சமீபத்திய பதிவுகள்

எம்.எஸ்.கான்பிக் உபயோகம் எப்படி?

>> Monday, February 15, 2010

  சிஸ்டத்தைச் சரிப்படுத்த எம்.எஸ்.கான்பிக்
 

 கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் சிறிய பிரச்னைகள் ஏற்படுகையிலும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் செயல்பாடுகளில் மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கையிலும், நமக்குக் கிடைக்கும் அறிவுரை எம்.எஸ். கான்பிக் மூலம் சில மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என்பதே. அது மட்டுமின்றி, உங்கள் கம்ப்யூட்டர் பூட் ஆக அதிக நேரம் ஆகின்றதா? ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் இயங்கத் தொடங்குவதைக் காண நீங்கள் வெகுநேரம் மானிட்டர் திரையை உற்று நோக்கிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளதா? காத்திருத்தல் என்பது மனத்தளவில் ஒரு சித்திரவதை என்று ஆல்டஸ் ஹக்ஸ்லி என்ற அறிஞர் கூறியது அப்போது தான் எவ்வளவு உண்மை என்று புரிகிறதா? இதற்கெல்லாம் ஓர் அருமருந்தாக நமக்குக் கிடைத்திருப்பதுதான் எம்.எஸ். கான்பிக்(MSConfig) என்னும் செயல்பாடு. இந்த பயன்பாட்டில் அடங்கியுள்ள செயல்பாடுகளை இங்கு பார்க்கலாம்.MSConfig என்பது Microsoft System Configuration Utility ன்பதன் சுருக்கமாகும். இதுவே விண்டோஸ் விஸ்டாவில் System Configurationஎன்று அழைக்கப் படுகிறது. இது ஒரு டூல்; சிஸ்டத்தைச் சரிப்படுத்த விண்டோ நமக்கு தரும் சாதனம். விண்டோஸ் 98, எக்ஸ்பி, விஸ்டா ஆகிய சிஸ்டங்களில் இது இணைந்தே கிடைக்கிறது. விண்டோஸ் 2000 சிஸ்டம் வைத்திருப்பவர்கள், இந்த டூலை டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம். இப்போது இந்த சிஸ்டத்தினை சிலர் இன்னும் பயன்படுத்தி வருவதால் இதனைக் குறிப்பிட்டுள்ளேன்.எம்.எஸ். கான்பிக் விண்டோவினைத் திறக்க, ஸ்டார்ட் அழுத்தி ரன் பாக்ஸில் msconfig என டைப் செய்து என்டர் அழுத்த வேண்டும். உடனே ஐந்து டேப்கள் அடங்கிய விண்டோ ஒன்று கிடைக்கும்.ஜெனரல் டேப் General):  இது முதலில் காணப்படும் டேப். இதில் மூன்று Normal Startup, Diagnostic Startup  மற்றும் Selective Startup – பிரிவுகள் உண்டு. நாம் எதிர்பார்த்தபடி சிஸ்டம் இயங்குகையில் நார்மல் ஸ்டார்ட் அப்பினைப் பயன்படுத்துகிறோம். டயக்னாஸ்டிக் ஸ்டார்ட் அப் பிரிவினை நாம் எதிர்பாராத வகையில் சிஸ்டம் இயங்குகையில், அதனை ஆய்வு செய்திடப் பயன்படுத்துகிறோம். நாம் தேர்ந்தெடுத்த சில புரோகிராம்களின் இயக்கத்துடன், சிஸ்டம் இயக்கத்தினைத் தொடங்கிட செலக்டிவ் ஸ்டார்ட் அப்பிரிவைப் பயன்படுத்துகிறோம்.பூட் (Boot):இந்த டேப்பில் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில், நாம் கம்ப்யூட்டரில் அப்போது இன்ஸ்டால் செய்து வைத்திருக்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களைக் காட்டுகிறது. அத்துடன் அந்த சிஸ்டங்களை, நாம் விரும்பும் வகையில் இணைந்து செயல்பட வைத்திட வழி தருகிறது. Safe Boot, Boot Log, Time out Delay  ஆகியவற்றை இங்கு மாற்றி அமைக்கலாம். கம்ப்யூட்டர் இயக்கம் குறித்து அவ்வளவாகத் தெரியாதவர்கள், இந்த பிரிவினைக் கவனமாகக் கையாள வேண்டும். எதனையும் தேவையின்றி மாற்றுவதனைத் தவிர்க்க வேண்டும்.சர்வீசஸ் (Services) :   நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ள அனைத்து வசதிகளும் இங்கு பட்டியலிடப்படும். மேலும் அப்போது அவை இயங்குகிறதா, நிறுத்தப்பட்டுள்ளதா (Running, Stopped)  என்றும் காட்டப்படும். எந்த சர்வீஸ் பிரிவினையும் தேர்ந்தெடுத்து, அந்த இயக்கத்தினை தொடங்கவும், முடக்கவும் (Enable or Disable)  செய்திடலாம்.  "Hide all Microsoft services"என்பதன் முன் டிக் அடையாளம் அமைத்துவிட்டால், மற்றவர்கள் இவற்றில் தேவையில்லாமல் மாற்றங்கள் செய்வதனைத் தடுத்துவிடலாம். மேலும் தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்கள், கம்ப்யூட்டர் இயக்கத்தின் பின்னணியில் இயங்கி நம் மெமரியில் இடம் பிடிப்பதனை, இந்த பட்டியலில் அதன் இயக்கத்தினை முடக்கி வைத்து தவிர்க்கலாம்.ஸ்டார்ட் அப் (Startup) :  இந்த டேப்பில் கிளிக் செய்தால் கிடைக்கும் விண்டோவில், கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் போது, இயங்கத் தொடங்கும் பட்டியல் கிடைக்கும். சிஸ்டம் ட்ரேயில் இருக்கும் புரோகிராம்களும், சிஸ்டம் பின்னணியில் இயங்கும் புரோகிராம்களும் இந்த பட்டியலில் இருக்கும். பொதுவாகப் பலரின் கம்ப்யூட்டர்களில் போன்ற புரோகிராம்களை ஸ்டார்ட் அப் புரோகிராம்களாகப் பார்க்கலாம். இவற்றில் தேவை இல்லாததை நீக்கினால், கம்ப்யூட்டர் பூட் ஆவது விரைவில் நடக்கும்.டூல்ஸ் (Tools)  இயக்கத்தினுள்ளாக பல்வேறு டூல்ஸ்களை (எ.கா.  System Information, Programs, System Restore போன்றவை) இயக்கு வதற்கான தளம் இது. சரி, அடுத்து எப்படி எம்.எஸ். கான்பிக் இயக்கி, சிஸ்டம் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்கலாம் என்று பார்க்கலாம். இதனை ஓரளவிற்கு சிஸ்டம் இயங்கும் தன்மையினை அறிந்தவர்கள் மட்டுமே செய்திட வேண்டும். (நமக்கா தெரியாது! என்று முடிவு செய்து பின் சிக்கலில் சிக்கி, கம்ப்யூட்டர் மலர் மீது பழி போட வேண்டாம்.)முதலில் ஸ்டார்ட் அப் தொடங்கும்போதே தேவையான சர்வீசஸ் எவை எவை என தெரிந்து கொள்ளவும்.  அதே போல ஸ்டார்ட் அப் அப்ளிகேஷன்கள் என்ன என்ன வேண்டும் என்பதனையும் முடிவு செய்திடவும். இதனை ஓரளவு எண்ணிக்கை குறைவாகவே வைத்துக் கொள்ளவும். அடிப்படையில் மிகவும் முக்கியத் தேவைகளையும், கட்டாயம் பயன்பாட்டிற்குத் தேவையானவற்றை மட்டும் வைத்துக் கொள்ளவும். அடுத்து ரன் மெனு சென்று எம்.எஸ்.கான்பிக் டைப் செய்து பெறவும். சர்வீசஸ் டேப் கிளிக் செய்து தேவையற்ற சர்வீஸ் புரோகிராம்களை முடக்கி  (Disable)  வைக்கவும். "Hide all Microsoft Services"   என்று இருப்பதில் டிக் அடையாளம் ஏற்படுத்தப்பட்டுள்ள தனை உறுதி செய்திடவும்.  அடுத்து ஸ்டார்ட் அப் டேப் கிளிக் செய்து தேவையற்ற அப்ளிகேஷன் புரோகிராம்களை நீக்கவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும். சிஸ்டத்தை ரீஸ்டார்ட் செய்திட வேண்டும் என்ற செய்தி கிடைத்தவுடன், அனைத்து அப்ளிகேஷன்களையும் மூடி, விண்டோஸ் இயக்கத்தினை ரீஸ்டார்ட் செய்திடவும். இப்போது ஸ்டார்ட் அப் நேரம் கணிசமாகக் குறைந்திடும். எந்த அளவிற்கு புரோகிராம்களை நீக்கி, குறைந்த எண்ணிக்கையில் புரோகிராம்களை, ஸ்டார்ட் அப் தொடங்கும்போது ஆரம்பிக்கும் வகையில் வைத்துள்ளீர்களோ, அந்த அளவிற்கு நேரம் குறையும். மீண்டும் ஏதேனும் புரோகிராம், ஸ்டார்ட் அப் செய்திடும்போதே தேவை என்றால், எம்.எஸ். கான்பிக் சென்று, ஸ்டார்ட் அப் போல்டரில் அந்த புரோகிராம்களின் முன் டிக் அடையாளம் ஏற்படுத்தவும்


source:dinamalar


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

புனேயில் குண்டு வெடிப்பு :அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு


புனேயில் குண்டு வைத்தவர்கள் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ. ஒரு கோடி பரிசு : தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த மத்திய அரசு முடிவு
 

Front page news and headlines today 

 புதுடில்லி : புனேயில் ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்த பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில், பேக்கரி எதிரில் உள்ள ஓட்டலின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம், குண்டு வெடிப்பு தொடர்பாக சில முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரின், கோரேகான் பார்க் பகுதியில் ஓஷோ ஆசிரமம் உள்ளது. இதனருகேயுள்ள ஜெர்மன் பேக்கரியில், கடந்த சனியன்று நிகழ்ந்த பயங்கர குண்டு வெடிப்பில், ஒன்பது பேர் பலியாயினர்; 60 பேர் காயம்அடைந்தனர். இந்த வழக்கை, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகள் கூறியதாவது: ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்த பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு, ஒரு கோடி ரூபாய் பரிசளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேல்மட்ட அளவில் இந்த பரிசீலனைகள் நடக்கின்றன. விரைவில் முடிவு அறிவிக்கப்படும். பரிசு அறிவிக்கப்பட்ட பின், பயங்கரவாதிகள் பற்றி தகவல் கொடுப்போருக்கு, அவர்களின் அடையாளம் பாதுகாப்பாக வைக்கப்படுமென, உறுதி அளிக்கப்படும். ஆனால், அவர் கொடுக்கும் தகவல் சரியானதாக இருக்க வேண்டும். இவ்வாறு உள்துறை அமைச்சக உயர் அதிகாரி கூறினார். உள்துறை அமைச்சக உயர் அதிகாரிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் முக்கிய ஆய்வுகளையும் நடத்தினார்.இதற்கிடையில், குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஜெர்மன் பேக்கரிக்கு எதிரேயுள்ள, ஐந்து நட்சத்திர ஓட்டலின் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீஸ் அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்ததில், அதில் முக்கிய தடயங்கள் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. ஜெர்மன் பேக்கரியில் குண்டு வைத்ததில், இரண்டு நபர்களுக்கு தொடர்பு இருக்கலாம். பேக்கரியில் குண்டு வைத்தவுடன், அவர்கள் அங்கிருந்து ஆட்டோவில் தப்பிச் சென்றிருக்கலாம் என நம்பப்படுகிறது. அதே நேரத்தில், இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகள், பேக்கரி குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப் படுகிறது.இந்திய முஜாகிதீன்: ஐந்து பயங்கரவாதிகளில், அப்துஸ் சுபான் குரேஷி, ரியாஸ் அகமது பாட்கல், இக்பால் பாட்கல் மற்றும் மோக்சின் சவுதாரி ஆகியோர் இந்தியன் முஜாகிதீன் அமைப்பின் தென் மாநில பிரிவைச் சேர்ந்தவர்கள். அகமது பாட்கல், இக்பால் பாட்கல் இருவரும் சகோதரர்கள். சவுதாரி, புனேயைச் சேர்ந்தவன். ஐந்தாவது பயங்கரவாதி முகமது அம்ஜத் கிவாஜா, ஆந்திரா, ஐதராபாத்தைச் சேர்ந்தவன். சமீபத்தில் இவன் போலீசாரால் கைது செய்யப் பட்டான் என்பது குறிப்பிடத் தக்கது.இதற்கிடையில், இவ்வழக்கை விசாரித்து வரும் மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர், குண்டு வெடிப்பில் தொடர்புடையதாக நம்பப்படும் ஆறு பேரை பிடித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பில், எந்த பயங்கரவாத அமைப்புக்கு தொடர்பு உண்டு என, தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில், முதலிடத்தில் இருப்பது இந்தியன் முஜாகிதீன். புனேயில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் கோண்ட்வா பகுதியில் சிலரைப் பிடித்து, பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் விசாரித்து வருகின்றனர். குஜராத், டில்லி மற்றும் பெங்களூரு குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டதை அடுத்து தான் கோண்ட்வா பகுதி, போலீசாரின் கண்காணிப்பில் வந்தது. இவ்வாறு போலீஸ் அதிகாரி கூறினார்.அதே நேரத்தில், 2008ம் ஆண்டு டில்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு, தற்போது டில்லி போலீசாரின் பிடியில் உள்ள இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த ஷாகத் என்ற பயங்கரவாதியிடமும் விசாரணை நடத்த, மகாராஷ்டிரா பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் திட்டமிட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் ரகசியமாகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் பற்றி, ஷாகத் ஏற்கனவே சில தகவல்களை கொடுத்துள்ளதால், அவனிடம் விசாரணை நடத்தினால், மேலும் பல விவரங்கள் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஒன்றரை கிலோ ஆர்.டி.எக்ஸ்.,: ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்பிற்கு ஒன்றரை கிலோ ஆர்.டி.எக்ஸ்., வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதாக, தடய அறிவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஆர்.டி.எக்ஸ்., பயன்படுத்தப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே சமயம், அம்மோனியம் நைட்ரேட்டை டீசலுடன் கலந்து வெடிக் கலவையில் சேர்த்திருப்பதாகவும் தகவல் கூறப்பட்டது. விரைவில் தடயவியல் அறிக்கை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என்று கூறப்பட்டது.கடைசி நிமிடத்தில் முடிவை மாற்றிய பயங்கரவாதிகள்: கோரேகான் பார்க்கில் உள்ள ஓஷோ ஆசிரமத்தையோ அல்லது யூதர்கள் சமுதாய மையமான சாபத் ஹவுசையோ குண்டு வைத்து தகர்க்க பயங்கரவாதிகள் திட்டமிட்டிருக்கலாம். ஆனால், அந்த இரண்டு இடங்களிலும் பாதுகாப்பு அதிகம் இருந்ததால், மக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய இடமான ஜெர்மன் பேக்கரியை தேர்வு செய்திருக்கலாம் என, புலனாய்வு அதிகாரிகள் கூறியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவித்ததாவது: பயங்கரவாதிகள் குண்டு வைத்த நேரத்தில், பேக்கரியில் இருந்த பெரும்பாலான வெளிநாட்டவர்கள், ஓஷோ ஆசிரமத்தில் இரவு 7 மணிக்கு நடக்கும் தியானம் மற்றும் வழிபாட்டில் பங்கேற்க சென்று விட்டனர். அதனால், உயிரிழப்பு குறைவாக இருந்துள்ளது. குண்டு வெடிப்பு முன்னதாகவே நிகழ்ந்திருந்தால், உயிரிழப்புகள் அதிகமாகியிருக்கும்.அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதி டேவிட் ஹெட்லி, 2008ம் ஆண்டில் ஓஷோ ஆசிரமத்திற்கும், சாபத் ஹவுசிற்கும் வந்து சென்றுள்ளான். அவன் வந்து சென்றது தெரிந்த பின்னர் தான், இந்த இரண்டு இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பேக்கரியில் பையில் வைக்கப்பட்ட குண்டு, ரிமோட் மூலமோ அல்லது மொபைல் போன் மூலமோ வெடிக்கச் செய்திருக்கலாம். டைமர்கள் எதுவும் வைத்ததாகத் தெரியவில்லை.குண்டு வெடிப்பு நிகழ்த்திய விதத்தைப் பார்க்கும் போது, லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்புக்கு இதில் தொடர்பிருக்கலாம் என நம்பப்படுகிறது. ஏனெனில், இதுபோன்ற குண்டு வெடிப்புகள் காஷ்மீரில் தான் நிகழ்ந்துள்ளன. இவ்வாறு புலனாய்வு அதிகாரிகள் கூறினார்


source:dinamalar

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

சிதம்பரம் ஆக்ஷனுக்கு பதிலடி:நக்சல்கள் 25 ராணுவ வீரர்களை கொன்றனர்

மாவோ., நக்சல்கள் வெறி., ராணுவ வீரர்கள் 25 பேரை கொன்றனர் ; சிதம்பரம் ஆக்ஷனுக்கு பதிலடி என கொக்கரிப்பு 

Top world news stories and headlines detail 

 இந்தியாவின் கிழக்கு மற்றும் மத்திய பகுதியையொட்டியுள்ள பீகார், சட்டீஸ்கர், ஜார்கண்ட் , ஒரிசா, மேற்குவங்கம் ஆகியபகுதிகளில் நக்சல்கள் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. இங்குள்ள மாவோயிஸ்ட் நக்சல்கள் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை தந்து வருகின்றனர். இவர்களை அழிக்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அதிகாரிகளை கடத்தி சென்று கொலை செய்வது போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தீ வைப்பது , மற்றும் போலீஸ் இன்பார்மர்களை கொலை செய்வது இவர்களது முக்கிய செயல்பாடாக இருந்து வருகிறது.முதல்வர்கள் மாநாட்டில் ஆலோசனை : நக்சல்கள் அட்டூழியத்தை ஒடுக்க ஆப்ரேஷன் கீரின் ஹன்ட் என்ற பெயரில் ஒரு குழு அமைத்து செயல்பட ராணுவ வீரர்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பிறப்பித்தார். இதன்படி ராணுவ வேட்டை நடந்து வருகிறது. இந்த ஆபரேஷனுக்கு நக்சல்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுபோன்ற ராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் நக்சல்கள் 72 மணி நேர பந்த் அறிவித்தனர். தேசிய பாதுகாப்பு தொடர்பான மாநில முதல்வர்கள் பங்கேற்ற மாநாடு பிரதமர் தலைமயில் நடந்த அந்நாளில் பல்வேறு தாக்குதல்களை நக்சல்கள் நடத்தினர். ரயில் தண்டவாளங்கள் தகர்க்கப்பட்டன. இந்நாளில் ஒரிசா, பிகார், ஜார்கண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில முதல்வர்களிடம் நக்சல்கள் கொட்டத்தை ஒழிக்க என்ன வழி என தனியாக ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை முடிந்த 6 நாளில் மேற்குவங்கம் மேற்கு மிட்னாபூர் மாவட்டத்தில் சில்தா என்ற பகுதியில் துணை ராணுவ படையினர் முகாம் மீது நக்சல்கள் அதிரடி தாக்குதல் நடத்தினர். இங்கு அதிகாலை 5 .30 மணி அளவில் இந்த அதிரடி சம்பவம் நடந்துள்ளது.இன்று நடந்தது என்ன ? : இது குறித்து இப்பகுதி மாவட்ட மாஜிஸ்திரேட் என்.எஸ். நிகாம் கூறியதாவது: இங்கு சுமார் 50 பேர் நக்சல்கள் 25 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். இவர்கள் முகாம் உள்ளே புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளனர். வீரர்கள் தங்களுக்குரிய உணவு சமைத்து கொண்டிருந்த நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளன. நக்சல்கள் கையில் இருந்த துப்பாக்கி மூலம் 5 பேரை சுட்டு கொன்றனர். பின்னர் தீ வைத்துள்ளனர். இதில் சிக்கி 9 வீரர்கள் பலியாயினர். தொடர்ந்து அங்கிருந்த ஏ.கே.,47 ரக துப்பாக்கி உள்பட முக்கிய ஆயுதங்களை கொள்ளையடித்து சென்றனர். இவ்வாறு அவர் கூறினார்.ராணுவ முகாமில் நடந்த தாக்குதலில் சுமார் 20 பேர் இறந்து விட்டனர். இன்னும் எத்தனை பேர் காயமுற்றுள்ளனர் என்ற விவரம் இன்னும் அறியப்படவில்லை. சம்பவம் நடந்த பகுதிக்கு ராணுவ உயர் அதிகாரிகள் விரைந்துள்ளனர்.நக்சல் ‌தலைவன் கொக்கரிப்பு : இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு மாவோ., நக்சல்கள் பொறுப்பேற்றுள்ளனர். இது குறித்து மாவோ., தலைவர் கிஷன்ஜி கூறியிருப்பதாவது: மத்திய அமைச்சர் சிதம்பரம் எங்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்கியுள்ளார். ஆப்ரேஷன் கீரின் ஹன்ட் என்ற நடவடிக்கையை நிறுத்த வேண்டும். மத்திய அரசு மனித நேயத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்டு வருகிறது. இது போன்ற இந்த நடவடிக்கைக்கு இந்த தாக்குதல் வழியாகத்தான் நாங்கள் பதில் சொல்வோம். இத்தாக்குதலும் அப்படித்தான். இன்னும் எங்கள் அதிரடி தாக்குதல் தொடரும் என கூறியுள்ளார்.


source:dinamaalr


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

உன்னோடு ஒரு நிமிஷம் !

 


காட்டுக்குள்ளே திருவிழா....

தமிழில், இயற்கையில் புதைந்து கிடக்கும் ரகசியங்கள் குறித்து அதிகமான புத்தகங்கள் இல்லையே என்கிற ஏக்கம் எனக்கு எப்போதும் உண்டு. அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் படித்து, இயற்கையின் மீது அதிகப் பிடிப்புக் கொள்கிற மாதிரி சுவாரசியமான நூல்கள் இல்லாத வருத்தம் உண்டு. அந்த ஏக்கம் விஜயா பதிப்பகத்தின் கொ.ம்£.கோதண்டம் எழுதிய 'காட்டுக்குள்ளே திருவிழா' என்ற அரிய நூலால் தீர்ந்தது.

கதை சொல்வது போல் நேர்த்தியுடன் பல அரிய தகவல்கள் அதில் சொல்லப் பட்டிருக்கின்றன. 'ஜோதிப்புல்' என்கிற புல் வளர்ந்துள்ள இடத்தில் பளபளவென வெளிச்சம் பரவும் என்பது... நினைத்துப் பார்க்கவே இன்புறுத்துகிற செய்தி. மலையில் வாழ்கிற மக்கள் இயற்கை யோடு எப்படி இயைந்து வாழ்கிறார்கள் என்பது நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம். 'அத்தாலொட்டி' என்கிற அதிசய மூலிகை, கிழித்தால் ஒட்டிக் கொள்ளும் தன்மையைக் கொண்ட இலைகளைக் கொண்டது என்பது, இயற்கையை எண்ணி வியக்க வைக்கிறது.

பண்டித நேரு வருகிறபோது... ஆற்றங்கரையில் உப்பைக் குவித்து அவற்றைச் சுவைக்க, காட்டு யானைகளைக் கவர்ந்திழுத்த செய்தியும் காட்சிப்படுத்த வைக்கிறது. ராஜபாளையம் மேற்கு மலையடிவாரத்தில் 'மகாவில்வம்' என்கிற அதிசய மூலிகை மரம் இருப்பதாக எழுதியிருக்கிறார். அதன் சில இலைகளை அரைத்துச் சாறு எடுத்து, சரியாகத் தண்ணீர் விட்டு ஒரு குவளை அருந்தினால், உடல் முழுவதும் புதுத்தெம்பு ஏற்படுமென்றும், அது மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு நல்ல பயனைத் தரும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மேற்கத்திய மருத்துவ முறைக்கு மாறிய நாம், எவ்வாறு நம் அரிய மூலிகைப் பொக்கிஷங்களை மறந்து விட்டோம் என்பது மனத்தை உறுத்துகிறது.

'தா வரம்' என்பதுதான் தாவரமானது என்கிற நயமன் விளக்கமும் ரசிக்கத்தக்கதாக இருக்கிறது. குங்கிலிய மரத்தைப் பற்றியும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். கழுதைப் புலியைப் பற்றியும் எழுதியிருக்கிறார். கழுதைப் புலிகள் பத்துப் பதினைந்து சேர்ந்தால் புலியைக் கூட விரட்டி விடுமாம்.

புலிகளை ஏமாற்றுவதற்கு பழங்குடியினர் முகமூடியைப் பயன்படுத்துவதைப் பல இடங்களில் கேள்விப்பட்டிருக் கிறேன். காரணம், புலி எப்போதும் பின்புறமாகப் பாய்ந்து கழுத்தைப் பிடித்துக் கொல்லும். எனவே, மனித முகத்தைப் போல முகமூடி செய்து தலைக்குப் பின்னால் கட்டிவைத்து விட்டால், புலி திக்குமுக்காடிப் போகும். 'மலைமொங்கான்' என்கிற பறவை, மரத்தின் பொந்தில் முட்டையிட்டு சீல் வைத்துவிடும் விஷயமும் சுவாரசியமானது. ஜோதிமரம் என்கிற மரத்தின் கட்டையில் படிந்திருக்கும் பூஞ்சானில் இருந்து ஒளி வருகிற செய்தியும், வரையாடு பற்றிய குறிப்பும், வயதான புலிகள் யானைக் குட்டியைத் தாக்கிக் கொன்று தின்கின்ற தகவலும் நூலில் உள்ளன.

'சுற்றுச்சூழல் சுற்றுலா' என்கிற புதிய அனுபவத்தை சுற்றுலாத்துறை வழங்கி வருகிறது. இந்நூலை வாசிப்பவர்கள், நெரிசலான நகரப் பகுதிகளிலிருந்து இளைப்பாறும் பொருட்டு இயற்கையை இன்னும் அதிக ஆர்வத்தோடு அணுகுவார்கள்.

 

source:vikatan

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

மனிதனுக்கு பன்றியின் நுரையீரல்


 
  

Swine Flu 

லண்டன் : மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியின் நுரையீரல் மனிதனுக்கு பொருந்தும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மற்றும் ஆல்பிரட் மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பன்றி நுரையீரலை மனிதர்களுக்கு பொருத்துவது தொடர்பான முதல் சோதனை தோல்வி அடைந்தது.
பிறகு மனித மரபணு சேர்க்கப்பட்ட புதிய பன்றியை உருவாக்கி வளர்த்தனர். மரபணு மாற்றப்பட்ட பன்றியின் நுரையீரலை அகற்றி மெஷினில் பொருத்தி ஆல்பிரட் மருத்துவ மனையில் சோதனை நடத்தினர். அச்சோதனையில் மனித உடலுக்கு வெளியே மனித ரத்தத்தை சுத்தப்படுத்தும் பணியை பன்றியின் நுரையீரல் சிறப்பாக நிறைவேற்றி உள்ளது. 
இன்னும் சில சிக்கல்கள் உள்ளன. அவற்றுக்கும் தீர்வு கண்டுபிடிக்கப்பட்டால் மனித உடலில் பன்றி நுரையீரலை வெற்றிகரமாகப் பொருத்தி இயக்கலாம் என ஆல்பிரட் மருத்துவ மனையின் டாக்டர் கிளென் வெஸ்டால் கூறினார். இதற்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் ஆகலாம் என அவர் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டு ஆராய்ச்சிப் பணிகளில் இது மகத்தான முன்னேற்றம் ஆகும் என வெஸ்டால் குறிப்பிட்டார்.  ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இந்த  வெற்றி குறித்து மகிழ்ச்சி அடையும் சமயத்தில் விஞ்ஞானிகள் சிலர் இந்த முயற்சிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 


source:dinakaran

--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

இலங்கை தூதுவரை அழைத்து ரொபேட் ஓ பிளேக் கடும் கண்டனம்

     

 

சிறிலங்காவின் முன்னாள் இராணுவ தளபதியும் அமெரிக்கா பிரஜையுமான சரத் பொன்சேகாவின் கைது தொடர்பில் தனது நாட்டிலுள்ள சிறிலங்கா தூதுவரை அழைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க, பொன்சேகாவின் தேர்தல் நடவடிக்கைக்கு அமெரிக்கா நிதி வழங்கியதாக சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட கருத்து தொடர்பாகவும் தனது கடும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் ஜாலிய விக்கிரமவை இராஜாங்க திணைக்களத்துக்கு அழைத்த அமெரிக்காவின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியத்துக்கான உதவி செயலர் ரொபேர்ட் ஓ ப்ளேக், மேற்குறித்த இரு விடயங்கள் தொடர்பாகவும் ஆழ்ந்த கவலையை தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள அமெரிக்கா தூதரகம் இது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துள்ளபோதிலும், சிறிலங்கா தூதுவர் அமெரிக்கா இராஜாங்க திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டமை குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவும் நோர்வேயும் பொன்சேகாவுக்கு நிதி வழங்கி மகிந்த அரசை கவிழ்ப்பதற்கு சதி அமைத்தன என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலர் அண்மையில் பி.பி.ஸிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


source:athirvu


--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

காது நரம்பு இல்லாத சிறுவனுக்கு மூளையில் ‘சிப்’

  ]
உலகில் முதல் முறையாக ஒரு வயது சிறுவனுக்கு மூளை அருகே 'சிப்' பொருத்தி காது கேட்கும் அறுவை சிகிச்சை செய்து மெட்ராஸ் இஎன்டி ஆராய்ச்சி அறக்கட்டளை சாதனை படைத்துள்ளது.
இதுகுறித்து நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் மோகன் காமேஸ்வரன் கூறியதாவது: 

சென்னையை சேர்ந்த சிறுவன் கவுசிக் (2), பிறந்த போதே காதின் உள்நரம்பு இல்லை. லட்சத்தில் ஒரு குழந்தைக்குதான் இதுபோன்ற பாதிப்பு இருக்கும். இதற்கு 'ஆடிட்டரி பிரெய்ன் ஸ்டெம் இம்பிளான்டேஷன்' என்ற நவீன அறுவை சிகிச்சையில் தீர்வு காணலாம். ஆனால், இதுவரை 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குதான் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 

இந்த அறுவை சிகிச்சையை உலகில் முதல் முறையாக சிறுவன் கவுசிக்குக்கு செய்ய முடிவு செய்தோம். காதில் உள்நரம்பு இல்லாததால், 'பல்சா டிவைஸ்' என்ற 'சிப்', மூளையின் அடிப்பகுதியில் அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. இது காதின் வெளிப்புறத்தில் மாட்டப்பட்டிருக்கும் கருவி மூலம் இயங்கும். சிறுவன் ஒரு வயதாக இருக்கும்போது கடந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதை தொடர்ந்து 9 மாதமாக மின்தூண்டல் மூலம் கேட்கும் திறன் பெற பயிற்சி அளிக்கப்பட்டது. இப்போது கவுசிக்குக்கு முழு அளவில் காது கேட்கிறது. இந்த கருவியின் மதிப்பு ரூ.9.50 லட்சம். 

இவ்வாறு மோகன் காமேஸ்வரன் கூறினார்.
source:newindianews
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...

தலைவர் பிரபாகரன் வாழ்த்துக்களோடு முத்துக்குமார் திருமணம்

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்த்துக்களோடு முத்துக்குமார் திருமணம்வீரப்பன் விவகாரத்தில் சிறை சென்ற முத்துக்குமார் திருமணம் வரும் 21.2.2010 அன்று புதுக்கோட்டையில் நடைபெறுகிறது.  புதுக்கோட்டை முன்னாள் திராவிட கழக மாவட்ட தலைவர் கரு.காளிமுத்துவின் மகளை கைப்பிடிக்கிறார்.

இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, பேராசிரியர் நெடுஞ்செழியன் ஆகியோர் முன்னிலையில் இத்திருமணம் நடைபெறவுள்ளது.

முத்துக்குமார் திருமண அழைப்பிதழில்,   ''உலகத்தமிழர்களின் உலகத்தலைவர் மேதகு வே.பிராபாகரன் நல் வாழ்த்துக்களோடு இத்திருமணம் நடைபெறுகிறது'' என்று அச்சிடப்பட்டுள்ளது.

source:nakkheeran
--
www.thamilislam.co.cc

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP