சமீபத்திய பதிவுகள்

தொப்புள் தெரிய தங்கள் அங்கங்கள் குதித்தாட நடப்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு பெருமை.

>> Sunday, July 17, 2011


பட்டாம்பூச்சிகளின் கதை! (5)

"ஹலோ... உங்களது கடிதங்கள், விழிப்பூட்டுவதாய் உள்ளன...' என, பெற்றோரும், "இதெல்லாம் தெரியும்... வேற எப்படில்லாம் ஏமாத்துவாங்க; அதையும் எழுதுங்க...' என்றும், "எங்க கதையை எழுதுங்க...' எனவும், ஏகப்பட்ட கடிதங்கள்...
"ஏகப்பட்ட பிரச்னைகள்; அப்பப்பா... பெண் குழந்தைகள் பிறந்தாலே பயமா இருக்கு. இவர்களை வளர்த்து ஆளாக்கி, நல்ல முறையில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பதை உங்களின் அனுபவ முத்திரைகளைப் படித்தபின், பயம் அடிவயிற்றை கிள்ளுகிறது...' என, கடிதம் எழுதியுள்ள தாய்மார்கள் அதிகம்.
உங்களிடம் விழிப்புணர்வு ஏற்படுவது குறித்து, என் மன பாரம், சற்று இறங்கியுள்ளது.
இந்த வாரம், என், "பியூட்டி பார்லர்' தோழி சொன்ன சேதியைச் சொல்லப் போகிறேன். இந்த விபரீத கலாசாரம் எல்லாம், மேலை நாட்டில் இருந்து, இங்கு பரவியுள்ளது. நீங்கள் எல்லாம் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காக இதை எழுதுகிறேன்...
தங்கள் செல்ல மகள்களுடன், பியூட்டி பார்லருக்கு வரும் அம்மாக்களில் பலர், "என் மகளுக்கு மார்பில் சரியான வளர்ச்சி இல்லை... என்ன செய்வது?' என்று கேட்கின்றனராம்.
தோழி சொல்கிறாள்...
இதற்காக இவர்கள் வந்து ஆலோசனை கேட்க வேண்டிய அவசியமே இல்லை. காரணம், அவர்கள் செல்ல மகள்களே, தங்கள் தோழிகளிடம், "டிஸ்கஸ்' செய்து, அதற்கான வழிகளை செய்து கொள்கின்றனர். இப்போதெல்லாம் கல்லூரி மாணவியர், யாருக்காவது, "பிளே கிரவுண்ட்' போல் இருப்பதை பார்த்திருக்கிறீர்களா? அதெல்லாம் அந்தக் காலம்.
இந்தக் காலத்து இளசுகள், பார்ப்பதற்கு ஒடிந்து விழுவது போல இருப்பர்; ஆனால், முன்புறமும், பின்புறமும், "அபரிமிதமாக' இருக்கும். "இவர்களுக்கு மட்டும் அந்த இடத்தில் எப்படி இவ்வளவு வளர்ச்சி...' என்று யோசிப்பீர்கள் அல்லவா? அதுக்கு இதுதான் காரணம்...
முன்பெல்லாம், நடிகைகள் மட்டுமே போட்டுக் கொண்ட ஹார்மோன் இன்ஜெக்ஷன்களை, இன்று, கல்லூரி மாணவியர் சர்வ சாதாரணமாக, "யூஸ்' பண்ண ஆரம்பித்து விட்டனர். பணக்கார பொண்ணுகளைப் பற்றி கேட்கவே வேண்டாம்... ஹாஸ்பிடல் சென்று, பணத்தை கொடுத்து, இந்த ஊசியை போட்டுக் கொள்கின்றனர். பிறகென்ன... பாதி வயிறு தெரியும்படி டைட் பனியன் போட்டு, தொப்புள் தெரிய தங்கள் அங்கங்கள் குதித்தாட நடப்பதில் அவர்களுக்கு அப்படி ஒரு பெருமை.
அந்தக் காலத்துப் பெண்கள், தங்கள் உடலழகை மூடி மறைத்தனர்; ஆனால், இன்றோ, "அதை' வெளிச்சம் போட்டு காட்டுவதில் அத்தனை பெருமை அடைகின்றனர். அத்துடன், கல்லூரி மாணவியரிடம், "கொஞ்சம் அடக்கமா டிரெஸ் பண்ணுங்கப்பா!' என்று சொல்லிப் பாருங்களேன். "ஏன்... எங்களோட சொத்து அது... எங்களுக்கு இருக்கு, நாங்க காட்றோம்; இதுல என்ன தப்பு... அழகை ரசிச்சிட்டு போங்கப்பா!' என்று, கூலாக சொல்வதாகச் சொன்னாள் தோழி.
எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது.
விளைவு?
இளைஞர்களும், இவர்களை அனுபவித்து, ரசிச்சிட்டு போய் விடுகின்றனர். இதனால், இயற்கையிலேயே சாதாரண வளர்ச்சி உள்ள பெண்கள் கூட, தங்களுக்கு ஓன்றும் இல்லாததை கேவலமாக நினைத்து, இப்படி, "ஹார்மோன் இன்ஜெக்ஷன்' போட்டுக் கொள்ள போக, ஒரு பெண்ணின் வாழ்க்கையே பாதித்து விட்டது. அவளது உடம்பில் அந்த, "ஹார்மோன் இன்ஜெக்ஷன்' ஏடா கூட விளைவுகளை ஏற்படுத்த, இன்று பூதாகரமான பெண்ணாக, ஆங்காங்கே சதை போட்டு, அவளது வாழ்க்கையே வீணாகி விட்டது.
எல்லா பெண்களுக்கும், "ஹார்மோன் இன்ஜெக்ஷன்' ஒத்துப் போகும் என்று சொல்ல முடியாது; ஆனால், "கிட்னி'யையே திருடி விற்கும் மனசாட்சி அற்றுப் போன டாக்டர்கள் பலர், இதனால் ஏற்படும் ஒவ்வாமையை சொல்லாமல், ஊசி போட்டு, காசு பார்ப் பதிலேயே குறியாக இருக் கின்றனர்.
நடிகை களில் ஒருவர், பேபி ஆர்ட்டிஸ்ட்டாக இருந்து, டீன் - ஏஜ் பருவம் அடைந்ததும், பேராசை பட்டு, இந்த, "ஹார்மோன் இன்ஜெக்ஷன்' போடப் போக, அது, அவரை, குண்டு பூசணிக்காய் நடிகை ஆக்கி விட்டது நாம் எல்லாரும் அறிந்ததே. பாவம் அந்த நடிகை... கிழ வயது நடிகை எல்லாம், மேக் - அப் போட்டு, இள வயது நடிகையாக வேஷம் கட்டும் இந்த காலக் கட்டத்தில், இவர் இள வயதிலேயே, அம்மா, அண்ணி வேஷம் போட்டு, பெரிய திரையில் வலம் வந்தார். அதுவும் சரி வராமல், இப்போது சின்னத் திரையில், அம்மா, அண்ணி வேஷத்தில் வலம் வருகிறார்.
எதற்கு இந்த விபரீதங்கள்... எத்தனை நாட்களுக்கு இந்த அழகு... நெஞ்சை நிமிர்த்தி திரிந்தவர்கள் எல்லாம், ஒரு குழந்தை பிறந்ததும் தொங்கிப் போய், சின்ன வயது கிழவிகள் போல், இளம் தாய்மார்கள் திரிவது மிகவும் வேதனையான விஷயம்.
"ஒரு காலத்தில், நான் இப்படிப்பட்ட அழகி... அப்படிப்பட்ட அழகியாக இருந்தேன்...' என்று, சொல்லிக் கொண்டு திரியும் பல தாய்மார்கள், இன்று, எல்.கே.ஜி., குழந்தையை கையில் பிடித்து, தொங்கிப் போன உடலுடன், தொப்பையும், இடுப்பு முழுவதும், "டயர்' போன்ற சதையுடன் வருவதைப் பார்க்க பரிதாபமாக உள்ளது.
அப்புறம், இவர்களது கணவருக்கே இவர்கள் மீது, "இன்ட்ரஸ்ட்' இல்லாமல் போய் விடுகிறது. அவர்கள் வழக்கம் போல், கொடியிடை பெண்களை கண்டதும், சபலப்பட ஆரம்பித்து விடுகின்றனர்.
இயற்கை கொடுத்த உடலை ஒழுங்கா பராமரித்தாலே, என்றுமே அழகாக இருக்கலாம். வத்தலும், தொத்தலுமாக இருந்தவர்கள் எல்லாம், திருமணத்திற்கு பிறகு, அழகாக, பூசி மெழுகினாற் போல் ஆகி விடுவதை நாமே பார்க்கிறோம்.
குறுகிய காலத்து இளமை பருவத்தில், தேவை இல்லாத காரியங்களில் ஈடுபட்டு, ஒரு குழந்தைக்கு பிறகு, எந்த அங்கங்கள் கவர்ச்சியாக இருந்ததோ, அந்த அங்கங்கள் பொலிவிழந்து, ஆலிலை வயிறு, அழகிய தொப்புள் என திரிந்த காலம் போக, இடுப்பைச் சுற்றி ஒரு கிலோ, "டயர்' மற்றும் தொப்பை வயிற்றுடன், முகம் மட்டும் அழகாக, ஆனால், இளம் கிழவிகளா இருப்பது தேவையா? யோசியுங்கள் பட்டாம்பூச்சிகளே! 
— தொடரும்.

- ஜெபராணி ஐசக்
 

source:dinamalar

--
http://thamilislam.tk

StumbleUpon.com Read more...
Related Posts with Thumbnails

Enter a long URL to make tiny:

தெரிவு செய்க thaminglish Bamini amudham Tam @Suratha Yarlvanan,Germany

  © Blogger templates Shiny by Ourblogtemplates.com 2008

Back to TOP