதிவுகள்

யுத்தக் குற்றம் தொடர்பில் அமரிக்க ராஜாங்கத் திணைக்களம் தயாரித்த 60 பக்க அறிக்கையின் முழு வடிவம் தமிழில் படங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது

>> Friday, October 23, 2009

    

 இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிப் போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும், போர்க் குற்றங்கள் தொடர்பாகவும் விரிவான அறிக்கை ஒன்றை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

60 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக்கை சிறுவர்களும் ஆயுத மோதல்களும், பொதுமக்கள் மற்றும் அவர்களுடைய உடமைகள் பாதிப்பு, சரணடைய முனைந்த அல்லது கைது செய்யப்பட்ட போராளிகளின் படுகொலை, காணாமற் போதல் மற்றும் மனிதாபிமான நிலை ஆகிய ஐந்து பிரதான பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

sat

சிறுவர்களும், ஆயுத மோதல்களும் என்ற பகுதியில் விடுதலைப் புலிகளால் அவர்களுடைய கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசத்தில் பலவந்தமாக சிறுவர்கள் ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தப்பட்ட பல்வேறு சம்பவங்கள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக 12 வயதிற்கும் 16 வயதிற்கும் இடைப்பட்ட சிறுவர்கள் ஆண், பெண் என்ற பேதமின்றி அவர்களுடையதும், பெற்றோர்களுடையதும் விருப்புக்கு மாறாக விடுதலைப்புலிகளால் கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ள பெப்ரவரியிலிருந்து ஏப்ரல் வரையான தகவல்கள் தரவுகளோடு அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

இக்கட்டாய ஆட்சேர்ப்பை எதிர்த்த சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கப்பட்ட கொல்லப்பட்ட சம்பவங்களும் குறித்துக் காட்டப்பட்டுள்ளன. உதாரணமாக பெப்ரவரி 23ஆம் திகதி கட்டாய ஆட்சேர்ப்புக்கு உட்பட மறுத்த சிறுவன் ஒருவனது இரண்டு கைகளும் விடுதலைப் புலிகளால் தண்டனையாக முறிக்கப்பட்ட சம்பவம் குறித்துக் காட்டப்பட்டுள்ளது. மார்ச் 21க்கும் 24க்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் விடுதலைப் புலிகள் வலைஞர்மடம் கத்தோலிக்க தேவாலயத்தைச் சுற்றிவளைத்து அங்கு அகதிகளாகத் தஞ்சமடைந்திருந்தவர்களிடையே இருந்து 400 சிறுவர்களை கட்டாயப்படுத்திப் பிடித்துச் சென்றதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

sat1

இன்னொரு தகவல் மூலம் மார்ச் 23 ஆம் திகதி பிடித்துச் சென்ற சிறுவர்களின் எண்ணிக்கை 250 எனக் குறிப்பிடுகிறது. மார்ச்சில் கிடைத்த இன்னொரு அறிக்கை, விடுதலைப் புலிகளின் கட்டாய ஆட்சேர்ப்புக்கு வயது வேறுபாடோ பால்வேறுபாடோ இருக்கவில்லையென்றும் இதனை எதிர்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் தாக்கப்பட்டும், சிலசமயங்களில் கொல்லப்பட்டுள்ளார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

கட்டாயமாகப் பிடித்துச் சென்ற சிறுவர்களை போரிட முன்னரங்க காவல் அரண்களுக்கு விடுதலைப் புலிகள் அழைத்துச் சென்றுள்ளனர் என்றும் விடுதலைப் புலிகளுக்கும் இச்சிறுவர்களுடைய குடும்பத்தினருக்குமிடையே சில இடங்களில் மோதல்கள் இடம்பெற்றதாகவும் சிறுவர்களை விடுதலைப் புலிகள் அழைத்துச் செல்வதைத் தடுத்த சில பெற்றோர் தாக்குதலுக்கும், துப்பாக்கிச் சூட்டிற்கும் இலக்கானதாகவும் கார்டியன் பத்திரிகையை மேற்கோள் காட்டிக் குறிப்பிடப்பட்டுள்ளது.

sat2

2009 ஜனவரி தொடக்கம் மே வரையான பொதுமக்கள் இழப்புகள் மற்றும் பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் எதுவும் கிடைக்காவிடினும் ஒரு நிறுவனம் மேற்கொண்ட கணக்கீட்டின்படி 2009 ஜனவரி 20 முதல் ஏப்ரல் 20வரையான காலப் பகுதியில் ஆறாயிரத்து 710 பேர் கொல்லப்பட்டதாகவும் பதினையாயிரத்து 102 பேர் படுகாயமடைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையிலேயே கொல்லப்பட்டவர்களதும், படுகாயமடைந்தவர்களதும் எண்ணிக்கை இதனை விட அதிகமாகத்தான் இருக்கும் எனச் சுட்டிக் காட்டியிருக்கும் அவ்வறிக்கை அந்நேரத்தில் பெரும்பாலான மரணங்களும், படுகாயமடைந்தவர்களின் விபரங்களும் பதிவாக்கப்படவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளது.

இக்காலப் பகுதியில் இலங்கை அரசாங்க அதிகாரிகள் பாதுகாப்பு வலயத்தின் மீது தாங்கள் தாக்குதல்களையோ செல் வீச்சுக்களையோ மேற்கொள்ளவில்லையென்றும், வைத்தியசாலைகளைத் தாக்கி பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாக்கவில்லையென்றும் திரும்பத் திரும்பக் கூறினாலும் அங்கிருந்து கிடைத்த தகவல்களின்படி பாதுகாப்பு வலயத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட பெருமளவான செல் தாக்குதல்கள் இலங்கை அரச படைகளினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று குற்றஞ்சாட்டப்படுகின்றது.
இரண்டு சந்தர்ப்பங்களில் 48 மணித்தியாலப் போர் நிறுத்தத்தை இலங்கை அரசாங்கம் அறிவித்த போதும் இரண்டாவது 48 மணிநேர போர் நிறுத்தகாலம் முடிவடைவதற்கு முன்பாகவே இலங்கை அரசாங்கம் செல் வீச்சுக்களை மேற்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை புலிகள் அங்கிருந்து மக்களை வெளியேற விடாமல் மனிதக் கவசங்களாகத் தடுத்து வைத்திருந்தமையும் அறிக்கையிடப்பட்டுள்ளது.

sat3

புதுக்குடியிருப்பு வைத்திசாலை மீதும், முல்லைத்தீவு வைத்தியசாலை மீதும் ஜனவரி 2 ஆம் திகதி இலங்கை அரச படையால் செல் மற்றும் விமானக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை வெளிநாட்டு அரசாங்கம் ஒன்றினால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவங்களில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டும், படுகாயமடைந்துமுள்ளனர்.

ஜனவரி 8 ஆம் திகதி தர்மபுரம் வைத்தியசாலையின் மீது மேற்கொள்ளப்பட்ட செல் வீச்சில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையிட்டுள்ளது.

sat4

மே 12ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் இருந்த தற்காலிக மருத்துவமனை தாக்குதலுக்கு உள்ளானது. காலை 8 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட இச்செல் வீச்சில் 26 பேர் கொல்லப்பட்டனர். முல்லைத்தீவு பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரும் இச்சம்பவத்தில் கொல்லப்பட்டார். மே 9, 10ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட கடுஞ் செல்வீச்சில் காயமடைந்த ஆயிரக்கணக்கானவர்களும் அவர்களுடைய உறவினர்களும் வைத்தியசாலையில் குவிந்திருந்த நேரத்திலேயே இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் உடனடியாக 29 பேர் கொல்லப்பட்டாலும் மொத்தமாக 49 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிய வருகிறது.

மே 14க்கும் 18 க்குமிடையே நடைபெற்ற இறுதிப் போரில் பெருமளவு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திலிருந்து வெளியேற முற்பட்ட பொதுமக்கள் மீது விடுதலைப் புலிகளும் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இதன்போதும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. இதுதவிர இலங்கை அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஏராளமான படுகொலைச் சம்பவங்கள் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.

sat5

இலங்கை அரசின் நியாயமற்ற படுகொலைகள் குறித்துப் பல்வேறு தரப்புகளும் சுட்டிக் காட்டியுள்ளன. கைது செய்யப்பட்ட தமிழர்களைப் படுகொலை செய்யும் வீடியோக் காட்சியொன்றும் வெளியாகியுள்ளது. மே 14க்கும் 18க்குமிடையில் இவ்வாறான பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. சற்றலைற் தொலைபேசியூடாக சர்வதேச பிரதிநிதிகளுடன் பேசி சரணடைவதற்காக ஏற்பட்ட உடன்பாட்டை அடுத்து சரணடைய முனைந்த பல விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை அரச படைகளினால் கொல்லப்பட்டுள்ளனர். தமிழ் இளைஞர்கள் படுகொலை செய்யப்படுவதாக வெளி யான வீடியோக் காட்சி புனையப்பட்டது என்று இலங்கை அரசாங்கம் மறுத்திருந்தாலும் சுயாதீனமான ஆய்வுகள் இது தொடர்பாக மேற்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மோதல் பிரதேசத்திலிருந்து பெப்ரவரி முதலாந் திகதி தனது குடும்பத்தினருடன் ஒருவர் தப்பி வந்தார். அவருடைய குடும்பத்தினரை இராணுவத்தினர் அழைத்துச் சென்றனர். சில நாட்களின் பின்னர் அவர்களுடைய உடல்களைத் தான் இவரால் காண முடிந்தது. முகாம்களில் சுதந்திரமான கண்காணிப்பாளர்கள் எவரும் இல்லாததினால் இராணுவத்தினர் எதேச்சாதிகாரமாக நடந்து கொள்ள முடிந்துள்ளது.

sat6

மே14க்கும் 18க்குமிடையில் எஞ்சியிருந்த விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் அனைவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த நடேசன், புலித்தேவன் உட்பட பல புலி உறுப்பினர்கள் கூடப் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர். ஏறத்தாழ நடேசனுடன் 300 புலி உறுப்பினர்கள் சரணடைய வந்ததாகக் கூறப்படுகிறது. இச்சரணடைவிற்கான உடன்பாடு வெளிநாட்டமைச்சின் செயலாளர் பாலித ஹோகணவூடாக மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஐ.நா செயலாளர் நாயகத்தின் பிரதிநிதி விஜய் நம்பியாரை சரணடைவிற்குச் சாட்சியாக நடேசன் கோரியிருந்த போதும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவாதம் இருந்ததால் அது தேவையில்லையென்று அவர்களுக்குச் சொல்லப்பட்டிருந்தது.

sat7

ஜுலை 10 ஆம் திகதி அம்பலாங்கொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் பேசிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகளைக் கூடத் தாம் விட்டுவைக்காமல் கொன்றொழித்ததாகக் கூறியிருந்தார்.

இலங்கை அரசாங்கத்தினாலும், துணை இராணுவக் குழுக்களினாலும் தமிழர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இனங்காணப்படாத இடத்திற்குக் கடத்திச் செல்லப்படும் இவர்கள் பின்னர் கொல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெப்ரவரி 8ஆம் திகதி ஓமந்தை காவலரணைத் தாண்டி வந்த 50 குடும்பங்கள் கைது செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்குப் பின்னர் என்ன நடந்ததென்று இதுவரை தெரிய வரவில்லை. 

இறுதிக்கட்டப் போரின்போது ஓமந்தையைக் கடந்து வந்த பலர் காணாமற் போனதாக அறிக்கையிடப்பட்டிருக்கிறது. இது தவிர இடம்பெயர்ந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களிலிருந்தும் இலங்கை அரசாங்கத்தினாலும், துணை இராணுவக் குழுக்களாலும் அழைத்துச் செல்லப்பட்ட பலருக்கு இதுவரை என்ன நடந்ததெனத் தெரிய வரவில்லை.

பாதுகாப்பு வலயத்துள் இடைத்தங்கல் முகாம்களில் இருக்கும் மக்களுக்குப் போதிய உணவுப்; பொருட்கள் மற்றும் மருத்துவப் பொருட்களைத் தொடர்ந்தும் அனுப்பி வைத்துக் கொண்டிருப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருந்த போதிலும், அவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. நாளாந்தம் 80 தொடக்கம் 100 மெற்றிக்தொன் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. மருத்துவப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் தாம் ஒருபோதும் தடை செய்யப் போவதில்லையெனவும் அது தெரிவித்திருந்தது. ஆனால் அவ்வாறு நடைபெற்றிருக்கவில்லை.

உதாரணமாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் 70 ஆயிரம் மக்கள் இருப்பதாக அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. 70 ஆயிரம் மக்களுக்கும் தொழாயிரத்து எண்பது மெற்றிக்தொன் பொருட்கள் தேவைப்பட்டன. ஆனால் அரசாங்கம் 150 மெற்றிக் தொன் பொருட்களையே அனுப்பியிருந்தது. ஆனால் அக்காலப்பகுதியில் உண்மையிலேயே அப்பிரதேசத்தில் இரண்டரை இலட்சம் மக்கள் இருந்துள்ளனர். அவர்களுக்கு மூவாயிரத்து 500 மெற்றிக்தொன் உணவுப ;பnhருட்கள் தேவைப்பட்டன. ஆக 3350 மெற்றிக் தொன் உணவுப் பொருட்கள் பற்றாக்குறையாக இருந்தன.

இதேபோல் மே மாதத்தில் 20 ஆயிரம் மக்களே அங்கிருப்பதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. அரசாங்கத்தின் கணக்குப்படி அங்கிருந்த மக்களுக்கு 200 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் தேவையாக இருந்தது. ஆனால், அரசாங்கம் 50 மெற்றிக்தொன் உணவுப் பொருட்களையே அனுப்பியிருந்தது. அக்காலப்பகுதியில் 80 ஆயிரம் மக்கள் அங்கிருந்தனர். அவர்களுக்கு 720 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் தேவையாக இருந்தன எனவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- நன்றி தமிழாக்கம்: GTN

source:nerudal
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழன் வாழ்ந்த வன்னிமண் இன்று எவ்வாறு இருக்கிறது?

 

tamilriவன்னி மண் என்றுமே, யாருக்குமே தலை வணங்காது நிமிர்ந்து நின்ற மண். அதனால்தான் அதற்கு 'வணங்கா மண்' என்றும் சிறப்புப் பெயருண்டு. இன்று அந்த மண் தமிழ் மக்களின் இரத்தச் சகதியால் நனையுண்டு சிங்களப் படுகொலையாளர்களின் கால்களின் கீழே தலை குனிந்தபடி காத்துக்கிடக்கின்றது.

2002ம் ஆண்டு சமாதான ஒப்பந்தம் இந்தப் போர்ப் பூமிக்கு ஒரு அமைதியைத் தேடித் தந்தது. அதற்குப் பின்னான காலத்தில் வன்னி கட்டியெழுப்பப்பட்ட வேகத்தைப் பார்த்து உலகமே வாயடைத்து நின்றது. முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்கள் பெரும் அபிவிருத்தியைக் கண்டன. இப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள், புலம்பெயர்ந்து வாழும் உறவினர்களின் நிதியுதவியுடன் புதிய பல வீடுகளை அழகாகக் கட்டினார்கள். வீதிகள் அமைத்தார்கள், ஊர்திகள் வாங்கினார்கள், வாழ்வதற்கான அடிப்படைத் தேவைகளை பூர்திசெய்து வாழ்க்கையைத் தொடங்கியபோதுதான் போர் அரக்கன் வன்னிக்குள் நுழைந்தான். மக்களின் வாழ்விடங்களை வல்வளைத்த சிறீலங்காப் படையினர் மக்களின் சொத்துக்களை சூறையாடினர்.

இன்று அந்த மக்கள் கட்டிய வீடுகள் முகாம்களாகவும், இராணுவத்தினரின் தங்குமிடங்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. இவ்வாறுதான், சிறீலங்கா படைப்பிரிவின் தாக்குதல் படையணிகளின் இரண்டு டிவிசன் படையணிகள் தமிழ் மக்களின் வாழிடங்களில் ஓய்வுக்காக அமர்த்தப்பட்டுள்ளன. இதில் 58 டிவிசன் படையணியின் ஓய்வு தளமாக கிளிநொச்சியின் நகர்ப்பகுதி காணப்படுகிறது. இதில் 58 டிவிசன் படையணிகள் பரந்தன் – புதுக்குடியிருப்பு வீதியில் விசுவமடு வரையிலும், பரந்தன் – பூநகரி வீதியிலும், பரந்தன் – ஆனையிறவு வீதியிலும் மற்றும் கிளிநொச்சி – அக்கராயன் வீதியிலும் மற்றும் இரணைமடு – முறிகண்டி வரையான பகுதிகளில் மற்றும் வட்டக்கச்சி மக்கள் வீடுகளில் நிலைகொண்டுள்ளனர்.

இங்கு பயிற்சி தளங்களை அமைத்துள்ளதுடன், அந்தப் பிரதேசங்களைச் சுற்றி பாரிய மண் அரண்களையும் அமைத்துள்ளனர். கிளிநொச்சி நகரில் தமிழ் மக்களின் வர்த்த நிலையங்களில் படையினரின் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தொலைத்தொடர்பு சேவை நிலையங்கள், மதுபானக் கடைகள் என்பன இங்கு திறக்கப்பட்டுள்ளன. அங்கு பெண் படையினரும் நிலைகொண்டுள்ளனர். இரணைமடுகுளத்தின் கீழ் அடுத்த பிரதேசமாக தென்னைவளத்துடன் காணப்பட்ட பிரதேசம் வட்டக்கச்சி பிரதேசம். இது படை அதிகாரி தரத்திலானவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்குபெரும்பாலான படை அதிகாரிகள் நிலைகொண்டுள்ளார்கள்.

இங்குள்ள மக்களின் வீடுகள் மிகவும் வசதிகளுடன் காணப்படுவதாலும், நல்ல பயன்தரு மரங்கள் நிறைந்திருப்பதாலும் இப்பகுதியை படை அதிகாரிகள் தங்களுக்கென ஒதுக்கி அங்கு நிலைகொண்டுள்ளார்கள். இதனிடையே விமானப்படையினர் கிளிநொச்சியின் நகர்பகுதியில் பாரிய முகாம் ஒன்றினை அமைத்து, உலங்குவானூர்தி தளங்களும் அமைக்கப்பட்டு செயற்படுகின்றனர். இவ்வாறு படையினர் தங்களுக்கான தளங்களையும், நிலைகளையும் கட்டியமைத்துள்ள நிலையில் தமிழ் மக்கள் தங்கள் சொந்த மண்ணில் எவ்வாறு குடியமர அனுமதிக்கப்படப் போகின்றார்கள்?. கிழக்கில், யாழ்குடாவில் மேற்கொள்ளப்பட்டது போன்று உயர்பாதுகாப்பு வலயம் என்ற பெயரில் பெரும் பகுதிகள் படையினரின் நிரந்தரமான வசிப்பிடமாக்கப்படும்.

எஞ்சியிருக்கும் பகுதிகளில் மக்களை குடியமர்த்தினாலும், படையினரின் முகாம்களுக்கு அண்மையாகத்தான் குடியமர்த்துவார்கள். இங்கு மக்களிடையே காணப்படும் படையினர் ஓய்வில் விடப்பட்ட படையணிகள், அதாவது றிசேவ் படையணி, இவர்கள் ஒய்வில் இருக்கும் போது என்ன என்ன செய்வார்கள் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. இவர்களுக்கு மத்தியில் தமிழ்ப் பெண்கள் அங்கு எவ்வாறு நடமாடுவது? அதைவிட இன்னுமோர் விடயம் இங்கு குறிப்பிட்டுக் கூறவேண்டியது. கிளிநொச்சி நகரில் பல மதுபானக்கடைகள் உள்ளமை. 58 டிவிசன் படையணி மன்னாரில் கட்டுக்கரை, பாலைக்குழி பகுதிகளில் இருந்து படை நடவடிக்கையில் ஈடுபட்டது. அன்றைய காலகட்டத்தில் விடுதலைப் புலிகளிடம் பாரிய அடியினை வாங்கி அழிந்துபோகும் நிலையில் இருந்தது.

பின்னர் சீர் செய்யப்பட்ட இந்த 58வது டிவிசன், முழு 'வெறி'யுடன்தான் தாக்குதலில் ஈடுபடும் ஒரு டிவிசன் படை அணி என்பது அன்று விடுதலைப் புலிகளால் மன்னார் களமுனையில் நன்கு உணரப்பட்டிருந்தது. இவர்களுக்கு மத்தியில் தமிழ் மக்கள் வாழ்வதென்பது எதிர்காலத்தில் எவ்வாறான ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குப் புரியும். மேலும் பல கிருசாந்திகள் கிளிநொச்சி மண்ணில் வேர் விடுவார்கள் என்பது உண்மையாகும். 53வது டிவிசன் மாங்குளத்தை தளமாக கொண்டு ஓய்வெடுக்கிறார்கள். சிறீலங்காப் படைப்பிரின் இரண்டு படையணிகள் றிசேர்வ் படையணிகளாக மற்றப்பட்டுள்ளன. அதில் ஒன்று 58 டிவிசன் மற்றது 53 டிவிசன். இதில் மாங்குளத்தில் 53 டிவிசன் காணப்படுகிறது.

53வது டிவிசன் படையணியினை எடுத்துகொண்டால், யாழ், முகமாலை களமுனையில் நின்று விடுதலைப் புலிகளிடம் அடிவாங்கி அடிபட்டு இழுபறிபடப்ட படை அணியாக காணப்பட்டது. தற்போது படையினர் புதிதாக இணைக்கப்பட்டு இப்படையணி மறுசீரமைக்கப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் நிலங்களை வல்வளைக்கும் இறுதிப்போரில் இந்த இரண்டு படையணிகளும் கடுமையான தாக்குதலில் ஈடுபட்டன. இருந்தாலும் இவ்விரு படையணிகளிலும் உள்ள பெரும்பாலான படையினர் இறந்தும், ஊனமாகிய நிலையிலும் தான் இவ்விரு படை அணிகளும் சிறீலங்கா தரைப்படை தளபதியால் றிசோவ் படையணியாக அறிவிக்கப்பட்டு, தங்குதளங்களும் அறிவிக்கப்பட்டன. 53 டிவிசன் முகமாலை, வடமராட்சி கிழக்கு, சுண்டிக்குளம், விசுவமடு, உடையா£த்கட்டு, சாலை, புதுக்குடியிருப்பு, மாத்தளன், பொக்கனை, முள்ளிவாய்கால்வரை சமராடிய டிவிசனாக காணப்படுகிறது.

இவர்கள்தான் மாங்குளத்தில் நிலைகொள்ளப்போகிறார்கள். மாங்குளம் – ஒட்டிசுட்டான் வீதியிலும், மாங்குளம் – மல்லாவி வீதியிலும் மற்றும் மல்லாவி – துணுக்காய் பகுதிகளிலும் மாங்குளம் – கொக்காவில் ஏ9 வீதியிலும் புளியங்குளம் – மாங்குளம் வரையான வீதியிலும் மற்றும் மக்களின் கட்டடங்களிலும் படையினர் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதனிடையே இவர்களுக்கான பயிற்சி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சூட்டுப்பயிற்சி தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏன்? மாங்குளம் சந்தியில் படையினரின் தொலைத்தொடர்பு கடை, குளிர்பான, மதுகடைக் எல்லாம் திறந்து செயற்படுகின்றன. இவ்வாறு இருக்கையில் மாங்குளத்திற்கு அண்மிய இடம் ஒன்றில் குறிப்பிட்ட அளவு மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். அதாவது சொந்த வீடுகள் இவர்களுக்கு இருக்க வெறும் காணிகளில் தறப்பாள்கள், கொட்டகைகளுக்குள் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறான படையினரின் நிலைப்பாடுகளுக்கு மத்தியில் தமிழ் மக்கள் எவ்வாறு குடியிருப்பது? பெண்களுக்கு பாதுகாப்பு ஏது? வீதிகள் எங்கும் 100 மீற்றருக்கு ஒருகாவலரண் காணப்படுகிறது. காவலரண் ஒன்றில் 5 படையினர் வரை நிலைகொண்டுள்ளார்கள். இவர்கள் சும்மாவா இருக்க போகிறார்கள்? என்பதை உணர்ந்து பாருங்கள். அடுத்த கட்டமாக விடுதலைப் புலிகளின் இரணைமடு விமானத்தளம் சிறீலங்காப் படையின் விமானப் படைபிரிவினர் விஸ்தரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள். இதனை வடபகுதியின் மிகை ஒலிவிமானங்கள் இறங்கி ஏறக்கூடிய தளமாக மாதற்றம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. இவ்வாறாயின் இவற்றுக்கொல்லாம் பாதுகாப்பு என்பது வேண்டுமென்பதற்காக தான் மாங்குளம் அபிவிருத்தி மேற்கொள்ளப்படபோகிறது.

படையினரின் பாதுகாப்பு என்பது அங்கு எப்போதும் கேள்விக்குரியதொன்றாகவே விளங்குகிறது.அடுத்து கொக்காவில் பகுதியில் சிறீலங்கா அரசு தொலைக்காட்சி சேவை மற்றும் வானொலி சேவைக்கான கோபுரம் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. யாழ்ப்பாண மக்களும் வன்னியில் குடியமர்த்தப்பட்டால், அவர்களின் தொலைத்தொடர்பு இலகுவிற்காக இவை அமைக்கப்படுவதாக சிறீலங்காப்படை அறிவித்துள்ளது. இவற்றுக்கொல்லாம் பாதுகாப்பு தேவை என்பதற்காகத்தான் சிறீலங்கா அரசு மக்களை குடியமர்த்தலாம். மக்களை குடியமர்த்துவதற்கு முதலில் அவர்களின் அடிப்படை உள்கட்டுமான வசதிகள் தேவை. அவற்றிற்காகவே இவை முதன்மை வகிக்கின்றன. வடமாகாணத்தின் தலைநகரமாக மாங்குளம் மாறுவதல்ல சிறீலங்காப் படையினரின் கவசமாகவே மாங்குளம் மாறப்போகின்றது என்பதுதான் உண்மை.

-சுபன்-

நன்றி:ஈழமுரசு


source:tamilspy

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உடலுறவின்போது கணவன் மனைவியின் பாலை அருந்தலாமா?:video

ஐயம் : மனைவியிடம் பால் அருந்தினால் அவன் மனைவி தாயாக ஆகிவிடுகிறாள் என்றும் திருமண உறவு முடிந்து விடுகிறது என்றுறம் ஒரு மெளலவி கூறுகிறார். மார்க்கம் என்ன சொல்கிறது?
"அம்சா" கபீர் , ஆம்பூர்.தெளிவு : ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அந்தப் பெண் தாயாகி விடுவாள் என்பது பொதுவானது அல்ல. மாறாக அதில் விலக்குகளும் உண்டு. ஒரு பெண்ணிடம் பால் அருந்துபவனின் வயது இரண்டு ஆண்டுகளுக்கு குறைவாக இருந்தால் தான் அந்தப் பெண் அவனுக்குத் தாய் ஆவாள், இரண்டு வயதைத் தாண்டியவன் ஒரு பெண்ணிடம் பால் அருந்தி விட்டால் அவள் தாயாக மாட்டாள் . அதற்கு ஆதாரம்:இரண்டு வயதிற்குட்பட்ட பால்குடியினால் தவிர ஹராம் ஏற்படாது (நபிமொழி)அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி) நூல் : தார குத்னீஇதை வலுப்படுத்தக்கூடிய இன்னொரு நிகழ்ச்சியை ஹதீஸிலிருந்து பார்ப்போம்.



StumbleUpon.com Read more...

THE WORLD THEY LEFT BEHIND:Rev. Dr. Shoury Babu Kona

THE WORLD THEY LEFT BEHIND

"Yet indeed I also count all things loss for the excellence of the knowledge of CHRIST JESUS my Lord... and count them as rubbish, that I may gain CHRIST" (Philip. 4:8)

REV. DR. SHOURY BABU KONA


Dr. Shoury Babu Kona is one of the world's most famous Martial Artist. He holds the prestigious Martial Arts BLACK BELT VI Dan (Red Belt) in Kung Fu, Karate, Aikido, Judo, Ju Juitsu, Baton, Yawara and Thai Chi. He was the Martial Arts-Chief Coach for Commandos at Royal Oman Police Academy, Muscat. In the Middle East, he has trained Commandos in Anti-Hijacking and Anti-Terrorism for 12 years and also worked with Anti-Terrorist Wing of the F. B. I (U.S.A) and the Scotland Yard Police (U. K) for 8 years. In addition to that, he had trained Members of 28 countries in Martial arts. He has won several awards in National and International Competitions. His training programmes were highly appreciated by the Presidents, Prime Ministers, Sheikhs, Sultans and Generals of Armed Forces around the world. His programmes were telecasted several times over 20 countries.




Breaking Fire Tiles With Forehead


Dr. Shoury Babu Kona had initially worked with the Indian Navy in Submarines and Warships for 7 ½ years. He had the rare privilege of serving as Union Leader in "The Indian Navy Civil Employees Union" and also member of JCM in the Ministry of Defence for 4 years (1978 to 1982). During this tenure of leadership, he brought out many reforms and introduced many Welfare Schemes to the employees. He was the youth President and Director on the Board of the YMCA, Vizag, India for 7 years (1974 -1981).

Dr. Shoury Babu Kona hails from a staunch Roman Catholic family background and has visited almost all the Holy Places - Israel, Vatican, Lourdhu, Fathima and other important Shrines of the Catholic World. He was a Secretary for the 16 million strong "All India Catholic Union" and also served as a President for "Andhra Catholic Association" and brought out many reforms in the Catholic Church.



source:wordoflifeindia

StumbleUpon.com Read more...

அதிர்வு இணையம் மீது கஸ்பர் அடிகளார் கடும் கோபம்


 

நக்கீரன் இதழிலும், இணையம் ஊடாகவும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர் அவர்கள் அதிர்வு குறித்து பல விமர்சனங்களை முன்வைத்துள்ளார். பலர் இவர் எழுதுவதைப் இப்போது படிப்பது இல்லை என்றாலும், பொறுப்புள்ள இணையம் என்றவகையில் அதைப் படித்த சிலருக்கு நாம் விளக்கம் கூறியாகவேண்டும். அதிர்வு இணையத்தளம் நடத்துபவர் விடுதலைப் புலிகளின் முன் நாள் உறுப்பினர் எனவும், பின்னர் பொட்டு அம்மானால் இயக்கத்தில் இருந்து விலக்கப்பட்டதாகவும் கஸ்பர் புணைந்துள்ளார் ஒரு சிறுகதை. அத்துடன் அதிர்வு இணைய நிர்வாகி இலங்கை புலனாய்வுப் பிரிவினருடன் சேர்ந்து பலகாலமாக இயங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ள கஸ்பர் அடிகளார் , பின்னர் போர் உக்கிரமடைந்தக் காலத்தில் தேசியத்தலைவர் அதிர்வு நிர்வாகியை அழைத்ததாகவும் அவர் நாட்டிற்கு திரும்பிச் செல்ல மறுத்ததாகவும் கூறியுள்ளார்.


இலங்கை புலனாய்வுத் துறையுடன் நீண்டகாலமாக சேர்ந்தியங்கும் ஒருவரை தேசிய தலைவர் ஈழத்திற்கு வருமாறு அழைப்பாரா ? அடிமுட்டாளான கஸ்பர் இப்போது இவ்வுலகில் இல்லை, கனவு லோகத்தில் சஞ்சாரம் செய்கிறார். யாரிடமோ விசாரித்துவிட்டு அதனை அப்படியே சிறு பிள்ளைத் தனமாக எழுதுகிறார். அதற்குப் பிரபல நாளிதழ் ஒன்று களம் அமைத்துக் கொடுக்கிறது. ஈழ விடுதலைப் போராட்டம் தற்போது பின்னடைவைச் சந்தித்துள்ள இவ் வேளையில், அரசியல் போராட்டத்தில் எமது சுய நிர்ணய உரிமைகளை வென்றெடுக்க நாம் அரும்பாடுபடும் வேளையில், இந்திய மத்திய அரசின் உதவியுடன் அடிகளார் அதனைத் கவுக்கப் பார்க்கிறார்.


ஈழ விடுதலைப் போராட்டத்தை அதன் உன்னதத்தை விற்கவேண்டாம் என அதிர்வு வேண்டிக்கொண்டது, தமிழ் மக்களின் வாழ்க்கையோடு விளையாடவேண்டாம் என அது அவர்களைக் கேட்டுக்கொண்டது. அதில் பிழை எதுவும் இருப்பதாக நாம் கருதவில்லை. முன்னுக்குப் பின் பல முரணான தகவல்களுடன் மெகா சீரியல் எழுதுவதும், அதனை பரபரப்பாக்கி விற்றுச் சம்பாதிப்பதையும் நாம் நாளாந்தம் பார்க்கிறோம். அதிர்வு இணையத்தில் எழுதப்பட்ட கருத்துக்களால் ஆடிப்போயுள்ள கஸ்பர் அவர்கள் தற்போது புலம் பெயர் தமிழர்களின் இணையமான அதிர்வை நேரடியாகத் தாக்க முனைவதை நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது.


தடைப்பட்டுள்ள எங்கள் போராட்டங்களை முன்னெடுத்தல், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துதல், எமது சுயநிர்ணய உரிமையை வென்றெடுக்க போராடுதல் என அதிர்வு இணையத்திற்கு பல பொறுப்புகள் இருக்கிறது, இவரைப் போன்ற விமர்சகர்களின் விமர்சனத்திற்கு நாம் முகம் கொடுத்து எமது காலத்தையும் நேரத்தையும், வீணடிக்க விரும்பவில்லை. யார் நல்லவர் ? யார் கெட்டவர் ? என்பதை இனி வரும் காலம் சொல்லும், கஸ்பரின் முகத்திரை கிழிக்கும் ... தெரு நாய் குரைக்கிறது என்று நாமும் குரைக்க முடியுமா ?


-- source:athirvu
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

வாடிக்கையாளர்களை இழக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர்


 
 

பிரவுசர் சந்தையில் தொடர்ந்து தன் வாடிக்கையாளர்களை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இழந்து வருகிறது. இந்த பிரவுசரின் நான்கு போட்டியாளர்களின் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.



உலக அளவில் ஏறத்தாழ 40 ஆயிரம் இணைய தளங்களையும், பல்வேறு வகையான புள்ளிவிபரங்களையும், தொழில் நுட்பத்தி னையும் பயன்படுத்தி ஆய்வு மேற்கொண்டு வரும் நெட் அப்ளிகேஷன்ஸ் என்னும் அமைப்பு, அண்மையில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் பிரவுசர் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் வசம் இருந்த அதன் பயனாளர் எண்ணிக்கை 67 சதவிகிதத்திலிருந்து 65.7 % ஆகக் குறைந்துள்ளது. 
ஐந்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட பயர்பாக்ஸ் பிரவுசர் தொடர்ந்து முன்னேறி வருகிறது. சென்ற இரண்டு மாதங்களில் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 23 சதவிகிதத்திலிருந்து 23.8% ஆக உயர்ந்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் சபாரி பிரவுசரின் ரசிகர்கள் எண்ணிக்கை4.1% லிருந்து 4.2% ஆக உயர்ந்துள்ளது. கூகுள் குரோம் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 2.8%லிருந்து 3.2% ஆகக் கூடியுள்ளது. ஆப்பராவின் பயனாளர்கள் 2%லிருந்து 2.2% ஆக உயர்ந்துள்ளனர்.  இந்த சதவிகிதம் என்ன மிகக் குறைவு என்று எண்ணாதீர்கள். பல கோடிக்கணக்கான இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக் கையோடு இதனைப் பொருத்திப் பார்த்தால் பல லட்சக் கணக்கில் இவர்களின் எண்ணிக்கைய நீங்கள் உணரலாம்.



அண்மையில் தான் மொஸில்லாவின் பயர்பாக்ஸ் புதிய ஒரு மைல்கல்லைத் தன் பயணத்தில் கடந்தது. இதன் பதிப்பு 3.5 வெளியிடப்பட்டு, பழைய பிரவுசர் இடத்தில் அமர்ந்தது. இதன் வசதிகள் பலரின் கவனத்தை இழுத்தது. அதிவேக ஜாவா ஸ்கிரிப்ட் மற்றும் பில்ட் இன் வீடியோ எனப் பல புதிய தொழில் நுட்ப வசதிகளுடன், வாடிக்கையாளர்களைக் கட்டிப் போட்டிருப்பதுடன், புதியவர்களையும் ஈர்க்கிறது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்த வரை, அதன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் வாடிக்கையாளர்களை இழந்தாலும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 8, இப்போது அதிகமான பயனாளர்களைக் கொண்டதாக மாறிவருகிறது. இது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியாக மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அமையலாம்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இலங்கையில் போர் குற்றம் ; அமெரிக்கா கண்டிப்பு ! விளக்கம் தர இலங்கைக்கு உத்தரவு


 
 

Top world news stories and headlines detail 

இலங்கையில், விடுதலைப் புலிகளுக்கும், அரசுக்கும் இடையேயான போரின்போது, அத்துமீறல்கள் போர்குற்றம் நடந்ததா என்பது குறித்து விசாரணை நடத்துமாறு, இலங்கை அரசுக்கு, அமெரிக்கா அறிக்கை அனுப்பியுள்ளது.அமெரிக்க பார்லி., உறுப்பினர்கள், இது குறித்து பிரச்னை கிளப்பியதாகவும், அதன் அடிப்படையில் இந்த அறிக்கை அனுப்பியுள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.



அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள அறிக்கையில் கேட்கப்பட்டுள்ள விவரங்கள்:



இந்த ஆண்டு துவக்கத்தில், இலங்கையில் நடந்த போரில், அப்பாவி மக்கள் வசித்த பகுதிகளில், இலங்கை ராணுவம் குண்டு வீசியதும், விடுதலைப் புலிகள் தரப்பில் குழந்தைகளை போரில் ஈடுபட வைத்ததும் கவலையளிக்கக் கூடிய விஷயங்கள்.
இது தொடர்பாக எங்களிடம் கொடுக்கப்பட்ட தனி நபர் புகார்கள் உண்மை தானா என சரிபார்க்க நாங்கள் விரும்பவில்லை என்றாலும், அவற்றுக்கு சரியான விளக்கம் தேவை என கருதுகிறோம்.



இலங்கையின் வடக்குப் பகுதியில் வாழ்ந்த மக்களை மீண்டும் அங்கே குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டிருப்பதாக இலங்கை அரசு கூறினாலும், அதை விட முக்கியமாக, குடியமர்த்தப்படுவோர் குறித்து தகுந்த ஆதாரங்கள் தேவை என்பதை திடமாக நம்புகிறோம்.



புலிகள் சரண் அடைய முன்வந்தபோது கொலை : இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, போர் நடந்த விதம் எங்களுக்கு கவலை அளிப்பதாக உள்ளது. புலிகள் சரண் அடைய வருவதாக ஒப்பந்தம் ஏற்பட்ட நேரத்தில் வரவழைக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "கடந்த 1983 முதல் 2009 வரையில், பல்வேறு கால கட்டங்களில், இலங்கையில் நடந்த சண்டையில், இது வரை, 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான அப்பாவி மக்கள் உயிரிழந்துள்ளனர்' என்ற, ஐ.நா., தகவலும், அறிக்கையில் இடம் பெற்றுள்ளது.



ராஜபக்சே மறுப்பு: அமெரிக்கா அனுப்பியுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள விஷயங்கள், ஆதாரம் அற்றவை என்றும், முரண்பாடானவை என்றும், இலங்கை அதிபர் ராஜபக்சே கருத்து தெரிவித்துள்ளார்.



அமெரிக்க தூதரகம் விளக்கம்: ஆனால், அமெரிக்க அறிக்கை, ஆதாரத்துடன் தயாரிக்கப்பட்டிருப்பதாக, இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது. "போர் நடந்தபோது, அதை கண்ணெதிரே பார்த்த மக்கள் தெரிவித்த தகவல்களும், போர் நடக்காத பகுதியில் வாழும் மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தான் அந்த அறிக்கை அமைந்துள்ளது' என, கூறியுள்ளது.



கடந்த 3 நாட்களுக்கு முன்னதாக இலங்கையில் போர் தொடர்பாக ஐ.நா., குற்றம் சாட்டியது. இந்நிலையில் அமெரிக்காவும் அறிக்கை கேட்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

--
source:dinamalar

www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கூகிள் பிளக்கர் வைத்திருப்பவரா நீங்கள்?உடனடியாக சோதனை செய்யுங்கள்

கூகிள் பிளக்கர் வைத்திருப்பவரா நீங்கள்?உடனடியாக சோதனை செய்யுங்கள் உங்கள் பிளக்கர் உபயோகத்தில் உள்ளதா என்று.பல பிளாக்கர்கள் சில மணி நேரங்களுக்கு முன் முடங்கிப்போயுள்ளது.

இலவசமாக கூகிள் வழங்கி வரும் சேவைகளில் வலைமலர் என்னப்படும் பிளக்கர் முக்கியமானதாகும்.ஆனால் சில மணி நேரத்துக்கு முன் பல பிள்ளக்கர்கள் முடங்கிப்போயுள்ளது.உங்களின் பிள்ளக்கரை சோதித்துக்கொள்ளுங்கள்

--

latest news:பிளாக்ஸ் சரிசெய்யப்பட்டுவிட்டது


www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP