சமீபத்திய பதிவுகள்

தேடல் இன்ஜினில் தான் மட்டுமே ராஜா

>> Sunday, February 14, 2010


 
 

 இன்டர்நெட்டில் தகவல்களைத் தேடுவதில் நமக்குப் பயன்படும் சர்ச் இஞ்சினை யார் முதலில் வடிவமைத்தார்கள்? என்று ஒரு கேள்வி கேட்டால் உடனே பெரும்பாலான வர்கள் கூகுள் நிறுவனம் என்றுதான் பதில் அளிப்பார்கள். ஆனால் அது உண்மையல்ல. கூகுள் நிறுவனம் தன் சர்ச் இஞ்சினை வழங்கு முன்பே சர்ச் இஞ்சின் வேறு நிறுவனங்களால் இயக்கப்பட்டுக் கொண்டிருந்தது. ஆனால் கூகுளின் வேகம், தேடல் வகை அதற்கு ஒரு தனி இடத்தைக் கொடுத்துள்ளது.
இப்போது ஸ்மார்ட் போனில் மேற்கொள்ளப்படும் தேடலிலும் தான் முதல் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் கூகுள் காய் நகர்த்துகிறது. அட்மாப் மற்றும் டெராசென்ட் (AdMob and Teracent)  என்ற இரு நிறுவனங்களை அண்மையில் கூகுள் வாங்கியதன் மூலம் ஸ்மார்ட் போன் தேடலிலும் தன் இடத்தை வலுவாக கூகுள் அமைத்துள்ளது. 
இன்டர்நெட் தேடலைப் பொறுத்தவரை கூகுள், சென்ற டிசம்பர் மாதம் மொத்த தேடலில் 70 சதவீதம் கொண்டிருந்தது. மொத்தம் மேற்கொள்ளப்பட்ட 13 கோடியே 10 லட்சம் தேடலில், 8 கோடியே 80 லட்சம் தேடல்கள் கூகுள் வழியே மேற்கொள்ளப்பட்டன. இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 58 சதவீதம் கூடுதலாகும். இது கூகுள் பெரிய அளவிலான இடத்தைக் கொண்டிருப்பது மட்டுமின்றி, இந்த பிரிவில் வேகமாகவும் வளர்ந்து வருகிறது என்பதுதான். தன் நிலையை இன்னும் வலுவாக்க சோஷியல் நெட்வொர்க்கிங் தளங்களுடன் கூகுள் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதனால் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமுதாய இணைய தளங்களில் தேட விரும்புவர்கள், நேரடியாக கூகுள் தளத்திலேயே தங்கள் தேடலை மேற்கொள்ளலாம் என்பதுதான்.
கூகுள் தளத்திற்கு சவால் விடும் அளவிற்கு உள்ள ஒரு தேடுதளம் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிங் தான். ஆனால் இது பெயரளவில் தான் உள்ளது. ஏனென்றால் இந்த தேடல் சந்தையில் பிங் இஞ்சினின் பங்கு வெறும் 4 சதவீதம் மட்டுமே


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

யூதர்களை கொலை செய்த டாக்டர் டைரி ஏலம்


 
 லண்டன்:சித்திரவதை முகாம் களில் யூதர்களை விதவிதமாகக் கொலை செய்த டாக்டரின் டைரி விரைவில் ஏலத்துக்கு வருகிறது.இதுகுறித்து, லண்டனிலிருந்து வெளிவரும் "திடெலிகிராப்' பத்திரிகை கூறியிருப்பதாவது:டாக்டர் ஜோசப் மெங் கெலே என்பவர் ஹிட்லர் ஆட்சிக்காலத்தில், "மரண தேவன்' என்று போற்றப் பட்டவர். சித்திரவதை முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருந்த யூதர்களை விதவிதமாகக் கொல்ல ஹிட்லருக்கு வழிவகை வகுத்துக் கொடுத்தவர்.


1979 வரை வாழ்ந்த இவரது டைரிகள் பிரேசிலில் போலீஸ் ஆவணங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டது. 1960 ல் அந்த டைரி தொடங்குகிறது.இவர் தனது டைரியில், "மனித இனத்தை விருத்தி செய்யும் வழிவகைகளைப் பின்பற்றாவிடில், வெகு சீக்கிரத்தில் மனித இனமே அழிந்து விடக் கூடும்' என்று கவலைப்பட்டு எழுதியுள்ளார். அமெரிக்காவில் வரலாற்று ஆவணக் காப்பகத்தில் உள்ள இந்த டைரி விரைவில் ஏலத்துக்கு வரவிருக்கிறது.


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இது புலி பதுங்கும் காலம்-புதிய ஒலிவட்டு Mp3 வடிவில்

  .

ithu  puli

ithu puli pathungum

தரவிறக்கம் செய்ய

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் வீர உரை இந்த ஒலிவட்டின் சிறப்பம்சம்.கேட்போர் வீரம் கொள்ளும் அளவுக்கு பொங்கும் வீரநடை

source:tamileelamsongs.blogspot

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP