சமீபத்திய பதிவுகள்

இந்தோனேஷியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்

>> Saturday, October 11, 2008

இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 2 மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.3 ஆகப் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 1.21 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட முதல் நிலநடுக்கம், மலுகு மாகாணத்தின் டெர்னேட் பகுதியில் இருந்து 131 கி.மீ தொலைவில் மையம் கொண்டதாக இந்தோனேஷிய புவியியல் ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் 30 நிமிடங்கள் கழித்து, சுமத்ரா மாகாணத்தின் மென்டாவாய் பகுதியில் இருந்து 376 கி.மீ. தொலைவில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது பூமிக்கடியில் 134 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாகவும் அந்நாட்டு புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
!
இந்தோனேஷியாவின் கிழக்குப் பகுதியில் அடுத்தடுத்து 2 மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் இது 5.3 ஆகப் பதிவாகியுள்ளது.

இன்று அதிகாலை 1.21 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட முதல் நிலநடுக்கம், மலுகு மாகாணத்தின் டெர்னேட் பகுதியில் இருந்து 131 கி.மீ தொலைவில் மையம் கொண்டதாக இந்தோனேஷிய புவியியல் ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பின்னர் 30 நிமிடங்கள் கழித்து, சுமத்ரா மாகாணத்தின் மென்டாவாய் பகுதியில் இருந்து 376 கி.மீ. தொலைவில் 2வது நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், அது பூமிக்கடியில் 134 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதாகவும் அந்நாட்டு புவியியல் ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
http://tamil.webdunia.com/newsworld/news/international/0810/11/1081011015_1.htm

StumbleUpon.com Read more...

மதவெறி தாக்குதலை தடுக்க மதசார்பற்ற சக்திகள் ஒன்று சேர வேண்டும்: வாச‌ன்!

 
''மதவெறி சக்திகளின் கொடூரமான போக்கை தடுக்க மதசார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்'' என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

webdunia photo FILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''கடந்த ஆறு வாரங்களாக, ஒரிசா மாநிலத்தில் கந்தமால் மாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவர்கள் மீது விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட மதவெறி சக்திகள் தொடர்ந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு அம்மாநில அரசு நடவடிக்கை எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இதுவரை கிறிஸ்தவர்களின் 4,500 வீடுகளும், நூற்றுக்கணக்கான தேவாலயங்களும் எரிக்கப்பட்டுள்ளன. 52 பேர் உயிரிழந்துள்ளனர். 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வீடிழந்து அகதிகளாக இருக்கின்றனர். கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்டுள்ளார்.

38 நாட்களுக்குப் பிறகுதான் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனாதை இல்லத்தில் இருந்த பெண் ஒருவர் வன்முறையாளர்களால் உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார். ஒரிசா மாநில அரசு வன்முறையை அடக்க முயற்சி செய்யாதது மிகுந்த வேதனைக்குரியது.

மேலும் ஒரிசாவில் குடியரசு‌த் தலைவ‌ர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது. ஒரிசா ‌நிக‌ழ்வுகளை பார்க்கும்போது, குஜராத் பாணியை பின்பற்றி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய ந‌ிக‌ழ்வுக‌ள் கர்நாடக மாநிலத்திலும் பரவி வருவது, மதவாத சக்திகளின் திட்டமிட்ட செயலாகவே தெரிகிறது.

எனவே, மதவெறி சக்திகளின் இத்தகைய கொடூரமான போக்கை தடுத்து நிறுத்த மதசார்பற்ற சக்திகள் ஓரணியில் திரண்டு, மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைக்கும் துணை நிற்கவேண்டும்'' எ‌ன்று ஜி.கே.வாசன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/0810/07/1081007017_1.htm

 

StumbleUpon.com Read more...

இஸ்லாமியர்கள் பைபிளை வாசிக்கும் போது எவற்றை மனதில் கொள்ளவேண்டும்?

இஸ்லாமியர்கள் பைபிளை வாசிக்கும் போது எவற்றை மனதில் கொள்ளவேண்டும்?

பைபிளை வாசித்தல் 


Reading the Bible

 
நீங்கள் பைபிளை வாசிக்கத் தயாராய் இருக்கிறீர்கள், நல்லது. உங்களிடம் ஒரு முழு வேதாகமம் (பைபிள்) இருக்கலாம் அல்லது இயேசுவைப் பற்றிக் கூறும் பகுதி மட்டும் இருக்கலாம். கிறிஸ்துவர்கள் இதைப் புதிய ஏற்பாடு என்றும் முந்தைய‌ பகுதியை ப‌ழைய ஏற்பாடு என்றும் அழைப்பார்கள். இந்தப் பெயர்கள் மிக‌ முக்கியமான அர்த்தத்தைக் கொண்டவை. தேவன் மனிதர்களுடன் சரித்திர காலங்கள் முழுவதும் உடன்படிக்கைகளை (Agreements/Testaments) ஏற்படுத்திக்கொள்கிறார். அவர் பல வழிகளில் தம்மை யார் என்று மனிதனுக்கு வெளிப்படுத்தி தம் கட்டளைகளை நாம் நம்பிக்கையுடனும் கீழ்ப்படிதலுடனும் கடைப்பிடிக்க ஆணையிடுகிறார்.


பைபிளைப்பற்றி முதலாவதாக நாம் விளங்கிக்கொள்ள வேண்டியது என்னவென்றால், அமைப்பினால் பைபிள் குர்‍ஆனிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்பதே. குர்‍ஆன் ஷரீப்பின் வசனங்கள் அல்லாவின் நேரடிப் பேச்சு போன்று கொடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் அது முகமது மூலமாக வெளிவந்ததாயினும் அவர் இவ்விடத்தில் பாயும் நீரின் தன்மை மாறாமல் கொண்டுச் செல்லும் வாய்க்கால் போன்று சித்தரிக்கப்படுகிறார்.

இத‌ற்கு மாறாக‌ ப‌ரிசுத்த‌ வேதாக‌ம‌ம் ஒரு சில‌ வ‌ருட‌ங்க‌ளிலோ ஒரே ந‌ப‌ராலோ எழுத‌ப்ப‌ட‌வில்லை. அது பல நூற்றாண்டுகளில் பற்பல வேறுபட்ட நபர்களால் எழுதப்பட்டது. இதில் தேவன் பல சமயங்களில் நேரடியாகவும் சில சமயங்களில் பரிசுத்தவான்களின் சிந்தனைகள் வார்த்தைகள் மூலமும் பேசுகிறார். அவர் சரித்திரபூர்வமாகவும், குறிப்பாக இயேசு கிறிஸ்து வழியாகவும் பேசுகிறார்.
 

பைபிளை வாசிக்கும்போது நாம் தேவனின் வார்த்தையின் சாரத்தைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்த வித்தியாசத்தை நாம் மனதில் கொள்ள வேண்டும். பைபிள் குர்‍ஆனைப் போன்றே இருக்கும் என நாம் எதிர்பார்த்தால் நாம் ஏமாற்றத்துக்கு உள்ளாவோம். எனினும் திறந்த மனதுடன் நாம் பைபிளை வாசிப்போமானால் நாம் ஆச்சரியப்படும் விதத்தில் தேவன் நம்மோடு ஒரு புதுமைமிக்க‌ வல்லமையான வழியில் பேசுவார்.

 
குர்‍ஆனைப் போல் அல்லாது, பைபிள், கடவுளின் சட்டத்தையே முக்கியப் பொருளாகக் கொண்டதல்ல. எனினும் அதில் பல பகுதிகள் தேவனின் மகத்துவத்தையும் வல்லமையையும் பற்றி உண்மையில் குறிப்பிடத்தான் செய்கின்றன. தேவன் இந்த உலகத்தினைப் படைத்த ஒரு வல்லமையான படைப்பாளி என்ற செய்தியுடன் பைபிள் தொடங்குகிறது (ஆதியாகமம் : 1 ஆம் அதிகாரம்). அடுத்து ஆதாமும் ஏவாளும் பாவம் செய்து அவருடனான நெருங்கிய தொடர்பை இழக்கும்போது அவரது தூய்மையையும் பரிசுத்தத்தையும் நாம் காண்கிறோம். அடுத்து வரும் "சரித்திர நூல்"களில் இஸ்ரவேல் மக்கள் தங்களிலும் தங்களின் எதிரிகளிலும் தேவனின் நியாயத்தீர்ப்பு எவ்விதம் செயல்பட்டது என உணர்வதைப் பார்க்கிறோம். அவர் எவ்விதம் அவர்களது வாழ்வின் நடைமுறைகளுக்கான கட்டளைகளைக் கொடுத்தார் (குறிப்பாக பத்துக்கட்டளைகள்) என அறிகிறோம்.(யாத்திராகமம் 20)

 
எனினும், பைபிள் வெளிப்படுத்தும் தேவனின் மிக முக்கியமான தனமைகள் இவை அல்ல. அது மனிதர் மீது அவர் பொழியும் மாசற்ற அன்பு மட்டுமே. அதாவது பாவத்தில் ஆழ்ந்த இஸ்ரவேல் மக்களின் மீது அவர் கொண்ட பொறுமையான அன்பே ஆகும். அது பிரத்தியோகமான வழிகளில் தம்மைப் புரிந்துகொண்ட நோவா, ஆபிரகாம், மோசே, யோபு, தாவீது போன்றோர்களைத் தெரிந்தெடுத்தது அவரது தூய‌ அன்பே.

 
பழைய உடன்படிக்கையில், தேவன், அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களிடம் எவ்வளவு முறை நெருங்கி வந்தார் என்றும் அவர்களோ அவருக்குக் கீழ்படியாமல் அவரை விட்டு எத்துனை முறை விலகிச் சென்றார்கள் என்பதையும் காண்கிறோம். இதனால் தேவன் இறுதியாக மனிதர்களால் மீறப்பட்ட உடன்படிக்கையை நிறைவேற்றவும், அதனை தொடரச்செய்து புதிய உடன்படிக்கையைக் கொண்டு வருகிறார். இம்முறை அவர் அதை பாவமுள்ள பலவீனமான மனிதர்களின் கீழ்ப்படிதல் மூலமாக அல்லாமல், பரலோகத்தினின்று இறங்கிய இரட்சகராகிய மேசியா(மஸீஹா)வின் மூலம் ஸ்தாபிக்கிறார். இந்த மேசியா, தீர்க்கதரிசனங்களின் மூலம் பல முறை முன்னறிவிக்கப்பட்டவர். இப்போது அவர் உன்னதமான ரோம சாம்ராஜ்ஜியத்தில் உள்ள ஒரு பின் தங்கிய பகுதியில் ஒரு ஏழைவீட்டில் ஒரு சாதாரண தச்சனின் மகனாகப் பிறந்தார். ஆம், தேவன் மகத்துவமும் மகா வல்லமையும் கொண்டவர் தான், ஆனாலும் அவர் தமது வல்லமையினாலும், மகத்துவத்தினாலும் நாம் முற்றியும் அழிந்துப் போகாதபடி அவரை இனம் கண்டுகொள்ளும் பொருட்டு அவற்றை மறைத்து வெளிப்பட்டார்.

 
புதிய ஏற்பாட்டை நாம் வாசிக்கும்போது நமது மனதில் தவறான பார்வை எதுவும் ஏற்பட்டு விடாதபடி நாம் எச்சரிக்கையாய் இருத்தல் அவசியம். இயேசு ஒரு சாதாரண மனிதர் அல்லது ஒரு நபி மட்டுமே எனச் சொல்வோமானால், நாம் முற்றிலும் அவரைப் புரிந்துகொள்ளவே மாட்டோம். அவர் மனிதனை விடவும் மேன்மை பொருந்தியவர் என்றும் ஒரு நபி (தீர்க்கதரிசி / Prophet)யைவிட மேலானவர் என்றும் பைபிள் நமக்குக் காட்டுகிறது. புதிய ஏற்பாடு அவரைப்பற்றிக் கூறும் செய்திகள் அனைத்தையும் முற்றிலும் நீங்கள் வாசிக்கும் வரைக்கும் அவரைப்பற்றி மனதில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் ஒரு முடிவிற்கு வராமல் இருங்கள். குறிப்பாக இரட்சிப்பு பற்றி அவர் சொல்லிய வார்த்தைகளை கவனமாய் தியானியுங்கள். அவரால் தெரிந்துகொள்ளப்பட்ட அவரது ஊழியர்கள் அவரைப்பற்றிக் கூறியவைகளைச் சிந்தியுங்கள். பைபிளின் சீரிய நோக்கம் தேவ கட்டளைகளை நமக்குக் கொடுப்பதோடு மட்டும் நின்று விடாமல் ஒரு உன்னதமானவரை, அதாவது ஒருபோதும் நமக்கு நாமே கூடச் செய்ய முடியாதவைகளைச் செய்யக்கூடிய ஒருவரிடம் நம்மை அறிமுகப்படுத்துகிறது.

இந்த‌ இயேசு கிறிஸ்துவானவர், புதிய‌ ஏற்பாட்டில் ம‌ட்டுமின்றி ஒரு வகையில் ப‌ழைய‌ ஏற்பாட்டிலும் கூடப் பேச‌ப்ப‌டும் ஒரு மைய‌க்க‌ருத்தான‌வ‌ர் ஆவார். ப‌ழைய‌ ஏற்பாடு அவர் பூமியில் தோன்றிய காலத்திற்குப் ப‌ல‌ நூற்ற‌ண்டுக‌ளுக்கு முன்பே எழுதப்ப‌ட்டிருந்த‌ போதிலும் அவ‌ரைப்ப‌ற்றிய‌ ப‌ல‌ குறிப்புக‌ள் அதில் காண‌ப்ப‌டுகின்ற‌ன‌. உதார‌ண‌மாக‌ யோசேப்பின் வாழ்க்கையில் அவ‌ர‌து அடிச்சுவட்டை நாம் காண‌ முடியும். இஸ்ர‌வேல‌ரின் ப‌லியிடும் முறை ந‌ம‌து பாவ‌ங்க‌ளுக்கான‌ த‌ண்டனைக்குரிய‌ ப‌ரிகாரத்தின் தேவையை ந‌ம‌க்கு விள‌க்குகிற‌து. தீர்க்க‌த‌ரிசிக‌ளும் கூட‌ ந‌ம‌க்காகப் பாடுப‌ட்டு ந‌ம்மை இறுதி வெற்றி வ‌ரை வ‌ழிந‌டத்தி அவரது ஆவிக்குரிய நித்திய ராஜ்ஜியத்தில் சேர்த்துக்கொள்ள வ‌ருகின்ற‌ ஒருவ‌ரைப் ப‌ற்றிப் பேசுகிறார்க‌ள்.

 
இவை அனைத்தும் புதிய‌ ஏற்பாட்டில் நிறைவேறுகின்ற‌ன‌. அதில் அவ‌ர‌து வாழ்க்கையைப் ப‌ற்றின‌ நான்கு வகையான‌ பார்வைக‌ள் கொடுக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன‌ (ம‌த்தேயு, மாற்கு, லூக்கா ம‌ற்றும் யோவான் சுவிசேஷ‌ங்க‌ள்). அத‌ன் பின்பு அவ‌ர‌து (நேரடி சீடர்களின்) அடியார்க‌ளின் ச‌ரித்திர‌மும் (அப்போஸ்தலர் நடபடிகள்) அதைத் தொடர்ந்து அவ‌ர்க‌ள‌து போத‌னைக‌ளும் (புதிய‌ ஏற்பாட்டின் பிற்ப‌குதியில்) உள்ள‌ன‌.

 
ஆம், பைபிள் குர்‍ஆனிலிருந்து முற்றிலும் வித்தியாசமானது. அத‌னுடைய‌ ச‌ரித்திரம் வித்தியாசமானது; அதன் நோக்கம் வித்தியாசமானது. அத‌ன் மைய‌க்க‌ருத்து வித்தியாசமானது. ப‌ல்வேறு காலங்களைச் சார்ந்த புத்த‌க‌ங்க‌ளின் தொகுப்பாய் ஒரு நூலகமாய் இருந்த‌போதும் ஒரே புத்த‌க‌மாக‌ ஒரே தொனியில் தேவ‌னின் குர‌லை எடுத்துரைக்கிற‌து. நீங்கள் பைபிளைப் படிக்கும் போது அது உங்க‌ளிட‌மும் பேச‌ட்டும்! "தேவ‌னே, உம்மை என‌க்கு வெளிப்ப‌டுத்தும்" என‌ ஜெபியுங்க‌ள். நீங்கள் க‌ருத்துட‌ன் ஜெபிக்கும் பட்சத்தில் அவர் உங்களின் இந்த‌ ஜெப‌த்திற்கு நிச்சயம் ப‌தில‌ளிப்பார்.

 
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/Bible/reading.html

 


 
 
முகப்புப் பக்கம் ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்


© Answering Islam, 1999 - 2008. All rights reserved.
 
 
 

StumbleUpon.com Read more...

முதல் டெஸ்ட்:இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 313

lankasri.comஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் மூன்றாம் நாளான இன்று இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன்கள் எடுத்துள்ளது.மழை காரணமாக ஆட்டம் இடையில் தடைபட்டது.முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 430 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 68 ரன்களை எடுத்திருந்தது.

மூன்றாம் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 8 விக்கெட்டுகளை இழந்து 313 ரன்கள் எடுத்திருந்தது.

திராவிட் 51 ரன்களும் ஷேவாக் 45 ரன்களும் எடுத்தனர்.கங்குலி 47 ரன்களும் எம்.எஸ்.தோனி 9 ரன்களும் எடுத்தனர்.ஹர்பஜன் சிங் 54 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஜாகீர்கான் 35ரன்களுடனும் அனில் கும்ப்ளே ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் உள்ளனர்
http://www.lankasrisports.com/index.php?subaction=showfull&id=1223731648&archive=&start_from=&ucat=4&

StumbleUpon.com Read more...

ஒரிஸ்ஸா கலவரம் ஆடியோவில் கேட்க‌
ஒரிஸ்ஸா கலவரம்
ஒரிசாவின் உண்மை நிலையை அறிந்து கொள்ள ஆடியோ
இந்திய மாநிலமான ஒரிஸ்ஸாவில் வாரக் கணக்கில் இந்து அமைப்புகளுக்கும், கிறிஸ்தவ அமைப்புகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் நீடித்து வருகின்றன.

கிறிஸ்தவ தேவாலயங்கள் பல சேதப்படுத்தப்பட்டுள்ளன. பலர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான்வர்கள் வீடுகளை விட்டு வெளியேறி அகதிகளாக்கப்பட்டிருக்கிறார்கள்.


வன்முறைக்கு எதிராக கண்டனங்கள் எழுந்துள்ளன

02/10/2008

இந்த நீடிக்கும் மதக் கலவரங்களின் பின்னணி என்ன என்று ஒரிஸ்ஸாவில் 30 ஆண்டுகளாக செயற்பட்டுவரும் தொண்டு நிறுவனமான கிராம வளர்ச்சி சுகாதார மையத்தின் இயக்குநரான வில்லியம் ஸ்டான்லி தமிழோசையில் தகவல் வெளியிட்டார்.

வில்லியம் ஸ்டான்லி செவ்வி (கிறிஸ்தவர் என்ற பெயரில் உள்ள ஒரு சுரணை இல்லாதவர்)

04/10/2008

ஒரிஸ்ஸா மாநிலத்தில் கலவரங்கள் நடக்கும் காந்தமால் மாவட்டத்திற்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட இடங்களையும் திப்புக்குள்ளானவர்களையும் இந்தியாவின் கத்தோலிக்க ஆயர் பேரவையின், நீதி மற்றும் அமைதிக்கான மனித மேம்பாட்டு வளர்ச்சி மையத்தின் செயலர் அருட்தந்தை நித்திய சகாயம் அவர்கள் நேரில் சந்தித்து திரும்பியிருக்கிறார்.

ஒரிஸ்ஸா கலவரங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிப்பதற்கு, பஜ்ரங் தள் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் போன்ற தீவிர வலதுசாரி இந்து அமைப்புகள் தான் காரணம் என்று கிறிஸ்தவ அமைப்புகள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் துணைத் தலைவர் வேதாந்தம் பதில் தெரிவித்தார்.

பொய் சொல்லதெரியாத சங்பரிவார் தலைவர் (பெறும் புளுகர்)


StumbleUpon.com Read more...

ஆண்டுதோறும் 7மில்லியன் பேர் கண்பார்வை இழக்கிறார்கள்:அதிர்ச்சி தகவல்கள்

 
 
நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 1.38சதவீதத்தினர் பார்வை இழந்து வருபவர்கள் பட்டியலில் உள்ளனர்.1986-89-ம் ஆண்டில் மத்திய அரசும்,உலக சுகாதார நிறுவனமும் சேகரித்த புள்ளி விவரத்தில் நாட்டின் மக்கள் தொகையில் 1.49சதவீதம் பேர் பார்வை இழந்து வருபவர்கள் என்பது தெரிய வந்தது.

கண்பார்வை இழப்புக்கு கண்புரை நோய்,பார்வை குறைபாடுகள்,கண் நீர் அழுத்தம்,சர்க்கரை நோயினால் விழித்திரை பாதிப்பு,கருவிழி பாதிப்பு,இதர நோய்கள் பார்வை இழப்பின் முக்கிய காரணங்கள் என்கின்றனர் டாக்டர்கள்.

கண்புரை நோய் இன்று பலரை பாதிக்க செய்துள்ளது. இந்த நோயினால் 80சதவீதம் பேர் பார்வை இழந்து வந்தனர்.

இதை மத்திய அரசும்,உலக சுகாதார நிறுவனமும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து 55சதவீதம் ஆக குறைத்து உள்ளது.

பார்வை இழப்பை தடுப்பதற்காக மட்டும் ஆண்டு தோறும் ரூ.320கோடி முதல் ரூ.425கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.உலக அளவில் பார்வை இழப்பால் நேரடியாக ஆண்டு தோறும் 25மில்லியன் பொருளாதார நஷ்டம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

நெல்லை அரவிந்த் கண்மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் ராமகிருஷ்ணன் இதுபற்றி கூறியதாவது:-

உலகில் 45மில்லியன் மக்கள் பார்வை இழந்து தவிக்கின்றனர். இதில் 60சதவீதம் பேர் வளரும் நாடுகளில் உள்ளனர்.

ஒவ்வொரு 5வினா டிகளில் ஒருவர் பார்வை இழந்து கொண்டிருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் 7மில்லியன் மக்கள் பார்வை இழந்து வருகின்றனர்.

உலகில் பார்வை இழந்தவர்களில் 5பேர்களில் ஒருவர் இந்தியாவில் வாழ்கிறார்.

நம்நாட்டில் 11ஆயிரம் கண்டாக்டர்கள் உள்ளனர். இந்திய மக்கள் தொகையை ஒப்பிடும் போது 1லட்சம் பேருக்கு ஒரு கண்டாக்டர் உள்ளார்.

நகர்ப்புறங்களில் 20ஆயிரம் பேருக்கு ஒரு கண்டாக்டரும்,கிராமப் புறங்களில் 2லட்சம் பேருக்கு ஒரு கண்டாக்டரும் உள்ளனர்.

வரும் 2020-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் பார்வையோடு இருக்கும் உரிமையை வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக அளவில் எல்லோருக்கும் பார்வை நலம் "2020"என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

உலக கண்ணொளி தினமான நேற்று முதல் உலகம் முழுவதும் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

http://www.newindianews.com/index.php?subaction=showfull&id=1223719595&archive=&start_from=&ucat=1&

 

StumbleUpon.com Read more...

அமெரிக்க அதிபர் புஷ் மீது ஒபாமா கடும் தாக்கு

 
 
lankasri.comஅமெரிக்க அதிபர் புஷ்ஷின் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டன என்று அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் பாரக் ஒபாமா குற்றஞ்சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபராக இருக்கும் புஷ்ஷின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைகிறது. இதையெடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய அடுத்தமாதம் அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக பாரக் ஒபாமாவும் ஆளும் குடியரசு கட்சி சார்பாக ஜான் மெக்கைனும் போட்டியிடுகிறார்கள்.இவர்களில் ஒபாமாவுக்கே ஆதரவு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

இருவரும் பொதுமக்கள் மத்தியில் அடிக்கடி விவாதம் நடத்தி தங்கள் வருங்கால திட்டங்களை கூறிவருகிறார்கள்.நேற்றுமுன்தினமும் இதே போன்று ஒரு விவாதம் நடைபெற்றது.அப்போது பேசிய ஒபாமா,அதிபர் புஷ்ஷின் பொருளாதார கொள்கைகள் அனைத்தும் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றஞ்சாட்டினார்.தான் பதவிக்கு வந்தால் பொருளாதார நெருக்கடியை சீர்படுத்தப்போவதாகவும் அவர் கூறினார்.

அவரை எதிர்த்து போட்டியிடும் மெக்கைன் பேசுகையில் புதிய பொருளாதார கொள்கைகளை வகுத்து நெருக்கடியை தீர்த்து வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்யப்போவதாக உறுதி அளித்தார்.இருவரும் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டாலும் இறுதியில் ஒருவரை ஒருவர் நாகரீகமான முறையில் கைகுலுக்கி விடைபெற்றனர்.

 

http://www.newsonews.com/index.php?subaction=showfull&id=1223624973&archive=&start_from=&ucat=1&

StumbleUpon.com Read more...

பின்லாந்து முன்னாள் அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு

 
 
lankasri.comபின்லாந்தின் முன்னாள் அதிபர் மார்ட்டி அதிசாரி 2008ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கோசவோ,இந்தோனேசியா என பல்வேறு கலவரப் பகுதிகளில் அமைதி ஏற்பட மத்தியஸ்தம் செய்து உதவியவர் இவர்.

பல்வேறு கண்டங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி சர்வதேச மோதல்களுக்குத் தீர்வு ஏற்பட முயற்சி மேற்கொண்டவர். அவரது அரும்பணியைப் பாராட்டி அவருக்கு 2008ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசை வழங்குவதென நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்தது என்று இந்த கமிட்டியின் தலைவர் ஓல் டான்பால்ட் எம்ஜோஸ் தெரிவித்தார்.

71 வயதாகும் அதிசாரிக்கு நோபல் பரிசு கிடைக்கக்கூடும் என்று பத்திரிகைகளில் முன்னதாகவே செய்தி அடிபட்டது.

அவரது பாராட்டத்தக்க முயற்சிகளில் ஒன்று இந்தோனேசிய கலவரத்தை தீர்க்க அவர் பாடுபட்டதாகும். தீவிரவாதிகளுக்கும் இந்தோனேசிய அரசுக்கும் இடையேயான மோதலால் 30 ஆண்டுகளாக கலவரம் நீடித்தது. இதில் 15 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து இவரது மேற்பார்வையில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பலன் ஏற்பட்டு 2005ல் தீர்வு ஏற்பட்டது.

கோசவோ பிரச்னையிலும் தலையிட்டு அது விடுதலை பெற உதவினார். செர்பியா, கோசவோ மற்றும் பிரிஸ்தினா ஆகியவற்றுக்கு இடையே கூட்டு ஒப்பந்தம் ஏற்பட இவரது பேச்சுவார்த்தை உதவவில்லையென்றாலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒருதலைப்பட்சமாக விடுதலை பெறுவதாக அறிவித்துக் கொண்டது கோசவோ.

தொடக்கத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய அதிசாரி, 1960ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் தூதர் பணியில் நுழைந்தார். 36-வது வயதில் அவர் தான்சானியா தூதராக நியமிக்கப்பட்டார்.

1994ல் அதிபர் தேர்தல் வேட்பாளராக பின்லாந்தின் சமூக ஜனநாயக கட்சி அவரை நிறுத்தியது. அதில் வெற்றிபெற்று பின்லாந்து வரலாற்றில் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட அதிபர் என்ற பெருமைக்கு உரியவரானார்.

ஆஸ்லோவில் டிசம்பர் 10ம் தேதி நடக்கும் விழாவில் அவருக்கு நோபல் பதக்கம் மற்றும் ரூ. 6.40 கோடி பரிசு வழங்கப்படும்.

 

 

StumbleUpon.com Read more...

தெண்டுல்கர் சாதனையை பாண்டிங் முறியடிப்பார் லாரா சொல்கிறார்

தெண்டுல்கர் சாதனையை பாண்டிங் முறியடிப்பார் லாரா சொல்கிறார்
lankasri.comடெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர் பிரைன் லாரா.வெஸ்ட் இண்டீசை சேர்ந்த அவர் 131டெஸ்டில் 11,953 ரன் எடுத்துள்ளார். அவருக்கு அடுத்தப்படியாக தெண் டுல்கர் 11,877ரன் எடுத்து 2-வது இடத்தில் உள்ளார்.லாராவின் சாதனையை முறியடிக்க தெண்டுல்கருக்கு இன்னும் 76 ரன் தேவை.

பெங்களூரில் நடைபெற்று வரும் டெஸ்டில் அவர் இந்த சாதனையை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று தொடங்கிய பெங்களூர் டெஸ்டில் பாண்டிங் அபாரமாக ஆடி சதம் அடித்தார். 123 ரன்கள் எடுத்ததால் டெஸ்டில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 6-வது இடத்தில் இருந்த கவாஸ்கரை
முந்தினார். தற்போது கவாஸ்கர் 7-வது இடத்துக்கு பின்தள்ளப்பட்டார்.

தெண்டுல்கரின் சாதனையை பாண்டிங் ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும் என்று லாரா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தெண்டுல்கருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். பெங்களூர் டெஸ்டில் எனது சாதனையை அவர் முறியடிப்பார் என்று நம்புகிறேன். ஏற்கனவே அவர் கவாஸ்கர், ஆலன்பார்டர் சாதனைகளை முந்தினார். அவரது சாதனைகளை நான் ஏற்றுக் கொள்கிறேன். உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் தெண்டுல்கரும் ஒருவர்.

பாண்டிங்கும் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். கிரிக் கெட்டில் மாறி வரும் தொழில் நுட்பத்துக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி கொள்பவர். இனிவரும் காலங்களில் தெண்டுல்கரின் சாதனைகளை பாண்டிங் ஒருவரால் மட்டுமே முறியடிக்க முடியும்.

இந்திய அணியில் 5 சீனியர் வீரர்கள் ஒரே நேரத்தில் ஓய்வு பெற்றால் பாதிப்பு ஏற்படும். 1990-ம் ஆண்டில் விவியன் ரிச்சர்ட்ஸ், கிரினிட்ஜி, மார்ஷல் ஓய்வு பெற்றதால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த விஷயத்தில் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்.

 

 

StumbleUpon.com Read more...

நான் "பலிகடா":கங்குலி ஆவேசம்

 
lankasri.com"தேர்வு குழுவினர் என்னை மோசமாக நடத்தினர்.இனிமேலும் என்னை பலிகடா ஆக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் ஓய்வை அறிவித்தேன்,"என்கிறார் கங்குலி.இந்திய அணியின் வெற்றி கேப்டனாக திகழ்ந்தவர் கங்குலி.

இவர் ஆஸ்திரேலிய தொடருக்கு பின் சர்வதேச கிரிக் கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக திடீரென அறிவித்தார். இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டின் நிர்ப்பந்தம் தான் காரணம் என கூறப்படுகிறது.

நெருக்கடி கொடுத்தனர்:இந்நிலையில் வெங்சர்க்கார் தலைமையிலான தேர்வு குழுவினர் தன்னை பலிகடா ஆக்கி விட்டதாக கங்குலி குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் அளித்த பேட்டி:தேர்வாளர்களின் கருணையில் விளையாட வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒரு தொடருக்கு வாய்ப்பு தருவார்கள். ஆனால், அடுத்த தொடரிலிருந்து நீக்கி விடுவார்கள். எப்போதும் என்னை தான் "பலிகடா"ஆக்குகிறார்கள். இது நீடிக்க வேண்டாம் என்ற எண்ணத்துடன் ஓய்வு பெற முடிவு செய்தேன். உங்கள் தலையில் துப்பாக்கியை வைத்தால், அதை எவ்வளவு நேரம் தான் பொறுத்து கொள்வீர்கள். 450 போட்டிகள் விளையாடிய பின்பும் எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

துக்கம் வரவில்லை: இரானி கோப்பைக்கான அணியிலிருந்து நீக்கப்படுவேன் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ஏற்பட்ட காயம் ஆறவில்லை. சொல்ல முடியாத வேதனை காரணமாக ஒரு மாதம் எனக்கு துக்கம் வரவில்லை. புதிய தேர்வு குழுவினர் மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே பொறுப்பேற்றிருந்தால், நிலைமை வேறு மாதிரி இருந்திருக்கும்.

சிலர் தாங்கள் சேர்த்த ரன்களை விட அதிக முறை "ஹேர் ஸ்டைலை"மாற்றியுள்ளனர். இவர்களுக்கு அணியில் தொடர்ந்து இடம் அளிக்கப்படுகிறது. சிறப்பாக விளையாடிய போதும் என்னை நீக்கிவிட்டார்கள். எனக்குரிய மதிப்பு கிடைக்கவில்லை. இவ்வாறு கங்குலி தெரிவித்தார்
 
 

 

 
 

StumbleUpon.com Read more...

அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம்

அமெரிக்காவில் இருக்கும் முஸ்லிம்களுக்கு ஓர் பகிரங்கக் கடிதம்


 


An open letter to Muslims in the U.S.

 
இஸ்லாமிய அடிப்படைவாதிகள் எனக் கருதப்படுவோரால் அரங்கேற்றப்பட்ட அமெரிக்கா மீதான சமீபத்திய வெறித்தனமான தாக்குதல்கள் அமெரிக்காவில் வாழும், மற்றும் வந்து போகும் முஸ்லீம்களின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. இத்தகைய தாக்குதல்களை நடத்தியவர்கள் பெருவாரியான முஸ்லீம்களின் பிரதிநிதிகள் அல்ல‌ என்று சரியாகக் கணிக்கப்பட்டுள்ளது. உண்மை இவ்வாறிருப்பினும், அமைதியை விரும்பும் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்காவில் ஆங்காங்கே சிற்சில தாக்குதல்கள் நடந்துள்ளன‌. முஸ்லிம்க‌ளுக்கு எதிரான‌ இத்த‌கைய‌ புரிந்துகொள்ளுத‌ல‌ற்ற மனிதாபிமானத்திற்கு எதிரான‌ செய‌ல்க‌ள் நாக‌ரீக‌ம் அற்ற‌தும் ம‌ன்னிக்க ‌முடியாத‌தும் ஆகும்.
 


எனினும், இத்தகைய கண்டனங்கள் சில நாட்களாகவே மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருக்கின்றன. பொறுமையோடிருக்க வலியுறுத்தும் இத்தகைய கண்டனங்களின் மத்தியில் நான் கேள்விப்படாதது என்னவென்றால், அமைதியை விரும்பும் முஸ்லீம்கள் சமீபத்திய கொடுமைகளினால் ஏற்பட்ட‌ முஸ்லிம்களுக்கு எதிரான‌ ஒரு த‌வ‌றான பொது அபிப்பிராய‌த்தை எதிர்கொள்ளும்படி இக்கொடுமையை நிறைவேற்றியவர்கள் தங்கள் செயல்கள் தவறானது எனப் புரிந்து கொள்ளும் வகையில் எதிர் நடவடிக்கையாக ஒரு ஆக்க‌பூர்வ‌மான‌ செயல்களை முஸ்லீம்கள் ஏற்படுத்தினார்களா? என்று கவனித்தால், இல்லை என்பது தான் பதிலாக உள்ளது.

 
 
மத சுதந்திரமுடைய மேலைநாட்டு ஜனநாயக நாடுகளில் வசிக்கும் முஸ்லிம்கள், இத்தகைய மேலை நாடுகளிடமிருந்து உரிமையுடன் எதிர்பார்க்கும் அதே பொறுமையை முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் வசிக்கும் நாடுகளும் கடைப்பிடிக்கும்படி அறிவுறுத்த அனைவரும் காணும்படி வெளிப்படையான தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். சௌதி அரேபியா போன்ற முன்னேற்றமான இஸ்லாமிய நாடுகளில் கூட அடிக்கடி இஸ்லாம் தவிர வேறு மதங்களுக்கு மாறுபவர்கள் மீது ப‌கிர‌ங்க‌ ந‌ட‌வ‌டிக்கைக‌ள் கொடுமைகள் எடுக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌. சௌதி அரேபியாவில் ம‌த‌ம் மாறுத‌ல் த‌ண்ட‌னைக்குரிய‌ குற்ற‌ம்; அதிலும் இஸ்லாமிலிருந்து வேறு ம‌த‌த்திற்கு மாறினால் அது ம‌ர‌ணதண்டனைக்கு ஏதுவான‌ குற்ற‌ம். இத‌ற்கு ம‌றுப‌க்க‌மாக, வேறு மதங்களிலிருந்து இஸ்லாமுக்கு மாறுவ‌தில் த‌டையேதுமில்லை. சூடான், பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் போன்ற பல நாடுக‌ளில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. மாற்று ம‌த‌ ந‌ம்பிக்கையாள‌ர்க‌ள் சாதார‌ண‌மாக‌வே தொடர்ச்சியாக‌ சிறைப்ப‌டுத்த‌ப் ப‌டுகிறார்க‌ள்; பெரும்பான்மையானோர் இஸ்லாமை ஏற்றுக்கொள்ளவில்லை என்ற அற்ப காரணத்திற்காகவே ம‌ர‌ண‌த்தைத் த‌ழுவுகிறார்க‌ள்.

 
சகிப்புத்தன்மை மிக்க நாடுகளில் வசித்துக்கொண்டு முழூ மத‌ சுதந்திரத்திரத்தை முற்றிலும் அனுபவிக்கும் முஸ்லிம்களில் ஐம்பது சதவிகிதத்தினராவது தங்களது சொந்த நாடுகளுக்கு இது பற்றி உணர்வு பூர்வமாகக் கடிதங்கள் எழுதும் பணியினைச் செய்வார்களா? இஸ்லாமிய அருட்பணியாளர்களாகிய இமாம்கள், சகிப்புத்தன்மையோடு வாழ்தல் பற்றி முறையாகத் தம் மக்களுக்குப் தொடர்ந்து போதித்தால் எப்படி இருக்கும்? எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் இஸ்லாமியரல்லாதோர் ஒருவர் தேவதூஷணம் சொன்னார் என்றோ அல்லது இஸ்லாமிலிருந்து ஒருவர் விலகினார் என்பதாலேயோ தண்டிக்கப்படும் போது ஆயிரக்கணக்கான முஸ்லீம் மக்கள் ஒன்றுகூடி அந்த நாட்டின் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மறுப்புத் தெரிவித்தால் என்ன? இத்தகைய நெருக்கடிகள் ஒரு சிறிய‌ மாற்றத்தையாவது கொண்டுவரும் என்பது உறுதி, சில சமயங்களில் அதிக மாற்றத்தையும் கொண்டுவரும். சக இஸ்லாமியரால் ஏற்படுத்தப்படும் இத்தகைய நெருக்கடி, மாற்று மதத்தினரிட‌மிருந்து வரும் கண்டணங்க‌ளை விட முஸ்லீம்களுக்கு அதிக ஏற்புடையதாய் இருக்கும். முஸ்லீம்களின் இத்தகைய நடவடிக்கை, எல்லா முஸ்லீம்களுமே தீவிரவாதிகள் தான் என்கின்ற கண்ணோட்டத்தை உடைய‌வர்களை நிச்சயம் வாயடைக்கும்.
 
 
Doug Fattig
Byron, MN
Phone: 507 775 6429
e-mail: beanfarm@sparc.isl.net
Sept. 20, 2001

 
 
இஸ்லாமிய நாடுகளில் முஸ்லீமல்லாதவர்களுக்கு எதிராக முக்கியமாக கிறிஸ்தவர்களுக்கு எதிராக நடந்துக் கொண்டு இருக்கும் கொடுமைகள் பற்றியும், வன்முறைகள் பற்றியும் உங்களுக்கு சரியான விவரம் தெரியவில்லையானால் "Project Openbook" என்ற தளத்தில் சென்று படிக்கவும், உங்களுக்கு அதிக விவரங்கள் கிடைக்கும்.

 
ஆங்கில மூலம்: http://www.answering-islam.org/openletter_df.html
 
 
இஸ்லாம் மற்றும் தீவிரவாதம் பற்றிய இதர கட்டுரைகள்


முகப்புப் பக்கம்: ஆன்சரிங் இஸ்லாம் தமிழ்


© Answering Islam, 1999 - 2008. All rights reserved.
 

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP