சமீபத்திய பதிவுகள்

கொல்லப்பட்டது 'மாவீரன்' பிரபாகரன் அல்ல...... கை ரேகை ஒப்பீடு நிரூபணம்! உளவுத்துறை 'ரா' அதிர்ச்சி........

>> Thursday, July 2, 2009

 
              இந்திய உளவுத்துறை 'ரா' அதிர்ச்சி........

     
      கொல்லப்பட்டது    'மாவீரன்'   பிரபாகரன் அல்ல......       கை ரேகை ஒப்பீடு நிரூபணம்!
 

                                                                      
தி.மு.க வினர் ஏற்கனவே வகித்துவந்த துறைகளை அப்படியே இந்த முறையும் கொடுக்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங்கிடம் போராடிய  தி.மு.க தலைவர் கலைஞர், பேச்சோடு பேச்சாக, 'பிரபாகரன் போர்க்களத்தில் சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்டதாகக் கூறுவது நம்பும்படியாக இல்லையே. பிரபாகரன் கொல்லப்பட்டார் என்றால், அதை என்னிடம் உறுதிப்படுத்த வேண்டியது மத்திய அரசின்கடமையல்லவா... பிரபாகரன் விஷயத்தில் என்ன நடக்கிறது என்று எனக்குப் புரியவில்லை...." என்று குறிப்பிட்டதாக தி.மு.க நாடளுமன்ற கட்சி வட்டாரம் கூறுகிறது!

 தமிழக முதல்வர் கலைஞர், பிரமர் மன்மோகன் சிங்கிடமே இவ்வாறு கடுமையாகப் பேசியிருப்பதன் காரணமே, அவருக்கு பிரபாகரன் மரணம் தொடர்பான அச்சம் பெருமளவு இருந்ததுதான் என்று, அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்! இதன் அடிப்படையில், 'நெற்றிக்கண்' புலணாய்வுக் குழு விரிவான விசாரணையை நடத்தியது. இதன் தொகுப்பு :

 விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் தமிழ்ச் செல்வன், சிங்கள ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டார். அப்போது, தமிழக முதல்வர் கலைஞர் கண்ணீர் கவிதை ஒன்றை 'முரசொலி'யில் எழுதினார்! ஜெயலலிதா உட்பட பலரும் இதனைக் கண்டித்தார்கள்!

 பிரபாகரன் கொல்லப்பட்டதாக் கூறுவதை, முதல்வர் கலைஞர் நம்பவில்லை என்பதால்தான், பிரபாகரன் தொடர்பாக கண்ணீர் அஞ்சலி கவிதையை கலைஞர் எழுதவில்லை! 'மாவீரன்' பிரபாகரான் உயிரோடுதான் இருக்கிறார் என்பதற்கு, இது ஒரு நிரூபணம்! அடுத்து...

 'மாவீரன்' பிரபாகரனின் 'கை விரல் ரேகை' சென்னை போலீசாரால் 1982 ல் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டு, பாதுகாப்பில் இருக்கிறது!
சென்னை - பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அருகில் உள்ள 'கீதா கேப' ஓட்டல் வாசலில், போராளிகள் இயக்கங்களில் ஒன்றான 'வுநுடுழு' அமைப்பின் தலைவரான ஸ்ரீசபாரத்தினத்தின மீது, 'கரிகாலன்' என்கிற பிரபாகரன் தனது கைத் துப்பாக்கியால் சுட்டார். ஸ்ரீசபாரத்தினமும் பிரபாகரனை நோக்கிச் சுட்டார். கரிகாலன் என்கிற பிரபாகரனுடன் நிரஞ்சன் என்பவரும் இருந்தார்! சுற்று வட்டாரம் பரபரப்படைகிறது!  
பாண்டிபஜார் க்ரைம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தி.நகர் சரக சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சுகுமார் இருவரும் ஸ்பாட்டுக்கு விரைந்து சென்று, அனைவரையும் கைது செய்து, துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததுடன், பாண்டிபஜார் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டுசென்றனர். அங்கு 'லாக்-அப்' வசதி இல்லாததால், சங்கிலியால் அவர்களது கால்களை மரபெஞ்சில் இணைத்துக் கட்டி வைக்கின்றனர்! அந்த சமயத்தில் பிரபாகரன் உள்ளிட்ட அனைவரது கை விரல் ரேகைகள் பாண்டிபஜார் க்ரைம் போலிசாரால் பதிவு செய்யப்பட்டு, அங்க அடையாளங்களும் குறிக்கப்பட்டது! பிரபாகரனின் இரண்டு கைகளிலும் உள்ள பத்து விரல்களின் ரேகைகளும் பதிவு செய்யப்பட்டது!

 கரிகாலன் என்பது பிரபாகரனின் புனைப்பெயர்களில் ஒன்று. பிரபாகரன் - ஸ்ரீசபாரத்தினம் துப்பாக்கிச் சூட்டிச் சண்டை விவரம், அப்போது தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி. ஆருக்கு தெரிவிக்கப்படுகிறது. அவரது உத்தரிவின்படி, இந்த துப்பாக்கிச் சண்டை வழக்கு, சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு (உஉp) மாற்றப்படுகிறது!
 
 பிரபாகரன், நிரஞ்சன், ஸ்ரீசபாரத்தினம் மூவரும் சென்னை மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு (கமிஷ்னர் ஆபீஸ்), அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு, யுனுஐ- சண்முகம், பிரபாகரன் உள்ளிட்ட மூவரையும் விசாரித்தனர்! பிரபாகரன், நிரஞ்சன், ஸ்ரீசபாரத்தினம் ஆகிய மூவரது கை விரல் ரேகைகளும் அங்க அடையாளங்களையும் மீண்டும் ஒரு முறை யுனுஐ சண்முகம் பதிவு செய்தார்!
 
• இதைத் தவிற பிரபாகரனின் கை அங்க அடையாளங்களும் ரேகைப் பதிவுகள், அங்க அடையாளங்களும் இந்திய அரசிடமோ இலங்கை அரசிடமோ கூட கிடையாது என்று புலிகளின் தலைமை வட்டாரம் கூறுகிறது! 


• 1986ல் சென்னை - திருமங்கலத்தில், தனது குடும்பத்துடன் தங்கியிருந்தார், பிரபாகரன். பெசண்ட் நகரில், வீட்டு வசதி வாரிய வீட்டில் பிரபாகரனின் தளபதிகளான கிட்டு, மாத்தையன், பேபி சுப்பிரமணியம் போன்ற தளபதிகள் தங்கியிருந்தனர்!

  அந்த சமயம், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசின் உத்தரவின்படி, விடுதலைப் புலிகள் போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர்!
 
 திடீரென்று, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த அனைவரையும் நாடு கடத்த உத்தரவிட்டது மத்திய அரசு!

 முதல்வர் எம்.ஜி.ஆரால் இதனைத் தடுத்து நிறுத்த இயலாத சூழல்!

• அப்போது சென்னையில் தங்கியிருந்த பிரபாகரன், கிட்டு, மாத்தையன் மூவரையும் சென்னை நகர போலீஸ் கமிஷ்னர் தேவராம் தலைமையிலான குழு, சுற்றி வளைத்து கைது செய்து, சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்!
 
 இவ்வாறு கொண்டுவரப்பட்ட பிரபாகரன் உள்ளிட்ட அனைவரையும், எட்டு கோணங்களில் போலீசார் புகைப்படம் எடுத்தனர்!

 அடுத்த நாள் அதிகாலை, இந்திய ராணுவ விமானத்தில் பிராபகரன், கிட்டு, மாத்தையன் உள்ளிட்ட அனைவரும் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு, சிங்கள ராணுவத்திடம் சிக்கிக்கொள்ளாதவாறு, இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்!

•  1982ல்  பாண்டி பஜார் போலீஸ் ஸ்டேஷன், சென்னை மத்தியக் குற்றப் பரிவு இரண்டிலும் பதிவு செய்யப்பட்ட பிரபாகரனின் கை விரல் ரேகைப் பதிவுகளும் .......

•   1986 ல் சென்னை போலீஸ் கமிஷனர் தேவாரம் எடுத்த எட்டுக் கோணங்களிலான புகைப்படமும்..... 

     தமிழகக் க்யூ பிராஞ்ச் போலீசாரிடம் அந்தந்த கால கட்டங்களில் ஒப்படைக்கப்பட்டு, பாதுகாக்கப்படுகிறது!

     தற்போது க்யூ பிராஞ்ச் ஐஜி - சங்கர் ஜூவால்!
                     

•  சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றது ஒரிஜினல் பிரபாகரன்தானா என்பதை உறுதி செய்துகொள்ள, இந்திய அரசின் வெளிநாட்டு உளவுப்பிரிவான சுரூயுறு  பிரதமர் அலுவலகக் கட்டளைப்படி, முயற்சிகளை மேற்கொண்டது!  

• சுரூயுற அமைப்பின் தென்னிந்திய பகுதிக்கான இணை-டைரக்டர் விஜயசங்கர். இவர், கேரளாவைச் சேர்ந்தவர். இலங்கை - இந்தியா பிரச்னைகளை இவர்தான், மேற்கொண்டுள்ளார்!. இவரது அலுவலகம், சென்னையில் கிரீன்வேஸ் சாலையில் ஒரு பங்களாவில், கமுக்கமாக செயல்படுகிறது! பங்களா வாடகை, மாதம் ரூ. 3 லட்சம்!

•  சுரூயுறு இணை- டைரக்டர் விஜயசங்கர், தமிழக 'க்யூ' பிராஞ்ச் ஐஜி. சங்கர் ஜூவாலை மே 18ம் தேதி, இரவு தனது சென்னை அலுவலகத்திற்கு வரவழைத்து, 1982ல் சென்னை போலீசாரால் எடுக்கப்பட்ட பிரபாகரனின் கை விரல் ரேகைகளின் பிரதியையும், 1986ல் எட்டுக் கோணங்களில் சென்னை போலீஸ் கமிஷ்னர் தேவாரத்தால் எடுக்கப்பட்ட பிரபாகரனின் புகைப்பட் பிரதிகளையும் பெற்றார்!

• பிரபாகரன் தொடர்பான இந்த ஆவணங்களைப் பெற்ற விஜயசங்கர், தனி விமானத்தில் தனது அலுவலகத்துடன் இணைந்த தடய அறிவியல் நிபுணர்களுடன் இலங்கைக்குப் பறந்து சென்றார்!
  
   இலங்கையின் ராணுவ தளபதி பொன்சேகாவை,  மே 19ம் தேதி இரவு நேரில் சந்தித்தார்!  சிங்கள இராணுவம் கொன்றுவிட்டதாகக் கூறும் பிரபாகரன் தொடர்பான கை விரல் ரேகைகளின் பிரதிகளைப் பெற்று, பொன்சேகா முன்னிலையிலேயே தன் வசம் உள்ள - தமிழக 'க்யூ' பிராஞ்ச் ஐ.ஜி கொடுத்த பிராபகரனின் கை விரல் ரேகைகளை தடய அறிவியல் நிபுணர்கள் துணையோடு ஒப்பிட்டுப் பார்த்தார்! அதிர்ச்சி! இரண்டு ரேகைகளும் ஒரே மாதிரியாக இல்லாததுடன், ஏராளமான வேறுபாடுகளுடன் இருந்தது! அங்க- அடையாளங்களும் ஒத்துப்போகவில்லை!

•  இந்திய அரசின் வெளிநாட்டு உளவுப் பிரிவான சுரூயுற அமைப்பின் தென்னிந்திய இணை- டைரக்டர் விஜயசங்கரும் உடன் சென்ற தடய அறிவியல் நிபுணர்களும், இலங்கை அரசு ஒரு மகா மோசடியை செய்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, இந்தியா திரும்பினர்!

•  இது தொடர்பான விரிவான அறிக்கையை 'ரா' டைரக்டர் கே.சி. வர்மா வழியாக, இந்திய பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அனுப்பி வைத்தனர்!

•  இந்த முழு விவரங்கள், தமிழக முதல்வர் கலைஞருக்கு பிரதமர் அலுவலகம் மூலமாக தெரிவிக்கப்பட்டுள்ளது!

•   கொல்லப்பட்டது மாவீரன் பிரபாகரன் அல்ல என்பது நிரூபணமாகியுள்ளது! 
 
 
நன்றி:நெற்றிக்கண்
 

StumbleUpon.com Read more...

சிங்கள ராணுவ கொடுமை! பைத்தியமாக்கப்படும் ஈழத்தமிழர்கள்!

 

துரத்தப்பட்டு வவுனியா தடுப்பு முகாம்களில் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் மூன்று லட்சம் தமிழர்களின் தற்போதைய நிலைமைகள் ஜீரணிக்க முடியாதவைகளாக இருக்கின்றன. வார்த்தைகளில் விவரிக்க முடியாத கொடுமை களையும் கொடூரங்களையும் அனுபவித்து வருவதாக, முகாம்களிலிருந்து அதிர்ச்சி தகவல்கள் வருகின்றன.

வவுனியா தடுப்பு முகாமின் பெண் உதவி யாளர் ஒருவர் உதவியுடன் நம்மிடம் பேசிய மதிமலர், ""போர் நிறுத்தப்பட்டதாக கடந்த மாதம் 18-ந்தேதி அறிவித்தது சிங்கள அரசு.

இதனை யடுத்து போரினால் பாதிக்கப்பட்ட மக்களை இங்கு அடைத்து வைத்திருக்கிறது. இதனை முகாம்னு சொல்லக்கூடாது. திறந்தவெளிச் சிறைச்சாலை இது. இந்த சிறைச்சாலை முழு வதும் முள் கம்பிகளால் வேயப்பட்டிருக்கிறது. இதுலதான் மூன்று லட்சம் பேர் இருக்கிறோம். எங்களை கண்காணிக்க மட்டும் 53-வது டிவி ஷன் படையைச் சேர்ந்த 1200 ராணுவத்தினரை குவிச்சு வெச்சிருக்கு சிங்கள அரசு.

இந்த சிறைச்சாலையில் நாங்கள் அடைபட்டு ஒரு மாசத்துக்கும் மேலாச்சு. இதுவரை எந்த மனிதாபிமான உதவியும் அரசாங்கம் செய்து தரலை.

5 பேர்தான் இருக்க முடியுங்கிற ஒரு குடிசையில 20 பேர் இருக்கணும்னு கடுமையா உத்தரவு போட்டிருக்கு ராணுவம். இன்னைக்கு 5 பேர் குடிசைல தங்கினாநாளைக்கு அந்த 5 பேரும் வெளியில நிக்கணும். மற்ற 5 பேர் குடிசைல தங்குவாங்க. இப்படி மாறி மாறி 20 பேரும் அந்த குடிசையை பயன்படுத்திக் கணும். குடிசைக்குள்ளே நுழைஞ்சம்னா நிமிர்ந்து நிக்க முடியாது. குனிஞ்சுக்கிட்டே உள்ளே போகணும். குனிஞ்ச நிலையிலேயே உட்கார்ந்துக்கணும். 5 பேர் உட்கார்ந்துக்கலாம். படுத்துக்க முடியாது. குடிசையில இவ்வளவு அவஸ்தைகள் இருக்கு.

ஒருநாளைக்கு ஒருவேளை கஞ்சி குடிச்சி ரொம்பநாளாச்சு. மூணு, நாலு நாளைக்கு ஒருமுறை ஒரு சோத்துப் பொட்டலத்தையும் ஒரு லிட்டர் அளவுக்கு கஞ்சியும் கொடுத்தார்கள். அடுத்தமுறை சோத்துப் பொட்டலம் வீசுற வரைக்கும் இதுதான். இப்போ அதுவும் இல்லே. சோத்துப் பொட்டலத்துடன் ராணுவ வண்டி எப்போ வரும்னு காத்துக் கிடக்கோம். எந்த பஞ்சமும் இல்லாம வாரி வாரி கொடுத்த எங்கட மக்கள் இன்னைக்கு ஒரு துண்டு பிரட் எப்போ வரும்னு காத்துக்கிடப்பதும், அப்படி பிரட் வரும்போது அதனை அடிச்சு பிடிச்சுக்கிட்டு வாங்க துடிக்கிறதும் கொடுமை!" என்று சொல்லும் போதே, துயரம் தாங்காமல் கதறி அழுதார்.

அழுகையை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் அருகில் இருந்த செல்வராணி என்கிற பெண்மணி மதிமலரிட மிருந்து ஃபோனை வாங்கிப் பேசினார். ""இங்க குடிக்கக்கூட நல்ல தண்ணி கெடை யாதுங்க. இந்த சிறைச்சாலைக்குள் (தடுப்பு முகாம்) 3, 4 நிலத்தடி பம்பு இருக்கு. கெமிக்கல் கலந்த மாதிரி மஞ்ச கலர்லதான் தண்ணி வரும். அதைத்தான், பசித்தாங்க முடியாம பச்சிளங் குழந்தை களிலிருந்து, வய சானவங்க வரைக் கும் குடிக்கிறோம். இதனால பல வியாதிங்க பரவிடுச்சு. இந்த ஒரு மாசத்துல மட்டும் 14 ஆயிரம் பேருக்கு மஞ்சள் காமாலையும் 10 ஆயிரம் பேருக்கு சின்னம்மை நோயும் தாக்கி, அவங்க உயிருக்கு போராடிக்கிட்டு இருக்காங்க" என்றார்.

""வாரத்திற்கு ஒருமுறை, அங்குள்ள ராணுவத் தினருக்கு தேவையான அத்யாவசிய பொருட்கள் அனைத்தும் முறையாக அனுப்பப்படுகிறது. இந்த ராணுவ வாகனத்தைக் கண்டதும், "தங்களுக்கு உணவு வந்துவிட்டது' என்று ஏக்கத்துடன் ஓடி வரு கிறார்கள் தமிழர்கள். அப்போது, அந்த வாகனத்தை மக்கள் சூழ்ந்து விடாமல் அவர்களை விரட்டியடிக் கிறது ராணுவம், "இது மிலிட்டரிக்கு வந்தது' என்று எச்சரிக்கிறது. அப்போது, அந்த மக்களின் நிலைமையை கண்கொண்டு பார்க்க முடியாது. அய்யா, அய்யா, என்றும் சார்சார்என்றும் ஒரு பிரட் கேட்டு அவர்கள் கெஞ்சுவதை இதய முள்ள எவராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாது.

இந்த மக்கள் குளித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட் டது. காரணம், ஒரு சின்னத் தொட்டியில் 1000 லிட்டர் தண்ணியை ஊற்றி விடுகிறது ராணுவம். அந்த தண்ணியும் கிருமிகள் வாழும் கெட்டுப் போன தண்ணி போல இருக்கிறது. அந்த தண்ணீர் தொட்டிக்கு மறைவிடம் கிடையாது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள், எல்லாரும் ஒரே சமயத்தில் ஒண்ணாக நின்னு குளித்துக் கொள்ள வேண்டும்னு ராணுவத்தின் உத்தரவு. இதனாலேயே பலரும் குளிப்பதில்லை. டாய்லெட் செல்ல நீண்ட க்யூவில் நிற்கிறார்கள். மலக்கூடங்கள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. அதனை சுத்தம் செய்ய மறுக்கிறது ராணுவம். இதனால், எங்கு பார்த்தாலும் துர்நாற்றம், கிருமிகள்.

மருத்துவ வசதிகள் எதையும் அரசாங்கம் செய்துகொடுக் காததால், சராசரியாக ஒரு நாளைக்கு 10-க்கும் மேற்பட்ட குழந் தைகளும், வயதானவர்களும் இறந்துபோகிறார்கள். இவர்களது உடல்கள் ஆங்காங்கே அப்படியே கிடக்கின்றன. இவைகளை அப்புறப்படுத்த எந்த அக்கறையும் ராணுவம் காட்டவில்லை. இத னாலும் தொற்றுநோய்கள் வேகமாகப் பரவி, மக்களை மரண அவஸ்தைகளில் தள்ளியிருக்கிறது.

முகாமிற்குள் நாங்கள் ரகசியமாக நுழைந்து மக்களிடம் பேசிக்கிட்டு இருந்தபோது 32 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி, கைக்குழந்தையை ஏந்திக்கிட்டு "ஒரு பாக்கெட் பால் எப்படியாச்சும் வாங் கிக் கொடுங்க' என்று கெஞ்சியவர், "என் மார்ல பால் வத்தி போயிடுச் சிங்கய்யா…' என்று கதறியபோதுஎங்களால் தாங்கிக்க முடியலை. இப்படி நிறைய கொடுமைகளை அனுபவிச்சிக்கிட்டு இருக்காங்க தமிழ் மக்கள். இந்தக் கொடுமை களால் மனநோயாளிகளா மாறிக் கொண்டிருக்கிறார்கள் தமிழர்கள்" என்று விவரித்தனர் தடுப்பு முகாம்களின் உள்ளே சென்று வந்துள்ள அரசு சாரா தொண்டு நிறுவன பணியாளர்கள் சிவசங்க ரன், முத்தையா ஆகியோர்.

தடுப்பு முகாம்களில் உள்ள 14-ல் இருந்து 22 வயதுள்ள இளம் பெண்கள் தனியாகப் பிரித்து கிளி நொச்சி, திரி கோணமலை, யாழ்ப்பாணம் உள்ளிட்ட ராணுவ முகாம்களுக்கு ராணுவத்தினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களை எங்கு வைத்திருக்கிறோம் என்கிற எந்த தகவலையும் சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிவிப்பதில்லை ராணுவம். இதுவரை 3000 இளம்பெண் கள் ராணுவத்தினரால் கடத் தப்பட்டுள்ளனர். ராணுவ முகாம்களில் இந்த இளம் பெண்களை கூட்டு கற்பழிப்பில் சிக்கவைத்து,

கொடூரமாகக் கொல்லப்படுகிறார்கள். அதேபோல, புலிகள் இயக்கத்தில் இருந்த பெண் போராளிகளை கைது செய்து தனிச்சிறையில் அடைத்து வைத்துள்ள ராணுவம், தினமும் இரவு நேரங்களில் 5 பேர், 10 பேர் என அவர்களை இழுத்துச் சென்று சுட்டுக்கொல்கிறார்கள். மேலும் இளைஞர்களை தனியாக பிரித்து இழுத்துச் செல்லும் ராணுவம், பல்வேறு இடங்களில் உள்ள ராணுவ முகாம்களை சீர்படுத்தவும், சுத்தப்படுத்தவும், காவல் அரண்களை அமைக்கவும் பயன்படுத்தி வருகிறது. அந்த பணி முடிந்ததும் வேறொரு ராணுவ முகாமிற்கு கடத்திவிடுகிறது. மேலும் தடுப்பு முகாமில் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ஒவ்வொரு முகா மிற்கு மாற்றிவிடுகிறது. யார், யார் எங்கு இருக்கிறார் என்றோ, அவர்கள் என்ன ஆனார்கள் என்றோ சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவதில்லை. இதனால் அப்பா, அம்மா இல்லாமல் குழந்தை களும், குழந்தைகள் இல்லாமல் பெற்றோர்களும் பைத்தியம் பிடித்ததுபோல் அலைந்துகொண்டிருக்கிறார்கள் என்று வவுனியா, மன்னார், கிளிநொச்சி, இடைத்தங்கல் முகாம்களிலிருந்து நெஞ்சைப் பதறவைக்கும் தகவல்கள் வருகின்றன.

தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளும் கிடைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார் ராஜபக்சே.

-கொழும்பிலிருந்து எழில்

StumbleUpon.com Read more...

மும்பையில் அரபிக் கடலின் மீதான பாலம் திறப்பு

 

 

மும்பையின் மைய வணிகப் பகுதியை நகரின் பொதுமக்கள் குடியிருக்கும் புறநகர்ப் பகுதியுடன் இணைக்கும் வகையில் அரபிக் கடலின் குறுக்காக 4.7 கிலோ மீட்டர் நீளமான பாலம் ஒன்றை மும்பை நகர நிர்வாகம் திறந்துள்ளது.

8 வழி விரைவுப் பாதையை கொண்ட இந்த பாலம், நகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதுடன், பயணிகளின் பயண நேரத்தையும் குறைக்கும்.

அரச நிர்வாகத்தில் ஏற்பட்ட முரண்பாடுகள், மற்றும் உள்ளூர் வாசிகள் மீதான இதன் தாக்கம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கரிசனை ஆகியவை காரணமாக எழுந்த எதிர்ப்புக்களால், திட்டமிடப்பட்டதை விட கால தாமதமாக இந்த 300 மில்லிய டாலர்கள் பெறுமதியான பாலத்திட்டம் பூர்த்தி செய்யப்பட்டது.

21 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் முன்னேற்றத்தை இந்த பாலம் காண்பிப்பதாக அதனை வடிவமைத்தவர்கள் விபரிக்கின்றனர்.

ஆனால், முக்கியமான புதிய உட்கட்டமைப்பை விநியோககிப்பதில் எந்த அளவுக்கு அரசாங்க பணியாளர்கள் செயற்திறனற்று காணப்படுகிறார்கள் என்பதையே இதன் தாமதம் காண்பிப்பதாக, அதன் விமர்சகரகள் கூறுகிறார்கள்.

StumbleUpon.com Read more...

இலங்கை: முகாமில் உள்ள உறவினர்களை பார்க்க முயன்ற 2 தமிழர்கள் சுட்டு கொலை

 

உறவினர்களைப் பார்க்க இலங்கை ராணுவம் அனுமதிக்காததால் முள் வேலியைத் தாண்டிச் சென்று பார்ப்பதற்காக பாதை அமைக்க முயன்ற இரு தமிழர்களை ராணுவத்தினர் மிருகத்தனமாக சுட்டுக் கொன்று விட்டனர்.

இடம் பெயர்ந்தோர் முகாம்கள் என்ற பெயரில் லட்சக்கணக்கான தமிழர்களை ஆடு, மாடுகளைப் போல அடைத்து வைத்துள்ளது இலங்கை அரசு. இதனால் போர் முடிந்த பிறகும் கூட ஊர்களுக்குத் திரும்பி அமைதியான வாழ்க்கை வாழ முடியாமல் பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர் ஈழத் தமிழர்கள்.

மிகப் பெரிய திறந்த வெளி சிறைச்சாலை போலவே உள்ளது இந்த முகாம்கள். முள் வேலிகளால் இந்த முகாம்கள் சூழப்பட்டுள்ளன. ராணுவத்தினர் பாதுகாப்புக்கு மத்தியில் அடிமைகளைப் போல கிடக்கிறார்கள் தமிழ் மக்கள்.

குடும்பம் குடும்பமாக தங்க வைக்கப்படாமல் பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் தமிழ் மக்கள்.

இந்த நிலையில் உறவினர்களைப் பார்க்க முடியாததால், முள் வேலியைத் தாண்டிச் செல்ல பாதை அமைத்ததற்காக 2 தமிழர்களை குருவி சுடுவது போல கொடூரமாகக் கொன்று குவித்துள்ளது ராணுவம்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள செட்டிகுளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ராமநாதன் முகாமுக்கும், அனந்தக்குமாரசாமி முகாமுக்கும் இடையில் முள் வேலி வைத்து பிரித்துள்ளனர்,.

இரண்டு முகாம்களிலும் இருப்பவர்கள் மற்றைய முகாமில் உள்ள தமது குடும்பத்தவர்களைச் சந்திப்பதற்காக இந்த முட்கம்பி வேலிகளுக்கு இடையில் பாதை ஒன்றை அமைத்துப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.

இதைப் பார்த்த ராணுவம் முகாம்களில் உள்ளவர்களை எச்சரித்து பாதையையும் மூடி விட்டனர். ஆனால் அப்படியும் தமிழ் மக்கள் பாதையை திறந்து போய் வந்ததால், சிமென்ட் தூண்களை வைத்து இறுக்கமாக அதை அடைத்து விட்டனர்.

ஆனால் அதையும் தகர்த்து பாதை அமைத்து தமிழ் மக்கள் சென்று வந்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த ராணுவம், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று அந்தப் பாதை வழியாக செல்ல முயன்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து அநியாயமாக உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்களை ராணுவம் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டது.

உறவினர்களைப் பார்ப்பதற்காக பாதையைப் பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு அப்பாவிகளை ராணுவம் இப்படி மிருகத்தனமாக கொன்று விட்டதால் இரு முகாம்களிலும் தமிழ் மக்கள் மிகுந்த அச்சத்தில் காணப்படுகின்றனர்.

StumbleUpon.com Read more...

வரலாற்றுச்சுவடுகள்:இலங்கை தமிழர் வரலாறு-4

இலங்கை மீது கரிகால்சோழன் நடத்திய படையெடுப்பு முக்கியமானது.

சங்க காலத்தில் புகழ் பெற்று விளங்கிய சோழ மன்னர்களில் தலைசிறந்தவன் கரிகால்சோழன்.

படையெடுப்பு


 
அவன், இலங்கை மீது படையெடுத்தான். அங்கு ஆண்ட சிங்கள மன்னனை முறியடித்தான். தன் வெற்றிக் கொடியை பறக்கவிட்டான்.
பின்னர் 12,000 சிங்களர்களை சிறைப்படுத்தி தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்தான். அவர்களைப் பயன்படுத்தி, திருச்சிராப்பள்ளி அருகே, காவிரியின் குறுக்கே "கல்லணை''யைக் கட்டினான். உலகத்திலேயே மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை'' விளங்குகிறது.

கஜபாகு

கரிகாலன் படையெடுப்பின்போது, சிங்கள இளவரசன் கஜபாகு சிறுவனாக இருந்தான். (கஜபாகு என்றால், யானையைப் போன்ற கைகளை உடையவன் என்று பொருள்)

அவன் கி.பி. 112-ம் ஆண்டில் இலங்கை அரசனாக முடிசூட்டிக் கொண்டான்.

அவன் ஒருநாள் நகர சோதனைக்குச் சென்றபோது, ஒரு வீட்டில் விதவைப் பெண் ஒருத்தி உரத்த குரலில் அழும் சத்தம் கேட்டது. அந்தப் பெண்ணை கஜபாகு சந்தித்து, "ஏன் அழுகிறாய்?'' என்று கேட்டான்.

"பல ஆண்டுகளுக்கு முன், சோழ மன்னன் ஒருவன் இலங்கை மீது படையெடுத்தான். அந்த சோழ மன்னன், சிங்களர் பலரை சிறைப்பிடித்து, தமிழ்நாட்டில் அணை கட்டுவதற்காக அழைத்துச் சென்றான். அப்படி அழைத்துச் செல்லப்பட்டவர்கள் திரும்பி வரவேயில்லை. சோழனுடன் போன என் பிள்ளைகளும் திரும்பவில்லை. அவர்கள் என்ன ஆனார்களோ என்று நினைத்து அழுதேன்'' என்றாள், அந்தப் பெண்மணி.

இதைக்கேட்டு கஜபாகு ஆத்திரம் அடைந்தான். கரிகால்சோழனைப் பழிவாங்குவதாக சபதம் செய்தான்.

பெரும் படை திரட்டினான். சோழ நாட்டின் மீது படையெடுத்துச் சென்றான்.

இதற்கிடையே கரிகால்சோழன் இறந்து விட்டான்.

சோழப் படைகளுடன் கஜபாகு கடும் போர் புரிந்து, சிறைபிடிக்கப்பட்டிருந்த 12 ஆயிரம் சிங்களவர்களை மீட்டான். பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில், ஆயிரக்கணக்கான தமிழர்களை சிறை பிடித்து வந்து, இலங்கையில் குடியேற்றினான்.

இலங்கை மீது கரிகால்சோழன் படையெடுத்துச் சென்றது, வரலாற்றில் இடம் பெற்ற நிகழ்ச்சி. மற்றவை, "பூஜாவலி'' என்ற இலங்கை நூலில் காணப்படும் தகவல்கள்.

கண்ணகி

இந்த கஜபாகு, தமிழ்நாட்டுக்கு வந்து, "கண்ணகி விழா''வில் கலந்து

கொண்டதாக, சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, இலங்கையில் கண்ணகிக்கு சிலை எடுத்து வழிபாடு செய்தான் என்றும் வரலாற்று நூல்கள் கூறுகின்றன.

அனுராதபுரத்தை ஆண்ட தமிழ் மன்னன் எல்லாளனை, சிங்கள மன்னன் துட்டகாமினி தோற்கடித்தான் அல்லவா? அதன்பின், அப்பகுதியை தமிழ் மன்னர்களும், சிங்கள மன்னர்களும் மாறி மாறி அரசாண்டதாக வரலாறு கூறுகிறது. ஏழு தமிழ் மன்னர்கள் இவ்வாறு அங்கே ஆட்சி நடத்தியுள்ளனர்.

மணிமேகலை

சிலப்பதிகாரத்தில் வரும் மாதவியின் மகள் மணிமேகலை. இவளுடைய வரலாற்றை விவரிக்கும் "மணிமேகலை'' காப்பியத்தில், பழங்கால இலங்கை பற்றி குறிப்புகள் வருகின்றன.

மணிமேகலை, காவிரிப்பூம்பட்டினத்தில் உள்ள ஒரு பூங்காவில் மயக்கம் அடைந்து விழுந்தாள். மணிமேகலா தெய்வம், அவளை மணிபல்லவம் தீவுக்கு தூக்கிச்சென்றது.

(இலங்கையின் வடபகுதி அருகே, காரைத்தீவு என்ற தீவு உள்ளது. இந்தத் தீவுதான், பழங்காலத்தில் `மணிபல்லவம்' என்று அழைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.)

அந்தத் தீவில் இருந்த பெரிய புத்தர் சிலையை மணிமேகலை வணங்கினாள். அருகில் ஒரு பெரிய பொய்கை இருந்தது. பவுர்ணமி நாளில் இதில் இருந்து `அமுதசுரபி' என்ற அட்சய பாத்திரம் வெளிப்பட்டது. உணவை எடுக்க எடுக்க, தொடர்ந்து உணவு வந்து கொண்டே இருக்கக்கூடிய அதிசய பாத்திரம் அது.

அமுதசுரபியைக் கொண்டு, ஏராளமானவர்களுக்கு உணவளித்தாள், மணிமேகலை.''

இவ்வாறு மணிமேகலை காப்பியம் கூறுகிறது.

பல்லவர் படையெடுப்பு

இலங்கை மீது, நரசிம்மவர்மர் காலத்தில் நடந்த பல்லவர் படையெடுப்பு பற்றிய விவரங்கள், தமிழக கல்வெட்டுகளில் உள்ளன.
தமிழகத்தில் கி.பி. 630-660-ல் ஆட்சி புரிந்த நரசிம்மவர்மர் காலத்தில், இலங்கையில் இருந்து மானவன்மன் என்ற அரசன் அவரிடம் அடைக்கலம் கோரி வந்தான்.

இலங்கையில், மணிமகுடம் யாருக்கு என்று மானவன்மனுக்கும், அவன் சகோதரன் அட்டதத்தனுக்கும் போட்டி ஏற்பட்டது. இதில் தோல்வி அடைந்த மானவன்மன் இலங்கையில் இருந்து விரட்டி அடிக்கப்பட்டான்.

மானவன்மன், நரசிம்மவர்மரிடம் தஞ்சம் அடைந்து, தனக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டான். அந்த சமயத்தில், சாளுக்கிய அரசன் புலிகேசி ஆண்ட வாதாபி மீது நரசிம்மவர்மர் படையெடுத்துச் சென்றார். அவருக்கு மானவன்மன் உதவியாக இருந்தான்.

இதற்கு நன்றி தெரிவிக்கும் விதத்தில், மானவன்மனுக்கு உதவியாக ஒரு படையை இலங்கைக்கு நரசிம்மவர்மர் அனுப்பினார். ஆனால் அந்தப் படை முறியடிக்கப்பட்டது. தோல்வியுடன் மீண்டும் தமிழ்நாட்டுக்கு திரும்பி வந்தான், மானவன்மன்.

நடந்ததை அறிந்த நரசிம்மவர்மர், ஒரு பெரும் படையை கப்பல் மூலம் இலங்கைக்கு அனுப்பினார். அந்தப் படையிடம் அட்டதத்தன் படை தோற்றது. மானவன்மன் இலங்கை அரசன் ஆனான்.

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP