சமீபத்திய பதிவுகள்

ஈழத்தமிழர்களுக்கு இஸ்ரேல் கற்றுத்தரும் பாடம்

>> Monday, February 23, 2009

 

israel_flagஅரபு நாடுகளுக்கும் யூத இன மக்களுக்கும் இடையில் நடைபெற்ற பல நூறாண்டு காலப் போர் முடிவடைந்து,இஸ்ரேல் என்பது தனிநாடாக அங்கீகரிக்கப்படலாமா, இல்லையா என்பது தொடர்பான தீர்மானம் ஐக்கிய நாடுகள் சபைக்கு கொண்டு வரப்பட்டு வாக்கெடுப்பு தொடர்பான விவாதத்துக்கு விடப்படுகிறது.

இஸ்ரேல் அமைதி ஒப்பந்தத்துக்கு அமைவாக மீண்டும் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபடவேண்டும் என்பது இருதரப்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஆனால், ஐ.நா.வின் ஆதரவு அரபு நாடுகளின் பக்கமே காணப்பட்டது. ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் பெரும்பான்மை நாடுகளுக்கு தனது எண்ணெய் வளத்தைக்காட்டி அவற்றை தனது பக்கம் அரபு நாடுகள் சேர்த்துக்கொண்டன. இதனைப் புரிந்துகொண்ட இஸ்ரேல் தலைவர் டேவிட் பென் கூரியன், இந்த தீர்மானம் மீதான விவாதத்தை எப்படியாவது இழுத்தடிப்பது என்று தீர்மானித்தார்.

விவாதம் நடைபெற்றுக்கொண்டிருந்ததற்கு அடுத்த நாள், வீரச்சாவடைந்த அமெரிக்க இராணுவத்தினரை நினைவு கூரும் நாள்.

அன்றைய நாள் நிச்சயம் ஐ.நா. சபை கூடாது என்பது பென் கூரியனுக்கு தெரிந்திருந்தது. அவரது திட்டத்தின் பிரகாரம் காரியங்கள் நடந்தன. வாக்கெடுப்பு நடைபெறவில்லை. இரண்டு நாட்களுக்குப் பிற்போடப்பட்டது. இந்த இடைவெளிக்குள் வேகமாக செயற்பட்டார் பென் கூரியன். உலகெங்கும் பரந்து வாழ்ந்திருந்த யூத இன மக்களுக்கு ஒரு அறைகூவலை விடுத்தார்.ben_gou_speech

கிடைப்பதற்கான கடைசிச் சந்தர்ப்பம் எமது கைகளுக்கு வந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள எமது தேசத்தின் தலைவிதியை முடிவு செய்யும் தீர்மானத்தை எமக்குச் சார்பாக நிறைவேற்ற உங்கள், உங்கள் நாடுகளுக்கு அழுத்தங்களை கொடுங்கள்" - என்று அவர் கூறினார்.

உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் சிலிர்த்தெழுந்தார்கள். தத்தமது நாடுகளிலுள்ள நாடாளுமன்றை நோக்கி புறப்பட்டார்கள். தனியாக அல்ல. அந்த நாட்டு மக்களையும் அணிதிரட்டிக்கொண்டு சென்றார்கள். டென்மார்க் என்றால் அங்குள்ள யூதன் பத்து டெனிஷ் குடிமக்களை அழைத்துக்கொண்டு சென்றான். இவ்வாறு உலகெங்கும் வாழ்ந்த யூதர்கள் ஆயிரக்கணக்கில் சென்று அந்தந்த நாட்டு நாடாளுமன்றங்களை முற்றுகையிட்டனர்.

'வளங்களை சுரண்டும் எண்ணத்துடன் செயற்பட்டு எமது தேசத்தின் தலைவிதியை மாற்றிவிடாதீர்" - என்று உலகெங்குமுள்ள யூதர்கள் தமது தேசபக்தியை பறைசாற்றினார்கள்.

அந்த ஒரே நாளில் நிலைமை தலைகீழானது. இஸ்ரேல் தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்புக்கு வந்தபோது, நிச்சயம் தமக்குத்தான் வாக்களிப்பார்கள் என்று அரபு நாடுகள் எண்ணியிருந்த பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தன.முடிவு: இஸ்ரேல் தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக விடுதலை வேண்டிப்போரிட்ட யூத இனம் தமக்கான நிலத்தை பெற்றுக்கொண்டது. உலகெங்கும் வாழ்ந்த யூத இன மக்களை ஒரு குடையின் கீழ் அணிதிரட்டிய பென்கூரியனின் முயற்சி மகாவெற்றி கண்டது. வல்லரசுகளின் தன் நேச திட்டங்கள் உடைத்தெறியப்பட்டன. அரபு நாடுகளின் சதி தவிடுபொடியானது.

அதாவது, புலம்பெயர்ந்து வாழ்ந்த யூத இன மக்களின் புரட்சி இஸ்ரேலின் உருவாக்கத்துக்கு பெரும் அடித்தளமானது.

இம் மாதிரியான ஒரு அடித்தளத்தை புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் எமது ஈழ விடுதலைப் போராட்டத்துக்கு வழங்கி வருகின்றோமா?

இதுதான் எம்முன் வியாபித்து நிற்கும் கேள்வி.

02.

ஒற்றுமையின் பலம் ஒரு விடுதலைப் போராட்டத்துக்கு எத்துணை முக்கியமானது என்பது வரலாறு எமக்களித்துள்ள மிகப்பெரிய பாடம். இதனை இன்று தாயகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் செவ்வனே செய்து வருவதால்தான் மற்றைய போராட்டங்களைப்போல தமிழ் மக்களின் போராட்டம் இலகுவில் நசுக்கி அழித்துவிட முடியாது பெரும் சக்தியாக நிலைத்து நிற்கின்றது.

சுதந்திர தாகத்தையும் விடுதலை வேட்கையையும் வெறுமனே நினைப்பில் கிடத்தி வைத்திருக்காது அவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டியதே புலம்பெயர்ந்து வாழும் எம்முன் பரந்திருக்கும் பாரிய வரலாற்றுக்கடமை.

இன்று சிங்கள மக்கள் தமக்கு ஆதரவாக மட்டுமன்றி தமிழ்மக்களுக்கு எதிராகவும் எவ்வளவு வேகமாக பிரச்சார வேலைகளை முன்னெடுத்து வருகிறார்கள் என்பது ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று.

மகாவம்சத்தை காண்பித்து அதுவே இலங்கையின் வரலாறு என்றும் தமிழ்மக்கள் இந்த நாட்டுக்கு உரித்துடையவர்க்ள அல்லர் என்றும் விடுதலைப் புலிகள் படுபயங்கரமான ஒரு தீவிரவாத அமைப்பு என்றும் பிரசாரப்படுத்தும் பல நூற்றுக்கணக்கான சிங்கள மற்றும் ஆங்கில இணையத்தளங்கள் இன்று பல மட்டங்களிலும் ஆரம்பிக்கப்பட்டு முழுவீச்சுடன் நடத்தப்பட்டு வருகின்றன.

இதில் நோக்கப்பட வேண்டிய விடயம் என்னவெனில், சிங்கள மக்கள் தமது இந்த நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே தமது அடுத்த சந்ததியினரையும் வளர்ப்பதில் பெரும் ஆர்வம் காண்பிக்கின்றனர்.

இது எமக்கு ஒரு பெரிய படிப்பினை. பொய்யை பிரசாரப்படுத்துவதில் ஒரு இனம் காண்பிக்கும் வேகத்தை எமது இனம் உண்மையை பிரசாரப்படுத்துவதில் இன்னமும் காண்பிக்கவில்லை என்பது எமது பிரச்சார உத்தியில் காணப்படும் பின்னடைவே.

இன்று உலகெங்கும் எடுத்துப் பார்த்தால் சிறிலங்காவின் தூதரகங்கள் சுமார் 32 நாடுகளுக்கு குறைவாகவே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலகங்கள் 60-க்கும் அதிகமான நாடுகளில் உள்ளதாக பிறிதொரு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தம்மாலான களத்தை அமைத்துக் கொடுத்து விட்டு, நடவடிக்கைகளை எதிர்பார்த்து களத்தில் உள்ள தமிழ்மக்கள் காத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பு இங்கு நிறைவேற்றப்படுகிறதா? எம்முள் எத்தனை பேர் எமது நாடுகளில் உள்ள ஒருங்கிணைப்புச் செயலகங்களுடன் தொடர்புகளில் உள்ளோம்?

எமது போராட்டம் பற்றிய கருத்து நிலையை முற்கொண்டு செல்வதில் எம்முன்னே கிடக்கும் தடைகளை உடைத்தெறிந்து எமக்கான சரியான பாதையை அமைத்துக் கொள்ளவேண்டும். போராட்டத்துக்கு மட்டுமன்றி போராட்டம் தொடர்பான பிரசாரத்துக்கும் இந்த வழி முக்கியமாகவுள்ளது.

எமது கருத்துக்களை முன்னெடுத்துச்செல்வதில் முதலில் எமக்குள் ஒற்றுமை வேண்டும். தனி மனித துதி பாடல், நீ முந்தி நான் முந்தி என்று தேவையில்லாத போட்டிகளின்பால் ஏற்படும் பொறாமை போன்ற விடயங்கள் நாம் ஆரம்பித்த முயற்சியை வேறு வழியில் திசை திருப்பிவிடுகின்றன. எமக்குள் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு வேறொரு பிரச்சினைக்கு தீர்வுகாண்பது என்பது கனவிலும் நடைபெறாத ஒன்று.

தேசியத்தை முன்னெடுக்கும் முயற்சியுடன் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் ஆரம்பித்த எத்தனை தமிழ் வானொலிகள், பத்திரிகைகள் இன்று ஒற்றுமையுடன் செயற்படுகின்றன, எத்தனை ஒருவருக்கொருவர் சேற்றை வாரியெறியும் வேலையில் மட்டும் ஈடுபட்டுக்கொண்டுள்ளன என்பதை பார்த்தால் எமது மண்ணிற்கு விடுதலை கிடைத்தாலும் இவர்களுக்கு விடுதலை கிடைக்காது என்ற கவலையையே ஏற்படுத்துகின்றது.

தாயக மீட்புக்கான ஒரு புனிதப் பயணமாக புலம்பெயர்ந்து வாழும் நாம் எமது பிரசாரத்தை முன்னெடுக்கின்றோம் என்ற மனப்பாங்கு ஒவ்வொரு தமிழனிடமும் வரவேண்டும். மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட்டின் ஆட்ட நிலவரம் என்ன? யார் எத்தனை ஓட்டம் எடுத்தார்? என்று வெளியில் நின்று கேட்பது போல, என்ன சண்டை வருமோ? கிழக்கு மீள கிடைக்குமோ? யாழ். பிடிபடுமோ? என கேள்விகளை தொடுக்காமல், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் சார்பான விடை கிடைக்கக்கூடிய வகையில் நீங்களும் போராட்டத்திற்கான பங்களிப்பை வழங்குவதில் முனைப்படைய வேண்டும்.

இதில் எமக்கு போட்;டி, பொய்யுரைத்து பிரசாரம் செய்யும் சிங்கள மக்களுடனேயே தவிர எமக்குள் அல்ல. இதனை உணர்ந்து தமிழ்த் தேசியம் தொடர்பான புரிதல் நிலையை எமக்குள் வளர்த்துக்கொள்ள வேண்டும்.

எமது உரிமைகளை பெறுவதைவிட தற்போது எமக்குள்ள தனிப்பட்ட கடமைகளே பெரியவை என்ற நிலைப்பாட்டிலிருந்து கொஞ்சமாவது கீழ் இறங்க வேண்டும். தமிழ்த்தேசியம் தொடர்பிலான எமது நிலைப்பாட்டில் எந்த புறச்சக்தியுடனும் சமரசத்துக்கு இடமில்லை என்ற திடம் எமக்குள் பிறக்கவேண்டும்.

எமது அடுத்த சந்ததியை தேசியத்தின்பால் செயலூக்கமுள்ள - ஆரோக்கியமான - சந்ததியாக வளர்ப்பதில் எவரும் பின்னிற்க கூடாது. எமது இனத்துக்கான அடையாளத்தை துணிந்து சொல்வதில் உள்ள அச்சம் துடைத்தெறிப்பட வேண்டும். தான் சார்ந்த இனத்துக்கும் அந்த இனத்துக்கான போராட்டத்துக்கும் ஆதரவளிப்பது எந்த நாட்டிலும் குற்றமாகாது.

வேகமாக மாறி வரும் உலக அரசியல் பாதையில் எமது போராட்;டம் எப்போதும் எந்தச் சவாலையும் சந்திக்கலாம். அவற்றை எதிர்கொள்வதற்கு புலம்பெயரந்துள்ள ஒவ்வொரு தமிழனும் தயாராக இருக்கவெண்டும். எம் ஒவ்வாருவருக்கும் அந்த தார்மீக கடமை உள்ளது என்பதை ஈழம் கிடைக்கும் வரை எவரும் மறக்கலாகாது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் செய்யும் பிரசார நடவடிக்கைகளே அந்தந்த நாட்டின் வெளியுறவுக்கொள்கையின் ஆன்மாவை உலுக்கும் அதிரடி நடவடிக்கையாக இருக்;கும்.

முகமாலையிலும் மன்னாரிலும் காவலரணில் நிற்கும் போராளியே இதையும் வந்து செய்யட்டும். நாம் மறுபடியும் ஏ-9 பாதை திறந்த பிறகு ஊருக்கு போகும்போது 'கொஞ்சத்தை" கொடுப்போம் என்ற எண்ணத்தில் இருப்போமானால், எமது போராட்டத்தில் நாங்கள்தான் சபிக்கப்பட்டவர்களாக இருப்போம். எதிரியை விட எமது போராட்டத்தை கொச்சைப்படுத்தியவர்கள் ஆவோம்.

 -ப.தெய்வீகன்-

 

http://www.nerudal.com/nerudal.890.html

 

StumbleUpon.com Read more...

ஆஸ்கார் விருதும் ,அல்லா இரக்கா இரகுமானும்

ஆஸ்கார் விருது

 

 
ஆஸ்கார் விருது
81வது ஆஸ்கார் விருதுகள்

விருதுக்கான
காரணம்
சிறந்த திரைப்படங்களுக்காக வழங்கப்படுகிறது
வழங்கியவர் Academy of Motion Picture Arts and Sciences
நாடு ஐக்கிய அமெரிக்கா
முதலாவது விருது மே 16, 1929
அதிகாரபூர்வ தளம்
 
 
ஏ. ஆர். ரகுமான்

 

 
அ. இர. இரகுமான்

பின்னணித் தகவல்கள்
இயற் பெயர் ஏ.சே.திலீப்குமார்
பிறப்பு ஜனவரி 6 1967 (வயது 42)
தொடக்கம் சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வகை திரைப்பட, மேடை இசை
தொழில் இசையமைப்பாளர், இசை தயாரிப்பாளர், இசை இயக்குனர், பாடகர், இசைக்கருவி இசைப்பவர், நிரலாக்கர்
இசைக்கருவிகள் Electronic keyboards, vocals, கிட்டார், பியானோ, ஆர்மோனியம், percussion, ஏனைய
இசைத்துறையில் 1992 – இன்று வரை
தளம் அதிகாரபூர்வ இணையத் தளம்

அ. இர. இரகுமான்(அல்லா இரக்கா இரகுமான்), புகழ் பெற்ற இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்ன அழைக்கப்படுகிறார். கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது , தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர். ஹாலிவுட் திரைப்படமான ஸ்லம் டாக் மில்லியனியர் என்ற ஆங்கிலத் திரைப்படத்திற்கு இசையமைத்தமைக்காக இவருக்கு 2008 ஆம் ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருது , பாஃப்டா விருது கிடைத்தன. இவ்இரு விருதுகளைப் பெற்ற முதலாவது இந்தியரும் இவரே.

இவர் இசையமைத்த ஸ்லம் டாக் மில்லியனியர் படத்திற்காக ஆஸ்கார் விருதுகளை வென்றிருக்கிறார் இசைப்புயல் ரஹ்மான்.

81 வது,2009 பிரமாண்டமான ஆஸ்கார் விருது மேடையில் அவரது தாய் மொழியான தமிழில் 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்று இவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திர வார்த்தையை அங்கே உச்சரித்தார்.[1]

 

 
 
 
  • குறிப்பு: "ஆண்டு", பன்மொழி திரைப்படமாயின், எந்த மொழியில் அத்திரைப்படம் முதலில் வெளியானதோ, அந்த ஆண்டை குறிக்கும்.

பின் வரும் பிற மொழி திரைப்படங்களுக்கும் இசையமைத்துள்ளார்:

[தொகு] திரைப்பட அல்லாத இசையமைப்புகள்

  • Return of the Thief of Baghdad (2003)
  • தீன் இசை மாலை (1989) (திலீப் குமார் என்ற பெயரில்)
  • செட் மீ ஃப்ரீ (1991)
  • வந்தே மாதரம் (1997)
  • ஜன கன மன (2000)
  • பாம்பே ட்ரீம்ஸ் (2002) (இசை நாடகம்)
  • இக்னைட்டட் மைன்ட்ஸ் (2003) (இசைத்தொகுப்பு வெளியிடப்படாத நேரடி இசை நிகழ்ச்சி)
  • ராகாஸ் டான்ஸ்(2004) (வனேசா மே நடனத்திலிருந்து)

Tamilan

[தொகு] வெளி இணைப்புகள்

 

StumbleUpon.com Read more...

இந்து பத்திரிக்கையின் தமிழர் விரோத போக்கு

சென்னையில் HINDU அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் !


 
 
       இன்று காலை (23.02.09), திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சு.ப.வீ அவர்களின் தலைமயில், திராவிட இயக்கத் தமிழர் பேரவையினர்  மற்றும் அதன் தோழமைக் கட்சியினர் ஒன்றுக் கூடி, தமிழின விரோத போக்கை கண்டித்து சென்னை அண்ணா சாலையில் உள்ள இந்து நாளேட்டின் அலுவலகம் முன்பு கண்டன போராட்டம் நடத்தினர். இந்து நாளேட்டின் துரோக செயலை கண்டிக்கும் விதமாக பத்திரிக்கையின் தமிழின விரோத போக்கினை பட்டியலிட்டும், அதன் தலைமையைக் கண்டித்தும் கோசங்களை எழுப்பினர்.
இதில். பேராசிரியர் சு.ப.வீ உட்பட  சுமார் 100 க்கும் மேற்பட்டோர்  கைது செயப்பட்டு, பகல் முழுவதும் சிந்தாதிரிப்பேட்டை சமூக நலக்கூடத்தில் அடைத்துவைக்கப் பட்டிருந்தனர்.
 
கைது செய்யப்பட்டவர்களை, த.மு.மு.க கட்சியினரும், விடுதலை சிறுத்தைகளின் தமிழ் தேசிய முன்னணியின் மாநில அமைப்பாளர்.  பத்மநாபன் மற்றும் பெரியார் திராவிட கழக மாநில ஒருங்கிணைப்பாளர் கேசவன் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது ஆதரவினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டு அடைக்கபட்டிருந்தபொழுதும், அடுத்தக் கட்டப் போராட்டத்தினைப் பற்றியும், தமிழின எழுச்சியை மேம்படுத்துவது பற்றியும் அனைவரும் விவாதித்துக் கொண்டு இருந்தனர்.
அந்நேரத்தில் உரை நிகழ்த்திய பேராசிரியர் சு.ப.வீ, கேணல் ரூபன் அவர்களின் கடிதத்தை பற்றியும் அவர்தம் தியாகம் மற்றும் அவரின் வீரத்தை பற்றியும் குறிப்பிட்டு பேசினார். மற்றும் முத்துக்குமார் உட்பட தீக்குளித்தவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து பேசிய அவர் இனியும் இளைஞர்கள் இதுபோல செய்யாமல் இன விரோதிகளையும் துரோகிகளையும் எதிர்க்க ஒன்றிணைத்து செயல்படவேண்டும்  என்றும் பேசினார்.
மாலை அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இவ்வாறு,  திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் இளைஞர் அணிப் பொறுப்பாளர் செந்தில் அவர்கள் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்தார்.

 

 

StumbleUpon.com Read more...

Breaking News:அமெரிக்க வான், கடற் படை உயர் அதிகாரிகள் இலங்கைக்கு விரைவு

வன்னி மக்களை வெளியேற்ற அமெரிக்க வான், கடற் படை உஙயரதிகாரிகள் இலங்கை சென்றனர்
 
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மக்களை தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கொண்டுவந்து பல்வேறு வழிகளூடாக மனித உரிமை மீறல்களை புரிந்த வருகின்றது சிறிலங்கா. இந்நிலையில் அங்கிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குவராத மக்களை எவ்வாறு தனது கட்டு்பபாட்டுப் பகுதிக்கு கொண்டு வருவதென தீவிரமாக முயற்சித்து வருகின்றது. இந்த முயற்சிக்க முதலில் இந்தியா உதவுவதற்கு முன் வந்திருந்தது.

 
ஏற்கனவே இனப்படுகொலைக்கு உடந்தையாக இந்தியா இருப்பதாக பலமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்னொரு பழியும் தம்மீது விழுந்துவிடும் என அஞ்சும் இந்தியா, அமெரிக்கா மற்றும் இணைத் தலைமைகள் நாடுகளின் ஊடாக இந்த நடவடிக்கையை மேற்கொள்ள முனைந்துள்ளது.

 
இந்த முயற்சிக்கு அமெரிக்கா உதவி வழங்கவுள்ளதாக சிறிலங்கா தற்போது கூறுகின்றது. யுத்த பிரதேச பொது மக்களை இடம் நகர்த்துவது குறித்த அமெரிக்காவின் திட்டத்திற்கு இணைத்தலைமை நாடுகள் பூரண ஆதரவை தெரிவித்துள்ளன.

 
அமெரிக்காவின் பசுபிக் படைப் பிரிவைச் சேர்ந்த உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் குழுவொன்று தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்கக் கடற்படை மற்றும் வான் படை வளங்களைப் பயன்படுத்தி சிவிலியன்கள் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

 
வட கிழக்கு கரையோரப் பகுதியில் சிக்கித் தவிக்கும் பொது மக்களைப் பத்திரமாக பாதுகாப்பதே முதன்மை நோக்கு என அமெரிக்க மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு மீட்கப்படும்  பொது மக்கள் சிறிலங்கா இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு  முகாம்களிலும் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்படவுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

 
அமெரிக்கப் படையினரின் இந்த மனிதாபிமான பணி குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ள போதிலும் இந்தப் பணிகள் எப்போது நடைபெறும் எனத் தெரிவிக்க முடியாதென சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

 
பொது மக்களைப் பாதுகாப்பாக இடம் நகர்த்துவதற்கு மேலும் சில நாடுகளிடம் ஒத்துழைப்பு கோரப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 
விடுதலைப் புலிகளக்கு எதிரான இறுதி யுத்தத்தை நடத்தவதற்கு விரும்பும் இந்தியா, அதற்கு அங்குள்ள மக்கள் இருப்பது தடையாக இருப்பதாகவும், அதனால் அவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு முயல்வதாகவும்,  இணைத் தலைமை நாடுகளின் இந்த நடவடிக்கை இந்தியாவின் ஒத்துழைப்புடன் நடைபெறுவதாகவும் இணையத் தளங்கள் செய்தி வெளியிடுகின்றன.
 

StumbleUpon.com Read more...

நிர்வாணப் படங்கள் விவகாரம்: அரசியல் சதியல்ல

மலேசியாவில் நிர்வாணப் படங்கள் தொடர்பில் பதவி விலகிய சட்டமன்ற
உறுப்பினர் எலிசபெத் வோங்கின் விவகாரத்தில் அரசியல் சதி இல்லை என்று
போலிசார் நம்புகின்றனர்.
பொது மக்களிடையே கைத் தொலைபேசி வழியாக தமது நிர்வாணப் படங்கள் பரவியதால்
திருமணமாகாத வோங் பதவி விலகினார்.
நகர போலிஸ் துணை ஆணையர் முகம்மது சாப்து உஸ்மான், "அவருக்கு நன்கு
தெரிந்தவர்களே படத்தை வெளியிட்டுள்ளனர்." என்றார்.
யார் படத்தை எடுத்தது, யார் விநியோகித்தது, அதன் நோக்கம் என்ன என்பது
பற்றியே இப்போது விசாரிக்கப்படுகிறது என்றும் அவர் சொன்னார்.
இந்த விவகாரம் தொடர்பில் திருவாட்டி வோங்கின் முன்னைய காதலர் ஹில்மி
மாலிக்(32) என்பவரை போலிசார் தேடி வருகின்றனர்.

உலகம்

http://tamilmurasu.tamil.sg/node/3119

StumbleUpon.com Read more...

எங்கள் அவலங்களை அம்பலமாக்குங்கள்: குருதி வடியும் தேசத்திலிருந்து உங்கள் உறவு விடுக்கும் இறுதி வேண்டுகோள்

 
 
விடிகிறது ஒவ்வொரு இரவுகளும் எங்கள் குருதி குடிப்பதற்காகவே. ஆனாலும் எஞ்சியவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் இன்னும் வலிகளுடன். எங்கள் முற்றங்களில் வெடித்துச் சிதறியிருப்பது குண்டுகளின் எச்சங்கள் மட்டுமல்ல எங்கள் உறவுகளின் உடல்களும் தான்.
ஓடிஓடி ஓய்ந்து போன கால்களுடன் பிணங்களைப் பார்த்துப் பார்;த்து மரத்துப் போனது மனதும் தான். அழுவதற்காகத் தவிர எங்கள் வாய்கள் திறக்கப்படவேண்டிய அவசியமே கிடையாது.  வாழ்வதற்கு வீடில்லை. உண்ண உணவில்லை. போய்க்கொண்டிருக்கும் உயிர்களை அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர எதுவுமே செய்ய முடியாத சடங்களாகிப் போனோம். துன்பங்களும் துயரங்களும் எங்களுக்கொன்றும் புதிதில்லைத் தானே. விரக்தியின் விளிம்பில் நின்று வேடிக்கை பார்க்கின்றோம் அடுத்து வருவது எமக்கான குண்டாய் இருக்கலாம் என்று. நாங்களும் கூட நாள் நேரம் குறிக்கப்பட்ட தற்கொலைப் படையாளிகள் போலத்தான் சிதறிப் போகின்றோம் முகங்களும் முகவரிகளுமின்றி.
கொடுமையென்னவெனில் முதல் குண்டில் உயிர் போகும் உடலங்கள் சிதைமூட்டவோ குழிதோண்டவோ அவசியமின்றி சிதறிப் போகின்றன. அடுத்த குண்டிலேயே சொந்த மண்ணில் வாழ விரும்பிய பாவத்திற்கு புதைக்கக் கூட தேவையின்றி கருகிப் போகின்றோம்.
ஈழமே எரிகின்ற நடுராத்திரியில் போர் விமானங்கள் வீசிக் கொண்டிருக்கும் பேரொளிமிக்க ராக்கெட்டுக்களின் ஒளியில் எழுதிக் கொண்டிருக்கின்றேன். எனக்காகவல்ல. என் இனத்தின் நிலையை நீங்களும் அறியவேண்டும் என்பதற்காக. உணவின்றி உறவுகளின்றி, உணர்வுகள் செத்தநிலையில் நாங்கள் வாழ வேண்டும் என்ற எண்ணம் எப்படி வரும்? எம் உறவுகள் கொத்துக் கொத்தாக குடும்பம் குடும்பமாக கொலை செய்யப்பட்டுக் கொண்டிருப்பதைக் கையாலாகாத நிலையில் பார்த்துக் கொண்டு சடமாக வாழ்வதைவிட சாவது மேல் தானில்லையா?
நீங்கள் கேட்பது புரிகிறது. நீங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்குச் சென்றிருக்கலாம் தானே? அது தானே? பாதுகாப்பான பகுதி என இலங்கையரசு குறிப்பிடும் அந்த வதை முகாம்களையா சொல்கிறீர்கள்? அந்த மக்கள் வாழ்வது முகாம்களாகவா உங்களுக்குத் தெரிகிறது? சிறைகளுக்குக் கூட சுவர்கள் தானே இருக்கும்;. இங்கு மின்சாரம் பாய்ச்சப்பட்ட முட்கம்பி வேலிகளல்லவா இருக்கிறது? அதுமட்டுமா? குருதியெடுக்கிறார்கள் அனுமதியின்றி, கருக்கலைப்புச் செய்கிறார்கள், அகவையடிப்படையில் பிரிக்கப்பட்டு விசாரணையென்ற பெயரில் அழைத்துச் செல்லப்படும் இளம் பெண்களின் கற்பு பறிக்கப்படுகிறது.
 ஆண்கள் சித்திரவதைப்படுத்தப்பட்டு முகவரியிழந்து போகிறார்கள். உறவுகளுடன் தொடர்புகொள்ள முடிவதில்லை. அவர்கள உலகமே முட்கம்பி வேலிகளுக்குள் தானே. இதை உங்களால் நம்பமுடியுமோ இல்லையோ இது தான் உண்மை. எங்களால் நம்ப முடியும. ஏனெனில் இதை விட குருரங்களைச் சந்தித்தவர்கள்  நாங்கள். அங்கு இவை மட்டும் தான் நடக்கிறதா எனச் சந்தேகம் கொள்ள வைக்கின்றன அண்மைச் செய்திகள்.
இது பற்றிய செய்திகளை வெளியிடும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் தடை செய்யப்படுகின்றார்கள் என்பது நிஐம் தானே. இதற்கு என்ன அர்த்தம் புரியவில்லையா? சிங்கள அரக்கர்களிடம் சிக்கி சின்னாபின்னமாவதை விட சிதறிப்போவது மேல் எம்மண்ணிலேயே.எம் மண்ணில் மண்ணோடு மண்ணாக சிதறிப் போயிருப்பது உறவுகளின் உடல்கள் மட்டும் தான். அவர்களின் உயிர்கள் அலைந்துகொண்டு தானிருக்கும் உறவுகளைத் தேடி...நீங்கள் இதுவரையறிந்;திருக்கும் இறந்தவர்களின் எண்ணிக்கை சிறியதாகத் தானிருக்கும்;. ஏனெனில் சிதறிப்போனவர்களைத் தேடி உறவுகள் இன்னும்; அலைந்துகொண்டு தானிருக்கிறார்கள. எஞ்சியிருக்கும் இரண்டரை இலட்சம் மக்களின் தொகையும் நாளாந்தம் குறைந்துகொண்டுதானிருக்கின்றது.
எம் மண்ணில் நடப்பது பயங்கரவாதத்திற்கெதிரான போரென்று தான் உலகமும் கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றது. யாரை பயங்கரவாதி என்கிறார்கள் இவர்களையா? சாகும் எம் சந்ததியைக் காப்பாற்ற முடியாத உலகம் தரும் உணவுப் பொருட்களும் மருந்தும் விசமாகத் தான் தெரிகின்றது எங்களுக்கு. ஒட்டு மொத்த உலகமும் அளித்த பரிசல்லவா இந்த வாழ்வு. உலகமே உனக்கு ஒன்றைச் சொல்லிவைக்க விரும்புகின்றோம்.
பேச்சுவார்த்தை, விசாரணை, ஆய்வு என நீ போட்டிருக்கும் முகமூடிகளுக்கு அவசியமேயில்லை. நொடிப்பொழுதில்  நூறு உயிர் போகும் எம் மண்ணிற்காக நீங்கள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்கும் போது செழிப்பான எங்கள் பூமி சிவந்திருக்கும் எஞ்சியவர்களின் குருதியால். அதிகார பலமிழந்து வாழும் தாய் தமிழ் உறவுகளே உங்கள் கண்ணீரும் கனத்த குரல்களும் உண்ணாவிரதங்களும் உயிர்த்தியாகங்களும் கண்டு மனங்கலங்கிப் போகின்றோம். ஆனால் பயனில்லை இதுவரை.
அதிகாரத்தின் கதவுகளைத் தட்டவில்லை உங்கள் ஈகங்கள். ஓர் அரசிடம், அதிகாரத்திலிருப்பவரிடம் கேட்க முடியாததை அல்லது கேட்டுக் கேட்டுப் பயனற்றுப் போனதை உறவுகளே உங்களிடம் கேட்கின்றோம். எங்கள் அவலங்களை அம்பலமாக்குங்கள். உயிரிழந்து உருக்குலைந்:து போகும்  உங்கள் உறவுகளின் உண்மைநிலையை உலகத்திற்கு வெளிப்படுத்துங்கள். எங்கள் உணர்வுகளை உங்கள் குரலாக வெளிக்கொண்டு வாருங்கள். எவ்வளவு முடியுமோ அவ்வளவு வேகமாக, விரைவாக எங்களுக்காகச் செயற்படுங்கள். என் உயிர்கூட இதைச் சொல்லுவதற்காகத் தான் எஞ்சியிருந்ததோ என்னவோ? விடைபெறுகின்றேன் இது கூட என் இறுதி வேண்டுகோளாக இருக்கலாம் என் எண்ணத்தில்..

நன்றி
குருதி வடியும் தேசத்திலிருந்து,
உங்கள் உறவு.

 

http://www.tamilwin.com/view.php?2aIWnTe0d1j0g0ecQG7L3b4P9EW4d2g2h3cc2DpY3d436QV3b02ZLu3e

StumbleUpon.com Read more...

போரை நிறுத்த வலியுறுத்தி வேளாங்கண்ணியில் அருட் தந்தைகள் உண்ணாவிரதம்

  
 
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும் என கோரி வேளாங்கண்ணி பேராலயத்தில் அருட் தந்தைகளும், பக்தர்களும் இன்று உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

 
அதிகாலையில் ஞாயிறு திருப்பலிகள் நடந்தது. காலை 10 மணிக்கு பேராலய அதிபர் சேவியர் அடிகளார் தலைமையில் ஆலய வளாகத்தில் உண்ணாவிரதம் துவங்கியது.

 
பங்கு தந்தை ஆரோக்கியதாஸ் அடிகள், பொருளாளர் செல்வராஜ் அடிகள், உதவி பங்கு தந்தை டேவிட் தன்ராஜ், நாகை பங்கு தந்தை சேவியர் அடிகளார், பேரூராட்சி தலைவி ஜூலியட் அற்புதராஜ் மற்றும் பலர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.

 
ஆலயத்துக்கு வந்திருந்த ஏராளாமன பக்தர்களும் இதில் கலந்து கொண்டனர்.
 

StumbleUpon.com Read more...

இரு எதிரிகளையும் வெளியில் பல சதிகாரர்களையும் எதிர்கொள்ளும் தேசியத் தலைமைக்கு பக்கபலமாக இருப்பதே காலத்தின் கட்டளை

 

பலமாக இருந்தால் மதிப்பார்கள் நிலத்தில் கிடந்தால் மிதிப்பார்கள்

 

சிங்களத்தின் எறிகணை வீச்சுக்கள் வான் தாக்குதல்களால் ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டு நான்கு ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளார்களென விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளார்கள். கொலைக்களமான பாதுகாப்பு வலயத்திலேயே அதிகமானோர் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கமும் உறுதிப்படுத்துகிறது.

இந்நிலையில் சர்வதேச ஊடகங்கள் மூலம் வெளிவந்த ஆவணப்படுத்தப்பட்ட செய்திகளால் கலவரமடைந்திருந்த சிங்களம் விடுதலைப் புலிகள் மீது அதற்கான குற்றச்சாட்டினை சுமத்த மிகவும் கீழ்த்தரமான பரப்புரை உத்திகளைக் கையாளத் தொடங்கியுள்ளது.விசுவமடுவிற்கு வடக்கேயுள்ள சுதந்திரபுர சோதனைச் சாவடியில் பொதுமக்களோடு வந்த தற்கொலைக் குண்டுதாரி தாக்குதல் நடாத்தியதாகவும் உடையார்கட்டில் 19 தமிழர்கள் புலிகளால் சுடப்பட்டதாகவும் கதைகள் கூறத்தொடங்கியுள்ளது சிங்களம்.

இனப்படுகொலை நடாத்தப்படும் செய்தி சர்வ உலகத்தின் பார்வைக்குச் சென்றிருப்பதால் தடுமாறிய மகிந்த அரசு அப் படுகொலைகள் விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதல்களால் நிகழ்த்தப்படுவதாகக் காட்டுவதற்கே இவ்வகையான எதிர்த் தந்திரோபாய பரப்புரை உத்திகளை மேற்கொள்கிறது.அதனைத் தமக்குச் சாதகமாக உள்வாங்கும் சில மேற்குலக நாடுகள் சிங்களத்தின் பரப்புரையை முழுமையாக நம்புவதுபோல் பாவனை காட்டி அறிக்கைகளை விடுகிறது.செஞ்சிலுவைச் சங்கமும். ஐ.நா. பிரதிநிதிகளும் சிங்களத்தின் இனப்படுகொலை நிகழ்வுகளை துணிச்சலாக வெளிப்படுத்தும்போது தூங்கிக் கிடந்த மேற்குலகம் மகிந்தரின் கூக்குரல் கேட்டவுடன் விழித்தும் கொள்கிறது.இதுதான் சர்வதேசப் பார்வை குறித்த யதார்த்தம்.

ஈழத் தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் குறியீடாகவும் ஆதர்ச சக்தியாகவும் திகழும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிவு அக்கோட்பாட்டையே சிதைத்து விடுமென்பதால் சிங்களத்தின் இராணுவப் போக்கினை நிராகரிக்க முடியாத நிலையில் உள்ளார்கள் இந்த வல்லரசாளர்கள்.ஐ.நா. சபையில் ஈழப் பிரச்சனை குறித்து விவாதிப்பதற்குரிய காலம் கனியவில்லையென்று அதன் பொதுச் செயலாளர் பான் கீ மூன் அவர்கள் தெரிவிக்கும் கருத்தில் இருந்து இதனைப் புரிந்து கொள்ளலாம்.புலிகளின் அழிவோடு தமிழ் மக்களின் அதியுச்ச அரசியல் அபிலாசையான தமிழீழக் கோரிக்கையும் சிதைந்து விடுமென்பதே இவர்களின் எதிர்பார்ப்பு.அதுவரை பொறுத்திருந்து இனப்படுகொலைகள் பற்றிய விடயங்களை விவாதிக்காமல் காலத்தை கடத்திச் செல்லலாமென எண்ணுகிறார்கள்.

ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தற்காலிக உறுப்புரிமை கொண்ட மெக்சிக்கோ நாடு முன்வைத்த சிறீலங்கா குறித்த விவகாரத்தை ரஷ்யாவும் பிரித்தானியாவும் புறந்தள்ளிய செய்தி இந்த ஜனநாயக பெருமக்களின் உள்நோக்கத்தை தெளிவு படுத்துகிறது. ஆகவே மேற் குறிப்பிடப்பட்ட சர்வதேசத்தின் அணுகு முறைகளைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு விடயம் மட்டும் துலக்கமாகத் தென்படுகிறது.சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தையே வெளியேற்றும் அளவிற்குச் சென்றுள்ள சிங்கள தேசம் ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் உரிமைகளை ஏற்றுக்கொள்ளாது.நீண்ட வரலாற்றுப் பட்டறிவிலிருந்து பெறப்பட்ட இந்த கசப்பான உண்மையை தமிழ் மக்கள் உணர்ந்தாலும் சர்வதேசம் புரியப் போவதில்லை.புரியாததுபோல் நடிக்கும் ஜனநாயக நாடகத்தையே இவர்கள் தொடர்ந்தும் நடாத்தப் போகிறார்கள்.

பயங்கரவாதமென்கிற பேரிரைச்சலுக்குள் தமிழ் மக்களின் விடுதலைக் குரலை நசித்து விடலாமென்பதே மேற்குலகின் நகர்வுகள் சொல்லும் கனமான செய்தி.இந்தியாவில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டால் ஈழத்தின் மாற்றமேற்படுமெனக் கற்பனையில் திளைப்பதும் தவறான கணிப்பீடு.தமிழக புலம்பெயர் மக்களின் எழுச்சி உலகமக்களுக்கு தாயகத்தின் அவலத்தை வெளிப்படுத்துகிறது. சுயநிர்ணய உரிமையின் அவசியத்தை உணர வைக்கிறது.ஆனாலும் வல்லரசுகளின் பிராந்தியப் போட்டிகளையும் சந்தைப் பங்கிடுதலையும் புரிய வைக்கவில்லை.ஹிலாரி கிளிண்டனை கடுமையாக விமர்சிக்கும் விமல் வீரவன்சாவின் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தனது போக்கினை நாளை மாற்றலாம். அனுசரணைக் கோமான் எரிக் சொல்ஹெய்ம் போன்று ஆயுதங்களைக் கீழே போடச்சொல்லி கிளிண்டன் அம்மையார் வேண்டுகோள் விடுத்தால் அமெரிக்காவிற்கு 'ஜெயவேவா' போடும் இந்தச் சிங்களம்.

நாம் அவலத்தை வெளிப்படுத்தும் போது உலக மக்கள் எம்மை திரும்பிப் பார்ப்பார்கள்.நாம் பலமாக இருந்தால் அந்த நாட்டு அரசுகள் சமாதானம் பேச எமை நோக்கி ஓடிவரும். இது தான் 2002 இல் தமிழ் மக்கள் தரிசித்த சாசுவதமான உண்மை. எரிக் சொல்ஹெய்ம் கண்டு பிடித்த உண்மை என்பது சர்வதேச வல்லரசுகளின் குரல் என்பதை நாம் உணரவேண்டும். 2002இலும் சர்வதேசக் குரலையே அவர் எதிரொலித்தார். சிறு பிரதேசத்திற்குள் விடுதலைப் புலிகள் முடக்கப்பட்டுவிட்டார்கள். ஓரிரு நாட்களில் புலிக்கதை முடிந்து விடும் காலில் விழும்வரை தாக்குதல் தொடரும் என்கிற சிங்களத்தின் பல கதைகளை சகல வல்லரசாளர்களும் பூரணமாக நம்பிவிட்டார்கள்.அவ்வாறு இருக்கவேண்டுமென்பதே அவர்களின் விருப்பமுமாகும். இவற்றையெல்லாம் ஒன்று குவித்து புலம்பெயர் தமிழ் மக்கள் மீது ஒருவித உளவியல் பரப்புரை போரையும் மேற்குலகம் நிகழ்த்துகிறது.பிரணாப் முகர்ஜியின் கருணைக் கதாகாலாட்சேபமும் எரிக் சொல்ஹெய்மின் சரணடைவுக் கதைகளும் இப்பரப்புரையின் சில அம்சங்கள்.

இத்தகைய மனதைச் சிதைக்கும் கதைகளைக் கட்டவிழ்த்தும் முன்னெப்பொழுதும் இல்லாதவாறு இலட்சக்கணக்கில் தமிழர்கள் ஒன்று கூடுவதே மிகுந்த ஆச்சரியத்தை இவர்களுக்கு அளிக்கிறது.புலி அழிந்துவிட்டது எனக் கூறும்போதும் மக்கள் அதிக எழுச்சி கொள்வதைப் புரிந்துகொள்ள அடக்கு முறையாளர்களால் இயலாது. ஆகவே இளைய தலைமுறை தலைமை தாங்கும் எழுச்சிப் போராட்டங்கள் தொடரும் அதேவேளை சுயநிர்ணய உரிமைக் கோட்பாட்டின் ஆணிவேராகத் திகழும் தேசியத் தலைமையை பலப்படுத்தும் பணியையும் எம் மக்கள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். தலைமையைத் தக்க வைப்பதில் தான் தாயக மக்களின் விடுதலை என்கிற விடயமும் தங்கியுள்ளது.அதனை அழிக்க முயலும் எதிர்ச் சிந்தனா வாதிகளின் பரப்புரைக்குள் மூழ்கி ஆணிவேரை அழிக்க முயலும் சிங்களத்தின் சகதிச் சதிக்குள் வீழ்ந்து போகாமல் எம்மக்கள் நிமிர்ந்து நிற்க வேண்டும்.

சிங்களத்திற்கும் தமிழ் மக்களுக்குமிடையே மட்டுமல்ல சர்வதேச வல்லரசாளர்களுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்குமிடையேயுள்ள முரண்பாடுகளையும் நாம் புரியத் தவறினால் விடுதலை என்பது எம்மை விட்டு வெகுதூரம் சென்றுவிடும்.களத்தில் இரு எதிரிகளையும் வெளியில் பல சதிகாரர்களையும் எதிர்கொள்ளும் தேசியத் தலைமைக்கு பக்கபலமாக இருப்பதே காலத்தின் கட்டளை.

-இதயச்சந்திரன்

 

http://www.tamilkathir.com/news/1049/58//d,full_view.aspx

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP