|
சமீபத்திய பதிவுகள்
வன்னி :ஒற்றுமை இல்லாத எந்த இனத்துக்கும் அடிமை வாழ்க்கைதான் தண்டனை!'
'எங்களை வீட்டுக்குப் போகவிடுங்கள் அல்லது, கொன்றுபோடுங்கள்' - மரண வேலிக்கு மத்தியில் இருக்கும் ஈழத் தமிழன் மன்றாடிவைக்கும் கோரிக்கை இதுதான்! 'எங்கள் உறவுகள் வீடு திரும்ப வேண்டும் அல்லது, எங்கள் உறவுக்கு என்ன நடந்தது என்பதை நாங்கள் அறிய வேண்டும்' - உலகம் முழுக்கப் பரவியுள்ள தமிழ்ச் சொந்தங்கள் கண்ணீர் மல்கக் கேட்கும் கேள்வி இதுதான்! 'நாம் அனுப்பிய பணம் தமிழர்களுக்குக் கிடைத்ததா? அல்லது, அவர்களைப் பார்க்கத் தமிழக எம்.பி-க்கள் குழுவை விடுவீரா?' - தமிழக முதலமைச்சர் வைக்கும் கோரிக்கை இதுதான்! இவை எதுவும் ராஜபக்ஷேவுக்குப் பொருட்டல்ல. கண் இருந்தும் குருடாய், காதிருந்தும் செவிடாய் சிங்களம் மாறிப்போய் பல காலம் ஆகிவிட்டது. ஐ.நா. சபை அதிகாரியையே அங்கிருந்து விரட்டுகிறார்கள். தொண்டு நிறுவனங்களைத் துரத்துகிறார்கள். அமெரிக்கா உள்ளிட்ட மெகா நாடுகளையே 'வரட்டும் பார்க்கலாம்' என்று சவடால் விடுகிறார். அகில உலகத்தில் யாருக்கும் அடங்காத தனித் தீவாக இலங்கை மாறியதற்கு மறைமுகத் தைரியத்தை யார் கொடுப்பது? சீனாவைச் சொல்கிறது ஒரு பக்கம். இந்தியாவின் ஆசி இருப்பதான சந்தேகம் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. பாகிஸ்தான் வெற்றி விழா விருந்து வைக்கிறது. சுற்றியுள்ள நாடுகள் செய்வது ராஜதந்திரம் என்று சொல்லிக்கொள்ளலாம். ஆனால், மூன்று லட்சம் மக்களை முள்வேலிக்குள் பூட்டிவைப்பது அரக்கத் தந்திரமாக மட்டுமே இருக்க முடியும்! ''வன்னி மக்களை அவரவர் வீட்டுக்கு அனுப்பாவிட்டால் ராஜபக்ஷே மீது பல்வேறு சந்தேகங்கள் விழும்'' என்று ஐ.நா-வின் பான் கி மூன் சொன்னதும், ''யாரும் எங்களை நிர்பந்தப்படுத்த முடியாது'' என்று தட்டிக்கழித்துவிட்டார் ராஜபக்ஷே. அவரைச் சந்திக்க வந்தார் ஐ.நா-வின் அரசியல் பிரதிநிதி லின் பாஸ்கோ. ''யுத்தம் ''1.62 லட்சம் மக்களிடம் மட்டும்தான் இதுவரை சோதனை நடத்தியுள்ளேன். இன்னும் ஒரு லட்சம் பேரிடம் சோதனை நடத்திய பிறகுதான் இறுதி முடிவெடுப்போம்'' என்று அமைச்சர் ராகித போகல்லகாம அறிவித்துள்ளார். ''முகாமில் 20 ஆயிரம் புலிகள் இருப்பதாகச் சொல்லி, தினமும் சுமார் 40 பேரைக் கடத்திக் கொண்டு இருக்கிறார்கள்'' என்று இலங்கை நாடாளு மன்றத்தின் ஸ்ரீலங்கா சுதந்திராக் கட்சியைச் சேர்ந்த மங்கள சமரவீரா சொன்னபோது, ஆளும் தரப்பில் இருந்து பதில் இல்லை. ''கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஐந்து ஆயிரம் புலிகள் இருப்பதாக ஃபொன்சேகா சொன்னார். செப்டம்பர் மாதம் 16 ஆயிரம் புலிகளைக் கொன்றதாகச் சொன்னார். இப்போது இன்னும் 20 ஆயிரம் புலிகள் இருப்பதாகச் சொல்கிறார். அவர் சொன்னதில் எது உண்மை?'' என்று இன்னொரு எம்.பி-யான மனோ கணேசன் கேட்டார். அதற்கு அமைச்சர் அனுர பிரியதர்ஷன் அடித்த கிண்டல் நம்முடைய கன்னத்தில் ஓங்கி அறைகிறது. ''எல்லாரும் போய்ப் பார்க்க அது மிருகக்காட்சி சாலை அல்ல. யாருக்காவது சுற்றுலா போக வேண்டும் என்று நினைத்தால், மிருகக்காட்சி சாலைக்குப் போங்கள்'' என்கிறது சிங்கள அரசு. வன்னி மக்களைத்தான் முகாமுக்குள் அடைத்திருக்கிறார்கள் என்றில்லாமல் கடந்த வாரத்தில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் 74 பேரைக் கொண்டுவந்து முகாமில் வைத்திருக்கிறார்கள். 15 வயதுக்கு மேற்பட்ட அத்தனை இளைஞர் களையும் புலிகள் என்று சந்தேகப்பட்டு வவுனி யாவில் உள்ள காமினி மகாவித்யாலயம் பள்ளி முகாமில் அடைத்துவைத்திருக்கிறார்கள். அதே போல் பம்பமடு பல்கலைக்கழக முகாமில் இளம் பெண்கள் அடைக்கப்பட்டு உள்ளார்கள். அவர்களில் சிலர் நிர்வாணப்படுத்தப்பட்டு, மொட்டையடிக்கப்பட்டு, இரண்டு மூன்று பேர்களாகக் கை கால்கள் இணைத்து கட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் உலுக்குகின்றன. உலகத்தின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகச் சிலரை மட்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகள் செய்வதாகச் செய்திகள் பரவின. யாழ்ப்பாணம், திரிகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய இடங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு 10 ஆயிரம் பேரைக் கடந்த 11-ம் தேதி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ''அவர்கள் யாரும் வீட்டுக்கு அனுப்பப்படவில்லை. வவுனியாவில் இருந்து தென்மராட்சியில் உள்ள கச்சாய் ராமாவில் தடுப்பு முகாமுக்குத்தான் கொண்டுபோகப்படுகிறார்கள்'' என்று சொல்லப்படுகிறது. ஏற்கெனவே, யாழ்ப்பாணத்தில் கடந்த 10 ஆண்டுகளாக அகதிகள் முகாம்கள் இருக்கின்றன. அதில், சுமார் 30 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் இருக்கிறார்கள். இன்று ஈழத்தின் வடக்குப் பகுதி முழுவதும் அகதிகள் முகாமாக மாறிவிட்டது. விலகி விலகி இருக்கின்றன. கதிர்காமம், ஆனந்தகுமாரசாமி, ராமநாதன், ஏற்கெனவே பொருளாதாரத் தடையால் தகிக்கும் பூமியாக இருந்தது ஈழம். அரிசி, பருப்பு, மருந்துகள், தடுப்பூசிகள், ஆன்டிபயாட்டிக், வலிநிவாரணிகள் எதுவும் அங்கு கிடைப்பது இல்லை. முக்கியத் தொழிலாக அதுவரை இருந்தது விவசாயமும் மீன்பிடித் தொழிலும். இப்போது கடலோரம் சும்மாகூடப் போக முடியாது. மீன்பிடித் தொழில் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டுள்ளது. விவசாய நிலங்களை மொத்தமாக போர் கீறிப் போட்டுச் சிதைத்துள்ளது. மின்சாரம் கிடையாது. பால் கிடையாது. ரேடியோ கிடையாது. பேட்டரி கிடையாது எனத் துக்கங்களை மட்டுமே கையிருப்பாக வைத்திருக்கிறது ஈழத் தமிழினம். அடுத்த மாதம் மழைக் காலம் ஆரம்பிக்க இருக்கிறது. இரண்டு நாள் மழைக்கே சகதிக்காடாக மாறிய முகாம்கள், அக்டோபரில் மொத்தமாக ரணகளமாகும். நம்முடைய கைக்கு ஒரு ஈழத் தமிழ்ச் சகோதரியின் கடிதம் கிடைத்தது. அவள் எழுதி இருந்தாள்... 'ஒற்றுமை இல்லாத எந்த இனத்துக்கும் அடிமை வாழ்க்கைதான் கடவுளால் அருளப்படும் தண்டனை!'
தீராத புலி வேட்டை... மாறாதா இந்த வாழ்க்கை?
source:vikatan
முடிந்ததும் அந்த இடத்தில் பொதுமக்களைக் குடியமர்த்த முடியாது. குரேஷியாவில் 16 ஆண்டுகள் ஆகியும் இன்னும் கண்ணிவெடிகளை அகற்றும் பணி முடியவில்லை' என்று ஞாபகப் படுத்தியிருக்கிறார் ராஜபக்ஷே. மரண ஓலம் ஓய்ந்த பாடில்லை. சர்வதேச மன்னிப்பு சபை, இது குறித்த தனது கவலையைத் தெரியப்படுத்தியுள்ளது.
அருணாசலம் ஆகிய பெயர்களில் முகாம்கள். 600 ஏக்கர் நிலத்தைச் சமப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள டென்ட் கூடாரங்கள் ஒரு வாரம் மட்டும்தான் தாங்கக்கூடியவை என்பது அனைவருக்கும் தெரியும். லட்சக்கணக்கான மக்களுக்குக் கூடாரங்கள், சாப்பாடு, மருத்துவம் மற்றும் வசதிகள் தரும் பொறுப்பு ஐ.நா. அமைப்புக்கு இருக்கிறதா அல்லது இலங்கை அரசாங்கத்துக்கா என்ற விவாதமே இன்று வரை முடிந்தபாடில்லை. செம்மண் தரை வெயிலில் கொதிக்கிறது. மழையில் சகதியாகிறது. கழிவறை இருக்கிறது. அது போய்ச் சேரும் வசதிகள் இல்லாததால், அத்தனை முகாம்களும் மலஜலத்தால் நாற்றமெடுத்து, நோய்களை விதைத்துக்கொண்டு இருக்கின்றன.
--
www.thamilislam.co.cc
'மேதகு பிரபாகரன் பேசியதாகச் சொல்லவில்லை!''
தொல்.திருமாவளவன். அதில், 'கடந்த 26.09.2009 அன்று லண்டனில் நடைபெற்ற குறிப்பிட்ட அவ்விழாவில் ஏறத்தாழ ஒன்றேகால் மணி நேரம் உரையாற்றினேன். என் உரைக்குப் பின்னர் அனைவரும் எழுந்து நின்று கைகளைத்தட்டி ஆரவாரம் செய்தனர். ஈழத்தமிழர்கள்யாரும் நீங்கள் எழுதியிருப்பது போல் அநாகரிகமாக நடந்து கொள்ள வில்லை. 'ஜீ' டி.வி-யில்நேர் காணலில்கலந்து கொண்டபோது, பாதியி லேயே அந்நிகழ்ச்சி முடிந்து விட்டதாகக் கூறுவது சரியல்ல. சிறப் பாக அது நடந்தேறியது. தி.மு.க-வுக்கு எதிரான கருத்து வந்தபோது, 'ஒரு மாநில அரசுவெளி யுறவுக்கொள்கைளில் முடிவெடுக்கமுடியாது!' என்பதை அழுத்த மாகவே கூறினேன். இலங்கையில் போர் உச்சத்திலிருந்போது, திரு.நடேசன், திரு.சேர லாதன் ஆகியோர் மட்டுமே என்னிடம் பேசினர். மேதகு பிரபாகரன் அவர்கள் என்னிடம் பேசியதாக நான் கூறவே இல்லை. சேரலாதன்... அவரைத் தொடர்ந்து நடேசன் இருவருமே, 'இந்திய அரசையும் சோனியா காந்தியையும் தமிழகத் தலைவர்களில் சிலர் கடுமையாக விமர்சித்துப் பேசுவது' தவறு என்றும், 'நீங்களாவது அவ்வாறு பேசாமல் இருங்கள். எங்களுக்கு உதவுவதாக எண்ணிக்கொண்டு, எங் களுக்கு எதிரான வேலைகளைச் செய்துவிடாதீர்கள்' என்றும் கேட்டுக்கொண்டார்கள். இதைத்தான் நான் தங்கள் செய்தியாளரிடம் கூறியிருந்தேன் மாறாக, மேதகு பிரபாகரன் என்னிடத்தில் கூறியிருப்பதாக எழுதியுள்ளது தவறான பதிவு!' என்று தொல்.திருமாவளவன் குறிப்பிட்டிருக்கிறார்.
'கலைஞரைத் திட்டாதீர்கள் என்றார் பிரபாகரன்!' என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு விளக்கம் தெரிவித்து நமக்கொரு கடிதம் அனுப்பியிருக்கிறார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர்
- ஆசிரியர்
source:vikatan
--
www.thamilislam.co.cc
தொழில் நுட்ப அரிச்சுவடி
கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் பயன்பாட்டில் அன்றாடம் பயன்படுத்தும் சில ஆங்கிலச் சொற்களுக்கான விளக்கங்கள் இங்கு தரப்படுகின்றன. இவற்றை அவ்வப்போது நம் நினைவில் தேக்கிக் கொண்டால், கம்ப்யூட்டர் குறித்த தகவல்களைப் படிக்கும்போது உதவியாக இருக்கும். அதன் பொருள் புரிந்து கொள்வது எளிதாகிவிடும். USB: (யு.எஸ்.பி.) வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ஹார்ட் டிஸ்க், கேமரா, மொபைல், பிரிண்டர், கீ போர்டு எனக் கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டிய எந்த சாதனத்தையும் இணைக்கலாம். Drag and Drop: (டிராக் அண்ட் ட்ராப்) பைல் அல்லது புரோகிராமிற்கான ஐகானில் கர்சரை வைத்து அழுத்தியவாறே இழுத்து இன்னொரு போல்டர் அல்லது இடத்தில் விடும் செயல்பாட்டினை இவ்வாறு அழைக்கிறோம். AGPS – Assisted Global Positioning System: : உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் இணைப்பு வசதி இருந்து அதனை இயக்கும் வசதியை உங்களுக்கு மொபைல் இணைப்பு தரும் நிறுவனத்திடம் நீங்கள் பெற்றிருந்து, அதனை இயக்கினால் சாட்டலைட்டிலிருந்து நிறுவனத்தின் சர்வர் வழியே உங்கள் மொபைல் போனில் தகவல்களைப் பெறலாம். இணையப் பக்கங்களைப் பார்வையிடலாம். ஜி.பி.எஸ். வசதி கொண்ட மொபைல் போன்களில் இந்த அஎககு உதவி இல்லாமல் டேட்டா பெறலாம். ஆனால் அதற்கு நேரம் மிக மிக அதிகமாகும். அந்த சிரமத்தை இந்த தொழில் நுட்பம் குறைக்கிறது. ஆனால் உங்கள் மொபைல் போனில் இன்டர்நெட் தொடர்பு வசதி இருப்பது கட்டாயமாகும். Bluetooth 2.0 + EDR : : என்ற வசதி இணைந்த புளுடூத் செயல்பாடு. புளுடூத் வசதி இயக்கப்பட்ட சாதனங்களுக்கிடையே விரைவாக டேட்டா பரிமாற்றம் ஏற்படுவதனை இதன் மூலம் குறிக்கிறோம். source:dinamalar
Quick Launch : (குயிக் லாஞ்ச்) டாஸ்க் பாரில் பொதுவாக இடது புறம் உள்ள ஏரியா. அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களின் ஐகான்களை இங்கு வைத்து சிங்கிள் கிளிக் மூலம் அவற்றை இயக்கலாம்.
Wall Paper : (வால் பேப்பர்) விண்டோஸ் டெஸ்க் டாப்பிற்கு பேக் கிரவுண்ட் படமாகப் பயன்படுத்தப்படும் இமேஜ். இதன் மூலம் கம்ப்யூட்டர் சொந்தக்காரர் எப்படிப்பட்ட ரசனை உள்ளவர் என அறியலாம். இதில் நிலையான படங்கள் மட்டுமின்றி அசையும் அனிமேஷன் படங்களும் உள்ளன.
Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையின் கீழாகக் காணப்படும் நீள பார். இதனை மறைத்தும் வைக்கலாம். அந்த இடத்தில் கர்சர் சென்றவுடன் தானாக எழுந்து வருமாறும் செட் செய்திடலாம். இதில் தான் ஸ்டார் பட்டன், குயிக் லாஞ்ச் ஏரியா, பயன்படுத்தப்படும் பைல்களுக்கான டேப்கள், பின்புலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள், கடிகார நேரம் ஆகியவை காட்டப்படுகின்றன.
Freeware: : (பிரீவேர்) பெரும்பாலும் இன்டர் நெட்டிலிருந்து டவுண்லோட் செய்திடும் வகையில் கிடைக்கும் இலவச சாப்ட்வேர் புரோகிராம்கள். இதனை நீங்கள் பயன்படுத்து வதோடு மற்றவர்களுக்கும் வழங்கலாம். யாரும் தடை செய்ய மாட்டார்கள்.
Clipboard: (கிளிப் போர்டு) பெர்சனல் கம்ப்யூட்டர் மெமரியின் ஒரு பகுதி. விண்டோஸ் இதனைப் பயன்படுத்தி நாம் புரோகிராம் ஒன்றில் காப்பி மற்றும் கட் செய்திடும் பகுதிகளை பதிந்து வைக்கிறது.
Driver: (டிரைவர்) விண்டோஸ் கம்ப்யூட்டரில் உள்ள துணை சாதனத்துடன் தொடர்பு கொள்ள இயங்கும் ஒரு புரோகிராம்.
Motherboard: (மதர்போர்டு) பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றில் அமைக்கப்படும் பெரிய அளவிலான சர்க்யூட் போர்டு. இதில் தான் கம்ப்யூட்டரின் ஒவ்வொரு சாதனமும் இணைக்கப்படுகிறது.
EDGE Enhanced Data rates for GSM Evolution: இதனை எட்ஜ் எனவும் அழைக்கின்றனர். இந்த தொழில் நுட்பம் ஜி.பி.ஆர்.எஸ். வகையினைக் காட்டிலும் சற்று மேம்பட்டதாகும். அதனைக் காட்டிலும் சற்று வேகம் அதிகமான பிரவுசிங் மற்றும் டேட்டா பரிமாற்றத்தைத் தரும்.
GPRS General Packet Radio Service: (ஜி.பி.ஆர்.எஸ்.) இது ஒரு மொபைல் டேட்டா சர்வீஸ் வகையாகும். 2ஜி மற்றும் 3ஜி வகை நெட்வொர்க் இணைப்புகளில் இது பயன்படுத்தப்படுகிறது. டேட்டா பரிமாற்றத்தினை இது தருகிறது. நொடிக்கு 56 கிலோ பிட்ஸ் முதல் 114 கிலோ பிட்ஸ் வரையிலான வேகத்தில் இதன் மூலம் டேட்டாவினைப் பெறலாம். டேட்டாவினைப் பெற உங்கள் மொபைல் போனில் உள்ள பிரவுசர் இன்டர்நெட் இணைப்பில் இருக்க வேண்டும்.
GSM Global System for Mobile communications: (ஜி.எஸ்.எம்) என்பதன் சுருக்கம். இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மொபைல் போன்கள் அவற்றிற்கான சர்வீஸ் தரும் நிறுவனங்கள் மற்றும் உலகில் உள்ள மற்ற சர்வீஸ் புரவைடர்களுடன் தொடர்பு கொள்ள உதவிடும் தொழில் நுட்பம். இந்த போன்களை சிம் கார்டு இணைத்துப் பயன்படுத்தலாம்.
Bluetooth : புளுடூத் –– வயர் இணைப்பு எதுவுமின்றி இரு தொலை தொடர்பு சாதனங்களுக்கிடையே டேட்டா பரிமாற்றம் மற்றும் சாதனங்களைக் கட்டுப்படுத்த வகை செய்திடும் தொழில் நுட்பம். இதனுடன் சார்ந்த சில தொழில் நுட்ப பிரிவுகளையும் பார்க்கலாம்.
WiFi : (வை–பி) இது வயர் இணைப்பு எதுவுமின்றி நெட்வொர்க் இணைப்பு மேற்கொள்வதைக் குறிக்கிறது. வை–பி இணைப்பு வசதி கொன்ட ரூட்டர்களுடன் மொபைல் போன்கள் இணைப்பு பெறுவதனை இது குறிக்கிறது. குறிப்பிட்ட இடத்தில் இது இயக்கத்தில் இருக்கையில் அந்த வகையில் இணைப்பு இயக்கப்பட்ட மொபைல் போன்கள் அதிக வேகத்தில் இன்டர்நெட் இணைப்பினைப் பெறலாம்.
CDMA Code division multiple access (சி.டி.எம்.ஏ) இன்னொரு வகை மொபைல் தொழில் நுட்பம்.இதனைப் பயன்படுத்துகையில் அப்போது கிடைக்கும் முழு அலைவரிசையின் திறனை போன் தொடர்புக்குப் பயன்படுத்த முடியும். இதனால் திறன் கூடிய துல்லிதமான ஒலி கிடைக்கும். டேட்டா பரிமாற்றமும் எளிதாகவும் விரைவாகவும் நடைபெறும். சில சி.டி.எம்.ஏ. மொபைல் போன்களில் சிம் கார்ட் அதன் போர்டில் இணைத்தே தரப்படும். எனவே இதற்கென தனி போன் மாடல்கள் உருவாக்கப்பட்டு விற்பனையாகின்றன. இதனால் இந்த வகை மாடல்கள் ஜி.எஸ்.எம். மாடல்களைக் காட்டிலும் குறைவான எண்ணிக்கையிலேயே உள்ளன. இந்த தொழில் நுட்பம் முதல் முதலாக இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டனின் அணியில் இருந்த நாடுகளால் ஜெர்மனி படைகளின் முயற்சிகளை முறியடிக்க தொலை தொடர்புக்காகப் பயன்படுத்தப்பட்டது.
WiMAX Worldwide Interoperability for Microwave Access: (வை மாக்ஸ்) இதுவும் ஒரு வயர்லெஸ் டிஜிட்டல் கம்யூனிகேஷன் சிஸ்டமாகும். வை–பியுடன் ஒப்பிடுகையில் இது இன்னும் சற்று பெரிய இடத்தில் இயங்கும். வயர்லெஸ் பிராட்பேண்ட் இணைப்பினை இதனால் வழங்க முடியும். இதனை நிலையான ஒரு இடத்தில் அமைத்தால் 50கிமீ தூரம் வரை இதன் செயல்பாடு இருக்கும். நகர்ந்து செல்லும் வாகனங்களில் இதனை அமைத்துச் செயல்படுத்தலாம். அப்போது 5 முதல் 15 கிமீ வரையிலான தூரத்தில் இது செயல்படும்.
--
www.thamilislam.co.cc
வாழும் பிரபாகரன்-video pirabakaran alive
பிரபாகரன் இருக்கிறாரா ? இந்தக் கேள்வி பல தளங்களில் ஒலிக்கப்படுகின்ற கேள்விதான். ஜெயா தொலைக்காட்சியில், நடிகர், இயக்குனர், விசுவின் மக்கள் அரங்கம் மேடையிலும் ஒலித்தபோது, அதில் கலந்து கொண்ட ஈழத்தமிழ்ப்பெண் எந்தவிதமான தயக்கமுமமின்றிச் சடாரெனப் பதில் தருகின்றார்.
அவர் அளிக்கும் பதிலில், மறைந்துகிடப்பது பிரபாகரன் எனும் தனிமனிதவிருப்பா..? அல்லது ஈழத் தமிழர் மனங்களின் நீறு தனல் நெருப்பா..? .நிகழ்ச்சியை பொறுமையாக இறுதி வரை பாருங்கள், நீங்களே முடிவு கொள்ளுங்கள்...
தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியை இவ்வளவு கேவலப்படுத்தியிருக்க வேண்டாமே
பலர் கருணாநிதியை மூத்த திராவிட இயக்கத்தலைவர் என்பதால் விமர்சிக்கக் கூடாது என்கிறார்கள். பலர் மௌனமாக கருணாநிதியின் அல்லக்கையாக மாறுவதற்கான தருணத்தைக் எதிர்பாத்துக் காத்திருக்கிறார்கள். கவிஞர்கள், திரைத்துறையினர், தமிழறிஞர்கள், இலக்கியவாதிகள் என்று பலரும் கருணாநிதியை சகித்துக் கொண்டிருப்பதற்கு இதுவே காரணம். ஊழல், அராஜகம். போலீஸ் காட்டாட்சி, ஊழல், சாதி வெறி அரசியல் இதில் எந்த ஒன்றிலும் அதிமுகவிற்கு கருணாநிதி குறைந்தவரல்ல என்று அம்பலப்பட்டுக் கிட்ககும் சூழலில் இந்தியாவிலேயே தமிழகம்தான் அதிக என்கவுண்டர் நடக்கும் மாநிலமாக மாறியிருபப்தை எந்த மனித உரிமை ஆர்வலர்களும் கண்டு கொள்ளவில்லை. காரணம் கருணாநிதி மீதான திராவிடப் பாசம். சரி அதெல்லாம் இருக்கட்டும். காஞ்சிபுரத்தில் சமீபத்தில் நடந்த அண்ணாதுறையின் நூற்றாண்டுவிழா மாநாட்டில், மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி, தமிழை தேசீய மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்கிற மாதிரி தீர்மானங்களை நிறைவேற்றியிருக்கிறார் கருணாநிதி. இதே விதமான தீர்மானங்களை திமுக தொடங்கிய காலத்தில் இருந்தே போட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளாக மத்தியில் அரசைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கியது திமுகாதான். ஈழ மக்கள் போரில் கொல்லப்பட்டுக் கொண்டிருந்த போது அவர்களை காக்க உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்பதோடு அவர்களின் உயிர்களையே ''மழை விட்டும் தூவானம் விடவில்லை'' என்று கொச்சைப்படுத்தியது போக இறுதிப்போரின் போது மக்கள் ஐம்பதாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லபப்ட்டுக் கொண்டிருந்த போது குடும்ப சகிதமாக டில்லிக்கு சென்று பதவிக்காக டில்லியிலேயே ஐந்து நாட்களுக்கு மேல் கிடந்தவர்தான் இந்தக் கருணாநிதி. ஈழத் தமிழர்களுக்குத்தான் எதுவும் செய்யவில்லை, உள்ளூரிலாவது சுயாட்சிக்கும், தமிழுக்கும் என்ன செய்திருக்கிறார் கருணாநிதி என்று பார்த்தால் கடந்த பல வருடங்களாக தீர்மானம் போட்டிருக்கிறார் என்பதைத் தவிற எதுவுமே செய்யவில்லை.தன் மகள் கனிமொழியை எம்பியாக்கினார். அழகிரியை அமைச்சர் ஆக்கினார். சமீபத்தில் நாடாளுமன்ற அமைச்சர் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் திமுக எம்பிக்களால் மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஏண்டா இத்தனை நாள் வைக்காத கோரிக்கையை திடீரென இப்பொ வைக்கிறாங்களே? என்னடா என்று கேட்டால் அழகிரிக்கு ஆங்கிலம் தெரியாதாம். அதனால் நாடாளுமன்றத்தில் அமைச்சர்கள் தமிழில் பதில் சொல்ல அனுமதிக்க வேண்டுமாம். என்ன கொடுமையப்பா? இது? அழகிரிக்கு தமிழ் மட்டும் ஒழுங்கா பேசத் தெரியுமா? ஆனால் கருணாநிதிக்கு சமீபத்தில் விருதுகள் மேல் விருதுகள் வழங்கப்படுகின்றன. எண்பது வயதைக் கடந்து விட்ட இன்னும் இளைஞராகவே இருக்கும் கருணாநிதிக்கு இத்தனை வேகமாக ஏன் இவளவு விருதுகள் வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை. காஞ்சிபுரம் விழாவில் அவருக்கு அண்ணா விருது வழங்கியிருக்கிறார்கள்.அண்ணா விருது திமுக கட்சியால் வழங்கப்படுகிற விருது. திமுக என்பது கருணாநிதியின் கட்சி அதன் தலைவரும் அவரே, கேள்வியும் நானே பதிலும் நானே என்று தினம் தோறும் அறிக்கை விடுகிற மாதிரி விருது கொடுப்பதும் நானே, பெற்றுக் கொள்வதும் நானே என்று அண்ணா விருது பெற்றிருக்கிறார். அடுத்த நாளே திரைப்பட விருதுகளை அறிவித்திருக்கிறார் கருணாநிதி மொத்த விருதுகளையும் தன் திரைத்துறை அல்லக்கைகளுக்கு அள்ளி வழங்கிவிட்டதோடு விடாமல் உளியின் ஓசை என்ற தனது படத்திற்கு தான் எழுதிய வசனத்திற்கு சிறந்த உரையாடல் ஆசிரியர் – மு.கருணாநிதி (உளியின் ஓசை) என்று தானே விருது கொடுத்திருக்கிறார். இந்த விருதுகளிலும் திருஷ்டிப் பொட்டு மாதிரி சா.தமிழ்செல்வனுக்கும் விருது கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் கமலஹாசனை விட சிறந்த இயக்குநர்கள் வந்து விட்டார்கள், பாலா, அமீர், சசிகுமார், மிஸ்கின், என்று தமிழ் சினிமா பல சாத்தியங்களைக்கொண்டு பலவீனங்களோடு இயங்கிக் கொண்டிருக்க ஸ்கூல் பசங்க மாறுவேடப்போட்ட்டிக்கு வேஷம் கட்டுகிற மாதிரி சிறுபிள்ளைத்தமாக படத்திற்கு படம் கமல் கட்டுகிற மாறுவேடப்போட்டிக்கு விருது கொடுக்கிறார் கருணாநிதி. ஆனால் ஒரு நல்ல கதையை உருவாக்கிய சுபரமணியபுரத்திற்கு உருப்படியான எந்த விருதுகளும்.இல்லை. விருது தொடர்பாக சிறந்த பதிவு இதில் இருக்கிறது படியுங்கள். http://truetamilans.blogspot.com/ அப்பாடா என்று கண்ணைக்கட்டி டிவியை அணைக்கலாம் என்று போனால் அடுத்த செய்தி. கருணாநிதிக்கு உலக சாதனையாளர் விருதாம் வழங்க இருப்பவர்கள் சினிமா தொழில்நுட்பக்கலைஞர்கள். இப்போ தெரிகிறதா? ஹிட்லர் கையில் இருந்த உலக வரைபடம் கருணாநிதி கையில் என்னவாக இருக்கிறது என்று. நேற்று அதிமுகவில் இருந்து வந்த ஒரு கூட்டத்தினரை வரவேற்றுப் பேசும் போது சொல்கிறார் ''நமது சாதனைகளைப் பார்த்து தமிழக மக்கள் பூரித்துப் போயிருக்கிறார்களாம்" ஆமாம் கருணாநிதியின் ஆட்சியில் மக்கள் பூரித்த பூரிப்பில்தான் ஆங்காங்கே வகைதொகையில்லாமல் கொலைகள் விழுகின்றன. சில அரசியல் படுகொலைகளில் கொலை செய்தவர்களும் போலீஸ் நிலையத்திலேயே இறந்து போய் விடுகிறார்கள். இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பஞ்சாலை தொழிலாளர்கள் வேலையிழந்து பட்டினியால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தமிழக கிராம மக்கள் பாரம்பரீய விவாசயத்துக்கு விடை கொடுத்து விட்டு நகரங்களை நோக்கி படையெடுக்கிறார்கள். கிராமத்து மக்கள் பல வெளிமாநிலங்களின் கல்குவாரிகளில் கொத்தடிமைகளாக இருக்க தமிழகமே மகிச்சியில் பூரித்திருக்கிறது என்று இவரே பூரித்துக் கொள்கிறார். ஜெயலலிதாவை மேரி மாதாவோடு ஒப்பிட்டு விளம்பரத் தட்டி வைத்த போது சிறுபான்மை கிறிஸ்தவர்களை தூண்டி விட்டு அதை பெரிய கலவரமாக மாற்றத் துடித்தவர் கருணாநிதி. ஆனால் கடவுள் மறுப்புப் கொள்கையே தனது கட்சி,குடும்ப ( ஆழ்வார்பேட்டைம், கோபாலபுரம், இரு குடும்பங்களின்) கொள்கை என்று தம்பட்டம் அடித்துக் கொண்ட கருணாநிதியின் மகன் ஸ்டாலினின் மகன் கட்அவுட் தமிழ் கடவுள் முருகனைப் போல சித்தரித்து வைக்கப்பட்டுள்ளது. வீரமணி ஒரு வேளை புது வியாக்கினாம் இதற்குக் கொடுக்கலாம். மேரி மாதாவோடு ஜேவை ஒப்பிட்டது தவறு என்றால் முருகவோடு ஸ்டாலினை ஒப்பிட்ட திமுகவை எதைக் கொண்டு வரவேற்பது எனத் தெரியவில்லை. இபப்டியான கூத்துக்கள் எவளவோ கருணாநிதியின் ஆட்சியில் நடந்து கொண்டிருக்கிறது. சிறுபான்மையின்ரரின் ஆதரவாளர், திராவிட இயக்கத்தின் கடைசித் தூண், தமிழகத்தில் இருக்கும் ஒரே கம்யூனிஸ்ட் இப்படி எல்லாம் கருணாநிதிக்கு முகம் உண்டு. ஆனால் முற்போக்குச் சக்திகளை ஒடுக்கியது, ஈழ ஆதரவுப் போராட்டங்களை புலி ஆதரவுப் போராட்டங்களாக சித்தரித்து அவர்களை அடக்கி ஒடுக்கியது, கடைசி நேரத்தில் ஈழ மக்களுக்கு துரோகம் செய்தது எல்லாம் போக சிறுபான்மை மக்களையும், இடதுசாரிகளையும் கூட வாய்ப்பு வரும் போதெல்லாம் கழுத்தறுத்தவர்தான் இந்த கருணாநி.இதற்கு எத்தனையோ உதாரணங்களை வரலாற்றில் இருந்து சொல்ல முடியும். ஆனால் அவருக்கு இருக்கும் முற்போக்கு முகங்களில் எந்த ஒன்றை வைத்தேனும் இன்றைய கருணாநிதியை அளவிட்டுப் பாருங்கள். தன் பதவிக்கும், ஆட்சிகும் ஆபத்து வரும் என்றால் எத்தகைய இழிவான செயலையும் செய்யத் தயங்காத கருணாநிதியின் இன்றைய வருத்தமெல்லாம் உலக்த் தமிழர்களின் தலைவர் பதவி பறிபோய் விட்டதே என்ற கவலைதான் source:nerudal கருணாநிதி அல்ல இவன் பெயர் – கருணா(ய்)நிதி இதுதான் மிகவும் பொருத்தம்
தி கிரேட் டிக்டேட்டர் படத்தில் உலக வரைபடத்தை தன் கையில் வைத்துக் கொண்டு குரங்காட்டம் ஆடிக் கொண்டிப்பார் ஹிட்லர். மேதை சாப்ளினின் நடிப்பில் அது அவளவு நகைச்சுவாய இருக்கும். தமிழக முதல்வர் கருணாநிதியின் தற்கால செயல்பாடுகளை வைத்துப் பார்க்கும் போது அவரும் தமிழக வரைபடத்தை கையில் வைத்துக் கொண்டு குரங்காட்ட குத்துக்குரணம் ஒன்றை நடத்திக் கொண்டிருப்பது நமக்குப் புரிகிறது.
கடவுளில் என்னடா? தமிழ் கடவுள் இங்கிலீஷ் கடவுள்?
www.thamilislam.co.cc
நாடு கடந்த தமிழீழ அரசு: பன்னாட்டு ஆலோசகர்கள் பங்கேற்ற நோர்வே பொதுக்கூட்டம்
இக்கூட்டத் தொடருக்காக ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஒஸ்லோ வருகை தந்திருந்த வேளையில் தமிழ் மக்களுக்காக சிறப்பு விளக்கக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
-- நாடு கடந்த தமிழீழ அரசினை அமைப்பதற்கான செயற்குழுவின் அனைத்துலக ஆலோசகர்கள் கலந்துகொண்ட கூட்டத்தொடர் (ஒக்ரோபர் 3, 4 ஆம் நாட்களில்) நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்றது.
தமிழர் வள ஆலோசனை மைய றொம்மன் வளாகத்தில் நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை 6:30 நிமிடம் தொடக்கம் 9:00 மணிவரை நடைபெற்ற நாடு கடந்த அரசு தொடர்பான விளக்கக் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழீழ மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா நடராஜா இக்கூட்டத்திற்கு தலைமை வகித்தார்.
சட்ட அறிஞரும் நாடு கடந்த தமிழீழ அரசை அமைக்கும் செயற்குழு இணைப்பாளருமான வி.உருத்திரகுமாரன் காணொலி இணைப்பு (Video Conference) மூலம் உரையாற்றியதோடு, மக்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
இன்றைய காலச் சூழலில் தமிழீழ மக்களின் அரசியல் வேட்கையினை உயிர்ப்புடன் பேணி, தமிழர்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை ஆகிய அடிப்படை உரிமைக் கோட்பாடுகளுக்கு ஊடாக தமிழீழ மக்களின் விடுதலையை வென்றெடுப்பதற்கான போராட்ட இலக்கின் இன்றைய வரலாற்றுத் தேவையாக நாடு கடந்த தமிழீழ அரசு அமையவுள்ளதாக உருத்திரகுமாரன் குறிப்பிட்டார்.
கொடுங்கோன்மை அடக்குமுறைக்கு எதிராகப் போராடும் இனங்களின் தன்னாட்சி உரிமை (Self-determination) பற்றிய அனைத்துலக சட்டங்களை மேற்கோள் காட்டிய உருத்திரகுமாரன் அவர்கள், அனைத்துலக அரங்கில் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமை சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ள வைக்கப்படும் புறநிலையில் சுதந்திரமும் இறைமையும் (independent and sovereign state of Tamileelam) கொண்ட தமிழீழத் தனியரசை அமைக்கும் தமிழீழ மக்களின் உரிமையை ஏற்றுக்கொள்ள அனைத்துலகம் தலைப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் நேரடியான தேர்தல் மூலம் நாடு கடந்த தமிழீழ அரசுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதே இந்த அமைப்பிற்கு வலுச் சேர்க்கும். நேரடியான தேர்தல்களே அந்தந்த நாடுகளில் உள்ள மக்கள், நாடு கடந்த தமிழீழ அரசின் மீது உரித்துணர்வு (Ownership) கொள்வதற்கு வழிவகுக்கும் என்றும் உருத்திரகுமாரன் மேலும் தனது உரையில் தெரிவித்தார்.
இன்றைய உலக ஒழுங்கினை ஆழமானதும் கூர்மையானதுமான அரசியல் சிந்தனைக்கு உட்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான உலகளாவிய அரசியல் கட்டமைப்பை உருவாக்கி செயற்படுத்த வேண்டும் என அவுஸ்ரேலியாவில் இருந்து காணொலி இணைப்பு மூலம் உரையாற்றிய மருத்துவக் கலாநிதி சிவநேந்திரன் சீவநாயகம் தெரிவித்தார்.
நாடு கடந்த தமிழீழ அரசு உருவாக்கத்திற்கான ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த சட்டவாளர் கரண் பார்க்கர் மற்றும் சுவீடனைச் சேர்ந்த சமய வரலாற்றுத் துறை பேராசிரியர் பீற்றர் சால்க் ஆகியோரும் கருத்துரை வழங்கினர்.
நாடு கடந்த அரசானது பரந்துபட்ட மக்களின் பங்களிப்பை வேண்டி நிற்பதாக இக்கூட்டத்தில் வேண்டிக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
www.thamilislam.co.cc