சமீபத்திய பதிவுகள்

இஸ்ரேல் விமானம் 7-வது நாளாக குண்டுவீச்சு:தீவிரவாத தலைவர் குடும்பத்துடன் பலி-மரணம் எண்ணிக்கை 402-ஆக உயர்வு

>> Friday, January 2, 2009

 
 
lankasri.comபாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடந்த 6-நாட்களாக விமான தாக்குதல் நடத்தியது.இஸ்ரேல்-பாலஸ்தீனம் எல்லையில் உள்ள காசா பகுதியில் இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சில் காசா நகரம் தீ பிடித்து எரிகிறது.வீடுகள்,கட்டிடங்கள் தரை மட்டமாகி வருகின்றன.

பாலஸ்தீனத்தின் ஹமாஸ் இயக்க முகாம்களை குறி வைத்து இஸ்ரேல் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன.

இந்த தாக்குதலில் ஹமாஸ் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் நிசார் ரயான் கொல்லப்பட்டார்.அவருடன் அவரது குடும்பத்தினர் உறவினர்கள் உள்பட 9-பேர் இதில் பலியானார்கள்.இன்று 7-வது நாளாக இஸ்ரேல் விமானங்கள் தாக்குதலை தொடர்ந்தது.ஒரு வாரமாக நடந்ததாக்கு தலில் காசா பகுதியில் மட்டும் 402-பேர் பலியாகி உள்ளனர்.

ஹமாஸ் இயக்கத்தினரும் ராக்கெட்டுகளை செலுத்தி எதிர் தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.இதை தொடர்ந்து இஸ்ரேல் தரைவழி தாக்கு தலையும் தொடங்கி உள்ளது.இஸ்ரேலின் பீரங்கி படை ஹமாஸ் இயக்க முகாம்களை நோக்கி முன்னேறி செல்கின்றன.

இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை ஹமாஸ் இயக்கத்தின் 4-தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.எகிப்து எல்லையை ஒட்டி ஹமாஸ் இயக்கத்தினர் அமைத்திருந்த பாதாள சுரங்க பாதையையும் இஸ்ரேல் குண்டுவீசி தகர்த்தது.

பாலஸ்தீனம் மீது தாக்குதலை நிறுத்தும்படி பல்வேறு நாடுகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது.ஆனால் தாக்குதலை நிறுத்த முடியாது என்று இஸ்ரேல் திட்டவட்டமாக அறிவித்து விட்டது.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1230913297&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

உயிரிழந்த பெண் புலி உறுப்பினரை இழிவுபடுத்தும் வகையிலான காணொளி குறித்து விசாரணை நடத்தப்படும் - கெஹலிய

 
 
மோதல்களின் போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவரை இழிவுபடுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கப் பாதுகாப்பு பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
மனிதாபிமான மற்ற வகையில் புலிகளின் பெண் உறுப்பினர் ஒருவரை உடல் இழிவுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான ஒரு சில சம்பவங்கள் இடம்பெறும் என்பதை முற்றாக மறுக்க முடியாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுமார் ஐந்து லட்சம் பேரைக் கொண்ட பாதுகாப்புத் தரப்பில் இவ்வாறான ஓர் சம்பவம் இடம்பெறுகின்றமை வியக்கத் தக்கதொன்றல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

சில வேளைகளில் இவ்வாறான போலிப் பிரச்சாரங்களை தமிழீழ விடுதலைப் புலிகளும் மேற்கொண்டிருக்கக் கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழக மக்களின் ஆதரவை திரட்டும் நோக்கில் இவ்வாறான காணொளிகள் வெளியிடப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறெனினும், குறித்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் தீவிர விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த பின்நிற்காதென அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் குறிப்பாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் மற்றும் ஐக்கிய நாடுகள் அமைப்பைவிட இராணுவ நீதிமன்றம் இந்த சம்பவம் குறித்து முனைப்புடன் செயற்படும் என அவர் உறுதியளித்துள்ளார்.

யுத்தத்தில் கொல்லப்பட்ட பெண் போராளி ஒருவரை நிர்வாணப்படுத்தி மிகவும் மோசமான வகையில் நடத்தப்பட்டுள்ளதாக ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த சம்பவத்தை மேற்கொண்டவர்கள் பிரயோகிக்கும் மொழி மற்றும் அவர்களது சீருடைகள் என்பவற்றை கவனிக்கும் போது இதனை யார் செய்திருக்கக் கூடும் என யூகிப்பதில் சிக்கல் இல்லை என கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

 

http://www.tamilwin.com/view.php?2a26QVR4b33F9EOe4d46Wn5cb0bf7GU24d2OYpD3e0dLZLucce02g2hF0cc2tj0Cde

StumbleUpon.com Read more...

அரசியல்தீர்வை அரசு முன்வைக்காவிடில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் புலிகளையே ஆதரிப்பர்: பிளேக்

அரசியல்தீர்வை அரசு முன்வைக்காவிடில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்கள் புலிகளையே ஆதரிப்பர்: பிளேக்
 
விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதர தமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியொன்றிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் மேலும் கூறியுள்ளதாவது;

 
விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு. அவர்களை ஆயுதங்களைக் கீழே போடுவது பேச்சுவார்த்தையால் வேண்டுமெனில் சாத்தியம். அவர்களை முழுமையாக இராணுவ ரீதியாக தோற்கடித்துவிட முடியாது. அரசாங்கம் பேச்சுகளை நடத்துகிறதா இல்லையா என்பது வேறு விடயம்.
ஆனால் அரசாங்கம் அப்படியான திட்டத்தில் இல்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் அல்லாத தமிழ்த் தரப்பிடம் பேச்சுகளை நடத்தி ஒரு தீர்வுக்கு அரசாங்கம் முன்வரலாம். இதில் வெற்றி பெற்றுவிட்டால் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம்.
கொழும்புக்கு நான் வந்தபோது எண்ணற்ற கடத்தல்கள், காணாமல் போதல்கள் நடைபெற்றன. இப்போது குறிப்பிடும்படியான அளவுக்கு அமைதியாக உள்ளது. அத்தகைய நிகழ்வுகள் இப்போது இங்கு இல்லாமல் போனாலும் கிழக்கு மற்றும் வவுனியாவில் நிலைமைகள் மோசமடைந்துள்ளன.
இராணுவ வழித் தீர்வில் வெற்றி பெறுவது என்பது கடினமானது. அரசியல் வழியிலான தீர்வை முன்வைக்காத வரையில் பொதுமக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளைத்தான் ஆதரிப்பார்கள். அரசியல் தீர்வை இப்போது முன்வைத்தால் புலிகளை ஒடுக்க உதவியானதாக இருக்கும்.
அனைத்துக் கட்சிக் குழு என்பது தேக்க நிலையடைந்து விட்டது. ஒரு ஆண்டாகவே 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாகவே கூறி வருகின்றனர். அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில் புலிகளுக்கு உதவி செய்யக்கூடிய புலம்பெயர் தமிழர்களின் கருத்துகளையும் கேட்டறிய வேண்டும்.
சர்வதேச சமூகத்துடனான இலங்கையின் தொடர்பாடல்கள் நல்ல முறையில் உள்ளபோதும், வடக்கு பற்றிய தகவல்கள் போதுமானதாக இல்லை.
தமிழக முதல்வர் கவலை தெரிவித்திருந்தார்.
வடபகுதிக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் ஐ.நா.சபை குழுவை அப்பகுதிக்கு அனுப்பி நிலைமைகளை அறிய அரசாங்கம் உதவ வேண்டும்.

 

 

StumbleUpon.com Read more...

சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்

ஈராக்கில் அமெரிக்கா நடத்திய பாலியல் யுத்தத்துக்கு நிகரானது, சிங்கள பேரினவாதம் நடத்தும் பாலியல் யுத்தம்

 

இதில் இணைத்துள்ள வீடியோ இணைப்பு, மகிந்த சிந்தனையிலான சிங்களப் பேரினவாதத்தின் ஆபாசத்தை எடுத்துக்காட்டுகின்றது. செத்த பிணத்தைக் கூட, ஆணாதிக்க வெறியுடன் ரசித்து அனுபவிக்கின்ற சிங்கள இராணுவத்தின் வக்கிரம். இந்த வீடியோ காட்சி, பொதுவாக ஆணாதிக்க வக்கிரத்துடன் தான் பரவிவருகின்றது.

இருந்தபோதும் யுத்த முனையில் எப்படிப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறுகின்றது என்பதை, இது அம்பலமாக்குகின்றது. சமூக விரோத குற்றவாளிகள் எப்படிப்பட்ட ஒரு யுத்தத்தை நடத்துகின்றனர் என்பதை, மனிதம் எப்படி அவமானப்படுத்தப்படுகின்றது என்பதையும் எடுத்துக் காட்டுகின்றது. புலிப்பாசிசத்துக்கு பதில் சிங்களப் பேரினவாத பாசிசம் மூலம் எப்படிப்பட்ட சமாதானத்தை அவர்கள் தர முனைகின்றனர் என்பதை புரிந்துகொள்ள, இது உதவுகின்றது.

 

பேரினவாதம் வெறும் புலிகளுடன் மட்டும் சண்டை செய்யவில்லை. மாறாக சண்டை செய்யும் பெண்களின் உறுப்புகளைக் கூட கடித்துக் குதறுகின்றது. இராணுவத்துக்கு ஆட்களை திரட்டக் கூட இது போன்ற ஆணாதிக்க வக்கிரங்கள் உதவுகின்றது.

 

சமாதானம், விடுதலை என்பது, மக்கள்விரோத யுத்தத்தின் மூலம் இப்படித்தான் நிர்வாணமாகின்றது.

இதோ காட்சிகள்...

http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4693:2008-12-24-07-58-02&catid=74:2008

 

StumbleUpon.com Read more...

இருளை ஒளியாக்குதல் - Lighting Up The Darkness

 


 

இருளை ஒளியாக்குதல்

Lighting Up The Darkness

 
 
 
 
 
இறை நம்பிக்கையுள்ள மக்கள் தெய்வீக ஒளியை நம்புகிறார்கள். பைபிள் கூறுகிறது: "தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை…" (1 யோவான் 1:5). தேவன் தன் சித்தத்தை தன் தீர்க்கதரிசிகளுக்கு அறிவிப்பதின் மூலமாக இருளில் தன் ஒளியை பிரகாசிக்கச் செய்தார். வேதவசனம் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது, "உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது " (சங்கீதம் 119:105). குர்‍ஆன் கூறுகிறது " அல்லாஹ் வானங்கள் பூமிக்கு ஒளி (ஏற்படுத்துபவன்) ...நிச்சயமாக நாம்தாம் 'தவ்ராத்'தை யும் இறக்கி வைத்தோம்;. அதில் நேர்வழியும் பேரொளியும் இருந்தன"(சூரா 24:35, 5:44).

 
 
கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் இயேசு கிறிஸ்து "இறைவனின் வார்த்தையாக இருக்கிறார்" என்று நம்புகிறார்கள் (அரபியில் கலிமதுல்லா). அவர் தேவனுடைய வார்த்தையாக இருப்பதினால், வெளிச்சத்தை கொடுக்கிறார். நற்செய்தி என்றுச் சொல்லும் இஞ்ஜிலில் நாம் படிக்கிறோம், "அந்த வார்த்தை மாம்சமாகி...அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது;" (யோவான் 1:14, 4, 5). இன்னும் குர்‍ஆனிலும் படிக்கிறோம், அதாவது இயேசு இஞ்ஜிலை பெற்றார், "அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன, அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது" (குர்‍ஆன் 5:46).
 
 
 
வெளிப்படும் ஒளி - Releavling Light

 
 
இயேசு குழந்தையாக இருக்கும் போது, அவரை விருத்தசேதனம் செய்வதற்காக ஆலயத்திற்கு கொண்டுவந்த போது, அவரைப் பற்றி ஒரு ஆச்சரியமான தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டது. "அவன்(சிமியோன்) அவரைத் தன் கைகளில் ஏந்திக்கொண்டு, தேவனை ஸ்தோத்திரித்து: ஆண்டவரே,... புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம்பண்ணின உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான்"(லூக்கா 2:28-32).

 
 
மேசியாவின் மூலமாக வெளியாக்கப்பட்ட இந்த வெளிச்சமானது, "அந்தகாரத்திலும் மரண இருளிலும் உட்கார்ந்திருக்கிறவர்களுக்கு வெளிச்சம் தரவும், ...அவ்விரக்கத்தினாலே உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் நம்மைச் சந்தித்திருக்கிறது.."(லூக்கா 1:78,79) என்று சொல்லப்பட்டது. இதுமட்டுமல்ல‌, இன்னொரு தீர்க்கதரிசனமும் மேசியாவினால் நிறைவேறியது, "..என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்;.."(மல்கியா 4:2).
 
 
 
சுகப்படுத்தும் ஒளி - Healing Light

 
 
"நீதியின் சூரியன் உங்கள் மேல் உதித்து, அதன் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்" என்ற தீர்க்கதரிசனத்தின் பொருளை விளக்குவது போல ஒரு அரேபிய பழமொழி உண்டு. இந்த பழமொழி, சூரியனுக்கும், ஆரோக்கியம் அடைவதற்கும் இடையே உள்ள தொடர்பை விளக்குகிறது. இது மக்களுக்கு அறிவுரை இப்படியாக கூறுகிறது: "நீ மருத்துவரிடம் செல்வது போல, சூரியனிடம் போ - Go to the sun like you go to the doctor". இதனால் தான், தங்கள் உடலின் தோலில் சுகவீனமுள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள், காலையில் உதிக்கும் சூரிய ஒளியில் சிறிது நேரம் காட்டும் படி உற்சாகப்படுத்துகின்றனர். இதுமட்டுமல்ல, சூரிய ஒளியின் மூலமாக நம் உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான "உயிர்ச்சத்து டி"யை நாம் பெறமுடியும் மற்றும் நீண்ட நாட்களாக சோர்ந்துப் போய் இருக்கும் மன அழுத்தமுள்ளவர்களுக்கும் சூரிய ஒளி நனமையை பயக்கும்.

 
 
இயேசு மிகவும் அற்புதமான முறையில் பலரை சுகப்படுத்தினார் என்பதை நாம் அறிவோம். இஞ்ஜிலில் இவ்விதமாக எழுதப்பட்டுள்ளது, அதாவது இயேசுவினால் "இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது... பின்பு, இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து, ... ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும் சகல நோய்களையும் நீக்கிச் சொஸ்தமாக்கினார்... அப்பொழுது பலவித வியாதிகளையும் வேதனைகளையும் அடைந்திருந்த சகல பிணியாளிகளையும், பிசாசு பிடித்தவர்களையும் சந்திரரோகிகளையும், திமிர்வாதக்காரரையும் அவரிடத்தில் கொண்டுவந்தார்கள்; அவர்களைச் சொஸ்தமாக்கினார்"(மத்தேயு 4:15,23,24).
 
 
 
இரட்சிக்கும் ஒளி - Saving Light

 
 
 
இயேசு சுகமாக்கிய அனேக மக்களில் சிலரின் நோய் மிகவும் தீவிரமாக இருந்தது. இப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையில் இயேசு இடைப்பட்டதால், அவர்கள் உயிர் பிழைத்தார்கள், இவர்களுக்கு அவரே இரட்சிப்பாக மாறினார்(லூக்கா 7:2, 8:43). தன் வல்லமையுள்ள‌ ஒளியை மரணத்தை எதிர்ப்பார்த்துக்கொண்டு இருந்தவர்களின் மீது பாய்ச்சி காப்பாற்றியதால், "மரண இருளில் இருந்தவர்களுக்கு அவர் வெளிச்சம் கொடுத்தார்" என்ற மேசியா பற்றிய வசனங்களின் பொருள் இன்னும் சிறப்பு மிக்கதாக மாறுகிறது. இது மட்டுமல்ல, மரித்துப்போனவர்களையும் அவர் உயிரோடு எழுப்பினார், இதனை பைபிளும் குர்‍ஆனும் போதிக்கின்றன. குஷ்ட வியாதியினால் நம்பிக்கையின்றி வாழ்ந்தவர்களுக்கு, இயேசு நம்பிக்கையின் கலங்கரை விளக்காக இருந்தார்.

 
 
மேசியாவின் ஒளியைப் பற்றிய இன்னொரு தீர்க்கதரிசனத்தை நாம் சிந்திப்பது நல்லது. ஏசாயா 49:6ல் நாம் படிக்கிறோம், தேவனுடைய தாசனாகிய மேசியா இரட்சிப்பு மற்றும் ஒளியாக இருக்கிறார், "பூமியின் கடைசிபரியந்தமும் என்னுடைய இரட்சிப்பாயிருக்கும்படி, உம்மை ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைப்பேன்".
 
 
 
வாழ்வு தரும் ஒளி - Life-Giving Light

 
 
இதற்கு முன்பாக "தேவனுடைய வார்த்தை நம் எல்லாருடைய‌ வாழ்விற்கு ஒளி தருகிறது" என்று கண்டோம். இப்போது நாம் இயேசுவின் போதனை எப்படி வாழ்வு தருகிறது என்பதைக் காண்போம், மற்றும் ஒளிக்கும் வாழ்விற்கும் இடையே உள்ள தொடர்பையும் காண்போம். "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்" என்று இயேசு கூறினார் மற்றும் "என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவ ஒளியை அடைந்திருப்பான் என்றார்"(யோவான் 8:12).

 
 
இயேசு வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு பல ஆண்டுகளுக்கு பின்பு, தன் சீடரான யோவானுக்கு தரிசனத்தில் இவ்விதமாக கூறினார்:".. நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்."(வெளி 1:16-18).

 
 
இயேசுவின் முகம் பற்றிச் சொல்லும் போது, "அவருடைய முகம் வல்லமையாய்ப் பிரகாசிக்கிற சூரியனைப் போலிருந்தது" என்று யோவான் விவரிக்கிறார். இயேசுவின் முகத்திலிருந்து வெளிப்பட்ட இந்த ஆச்சரியமான ஒளி நமக்கு "நீதியின் சூரியன்" என்று மேசியாவைக் குறிக்கும் பெயரை நியாபகப்படுத்துகிறது. பிரகாசமான ஒளி என்பது அவர் பாவமற்ற பரிசுத்தர் என்பதை காட்டுகிறது (சூரா 19:19ஐ ஒப்பிட்டுப்பார்க்கவும்).

 
 
நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்கலாமா? "உண்மையிலேயே இயேசு மரித்ததிலிருந்து எழுந்தார் என்றுச் சொன்னால், அவரிடம் மரணத்தின் மற்றும் பாதாளத்தின் திறவுகோள் உள்ளது என்று பொருள் படுகிறதல்லவா?" இயேசு பாதாளத்தின் காரிருளில் நுழைந்து மற்றும் அதிலிருந்து வெற்றிகரமாக வெளியே வந்தார். இதைப்போல செய்தவர்கள் யாருமில்லை!(May I ask you to consider: "If Jesus really did rise from the dead doesn't it make sense that he has the keys of death and the grave?" After all, he entered that dark realm and exited successfully! No one else has ever done that!).
 
 
யூத‌ர‌ல்லாத‌வ‌ர்க‌ளுக்கு ஓளி - A Light to Non-Jews

 
 
யோவான் 4ம் அதிகார‌த்தில் ஒரு சுவார‌சிய‌மான‌ நிக‌ழ்ச்சி ந‌டைபெறுகிற‌து, இந்த‌ நிக‌ழ்ச்சியில் "ச‌மாரிய‌ர்க‌ள்" என்றுச் சொல்ல‌க்கூடிய‌ ம‌க்க‌ளுக்கு ஒரு ஆன்மீக‌ வெளிச்ச‌த்தை இயேசு கொண்டு வ‌ந்தார். த‌ங்கள் சகோதரர் இனமான யூதர்களைப்போல, இந்த சமாரியர்களும் படைப்பாளியாகிய தேவனை நம்புகிறார்கள், அவர் தான் மோசேக்கும் சட்டத்தை கொடுத்தார் என்றும் நம்புகிறார்கள். துரதிஷ்டவசமாக இவர்கள் சில வகைகளில் உண்மையான பாதையை விட்டு விட்டார்கள். இவர்களுக்கு தேவன் யார் என்றுத் தெரியவில்லை, ஏனென்றால், "இரட்சிப்பு யூதர்கள் வழியாக வருகிறது" என்று இயேசு இவர்களிடம் கூறினார்"(யோவான் 4:22).

 
 
தற்காலத்தில் அனேகர் இந்த கருத்தை விமர்சிக்கிறார்கள், அதாவது "இது குறுகிய எண்ணமுடையது" என்றுச் சொல்கிறார்கள். ஆனால், இந்த யூத இனத்தில் தான் தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பினார், வேதத்தை அருளினார் மற்றும் கடைசியாக உலகத்தின் அனைத்து மக்களுக்கும் இரட்சிப்பை தரும் மேசியாவாக வருவார் என்பதை இவர்கள் மறந்துப்போகிறார்கள். கடைசியாக, சமாரியர்கள் இயேசுவின் அன்பான கடிந்துக்கொள்ளுதலை ஏற்றுக்கொண்டு, "உண்மையாக அவரே உலகத்தின் இரட்சகர்" என்பதை அங்கீகரித்தனர்(யோவான் 4:42).

 
 
இயேசுவின் இந்த பெயரின் பொருளை(இரட்சகர்-Saviour) இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், ஆனால், இயேசு (ஈஸா) என்ற பெயரை அல்லா தெரிந்தெடுத்து அதனை ஒரு தூதன் மூலமாக வெளிப்படுத்தினார் என்று குர்‍ஆன் சொல்கிறது. இயேசு என்ற பெயரின் பொருள் "தேவனே இரட்சகர்-God is salvation" என்று முஹம்மத் ஐ எ உஸ்மான் என்ற இஸ்லாமிய அறிஞர் "இஸ்லாமிய பெயர்கள்" என்ற புத்தகத்தில்(பக்கம் 77) அங்கீகரித்துள்ளார்.

 
 
இயேசுவே இறைவனின் ஒளி மற்றும் இரட்சகர் என்று நம்புகிறீர்களா?

 
 
உங்கள் கேள்விகள் சந்தேகங்களை எனக்கு அனுப்பு இங்கு சொடுக்கவும்.

 
 

StumbleUpon.com Read more...

இந்தியாவை எதிர்த்து போரிட 500-மனித வெடிகுண்டுகளுடன் 3-ஆயிரம் தீவிரவாதிகள் தயார்;பாகிஸ்தான் தலிபான் தளபதி கொக்கரிப்பு

இந்தியாவை எதிர்த்து போரிட 500-மனித வெடிகுண்டுகளுடன் 3-ஆயிரம் தீவிரவாதிகள் தயார்;பாகிஸ்தான் தலிபான் தளபதி கொக்கரிப்பு
 
lankasri.comபாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த 500-மனித வெடிகுண்டுகள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் 35-ஆயிரம் தலிபான் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் தளபதி அறிவித்துள்ளான்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய நேரடி யுத்தத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை அழித்து ஒழிக்குமாறு இந்தியா மற்றும் உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை அந்த நாடு ஏற்க மறுக்கிறது.அதே நேரத்தில், "பாகிஸ்தானில் தீவிரவாதிகளே இல்லை" என்று கூறி வருகிறது.

இதற்கிடையே,பாகிஸ்தானின் முகத்திரையை கிழிக்கும் வகையில் ஏராளமான தீவிரவாத அமைப்புகள் அந்த நாட்டு ராணுவத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றன.பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் இந்திய ராணுவத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் அமைப்பின் ஒரு பிரிவு ஏற்கனவே அறிவித்து உள்ளது.

இந்த சூழ்நிலையில்,பாகிஸ்தானில் உள்ள தெற்கு வஜிரிஸ்தான் என்ற இடத்தை மையமாக கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாத அமைப்பின் "முல்லா நஜீர் குழு (வாலி முகமது)" என்று பிரிவும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக,பெஷாவரில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு தலிபான் அமைப்பின் பாகிஸ்தான் தளபதியும் முல்லா நஜீர் குழுவின் செய்தி தொடர்பாளருமான தெசில் கான் என்பவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள தற்போதைய பதற்றத்தை தொடர்ந்து எங்களுடைய உண்மையான இலக்கை (இந்தியா) நாங்கள் அடையாளம் கண்டு கொண்டு விட்டோம்.எனவே,தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக நாங்கள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம்.

பாகிஸ்தான் அரசின் கொள்கைகளை நாங்கள் எதிர்த்து வருகிறோம். ஆனால்,நாட்டின் இறையாண்மைக்கு ஊறு ஏற்படும்போது தங்களுடைய உயிரையும் கொடுக்க தலிபான்கள் தயங்க மாட்டார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவித உக்கிரமான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியாவை எச்சரிக்கிறோம்.இல்லாவிட்டால்,தற்கொலைப்படை தாக்குதல்கள் மூலமாக இந்தியாவையே அழித்து விடுவோம்.

இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக போரில் ஈடுபடுவோம்.பாகிஸ்தானின் கிழக்கு எல்லையை (இந்திய எல்லை) காப்பதற்காக 500-மனித வெடிகுண்டுகள் தயாராக உள்ளனர்.மேலும்,அதி நவீன ஆயுதங்களுடன் 35-ஆயிரம் தலிபான்களும் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து போரிடுவார்கள்.

இவ்வாறு தெசில் கான் தெரிவித்து உள்ளான்.

முன்னதாக, "பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் போரிடுவார்கள்" என்று தலிபான் அமைப்பின் மற்றொரு பிரிவின் தலைவரான பைதுல்லா மசூத் என்பவன் கடந்த புதன்கிழமை அன்று தெரிவித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவன் வெளியிட்ட அறிக்கையில், "பாகிஸ்தான் எங்களுக்கு நெருக்கமானது.அங்கு வாழும் மக்களும் நாங்களும் அதன் குடிமக்களே.எனவே,போர் முனையில் எங்களுடைய இயக்கத்தினரும் முன்னணியில் நின்று போரிடுவார்கள்" என்று அறிவித்து இருந்தான்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1230573516&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

(மேலதிக இணைப்பு) தாய்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்;இரவு விடுதியில் தீ விபத்து;60 பேர் மரணம்; 200 பேர் காயம்

(மேலதிக இணைப்பு) தாய்லாந்தில் புத்தாண்டு கொண்டாட்டம்;இரவு விடுதியில் தீ விபத்து;60 பேர் மரணம்; 200 பேர் காயம்
 
lankasri.comதாய்லாந்து தலைநகர் பாங்காக்.சர்வதேச சுற்றுலா தலங்களில் ஒன்றாகும்.இங்கு புத்தாண்டை கொண்டுவதற்காக ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.இரவு விடுதிகளில் ஆடல்,பாடல்களில் பிரமாண்டமாக கொண்டாங்கள் நடந்தன.

அங்குள்ள "டாஸ்மேட்டி" என்ற இரவு விடுதியில் நடனத்துடன் புத்தாண்டு கொண்டாட்டம் நடந்தது.400-பேர் திரண்டு இருந்தனர்.

நள்ளிரவு 12.30 மணியளவில் நடன குழுவினர்கள் உற்சாகமாக நடனமாடி கொண்டிருந்தனர்.அப்போது நடன அரங்கில் பட்டாசு வெடித்து புத்தாண்டை கொண்டாடினார்கள்.

அப்போது நடன அரங்குக்குள் தீ பிடித்துக்கொண்டது.அரங்கு முழுவதும் தீ வேகமாக பரவியது.அதில் இருந்து தப்பிக்க வெளியே ஓடினார்கள்.அப்போது நெரிசல் ஏற்பட்டு பலர் கீழே விழுந்தனர். அவர்களும் தீயில் சிக்கிக்கொண்டனர்.

இந்த விபத்தில் 60-பேர் உடல் கருகி பலியானார்கள்.நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.பலருடைய உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகி கிடந்தன.இறந்தவர்களில் பலர் வெளி நாடுகளை சேர்ந்தவர்கள்.

 

 

StumbleUpon.com Read more...

35-அமைப்புகளுக்கு இஸ்ரேல் அரசு தடை

35-அமைப்புகளுக்கு இஸ்ரேல் அரசு தடை
 
lankasri.comஅல்-குவைதா மற்றும் தலிபான் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய 35-அமைப்புகளை,பயங்கரவாத அமைப்புகளாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.இந்த அமைப்புகள் எல்லாம் பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் செயல்படுபவை.மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலில்,யூதர்கள் ஆறு பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து,உலக பயங்கரவாதம்,இஸ்ரேலின் பாதுகாப்பு குறித்து, அந்நாட்டு அமைச்சரவை சமீபத்தில் விவாதித்தது.இதன்பின்,தடை முடிவு எடுக்கப்பட்டது.இனி,இந்த பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் கண்காணிக்கப் படுவதோடு,அந்த அமைப்புகளுக்கு நிதி அளிக்கப்படுவதும் கண் காணிக்கப்பட்டு தடை செய்யப்படும்.

மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இந்த பயங்கரவாத அமைப்புகள் எல்லாம்,இஸ்ரேலுக்கு எதிராக இதுவரை எந்த விதமான தாக்குதல் நடவடிக்கைகளிலும் ஈடுபடவில்லை என்றாலும்,பயங்கரவாதத்தை கட்டுப் படுத்த உலக நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவும் வகையில்,இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என,இஸ்ரேல் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில்,இஸ்ரேலும்,ஹமாஸ் பயங்கரவாதிகளும் தங்கள் பகுதியில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த வேண்டும் என,ஐரோப்பிய யூனியன்,ரஷ்யா மற்றும் அமெரிக்கா ஆகியவை கேட்டுக்கொண்டுள்ளன.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1230801170&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

இஸ்ரேல் தாக்குதல்: ஒபாமா மௌனத்துக்கு அரேபியர்கள் வருத்தம்

 
 
lankasri.com"மும்பை தாக்குதல் சம்பவத்துக்கு ஒபாமா கண்டனம் தெரிவித்தார். ஆனால்,இஸ்ரேல் தாக்குதல் குறித்து மௌனம் காத்து வருகிறார்" என்று அரபு நாட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இது குறித்து ஒபாமா தரப்பிடம் கேட்டபோது,மும்பை தாக்குதல் சம்பவம் பயங்கரவாதம் தொடர்புடையது,இஸ்ரேல் தாக்குதல் நாடுகள் தொடர்புடையது என்று பதில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே இஸ்ரேல் ராணுவம் புதன்கிழமையும் காசா பகுதியில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.

இதுவரை 370-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும்,1,720 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1230799828&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

எந்த நேரமும் கிளிநொச்சி வீழ்ந்துவிடும்; சரணடைந்து விடுங்கள்: புலிகளுக்கு கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள்

எந்த நேரமும் கிளிநொச்சி வீழ்ந்துவிடும்; சரணடைந்து விடுங்கள்: புலிகளுக்கு கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள்
 
கிளிநொச்சியை மும்முனைகளில் துண்டித்துள்ள நிலையில் எந்த நேரமும் கிளிநொச்சி சிறிலங்கா படையிடம் வீழ்ந்துவிடும் என்பதால் தமிழீழ விடுதலைப் புலிகள் உடனே சரணடைய வேண்டும் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பரந்தன் மற்றும் இரணைமடு சந்திகளை படைத்தரப்பு கைப்பற்றியதாக அறிவித்ததைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த கோத்தபாய ராஜபக்ச, சில நாட்களில் கிளிநொச்சி வீழ்ந்துவிடும் என்றார்.
"மேலும் எஞ்சியுள்ள புலிகளின் நிலைகளும் எதிர்வரும் சில மாதங்களில் அழித்துவிடப்படும். கிளிநொச்சியைப் பிடித்துவிடலாமென சிறிலங்கா படை பகல் கனவு காண்பதாக புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியிருந்தார். ஆனால் விரைவில் உண்மை என்னவென தெரியவரும். பரந்தனும் இரணைமடு சந்தியும் வீழ்ந்துவிட்டதால் அழிவை எதிர்கொள்வதா? அல்லது சரணடைவதா? என்பதை புலிகள் முடிவு செய்ய வேண்டும்" என்றும் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.

 

 

StumbleUpon.com Read more...

அசாமில் தொடர்குண்டுவெடிப்பு (பட இணைப்பு)

அசாமில் தொடர்குண்டுவெடிப்பு (பட இணைப்பு)
 
lankasri.comஅசாமின் முக்கிய நகரான குவஹாட்டியில் இன்று மாலை அடுத்தடுத்து 3-இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நடந்ததது.5-பேர் பலியாகினர்.50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்தத் தாக்குதலுக்கு உல்ஃபா இயக்கத்தினர் காரணமாக இருக்கக்கூடும் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.

குப்பைத் தொட்டிகளில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்ததாக முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அசாமில் பாதுகாப்பை ஆய்வு செய்வதற்காக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இன்று அங்கு செல்ல இருந்தது குறிப்பிடத் தக்கது.

 
lankasri.com


 
lankasri.com


 
lankasri.com


 
lankasri.com


 
lankasri.com

 

 

StumbleUpon.com Read more...

புலிகளை வெல்ல முடியாது - அமெரிக்க தூதர்

 


விடுதலைப் புலிகளை வெல்ல முடியாது. ஆனால் இதர தமிழ்த் தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினால் விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஓ பிளேக் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகளை தோற்கடிப்பது கடினம் என்பதில் எங்களுக்கு எப்போதும் நம்பிக்கை உண்டு.

அவர்களை ஆயுதங்களைக் கீழே போடுவது பேச்சுவார்த்தையால் வேண்டுமெனில் சாத்தியம். அவர்களை முழுமையாக இராணுவ ரீதியாக தோற்கடித்துவிட முடியாது. அரசாங்கம் பேச்சுக்களை நடத்துகிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

ஆனால் அரசாங்கம் அப்படியான திட்டத்தில் இல்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் அல்லாத தமிழ்த் தரப்பிடம் பேச்சுக்களை நடத்தி ஒரு தீர்வுக்கு அரசாங்கம் முன்வரலாம். இதில் வெற்றி பெற்றுவிட்டால் புலிகளை தனிமைப்படுத்தி விடலாம்.

கொழும்புக்கு நான் வந்தபோது எண்ணற்ற கடத்தல்கள் நடைபெற்றன. இப்போது குறிப்பிடும்படியான அளவுக்கு அமைதியாக உள்ளது. அத்தகைய நிகழ்வுகள் இப்போது இங்கு இல்லாமல் போனாலும் கிழக்கு மற்றும் வவுனியாவில் நிலைமைகள் மோசமடைந்துள்ளன.

இராணுவ வழித் தீர்வில் வெற்றி பெறுவது என்பது கடினமானது. அரசியல் வழியிலான தீர்வை முன்வைக்காத வரையில் பொதுமக்கள் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலிகளைத்தான் ஆதரிப்பார்கள். அரசியல் தீர்வை இப்போது முன்வைத்தால் புலிகளை ஒடுக்க உதவியானதாக இருக்கும்.

சிறிலங்காவின் அனைத்துக் கட்சிக் குழு என்பது தேக்க நிலையடைந்து விட்டது. ஒரு ஆண்டாகவே 90 விழுக்காடு பணிகள் முடிவடைந்து விட்டதாகவே கூறி வருகிறன்றனர். அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகள் குழுவில் புலிகளுக்கு உதவி செய்யக் கூடிய புலம்பெயர் தமிழர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும்.
 

StumbleUpon.com Read more...

முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தை மீள திரும்ப விடுவதில்லை என்பதே தமிழீழ மக்களின் வைராக்கியம்: பா.நடேசன்

 
 
வன்னிப் பெருநிலப்பரப்பில் முன்னேறும் சிறிலங்கா இராணுவத்தினரை மீள திரும்ப விடுவதில்லை என்ற வைராக்கியத்துடனே தமிழீழ மக்கள் போராடி வருவதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ தாயகத்தின் தற்போதைய களநிலமைகள் மற்றும் அங்குள்ள மக்கள் படும் இன்னல்கள் தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் 'செய்தி அலைகள்'  நிகழ்ச்சிக்கு கடந்த 9 ஆம் நாள் பா.நடேசன் அளித்த நேர்காணல்:
தாயக நிலைமையும் மக்கள் அவலமும்
 
கேள்வி: தாயக மக்கள்படும் அனுபவிக்கும் இன்னல்கள் குறிப்பாக தற்போதைய வெள்ள அனர்த்தத்தினால் அவர்கள் அனுபவிக்கும் அவலங்கள் குறித்தும் அவர்களுடைய தற்போதைய நிலமைகள் குறித்தும் கூறமுடியுமா? 
 
பதில்: எங்களுடைய மக்கள் தொடர்ச்சியான இராணுவ நடவடிக்கைகளுக்கு முகம் கொடுத்த வண்ணம் மன்னாரிலிருந்து தொடர்ச்சியாக மக்கள் இடம்பெயர்ந்து கொண்டிருக்கின்றனர். சாதாரண மக்களாக அல்லாமல் எங்களுடைய போராட்டத்தின் பங்காளிகளாவும் உள்ளனர்.
 
சிறிலங்கா அரசினுடைய வான்குண்டு வீச்சுக்கள், எறிகணைத் தாக்குதல்கள், மோசமான பொருளாதார தடைகள், மருந்து தடைகள், அத்தியாவசிய உணவுத் தடைகள் போன்ற மிகவும் மோசமான இந்த சூழலில் - எமது மக்களை இயற்கை அனர்த்தமும் பெரிதளவில் பாதித்திருக்கிறது.
கடந்த வாரமும் அதற்கு முன்னரும் எமது பிரதேசத்தில் ஏற்பட்ட தாழமுக்கம் காரணமாக வன்னிப்பெரு நிலப்பிரப்பில் - எமது கட்டுப்பாட்டில் இருக்கின்ற பிரதேசம் - அதிகளவு வெள்ளப்பெருக்கிற்கு முகம் கொடுத்திருக்கிறது. இங்குள்ள முதியோர் கூறிய கூற்றுக்களின்படி நீண்ட காலத்திற்கு பின்னர் இவ்வாறானதொரு வெள்ளப்பெருக்கு எங்களுடைய மக்களை பாதித்திருக்கிறது.
இடம்பெயர்ந்த எங்களுடைய மக்கள் இருந்த தற்காலிக கூடாரங்கள் மற்றும் வதிவிடங்கள் அனைத்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.
அந்த மக்களை பாடசாலைகள், ஆலயங்கள், உறவினர்களின் வீடுகள் என பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அவர்களை மீளவும் பாதுகாப்பான இடங்களில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை நாங்கள் தற்போது மேற்கொணடு வருகிறோம்.
 
தற்போதுள்ள வெள்ள அனர்த்தத்திற்கு மட்டும் எங்களுடைய மக்கள் முகம் கொடுக்கவில்லை.
சிறிலங்கா அரசு பாரியதொரு பொருளாதாரத் தடையை எங்கள் மக்கள் மீது மேற்கொண்டு வருகிறது. கடந்த ஒக்ரோபர் மாதம் 400 பாரவூர்திகள் அடங்கிய பொருட்கள் வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால், 218 பாரவூர்திகளையே சிறிலங்கா அரசு வன்னிக்கு அனுப்பியுள்ளது.
அதேபோல் கடந்த நவம்பர் மாதமும் 400 பாரவூர்திகள் வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வரவேண்டும். ஆனால் 112 பாரவூர்திகளுக்கு அவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
இந்த புள்ளி விபரங்களை பார்த்தால் எங்களுடைய மக்களை பொருளாதாரத் தடையும் இயற்கை அனர்த்தமும் எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
மக்களின் வைராக்கியம்
 
எனினும், எங்களுடைய மக்களுக்கு கடந்த காலத்தில் ஏற்பட்ட போராட்ட அனுபவங்கள் - அவர்களின் நெஞ்சுரம் - போராட்ட வைராக்கியம் என்பன இத்தகைய சவால்களை கண்டு குறைந்து போகவில்லை. மாறாக ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிறிலங்கா இராணுவத்தை முன்னேற விடக்கூடாது, வந்தவர்களை மீளவும் அவர்களுடைய இடங்களுக்கு திரும்பிச்செல்ல விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் எல்லைப் படைகளாக- சிறப்பு எல்லைப் படைகளாக- பின் களமுனைகளில் பணி செய்கின்றவர்களாக - எங்களுடைய போராட்டத்தின் பங்காளிகளாக - போர் வீரர்களாக உருவாகி வருவதை எங்களால் பார்க்கக்கூடியதாக இருக்கின்றது.
 
மக்கள் எழுச்சி, மக்கள் போராட்டம், இராணுவத்திற்கு எதிரான அடக்குமுறை அரசிற்கு எதிரான மக்கள் கிளர்ச்சி என்று வரலாற்று புத்தகங்களில் படித்திருக்கலாம். ஆனால் அதை நாங்கள் நேரடியாக பார்க்கும்போது அந்த மக்களுக்கான விடுதலையை விரைவாக வென்று கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் - எழுச்சி - எங்களை இன்னமும் பல மடங்கு வேகமாகச் செயற்பட வைத்திருக்கிறது.
 
கேள்வி: தாயகத்தில் இத்தகைய அவலங்களைச் சந்திக்கும் மக்களுக்கான அடிப்படை வசதிகளை - உதவிகளை - யார் வழங்கிக்கொண்டிருக்கின்றனர்?
 
பதில்:
  இந்த மக்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகம்தான் அழைத்துச் சென்று அவர்களை பாதுகாப்பான இடங்களில் குடியேற்றி, அவர்களுக்குரிய உணவு, உறைவிடம், கல்வி, சுகாதாரம், சுகாதாரக் கல்வியூட்டல் போன்ற வசதிகளைச் செய்து வருகிறது. அது மட்டுமன்றி தமிழர் புனர்வாழ்வுக் கழகத்துடன் தமிழீழ சுகாதார சேவைப் பிரிவு, நலன்புரி அமைப்புக்கள் என அனைவரும் ஒன்றிணைந்து எங்களுடைய மக்களின் தேவைகளை - மிகப்பெரியதொரு மனிதாபிமானப் பணியை மேற்கொண்டு வருகின்றன.
 
இந்த இடத்தில் மிகவும் மனவேதனையுடன் அனைத்துலக சமூகத்திற்கு ஒன்றைக்கூறிக்கொள்ள விரும்புகிறோம். தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தை அனைத்துலக நாடுகள் பல தடை செய்திருக்கின்றன. ஆனால், வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு வந்து பார்த்தால் அதனது பணி எவ்வாறானதென்பது அந்த நாடுகளுக்கு தெரிய வரும். அது மட்டுமன்றி தமிழீழ சுகாதாரச் சேவையினுடைய பணியும் பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.
ஏனெனில், இவ்வாறான அனர்த்த காலங்களில் ஏனைய இடங்களில் தொற்று நோய்கள் பரவும் சூழல் காணப்பட்டுள்ளது. ஆனால் எங்களுடைய பகுதிகளில் தமிழீழ சுகாதாரச் சேவையினர் வீடு வீடாகச் சென்று சேவைகளைச் செய்வது மட்டுமன்றி சுகாதாரம் தொடர்பான கல்வியையும் ஊட்டி வருகின்றனர். உண்மையில் இதுவொரு அதிசயிக்ககூடிய விடயமாகத்தான் இங்குள்ளது.
தமிழகம் அனுப்பிய நிவாரணப் பொருட்களின் நிலை
கேள்வி: தமிழக மக்களின் உணர்வு அவர்களுடைய உதவியாக தாயக மக்களுக்கு தற்போது அனுப்பப்பட்டுள்ளது. இது தாயக மக்களுக்கு எந்த வகையில் பயன்படுகிறது?
 
பதில்: தமிழக மக்களால் இந்திய மத்திய அரசின் ஊடாக தாயக மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக வழங்கப்பட்டு வருகிறது.
அந்தப் பொருட்கள் இங்குள்ள கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விநியோகம் செய்யப்படுகின்றன.
எனினும், தமிழக மக்களால் அனுப்பப்பட்ட முழு உணவுகளும் இதுவரை இங்கு வந்து சேரவில்லை. தமிழக மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட உணவை சிங்கள அரசு சிறிது சிறிதாகவே இங்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது.
இதில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் தமிழக மக்களால் அனுப்பி வக்கப்பட்ட உடு புடவைகளை சிறிலங்கா அரசாங்கம் இன்னமும் வன்னிப் பகுதிக்கு எடுத்து வருவதற்கு அனுமதி வழங்கவில்லை. 
புலம்பெயர் தமிழர்கள் மேற்கொள்ள வேண்டிய அழுத்தப் பணிகள்
கேள்வி: தமிழக மக்களால் அனுப்பி வைக்கப்பட்ட உடுபுடவைகள் இதுவரை தாயக மக்களை வந்தடையாத விடயத்தில் புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் இதற்கான அழுத்தங்களை எந்த வகையில் கொடுக்க முடியுமென நீங்கள் கருதுகிறீர்கள்?
 
பதில்: தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உடுபுடவைகள் மட்டுமல்ல பொதுவாகவே தற்போது எங்களுடைய கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலுள்ள மக்களுக்குரிய எந்தவொரு உடுபுடவைகளையும் எடுத்து வருவதற்கு சிறிலங்கா அரசாங்கம் இன்று அனுமதிப்பதில்லை.
குறிப்பாக, பாடசாலை மாணவர்களுக்குரிய துணிகளையே சிறிலங்கா அரசாங்கம் நிறுத்தியிருக்கிறது. சிறிலங்கா அரசாங்கம் வெளியுலகிற்கு ஒன்றை கூறிக்கொண்டு இங்கு படுமோசமான - உலகில் எங்குமே நடக்காத மிகவும் மோசமான மனித உரிமை மீறல்களை செய்து கொண்டிருக்கிறது. இத்தகைய மனித உரிமை மீறல்களை இங்குள்ள அனைத்துலக மனிதாபிமான நிறுவனங்கள் கூட சிறிது சிறிதாக வெளியுலகிற்கு சுட்டிக்காட்ட ஆரம்பித்துள்ளன.
 
சிங்கள அரசினுடைய மிக மோசமான - நாகரீக உலகம் வெறுக்கத்தக்க - இத்தகைய மனித உரிமை மீறல்களை எங்களுடைய புலம்பெயர்ந்த மக்கள் தத்தமது இடங்களிலுள்ள மனித உரிமை அமைப்புக்களின் உதவியுடன் அந்தந்த இடங்களில் உள்ள அரசுகளுக்கு எடுத்து விளக்கி - வெளிப்படுத்த வேண்டும். இது ஒரு வரலாற்றுப் பணி. புலம்பெயர் மக்கள் இத்தகைய பணிகளை தொடர்ச்சியாகச் செய்து வருவது எங்களுக்கு தெரியும். அதன் வெளிப்பாட்டை இங்கு நாங்கள் பார்க்ககூடிய வகையிலும் உள்ளது.
இருப்பினும், மனித உரிமை அமைப்புக்களின் உதவியோடு சிறிலங்கா அரசினுடைய இத்தகைய மனித உரிமை மீறல்களை தொடர்ச்சியாக தத்தமது நாடுகளிலுள்ள அரசுகளுக்கு வெளிப்படுத்த வேண்டும்.
 
அனைத்துலக சமூகம் எத்தகைய அழுத்தங்களைக் கொடுத்தாலும் சிறிலங்கா அரசு இறங்கி வருவது போன்று தெரியவில்லை. அத்தகைய நிலைப்பாடும் சிறிலங்கா அரசிடம் இல்லை. ஆகையால் இதனை ஒரு அரசியல் பிரச்சினையாக எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு எங்களுடைய மக்களுக்கு இருக்கிறது.
வன்னிக் கள நிலைமை
 
கேள்வி: வன்னிப்பெரு நிலபரப்பில் தற்போதுள்ள களநிலமைகள் எந்த அளவில் உள்ளன?
 
பதில்: இராணுவம் பல முனைகளில் எங்களுடைய பிரதேசங்களை ஆக்கிரமித்துக்கொண்டு வந்தாலும் - எங்களுடைய போர் வீரர்கள் சகல முனைகளிலும் கடுமையான எதிர்ச்சமர்களைச் புரிந்து சிங்கள இராணுவத்திற்கு பாரிய இழப்புக்களை ஏற்படுத்திய வண்ணமிருக்கின்றனர். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு - இந்த அரசாங்கத்தில் முன்னர் இருந்த மங்கள சமரவீர ஒரு இணையத்தளத்தை உருவாக்கியிருக்கிறார்.
இராணுவத்திற்கு ஏற்பட்டு வருகின்ற இழப்புக்கள், இராணுவத்தினுடைய மனநிலை - மனச்சோர்வு தொடர்பாக புள்ளி விபரங்களுடன் அவர் கொடுத்த வண்ணமிருக்கிறார்.
 
உண்மையில் இராணுவத்தினர் பலத்த இழப்புக்களை எதிர்நோக்கி மிகவும் பலவீனமான நிலையிலேயே சிறிது சிறிதாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர். கால நேரம் வரும்போது எங்களுடைய மக்களின் பலத்துடன் ஒரு பாரிய வெற்றியை - வரலாற்றில் என்றுமே சாதிக்காதளவு ஒரு பாரிய வெற்றியை - நிச்சயமாக அடைவோம் என்ற நம்பிக்கை எங்களுடைய தலைவர், தளபதிகள், போர் வீரர்கள் மற்றும் எங்களுடைய மக்கள் என அனைவருக்கும் உள்ளது என்பதை இந்த நேரத்தில் எடுத்துக்கூற விரும்புகிறேன்.
 
கேள்வி:
சிறிலங்கா அரசாங்கத்தினால் புலிகளின் தலைமை குறித்தும் புலிகளின் மனவுறுதி குறித்தும் சில விசமத்தனமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இது குறித்து புலம்பெயர் மக்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?
 
பதில்:
சிறிலங்கா அரசாங்கமும் அவர்களுடைய ஊடகங்களும் இத்தகைய பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்வது ஒன்றும் புதிதல்ல. இது குறித்து எங்களுடைய மக்களுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது. எங்களுடைய மக்கள் நீண்டகாலமாக இவ்வாறான பொய்ப்பிரசாரங்களைக் கண்டிருக்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து வன்னிப்பெரு நிலப்பரப்பிற்கு இடம்பெயர்ந்தபோதும் இவ்வாறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. புலிகள் முற்று முழுதாக அழிந்து விட்டனர். கடலுக்குள் சென்றுதான் அவர்கள் தற்கொலை செய்யவேண்டும் என்ற வகையிலான பொய்ப்பிரசாரங்களை  கடந்தகால வரலாற்றில் சிறிலங்கா அரசு மேற்கொண்டிருந்தது.
 
புலம்பெயர்ந்துள்ள மக்கள் எந்நேரமும் எங்களைப் பற்றிய சிந்தனையுடனும் பாசத்துடனும் இருப்பதால் இத்தகைய பொய்ப் பிரசாரங்களின் பிரதிபலிப்புக்கள் அவர்களுக்கு வருவது இயற்கை. ஆனால், புலம்பெயர் மக்கள் மிகவுறுதியுடன் - ஓர்மத்துடன் - வைராக்கியத்துடன் இருக்க வேண்டும். நாங்கள் நிச்சயம் எமது விடுதலைப் போராட்டத்தில் அதிசயிக்கத்தக்க வகையிலான திருப்புமுனையை ஏற்படுத்தி அதனூடாக வெற்றிப் பாதையில் செல்வோம் என்பதை எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
 
கேள்வி: சிறிலங்கா படையினர் தற்போது பாரிய இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதை அவர்களுடைய பலமாகக் கருதலாமா?
 
பதில்: இத்தகைய நிலை இராணுவ ரீதியாக அவர்களுக்கு மிகவும் பலவீனமான நிலையை ஏற்படுத்தும் என்பதுதான் அனைவரதும் எதிர்பார்ப்பு. இராணுவ ஆய்வாளர்களும் அதையே கூறி வருகின்றனர். களமுனையில் தற்போது ஏற்பட்டு வரும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இராணுவத்தினர் மிக விரைவாக பலவீனமான நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர் என்பதையே காட்டுகிறது.
 
கேள்வி:
கிளிநொச்சி தற்போது ஒரு சூனியப் பிரதேசமாகி விட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது ?
 
பதில்:
கிளிநொச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் தற்போதும் மக்கள் வசிக்கின்றனர். அங்கு அவர்கள் வயல் வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் சிறிலங்கா வான்படையின் குண்டுகளும் எறிகணைகளும் பீரங்கிகளும் இவ்வாறான குடிமனைகளையும் வயல் நிலங்களையும் நோக்கியே ஏவப்படுகின்றன. இருப்பினும் இத்தகைய தாக்குதல்களுக்கு இயைபாக்கம் அடைந்து - பழகிப்போய் - மக்கள் தொடர்ந்தும் அங்கு வாழ்ந்து வருகின்றனர்.
 
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் சில இடங்களில் இருந்து தந்திரோபாய பின்நகர்வை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகின்ற போதும் - புலிகள் பலமிழந்து விட்டனர் என்று சில இராணுவ ஆய்வாளர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதற்கு உங்களது பதில் என்ன?
 
பதில்: இவ்வாறான ஆய்வாளர்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். நாம் எவ்வாறான தந்திரோபாய நகர்வுகளை பின்பற்றி வருகிறோம் என்பதை அவர்கள் பின்னர் அறிவர். தந்திரோபாயங்களை முன்னரே அறிவிப்பது விவேகமான செயற்பாடாக இருக்குமென நான் நினைக்கவில்லை.
 
கேள்வி:
தற்போதைய இராணுவ நடவடிக்கை மூலம் சிறிலங்கா அரசாங்கம் எதனை எட்ட விரும்புகிறது?
 
பதில்: தமிழ் மக்களின் பலமாக இருக்கும் எங்களை அழித்து முற்று முழுதான ஒரு இன அழிப்பை மேற்கொள்ளலாம் என்று சிறிலங்கா அரசு திட்டமிடுகிறது. ஏனெனில் இங்கு படையெடுப்பை நடத்திக்கொண்டு இருக்க - இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தமிழ் மக்கள் கடத்தப்பட்டு காணாமல் போய்க்கொண்டிருக்கின்றனர். படுகொலை செய்யப்படுகின்றனர். குறிப்பாக கொழும்பிலுள்ள தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்படுவதும் தமிழ் இளைஞர்கள் காணாமல் போவதும் தொடர்ச்சியாக அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சிறிலங்கா அரசாங்கத்தின் இன அழிப்பின் ஒரு பகுதியாகத்தான் இதனைப் பார்க்க வேண்டும். சிறிலங்கா ஆட்சியாளர்கள் எங்களுடைய இனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்தொடுதான் இன்று நேற்றல்ல கடந்த 50 வருடங்களாகச் செயற்பட்டு வருகின்றனர்.
 
கேள்வி:
தென்பகுதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் இராணுவ ரீதியில் இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வை எட்டமுடியுமென்ற நம்பிக்கையை சிங்கள மக்கள் வெளியிட்டுள்ளனர். இது எதனைக் காட்டுகிறது?
பதில்: தமிழ் மக்களின் இன அழிப்பைக் கணக்காகக் கொண்டு சிங்கள மக்கள் பிழையான பாதையில் செல்கின்றனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
கிழக்கில் இன்னமும் எங்கள் போராளிகள் உள்ளனர்
 
கேள்வி: கிழக்கு விடுவிக்கப்பட்டு அங்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் அதற்கு உதவுமாறும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட பின்னணியில் தற்போது அங்கு தாக்குதல்கள் அதிகரித்துள்ளதுடன் ஆட்கள் கடத்தப்படுவதும் காணாமல் போவதும் என பயங்கர நிலை ஒன்று அங்கு உருவாகியிருக்கிறது. இது எதனை வெளிப்படுத்துகிறது ?
 
பதில்: கிழக்கில் இன்னமும் எங்களுடைய போராளிகள் இருக்கின்றனர். அங்கு இருக்கின்ற மக்கள் முற்று முழுதாக எங்களையே ஆதரிக்கின்றனர். எங்களுடைய வரவை அந்த மக்கள் எதிர்பார்த்த வண்ணமிருக்கின்றனர். கிழக்கிலுள்ள மக்கள் அங்குள்ள சிறிலங்கா அரசாங்கத்தின் நிர்வாகத்தையும் ஒட்டுக்குழுக்களையும் முற்று முழுதாக நிராகரித்த வண்ணமே இருக்கின்றனர். இதனை சிறிலங்கா அரசாங்கத்தினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அங்குள்ள எமது ஆதரவாளர்களையும் எங்களுடைய மக்களையும் கடத்துவதும் கொலை செய்வதுமான செயற்பாடுகளில் சிறிலங்கா அரச படைகள் செயற்பட்டு வருகின்றன. 
கேள்வி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டிருந்தாலும் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்படும் இன அழிப்பு குறித்து வெளிநாடுகள் எதனையும் வெளிப்படுத்தாதது எதனைக் காட்டுகிறது?
 
பதில்: எங்களுடைய தலைவர் இதனைக் கருத்தில் கொண்டுதான் அனைத்துலக சமூகத்திடம் இந்தமுறை மாவீரர் நாள் உரையிலும் எங்களுடைய தடையை எடுக்க வேண்டும் - எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை புரிந்து கொள்ளவேண்டும் - என்று அனைத்துலக சமூகத்திடம் கேட்டிருக்கிறார். இங்கிருந்த ஐக்கிய நாடுகள் சபை அதிகாரிகளையும் அனைத்துலக நிறுவனங்களின் பிரதிநிதிகளையும் சிறிலங்கா அரசு வெளியேற்றியதன் பின்னணியில் தமிழ் இன அழிப்பு குறித்து அனைத்துலக சமூகத்திற்கு சிறிது சிறிதாக வெளிப்பட்டு வருவதாகத்தான் நாங்கள் கருதுகிறோம்.
 
ஏனைய இந்திய மாநிலங்களிலும் ஆதரவான எழுச்சி நிலை
கேள்வி: அனைத்துலக நாடுகளிலுள்ள தமிழ்மக்கள் குறிப்பாக மலேசியாவிலுள்ள தமிழர்கள், தென்னாபிரிக்காவிலுள்ள தமிழர்கள் என உலகெங்கும் உள்ள தமிழர்கள் தற்போது மேற்கொண்டு வரும் உணர்வெழுச்சி போராட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எத்தகைய நம்பிக்கையை தந்திருக்கிறது ?
 
பதில்: இது எங்களுக்கு மிகப்பெரிய ஆன்ம பலத்தை தருகிறது. உலகத் தமிழினம் ஒரே காலகட்டத்தில் ஒரே குரலாக - ஒரே ஒழுச்சியாக - ஒரே சக்தியாக ஒன்றுபட்டு நிற்பது எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு எதிர்காலத்தில் கிடைக்கப்போகின்ற அங்கீகாரத்தையே எடுத்துக்காட்டுகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் எழுச்சியானது தமிழ்நாட்டை மட்டுமல்ல அதையும் கடந்து இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள மக்களையும் எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவாகக் குரல்கொடுக்கும் நிலையை உருவாக்கி வருகிறது.
குறிப்பாக, தமிழ் மக்கள் மீதான இராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும், சிறிலங்கா அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் வழங்கக்கூடாதென இந்தியாவிலுள்ள மாணவர் அமைப்புக்கள் எல்லாம் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சென்று டில்லியில் இந்திய நாடாளுமன்றத்திற்கு முன்பாக பாரியதொரு கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். அதில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளம் இந்திய சமூகம் கலந்துகொண்டது. இது எதனை எடுத்துக்காட்டுகிறதெனில் தமிழ்நாட்டினுடைய எழுச்சி தமிழ்நாட்டு எல்லையைக் கடந்து இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் உள்ள மக்களும் எமது போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் சூழல் உருவாகி வருவதையே எடுத்துக்காட்டுகிறது.
 
அதுபோன்றே வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களின் ஆர்ப்பாட்டங்களும் வெறுமனே தமிழ்மக்களின் ஆர்ப்பாட்டமாக மட்டுமன்றி எதிர்காலத்தில் அந்தந்த நாட்டு மக்களின் ஆதரவும் எமக்கு கிடைக்கப் போகின்றது என்பதையே காட்டுகிறது.
 
கேள்வி: தமிழக அரசியல் தலைவர்களுக்கும் தமிழக மக்களுக்கும் ஈழத்தமிழர்கள் குறித்து என்ன செய்தியைக் கூறவிரும்புகிறீர்கள்?
 
பதில்: எங்களுடைய போராட்டத்தின் நியாயத்தன்மையை தமிழக மக்கள் உணர்வுபூர்வமாக உலகிற்கு எடுத்து சொல்லி வருகிறார்கள். நிறைவு அளிக்கக்கூடிய வகையில் அவர்களது செயற்பாடுகள் இருந்து வருகின்றன. இவ்வாறான செயற்பாடுகளை - உதவிகளை - தொடர்ச்சியாக அந்தந்த நாட்டு மக்களுக்கும் அரசுகளுக்கும் எடுத்துச் சொல்லி - மிக விரைவாக எங்களுடைய போராட்டத்தை அங்கீகரிப்பதற்கான அந்த எழுச்சி நிலையை உருவாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு எங்களிடம் இருக்கின்றது.
 
கேள்வி: தமிழ் மக்கள் இந்தியாவிடம் எதனை எதிர்பார்க்கிறார்கள்?
 
பதில்: தமிழ்மக்கள் தமது விடுதலை இயக்கத்தின் மீதான தடையை அகற்றி, எங்களுடைய விடுதலைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
 
கேள்வி: இந்தியாவிற்கு சிங்கள தேசம் நண்பர்களாக இருக்க முடியுமா?
 
பதில்: ஒருபோதும் இருக்க முடியாது. வரலாற்று ரீதியாக உண்மையான நண்பர்கள் நாங்கள்தான் என்பதை நான் பலமுறை சுட்டிக்காட்டியிருக்கிறேன். வரலாறும் அதைத்தான் எடுத்துக்காட்டுகின்றது. இன்று நேற்றல்ல பல ஆயிரம் வருடங்களாக இந்தியாவின் வரலாற்று நண்பர்கள் தமிழ்மக்கள்தான் என்பது இந்தியாவிற்கு நன்றாகத் தெரியும்.
 
கேள்வி: போர் நிறுத்தம் என்ற செய்திகள் தற்போது பரவலாக வந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய போர் நிறுத்த அழைப்பு வந்தால் புலிகள் அதனை சாதகமாக ஏற்றுக்கொள்வார்களா? 
 
பதில்: போர் நிறுத்தம் குறித்து நாங்கள் அனைத்துலக சமூகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் ஒன்றைச் சொல்ல விரும்புகின்றோம். நோர்வேயின் அனுசரணையுடன் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து சிறிலங்கா அரசுதான் விலகிக்கொண்டது. நாங்கள் விலகிவில்லை.
 
சிங்கள அரசு அரசியல் தீர்வை விரும்பாது இராணுவத்தீர்வின் மூலமே தான் நினைத்ததனை அடைய முனைகின்றது என்பது அனைத்துலக சமூகத்திற்கு இன்று நன்றாகத் தெரிகிறது. உலகில் எந்தவொரு தேசியப் பிரச்சினையும் இராணுவ அடக்குமுறையினூடாகத் தீர்த்து வைக்கப்பட்டது என்பது உலக வரலாற்றில் இல்லை. அதை உலக நாடுகளும் புரிந்து கொள்ளும்.
 
கேள்வி: தமிழ் மக்களுக்கு எதிராக பரப்புரை ரீதியாக சிறிலங்கா அரசு தீவிரம் காட்டுவதாகவும் தமிழ் மக்கள் தரப்பில் பரப்புரை மந்தமாகவே இருப்பதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. இது குறித்து?
 
பதில்: பொருளாதாரத் தடைகள், இராணுவ நடவடிக்கைகள் என பல தடைகளுக்கு மத்தியில் இருந்தே நாங்கள் இந்த பிரசார வேலைகளை முன்னெடுத்து வருகிறோம். எனினும் புலம் பெயர்ந்துள்ள மக்கள் அங்கே எங்களுடைய பிரச்சினைகளை சிறப்பாக எடுத்து விளக்கி வருகின்றனர்.
 
கேள்வி: புலம்பெயர் தமிழ் மக்கள் இன்னும் சிறப்பாக தமது பரப்புரையை எடுத்துச் செல்ல என்ன செய்யவேண்டுமென நீங்கள் கருதுகிறீர்கள்?
 
பதில்: மேற்கத்தைய உலகிற்கு அவர்களுடைய மொழியிலேயே பரப்புரையை எடுத்துச் செல்லவேண்டுமென நான் நினைக்கின்றேன். ஏனெனில் அவர்களுக்கு இலகுவாக விளங்கக்கூடிய வகையில் அவர்களது மொழியிலேயே - இலகுவாக விளங்கக்கூடிய சொற்பதங்களை - பிரயோகிக்க வேண்டும். சிங்கள அரசினுடைய தற்போதைய நடவடிக்கைகள் ஒட்டுமொத்த மனித உரிமைகளையும் மீறுகின்ற நடவடிக்கை என்பதை அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.
 
கேள்வி: தேசியத் தலைவர் தனது மாவீரர் நாள் உரையில் புலம்பெயர் இளையோருக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்திருந்தார். அதில் ஆழ்ந்த அர்த்தங்கள் பொதிந்திருந்தன. அந்த வகையில் புலம்பெயர்ந்துள்ள இளையோர் தமது பணிகளை எந்த வகையில் முன்னெடுக்க வேண்டுமெனக் கருதுகிறீர்கள்?
 
பதில்:
புலம்பெயர் நாடுகளில் பிறந்து வளரும் எமது இளையோர் அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமது பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். உண்மையில் அது எங்களுக்கு மகிழ்ச்சியாகவும் நம்பிக்கை தரக்கூடியதாகவும் இருக்கின்றது. ஆகவேதான் தலைவர் புலம்பெயர்ந்த இளம் சமுதாயத்திற்கு தனது நன்றியையும் தனது எதிர்பார்ப்பையும் தெரிவித்துள்ளார்.
 
கேள்வி: புலம்பெயர் வாழ் தமிழ் மக்களுக்கு தாயகத்திலிருந்து நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?
 
பதில்: புலம்பெயர்ந்துள்ள மக்கள் கடந்த காலத்தைப் போன்றும் நிகழ்காலத்தைப் போன்றும் எதிர்காலத்திலும் சோர்வடையாது மிகவும் உற்சாகமாக - மிகவும் உறுதியுடன் - தொடர்ந்தும் அந்த பணிகளைச் செய்ய வேண்டும் என்ற பெரிய எதிர்பார்ப்புடன் நாம் இங்கு இருக்கின்றோம் என்று பா.நடேசன் கூறியுள்ளார்.

 

 

StumbleUpon.com Read more...

புலிகளை அழிக்கும் போருக்கு ஆயுத உதவிகளைப் பாகிஸ்தானும் ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்குகின்றன: கொழும்பு வார ஏடு

 
 
சிறிலங்கா அரசாங்கம் தற்போது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொண்டு வரும் படையெடுப்புக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் போர்க் கருவிகள் உள்ளிட்ட இராணுவ உதவிகளை பாகிஸ்தானும் இந்தப் போருக்குத் தேவையான ஏனைய உதவிகளை இந்தியாவும் வழங்கி வருகின்றன என கொழும்பிலிருந்து வெளிவரும் "த மோர்ணிங் லீடர்" தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக நேற்று புதன்கிழமை வெளிவந்த த மோர்ணிங் லீடரின் அரசியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் "காலவரையறை" என்ற பொறிக்குள் சிக்கியுள்ளது. இப்போது அது மீண்டும் ஒரு கால எல்லையை அறிவித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதத்திற்கு முன்னதாக கிளிநொச்சியை கைப்பற்றப்போவதாகவும், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை கைது செய்யப் போவதாகவும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும் அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
ஆனால், பொருளாதார தளம்பல் அரசாங்கம் நடத்தும் புலிகளுக்கு எதிரான போரில் தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றன. முக்கியமான உற்பத்தி நிறுவனங்கள் பல வீழ்ச்சியடையும் கட்டத்தை அடைந்துவிட்டன. தனியார் வங்கிகளும் பாரிய நெருக்கடிகளை சந்தித்துள்ளன.
வைப்பில் இடப்பட்ட பணத்தை வாடிக்கையாளர்கள் பெருமளவில் மீள எடுத்து வருவதும், கடன் மற்றும் கடன் அட்டைகளுக்கான மீள செலுத்தும் தொகைகளை வாடிக்கையாளர்கள் செலுத்த தவறுவதும் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதார கட்டமைப்பு தகர்ந்து போகும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பங்குச்சந்தையும் இந்த வருடத்தில் 41.1 விகிதம் வீழ்ச்சி கண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து நேற்று மாலை மகிந்த தலைமையில் கூடிய அவசர கூட்டத்தில் நிதி நெருக்கடிகளை சமாளிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. நிதி நெருக்கடி அடுத்த சில மாதங்களில் அரசின் கைகளை மீறிவிடும் என தெரிவிக்கப்படுகின்றது.
இத்தகைய பெரும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் வன்னியில் மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வரும் படை நடவடிக்கை பாகிஸ்தானின் ஆயுத உதவியில் தங்கியுள்ளது. பாகிஸ்தான் வன்னி நடவடிக்கைகளுக்கு தேவையான ஆயுதங்களையும் ஏனைய படைத்துறை உபகரணங்களையும் வழங்கி வருகின்றது.
அரசாங்கத்துக்கு தேவையான ஏனைய உதவிகளை இந்தியா வழங்கி வருகின்றது. கிளிநொச்சி நகர் வீழ்ச்சி கண்டாலும் தொடர்ந்து போராடுவோம் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை.
ஆனால், உலகம் பாரிய பொருளாதார அழுத்தங்களை சந்திக்கும் போது சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் மறைந்து போகலாம்.
அரசாங்கத்திற்கு விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்களை நடத்துவதில் ஆர்வம் இல்லை. அது விடுதலைப் புலிகளை தடை செய்வதற்கு முயற்சித்து வருகின்றது. ஆனால், தடை செய்தாலோ அல்லது செய்யா விட்டாலோ போர் தொடரும் என்பது நிச்சயம். ஆனால் போர் தொடரும் சந்தர்ப்பத்தில் மகிந்தவிற்கும் அவரது சகோதரர்களுக்கும் அதிக நிதி தேவை.
சுயாதீன ஊடகங்களில் பல, அரசாங்கத்தின் அழுத்தங்களுக்கு உட்படுவதால் புதிய வருடத்தில் சிறிலங்கா மக்கள் முற்று முழுதாகவே பேச்சு உரிமைகளை இழந்தவர்களாகி விடுவார்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP