சமீபத்திய பதிவுகள்

செல்ல பிராணிகளுக்கு கட்டாய லைசென்ஸ்

>> Wednesday, May 12, 2010

 :பிராணிகள் நல அமைப்பினர் வரவேற்பு
 

General India news in detail

புதுடில்லி:வீட்டில் செல்ல பிராணிகள் வளர்ப்பதற்கு, கட்டாயம் லைசென்ஸ் தேவை உட்பட, புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு விரைவில் கொண்டு வருகிறது.வீடுகளில் செல்ல பிராணிகள் வளர்ப்பது ஒரு கலையாகவும், ஆடம்பரமாகவும் கருதப்படுகிறது. பலர், பாதுகாப்பு காரணங்களுக்காக வளர்க்கின்றனர். சிலர் குடும்ப உறுப்பினர்களை விட, செல்ல பிராணிகள் மீது, அளவு கடந்த நேசம் கொண்டு வளர்க்கின்றனர்.


பல வீடுகளிலும், விற்பனை நிலையங்களிலும் செல்ல பிராணிகள் போதிய பராமரிப்பு இல்லாமல், பார்க்கவே பரிதாப நிலையில் இருக்கும். பராமரிப்பு இல்லாத செல்ல பிராணிகள், நோய்வாய்ப்பட்டு, அவற்றிடமிருந்து, மனிதர்களுக்கும் தொற்று பரவும் ஆபத்தும் ஏற்படுகிறது.


விற்பனை நிலையங்களில் செல்ல பிராணிகள், சிறிய கூண்டுக்குள் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்படுவதாகவும், புகார்கள் எழுகின்றன. இவற்றை கருத்தில் கொண்டு, செல்ல பிராணிகள் வளர்ப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பல புதிய கட்டுப்பாடுகளை விரைவில் அமல்படுத்த, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய் துள்ளது.


செல்ல பிராணிகள் வீடுகளில் வளர்க்கவும், விற்பனை செய்யவும் கட்டாயம் லைசென்ஸ் பெற வேண்டும். லைசென்ஸ் 12 மாதங்கள் மட்டுமே செல்லத்தக்க வகையில் கொடுக்கப்படும். செல்ல பிராணிகள் வளர்ப்பதற்கு ஏற்றதா என, கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்து சான்று பெற்றபின், லைசென்ஸ் வழங்கப்படும். விற்பனை நிலையங்கள் மூலமாகவோ அல்லது மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட அலுவலகங்களிலும் லைசன்ஸ் பெற்று கொள்ளலாம்.வீடுகளிலும், விற்பனை நிலையங்களிலும் வளர்க்கப்படும் பிராணிகளை சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் அடிக்கடி சோதனை நடத்துவர்.


பிராணிகள் போதிய பராமரிப்பின்றி இருந்தாலோ, நோய் பாதிப்பு அறிகுறி இருந்தாலோ, பிராணிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும்.இதேபோன்று விற்பனை நிலையங்கள், பிராணிகளுக்கு போதிய இடவசதியும், சீதோஷ்ண நிலையும் கொண்டதாக இருக்க வேண்டும்.விற்பனை நிலையங்கள் சுகாதாரமாக வைத்திருக்க வேண்டும். பெரிய ரக நாய்களுக்கு, 24 சதுர அடி பரப்பளவு கொண்ட இடம் ஒதுக்க வேண்டும்.


அனைத்து பிராணிகளுக்கும் தினமும் உணவு அளிக்க வேண்டும். செல்ல பிராணிகள் விற்பனை கடைகள், இறைச்சி கடைக்கு அருகிலிருக்க கூடாது. விற்பனை நிலையங்கள், டாக்டர் ஒருவரை நியமிக்க வேண்டும் போன்ற கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வருகிறது.புதிய கட்டுப்பாடுகளை, மாநகராட்சி, நகராட்சி அதிகாரிகளும், இந்திய விலங்குகள் நலவாரியமும் இணைந்து கண்காணிக்கும்.புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வரும் மத்திய அரசின் முயற்சிக்கு, பிராணிகள் நலஆர்வலர்களும், அமைப்புகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.


source:dinamalar--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...

மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?

 

குர்ஆன் முரண்பாடுகள்

மோசேயை தத்து எடுத்தது யார்? பார்வோனின் மகளா அல்லது மனைவியா?

Who Adopted Moses: Pharaoh's Daughter or Pharaoh's Wife?

எபிரேய ஆண் பிள்ளைகளை கொல்லும் படி பார்வோன் கட்டளையிட்டு இருக்கும்போது, பார்வோனின் மகள் மோசேயை தத்து எடுத்ததின் மூலமாக, தேவன் மோசேயை காப்பாற்றியதாக பரிசுத்த பைபிள் கூறுகிறது:

லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம்பண்ணினான். அந்த ஸ்திரீ கர்ப்பவதியாகி, ஒரு ஆண்பிள்ளையைப் பெற்று, அது அழகுள்ளது என்று கண்டு, அதை மூன்று மாதம் ஒளித்துவைத்தாள். அவள் அதை அப்புறம் ஒளித்துவைக்கக்கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள். அதற்கு என்ன சம்பவிக்கும் என்பதை அறியும்படி அதின் தமக்கை தூரத்திலே நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது பார்வோனுடைய குமாரத்தி நதியில் ஸ்நானம்பண்ண வந்தாள்; அவளுடைய தாதிகள் நதியோரத்தில் உலாவினார்கள்; அவள் நாணலுக்குள்ளே இருக்கிற பெட்டியைக் கண்டு, தன் தாதியை அனுப்பி அதைக் கொண்டுவரும்படி செய்தாள். அதைத் திறந்தபோது பிள்ளையைக் கண்டாள்; பிள்ளை அழுதது; அவள் அதின்மேல் இரக்கமுற்று, இது எபிரெயர் பிள்ளைகளில் ஒன்று என்றாள். அப்பொழுது அதின் தமக்கை பார்வோனின் குமாரத்தியை நோக்கி: உமக்கு இந்தப் பிள்ளையை வளர்க்கும்படி எபிரெய ஸ்திரீகளில் பால்கொடுக்கிற ஒருத்தியை நான் போய் உம்மிடத்தில் அழைத்துக்கொண்டு வரட்டுமா என்றாள். அதற்குப் பார்வோனுடைய குமாரத்தி: அழைத்துக்கொண்டுவா என்றாள். இந்தப் பெண் போய்ப் பிள்ளையின் தாயையே அழைத்துக்கொண்டு வந்தாள். பார்வோனுடைய குமாரத்தி அவளை நோக்கி: நீ இந்தப் பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை எனக்கு வளர்த்திடு, நான் உனக்குச் சம்பளம் கொடுக்கிறேன் என்றாள். அந்த ஸ்திரீ பிள்ளையை எடுத்துக்கொண்டுபோய், அதை வளர்த்தாள். பிள்ளை பெரிதானபோது, அவள் அதைப் பார்வோனுடைய குமாரத்தியினிடத்தில் கொண்டுபோய் விட்டாள். அவளுக்கு அவன் குமாரனானான். அவள்: அவனை ஜலத்தினின்று எடுத்தேன் என்று சொல்லி, அவனுக்கு மோசே என்று பேரிட்டாள். (யாத்திராகமம் 2:1-10)

அவன் வெளியே போட்டுவிடப்பட்டபோது, பார்வோனுடைய குமாரத்தி அவனை எடுத்துத் தனக்குப் பிள்ளையாக வளர்த்தாள். (அப்போஸ்தலர் நடபடிகள் 7:21)

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரண்டாயிரம் வருடங்களுக்கு பிறகு வந்த குர்ஆன், இந்த சரித்திர விவரத்திற்கு முரண்பட்டு கூறுகிறது:

நாம் மூஸாவின் தாயாருக்கு; "அவருக்கு (உன் குழந்தைக்குப்) பாலூட்டுவாயாக அவர் மீது (ஏதம் ஆபத்து வரும் என்று) நீ பயப்படுவாயானால், அவரை ஆற்றில் எறிந்து விடு - அப்பால் (அவருக்காக) நீ பயப்படவும் வேண்டாம், துக்கப்படவும் வேண்டாம்; நிச்சயமாக நாம் அவரை உன்னிடம் மீள வைப்போம்; இன்னும், அவரை (நம்) தூதர்களில் ஒருவராக்கி வைப்போம்" என்று வஹீ அறிவித்தோம். (நதியில் மிதந்து வந்த) அவரை ஃபிர்அவ்னுடைய குடும்பத்தினர் எடுத்துக் கொண்டார்கள்; (பிற்காலத்தில் அவர்) அவர்களுக்கு விரோதியாகவும் துக்கந்தருபவராகவும் ஆவதற்காக! நிச்சயமாக ஃபிர்அவ்னும், ஹாமானும், அவ்விருவரின் படைகளும் தவறிழைப்பவர்களாகவே இருந்தனர். இன்னும்; (குழந்தையைக் கண்ட) ஃபிர்அவ்னின் மனைவி ("இக்குழந்தை) எனக்கும் உங்களுக்கும் கண் குளிர்ச்சியாக இருக்கிறது - இதை நீங்கள் கொன்று விடாதீர்கள்; நமக்கு இவர் பயன் அளிக்கக்கூடும்; அல்லது நாம் இவரை நம் புதல்வராக்கிக் கொள்ளலாம்" என்று சொன்னார்; இன்னும் அவர்கள் (இதன் விளைவு என்னவாகும் என்பதை) உணர்ந்து கொள்ளவில்லை. (குர்‍ஆன் 28:7-9) 

பார்வோனின் மகள் அல்ல, பார்வோனின் மனைவி மோசேயை தத்து எடுத்ததாக குர்ஆன் கூறுகிறது. ஆனால், பைபிள் சொல்வது தான் சரியானது, எப்படியென்றால், எபிரேய பைபிளின் முதல் ஐந்து புத்தகங்களை (தோரா) எழுதியவர் மோசே என்பதால், தன்னை யார் தத்து எடுத்தார்கள் என்ற விவரம் அவரை விட வேறு யாருக்கு சரியாக தெரிந்து இருக்கும்?

இந்நிகழ்ச்சி நடைப்பெற்ற காலத்திற்கு சமீபமான காலத்தில் தான் எபிரேய பைபிள் எழுதப்பட்டது. இஸ்ரவேல் மக்களின் மதிப்பிற்குரிய இரட்சகராக மோசே இருக்கிறார். ஆகையால், முஹம்மது மற்றும் இஸ்லாமியர்களை விட யூதர்களுக்குத் தான் தங்கள் சரித்திரம் பற்றிய விவரம் அதிகமாகவும், சரியாகவும் தெரியும். இஸ்லாமியர்களுக்கு யூதர்களின் சரித்திரம் பற்றிய சந்தேகம் வந்தால், அவர்கள் பைபிளை படித்தும், யூதர்களிடம் சென்றும் விவரங்களை தெரிந்துக்கொள்ளவேண்டும் என்று குர்ஆன் இஸ்லாமியர்களுக்கு கட்டளையிடுகிறது. அதாவது குர்ஆன் சொல்வது சரியானதா என்ற சந்தேகம் வந்தால், இப்படி செய்யுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறார்.

(நபியே!) நாம் உம் மீது இறக்கியுள்ள இ(வ்வேதத்)தில் சந்தேகம் கொளிவீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக நிச்சயமாக உம் இறைவனிடமிருந்து உமக்குச் சத்திய (வேத)ம் வந்துள்ளது - எனவே சந்தேகம் கொள்பவர்களில் நீரும் ஒருவராகி விட வேண்டாம். (குர்ஆன் 10:94)

நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி 'மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்' என்று கூறினான். (குர்ஆன் 17:101)

மேலும், இயேசு தன்னிடமுள்ள எபிரேய பைபிளை உறுதிப்படுத்தினார் என்று குர்ஆன் கூறுகிறது:

இன்னும் அவருக்கு அவன் வேதத்தையும், ஞானத்தையும், தவ்ராத்தையும், இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான் …. "எனக்கு முன் இருக்கும் தவ்ராத்தை மெய்பிக்கவும், உங்களுக்கு விலக்கி வைக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு அனுமதிக்கவும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் நான் கொண்டு வந்திருக்கிறேன்…(குர்‍ஆன் 3:48,50) 

இன்னும் (முன்னிருந்த) நபிமார்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன் இருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்;. அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன. அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது. அது பயபக்தியுடையவர்களுக்கு நேர் வழிகாட்டியாகவும் நல்லுபதேசமாகவும் உள்ளது. (குர்ஆன் 5:46)

ஆக, இயேசு உறுதிப்படுத்தின வேதம் தான் இப்போது நம்மிடம் உள்ள பைபிளாக இருப்பதால், குர்ஆன் ஒரு சரித்திர பிழை செய்துள்ளது என்பதை நாம் அறியலாம். குர்ஆனின் இந்த பிழையை பரிசுத்த பைபிள் சரிப்படுத்துகிறது என்ற முடிவிற்கு நாம் வரலாம்.

சாம் ஷமான்

குர்ஆனின் இந்த பிழையைப் பற்றிய ஆய்வுக் கட்டுரை: குர்ஆனின் இந்த பிழை முஹம்மது ஏதோ அறியாமையில் செய்த பிழை அல்ல, இது வேண்டுமென்றே தெரிந்தே செய்த மாற்றமாகும். இதனை விளக்கும் ஒரு ஆய்வு கட்டுரையை படிக்கவும்: Adoption by Adaption

ஆங்கில மூலம்: Qur'an Contradiction: Who Adopted Moses: Pharaoh's Daughter or Pharaoh's Wife?

இதர குர்‍ஆன் முரண்பாடுகளை படிக்கவும்
சாம் ஷமான் அவர்களின் இதர கட்டுரைகள்


source:http://www.answering-islam.org/tamil/quran/contra/moses_adoption.html

StumbleUpon.com Read more...

போர்க் குற்றத்தில் சிக்கும் இலங்கை!

 

போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்து வரும் ரோம் நகரைச் சேர்ந்த 'பர்மனென்ட் பீப்பிள்ஸ் டிரிபியூனல்' அமைப்பு, இலங்கை அரசு புரிந்த போர்க் குற்றங்கள் குறித்து கடந்த ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில், அயர்லாந்தின் டப்ளின் நகரில் விசாரணை நடத்தியது. இதில் கலந்துகொண்டு சாட்சியம் அளித்துவிட்டு வந்திருக்கும், பெங்களூரு பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத் துறை பேராசிரியராக பணிபுரியும் பால் நியூமேன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரை சந்தித்தோம்.

''பர்மனென்ட் பீப்பிள்ஸ் டிரிபி யூனல் அமைப்புதான் (பி.பீ.டி) வியட்நாம் போரில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை முதன்முதலாக உலகுக்குத் தோலுரித்துக்காட்டியது. இலங்கையில் நடந்த இனப்படுகொலை யை விசாரிக்கும்படி இலங்கையை சேர்ந்த 'ஐரீஷ் ஃபோரம் ஃபார் பீஸ் இன் ஸ்ரீலங்கா' என்ற அமைப்பு கேட்டுக்கொண்டதன் பேரில், 'பி.பீ.டி' கடந்த ஜனவரி மாதம் விசாரணை நடத்தியது. இவ்வளவுக்கும் இலங்கையைச் சேர்ந்த அந்த அமைப்பை நடத்துவதே நல்ல உள்ளம் கொண்ட சிங்களவர்கள்தான்!

விசாரணையில் சமூக ஆர்வலர்கள், சிங்களப் பத்திரிகை யாளர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் சாட்சியங்களை முன்வைத்தனர். அமெரிக்க தமிழ் அமைப்பைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு, இலங்கை ராணுவம் நடத்திய இனப்படுகொலையை சாட்டிலைட் மூலம் படமெடுத்து, இந்தக் குழுவிடம் சமர்ப்பித்தனர். இலங்கையில் கைகள் பின்பக்கமாகக் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக் கொல்லப்படும் தமிழ் இளைஞர்களின் படங்கள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. 'அவர்களைச் சுட்டுக் கொன்றது விடுதலைப் புலிகள்தான்...' என்று இலங்கை ராணுவம் மறுத்தது. ஆனால், சாட்டிலைட் படங்களுடன் ஒப்பிட்டு, கொலை நடந்த இடம், இலங்கை ராணுவத்தின் ஆளுகையில் இருந்தது என்று உறுதிசெய்து கொண்டது 'பி.பீ.டி.' அமைப்பு.

போரில் தடை செய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்தியது உட்பட இலங்கை ராணுவம் செய்த பல்வேறு போர்க் குற்றங்களை நான் கூறினேன். இன்றும் தமிழர்கள் வாழும் பகுதிகளில் தீப்பெட்டி, பிஸ்கெட் உள்ளிட்ட 54 வகையான பொருட்களுக்கு தடை உள்ளது. போரின்போது பிடித்துச் செல்லப்பட்ட சுமார் 12 ஆயிரம் தமிழ் இளைஞர்கள் கதி என்னவென்று தெரியவில்லை..! இதையெல்லாம் விரிவாக நான் அந்த குழுவினரிடம் பதிவு செய்தேன்.

விசாரணை நிலவரங்களை வைத்து ஐ.நா. சபையின் மூத்த அதிகாரியான விஜய் நம்பியார் மற்றும் ரோஹித் போகோலாகாமா ஆகிய இரு நபர் சிறப்பு கமிஷனை ஐ.நா. நியமித்துள்ளது. ஆனால், வழக்கம் போல் இலங்கை அரசுடன் சேர்ந்துகொண்டு இந்திய அரசின் ஐ.நா. சபைக்கான பிரதிநிதியும், 'இந்த இரு நபர் கமிஷன் தேவையற்றது. இலங்கையில் நடந்தது உள்நாட்டுப் பிரச்னைதான்' என்று இந்த கமிஷனுக்கு எதிர்ப்புத் தெரிவித்திருப்பதுதான் அநியாயம்!'' என்று முடித்தார் பேராசிரியர் பால் நியூமேன்.

யார் என்ன சொன்னால் என்ன..? அரக்கத்தனத்தை துளியும் அடக்கிக் கொள்ளாமல் தொடர்ந்துகொண்டே இருக்கிறதே இலங்கை இனவெறி மிருகம்!

- டி.எல்.சஞ்சீவிகுமார்
படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

     
 
source:vikatan

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP