சமீபத்திய பதிவுகள்

கஸ்பர் அடிகளார் மர்ம விமானம் பற்றி எழுதியுள்ள புது கப்ஸா

>> Monday, December 21, 2009

 

சமீபத்தில் தாய்லாந்தில் தரையிறக்கப்பட்ட விமானம் பற்றி பல சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், அதனை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி ஒரு கதையை எழுதித் தள்ளியுள்ளார் திரு ஜெகத் கஸ்பர். அந்த விமானத்தில் ஆர்.பி.ஜி, விமான எதிர்ப்பு ஏவுகணை, மற்றும் துப்பாக்கிகள் இருந்ததாக தாய்லாந்து அதிகாரிகள் பட்டியலிட்டுச் சொல்லிவிட்டனர், ஆனால் அதில் கடுமையான நச்சு வாயு அடங்கிய ஆயுதங்கள் இருந்ததாகவும், அது இலங்கைக்கு கொண்டு செல்லப்பட இருந்ததாகவும் கஸ்பர் அவர்கள் ஒரு கப்ஸா விட்டிருக்கிறார், நக்கீரனில்.

இதற்காக ரூம் போட்டு யோசிப்பாரோ என்னமோ தெரியாது, கற்பனை வளம் இவரிடம் நிறையவே உண்டு. இந்த நச்சுவாயுக் குண்டுகளை இலங்கை அரசாங்கம் காடுகளில் எஞ்சியிருக்கும் புலிகளை அழிக்க பயன்படுத்த இருந்ததாக இவர் சொல்லியிருப்பது கோத்தபாய ராஜபக்ஷவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கும். என்னடா எனது திட்டத்தில் இது இல்லையே என கோத்தபாய மிரண்டிருப்பார். அவ்வளவு விசுவாசமாக இவர் வேலைசெய்கிறார். யாருக்கு என்று தமிழர்களுக்குப் புரியாதா என்ன?

இதில் தளபதி ராமுக்கு என்ன பங்கு என யோசிக்கவேண்டாம், அவர் தான் கதாநாயகன், இயக்கம் கஸ்பர் அடிகளார் தான். அதாவது வன்னிக் காடுகளில் பல தாக்குதல்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக , வெளிப்படையாகச் சொல்கிறார் கஸ்பர். அத் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியாமல் இராணுவம் திணறுவதாகவும் எழுதியுள்ளார் கஸ்பரடிகளார், மற்றும் தளபதி ராம் உருவாக்கியுள்ள விடுதலைப் புலிகள் அமைப்பை (புது அமைப்பை) நிர்மூலமாக்கவே இந்த நச்சு வாயு ஆயுதங்களை இலங்கை தருவிக்க இருந்ததாக நக்கீரனில் எழுதித் தள்ளியுள்ளார். 

சுருக்கமாகச் சொல்லப் போனால் தளபதி ராம் காட்டில் யுத்தம் நடத்துகிறார், அவரை அழிக்க இலங்கை நச்சுவாயு ஆயுதங்களைக் தருவிக்கிறது என்று விளக்கம் சொல்கிறார் கஸ்பர் அடிகளார். தளபதி ராம் இலங்கை இராணுவத்தின் பிடியில் சிக்கியிருப்பதாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால் அதனை உடைத்து ராமிற்கு ஒரு களம் அமைத்துக் கொடுக்க முயல்கிறார் கஸ்பர் அடிகளார் என்பதே யதார்த்தம். உண்மையாகவே ராம் தனியாக காடுகளில் செயற்பட்டு வருகிறார் என்று ஒரு உதாரணத்திற்கு வைத்துக் கொண்டாலும், எப்படி இவரால் உறுதிப்படுத்த முடியும். இலங்கை சென்று நேரில் பார்த்தாரா கஸ்பர்?, தொலைபேசி மூலம் பேசிவிட்டு எதனை உண்மை என்று நம்புவது. 

தற்போது உள்ள சூழ்நிலையில் நாம் ஒவ்வொரு அடியையும் மிகவும் அவதானமாக எடுத்துவைக்க வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம். இலங்கை புலனாய்வுத் துறையின் சவால்களை முறியடிக்கும் கட்டாயத்தில் நிற்கின்றோம். இப்படியான சூழலில் இவரைப் போன்ற சிலரால் எமது போராட்டம், அதன் பாதை மற்றும் நம்பகத்தன்மை என்பன கேள்விக்குறியாக்கப்படக் கூடாது. இவரைப் போல மக்களை பிழையான பாதையில் தனது சுயநலம் காரணமாக வழிநடத்திச் செல்வோர் இனம் காணப்படவேண்டும். கதை எழுத ஆர்வம் இருந்தால் சினிமாவில் கதை எழுதலாம். தமிழர்களின் போராட்டத்தை, போராட்டப் பாதையை திசை திருப்ப கதைகளை எழுதவேண்டாம் கஸ்பர் அடிகளாரே!, நாளை வரலாறு உங்களை மன்னிக்காது பாதர் மன்னிக்காது... 


பின் குறிப்பு:

அதிர்வு இணையம் இந்த மர்ம விமானம் இலங்கைக்கும் சென்று எரிபொருள் நிரப்ப இருந்தது என்று செய்தி வெளியிட்டிருந்தது. அத்துடன் அது விடுதலைப் புலிகளின் ஆயுதங்களாக இருக்கலாம் என்றும், அதனைக் கைப்பற்றி தேர்தல் நேரத்தில் இலங்கை கொண்டுவர அரசு முயற்சிக்கிறதா என்ற கோணத்திலும் செய்திகளை வெளியிட்டிருந்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறோம். தற்போது புலிகளின் கப்பல் ஒன்றையும் இவ்வாறு இலங்கை அரசு கொழும்பு கொண்டு வந்தது யாவரும் அறிந்ததே. சற்று முன் கிடைத்த தகவல் படி இந்த மர்ம விமானத்தின் மர்மம் தீர்ந்தது, இது வடகொரியாவில் இருந்து , தாய்லாந்து சென்று எரிபொருள் நிரப்பி, பின்னர் இலங்கை வந்து மீண்டும் எரிபொருள் நிரப்பி, அங்கிருந்து அதன் கடைசி இலக்கான ஈரானுக்குச் செல்லவே இந்த விமானம் திட்டமிட்டிருந்தது என்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு சிறியரக ஆயுதம் முதல் கனரக ஆயுதங்களை விற்கக் கூடாது என ஐ.நாவின் பாதுகாப்புச் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில், வடகொரியாவில் உற்பத்தியாகும் ஆயுதங்களையும் வடகொரியா விற்க முடியாது. எனவே ஆயுதங்களைக் கடத்தும் சில தாதாக்களைப் பயன்படுத்தி வடகொரியா தனது ஆயுதங்களை விற்றும் தருவித்தும் வருகின்றது. இதனை மிக உஉன்னிப்பாக அவதானித்து வருவது அமெரிக்கா. அதன் அடிப்படையில் இந்த விமானத்தை அமெரிக்க உளவு நிறுவனம் வடகொரியாவில் இருந்து புறப்பட்டது முதலாக கவனித்து எரிபொருள் நிரப்பும் வேளையில் ஆப்புவைத்தது. இதுவே நடந்த உண்மை.source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அம்பலமாகிறது ஜாக்சன் ரகசியம்

 

Top global news update 


லண்டன்:பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் பற்றிய ஆவணமாக அமெரிக்கப் புலனாய்வுத் துறை (எப்.பி.ஐ.,) ஒரு தகவல் புத்தகத்தை வெளியிட்டுள்ளது. அதில் அவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு வழக்குகள் மற்றும் பல விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 679 பக்கங்கள் கொண்ட அந்த ஆவணப் புத்தகத்தில் மைக்கேல் ஜாக்சன் மீதான 1993 மற்றும் 2004ல் நிகழ்ந்த சிறுவர் பாலியல் குற்றச்சாட்டு, அதன் விசாரணைகள், அவருக்கு வந்த மிரட்டல்கள், அவரிடம் பணம் பறிக்க நடந்த சூழ்ச்சிகள் போன்ற பல்வேறு ரகசியங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருப்பினும், ஜாக்சனின் மரணம் பற்றி அந்தப் புத்தகம் எவ்வித முக்கியமான விவரங்களையும் அளிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.source:dinamalar
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இலங்கையின் யுத்தக் குற்றம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை

 முன்னாள் சிறீலங்கா இராணுவத்தளபதி ஐனரல் சரத் பொன்சேகா அண்மையில் விடுதலைப் புலிகளின் சமாதானத் தூதுவர்களான திரு நடேசன் திரு புலித்தேவன் ஆகியோரின் கொலை தொடர்பாக விடுத்த அறிவிப்பின் அடிப்படையில் நாடுகடந்த தமிழீழ அரசானது:

pgteசர்வதேசக் குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுப்பாளரான லுயிஸ் மொரினோ ஒக்கம்போ விடுதலைப் புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட குறித்த சம்பவத்தினை
மட்டுமல்லாது சனவரி 2009 முதல் மே 2009 வரையிலான இறுதியுத்தத்தின் போது சிறீலங்கா ஆயுதப்படைகளின் நடவடிக்கைகள் தொடர்பாக விசாரணை செய்ய ஆரம்பிக்க வேண்டுமெனவும், ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அவர்கள் இந்தப் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்பனவற்றினை ஐ நா பாதுகாப்புச்சபையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும், சர்வதேச நீதிமன்ற பிரகடனத்தின் பங்குதரார்களான நாடுகள் இந்த விடயத்தினை சர்வதேச நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனவும், அறைகூவல் விடுகின்றது.

கடந்த மே மாதத்தில் புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் ஆயுதங்களை கீழே வைத்து யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முற்பட்டவேளையில், அவர்களைக் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயா ராஐபக்ச உத்தரவிட்டதாக சிறிலங்காவிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் பத்திரிகையில் டிசம்பர் 13 வெளிவந்த நேர்காணலொன்றில் ஓய்வுபெற்ற ஐனரல் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார். முதலில் வெள்ளைக் கொடியுடன் இராணுவத்தினரிடம் செல்லுமாறு தெரிவித்தல் பெற்ற இரு புலிகள் இயக்கத் தலைவர்களையும் கொல்லுமாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான சனாதிபதியின் சகோதரர் நேரடியாக இராணுவ தளபதிகளுக்குப் பணித்தமையை அரசாங்க ஊடக செய்தியாளர்களின் மூலம் தான் அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார்.

சரத் பொன்சேகா தனது கூற்றினைப் பின்னர் மறுத்தபோதும் சண்டே லீடர் நேர்காணல், மனித உரிமைகள் அமைப்புகளது அறிக்கைகள், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினது அறிக்கை, இது தொடர்பான சர்வதேச அமைப்புக்கள் விசாரணையைத் தொடங்க வேண்டிய கட்டாயத்தை வலியுறுத்துகின்றன.

மனித உரிமைகள் தொடர்பான உள்நாட்டு விசாரணைகள் விடயத்தில் சிறிலங்கா இதுவரை நடந்துகொண்ட முறையும் (1977, 1983 இனப் படுகொலை, 1981ம் ஆண்டு
யாழ்ப்பாண நுரலக எரிப்பு, 1996ம் ஆண்டு செம்மணி படு கொலைகள், 1996 கிருசாந்தி படுகொலை, 2006ம் ஆண்டு பிரான்ஸ் உதவிப் பணியாளர்கள்), அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கையில் சிறிலங்காவில் தண்டனைகள் தவிர்க்கப்படுவது எவ்வாறு பிரச்சனையாகவே உள்ளதாகத் தொடர்ச்சியாகவும் மீண்டும் மீண்டும்
கூறப்பட்டு வருவதும் சிறிலங்காவில் உள்நாட்டு விசாரணையைக் கோருவதனை கேலிக் கூத்தாக்குகின்றது. உள்நாட்டு விசாரணைகள் பயனற்றவையாக அமையுமென்று தெரிந்தால் சர்வதேச விசாரணைக்கு முன்னோடியாக உள்நாட்டு விசாரணை நடாத்தப்பட வேண்டியது அவசியமில்லை என்பது நன்கு நிறுவப்பட்ட சட்டக் கோட்பாடுகளிலொன்றாகும்.

சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் செயற்படாமால் இருப்பது உலகளாவிய தமிழ் சமூகத்தினரிடம் நிலவும் ஏமாற்றப்பட்ட உணர்வினை மேலும் ஆழப்படுத்தும். சர்வதேச சமூகத்தின் செயற்படாத் தன்மையானது சர்வதேச நிறுவனங்களின் நம்பகத் தன்மையைப் பாதிப்பதுடன் நீதிசார்ந்த ஆட்சி மீதான நம்பிக்கையை இழக்கவும் பண்ணும். மேலும் சர்வதேச ஒழுங்குமுறையற்ற அரசுகள் மற்றும் சர்வாதிகார ஆட்சியாளர்கள் சகல மனிதாபிமானச் சட்டங்களையும் தங்கள் கைகளில் எடுப்பதையும் இது ஊக்குவிக்கும்.

விசுவநாதன் ருத்ரகுமாரன்
இணைப்பாளர்


source:nerudal


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தமிழ் பெண்களிடம் இலங்கை ராணுவம் பாலியல் கொடுமை

 

லண்டன், டிச.20: போரினால் முகாம்களில் தஞ்சம் அடைந்த ஈழத்தமிழ் பெண்கள் பயங்கரமான கொடுமையை அனுபவித்தனர் என்று மனித உரிமை அமைப்பு ஒன்றின் பிரிட்டன் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். அதிலும், முகாம்களில் இளம்பெண்களை ராணுவ அதிகாரிகள் வலுக்கட்டாயமாக பாலியல் கொடுமைப் படுத்தியதே வேதனையான விஷயம் என்றும் அவர் கூறினார்.

 முகாம்களில் இருப்பவர்களுக்கு போதுமான உணவு அளிக்கப்படுவதில்லை. இதனால் பசியால் துடிக்கின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட ராணுவ அதிகாரிகள், தமிழ்ப் பெண்களுக்கு உணவு தருவதாகவும், பணம் தருவதாகவும் கூறி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கினார்கள் என்பதே பரிதாபம் என்றார் அந்த மருத்துவர்.

 இலங்கையில் ஈழத்தமிழர்களை அடைத்து வைத்திருந்த முகாம் ஒன்றை பார்வையிட்டேன். அப்போது என் கண் முன் அரங்கேறிய கொடுமையை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அந்த முகாமில் ஈழத்தமிழர்கள் மிருகங்களைப் போல் நடத்தப்பட்டனர். முகாம்களில் உள்ளவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ள அனுமதிக்கப்படவில்லை. முகாமின் முள்வேலிக்கு அருகில் நெருங்கவும் அவர்களுக்கு அனுமதி கிடையாது.

  முகாம்களில் உள்ளவர்களை பார்வையாளர்கள் அருகில் சென்று பார்க்க அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட இடைவெளியில் இருந்தே பார்க்க முடிந்தது. அதுவும் சிறிது நேரமே பார்க்க முடிந்தது. உடனையே ராணுவ அதிகாரிகள் வந்து ஈழத்தமிழர்களை முகாமுக்குள் செல்லுமாறு எச்சரித்தார்கள். அப்போது பெண்களின் தேகத்தை தொட்டு அவர்கள் அநாகரிகமாக நடந்து கொண்டார்கள். அதை பார்க்கவே கண்கூசியது. வேதனையாக இருந்தது.

 ராணுவ அதிகாரிகள் அப்படி ஒழுங்கீனமாக நடந்து கொண்டாலும் அதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் அமைதியாய் தமிழ்ப் பெண்கள் நடந்து சென்றனர். அப்படி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் அவர்களுக்கு எதுவும் நிகழலாம். அதை உணர்ந்துதான் அவர்கள் கொடுமையை சகித்துக்கொண்டு, தங்களது நிலைமையை நினைத்து மெüனமாக சென்றனர்.

 மற்றொரு முகாம் ஒன்றில் போருக்குப் பயந்து தஞ்சம் அடைந்த வாணி குமார் (25) என்ற பெண்ணை இலங்கை ராணுவ அதிகாரிகள் 4 மாதங்கள் அடைத்து வைத்து  பாலியல் கொடுமை செய்துள்ளனர். சில நேரங்களில் அந்த பெண்ணை நீண்ட நேரம் வெயிலிலும் நிறுத்தி வைத்து கொடுமை செய்துள்ளனர். இப்படி இலங்கை முகாம்களில் ஈழத்தமிழ் பெண்களுக்கு எதிரான கொடுமையை சொல்லி மாளாது என்றார் அந்த மருத்துவர்.


source:dinamani
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

விடுதலைப் புலிகளின் கப்பல் இன்று மதியம் கொழும்பு வந்தது

வி.புலிகளின் கப்பல் இன்று மதியம் கொழும்பு வந்தது 

 

"பிரின்சஸ் கிருஸ்டீனா" என்றழைக்கப்படும் விடுதலைப் புலிகளின் கப்பலை தாம் கைப்பற்றி இருப்பதாக இன்று காலை இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளதாக கொழும்பில் இருந்து அதிர்வின் நிருபர் தெரிவித்தார். ஆயுதங்களைக் காவிச் செல்லக் கூடிய இந்தக் கப்பலை சர்வதேச கடற்பரப்பில் வைத்து கைப்பற்றியதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளபோதும், இது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதா இல்லை சர்வதேச போலீசாரின் உதவி நாடப்பட்டதா என்பது போன்ற விபரங்களை அவர்கள் தெரிவிக்கவில்லை.

இன்று மதியம் கொழும்புக்கு இக் கப்பல் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது. பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் இக் கப்பல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அக் கப்பலின் புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 

சுமார் 90 மீட்டர் நீளமான இந்தக் கப்பலில் பனாமா நாட்டுக் கொடி பறக்கவிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. நடைபெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் இதை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகிறது என்பது புலனாகிறது. 


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

லாக்கருடன் கூடிய டேட்டா டிரைவ்


 
 

பலவகையான யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ்களை வடிவமைத்து பன்னாட்டளவில் விற்பனை செய்திடும் கிங்ஸ்டன் நிறுவனம், அண்மையில் லாக்கருடன் கூடிய யு.எஸ்.பி. பிளாஷ் டிரைவ் ஒன்றை வடிவமைத்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் ரகசியமாகச் சுருக்கப்படும் வகையில் என்கிரிப்ஷன் செயல்பாட்டினை மேற்கொள்ளலாம். மற்றும் அதிகக் கொள்ளளவில் டேட்டாவினை சேமித்து வைக்கலாம். நம் அனுமதியின்றி இந்த பிளாஷ் டிரைவினை மற்றவர்கள் பயன்படுத்துவதனைத் தடுப்பதுடன், பட்ஜெட்டில் இது போன்ற சாதனங்களை வாங்கிப் பயன்படுத்து வோருக்கான விலையில் இது கிடைக்கிறது என கிங்ஸ்டன் நிறுவனம் அறிவித்துள்ளது. விண்டோஸ் 7 முதல் விண்டோஸ் 2000 வரையிலான ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் இதனை இயக்க முடியும். மேக் கம்ப்யூட்டருடனும் இது இயங்கும். 256 பிட் அளவில் ஹார்ட்வேர் அடிப்படையில், பதியப்பட்ட தகவல்களை இதன் மூலம் சுருக்க முடியும். இந்த டிரைவினை, உரிமையாளர் அனுமதியின்றி எவரேனும் பயன்படுத்தி டேட்டாவினைப் படிக்க முயன்றால், பத்தாவது முயற்சியில், இதனுள்ளாக அமைந்த பாதுகாப்பு வழி டிரைவை லாக் செய்துவிடும். 
கூடுதலாக மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் வகையில் இடம் ஒதுக்கியும் இந்த டிரைவை இயக்கலாம். 
டேட்டா இழப்பு, திருட்டு ஆகியவற்றினால் ஏற்படும் சேதம் மதிப்பிட முடியாதது. எனவே தான் அந்த தொல்லையிலிருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழியாக, கிங்ஸ்டன் நிறுவனம் இந்த வகை டிரைவினை வடிவமைத்து வழங்கியுள்ளது. இதனால் நம் மதிப்பு மிக்க டேட்டாவினைப் பாதுகாப்பாக வைத்துள்ளோம் என்ற நிம்மதியுடன் நாம் இருக்க முடியும்.
"2.58 x 0.71 x 0.4"  என்ற அளவில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டிரைவ் யு.எஸ்.பி. 2.0 வரைமுறைகளுக்கான வழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது. இவை தண்ணீரினால் சேதமடையாத வகையில் வாட்டர் புரூப் தன்மை கொண்டது. இவை 4,8, 16 மற்றும் 32 ஜிபி அளவுகளில் கிடைக்கிறது. இவற்றின் விலை முறையே ரூ.1,250, ரூ.1,850, ரூ.4,850 மற்றும் ரூ.8,350 ஆகும்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இஸ்லாமிய முக்கிய பேச்சாளருக்கு சுவிற்சர்லாந்து நுழைய தடை


நேற்று சனியன்று பேர்ன் நகரில் முஸ்லிம் மக்களால் நடத்தபட்ட எதிர்ப்பு ஒன்றுகூடலில் முக்கிய பேச்சாளராக கலந்து கொள்ளவிருந்த ஜேர்மனியை சேர்ந்த அபு ஹமாசா என்று அழைக்கபட்டும் Pierre Vogel சுவிற்சர்லாந்தினுள் நுழைவதற்கு அனுமதி மறுக்கபட்டுள்ளது.

 

 இவரது பேச்சு சுவிற்சர்லாந்தில் பொதுஜன அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிக்கும் என்று கூறி சுவிற்சர்லாந்தின் கூட்டாட்சி குடிவரவு அலுவலகத்தால் இவருக்கான பயணத்தடை விதிக்கபட்டது.

 

இப்பயணத்தைடை நடவடிக்கையை சுவிஸ் மக்கள் கட்சி வரவேற்றுள்ளது. இந்நடவடிக்கைக்காக சுவிஸ் நீதியமைச்சர் எவலின் விட்மரை பாராட்டுகிறேன் என்று சுவிஸ் மக்கள் கட்சியின் தேசிய பாராளுமன்ற உறுப்பினர் லூக்காஸ் றைன்மான் தெரிவித்தார்.

 

தனது நுழைவு அனுமதி மறுக்கபட்டது குறித்து கருத்த தெரிவித்த அபு ஹமாசா தனது பேச்சு பொதுஜன பாதுகாப்பக்கு அச்சுறுத்தல் என்று தெரிவிக்கபட்ட குற்றச்சாட்டை மறுத்ததுடன் என்றுமே தனது நடவடிக்கை வன்முறையை ஆதரிப்பதாக அமைந்திருக்கவில்லை என்று ஊடகங்களுக்கு தெரிவித்தார்


source:swissmurasam


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP