சமீபத்திய பதிவுகள்

இராக்கில் மசூதி அருகே குண்டு வெடித்து 22 பேர் சாவு

>> Thursday, October 2, 2008

lankasri.comஇராக்கில் ரமலான் வழிபாட்டின்போது ஷித்தி மசூதி அருகே குண்டு வெடித்து 16 பேர் பேர் உயிரிழந்தனர். 2 தற்கொலைப் படை தாக்குதல் மூலம் இந்த குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மேலும் தீவிரவாதிகள் 6 பேரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றனர்.இந்த சம்பவம் இராக் தலைநகர் பாக்தாத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மற்றொரு சம்பவத்தில் ஜாதியா என்ற நகரத்தில் தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் கொல்லசுட்டுக்கொன்றனர்.

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை இராக் ராணுவ வாகனம் மீது மோதிச் செய்து வெடிக்கச் செய்தனர்.

அமெரிக்க படைகளின் ஆக்கிரமிப்புக்குப் பின் இராக்கில் குண்டு வெடிப்பு அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. அமெரிக்கப் படைகள் வெளியேற்றுவதற்காக அல்-கொய்தா உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

StumbleUpon.com Read more...

ருஷ்டி அதிரடி கருத்து

 
 
lankasri.comசர்ச்சைக்குரிய சாத்தானின் கவிதைகள் நாவலை எழுதியது குறித்து வருத்தமில்லை என்று சல்மான் ருஷ்டி கூறியுள்ளார்.20 ஆண்டுகளுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி எழுதிய சாத்தானின் கவிதைகள் நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது இஸ்லாமுக்கு விரோமாக இருக்கிறது என்று கூறி அப்போதை ஈரான் அதிபர் கோமேனி அவருக்கு மரண தண்டனை விதித்தார். இதையடுத்து ருஷ்டி 10 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில், முகமது நபி தொடர்பாக புதிய புத்தகம் ஒன்று வெளியாகியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ள பதிப்பகம் தாக்கப்படலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் ருஷ்டி இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார்.

மதம் மற்றும் தத்துவம் சார்ந்த முக்கிய கேள்விகளை எழுப்பும் படைப்புகளை எழுத தாம் தயங்கியதில்லை என்றும், சாத்தானின் கவிதைகள் நாவல் எழுதியதற்காக வருத்தப்படவில்லை என்றும் கூறியுள்ளார்

 

 

StumbleUpon.com Read more...

காந்தி தேசமே காவல் இல்லையா??????

 

 

இன்று தேசமே காந்தியடிகளாரின் பிறந்த நாளை கொண்டாடிகொண்டு இருக்கிறது. நாட்டிற்கு சுதந்திரம் அகிம்சை முறையில் பெற்று தந்த மகானின் பிறந்த இன்நன்நாளில் எல்லா இந்தியர்களும் வெட்கபடும் அளவிற்கு ஒரிசாவில்  கலவரம் நடந்துகொண்டிருக்கிறது.
சமுதாய சேவைக்காக கடந்து சென்றுள்ள அன்னை தெரசா மடத்தை சேர்ந்த ஒரு கன்னியாஸ்திர்க்கு நேர்ந்த கொடுமை நிச்சயம் மனித நேய ஆர்வலர்கள் அனைவருக்கு அதிர்ச்சியளிக்கும் சம்பவமாகும். செப்டம்பர் 30ந் தேதியிட்ட தி ஹிந்து நாளிதலின் முதல் பக்கத்தில் வந்த செய்தியே அது. இது போல் நடந்த சம்பவம் வெளியே வராமல் இருந்தது எத்தனையோ கடவுளே அறிவார்.

28வயது மதிக்கதக்க இறைபணியாற்றும் அருட்சகோதரியை மதவாத இயக்கத்தை சேர்ந்த ஒரு கும்பல் (மன்னிக்கவும் இதை மதவாத இயக்கம் என்பதை இனி இந்து மத தீவிரவாதிகள் என சொல்வதுதான் சரியாக இருக்கும்) இழுத்து வந்து அவருடைய ஆடைகளை களைந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் பாதுகாப்பு கொடுக்கவேண்டிய காவல்துறையினரின் முன்னிலையிலேயே இந்த கொடுமை நடந்துள்ளது. இந்த அருட்சகோதரி காவல்துறையினரின் காலைபிடித்து காப்பாற்றும்படி கெஞ்சியுள்ளார். ஆனால் எங்களால் ஒன்றும் செய்யமுடியாது என அவர்களே இந்த கும்பலிடம் ஒப்படைத்துவிட்டனர்.

மேலும் அருட்பணீயாற்றும் சகோதரரையும் அவருடைய ஆடைகளை களைந்து இந்த சகோதரியிடம் தவறாக நடக்க கட்டாயப்படுத்தியுள்ளனர். அவர் மறுக்கவே அவரையும் காவல் துறையினரின் முன்னிலையிலேயே அடித்து துன்புறுத்தபட்டுளார். இது ஒரிசா மாநிலத்தில் கந்தமால் மாவட்டத்தில் பெலிகூடா பகுதியில் நடந்துள்ளது.

இந்த கொடுமையை எங்கே போய் சொல்ல. இந்துமத தீவிரவாதிகளே உங்களுக்கு உடன்பிறந்து சகோதரிகள் இல்லையா? உங்களை பெற்றதும் ஒரு பெண்தானே? அவர்களை விட எவ்விதத்தில் இவர்கள் குறைந்து போனவர்கள் இல்லை.   இப்படி கடினமான பகுதிக்கு வ்ந்து சேவை செய்ய‌ மருத்துவ வசதியில்லாத சாலைவசதியில்லாத படிப்பறிவில்லாத மேம்பாடு அடையாத பகுதிக்கு வந்து சமுதாய சேவை செய்யவேண்டும் என்பது என்ன அவர்கள் தலையெழுத்தா? ஏன் ஏன் கிறிஸ்துவின் அன்பினாலே நெருக்கப்பட்டவர்களாக எப்படியாயினும் இப்படிப்பட்ட மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு சென்றுள்ள சகோதரியை இப்படி கற்பழித்த கயவர்களே இந்துமத தீவிரவாதிகளே ஒன்று கேளுங்கள். கிறிஸ்தவர்களூம் இஸ்லாமிய சகோதரர்கள் மாதிரி பதிலுக்கு பதில் வெடிகுண்டு வைத்து அப்பாவி மக்களை கொன்று கூவிப்பதற்காக வெகுண்டு எழுவார்கள் என நினைக்கவேண்டாம். மாறாக இன்னும் நாங்கள் மனிதர்களை நேசிக்கதான் செய்வோம். சமுதாய சேவை செய்யதான் போறோம். ஆனால் ஒன்று நிச்சயம். அரசன் அன்றே கொல்வான் தெய்வம் நின்று கொல்லும். என்பதுபோல நிச்சயம் இறைவன் நீதி செய்வான்.
. அவருடைய நீதீ நியாயமாயிருக்கும். இதிலிருந்து ஒருவனும் தப்ப முடியாது. 

Source from the Hindu :  http://www.hindu.com/2008/09/30/stories/2008093058040100.htm

 

http://christhunesan.blogspot.com/2008/10/blog-post.html

StumbleUpon.com Read more...

ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் இரண்டு சதவீதம் மட்டுமே

ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் இரண்டு சதவீதம் மட்டுமே. ஆனால் கலவர மாவட்டமான கண்டமால் பகுதியில் முப்பது சதவீத கிறிஸ்தவர்கள் உள்ளனர். இந்த மாவட்டத்தில் 1971-ல் ஆறு சதவீதம் இருந்த அவர்கள் 2001-ல் 27 சதவீதமாக உயர்ந்தார்கள். வறுமையின் பிடியில் அல்லல் படும் ஆதிவாசிகளும் தலித்களும் பெருமளவில் வாழும் இம்மாவட்டத்தில் கிறித்தவ மிஷினரிகளின் வருகைக்குப்பின் ஏராளமான பள்ளிக் கூடங்களும் இதர கல்வி நிலையங்களும் எழும்பின. கூடவே தொழிற் பயிற்சி நிறுவனங்களும் மருத்துவ மனைகளும் பெருகின. இதன் மூலம் அம்மக்கள் கவரப்பட்டு தங்களைக் கிறித்தவ மதத்துக்கு மாற்றிக் கொண்டனர். அப்படி மாறியவர்களில் பெருவாரியானவர்கள் கல்வி கற்றுத் தேறினார்கள். ஆதிவாசி கிறித்தவ இளைஞர்கள் ஆங்கில புலமையில் தேர்ச்சி பெற்றனர். அவர்களது பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இந்த முன்னேற்றம் மற்ற மக்களையும் கிறித்தவத்துக்கு மாறத் தூண்டியது. வறுமைக் கோட்டுக்கு மேல் இருக்கும் 25 சதவீத) மக்களில் பெருவாரியானவர்கள் கிறித்தவர்களாக மாறினர். ஆனால் மதம் மாறிய கிறித்தவர்களில் ஒரு குறிப்பிட்ட தொகையினர் தங்களுக்கு அரசு உதவிகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு ஆவணங்களில் தங்களை ஹிந்துக்கள் என்றே காட்டி வந்துள்ளனர். கொலை செய்யப்பட்ட மூன்று கிறித்தவர்களின் ரெவின்யூ ரிக்கார்டுகளில் அவர்கள் ஹிந்துக்களாக பதிவு செய்யப்பட்டிருப்பது இதற்கு ஒரு சான்றாகும்.

கண்டமால் மாவட்டத்தில் ஆதிவாசிகளும் பன்னா என்ற தலித் இனத்தினரும் வசித்து வருகின்றனர். இவர்களை கிறித்தவத்துக்கு கட்டாய மத மாற்றம் செய்வதாகக் கூறி தீவிர இந்துத்துவ வாதிகள் இம்மாவட்டத்தைத் துவம்சம் செய்து விட்டனர். மதம் மாற்ற முடியாது மனம் மாற்றத்துடன் வருபவர்களை நாங்கள் அரசின் சட்டங்களுக்கு உட்பட்டுதான் ஏற்றுக் கொள்கிறோம்- கல்விக்கும் சமூக சேவைக்கும் தான் நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம் என்று கிறித்தவ சபைகள் இதனை நியாயப் படுத்துகிறது. ஒரிசாவில் மதமாற்ற தடை சட்டம் உள்ளதால் எளிதில் மதம் மாற்றுவது என்பது இயலாத காரியம். மதம் மாற வேண்டுமெனில் அரசின் பல துறைகளில் அனுமதி பெற்று சட்டப் பூர்வமாக மட்டுமே மாற்ற முடியும் என்பதால் கட்டாய மதமாற்றம் என்பது ஆதாரமற்ற குற்றச் சாட்டாகும் என்றும் கூறுகின்றன மிஷினரிகள்.

தற்போதைய கலவரத்துக்குக் காரணம் சுவாமி லட்சுமணானந்த சரஸ்வதியின் கொலையாக இருந்தாலும் ஏற்கெனவே இங்கு கிறித்தவர்களுக்கும் தீவிர இந்துத்துவ வாதிகளுக்குமிடையே பகைமை புகைந்து கொண்டுதான் இருந்தது. காண்டமல் மாவட்டத்தில் சுமார் 120 வருடங்களாக செயல்பட்டு வரும் கிறித்தவ மிஷினரிகளின் முன்னேற்றத்தை முடக்க 1960 களில் திரிசூலப் போர் என்ற பிரகடனத்துடன் சங்பரிவாரின் பிரதிநிதியாக லட்சுமணானந்த சரசுவதி இங்கு ஆசிரமம் அமைத்தார். முதலில் செக்காபடிலும் பின்னர் ஜலாஸ்படிலும் ஆசிரமம் அமைத்து ஏராளமான நலத் திட்டங்களும் குழந்தைகளுக்கான பள்ளிக்கூடங்களும் தங்கும் விடுதிகளும் துவங்கி நடத்தினார். இதன் மூலம் கிறித்தவ முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த பாடுபட்டார். ஆனால் கிறித்தவ மிஷினரிகள் நடத்தும் கல்வி நிலையங்களும் மருத்துவ மனைகளும் தரும் சேவையில் கவரப்பட்ட மக்கள் தீவிர ஹிந்துத்துவ வாதிகளின் அழைப்பைப் புறக்கணித்தனர். கிறிஸ்தவ மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்த சுவாமி இன்னொரு பிரச்சாரத்தையும் முடுக்கி விட்டார். பசுவதைத் தடை சட்டத்தை கிறித்தவர்கள் மீறுவதாகக் கூறி இருதரப்பினர் மீதும் மோதலுக்கு வித்திட்டார். சுவாமிக்கும் கிறித்தவர்களுக்கும் இது நேரடிப் பகையை ஏற்படுத்தியது.

ஒரிசா மாநிலம் ஜென்மாஷ்டமி விழாவில் மூழ்கி இருந்தபோது ஆகஸ்டு 23 இரவு ஜலாஸ்பட் ஆசிரமத்தில் சுவாமி லட்சுமணானந்தா கொலை செய்யப்பட்டார். முப்பதுக்கும் அதிகமானோர் ஆசிரமத்தில் நுழைந்து குரூரமாக சுவாமியைக் கொலை செயடதனர். கூட இருந்த நான்கு நபர்களும் கொலை செய்யப்பட்டனர். சுவாமியின் ஒரு கால் வெட்டி எறியப்பட்டது. முன்னர் இருமுறை சுவாமியை கொல்ல சதி நடந்தது. கொலை செய்யப் படுவதற்கு சில நாட்களுக்கு முன் ஆசிரமத்திற்கு மிரட்டல் கடிதம் வந்திருந்தது. சுவாமி நேரடியாக காவல் நிலையம் சென்று புகார் மனு அளித்திருந்தும் அவருக்குப் போலீஸ் காவல் தரப்படவில்லை.ஒரிசாவில் கிறிஸ்தவர்களைத் தவிர மற்ற அனைத்து வகுப்பினரும் சுவாமியைக் கிறிஸ்தவர்கள் கொன்றதாக நம்புகின்றனர். சென்ற டிசம்பரில் 'பாராகாம'வில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான பஜ்ரங்தள் தாக்குதலுக்கு மாவோயிஸ்டுகளின் உதவியுடன் நடத்திய பதிலடிதான் சுவாமியின் கொலை என்றும் ஒரு தரப்பு நம்புகின்றது. ஆனால் மாவோயிஸ்டுகள் இந்தக் கொலைக்குப் பொறுப்பேற்றுக் கொண்டாலும் சங்பரிவாரும் அதன் கிளை அமைப்புகளும் அதை ஒத்துக் கொள்ளவில்லை. கிறிஸ்தவர்களின் சேவை மாவோயிஸ்டுகளுக்குக் கிடைத்து வருவதால் மாவோயிஸ்டுகள் கிறிஸ்தவர்களை ஆதரிக்கிறார்கள். சுவாமியின் கொலைக்குப் பின்னால் சுவாமியின் ஆட்களின் கரங்கள் தான் செயல்பட்டுள்ளது என்றும் கொலைக்கு சில நாட்களுக்கு முன் சுவாமிக்கு வந்த மிரட்டல் கடிதம் குறித்து புகார் செய்யப்பட்டும் போதிய பாதுகாவல் தராதது மர்மமாக உள்ளதாகவும் கிறிஸ்தவர்கள் தரப்பில் கூறப்படுகிறது. கலவரங்களில் கொல்லப்பட்டவர்கள் பாமர மக்கள். பகை அடங்காமல் சங் பரிவார்கள். கிறிஸ்தவ மக்கள் பதட்டத்தில் இப்படியாக ஒரிசா தத்தளிக்கிறது. அரசின் பாகுபாடற்ற நியாயமான சட்டத்தின் கரங்களால் தான் நாட்டின் இறையாண்மைக்கு பங்கம் வராமல் பாதுகாக்க முடியும் என நடுநிலையாளர்கள் கோருகின்றனர். இந்திய மக்களின் சாந்தமான வாழ்வுக்காக எல்லாம் வல்ல இறைவனை நாமும் வேண்டுவோமாக.

குறிஞ்சியார்
 

StumbleUpon.com Read more...

உஷார்! இன்று முதல் பொது இடத்தில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம்


 


புதுடெல்லி, அக்.2-

இன்று முதல் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

பொது இடங்களில் புகை பிடிக்க தடை

உலகில் புகையிலை பழக்கத்தால் ஆண்டு தோறும் 55 லட்சம் பேர் உயிர் இழக்கிறார்கள். மேலும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றன.

எனவே, பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்து உள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த மே மாதம் 30-ந் தேதி வெளியிட்டது. பொது இடங்களில் புகை பிடிக்க வகை செய்யும் இந்த சட்டம் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ந் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இன்று முதல் அமல்

இதை எதிர்த்து இந்திய புகையிலை நிறுவனம், இந்திய ஓட்டல்கள் சங்கம் உள்ளிட்ட சில அமைப்புகள் சார்பில் டெல்லி ஐகோர்ட்டில் 4 ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து, புகை பிடிக்க தடை விதிக்கும் சட்டத்தை அமல்படுத்த அனுமதி அளிக்க கோரியும், இந்த எல்லா ரிட் மனுக்களையும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரிக்க வேண்டும் என்று கோரியும் மத்திய சுகாதார துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட்டு, மத்திய அரசு பிறப்பித்த சட்டத்துக்கு தடை விதிக்க முடியாது என்று கூறி விட்டது.

எனவே பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து மத்திய அரசு பிறப்பித்த சட்டம் இன்று (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருகிறது.

ரூ.200 அபராதம்

ஆகவே இன்று முதல் பஸ் நிறுத்தம், ரெயில் நிலையம், ஆஸ்பத்திரிகள், அலுவலகங்கள், ஓட்டல்கள், சினிமா தியேட்டர்கள், கேளிக்கை விடுதிகள் போன்ற பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம் விதிக்கப்படும்.

தமிழ்நாட்டில் இந்த சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் யார்-யார்? என்பது பற்றிய விவரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதுதொடர்பாக மாநில, மாவட்ட, வட்ட மற்றும் கிராம அளவில் பறக்கும் படையும் அமைக்கப்பட்டு உள்ளது.

மத்திய மந்திரி கடிதம்

பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து பிறப்பிக்கப்பட்டு உள்ள சட்டத்தை அமல்படுத்துமாறு கோரி மத்திய சுகாதார துறை மந்திரி டாக்டர் அன்புமணி அனைத்து மாநில கவர்னர்கள், முதல்-மந்திரிகள் மற்றும் தலைமைச் செயலாளர்களுக்கு கடிதம் எழுதி இருக்கிறார். புகை பிடிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதம் மூலம் வசூலாகும் பணத்தை மாநில அரசுகள் புகையிலை தடுப்பு திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும் இல்லையேல் அரசு கருவூலத்தில் செலுத்தலாம் என்றும் அவர் கூறி உள்ளார்.

ஜார்கண்ட், டெல்லி, சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதித்து அந்த மாநில அரசுகள் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்து உள்ளன. ஆனால் பீகார், மராட்டியம் போன்ற சில மாநில அரசுகள் பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு தடை விதிப்பது தங்களால் இயலாத காரியம் என்று கூறி இருக்கின்றன.


 http://www.dailythanthi.com/article.asp?NewsID=442160&disdate=10/2/2008

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP