சமீபத்திய பதிவுகள்

குழந்தையை போல் அழும் கிளி-Parrot Crying Like A Baby — Video

>> Friday, December 31, 2010StumbleUpon.com Read more...

ஜிமெயிலிலும் ""இதுதானா நீங்கள் நினைத்தது ?'

கூகுள் தேடுதல் சாதனம் மூலம் தேடலை மேற்கொள்கையில், நாம் ஏதேனும் எழுத்துப் பிழை ஏற்படுத்தினால், உடனே கூகுள்  "Did you mean" எனக் கேட்டுச் சரியான எழுத்துக்களுடன் அந்த தேடலுக்கான சொல் அல்லது சொல் தொடர்களை அமைக்கும். அல்லது இப்படி அமைத்துத் தான் தேட விரும்புகிறீர்களா? என்று பொருள்பட நமக்கு சில காட்டப்படும்.  பெரும்பாலும், கூகுள் அமைத்திடும் சொற்கள் சரியாகவே அமையும்.  இதன் மூலம் நாம் தவறு செய்தாலும், சரியான தேடலுக்கு இது உதவிடுகிறது.  
இப்போது இந்த வகை உதவி, ஜிமெயில் தேடலுக்கும் வழங்கப்படுகிறது. இமெயில் இன்பாக்ஸ் அல்லது மற்ற பெட்டிகளில் நாம் காண விரும்பும் டெக்ஸ்ட் உள்ள இமெயில்களைப் பார்த்திட, சில சொற்களை அமைத்துத் தேடுகையில், இதுதானா நீங்கள் தேடுவது என, வேறு சில சொற்களும் காட்டப்படுகின்றன. சொற்களில் எழுத்துப் பிழை இருக்கையில், சரியான எழுத்துக்களுடன் சொற்கள் காட்டப்படுகின்றன. இதனால் நம் தவறுகள் திருத்தப்படுகின்றன. தேடல்கள் விரைவு படுத்தப்படுகின்றன


source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

11 வயது இஸ்லாமிய சிறுமியின் திருமணம் சட்டவிரோதம்

>> Thursday, December 30, 2010


11 வயது இஸ்லாமிய சிறுமி ஒருத்தியை, 41 வயதுக்காரர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தமை சட்ட விரோதம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்தச் சிறுமியின் தந்தைக்கு தனது மகளை, அந்த நபருக்கு திருமணம் செய்து வைப்பதில் ஆர்வம் எதுவும் இல்லை என்றும், அச்சுறுத்தல் மற்றும் பலவந்தம் ஆகியவை இந்தத் திருமணத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் இஸ்லாமிய நீதிமன்றத்தின் நீதிபதி கண்டறிந்துள்ளார்.

இந்த 11 வயதுச் சிறுமியை, அந்த 41 வயதுக்காரர் கடந்த பிப்ரவரி மாதத்தில் தனது நான்காவது மனைவியாக திருமணம் செய்துகொண்டார்.

இந்தத் திருமணம் செல்லுபடியாகாது என்று இஸ்லாமிய நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். அதற்கு அந்தப் பெண்ணுக்கு திருமண வயது வரவில்லை என்பது காரணமல்ல. அவர்கள் இஸ்லாமிய சட்டங்களை பின்பற்றவில்லை என்பதுதான் அதற்குக் காரணமாம்!

16 வயதுக்கு உட்பட்ட இஸ்லாமியப் பெண்கள் இஸ்லாமிய நீதிமன்றத்தின் அனுமதியுடன் திருமணம் செய்துகொள்ள அங்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

நாட்டில் சிறார் திருமணங்கள் தடை செய்யப்பட வேண்டும் என்று பெண் உரிமை அமைப்புக்கள் குரலெழுப்புவதற்கு இந்தத் திருமணம் தூண்டியுள்ளது.


source:semparuthi


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

4 மனைவிகளால் அடித்துக்கொல்லப்பட்ட அப்பாவி ;-)

>> Wednesday, December 29, 2010


  

 

வங்காளதேசத்தில் 4 முறை திருமணம் செய்த ஒருவரை, அவரது 4 மனைவிகளும் ஒன்றாக சேர்ந்து சரமாரியாக அடித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வங்காளதேசத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் யூனுஷ் பெபாரி (46). இவர் ஏற்கனவே 2 முறை திருமணம் ஆனவர். இந்த நிலையில், முதல் 2 மனைவிகளுக்கு தெரியாமல் மேலும் 2 பேரை மணந்தார்.

இதில் முதல் இரு மனைவிகளுக்கும் தங்களது கணவர் பெபாரிதான் என்பது தெரியும். ஆனால் 3 மற்றும் 4வது மனைவிகள் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரியாது. ரகசியமாக இதை வைத்திருந்தார் பெபாரி. அதே போல அந்த லேட்டஸ்ட் மனைவிகளுக்கும், முதல் இரு மனைவிகள் குறித்து தெரியாது. இப்படி ரகசியமாக நான்கு மனைவிகளுடன் நான்கு வாழ்க்கை வாழ்ந்து வந்தார் பெபாரி.

ஒவ்வொரு மனைவியுடனும் தனித் தனியாக வெளியில் சென்று சுற்றுவதை வழக்கமாக வைத்திருந்தார் பெபாரி. இந்த நிலையில், கிராமத் திருவிழாவுக்கு முதல் 2 மனைவிகளுடன் சென்றார்.

அப்போது எதிர்பாராத வகையில், பெபாரியின் 3வது மனைவி அங்கு வந்து விட்டார். இதையடுத்து சண்டை மூண்டது. பெபாரியின் குட்டு வெளிப்பட்டது. அதிர்ச்சி அடைந்த மூன்று மனைவிகளும் அவரை 4வது மனைவியிடம் கூட்டிச் சென்றனர். 3 பெண்கள் தனது கணவரை இழுத்து வருவதைப் பார்த்த 4வது மனைவிக்கு பெரும் குழப்பம், பின்னர்தான் அந்த மூன்று பேரும் பெபாரியின் மனைவியர் என்று தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தார்.

அவ்வளவுதான், பொங்கி எழுந்த நான்கு பேரும் சேர்ந்து பெபாரியா சரமாரியாக கையில் கிடைத்ததை வைத்து அடித்து நொறுக்கி விட்டனர். அவரும் எவ்வளவு தான் தாங்குவார். இறுதியில் அடி தாங்க முடியாமல் பரிதாபமாக இறந்து போனார்.

source:narumugai


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

இணைய தள வழி யு-ட்யூப் வீடியோ இறக்கம்

>> Tuesday, December 28, 2010


நாம்  எடுக்கும் வீடியோ படங்களை இணையத்தில் பதித்து வைத்து, நாம் அனுமதிப் பவர்களைப் பார்ப்பதற்கு வழி தருகிறது யு–ட்யூப் வீடியோ தளம். கூகுள் நிறுவனம் அமைத்துள்ள இந்த தளத்தில் எந்தப் பொருள் குறித்தும் வீடியோ கிளிப்களைக் காணலாம். இவ்வாறு காணும் போது, அவற்றை நம் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து, விரும்பும்போதெல்லாம் காண நாம் ஆசைப்படுவோம். இந்த வீடியோ பைல்களை டவுண்லோட் செய்திட, இணையத்தில் பல புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. இந்த புரோகிராம்கள் குறித்து, கம்ப்யூட்டர் மலரில் அடிக்கடி தகவல்கள் தரப்பட்டுள் ளன. சென்ற வாரம் ஒரு வாசகர், எந்த புரோகிராமின் துணை இல்லாமல், ஆன் லைனிலேயே இந்த வீடியோ கிளிப்களை டவுண்லோட் செய்திட முடியுமா என்று கேட்டிருந்தார். இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கையில், இணையத்தில் பல தளங்கள் இயங்குவது தெரிந்தது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.
1. Keepvid  (கீப்விட்): மிக எளிதாக டவுண்லோட் செய்திட வசதிகள் கொண்ட தளம். தள முகவரி www.keepvid.com.  நீங்கள் டவுண்லோட் செய்திட விரும்பும் யு–ட்யூப் வீடியோ உள்ள தள முகவரியினை முதலில் காப்பி செய்து கொள்ளவும். பின் கீப்விட் இணைய தளம் செல்லவும். அங்கு கொடுக்கப்பட்டுள்ள, அட்ரஸ் பார் போன்ற நீண்ட கட்டத்தில், யு–ட்யூப் வீடியோவிற்கான காப்பி செய்த தள முகவரியினை பேஸ்ட் செய்திடவும். பின்னர், கீழாக, சாதாரண தன்மை கொண்ட வீடியோ பைல், சிறப்பான தன்மை கொண்ட வீடியோ பைல் எனப் பல பார்மட்டுகள் கொடுக்கப்பட்டு, நம் விருப்பம் கேட்கப்படும். நம் விருப்பத்தினைத் தேர்ந்தெடுத் தவுடன், பைல் நாம் குறிப்பிடும் இடத்தில் சேவ் செய்யப்படும். இந்த தளத்தில், யு–ட்யூப் தள படங்கள் மட்டுமின்றி, மை ஸ்பேஸ் மற்றும் டெய்லிமோஷன் தள வீடியோக்களையும் தரவிறக்கம் செய்திடலாம்.
2. Zamzar (ஸம்ஸார்): யு–ட்யூப் வீடியோக்களை டவுண்லோட் செய்திடத் தரும் வசதியுடன், அதனைத் தேவையான பார்மட்டில் மாற்றிப் பதியும் வசதியும் இங்கு தரப்படுகிறது. இது குறிப்பிட்ட பார்மட்டில் உள்ள வீடியோக்களை  மட்டுமே இயக்கும் வசதி கொண்டவர்களுக்கு மிகவும் உதவியான தளமாகும். முதலில் டவுண்லோட் செய்து, பின்னர் அவரவர் கம்ப்யூட்டர்களில் பார்மட்டை மாற்றும் வேலை இந்த தளம் மூலம் மிச்சமாகிறது. இந்த தள முகவரி www.zamzar.com.
3. KCoolonline (கே கூல் ஆன்லைன்): யு–ட்யூப் தளம் உட்பட, 231 வீடியோ தளங்களை இந்த தளம் ஏற்றுக் கொண்டு, வீடியோ பைல்களை இறக்கிட உதவி செய்கிறது. முன்பு கூறியது போலவே, குறிப்பிட்ட வீடியோ, இணையத்தில் உள்ள தள முகவரியினைப் பதிந்து இயக்க வேண்டும். பல்வேறு இணைய தளங்களில் உள்ளவற்றை டவுண்லோட் செய்திட விருப்பப்படு பவர்களுக்கு இது உகந்த தளமாகும். இந்த தள முகவரி:www.kcoolonline.com.
4.  Video Downloader (வீடியோ டவுண்லோடர்): யு–ட்யூப், டெய்லி மோஷன் மற்றும் மை ஸ்பேஸ் போன்ற தளங்களிலிருந்து வீடியோக்களை டவுண்லோட் செய்திட உதவும் தளம். இங்கு வீடியோவின்  flv  ஒரிஜினல் பார்மட்டிலும் டவுண்லோட் செய்திடலாம். இந்த தளத்தின் முகவரி: http://javimoya.com/blog/ youtube_en.php 
5. SaveVid (சேவ்விட்): இந்த தளம் மூலமாக வீடியோ பைல்களை flv  மற்றும் எம்பி 4 பார்மட்டில் டவுண்லோட் செய்திடலாம். இந்த தளத்தில் ஒரு சிறப்பாக, டவுண்லோட் செய்யக் கூடிய பிரபலமான வீடியோ பைல்களும் காட்டப்படும். அவற்றுக்கான நேரடியான தள முகவரிகளும் கிடைக்கும். 
6. Vidgrab  (விட்கிராப்): இந்த தளத்தில் வெப் பார்ம் ஒன்று கிடைக்கிறது. இதன் மூலம், யு–ட்யூப் வீடியோக்களை இதில் ஒட்டி வைக்கலாம். பின்னர், இதிலிருந்து டவுண்லோட் செய்திடலாம். இதன் தள முகவரி  www.vidgrab.com.
7.Vixy  (விக்ஸி): இந்த தளத்தில் ஒரு வீடியோ கன்வர்டர் தரப்படுகிறது. இந்த தளத்திலிருந்து யு–ட்யூப் வீடியோக்களை அப்படியே அதன் பார்மட்டில்  டவுண்லோட் செய்திட முடியாது. avi, 3gp, mov  அல்லது mp4 ஆகிய பார்மட்டுகளில் ஒன்றில் மாற்றிய பின்னரே டவுண்லோட் செய்திடலாம்.  இதன் தள முகவரி: www.vixy.net 
8.KeepTube  (கீப் ட்யூப்): யு–ட்யூப் வீடியோக் களை முன் பார்வையிட்டுப் பின்னர் பிடித்திருந்தால், இந்த தளம் மூலம் டவுண்லோட் செய்திடலாம். வீடியோ எந்த தரத்தில் இருக்க வேண்டும் என ஆப்ஷன் தரப்படுகிறது. இந்த தளத்தில் யு–ட்யூப் வீடியோ இருக்கும் தளத்தின் முகவரியைத் தருகையில், அதன் பெயருக்கு முன் Keep என்று இணைத்து டவுண்லோட் செய்திடலாம். தள முகவரி www.keeptube.com
9.KissYoutube  (கிஸ் யு ட்யூப்): மேலே சொல்லப்பட்ட கீப் ட்யூப் போல இதுவும் செயல்படுகிறது. இதில் தளப் பெயருக்கு முன்னால் Kiss  என்ற சொல்லை இணைத்துப் பின் டவுண்லோட் செய்திடலாம். தள முகவரி www.kissyoutube.com
10. Video Getting  (வீடியோ கெட்டிங்): இந்த தளத்திலும் வீடியோ பைல் டவுண்லோட் செய்வதும், பார்மட் மாற்றுவதும் இணைந்து கிடைக்கிறது. இதிலும் யு–ட்யூப் வீடியோவினை ஒட்டி, பின்னர் எட்டு வெவ்வேறு வகையான பார்மட்டில் டவுண்லோட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. 
இந்த தளத்தின் முகவரி: http://www.videogetting.com/downloadyoutube.php

 


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

பறக்கும் மீன்களை பார்த்ததுண்டா?வீடியோ இணைப்பு

>> Sunday, December 26, 2010பறக்கும் புதிய வகை மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அதன் காணொளியை காணலாம்

StumbleUpon.com Read more...

கம்ப்யூட்டர் கேள்வி-பதில்

>> Friday, December 24, 2010


கேள்வி: என்னிடம் உள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எத்தனை பிட், 32/64 என எப்படிக் கண்டறிவது? சில அப்ளிகேஷன் புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து கொள்ள முயற்சிக்கையில் இந்த தகவல் தேவைப்படுகிறது. –சி.கே. ராஜகோபால், சென்னை
பதில்: நம் கம்ப்யூட்டரில் இயங்கும் சிஸ்டம் எத்தனை பிட் வேகம் கொண்டது என்று தெரிந்தால் தான், அதற்கேற்ப டிரைவர்கள் மற்றும் புரோகிராம்களை டவுண்லோட் செய்து பதிய முடியும். உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பி இருந்தால், விண்டோஸ் கீயையும், Pause  கீயையும் அழுத்துங்கள். இந்த கீ பிரிண்ட் ஸ்கிரீன் கீக்கு வலது பக்கத்தில் ஒரு கீ தள்ளி இருக்கும். இவற்றை அழுத்தியவுடன், எலக்ட்ரானிக் மேஜிக் காட்சி போல, சிஸ்டம் ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ எழுந்து வரும். இதில் ஆறு டேப்களில் பல செய்திகள் இருக்கும்.  இதில் ஜெனரல் டேப் தரும் விண்டோவில், உங்கள் சிஸ்டம் 64 பிட் எனக் காட்டப்படாவிட்டால் (காட்டப்படும் படத்தைப் பார்க்கவும்) உங்கள் சிஸ்டம் 32 பிட் எனப் பொருளாகிறது. 
விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள், அதே இரண்டு கீகளை அழுத்தவும். இங்கும் அதே விண்டோ கிடைக்கும். ஆனால் "System Type"  என்று தனியே ஒரு பீல்ட் காட்டப்பட்டு, அதில் உங்கள் சிஸ்டம் 32 அல்லது 64 பிட் எனக் காட்டப்படும். (படத்தைப் பார்க்கவும்)

கேள்வி: கூகுள் குரோம் பிரவுசர் மிக வேகமாக இயங்குவதாகச் சொன்னதனால், அதனை டவுண்லோட் செய்து சில நாட்களாகப் பயன்படுத்தி வருகிறேன். ஆனால் அதில் ஹோம் பட்டன் இல்லாததை இன்று கவனித்தேன். ஏன் இல்லை? எங்கு தவறு? எப்படி சரி செய்வது? –சி.மதியழகன்,  கோயமுத்தூர்.
பதில்: நான் சொல்லி டவுண்லோட் செய்தால், பிரச்னைக்கு நான் தான் பொறுப்பா!   சரி அப்படியே இருக்கட்டும். பயர்பாக்ஸ் மற்றும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர்களுடன் ஒப்பிடுகையில், ஹோம் ("home") பட்டன் இல்லாததை நாம் கவனிக்கலாம்.  குரோம் அப்படித்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹோம் பட்டனைக் கொண்டுவருவதும்  எளிதான வழிதான். முதலில் குரோம் பிரவுசரைத் திறந்து கொள்ளுங்கள்.  பின்னர், மேலாக வலது மூலையில் உள்ள பைப் ரிஞ்ச்  (Pipe Wrench)   ஐகான் மீது கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Optionsஎன்பதைக் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் ஹோம் பேஜில்,  Show Home button on the toolbar என்று இருப்பதன் எதிரே சிறிய டிக் அடையாளத்தினை ஏற்படுத்தவும். உடனே குரோம் பிரவுசர் பக்கத்தில் ஹோம் பட்டனைக் காணலாம். இனி கவலைப்படாமல் ஹோம் அழுத்தி மகிழுங்கள். 

கேள்வி:  என் நண்பர் ஒரு டாகுமெண்ட் பைல்  இமெயில் வழியே அனுப்பினார்.  அதனை வேர்ட் தொகுப்பில் திறக்க முடியவில்லை. நோட்பேடில் திறந்தால் படிக்க முடியாத குழப்பமான எழுத்துக்களில் டாகுமெண்ட் உள்ளது. ஏன் இந்த பிரச்னை? எக்ஸ்பி மற்றும் ஆபீஸ் 2003 பயன்படுத்துகிறேன்.  –டி. மாலதி, புதுச்சேரி.
பதில்: நீங்கள் முழுமையான தகவல் தரவில்லை. இமெயில் செக் செய்திடுகையில், உங்கள் இமெயில் கிளையண்ட் புரோகிராமில் வைத்து, அந்த பைலைப் படிக்க முயற்சி செய்திட வேண்டாம். ஏனென்றால், சில இமெயில் புரோகிராம்கள் தாங்கள் வைத்திருக்கும் புரோகிராமில் திறக்க முயற்சித்து முடியவில்லை என்ற செய்தியைத்தரும். எனவே தனியே காப்பி செய்து, கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம் மூலம் திறக்கவும். நீங்கள் அப்படித்தான் திறக்க முயற்சித்திருப்பீர்கள் என்று தெரிகிறது.  உங்களுக்கு வந்த பைல் வேர்ட் 2010 தொகுப்பில் உருவாக்கப்பட்டிருக்கலாம். அந்த பைலின் துணைப் பெயர்  docx  என  உள்ளதா என்று பார்க்கவும். இருந்தால் அதனை உருவாக்கியது வேர்ட் 2010 தான். இதனை வேர்ட் 2003ல் படிக்க முடியாது. வேர்ட் 2010 உள்ள கம்ப்யூட்டருக்கு இந்த பைலை மாற்றி, அதில் டாகுமெண்ட்டைத் திறந்து, பின்னர், Save As  வழியாக அதனை .doc  பார்மட்டில் பதிந்து, மீண்டும் உங்கள் கம்ப்யூட்டருக்கு மாற்றித் திறந்து பார்க்கலாம்.

கேள்வி: போல்டர் ஒன்றில் உள்ள பைல்களின் பெயர்கள் அனைத்தையும் வேறு பெயர்களில் மாற்ற வேண்டியதுள்ளது. இந்த தேவை அடிக்கடி ஏற்படுகிறது. ஒவ்வொன்றாக இதனை மாற்றி, என்டர் செய்து பின் அடுத்ததைத் தேர்ந்தெடுக்க நேரம் ஆகிறது. சுருக்கு வழிகள் உள்ளனவா? –கே. தினேஷ் ராகவன்,சென்னை.
பதில்:  சிறிய அளவில் நேரத்தையும், உழைப் பினையும் மிச்சப்படுத்தலாம். விண்டோஸ் எக்ஸ்புளோரரில், முதல் பைலைத் தேர்ந்தெடுத்து, எப்2 கீ அழுத்தி, பைலுக்கான புதிய பெயரைக் கொடுக்கவும். அதன் பின் வழக்கம்போல் என்டர் அழுத்தாமல், டேப் அழுத்தவும். விண்டோஸ் எக்ஸ்புளோரர், மாற்ற வேண்டிய பைல் பட்டியலில் அடுத்த பைலுக்கு உங்கள் கர்சரை எடுத்துச் செல்லும். தானாகவே பைலின் முழுப் பெயரையும் தேர்ந்தெடுக்கும். இதன் மூலம் நீங்கள் பேக் ஸ்பேஸ் அழுத்தாமல், பைலுக்குப் புதிய பெயர் வழங்கலாம். இப்படியே டேப் அழுத்தி, அடுத்த பைலுக்குச் சென்று பெயர் மாற்றிக் கொண்டே செல்லலாம். 

கேள்வி: வரும் ஆண்டில் கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறையில் என்ன என்ன மாற்றங்கள் உருவாகும்? –ஏ.கே. ஆப்ரஹாம், காரைக்கால்.
பதில்: ஒரு கட்டுரையில் எழுத வேண்டியதற்கான விஷயங்களைச் சின்ன கேள்வியில் கேட்டுவிட்டீர்கள். சுருக்கமாகத் தருகிறேன். கிளவ்ட் கம்ப்யூட்டிங் என்ற பயன்பாடு, நிறுவனங்களிடையே அதிகரிக்கும். குறிப்பாகத் தங்கள் நிறுவனத்தின் தகவல் தொழில் நுட்ப தேவைகளுக்குச் செலவினைக் கட்டுப்படுத்த விரும்பும் நிறுவனங்கள், இந்த தொழில் நுட்பத்தினை நாடும். இதனால், கிளவ்ட் கம்ப்யூட்டிங் பிரிவில் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகள் உருவாகும். கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை பெர்சனல் கம்ப்யூட்டர் பயன்பாடு குறையும். டேப்ளட் பிசி வேகமாகப் பரவத் தொடங்கும். லேப்டாப், நெட்புக், நோட்புக் கம்ப்யூட்டர் கள் விற்பனையும் பயன்பாடும் அதிகரிக்கும்.  பேஸ்புக் மற்றும் கூகுள் இடையே யார் அதிக வாடிக்கையாளர் களைக் கைப்பற்றுவது என்று போட்டி ஏற்படும். வாடிக்கையாளர் களுக்கு  நல்ல பயன்கள் இதனால் கிடைக்கும். மொபைல் போன் வழி பணப் பரிமாற்றம், தகவல் பரிமாற்றம் ஆகியன பெருகும். 3ஜி பயன்பாடு அடித்தட்டு மக்கள் வரை செல்லும். 3ஜி சேவைக் கட்டணமும், மொபைல் போன் விலையும் குறையும். 

கேள்வி: எக்ஸ்டர்னல் ட்ரைவ், யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவில் உள்ள பைல்களுக்கு கம்ப்யூட்டர் தானாக பேக் அப் பைல்களை உருவாக்காதா? –கா. வினோதினி, சென்னை.
பதில்: கம்ப்யூட்டரில் இணைக்கப்பட்டு எடுக்கப்படும் மெமரி சாதனங்களில் பதியப்படும் பைல்களுக்குச் சாதாரணமாக பேக் அப் பைல்கள் உருவாகாது. சில தர்ட் பார்ட்டி புரோகிராம்கள் மூலம், நாம் இதனை ஏற்படுத்தலாம்.  http://www.usbflashcopy. com/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் Usbflashcopy  என்ற புரோகிராம் இதற்கு உதவிடும். அடிப்படை பயன்பாட்டிற்கு இது இலவசமாகக் கிடைக்கிறது. கூடுதல் வசதிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த புரோகிராமினை இன்ஸ்டால் செய்து, யு.எஸ்.பி. பிளாஷ் ட்ரைவ் மட்டும் அல்லது மற்ற மெமரி ட்ரைவ்களுக்கும் சேர்த்து செட் செய்துவிடலாம். இது இயங்குகையில், தானாக, உங்கள் பிளாஷ் ட்ரைவில் உள்ள புரோகிராம் களுக்கான பேக் அப் பைல்களை, கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில் ஓர் இடத்தில் பத்திரமாகப் பதிந்து வைக்கும். அடுத்தடுத்த மீடியாவினை இணைக்கையில், தானாகவே ஒவ்வொரு மீடியாவிற்கும் ஒரு போல்டரை உருவாக்கிப் பைல்களைப் பதியும்.

கேள்வி: திருத்தங்கள் செய்வதற்காக எனக்குக் கிடைத்த பல பக்கங்கள் உள்ள டாகுமென்ட் ஒன்றில், பத்திகளுக்கிடையே இடைவெளி இடாமல் டைப் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் இடையே இடைவெளி அமைக்க ஏதேனும் ஷார்ட்கட் கீ உள்ளதா?  –என். முத்துக் குமார், சென்னை.
பதில்: டெக்ஸ்ட் முழுவதையும்  Ctrl+A  அழுத்தி  தேர்ந்தெடுங்கள். பின்னர் கீகளை  Ctrl+0 அழுத்துங்கள். இது பாராக்களுக்கிடையில் 12 பாய்ண்ட் வரி வெளி ஒன்றை ஏற்படுத்தும். இது ஒரு வரி இடைவெளிக்குச் சமமானதாகும்.

கேள்வி: வேர்டில் டேபிளில் உள்ள சில செல்களுக்கு மட்டும் பார்டர் தர விரும்புகிறேன். வழிகள் கூறவும். –க.அருண் பிரகாஷ், சென்னை.
பதில்: நாம் விரும்பும் செல்களுக்கு, அதில் உள்ள தகவல்களுக்கு ஏற்றபடி  சிலர் பார்டர் அமைத்து, அந்த தகவல்களை வேறுபடுத்திக் காட்ட விரும்புவார்கள். இதனை எளிதாக ஏற்படுத்தலாம்.
1. எந்த செல்லில் உள்ள டெக்ஸ்ட்டில் பார்டர் அமைக்க விரும்புகிறீர்களோ அங்கு கர்சரைக் கொண்டு சென்று வைக்கவும். டெக்ஸ்ட்டையோ அல்லது செல்லையோ தேர்ந்தெடுக்க வேண்டியதில்லை.  
2. Format  மெனுவில் Borders and Shading  என்ற பிரிவைத்  தேர்ந்தெடுக்கவும். Paragraph  குரூப்பில் Border tool  அருகே  கீழ் நோக்கி உள்ள அம்புக் குறியினைக் கிளிக் செய்திடவும். கீழ் விரியும் பாக்ஸில்  Borders and Shading  தேர்ந்தெடுக்கவும். இப்போது Borders and Shading  என்ற டயலாக் பாக்ஸை வேர்ட் காட்டும். 
3. டயலாக் பாக்ஸில் உள்ள கண்ட்ரோல் பயன்படுத்தி எந்த பார்டர் பயன்படுத்த வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் Apply To ட்ராப் டவுண் லிஸ்ட் பயன்படுத்திParagraph என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸ் மூடவும்
source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு சலுகை : ஜெ., அதிரடி

>> Thursday, December 23, 2010Hilarious political cartoon images
கன்னியாகுமரி : அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு அரசு சலுகை செய்து தரப்படும் என்ற அதிரடி அறிவிப்பை கட்சி பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தினக் கொண்டாட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது : தற்போது, அரசு சார்பில், இஸ்லாமியர்கள் மெக்காவிற்கு செல்ல சலுகை அளிப்பதுபோல், தாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜெருசலேம் செல்ல கிறிஸ்தவர்களுக்கு சலுகை அமைத்து கொடுப்போம் என்றும், இந்த மாவட்டத்தில், தனியார் நிலங்களில் கிறிஸ்தவ ஆலயங்களை அமைப்பதற்கு அனுமதி மறுப்பது குறித்து பரிசீலித்து இதற்கு தகுந்த தீர்வு காண்போம், கிறிஸ்தவ ஆலயங்களை அதிகளவில் இந்த மாவட்டத்தில் ஏற்படுத்துவோம், ஆதிதிராவிட கிறிஸ்தவர்களுக்கு, ஆதிதிராவிடர்களுக்கு உரிய சலுகைகள் மறுக்கப்படுவதாகவும், இந்த குறையை களைவதற்காகவே கமிஷன் ஒன்று செயல்பட்டு வந்தாலும், ஆனால் இதனால் முறையாக செயல்பட அதிகார வர்க்கத்தினர் அனுமதிப்பதில்லை என்றும், தாங்கள் இதற்கு தீர்வு கண்டு, ஆதிதிராவிட கிறிஸ்தவர்கள் வாழ்வில் ஒளியேற்ற பாடுபடுவோம் என்று அவர் கூறினார்.


source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஆணுக்கும்... பெண்ணுக்கும்...

>> Wednesday, December 22, 2010

             னித வாழ்க்கையில் ஆண், பெண் உறவு புனிதமானது.  அடுத்த சந்ததியினரை உருவாக்கும் செயல் என்பதால் இதை ஆன்மாவோடு இணைத்துக் கூறினார்கள் நம் முன்னோர்கள்.  இல்லற வாழ்க்கையிலே ஒரு மனிதன் திருப்தியாக வாழ முடியும் என்பதை தெளிவாக உணர்த்தவே கோவில்களில் சிற்பங்களைச் செதுக்கி வைத்துள்ளனர். காம சாஸ்திரம் என்ற நூலைப் படைத்து அதில் ஆண், பெண் உறவு குறித்து ஆரோக்கியமான கோட்பாடுகளை வகுத்துக் கொடுத்துள்ளனர்.

சித்தர்கள் மனிதன் ஆரோக்கியமாக வாழ பாலுணர்வு பற்றிய விழிப்புணர்வு தேவை என்பதை உணர்ந்து அதனை முறையாக மனிதனுக்குப் போதித்தனர்.

இல்லறமே நல்லறம் என்றார்கள் நம் முன்னோர்கள்.  ஆனால், ஆண், பெண் இணைவது ஒரு யோகமாகவே சித்தர்கள் சித்தரித்தனர்.  இதற்கு கால நேரம் கூறினார்கள்.  கணவன், மனைவி  எவ்வாறு  வாழ வேண்டும்   என்பதைக் கூறினர்.  அளவுக்கு மீறிய உறவால் மனிதன் அடையும் கீழ்நிலை பற்றியும் கூறியுள்ளனர்.

ஆண் பெண் உறவு பின் வந்த காலங்களில் இதன் வழிமுறை தெரியாமல் போய்விட்டது.  இதனால் பாலுணர்வு பற்றிய போதிய  விழிப்புணர்வு அறிய முடியாமல் போனது.  இந்நிலை தொடர்ந்ததால் சில சமூக விரோதிகள், ஆண் பெண் உறவு பற்றி முரணான தகவல்களைப் பரப்பி அவற்றை நூல்களாகவும், படங்களாகவும் வெளியிட்டு மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தினர்.

இதைக் காணும் இளம் பருவத்தினர் போதிய விழிப்புணர்வின்றி மனம் பேதலிக்கின்றனர்.  பெற்றோரின் அன்பும், அரவணைப்பும் இல்லாத குழந்தைகள், மன அழுத்தம் மிகுந்து வளர்ந்த குழந்தைகள், தாய் தந்தையரின் பொறுப்பில்லாத் தன்மையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் மனதில் இத்தகைய செய்திகள், முரண்பாடான எண்ணங்களைத் துளிர்க்கச் செய்துவிடுகிறது.  போதாக்குறைக்கு மீடியாக்களின் கவர்ச்சிகள், அவற்றில் வரும் விளம்பரங்கள் அனைத்து வயதினரையும் ஏகமாகக் குழப்பி விடுகின்றன.  இதனால் சாதாரண மனிதன் கூட தன்னை சோதித்துக்கொள்ள வடிகால் தேடுகிறான்.

அங்கேயிருந்துதான் ஆபத்து ஆரம்பமாகிறது.  இந்த வடிகால் திசைமாறும்போது கள்ளக்காதல், கல்யாணத்துக்கு முன் கர்ப்பம் என பல வகைகளில் பாதிப்பை ஏற்படுத்தி சில நேரங்களில் கொலை, தற்கொலை என உயிரிழப்பை ஏற்படுத்துகிறது.  இன்று நாளிதழ்களில் இவை அன்றாட செய்திகளாக இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன.

இந்தியாவில் ஒவ்வொரு நிமிடமும் 15 குழந்தைகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவதாக அண்மைச் செய்திகள், ஏடுகள் தெரிவிக்கின்றன. 

கட்டுக்கோப்பு மிகுந்த குடும்ப அமைப்பு, பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றிற்குப் பெயர் போன இந்தியாவில் இன்று  கோடிகளைத் தொடும் அளவுக்கு எய்ட்ஸ் நோயாளிகள்.  

ஏன் இந்த அவல நிலை?

சற்று அலசி ஆரோய்ந்தோமானால், கண்கவரும் விளம்பரம் செய்து, மக்கள் மனதைக் குழப்பும் போலிகளும், உணர்ச்சிகளைத் தூண்டும் வகையில் ஒலிபரப்பும் ஊடகங்களும், பாலுணர்வையே முதன்மையான வியாபார யுக்தியாகக் கொண்டு செயல்படும் பத்திரிகைகளும், ஒருசில மருத்துவர்களுமே முக்கிய காரணமாக இருக்கின்றனர்.

தற்போதைய காலகட்டங்களில்  தேவையற்ற விளம்பரங்களையும், தவறுதலான வழி முறைகளையும் பின்பற்றி புனிதமான ஆண்பெண் உறவுகளை கொச்சைப்படுத்தி தீய எண்ணங்களை உருவாக்கி தன்னுடைய வாழ்நாட்களை வீணடித்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய  இளைஞர்கள்.

இவர்களுக்கு பித்தம் பேதலித்து, அறிவிழந்து ஆன்ம பலனையும், ஆண்மை பலத்தையும் இழந்து வாழும் கலைகளை மறந்து திசைமாறி கலியுக வாழ்க்கையில் சுழல்கின்றனர்.  இவர்கள் வாழ்நாள் முழுவதும் வாழவேண்டிய வழிமுறைகளை மறந்து குறுகிய காலத்தில் அறிவு, ஆற்றல், மாபெரும் சக்தியை இழந்து மதிமயங்கி வாழ்நாளைக் குறைத்துக்கொள்கின்றனர்.  வாழ்க்கையின் உண்மை நிலை, வாழ்க்கை நெறிமுறை, சித்தர்களின் கோட்பாடு, முதியவர்களின் அறிவுரை, பெற்றோர்களின் ஆசியுறை, இவைகளை பின்பற்றாத வாழ்க்கை எந்த ஒரு மானிடருக்கும்  வாழ்நாள் முழுமைக்கும் மகிழ்ச்சிகரமாக இருக்காது என்பது சித்தர்களின் கூற்று.  சித்தர்களின் வழி முறையைப் பின்பற்றுவதே சாலச் சிறந்தது

source:nakkheeran

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

சமையல்:மார்கழி பலகாரங்கள்....

பால் பாயசம்

தேவையானவை: பாசுமதி அரிசி - ஒரு கைப்பிடி, பால் - இரண்டு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு - 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: பாசுமதி அரிசியை ரவை போல உடைத்து, பால் சேர்த்துக் குழைவாக வேகவிடவும். அரிசி நன்றாக வெந்ததும், சர்க்கரை சேர்த்து... வறுத்த முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் போட்டு இறக்கவும்.
குறிப்பு: சாதாரண அரிசியைவிட, பாசுமதி அரிசியில் செய்தால் டேஸ்ட் அருமையாக இருக்கும்.
அவல் பாயசம்  
தேவையானவை: அவல் - ஒரு கப், பால் - அரை லிட்டர் (காய்ச்சி, ஆற வைக்கவும்), சர்க்கரை - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரி - 10, நெய் - 2 டீஸ்பூன்.
செய்முறை: நெய் விட்டு அவலை லேசாக சிவக்க வறுத்து, ரவை போல பொடித்துக் கொள்ளவும். ஒரு கப் தண்ணீரை கொதிக்கவிடவும். கொதிக்கும் நீரில் அவலைத் தூவி, கிளறி வேகவிடவும். வெந்ததும் பாலை சேர்த்துக் கிளறி, சர்க்கரை சேர்த்து ஐந்து நிமிடம் கலக்கி... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கவும்
ஜவ்வரிசி பாயசம்

தேவையானவை: ஜவ்வரிசி - 100 கிராம், பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - 200 கிராம், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, கேசரி பவுடர் - சிறிதளவு.
செய்முறை: ஜவ்வரிசியை லேசாக வறுக்கவும். இதில் பாலை ஊற்றி வேகவிடவும். நன்றாக வெந்ததும் இறக்கி, சர்க்கரை சேர்க்கவும். வறுத்த முந்திரிப்பருப்பு, கேசரி பவுடர், ஏலக்காய்த்தூள் போட்டு நன்றாகக் கலக்கவும்.
தேங்காய்அரிசி பாயசம்

தேவையானவை: அரிசி - அரை கப், தேங்காய் துருவல் - ஒன்றரை கப், பொடித்த வெல்லம் - 2 கப், ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - சிறிதளவு, பால் - அரை லிட்டர்.
செய்முறை: அரிசியை 10 நிமிடம் ஊற வைத்து, தேங்காய் துருவல் சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக அரைக்கவும். பாலைக் காய்ச்சி, ஆற வைக்கவும். அரைத்ததை சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து அடுப்பில் வைத்து பத்து நிமிடம் வரை கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாக வெந்ததும், வெல்லம் சேர்த்துக் கொதிக்க வைத்து... வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், காய்ச்சிய பால் சேர்த்துக் கலந்து இறக்கவும்.
குறிப்பு: தேங்காயை மெல்லிய துண்டுகளாக நறுக்கி நெய்யில் வறுத்துப் போடலாம். வாழைப்பழம், பலாச்சுளையை பொடியாக நறுக்கிப் போடலாம். பாலுக்குப் பதிலாக தேங்காய்ப்பால் சேர்த்தால் சுவை கூடும்.
பைனாப்பிள்|பருப்பு பாயசம்

தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், பைனாப்பிள் - 2, வெல்லம் - கால் கிலோ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, பால் - 1 லிட்டர் (காய்ச்சி ஆற வைக்கவும்).
செய்முறை: பாசிப்பருப்பையும், கடலைப்பருப்பையும் வெறும் கடாயில் போட்டு பொன்னிறமாக வறுத்து, குழைவாக வேகவிடவும். வெந்த பருப்புகளுடன் வெல்லம் சேர்த்துக் கலந்து, கொதிக்க வைத்து இறக்கி... ஏலக்காய்த்தூள், முந்திரிப்பருப்பு சேர்க்கவும். காய்ச்சிய பாலை இதில் விட்டுக் கலந்து, சாப்பிடுவதற்கு முன்பு பைனாப்பிளை சிறு துண்டுகளாக நறுக்கி மேலே போடவும்.
குறிப்பு: பருப்பு, பால், பைனாப்பிள் என மணமும், ருசியும் வித்தியாசமாக இருக்கும் இந்தப் பாயசம். விருப்பப்பட்டால், சிறிது பாதாம், முந்திரியை அரைத்துச் சேர்க்கலாம்.
மசால் வடை

தேவையானவை: பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், உளுத்தம்பருப்பு - 200 கிராம், இஞ்சி - ஒரு சிறு துண்டு (தோல் சீவி நறுக்கவும்), பச்சை மிளகாய் - 4, மிளகு - 10, பூண்டு - 4 பல், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடிகட்டவும். இதில் உப்பு, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு சேர்த்து கெட்டியாக அரைத்து, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இதற்கு சட்னி (அ) சாம்பார் பிரமாதமாக இருக்கும். மணக்கும் இந்த வடை, மழைக்காலத்துக்கு ஏற்ப மொறுமொறுவென்று இருக்கும்.
வெஜிடபிள் வடை
தேவையானவை: வெள்ளை உளுத்தம்பருப்பு - கால் கிலோ, பொடியாக நறுக்கிய கோஸ், வெங்காயம், துருவிய கேரட் - தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் - 4, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து, களைந்து. தண்ணீரை வடிகட்டி... இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து அரைக்கவும். இதில் உப்பு, நறுக்கிய வெங்காயம், கோஸ், கேரட் துருவல், கறிவேப்பிலை சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைககளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: சட்னி, சாஸ் இதற்கு சிறந்த காம்பினேஷன். கீரையைப் பொடியாக நறுக்கி மாவில் போட்டும் செய்யலாம்.
மிளகு வடை

தேவையானவை: உளுத்தம்பருப்பு - கால் கிலோ, மிளகு - 15, காய்ந்த மிளகாய் - இரண்டு, இஞ்சி - சிறிய துண்டு, பெருங்காயத்தூள் - சிறிதளவு,  எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: அரை மணி நேரம் உளுத்தம்பருப்பை ஊற வைக்கவும். பிறகு களைந்து, தண்ணீரை வடிகட்டி... மிளகு, இஞ்சி, காய்ந்த மிளகாய் சேர்த்துக் கெட்டியாக அரைக்கவும். இதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பிசைந்த மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: மிளகு, இஞ்சி வாசனையுடன் மிகவும் ருசியாக இருக்கும். எளிதில் ஜீரணமும் ஆகும்.
 தானியம்-பருப்பு வடை

தேவையானவை: முளைகட்டிய கொள்ளு, முளைகட்டிய பாசிப்பயறு, முளைகட்டிய சோளம், துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா ஒரு கப், பூண்டுப்பல் - 4, இஞ்சி - சிறிய துண்டு, காய்ந்த மிளகாய் - 2, மிளகு - 10, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, பொடியாக நறுக்கிய வெங்காயம் - ஒரு கப், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு இரண்டையும் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தண்ணீரை வடிகட்டவும். இதனுடன் சோளம், கொள்ளு, பாசிப்பயறு சேர்த்து... பூண்டு, காய்ந்த மிளகாய், இஞ்சி, மிளகு போட்டு கெட்டியாக அரைக்கவும். உப்பு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.
குறிப்பு: புரதச்சத்து நிறைந்த வடை இது. இந்த மாவை சிறு உருண்டையாக உருட்டி, வேக வைத்து குழம்பும் தயாரிக்கலாம். சிறிய குணுக்குகளாகவும் உருட்டிப் போட்டு பொரித்து சாப்பிடலாம்.
வாழைப்பூ வடை

தேவையானவை: ஆய்ந்து நறுக்கிய வாழைப்பூ - இரண்டு கைப்பிடி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு - ஒரு கப், உளுத்தம்பருப்பு - கால் கப், காய்ந்த மிளகாய் - 4, இஞ்சி - ஒரு துண்டு, மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை: துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மூன்றையும் சேர்த்து ஊற வைத்து, தண்ணீரை வடிகட்டி, காய்ந்த மிளகாய், இஞ்சி போட்டு கெட்டியாக அரைக்கவும். சிறிது எண்ணெயில் வாழைப்பூவை வதக்கி, அரைத்த மாவில் போட்டு... உப்பு, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் சேர்த்துப் பிசையவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் மாவை வடைகளாக தட்டிப் போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்பு: இது லேசான துவர்ப்புச் சுவையில் இருப்பதால், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்லது. இதே முறையில் வாழைத்தண்டை சேர்த்தும் செய்யலாம்.
கல்கண்டு பொங்கல்
தேவையானவை: அரிசி - கால் கிலோ, கல்கண்டு - அரை கிலோ, பால் - ஒரு லிட்டர், ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ - சிறிதளவு, முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தலா 10, நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: அரிசியுடன் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். நன்றாகக் குழைந்து இருக்க வேண்டும். இதனுடன் கல்கண்டு சேர்த்து மசிக்கவும். சூட்டில் கல்கண்டு கரைந்து விடும். முந்திரி, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ போட்டுக் கலக்கவும்.
குறிப்பு: பாலும் கல்கண்டும் சேர்ந்த இந்தப் பொங்கலுக்கு உளுந்து வடை வித்தியாசமான காம்பினேஷன்.
ரவா பொங்கல்
தேவையானவை: ரவை - கால் கிலோ, முந்திரிப்பருப்பு, மிளகு - தலா 10, நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய இஞ்சி, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
செய்முறை: ரவையை நெய்யில் பொன்னிறமாக வறுக்கவும். மிளகு, சீரகத்தைப் பொடிக்கவும். ரவையின் அளவில் நான்கு மடங்கு தண்ணீர் எடுத்து, நன்றாகக் காய்ச்சி, கொதிக்க விட்டு... அதில் ரவையைப் போட்டுக் கிளறி, உப்பு போட்டு வேகவிடவும். நெய்யில் முந்திரிப்பருப்பு, பொடித்த மிளகு-சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை இவற்றை தனித்தனியே வறுத்து, எல்லாவற்றையும் வெந்த பொங்கலில் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: இதற்கு வெங்காய சட்னி சூப்பர் சைட் டிஷ்! கோதுமை ரவையிலும் இதேபோல் பொங்கல் செய்யலாம்.
வெண் பொங்கல்
தேவையானவை: பச்சரிசி - கால் கிலோ, பாசிப்பருப்பு - ஒரு கப், நெய் - ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், பொடித்த மிளகு - சீரகம் - 4 டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, முந்திரிப்பருப்பு - 10,  உப்பு - தேவையான அளவு.
செய்முறை: வெறும் கடாயில் அரிசியைப் போட்டு லேசாக சூடு வரும் வரை வறுக்கவும். பாசிப்பருப்பையும் சிவக்க வறுக்கவும். அரிசியும் பருப்பும் கலந்து, மஞ்சள்தூள் சேர்த்து, ஒரு மடங்குக்கு 4 மடங்கு தண்ணீர் விட்டு குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். பொடித்த மிளகு, சீரகத்தை நெய்யில் வறுத்து, வெந்த பொங்கலில் சேர்க்கவும். கறிவேப்பிலை, முந்திரிப்பருப்பையும் நெய்யில் வறுத்துப் போடவும். உப்பு சேர்த்து, நன்றாக மசித்து, மேலாக நெய் விட்டுக் கலக்கவும்.
குறிப்பு: இதற்கு தொட்டுக் கொள்ள தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
 பால் பொங்கல்
தேவையானவை: அரிசி - கால் கிலோ, பால் - ஒரு லிட்டர், சர்க்கரை - அரை கிலோ, குங்குமப்பூ, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு, வறுத்த முந்திரிப்பருப்பு - 10, நெய் - 4 டீஸ்பூன்.
செய்முறை: அரிசியை அரை லிட்டர் பால் சேர்த்து குக்கரில் வைத்து, ஐந்து விசில் வந்ததும் இறக்கவும். மீதமுள்ள பாலை நன்றாகக் காய்ச்சி வேக வைத்த சாதத்தில் விட்டு மசித்து, சர்க்கரை சேர்த்து நன்றாக மசித்து, அடுப்பில் வைத்துக் கிளறவும். இதில் வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டுக் கலக்கி, குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.
குறிப்பு: அரிசியை ரவை போல உடைத்து வேக வைத்தால் சீக்கிரம் குழையும். குழந்தைகளுக்குப் பிடித்த பழங்களை சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு கொடுக்கலாம். பாலுடன் பழங்களும் சேரும்போது, ருசி அபாரமாக இருக்கும்.
சர்க்கரைப் பொங்கல்
தேவையானவை: அரிசி, பாகு வெல்லம் - தலா கால் கிலோ, பால் - 2 கப், நெய் - 100 கிராம், முந்திரிப்பருப்பு, காய்ந்த திராட்சை - தலா 10, ஏலக்காய்த்தூள் - சிறிதளவு.
செய்முறை: அரிசியுடன் பாலும், தண்ணீரும் கலந்து சேர்த்து (அரிசி அளவில் நான்கு மடங்கு இருக்க வேண்டும்), குக்கரில் வைத்து, ஆறு விசில் வந்ததும் இறக்கவும். வெல்லத்தை நன்றாகப் பொடித்து தண்ணீர் விட்டுக் கரைத்து வடிகட்டி பாகு காய்ச்சவும். பாகு கெட்டியானதும் வேக வைத்த சாதத்தை நன்றாக மசித்துக் கலக்கவும். முந்திரிப்பருப்பு, திராட்சையை நெய்யில் வறுத்து சேர்க்கவும். ஏலக்காய்த்தூள் போட்டு, நெய் விட்டு நன்றாகக் கலக்கவும்.
குறிப்பு: சர்க்கரைப் பொங்கலுடன் சிறு வாழைப் பழத்துண்டுகள், பொடியாக நறுக்கிய பலாச்சுளை ஆகியவற்றை சேர்த்தும் சாப்பிடலாம்.


source:vikatan--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

ஆறு நாட்களில் அதிசயம்..! (வீடியோ இணைப்பு)

>> Tuesday, December 21, 2010


மனித உழைப்பும், விடாமுயற்சியும், தொழில்நுட்பமும் சேர்ந்தால் அனைத்தும் சாத்தியமாகும் என்பதை சீனர்கள் நீரூபித்துள்ளனர்.

ஆம்! 16 மாடிகளைக்கொண்ட விடுதியொன்றினை அவர்கள் வெறும் 6 நாட்களில் நிர்மாணித்துள்ளனர். சீனாவின் ஹுனான் மாகாணத்திலேயே இவ்விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

136 மணித்தியாலங்களில் நிர்மாணித்துமுடிக்கப்பட்ட அவ்விடுதியை நீங்களும் பாருங்கள்.

StumbleUpon.com Read more...

சச்சினுக்கு பாரத ரத்னா விருது!

>> Monday, December 20, 2010

சச்சினுக்கு பாரத ரத்னா விருது! *சாதனை வீரருக்கு பாராட்டு மழை

புதுடில்லி: டெஸ்ட் அரங்கில் 50வது சதம் அடித்து வரலாறு படைத்த சச்சினுக்கு பாராட்டு மழை குவிகிறது. இவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டுமென இந்திய ஒலிம்பிக் சங்க துணை தலைவர் வி.கே.மல்கோத்ரா கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியா, தென் ஆப்ரிக்கா அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்தது. இப்போட்டியின் 2 வது இன்னிங்சில் சச்சின் (111*) சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 50 சதம் அடித்த உலகின் முதல் வீரர் என்ற சாதனை படைத்தார். புதிய சாதனை படைத்த சச்சினுக்கு கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
வி.கே. மல்கோத்ரா(ஒலிம்பிக் சங்க துணை தலைவர்):
 டெஸ்டில் 50வது சதத்தை எட்டிய சச்சின் மகத்தான சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் தனக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த தேசத்துக்கே பெருமை சேர்த்துள்ளார். இந்தியாவின் மிகச் சிறந்த விளையாட்டு நட்சத்திரமாக திகழ்கிறார். இந்த நேரத்தில் அவருக்கு நாட்டின் மிக உயர்ந்த பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். நாட்டுக்காக இன்னும் பல ஆண்டுகள் விளையாட காத்திருக்கிறார். இது வரை இவர் உலக கோப்பை மட்டும் வெல்லவில்லை. அதனையும் வென்று சாதிப்பார் என நம்புகிறேன்.
தோனி (இந்திய கேப்டன்):
டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை பாராட்ட வார்த்தைகள் போதாது. நான் கடந்த 2004ம் ஆண்டு இந்திய அணியில் காலடி வைத்தேன். அது முதல் அவருடன் வலைப்பயிற்சியில் பங்கேற்று வருகிறேன். ஆரம்ப காலத்தில் அவர் எப்படி முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டாரோ, அப்படியே தான் கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார். 21 ஆண்டுகளாக கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஈடுபாடு, இன்னும் குறையவில்லை. இது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது.
ரசித் லத்தீப் (முன்னாள் பாக்., வீரர்):
கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த வீரராக தன்னை நிரூபித்துள்ளார் சச்சின். கிரிக்கெட்டுக்காக தன்னை அர்ப்பணித்துள்ள சச்சினின் ரன் தாகம் இன்னும் குறையவில்லை. கடந்த 21 ஆண்டுகளாக கிரிக்கெட் அரங்கில் சாதித்து வரும் சச்சின், ஒரு சகாப்தம்.
மியான்தத் (முன்னாள் பாக்., வீரர்):
டெஸ்ட் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் சாதனை வீரராக வலம் வருகிறார் சச்சின். ஒரு சிலரால் மட்டுமே நீண்ட காலம் கிரிக்கெட்டில் விளையாட முடியும். அவரது சாதனைகளை தகர்ப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று.
மொயின் கான் (முன்னாள் பாக்., வீரர்):
தற்காலத்து இளம் வீரர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு ஜொலிக்கிறார் சச்சின். சாதிப்பதற்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார். வயது பல கடந்தாலும், கிரிக்கெட் மீது அவர் கொண்ட ஈர்ப்பு இன்னும் குறையவில்லை.
அச்ரேக்கர் ( சச்சினின் இளமை கால பயிற்சியாளர்):
சச்சினின் சாதனை குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். அவரது பயிற்சியாளர் என்ற முறையில், எனக்கு மட்டும் இது பெருமை அல்ல. இந்தியாவுக்கே பெருமை. சச்சினின் சாதனையை யாராலும் தகர்க்க முடியாது. அடுத்த ஆண்டு நடக்க உள்ள உலககோப்பையை, சச்சின் பெற்றுத் தர வேண்டும் என்பதே எனது விருப்பம். சச்சின் எனது விருப்பத்தை நிறைவேற்றுவார் என எதிர்பார்க்கிறேன்.

பிராட்மேனை முந்துகிறார்
டெஸ்ட் அரங்கில் சிறந்த வீரர் சச்சினா அல்லது பிராட்மேனா என்ற வாதம் மீண்டும் எழுந்துள்ளது. இது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் "சிட்னி மார்னிங் ஹெரால்டு' பத்திரிகை "இன்டர்நெட்' மூலம் கருத்து கணிப்பு நடத்துகிறது. இதில் சச்சின் 63 சதவீத ஓட்டுகளுடன் முன்னிலையில் உள்ளார். பிராட்மேன் 37 சதவீத ஓட்டுகள் மட்டுமே பெற்றுள்ளார். ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிராட்மேன் 52 டெஸ்ட் போட்டியில் 29 சதம் உட்பட 6996 ரன் (99.94 சராசரி) எடுத்துள்ளார். சச்சின் 175 போட்டியில் 50 சதம் உட்பட 14513 ரன்(56.91 சராசரி) எடுத்துள்ளார்.


source:dinamalar


--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

வேர்ட் - சின்ன சின்ன விஷயங்கள்நாம் அன்றாடம் பயன்படுத்தும் வேர்ட் தொகுப்பு சார்ந்த சின்ன சின்ன தகவல்கள் இங்கு தரப்படுகின்றன. உங்கள் நினைவை ரெப்ரெஷ் செய்து கொள்வதற்காக. தெரிந்ததுதானே என்று ஒதுக்க வேண்டாம்.  வேர்ட் தொகுப்பைத் திறந்தவுடன் உங்களுக்கு, அதன் மெனு மற்றும் டூல்பார்கள் அமைந்திருக்கும் விதம் பிடிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள்; உங்கள் விருப்பப்படி மாற்றிவிடலாம்.  எந்த டூல் பாரின் இடத்தை மாற்ற விரும்புகிறீர்களோ, அந்த டூல்பாரின் ஓரத்தில் மவுஸின் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். கர்சர்  நான்கு கால்கள் கொண்ட ஒரு அடையாளமாக மாறும். அப்படியே அழுத்தி இழுத்து, எங்கே இருக்க வேண்டுமோ அங்கே விட்டுவிடவும்.  மெனுபாரில், நிறைய பட்டன்கள் உள்ளன. சிலவற்றைப் பார்த்தவுடன் அவை எதனைக் குறிக்கின்றன என்று தெரியும். ஆனால் பல பட்டன்கள் எதற்காக என்று தெரிவதில்லை. இவற்றின் பெயர் மற்றும் பயன்பாடு அறிய,  மவுஸின் கர்சரை இந்த பட்டன் அருகே கொண்டு செல்லுங்கள். உடனே அந்த பட்டனின் பெயர் தெரியும்.
டாகுமெண்ட்டில் ரூலர் இல்லையா? ரூலரைக் கொண்டு வரவும் மறைக்கவும் View  மெனு சென்று Ruler   என்பதில் கிளிக் செய்திடுங்கள்.  
டாகுமென்ட் அமைக்க,புதிய பைலாக   காலியாக உள்ள பக்கம் ஒன்றைத் திறந்தவுடன் அதில் தரப்பட்டிருக்கும் மார்ஜின் உங்களுக்குப் பிடிக்கவில்லையா?  அதனை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களா? அப்படி யானால் File  மெனுவில் Page Setup  செல்லவும். அங்கு Margins   டேப்பில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் மார்ஜின் வெளியைக் கூட்டவும் குறைக்கவும் வசதிகள் தரப்பட்டிருக்கும். மாற்றிக் கொள்ளலாம். காலியாக இருக்கும் போதுதான் மாற்ற வேண்டும் என்பதில்லை. டாகுமெண்ட் உருவானபின்னும் மேலே சொன்ன வழியில் மாற்றலாம். மாற்றுவதற்கேற்ப உங்கள் டாகுமெண்ட் தோற்றமும் மாறும். நீங்கள் மாற்றிக் கொள்ளும் மார்ஜின் நீங்கள் உருவாக்கும் அனைத்து டாகுமென்ட்களிலும் வர வேண்டும் எனத்திட்டமிட்டால் மார்ஜின் செட் செய்த பின்னர் Default  என்பதில் கிளிக் செய்திடுங்கள். இதனை அழுத்தும்போது வேர்ட் உங்கள் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப்படுவதால் உங்கள் டாகுமென்ட் அனைத்தும் மாற்றம் பெரும் என்ற எச்சரிக்கைச் செய்தியினைத் தரும். ஏற்றுக் கொள்ளுங்கள்.
வேர்ட் திறந்தவுடன் கிடைக்கும் எழுத்து வகை (பொதுவாக டைம்ஸ் நியூ ரோமன்  என்ற எழுத்துதான் இருக்கும்.) உங்களுக்குப் பிடிக்கவில்லையா? நீங்கள் எப்போதும் ஏரியல் அல்லது வெர்டனா அல்லது முற்றிலும் வேறாக ஒரு தமிழ் எழுத்து வகையினை தொடக்க எழுத்தாக வைத்துக் கொள்ள திட்டமிட்டால் கீழே குறித்துள்ள படி செயல்படவும். Format மெனுவில் இருந்து Font  என்பதை செலக்ட் செய்திடவும். நீங்கள் பிரியப்படும் எழுத்துவகையைத் தேர்ந்தெடுக்கவும். தமிழ் பாண்ட் ஆக இருந்தாலும் தேர்ந்தெடுக்கவும். மேலும் அதன் சைஸ், தடிமனாக அல்லது சாய்வாக மற்றும் பிற பண்புகளைத் தேர்ந்தெடுத்தபின்    Default  என்பதைத் தேர்ந்தெடுங்கள். இதனை அழுத்தும்போது வேர்ட் உங்கள் நார்மல் டெம்ப்ளேட் மாற்றப்படுவதால் உங்கள் டாகுமென்ட் அனைத்தும் மாற்றம் பெரும் என்ற எச்சரிக்கைச் செய்தி யினைத் தரும். கவலைப்படாமல் ஓகே கிளிக் செய்து வெளியேறுங் கள். இனி நீங்கள் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்க  புதிய பக்கத்தினைத் திறக்கையில், அது நீங்கள் தேர்ந்தெடுத்த எழுத்து வகையுடன் தான் திறக்கப்படும்

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

கம்ப்யூட்ட கேள்வி - பதில்

>> Sunday, December 19, 2010


கேள்வி: எப்படியும் மாதம் ஒருமுறை ஏதேனும் ஒரு இமெயிலில், அதனைப் பார்வேர்ட் செய்தால், பணம், அதுவும் டாலராகக் கிடைக்கும் என்று செய்தி வருகிறது. இதனை நம்பலாமா? பெரும்பாலும் மத சம்பந்தப்பட்டது மற்றும் பரிதாபத்தைத் தூண்டுவதாக உள்ளது. பணம் எப்படி நமக்குக் கிடைக்கும்?   -கே. தேவசேனா, திருத்தணி
பதில்:  முதலில் நம் உழைப்பு எதுவுமின்றி நமக்குப் பணம் கிடைக்காது என்ற எண்ணத்தினை வளர்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம், நம்மை எதிலாவது சிக்க வைக்கும் முயற்சிகளே. வெளிநாட்டுப் பணம் என்றவுடன் இது உண்மையாகத்தான் இருக்கும் என்றெல்லாம் எண்ண வேண்டாம். சிறுவன் ஒருவன் புற்றுநோயில் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், அந்த மெயிலை அனுப்பினால், பணம் கிடைக்கும்  அல்லது மைக்ரோசாப்ட் அல்லது கூகுள் நிறுவனம் நோய்க்கான வைத்திய செலவினை ஏற்றுக் கொள்ளும் என்றும் கடிதம் வரும். நீங்களே யோசித்துப் பாருங்கள். எத்தனை பேர் மெயிலைக் கண்டுபிடிக்க முடியும்? பின்னர் அவர்களின் பேங்க் அக்கவுண்ட் அல்லது முகவரி எப்படி கிடைக்கும்?  இந்தச் சிக்கலில் சிக்கினால், சில வேளைகளில் உங்கள் பெர்சனல் பேங்க் தகவல்கள் திருடப்பட்டு, உங்கள் பணம் திருடப்படும். எனவே இவற்றைப் பார்த்தவுடனேயே அழித்துவிடுங்கள். ட்ரேஷ் பாக்ஸில் கூட இருக்க வேண்டாம்.   

கேள்வி:  கேமராவின் திறனை எப்போதும் மெகா பிக்ஸெல் என்று சொல்கிறீர்கள். இது என்ன அளவு? எப்படித் தெரிந்து கொள்வது? சற்று விளக்கவும்.    –மெ. கார்த்திகேயன், காரைக்கால்
பதில்: அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல். ஏனென்றால், கேமரா மட்டுமின்றி, மொபைல் போனில் உள்ள கேமரா குறித்தும் பேசப்படுகையில் இந்த மெகா பிக்ஸெல் அளவு சொல்லப்படுகிறது. இங்கு இதனைக் காணலாம். 
கீழே குறிப்பிட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. சில நிறுவனங்கள் தயாரிக்கும் கேமராக்களில் இது சிறிய அளவில் அதிகமாகவோ, குறைவாகவோ இருக்கும்.
2 மெகாபிக்ஸெல்ஸ்: 1600 x 1200
3 மெகாபிக்ஸெல்ஸ்: 2048 x 1536
4 மெகாபிக்ஸெல்ஸ்: 2274 x 1704
5 மெகாபிக்ஸெல்ஸ்: 2560 x 1920
6 மெகாபிக்ஸெல்ஸ்: 2816 x 2112  
7 மெகாபிக்ஸெல்ஸ்: 3072  2304
8 மெகாபிக்ஸெல்ஸ்: 3264 x 2468

கேள்வி: ஐ.எஸ்.ஓ. இமேஜ் கட்டாயம் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டுமா? ஒவ்வொரு முறை சிடி அல்லது டிவிடி எழுதுகையில் இந்தக் கேள்வி கம்ப்யூட்டரில் வருகிறது. எனக்குச் சொல்லிக் கொடுத்தவர், இதனை அலட்சியப்படுத்தி விடுங்கள் என்றார். அலட்சியப்படுத்தலாம் என்றால் ஏன் இது ஒவ்வொரு முறையும் கேட்கப்படுகிறது?  –டி.கே. உமையாள், கே.புதூர், மதுரை.
பதில்: உங்கள் நீண்ட கடிதத்தில் இருந்து, இந்த சந்தேகம் குறித்து பல நாட்கள் சிந்தித்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது. பல வாசகர்கள் இது குறித்துக் கேட்டுள்ளனர். இதோ அது என்னவென்று பார்ப்போம்.
ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஐ.எஸ்.ஓ. என்ற துணைப் பெயர் கொண்ட  பைலைக் (.iso) குறிக்கிறது. 
நாம் தயாரிக்கும் சிடி அல்லது டிவிடியின் டிஸ்க் இமேஜ்  அல்லது ஆப்டிகல் இமேஜ் என்பதற்கான இன்னொரு பெயர் தான் ஐ.எஸ்.ஓ. இமேஜ். ஏற்கனவே உள்ள பைல்களுக்கான இமேஜ்தான் இது. அதனால் தான் சிடி மற்றும் டிவிடி பர்னிங் உடன் இது இணைந்து பேசப்படுகிறது. ஐ.எஸ்.ஓ. பைல் இதற்கான ஸ்பெஷல் சாப்ட்வேர் மூலம் சிடியில் உள்ள பைல்கள் அனைத்திற்குமான காப்பி ஆக உருவாக்கப்படுகிறது. இதன் மூலம் சிடியில் உள்ள பைல்களை எடிட் செய்திடலாம். எனவே மியூசிக் அல்லது டேட்டா சிடி ஒன்றை நீங்கள் உருவாக்குகையில் அதற்கான ஐ.எஸ்.ஓ. இமேஜ் ஒன்றும் உருவாக்கப்படுகிறது. மியூசிக் மட்டுமின்றி சிடியில் என்ன தகவல்களை எழுதினாலும் அந்த பைல்களுடன் கூடிய சிடியின் ஐ.எஸ்.ஓ. இமேஜ்  பைலும் உருவாக்கப்படுகிறது. இதனை எந்த பர்னிங் சாப்ட்வேர் தொகுப்பின் மூலமும் உருவாக்கலாம். இதற்கான பர்னிங் சாப்ட்வேர் கம்ப்யூட்டருடனேயே கொடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது சிடி டிரைவ் வாங்குகையில் தரப்பட்டிருக்கலாம். அல்லது நீங்களே தேர்ட் பார்ட்டி சாப்ட்வேர் எதனையாவது வாங்கியிருக்கலாம்; அல்லது டவுண்லோட் செய்திருக்கலாம். எந்த வகை சாப்ட்வேர் புரோகிராம் என்றாலும் அதன் மூலம் நிச்சயம் ஐ.எஸ்.ஓ. பைல் கிடைக்கும். இது தேவையா என்றால், அது நம் விருப்பத்தைப் பொறுத்தது. ஹார்ட் டிஸ்க்கில் இடம் இருந்தால், அதற்கென ஒரு பெயர் கொடுத்து எழுதி வைத்துக் கொள்ளலாம். பின் நாளில் உதவும். 

கேள்வி: கண்ட்ரோல் + ஆல்ட்+ டெலீட் கொடுத்து கிடைக்கும் இயங்கும் பைல்கள் குறித்த அட்டவணையில்,    "lsass.exe"  என்னும் ஒரு பைல்  . காட்டப்படுகிறது. இது வைரஸ் பைலா? இது எதற்காக எப்போதும் தெரிகிறது?  –எஸ். சம்பத், போரூர், சென்னை
பதில்: வைரஸ் என்று எண்ணி அழித்துவிடாதீர்கள். விண்டோஸ் இயக்கத்திற்குத் தேவையான முக்கிய பைல் இது. lsass (LSASS)  என்பது  Local Security Authority  Subsystem Service   என்பதன் சுருக்கமாகும். விண்டோஸ் இயக்கத்தின் பாதுகாப்பினையும்,  கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களையும்   கண்காணித்துச் செயல்படும் ஒரு பைல் இது.  C:/windows/system32 or C:/winnt/system32   என்ற போல்டரில் இந்த பைல் காணப்படும். இதனை அழிக்கக் கூடாது. கம்ப்யூட்டர் பாதுகாப்பிற்கு இந்த பைல் தேவை. எனவே, உங்களுக்கு கண்ட்ரோல் + ஆல்ட் +டெலீட் கீகள் மூலம் கிடைக்கும்    டாஸ்க் மேனேஜர் மூலம், இதனை நிறுத்தவோ, அழிக்கவோ முயற்சிக்கக் கூடாது. முதலில் விண்டோஸ் அதனை அனுமதிக்காது. உங்களுக்கு ஒரு கூடுதல் தகவல் சொல்லட்டுமா?   2004 ஆம் ஆண்டில் Sasser  என்னும் வைரஸ் பரவி வந்த போது, உங்களைப் போலவே,  பலரும் அது இந்த பைலுடன் இணைந்ததாக எண்ணினார்கள்.   எனவே இந்த பைல் டாஸ்க் மேனேஜரில் இருந்த போது இதனை வைரஸாக எண்ணிப் பயந்தார்கள். இப்போது அப்படி எதுவும் இல்லை. எனவே உங்கள் கம்ப்யூட்டர் வாட்ச்மேனாக, இந்த பைலை எண்ணிக் கொள்ளுங்கள். இந்த பைல் நம் நண்பன்தான்.

கேள்வி: ஜிமெயில் பயன்படுத்துகிறேன். இதில் பயன்படுத்த முக்கிய ஷார்ட்கட் கீகளைத் தரவும். அவை இயங்க என்ன செட் செய்திட வேண்டும்? சாதாரணமாக சில ஷார்ட் கட் கீகளை அழுத்திய போது அவை இயங்கவில்லை.   –ஆ. நாகராஜ் மாணிக்கம், மதுரை
பதில்: ஜிமெயிலில் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் செயல்பட, சில செட்டிங்ஸ் அமைப்புகளை மேற்கொள்ள வேண்டும். பின்னரே அவை செயல்படும். கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ளவும். 
1. ஜிமெயில் பக்கத்தில் வலதுபுறம் மேலாக,  Settings  என்பதில் கிளிக் செய்திடவும்.  
2.அடுத்து Settings  பக்கம் கிடைக்கும். இதில் "Keyboard Shortcuts" என்பதனை அடுத்துள்ள ரேடியோ பட்டனில் கிளிக் செய்திடவும்.   கீ போர்ட் ஷார்ட்கட் கீகள் செயல்பட இதுதான் வழி தருகிறது.
3. இதனை அடுத்து  Save Changes  என்பதில் கிளிக் செய்திடவும். இனி அனைத்து கீ போர்டு ஷார்ட்கட் கீகளும் செயல்படும். நீங்கள் கேட்டுக் கொண்டதற் கிணங்க, ஒரு சில முக்கியமான ஷார்ட்கட் கீகளைத் தருகிறேன். 
/ – செய்திகளைத் தேட
c  புதிய இமெயில் செய்தி உருவாக்க
n அடுத்த மெசேஜ் பெற
 இருவருக்கிடையேயான பல மெசெஜ் அடங்கிய செய்தி (இணிணதிஞுணூண்ச்tடிணிண) திறக்க
p முந்தைய மெசேஜ்
r  அப்போது பார்த்துக் கொண்டிருக்கும் கடிதத்திற்கு பதில் தயாரிக்க.

கேள்வி: வேர்ட் 2010 தொகுப்பில் தயாரிக்கப்படும் ஆவணங்களில் உள்ள சொற்களை அடிக்கோடிடுகையில், கோட்டினை மட்டும் கலரில் அமைக்க முடியுமா?  எனக்கு வரும் சில ஆவணங்களில் அது போல உள்ளது. –எஸ்.நீரஜா, சென்னை
பதில்: ஆம், நீங்கள் கூறுவது சரியே. டெக்ஸ்ட்டில் சில சொற்களை முக்கியமாகக் காட்டிட, அதில் அடிக்கோடிடுகிறோம். இந்த முக்கியத்துவத்தை மேலும் கூட்டிட, அல்லது உடனடியாகக் கண்களில் படும்படி காட்ட, கோடுகளை மட்டும் கலரில் அமைக்கலாம். கோடிட உங்களுக்குத் தெரியும். டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து கண்ட்ரோல் +க் அழுத்தவும். அடிக்கோடு இடப்படும். இதனை மட்டும் கலரில் அமைக்க, மீண்டும் அந்த சொல்லைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து  "Font"  டயலாக் பாக்ஸ் திறக்க வேண்டும். இதற்கு ரிப்பனில் ஹோம் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இதில்  "Font" பிரிவில் வலது கீழாக உள்ள அம்புக்குறியில் கிளிக் செய்திடவும். அல்லதுCTRL + SHIFT + F கீகளை அழுத்தவும்.  இப்போது "Font"  டயலாக் பாக்ஸ் திறக்கப்படும். இதில் "Underline style" என்பதன் கீழாக பல ஆப்ஷன்கள் அடங்கிய பிரிவுகள் கிடைக்கும்.  words only, various line combinations and weights, dots, dashes,  எனப்  பல பிரிவுகள் இருக்கும். இதில் ஏதேனும் ஒரு ஸ்டைலைத் தேர்ந்தெடுத்த பின்னர்,"Underline color"  என்பதன் கீழ், கீழாக இழுக்கவும். இதில் எந்தக் கலர் வேண்டும் எனத் தேர்ந்தெடுக்க  பல்வேறு வண்ணங்கள் தரப்பட்டிருக்கும். கூடுதலாக  "More Colors"  என்ற பிரிவும்   இருக்கும். இதில் உள்ள  "Preview"  பிரிவில், நீங்கள் தேர்ந்தெடுக்கும் வண்ணத்துடன் சொல்லில் உள்ள கோடு எப்படி தோற்றம் அளிக்கும் என்பதனைப் பார்க்கலாம்.  அடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறவும். நீங்கள் தேர்ந்தெடுத்த சொல்லில் இட்ட அடிக்கோடு, தேர்ந்தெடுத்த வண்ணத்தில் இருப்பதனைக் காணலாம்

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP