சமீபத்திய பதிவுகள்

குழந்தை ஓயாமல் அழுகை விமானத்தில் இருந்து பெண் வெளியேற்றம்

>> Monday, November 2, 2009

 

சான் ஜோஸ்: விமானத்தில் குழந்தை அழுததால் பெண் பயணி இறக்கி விடப்பட்டார். அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட இருந்தது. பமீலா ரூட் என்ற பெண்ணின் 2 வயது மகன் ஆதம், விடாமல் அழுதான். அவனது அழுகை சத்தத்தில் விமான பயணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைÕகளை பணிப் பெண்கள் தெரிவிக்க முடியவில்லை. விமான புறப்பட தாமதமாகும் நிலை ஏற்பட்டது. எனவே, விமானத்தில் இருந்து பமீலா, ஆதம் இருவரும் இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பமீலாவிடம் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. அவரது டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும். ரூ.14,200 மதிப்புள்ள பயண கூப்பனும் அளிக்கப்படும் என்று அறிவித்தது.

பமீலா கூறுகையில், விமானம் புறப்பட்டு விட்டால் அழுகை நின்று விடும் என்று நம்பினேன். அதற்குள் இறக்கி விடப்பட்டேன் என்றார். சான் ஜோஸ், நவ. 3: விமானத்தில் குழந்தை அழுததால் பெண் பயணி இறக்கி விடப்பட்டார். அமெரிக்காவின் சான் ஜோஸ் நகரில் இருந்து நியூயார்க் நகருக்கு சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட இருந்தது. பமீலா ரூட் என்ற பெண்ணின் 2 வயது மகன் ஆதம், விடாமல் அழுதான். அவனது அழுகை சத்தத்தில் விமான பயணிகளுக்கான பாதுகாப்பு விதிமுறைகளை பணிப் பெண்கள் தெரிவிக்க முடியவில்லை.

விமான புறப்பட தாமதமாகும் நிலை ஏற்பட்டது. எனவே, விமானத்தில் இருந்து பமீலா, ஆதம் இருவரும் இறக்கி விடப்பட்டனர். இந்த சம்பவத்துக்கு பமீலாவிடம் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் வருத்தம் தெரிவித்துள்ளது. அவரது டிக்கெட் கட்டணம் திருப்பித் தரப்படும். ரூ.14,200 மதிப்புள்ள பயண கூப்பனும் அளிக்கப்படும் என்று அறி வித்தது. பமீலா கூறுகையில், விமானம் புறப்பட்டு விட்டால் அழுகை நின்று விடும் என்று நம்பினேன். அதற்குள் இறக்கி விடப்பட்டேன் என்றார்.


source:dinakaran


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள்:சிங்கள ராணுவ தளபதியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது:இலங்கை கண்டிப்பு

போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள்: சிங்கள ராணுவ தளபதியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது அமெரிக்காவிடம் இலங்கை கண்டிப்பு கொழும்பு, நவ.3- "மனித உரிமை மீறல்கள் பற்றி எங்கள் ராணுவ தளபதியிடம் விசாரணை நடத்த அனுமதிக்க மாட்டோம்'' என்று அமெரிக்காவிடம் இலங்கை கண்டிப்புடன் கூறி உள்ளது. அமெரிக்கா விசாரணை இலங்கையில், விடுதலைப்புலிகளுடன் சிங்கள ராணுவம் நடத்திய இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இது தொடர்பாக இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும் இலங்கை பாதுகாப்பு துறை செயலாளருமான கோத்தபய ராஜபக்சே மீது அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை போர்க்குற்ற விசாரணையை தொடங்கி உள்ளது. ராணுவ தளபதி இந்த நிலையில், இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா அமெரிக்கா சென்று உள்ளார். அங்குள்ள ஓக்லஹாமா நகரில் அவர் தங்கி இருக்கிறார். அவரது தலைமையில் தான் இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடந்தது. எனவே, போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ள அமெரிக்க அரசு, இது தொடர்பாக அவருக்கு அழைப்பு விடுத்து இருக்கிறது. ஓக்லஹாமா நகரில் இன்று (புதன்கிழமை) அவரிடம் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இலங்கை எதிர்ப்பு அமெரிக்க அரசின் இந்த நடவடிக்கை இலங்கை அரசுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சரத் பொன்சேகாவிடம் விசாரணை நடத்துவதற்கு இலங்கை கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறது. இது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சகம் கொழும்பு நகரில் உள்ள அமெரிக்க தூதர் பட்ரிசியா புட்டனிசை நேற்று அழைத்து, சரத் பொன்சேகாவிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்த முடிவு செய்து இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுவதை அமெரிக்க தவிர்க்க வேண்டும் என்றும் கண்டிப்புடன் கேட்டுக்கொண்டது. இந்த தகவலை இலங்கை வெளியுறவு மந்திரி பொகல்லகாமா நேற்று கொழும்பு நகரில் நிருபர்களிடம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அனுமதிக்க முடியாது இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக வேறொரு நாட்டிடம் தகவல்களை பகிர்ந்து கொள்ளும் அதிகாரம் ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு கிடையாது. இலங்கை அரசின் முன் அனுமதியும் ஒப்புதலும் இல்லாமல் சட்டபூர்வமாக அவர் யாருடனும் தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியாது. மனித உரிமை மீறல்கள் புகார் பிரச்சினையில், பாதுகாப்பு துறை செயலாளர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான தகவல்களை பெற சரத் பொன்சேகாவை பயன்படுத்த திட்டமிட்ட உள்ளனர். எனவே அவரிடம் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்த அனுமதிக்க முடியாது. போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை கூறி இருப்பது குறித்து விசாரணை நடத்த குழு ஒன்றை அமைக்க அதிபர் ராஜபக்சே முடிவு செய்து இருக்கும் தகவலை அமெரிக்க தூதரிடம் தெரிவித்து இருக்கிறோம். இந்த பிரச்சினையில், ராணுவ தளபதி சரத் பொன்சேகாவுக்கு தேவையான சட்ட உதவிகளை இலங்கை அரசு வழங்கும். இவ்வாறு பொகல்லகாமா கூறினார்.

:source:dailythanthi
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கூகுள் வழிதான் இன்டர்நெட் இயங்குகிறது

 
 

பெரும்பாலான இன்டர்நெட் போக்குவரத்து, கூகுள் வழி தான் இயங்குகிறது என்பது சற்று மிகைப் படுத்திக் கூறப்படும் செய்தியாகத் தெரியலாம்; ஆனால், அதுதான் உண்மை என இது குறித்து ஆய்வு நடத்திய பல நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேனல்கள் வழியாகத்தான் இன்டர்நெட் டிராபிக் ஏற்படுகிறது. ஜிமெயில், ஆர்குட், யு–ட்யூப், நால் எனப் பல இருந்தாலும், பெரும்பாலான இன்டர்நெட் பயன்பாடு யு–ட்யூப் வழியாகவே ஏற்படுகிறது. மொத்த இன்டர்நெட் ட்ராபிக்கில் 6% கூகுள் வழி உள்ளது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், இன்டர்நெட் என எடுத்துக் கொண்டால் அது பல்லாயிரக்கணக்கான நெட்வொர்க் வழி இருந்தன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இன்டர்நெட் பயன்பாட்டில் 50 சதவிகிதத்தை 15 ஆயிரம் நெட்வொர்க்குகள் மேற்கொண்டன. இப்போது அதே 50 சதவிகிதத்தினை 150 நெட்வொர்க்குகள் மட்டுமே மேற்கொள்கின்றன. பேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்கள் வழி 30% இன்டர்நெட் டிராபிக் ஏற்படுகிறது. இப்போதைய மாற்றம் வீடியோ ஸ்ட்ரீமிங் வழியில் அதிகம் ஏற்பட்டுள்ளது. மொத்த வெப் டிராபிக்கில் 20% வீடியோ சார்ந்ததாகவே உள்ளது. தகவல்களுக்காக இணைய தகவல் தளங்களைத் தேடுவது இரண்டு ஆண்டுகளுக்கு முன் 10 சதவிகிதத்திலிருந்து 52 % ஆக உயர்ந்துள்ளது. மற்றவை இமெயில் மற்றும் தனியார் நெட்வொர்க் சார்ந்து உள்ளனsource:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

எக்ஸெல்: டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்


எக்ஸெல்: டிப்ஸ் டிப்ஸ் டிப்ஸ்
  மொத்தமாக குளோஸ் செய்திட:எக்ஸெல் புரோகிராமில் 22 ஒர்க் புக்குகளைத் திறந்து மிக சீரியஸாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென வந்த அழைப்பின் காரணமாக, உடனே செல்ல வேண்டியுள்ளது. ஒவ்வொன்றாக 22 முறை File > Closeசெய்ய வேண்டும் என்றால் நேரம் எவ்வளவு ஆவது? இதற்கான சுருக்கு வழி என்ன? Shift கீயை அழுத்திய பின் பைல் மெனுவில் கர்சரைக் கொண்டு சென்று கிளிக் செய்திடுங்கள். இப்போது கிடைக்கும் மெனுவில் Close  என்பதற்குப் பதில் Close All என்று கிடைக்கும். இதில் கிளிக் செய்தால் அனைத்து பைல்களையும் மூடிவிடும்.கூடுதலாகப் பைல்களைத் திறக்கலாம்:
உங்கள் நிறுவனக் கணக்குகளை நிர்வாகம் செய்திட குறைந்த பட்சம் ஆறு ஒர்க் புக்குகளை நீங்கள் பார்த்து செயல்பட வேண்டியுள்ளது. ஆனால் பைல் மெனுவினைத் திறந்தால் கடைசியாக நீங்கள் பயன்படுத்திய பைல்கள் என நான்கினை மட்டும் காட்டுகிறது. என்ன செய்யலாம்? இந்த எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு வழி உள்ளது. 
எக்ஸெல் புரோகிராமைத் திறந்த பின் டூல்ஸ் கிளிக் செய்திடவும். அதன் பின் ஆப்ஷன்ஸ் கிளிக் செய்திடவும். அதில் ஜெனரல் என்ற டேப்பினைக் கிளிக் செய்திடவும். இதில் Recently Used File List  என்று ஒரு பிரிவு இருக்கும். இதன் அருகே எண்ணுக்கான கட்டம் ஒன்று இருக்கும். அருகில் உள்ள அம்புக்குறி அடையாளத்தைப் பயன்படுத்தி இந்த எண்ணை 9 ஆக மாற்றலாம். அல்லது கட்டத்தில் நேராக 9 என டைப் செய்திடலாம். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். அதன்பின் எக்ஸெல் புரோகிராம் திறந்தால் ஒன்பது பைல்கள் காட்டப்பட மாட்டாது. நீங்கள் குறைந்தது ஒன்பது பைல்களையாவது திறந்து பயன்படுத்தி இருந்தால் தான் ஒன்பது பைல்களின் பட்டியல் கிடைக்கும். இதனை எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள அனைத்து புரோகிராம்களிலும் மேற்கொள்ளலாம்.பைல்களை மொத்தமாகத் திறக்க:
ஒரே நேரத்தில் ஒன்பது பைல்களைத் திறந்து வேலை செய்தால் தான் உங்கள் மேலதிகாரி கேட்கும் தகவல்களை உங்களால் தர முடியும். ஒவ்வொரு நாளும் பணி தொடங்கும் முன் இந்த ஒன்பது பைல்களையும் ஒவ்வொன்றாகத் திறப்பதற்கே உங்களுக்கு நேரம் பிடிக்கலாம். சில வேளைகளில் தவறான பைலைத் திறந்துவிடலாம். இந்தக் குழப்பத்தினை நீக்கி,ஒரே நேரத்தில் அனைத்து பைல்களையும் திறந்து பயன்படுத்த ஒரு வழி உள்ளது. அது ஒர்க் ஸ்பேஸ் எனப்படும் வழியாகும்.
அனைத்து ஒர்க்புக்குகளையும் வரிசையாகத் திறக்கவும். இப்போது File மெனுவில் Save Workspace என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த ஒர்க்ஸ்பேஸ் பைலுக்கு நீங்கள் அடையாளம் காணும் வகையில் பெயர் ஒன்றைக் கொடுக்கவும். இந்த பெயரில் திறந்துள்ள அனைத்து பைல்களும் சேவ் செய்யப்படும். ஆனால் வழக்கமாக ஒரு எக்ஸெல் பைல் ..xls  என்ற துணைப்பெயருடன் சேவ் செய்யப்படும். இந்த ஒர்க் ஸ்பேஸ் பைல் xlw என்ற துணைப் பெயருடன் சேவ் செய்யப்படும். நீங்கள் இந்த பைல்களை அனைத்தையும் ஒரு சேரத் திறக்க வேண்டும் என எண்ணுகையில் இந்த ஒர்க் ஸ்பேஸ் பைலைத் திறந்தால் போதும். ஆனால் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இவற்றில் ஏதேனும் ஒரு பைலை வேறு ஒரு போல்டருக்கு நகர்த்திவிட்டால், பின் இந்த பைல் கிடைக்காது.பக்க எண்களைக் கீழாக அச்சிட:
நீங்கள் ஒரு நீளமான ரிப்போர்ட் ஒன்றை எக்ஸெல் ஒர்க்ஷீட்டிலிருந்து எடுக்கிறீர்கள். பக்கங்கள் அனைத்திலும் பக்க எண்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று திட்டமிடுகிறீர்கள். இதனை எப்படி செட் செய்வது என்று பார்க்கலாம். File மெனுவிலிருந்து Page Setup தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் டயலாக் பாக்ஸில் நான்கு டேப்கள் இருக்கும். இதில் மூன்றாவதாக Header/Footer டேப் தரப்பட்டிருக்கும். இதில் Footer  ட்ராப் டவுண் பார்க்கையில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். இதிலிருந்து Page 1 of ?  என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்தால் புட்டர் ஒன்று பிரிண்ட் செய்யப்படும். ஒவ்வொரு பக்கத்திலும் நடுவில் 1 of 2 என அந்தப் பக்கத்தின் எண் அச்சிடப்படும். 
இதற்கு இன்னொரு வழியும் உள்ளது. Custom Footer என்ற பட்டனை ஆப்ஷன்களிலிருந்து தேர்ந்தெடுக்கவும். பின் வலது மூலையில் உள்ள டெக்ஸ்ட் பாக்ஸ் (Text Box) என்பதனைத் தேர்ந்தெடுத்து கர்சரை அங்கு கொண்டு செல்லவும். Page என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விடவும். பின் # என்ற ஐகானைக் கிளிக் செய்திடவும். பின் ஒரு ஸ்பேஸ் விட்டு அதன்பின் "of" என டைப் செய்திடவும். பின் மீண்டும் ஒரு ஸ்பேஸ் விடவும். அதன் பின் இரண்டு ++ அடையாளம் உள்ள டோட்டல் பேஜஸ் என்ற ஐகானைத் தேர்ந்தெடுக்கவும். இதனால் பக்கத்தின் வலது பக்கத்தில் கஸ்டம் புட்டரில் செட் செய்ததற்கு ஏற்ப பக்க எண் காட்டப்படும்.எண் டைப் செய்த பின் விரும்பிய பக்கம் கர்சர் செல்ல:
செல் ஒன்றில் எண் ஒன்றை டைப் செய்து, பின் கர்சர் கீயைஅழுத்தினால், ஆரோ கீ எந்தப் பக்கம் காட்டுமோ அந்தப் பக்கம் கர்சர் செல்லும். இருப்பினும், நீங்கள் நியூமெரிக் கீ பேடைப் பயன்படுத்துபவராக இருந்தால், ஆரோ கீயைப் பயன்படுத்துவதனைக் காட்டிலும், என்டர் கீயைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும். ஆனால் எக்ஸெல் அதன் செட்டிங்ஸ்படி, என்டர் கீயை அழுத்துகையில், ஒரு செல் கீழாகக் கர்சரைக் கொண்டு செல்லும். அப்படியானால், நாம் விரும்பும் வகையில், திசையில் கர்சர் செல்லும் படி அமைக்கவே முடியாதா? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். முடியும். எக்ஸெல் புரோகிராமில் இதற்கான செட்டிங்ஸ் உள்ளது. அதனைப் பார்க்கலாமா!
Tools  கிளிக் செய்து Options  தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் Edit டேப் எடுக்கவும். இதில்Move Selection after Enter Direction  என்ற இடத்திற்குச் செல்லவும். இதில் Down  என்ற இடத்தில் உள்ள சிறிய ஆரோவினைக் கிளிக் செய்தால், கீழாக எந்த திசையிலும் செட் செய்வதற்கான ஆப்ஷன்ஸ் கிடைக்கும். இதில் நீங்கள் விரும்பிய திசைக்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும்.Right தேர்ந்தெடுத்து அமைத்தால், நீங்கள் செல் ஒன்றில் ஓர் எண்ணை டைப் செய்த பின், என்டர் தட்டினால் கர்சர் அடுத்த வலது பக்கம் உள்ள செல்லுக்குச் செல்லும்.தலைப்பு தெரிந்து கொண்டே இருக்க:
எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம். இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை மட்டும் தெரியும் படி உறைய வைத்தால் என்ன என்று தோன்றுகிறதா? அதாவது படுக்கை வரிசை 30, 40 எனச் சென்றாலும், அந்த பக்கங்களின் மேலாக, இந்த தலைப்புகள் நமக்குத் தெரிந்தபடி இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். உங்கள் விருப்பப்படியே, தலைப்பு உள்ள வரிசைகளை அப்படியே உறைந்து போய் நிற்க வைக்கலாம். அதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம். 
எடுத்துக்காட்டாக, முதல் மூன்று படுக்கை வரிசைகளில் நிறுவனப் பெயர் மற்றும் நெட்டு வரிசைகளில் அமைப்பதற்கான டேட்டாவினை விளக்கும் வகையில் தலைப்புகளை அமைத்திருக்கிறீர்கள். இந்த மூன்று படுக்கை வரிசைகளும் அனைத்து பக்கங்களிலும் தெரிய வேண்டும். எனவே அ4 செல்லைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்த பின்னர், மேலே உள்ள மெனு பாரில், Window  என்பதில் கிளிக் செய்திடுங்கள். கீழாக Freeze Panes என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுங்கள். இப்போது மூன்றாவது படுக்கை வரிசைக்கும், நான்காவது படுக்கை வரிசைக்கும் இடையே, பட்டையாக ஒரு கோடு இருக்கும். இனி நீங்கள் 60, 70 என எந்த படுக்கை வரிசைக்குச் சென்றாலும், முதல் மூன்று படுக்கை வரிசைகள் அப்படியே மேலாக உறைந்து நிற்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இதற்கெனத் தேர்ந்தெடுக்கும் செல் அ வரிசையில் தான் இருக்க வேண்டும். 
சரி, வேலை முடிந்த பின், இந்த உறைந்த செல்களை மறுபடியும் வழக்கமான நிலையில் வைக்க வேண்டுமே. என்ன செய்யலாம்? மீண்டும் Window மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அங்கு Unfreeze Panes  என்று ஒரு பிரிவு Freeze Panes இருந்த இடத்தில் இருக்கும். இதில் கிளிக் செய்தால், உடனே உறையச் செய்த வரிசைகள் அதன் தன்மையிலிருந்து விலகும். குறுக்காக இருந்த பட்டையான கோடு மறைந்துவிடும்.அதிக ஒர்க் ஷீட்டுடன் எக்ஸெல் திறக்க:
எக்ஸெல் ஒர்க் புக் ஒன்றினைத் திறக்கையில் அது மூன்று ஒர்க் ஷீட்கள் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும். பலர் இதுவே போதும் என்று பயன்படுத்துவார்கள். சிலர் ஒரு ஒர்க்ஷீட்டிலேயே தங்கள் பணியை முடித்துக் கொள்வார்கள். சிலருக்கு அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட் தேவையாய் இருக்கும். இன்ஸெர்ட் மெனு சென்று ஒர்க் ஷீட் எண்ணிக்கையை ஒவ்வொரு முறையும் கூட்டிக் கொள்வார்கள். இதற்குப் பதிலாக அதிக எண்ணிக்கையில் ஒர்க் ஷீட்களுடன் ஒர்க் புக் திறக்கும்படி அமைத்திடலாம். இதற்கு Tools  மெனு சென்று அதில் Options பிரிவில் கிளிக் செய்திடவும். பின் கிடைக்கும் ஆப்ஷன்ஸ் டயலாக் பாக்ஸில் General  என்னும் டேபினைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவினைப் பார்க்கவும். இதில் இரண்டாவது பிரிவில் முதலாவதாக Sheets in New Workbook  என்று ஒரு வரி இருக்கும். அதன் எதிரே உள்ள சிறிய கட்டத்தில் 3 என்ற எண் இருக்கும். இதன் மீது கர்சரைக் கொண்டு சென்று உங்களுக்குத் தேவையான ஒர்க் ஷீட் எண்ணிக்கை எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்திடலாம். அல்லது அருகே உள்ள சிறிய அம்புக் குறிகளை மேல் கீழாக அழுத்தி எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம்; அல்லது குறைக்கலாம். செய்து முடித்தவுடன் ஓகே கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை ஒர்க் ஷீட் வேண்டுமென்று செட் செய்தீர்களோ அத்தனை ஒர்க் ஷீட்களுடன் புதிய ஒர்க் புக் திறக்கப்படும். நினைவில் வைத்துக் கொள்ளுங்கள், புதிய ஒர்க் புக் தான் இந்த மாற்றங்களோடு கிடைக்கும். ஏற்கனவே நீங்கள் பயன்படுத்தி வைத்திருக்கும் ஒர்க் புக்கில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்படாது


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

அமெரிக்காவில் `ஆட்டோ சங்கர்'

அமெரிக்காவில் `ஆட்டோ சங்கர்' பாணியில் பயங்கரம் 6 பெண்களை கற்பழித்து கொன்ற காம கொடூரன் கைது பிணங்களை பின்பக்க தோட்டத்தில் புதைத்து வைத்தான் நிïயார்க், நவ.2- 6 இளம் பெண்களை கற்பழித்து கொன்று அவர்களை வீட்டுத் தோட்டத்தில் புதைத்த ஒருவன் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டான். அக்கம்பக்கத்தவர்கள் சந்தேகம் அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள கிளீவ்லேண்ட் நகரைச் சேர்ந்த 6 இளம்பெண்கள் 2005-ம் ஆண்டு முதல் காணாமல் போனார்கள். இவர்கள் மாயமானது குறித்து கிளீவ்லேண்ட் நகர போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், தங்களது பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆன்டனி சோவெல் (வயது 50) என்பவரின் நடவடிக்கை சந்தேகப்படும் வகையில் இருப்பதாக சிலர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதனால் போலீசார் கடந்த வியாழக்கிழமை ஆன்டனியின் வீட்டை முற்றுகையிட்டு சோதனையிட்டனர். கற்பழித்துக் கொலை அப்போது அந்த வீட்டுக்குள் அழுகிய நிலையில் 2 பெண்களின் சடலங்கள் கிடப்பதைக் கண்டு பிடித்து அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த இரண்டு பெண்களையும் தான் கற்பழித்து கொன்றதாக போலீசாரிடம் ஆன்டனி ஒப்புக்கொண்டான். ஆன்டனியை கைது செய்த போலீசார் அவனிடம் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அப்போது, அவன் மேலும் 4 பெண்களை கற்பழித்து பின்பக்கத் தோட்டத்தில் புதைத்து வைத்திருக்கும் திடுக்கிடும் தகவலையும் தெரிவித்தான். இதனையடுத்து, அந்த உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட போலீசார் ஆன்டனி வசித்த வீட்டின் பின்பக்க தோட்டத்திலிருந்து நேற்று 4 எலும்புக் கூடுகளை தோண்டி எடுத்தனர். பெற்றோர்-உறவினர் குவிந்தனர் ஆன்டனி 6 பெண்களை கற்பழித்து கொன்றது காட்டுத் தீ போல அமெரிக்கா முழுவதும் பரவியது. இதனைத் தொடர்ந்து ஆன்டனியின் வீட்டுக்கு ஏராளமானவர்கள் படையெடுத்தனர். கொலையுண்ட பெண்கள் தங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ என்ற வேதனை கலந்த எதிர்பார்ப்புடன் ஆன்டனியின் வீட்டின் முன்பாக அவர்கள் காத்து கிடக்கிறார்கள். இந்த சம்பவம் குறித்து உயர் போலீஸ் அதிகாரி மெக்கிராத் கூறுகையில், `அழுகிய நிலையில் கிடந்த 2 பெண்களும் 6 மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு ஆண்டுக்குள்ளாகத்தான் இத்தனை கொலைகளையும் செய்திருக்கிறான் என்று சந்தேகப்படுகிறோம். ஏனென்றால் நர்சு வேலை பார்க்கும் அவனது அத்தை கடந்த ஆண்டுதான் ஆன்டனியிடம் இந்த வீட்டை ஒப்படைத்துவிட்டு சென்றிருக்கிறார்' என்றார். ஆட்டோ சங்கர் பாணி சென்னையில் 20 வருடங்களுக்கு முன்பு இதே பாணியில் இளம் பெண்களை கற்பழித்தும், ஒரு பெண் உள்பட 6 பேரை கொன்று அவர்களை தனது வீட்டுக்குள்ளேயே புதைத்து வைத்தும் பரபரப்பை ஏற்படுத்திய ஆட்டோ சங்கர் பாணியில் இந்த கொலைகளை ஆன்டனி செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. 50 வயதான ஆன்டனி ஏற்கனவே 1989-ம் ஆண்டு ஒரு கற்பழிப்பு குற்றத்திற்காக 15 வருட கடுங்காவல் தண்டனை அடைந்து 2005-ம் ஆண்டு விடுதலை ஆனவன். தான் ஜெயிலில் இருந்து விடுதலையான சில ஆண்டுகள் அமைதியாக இருந்து விட்டு கடந்த ஒரு வருடமாக பெண்களை கடத்தி வந்து கற்பழித்து அவர்களை கொன்று புதைப்பதை ஆன்டனி வழக்கமாக கொண்டிருந்திருக்கிறான் என்று கருதப்படுகிறது. ஓகியோ மாகாண சட்டப்படி ஆன்டனி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.


source:dailythanthi
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

கடல்கன்னி அகப்பட்டதாகக் கூறும் வீடியோவில் தில்லுமுல்லு

 

அம்பாறையில் அமைந்துள்ள கல்முனை பகுதியிலிருந்து 10 கி.மீ தொலைவிலுள்ள நிந்தாவூர் என்னும் இடத்தில் முஸ்லிம் மீனவர் வலையில் இறந்த நிலையில் அகப்பட்ட கடற்கன்னியால் அப்பகுதி மக்களிடத்தில் பரபபரப்பை ஏற்படுத்தியுள்ளது என பல இணையத்தளங்களில் செய்திகள் வெளியாகியிருந்தது. அத்துடன் அதற்கு ஆதாரமாக வீடியோக் காட்சியும் வெளியாகியிருந்தது.

அந்த வீடியோ காட்சிகளை நாம் உற்றுநோக்கினால், அதில் கடற்கன்னியின் வாலை காட்டும்போது பின்னால் சென்ரல் கீட்டிங்(லண்டன் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் "central heater") நன்றாகத் தெரிகிறது. எனவே இந்த வீடியோ ஏதே ஒரு ஐரோப்பிய நாட்டில் எடுக்கப்பட்டு பின்னர் அது கல்முனையில் அகப்பட்டதாகவும், அதனை உடனே தாம் பதிவுசெய்து இணையத்திற்கு அனுப்பியதாகவும் யாரோ பொய்யான தகவலைக் கொடுக்க பொறுப்பற்ற வகையில் பல இணையத்தளங்கள் அதனை பிரசுரித்துள்ளன.

போதாக் குறைக்கு கிழக்கில் கடவுள் தோன்றியதாகவும், கிழக்கில் பல அதிசயங்கள் நடப்பதாகவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைகின்றனர் சிலர். ஊடகங்கள் இவ்வாறான செய்திகளைச் சரிவர கையாளவேண்டும், பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும், இது அதிர்வு வாசகர்களால் சுட்டிக்காட்டப்பட்ட ஒரு விடையமே அன்றி வேறு எந்த ஊடகங்களையும் தாக்கும் நோக்கில் எழுதப்படவில்லை என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.


--
www.thamilislam.co.cc


source:athirvu

StumbleUpon.com Read more...

பல நூறு அடி பாயும் குட்டிப் புலிகள் !

 

குழந்தை பிறந்ததும் தவழ, தத்தித் தத்தி நடக்க, ஓட என ஒவ்வொரு வளர்ச்சிக்கும் ஒரு காலகட்டம் உண்டு. ஆனால், பத்து வயது நிரம்புவதற்குள் பல்வேறு துறைகளில் சிகரத்தை எட்டிப் பிடிக்கத் துடிக்கும் சுட்டிகளின் போட்டிகள் நிறைந்த உலகமாகிவிட்ட காலமாதலால்.... பிறந்த உடனேயே குழந்தை பேசலாம், நடக்கலாம்... ஏன் விமானம் கூட ஓட்டலாம்... ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மழலைகளின் தனித்திறமை, ஈடுபாடு, உழைப்பு, அர்ப்பணிப்புடன் பெற்றோர்களின் அக்கறை கலந்த ஆர்வமுமே அவர்கள் மேதைகளாக ஜொலிக்க முழுக் காரணம். இப்படி மெகா சாதனைகளை புரிந்த நான்கு மழலை மேதைகளின் பேட்டி இங்கே...

பழம்பெரும் நடிகர் ஆர்.எஸ். மனோகரின் பேத்தியான ஸ்ருதி, நுங்கம்பாக்கம் பத்மா சேஷாத்திரி பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். பாட்டு, டான்ஸ், டிராமா, சொற்பொழிவு, ஸ்லோகம், ஃபேன்ஸி டிரெஸ் என பல கலையிலும் பிரகாசித்து வெற்றி கோப்பைகளைத் தட்டி வரும் சகலகலாவல்லி.

"திங்கள், புதன், வியாழன் பாட்டு கிளாஸ்... செவ்வாய், வெள்ளி டான்ஸ் கிளாஸ்... சனி, ஞாயிறு ஸ்லோகம்னு டைம்டேபிள் போட்டிருக்கேன். நாடகங்கள்ல பக்த பிரகலாதன், ஆஞ்சநேயர், சூரிய பகவான், ராஜராஜசோழன், குமரகுருபரர்னு அத்தனை வேஷங்களும் போட்டு நடிச்சிருக்கேன்"என்று தாத்தாவைப் போலவே வார்த்தைகளை ஸ்பஷ்டமாக உச்சரிக்கும் ஸ்ருதி, முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், இன்றைய குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், உயர் நீதிமன்ற நீதிபதி ராமசுப்ரமணியன் மற்றும் பல்வேறு வி.ஐ.பிக்களின் முன்பு தனது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டைப் பெற்றிருக்கிறாள்.


"ஸ்லோகம்லாம் பெரும்பாலும் சமஸ்கிருதத்துலதான் இருக்கும். அம்மா தான் தமிழ்ல எழுதி தருவா. அப்பா நாடகம் தொடர்பான அத்தனை விஷயங் களையும் அட்சரசுத்தமா சொல்லி தருவா"எனும் ஸ்ருதி மேடை நிகழ்ச்சி களில் பெரும்பாலும் 'குழந்தை திருமண எதிர்ப்பு', 'வன்கொடுமை தடுப்பு' போன்ற சமூக விழிப்பு உணர்வை ஏற்படுத்தக் கூடிய விஷயங்களை மையமாக எடுத்துக் கொள்வதுதான் ஹைலைட்.

ரண்டு கைகளையும் அநாயாசமாக சுழற்றி டிரம்ஸ் வாசிப்பில் அபார சாதனை படைத்திருக்கும் சுமன், சென்னை, வேலம்மாள் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன். புவி வெப்பமயமாதலை தடுக்கும் இயக்கத்துடன் இணைந்து கடந்த மாதம் சென்னை, ஸ்பென்சர் பிளாசாவில் ஒன்பது மணி நேரம் தொடர்ந்து டிரம்ஸ் வாசித்து, 'லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' சாதனை படைத்திருக்கிறான்.

"மூணு வயசுலேர்ந்து டிரம்ஸ் கத்துக்கறேன். என்னோட அண்ணா கீபோர்டு, தங்கச்சி பாட்டு, அப்பா கிடார்னு எங்க குடும்பமே கலைக் குடும்பம்தான். எங்களுக்குள்ள அப் பப்போ இசைப்போட்டி நடக்கும். இதுதான் என் சாதனைக்கு வழிகாட்டியா இருந்தது..."எனும் சுமன், 'இசைத்துளிர்கள்' எனும் சில்ட்ரன்ஸ் ஆர்கெஸ்ட்ராவின் மெயின் டிரம்மர். இதுவரை 500க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்துள்ள சுமன், "வாரத்துல சனி, ஞாயிறு ரெண்டு நாளும் டிரம்ஸ் கிளாஸுக்கும், மீதி நாள்ல கீபோர்டு, கிடார், மிருதங்க கிளாஸுக்கும் போறேன். அடுத்து கின்னஸ் சாதனைக்கு ரெடியாயிட்டிருக்கேன்..." முகத்தில் சந்தோஷ புன்னகையுடன் கூறினான்.

சென்னை, கோபாலபுரம் டி.ஏ.வி. பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் திலீப்குமார், சதுரங்கத்தில் சாகசத்தை நிகழ்த்திய சுட்டிப் புயல்.

"எங்கப்பா ரொம்ப நல்லா செஸ் விளையாடுவாரு. அதைப் பார்த்ததும் எனக்கும் ஆசை வந்திடுச்சு. அப்புறம் அவர் கூடவே கிளாஸுக்குப் போக ஆரம்பிச்சேன்"என்றதும் திலீப்பின் அப்பா ரவிகுமார்,

"நான் போஸ்டல் டிபார்ட்மென்ட்ல வேலை பார்க்கறேன்... அப்படியே தி.நகர் செஸ் அசோஸியேஷன்ல கோச்சராவும் இருக்கேன். இவனுக்கு நாலு வயசா இருக்கறப்ப, செஸ் கத்துக் கொடுத்தேன். உடனே, புரிஞ்சுட்டு, தினமும் விளையாட கூப்பிட ஆரம்பிச்சிட்டான். அவனோட ஆர்வத்தைப் பார்த்து செஸ் வகுப்புல சேர்த்துவிட்டேன்"என்றார்.

"செஸ் ஃபெடரேஷன் ஆஃப் காரைக்குடி, ஸ்டேட் லெவல்ல 7 வயசுக்குள்ள இருக்கறவங்களுக்கு செஸ் போட்டி நடத்தினாங்க. இதுவரைக்கும் ஆறேழு முறை அதுல கலந்துட்டு முதல் பரிசு வாங்கியிருக்கேன். செஸ் ஆனந்த் மாதிரி உலக சாம்பியனாகணும்"என்றான் திலீப்குமார்.

1330 திருக்குறளையும் அட்சரசுத்தமாக சொல்லும் ஆற்றல் படைத்த ஒன்பதே வயதேயான லவினாஸ்ரீ, சென்ற வருடம் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தார் நடத்திய சர்டிஃபைடு புரொஃபஷனல் பரீட்சை எழுதி தேர்வானவர்களில், உலகின் இளம் வயது சுட்டி.

மதுரை வி.எம்.ஜே. மேல்நிலைப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் லவினாஸ்ரீ, "எனக்கு ஒரு வயசா இருக்குறப்ப, மாநிலங்கள், மாவட்டங்கள், தலைவர்கள், தேசிய கொடிகள், திருக்குறள்னு அத்தனையும் சொல்லி தந்தது என் அம்மா இந்து லேகாதான். என்னோட ரெண்டு வயசுல, அப்ப பிரதமரா இருந்த வாஜ்பாய்கிட்ட ஐம்பது திருக் குறளை ஒப்பிச்சு காட்டினதும், 'குழந்தை மேதாவி'னு எனக்குப் பட்டம் தந்தார். முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் 'திருக்குறள் குழந்தையே வா'னுதான் கூப்பிடுவாரு. இப்படி பல தலைவர்கள் என்னைப் பாராட்டினதுதான் திருக்குறள் முழுசையும் கத்துக்கணும்ங்கிற ஆர்வத்தை எனக்குத் தந்துச்சு. அப்படித்தான் திருக்குறள்ல சாதனை படைச்சேன்"என்றவள் 2006ல் குழந்தைக்கான தேசிய விருதும், லிம்கா புக் ஆஃப் ரெகார்ட்ஸ் சாதனையும் புரிந்துள்ளாள்.

"ஒரு பிரைவேட் கம்ப்யூட்டர் பயிற்சி நிறுவனத் துல சேர்ந்து அனிமேஷன் படிச்சு சர்டிஃபிகேட் வாங்கினேன். அமெரிக்கால எம்.எஸ். படிக்கிற என் பெரியப்பா பையன், மைக்ரோசாஃப்ட் தேர்வைப் பத்தி சொல்லி, 'பாகிஸ்தானை சேர்ந்த 9 வயசு பையன் இந்த தேர்வை எழுதி சாதனை பண்ணிருக்கான். நீ அதை முறியடிக்கணும்'னார். ஆன்லைன் மூலமா பரீட்சையும் எழுதினேன். மூணு மணி நேரம் எக்ஸாம். ஆனா, நான் அரை மணி நேரத்துல முடிச்சி, 1000த்துக்கு, 842 மார்க் வாங்கினேன்!"என்கிற லவினாஸ்ரீக்கு சயின்ட்டிஸ்டாக வேண்டும் என்பது லட்சியம்.

லட்சியம் நிச்சயம் நிறைவேற வாழ்த்துக்கள்!


source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

ஐபிஎல் அணியை வாங்குகிறார் மோகன்லால்

  ஐபிஎல் கிரிக்கெட் அணிகளுள் ஒன்றை மலையாள நடிகர் மோகன்லால் வாங்கவுள்ளார்.

 

mohanalal9

கொச்சியில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற விழாவில் கேரள மாநில தட களத்தின் நல்லெண்ணத் தூதராக மோகன்லால் தேர்வு செய்யப்பட்டார்.

விழாவின் முடிவில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தட கள விளையாட்டின் நல்லெண்ணத் தூதராக நியமித்து என்னை விளையாட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். ஆனால் கல்லூரியில் படிக்கும்போதே நான் மல்யுத்த வீரன் என்பது பலருக்குத் தெரியாது.

நானும், இயக்குநர் பிரியதர்ஷனும் இணைந்து ஐபிஎல் அணியை வாங்கப் போவதாக செய்துள்ளன. அது உண்மைதான். ஏலத்தின் மூலம் ஐபிஎல் அணியை வாங்கப் போகிறேன். விரைவில் உங்களுக்கு நல்ல செய்தியோ அல்லது கெட்ட செய்தியோ கிடைக்கும் என்றார் அவர்.

ஏற்கெனவே இந்தி நடிகர் ஷாருக் கான், நடிகைகள் பிரீத்தி ஜிந்தா, ஷில்பா ஷெட்டி ஆகியோர் ஐபிஎல் அணியை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


source:paristamil


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP